பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

February 15, 2009

சூடான இட்லியும் + நெய்யும் + ஜீனியும் (15/02/2009)


அமரிக்க பொருளாதாரம் சரிஞ்சுதோ என்னவோ தெரியலை, ஆனா துபாய் சரிஞ்சு போச்சு. எல்லா கட்டுமான கம்பனி நிலையும் "அம்மா தாயே" லெவலுக்கு போயாச்சு. பெரிய ஜெயண்ட் என் கம்பனி சூப்பரோ சூப்பர். ஹெட் ஆபீஸ் வாசல்ல எம்ப்ளாயின்மெண்ட் ஆபீஸ் கூட்டம் போல கூட்டம். அத்தனை பேர் அனுப்பபட்டுகிட்டு இருக்காங்க. என் பிராஜட்ல டைரக்டர்ஸ் சுத்தி சுத்தி வராங்க எவனாவது வேலை செய்யாட்டி உடனே டிக்கெட் தான். எனக்கு தான் ஒன்னும் பிரச்சனை இல்லியே! நான் தான் லொட்டு லொட்டுன்னு பொட்டி தட்டிகிட்டு இருப்பனே!


அதிலே பாருங்க ஒரு பிலிப்பைன்ஸ் நாட்டு டோமி புரூமோன்னு ஒருத்தன் டெக்னிக்கல் டிபார்ட் மெண்ட்ல. பிராஜக்ட் பிசியா இருந்தப்ப எல்லாம் வேலையே செய்யாம டிமிக்கி கொடுத்துகிட்டே இருப்பான். ஆனா பாருங்க ஒரு மாசமா மாஞ்சு மாஞ்சு வேலை செய்யறான். ஒரு பிரிண்டர் கால்குலேட்டர்(இப்ப எல்லாம் யாருமே அதை யூஸ் பன்ணுவதில்லை) வச்சிகிட்டு எதையோ கூட்டிகிட்டெ இருக்கான். பின்ன பிரிண்ட் ஆகி ரிப்பன் ரிப்பனா வரும் அந்த ரிசல்ட்டை அழகா ஓட்டி போட்டு பைல் பண்றான். இப்படியாக 6 பைல் முடிச்சு முடிச்சு அடுக்கி அடுக்கி வைக்கிறான்.
அவன் டிபார்ட்மெண்ட்ல எல்லா ஆளும் போயாச்சு. இவன் மாத்திரம் பாக்கி. ஆனா அப்பவும் இவன் நல்ல சுறு சுறுன்னு தேனி மாதிரி வேலை பார்க்கிறான். நேத்து டைரக்டர் வந்து அவன் கிட்ட "என்ன பண்ணிகிட்டு இருக்க"ன்னு பார்த்தாரு. பின்ன அவர் கேபினுக்கு அவனை தோள் மேல கைபோட்டு அழைச்சுகிட்டு போனார். அவன் அப்படி என்ன செஞ்சான்னு கடைசியா சொல்றேன்.

*********************************

தமிழ்மணத்திலே சூடு கொஞ்சம் குறைந்து ஒரே பிங் மயம். நானே சமீபத்திலே திருந்தினேன் கவிதை விஷயத்திலே. நான் திருந்தின நேரம் பார்த்து காதலர் தினம் வரனுமா? விதி யாரை விட்டது. எல்லா கவிதையும் படிச்சேன். பின்னூட்டமும் போட்டேன். அங்க தான் விதி விளையாடுச்சு. காலை முதல் "காதலனே"ன்னு ஒரு கவிதை முகப்பிலே இருந்துச்சு. சரி பின்ன படிப்போம் பின்ன படிப்போம்ன்னு இருந்துட்டேன். பின்ன டைம் கிடைச்சப்ப ஓப்பன் பண்ணி பார்த்தா ...மை காட்.... எனக்கு ஒரு மாசம் லீவ் கொடுங்க கவிஞர்களே! நான் கொஞ்சம் பயந்த சுபாவம். ஆனா "கார்த்திகை பாண்டியன்" என்ற "கெட்டவர்":-)) மாத்திரமே அதை படித்ததாக சிலர் ஜொள்ளி கொண்டனர். எனக்கு அது பத்தி எல்லாம் ஒன்னும் தெரியலை. ஆனா பாருங்க அது சூடான இடுகைல வரும். ஒரே ஒரு கார்த்திகை பாண்டியன் பார்த்து அது சூடாச்சுன்னா அவர் பார்வை எத்தனை உக்கிரம்ன்னு அவருக்கு தமிழ்மண விருது கொடுக்கலாம், நான் சிபாரிசு செய்கிறேன்.

***********************************************

ஜி ராகவன் இன்னிக்கு என் கிட்ட ச்சேட்டிகிட்டார்ன்னு சொல்வதை விட மாட்டிகிட்டார்ன்னு சொல்லலாம். அப்படியே நல்லவனாட்டம் பேசிகிட்டே இருந்தேன். ஊர்ல நாம ரிலாக்ஸா வீட்டில் இருக்கும் போது எவனாவது பக்கத்து தெருகாரன் வந்து சகஜமா பேசினா நாம மயங்கிட கூடாது. திடீர்ன்னு மஞ்ச பையில இருந்து நன்கொடை புக் எடுத்து நீட்டுவான். பார்த்தா முதல் பக்கத்திலே வேலுச்சாமி 500 ரூபாய்ன்னு எழுதி இருக்கும். அந்த வேலுச்சாமிய வித்தாகூட அத்தனை கிடைக்காது. ஆகா வேலுச்சாமியே இத்தனி கொடுத்தானான்னு குழம்பி போய் நாம 50 எழுதினா பக்குன்னு வாங்கி வந்தவரை லாபம்ன்னு பையில போட்டுகிட்டு போயிடுவான்.


அதே போல ஜி ரா கிட்ட பேசிகிட்டு இருக்கும் போதே திடீர்னு நல்ல சந்தர்ப்பம் பார்த்து என்னோட இந்த பதிவை படிச்சீங்களான்னு கேட்டு அவர் கிட்ட என் லிங் ஒன்னை தட்டிவிட்டேன். அவரும் அழுதுகிட்டே படிச்சி தொலைச்சிருப்பார்.


அவர்கிட்ட பேசிகிட்டு இருக்கும் போது கேயாரெஸ் - நந்தனார் - நிருத்ய சபை அதிலே இந்த கருத்து கந்தசாமி பத்தி ஏதோ சொல்ல ஜிரா அதுக்கு "இல்ல தொல்ஸ் அவர் நந்தனாரை ஏற்க்கனவே நிறுத்திய சபைன்னு சொல்லிருப்பார், நீங்க நிருத்ய சபைன்னு தப்பா நெனச்சுகிட்டீங்க, எப்போதும் போல எழுத்து பிழை உங்களுக்கு"ன்னு சொன்னார். டைமிங் இந்த டைமிங் ஜோக் கேட்ட போது எனக்கு நாகேஷ் நியாபகம் தான் வந்தது.


எதிர்நீச்சல் படத்திலே சவுகார்ஜானகி நாகேஷ்கிட்ட "நேத்து நேக்கும் என் ஆத்துகாரர்க்கும் சண்டை"ன்னு சொல்லி முடித்த அடுத்த வினாடி நாகேஷ் "யார் ஜெயிச்சா"ன்னு கேட்பார். என்னா டைமிங் என்னா டைமிங்!
பின்ன பெப்சி உமா கிட்ட பேசும் எல்லாரும் சொல்லும் டயலாக்கை அவர் கிட்ட சொல்லிட்டு வடை பெற்றேன். அனேகமா அவர் ச்சேட்ல என்னை பிளாக் பண்ணியிக்கலாம்ன்னு நெனைக்கிறேன்!

************************************************
சவுகார்ஜானகி பத்தி நினச்சவுடனே வல்லிம்மா ஞாபகம் தான் வந்துச்சு. நேத்து வல்லிம்மாவுக்கு ஒரு மெயில் அனுப்பினேன் "வல்லிம்மா வல்லிம்மா நான் இப்படி இப்படி ஒருத்தவங்களை கலாய்ச்சுட்டேன் நீங்க தான் பாவமன்னிப்பு தரனும்"ன்னு. "இனிமே அப்படி செய்யாதடா கொழந்தே'ன்னு சொன்னாங்க. சரிம்மா இன்னும் ஒரு மாசத்துக்கு அப்படி யாரையும் கலாய்க்க போவதில்லை. ஏன்னா இந்த கலாய்ப்பு ஒரு மாசம் தாங்கும்:-))

**************************************************
நல்ல பதிவுன்னு சொல்லனும்ன்னா ஓரினச்சேர்கை பற்றிய ஒரு பதிவு. நல்ல பதிவு நல்ல வாத பிரதிவாதங்கள். எப்படித்தான் மூக்குல வேர்த்துச்சோ ஞானிக்கு அவர் வந்து பின்னூட்டம் போட்டதும் பதிவு போட்டு அழகா பதில் சொல்லிகிட்டு இருந்த பதிவர் நண்பர் திடீர்ன்னு "அபியும் நானும்" படத்திலே பிரகாஷ்ராஜ் பிரதமர்கிட்ட பேசும் போது "எஸ்ஸ்ஸ்ஸ்ஸ் சாஆஆஆர்"ன்னு (ஆனா அசிங்கமா இருக்கும் படத்திலே அந்த சீன்) சொல்வது போல "அய்யோ ஞானியா என் பதிவிலே"ன்னு ஆடிட்டார். அதுக்கு பதிலா அவரும் ஒரு சக வலைப்பதிவர் மாதிரி நினைச்சுகிட்டு இல்லாட்டி ஒரு படி மேலே போய் அவரை சீண்டி விட்டிருந்தா கிண்டி விட்டிருந்தா இன்னும் கருத்து கிடைத்திருக்கும்.


உதாரணத்துக்கு நம்ம வலையுலக ஆழ்வார் கேயாரெஸ் கிட்ட போய் "ஸ்ரீவில்லிபுத்தூர் சூடிக்கொடுத்த சுடர்கொடி எல்லாம் ஒரு பொண்ணா, எனக்கு அவ செஞ்சது சரின்னு நினைக்க தோணலைன்னு ஒரு பிட்டை போட்டுட்டு(ஆண்டாள் யார்ன்னு கூட நமக்கு தெரிந்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை) நாம மாதாந்திர ரிப்போட் எல்லாம் ஆபீஸ்ல முடிச்சு வந்து பார்த்தா அவர் கிண்டி கிழங்கெடுத்து ஒரு அருமையான ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவை தருவார். நமக்கு தேவை பால்கோவாதானே:-))
ஆனா பதிவர்களே! தின்னவேலி ஆளுங்ககிட்ட கொஞ்சம் கவனம் தேவை. ஏன்னா கிண்டி அல்வா கொடுக்கும் அபாயம் இருக்கு!
**********************************************


சமீபத்து பின்னூட்டங்களில் ஒரு நச் பின்னூட்டம்ன்னு சொன்னா ஸ்வாமி ஓம்கார் பின்னூட்டம். ஒரு பதிவிலே போய் "டெம்பிளேட் நல்லா இருக்கு........எது நல்லா இருக்குதோ அதைத்தானே சொல்ல முடியும்"ன்னு போட்டிருந்தார்.
அதுபோல குசும்பன் பதிவிலே அனானி முன்னேற்ற கழக உறுப்பினர்களின் அட்டகாசம் அருமையா இருந்துச்சு. நான் மாதவன், பழையகை அமானுல்லா, ப்பெரியபையன்... இதல்லாம் யாருப்பா? குசும்ப சித்தருக்கே வெளிச்சம்!

**********************************************
இப்ப நம்ம ஆபீஸ் டோமி புரூனோ என்ன செஞ்சான்ன்னு சொல்ல வேண்டிய நேரம் வந்தாச்சு. அவன் எப்படி வேலையே இல்லாத போது பிசியா இருந்தான்னா 2000 எண்ட்ரி ஆன ஒரு எக்செல் ஷீட்டை பிரிண்ட் வவுட் எடுத்து அந்த லூசு 1-2000 வரை தனி தனியா அந்த கால்குலேட்டரால் கூட்டி கூட்டி அதை பிரிண்ட் வேற எடுத்து அதாவது சீரியல் நம்பரை(?) அதை பைல் பண்ணி வேற வச்சிருக்கான். என்ன கொடுமை ஆண்டவா? "டேய் 1 மாசமா இதைத்தான் பண்ணிகிட்டு இருந்தியா?"ன்னு அவர் கேக்க அவனும் "ஆமாம் சார்"ன்னு சொல்லியிருக்கான். :இன்னும் எத்தனை நாள் இப்படி செய்ய உத்தேசம்"ன்னு கேக்க அவன் சொன்ன பதில் "அமரிக்க பொருளாதாரம் நிமிரும் வரை சார்"ன்னு சொல்லியிருக்கான். அவன் வேலை ஆர்வத்தை பார்த்து ஒழிஞ்சு போன்னு விட்டுட்டாரு. இப்ப அவன் 389,390, 391 ன்னு வேகமா தட்டிகிட்டு இருக்கான்!

67 comments:

  1. ஹாஹாஹா பதிவாவே போட்டுட்டீங்களா....

    அந்தக் கவிதை நல்லாத்தானே இருந்துச்சு. கார்த்திகைப் பாண்டியனுக்குப் பின்னாடியே ஜிராவும் அந்தப் பதிவைப் பாத்திருக்கார்ல...... அந்தப் பதிவுக்குச் சுட்டி குடுத்தது ஒரு மகாநல்லவரு.. அவரு அந்தப் பதிவைப் பாக்கவேயில்லையாம். அவ்ளோ நல்லவரு.

    இப்பவும் சொல்றேன். கே.ஆர்.எஸ் நிறுத்திய சபைன்னுதான் சொல்லீருப்பாரு. கீ போர்டுல ள ழ பிரச்சனையோட ர ற பிரச்சனையும் இருக்கத்தானே செய்து.

    நேத்து ஒரு தோழியோட வீட்டுக்குப் போயிருந்தேன். வீடு மாத்துறப்போ போகாம... வெள்ளையடிக்கிறப்போ போயிருந்தேன். ராச்சாப்பாட்டுக்கு ஓட்டலுக்குப் போனோம். ஒயின் ஆர்டர் பண்ணோம் மொதல்ல. அந்தப் புது வீட்டுக்குப் பக்கத்து வீட்டுல ஒருத்தர் இருக்காராம். அவரு ஒயினைக் கொண்டா கொண்டான்னு குண்டா குண்டாவாக் குடிப்பாராம்.

    ரொம்ப சந்தோசம்... அடுத்த வாட்டி அவருக்கும் வணக்கம் போடுவோம்னு சொன்னேன். அப்பத்தான் தோழி சொன்னாங்க... அவரு ஒரு கே-ன்னு. அதாங்க நீங்க பதிவுல சொல்லீருக்கீங்களே. ஓரினச்சேர்க்கைன்னு. பெருந்தன்மையா காமிச்சிக்கிறதா நெனச்சிக்கிட்டு..."that is fine. it is his choice and we have to respect it"ன்னு சொன்னேன். ஒடனே நோன்னு சொல்லீட்டு. "is ur sexual preference by your choice?"ன்னு கேட்டாங்க. என்ன சொல்றதுன்னு தெரியலை. பெருந்தன்மையாச் சொல்லப் போய் இப்பிடி மாட்டிக்கிட்டோமேன்னு நெனச்சேன். "இங்க பாரு.. நீ அங்குட்டு இங்குட்டு பிள்ளைக நடக்குறப்போ வெடுக்கு வெடுக்கு பாக்குறது by choiceஆ? இல்லைல்ல... அது மாதிரி அவனுக்கும் not by choice"ன்னு சொன்னா. நானும் சரின்னு கேட்டுக்கிட்டேன். அடுத்த வாட்டி அவருக்கும் வணக்கம் போடுறேன்னு சொல்லி கவனத்தைத் தோசைலயும் சாம்பார்லயும் திருப்பினேன்.

    ReplyDelete
  2. டெம்பளேட் சூப்பர்....
    ஹிஹி.. ஜெய் ஓம்கார்...

    ReplyDelete
  3. நல்லா இருக்கு.. இட்லிக்கூட்டணி..

    அதுவும் அந்த உதாரணம் எல்லாம் சூப்பர்.. வேலுச்சாமி உதாரணம்.. :))

    ReplyDelete
  4. ஹா...ஹா...

    // "அமரிக்க பொருளாதாரம் நிமிரும் வரை சார்"ன்னு சொல்லியிருக்கான். //

    ரொம்ப விவரமான் ஆள்தான் போலிருக்கு

    ReplyDelete
  5. அவியல் நல்லா இருக்கு :-)

    ReplyDelete
  6. துபாயில கொடுமைக் காரங்களுக்கு கையி காலு எடுப்பாங்களாமே ?

    ReplyDelete
  7. //Blogger கோவி.கண்ணன் said...

    துபாயில கொடுமைக் காரங்களுக்கு கையி காலு எடுப்பாங்களாமே ?//

    எனக்கு தெரிஞ்சு குசும்பனுக்கு கையும் காலும் இருக்குது...

    ReplyDelete
  8. நமக்கு பால்கோவா தானே முக்கியம்! அங்க தான் நீங்க நிக்குறீங்க...

    இதை தான் தஞ்சாவூர் குசும்பு என்று சொல்லுங்க.. நீங்க என்ன சொல்லுறீங்க

    ReplyDelete
  9. //பழையகை அமானுல்லா ///

    இத யாருன்னுவேற சொல்லனுமாக்கும் உங்களுக்கு??

    :)))

    ReplyDelete
  10. //சவுகார்ஜானகி பத்தி நினச்சவுடனே வல்லிம்மா ஞாபகம் தான் வந்துச்சு.

    //

    அண்ணே என்ன காம்பினேஷன் இது???

    :)))

    ReplyDelete
  11. பதிவோட தலைப்புல ஜீனியும்கிற வார்த்தையப் பார்த்தவுடனே கோவிஅண்ணே,முத்துலெஷ்மிக்கா மாதிரி சுகர் பார்ட்டியெல்லாம் சீக்கிரம் வந்துருச்சு பாருங்க :))))

    ReplyDelete
  12. //:இன்னும் எத்தனை நாள் இப்படி செய்ய உத்தேசம்"ன்னு கேக்க அவன் சொன்ன பதில் "அமரிக்க பொருளாதாரம் நிமிரும் வரை சார்"ன்னு சொல்லியிருக்கான். அவன் வேலை ஆர்வத்தை பார்த்து ஒழிஞ்சு போன்னு //

    இங்கேயும் இந்த மாதிரி நெறைய டாமி லீ ஜோன்ஸ்ங்க இருக்காய்ங்க
    :)

    ReplyDelete
  13. தலைப்பை போலவே சொல்லப்பட்ட விசயங்களும் ஜீப்பரு.

    ReplyDelete
  14. நாகை சிவா,
    அது பேரூ மாயவர குசும்பு.

    ReplyDelete
  15. // பாஸ்கர் said...
    :-))))

    February 15, 2009 9:01 PM

    //

    வாங்க பாஸ்கர் மிக்க நன்றி!

    ReplyDelete
  16. // G.Ragavan said...
    ஹாஹாஹா பதிவாவே போட்டுட்டீங்களா....

    அந்தக் கவிதை நல்லாத்தானே இருந்துச்சு. கார்த்திகைப் பாண்டியனுக்குப் பின்னாடியே ஜிராவும் அந்தப் பதிவைப் பாத்திருக்கார்ல...... அந்தப் பதிவுக்குச் சுட்டி குடுத்தது ஒரு மகாநல்லவரு.. அவரு அந்தப் பதிவைப் பாக்கவேயில்லையாம். அவ்ளோ நல்லவரு.//

    மிக்க ஆர்வமாக இருக்கேன் யார் அவரு, ரொம்ப நல்லவரா இருக்காரே:-))

    //இப்பவும் சொல்றேன். கே.ஆர்.எஸ் நிறுத்திய சபைன்னுதான் சொல்லீருப்பாரு. கீ போர்டுல ள ழ பிரச்சனையோட ர ற பிரச்சனையும் இருக்கத்தானே செய்து.//

    விட்டு கொடுக்க மாட்டீங்களே நம்ம வலையுலக ஆழ்வாரை! ஆழ்வாருக்கு கருத்திலும் பிழை இருக்காது எழுத்திலும் பிழை இருக்காது :-))

    //பெருந்தன்மையா காமிச்சிக்கிறதா நெனச்சிக்கிட்டு..."that is fine. it is his choice and we have to respect it"ன்னு சொன்னேன். ஒடனே நோன்னு சொல்லீட்டு. "is ur sexual preference by your choice?"ன்னு கேட்டாங்க. என்ன சொல்றதுன்னு தெரியலை. பெருந்தன்மையாச் சொல்லப் போய் இப்பிடி மாட்டிக்கிட்டோமேன்னு நெனச்சேன். "இங்க பாரு.. நீ அங்குட்டு இங்குட்டு பிள்ளைக நடக்குறப்போ வெடுக்கு வெடுக்கு பாக்குறது by choiceஆ? //

    இதே பிரச்சனை தான் எல்லாருக்கும். சில விஷயங்களிள் அடக்கி வாசிக்கனும் போல இருக்கு. இது போன்ற வாத பிரதிவாதங்களிள் காதை மட்டும் திறந்து வச்சிகிட்டு வாயை மூடிக்கனும் போல இருக்கு:-))

    ReplyDelete
  17. // ரங்கன் said...
    டெம்பளேட் சூப்பர்....
    ஹிஹி.. ஜெய் ஓம்கார்...//

    வா ராங்கா ஓ ரங்கா கொப்பர தேங்கா! ஏன் உன் வாயால கெடுற:-))

    ReplyDelete
  18. // முத்துலெட்சுமி-கயல்விழி said...
    நல்லா இருக்கு.. இட்லிக்கூட்டணி..

    அதுவும் அந்த உதாரணம் எல்லாம் சூப்பர்.. வேலுச்சாமி உதாரணம்.. :))//

    முத்து அக்காவுக்கு நன்னி நன்னி!

    ReplyDelete
  19. // இராகவன் நைஜிரியா said...
    ஹா...ஹா...

    // "அமரிக்க பொருளாதாரம் நிமிரும் வரை சார்"ன்னு சொல்லியிருக்கான். //

    ரொம்ப விவரமான் ஆள்தான் போலிருக்கு//

    ஆமா ராகவன்! உலகம் முழுக்க இப்ப சேரியல் நம்பர் கூட்டும் வேலை தான் நடக்குது:-)) வருகைக்கு நன்றி!

    ReplyDelete
  20. // ramachandranusha(உஷா) said...
    அவியல் நல்லா இருக்கு :-)

    February 15, 2009 9:28 PM//

    மிக்க நன்றி அண்ணி!

    ReplyDelete
  21. // ramachandranusha(உஷா) said...
    அவியல் நல்லா இருக்கு :-)//

    அப்ப பரிசில்காரன் பதிவிலே போய் சூடான இட்லியும் நெய்யும் ஜீனியும் நல்லா இருந்துச்சுன்னு சொல்வீங்களா:-))

    ReplyDelete
  22. // கோவி.கண்ணன் said...
    துபாயில கொடுமைக் காரங்களுக்கு கையி காலு எடுப்பாங்களாமே ?//

    கோவியாரே! குசும்பனையும் சென்ஷியையும் அப்படி ஒரு கோலத்தில் பார்ர்கவே நல்லா இல்லை!:-))

    ReplyDelete
  23. // நான் ஆதவன் said...
    //Blogger கோவி.கண்ணன் said...

    துபாயில கொடுமைக் காரங்களுக்கு கையி காலு எடுப்பாங்களாமே ?//

    எனக்கு தெரிஞ்சு குசும்பனுக்கு கையும் காலும் இருக்குது...//

    வாய்யா ஆதவா! நீ சந்திச்ச சிங்கத்துல ஒன்னும் அப்படித்தான், வால் நீளமான சிங்கம்:-))

    ReplyDelete
  24. // நாகை சிவா said...
    நமக்கு பால்கோவா தானே முக்கியம்! அங்க தான் நீங்க நிக்குறீங்க...

    இதை தான் தஞ்சாவூர் குசும்பு என்று சொல்லுங்க.. நீங்க என்ன சொல்லுறீங்க//

    ஆமாம் சிவா நமக்கு என்ன தேவையோ அதை கறந்துடுவோம்ல:-))

    ReplyDelete
  25. // எம்.எம்.அப்துல்லா said...
    //பழையகை அமானுல்லா ///

    இத யாருன்னுவேற சொல்லனுமாக்கும் உங்களுக்கு??

    :)))//

    தெரியலையே ராசா தெரியலையே!

    ////சவுகார்ஜானகி பத்தி நினச்சவுடனே வல்லிம்மா ஞாபகம் தான் வந்துச்சு.

    //

    அண்ணே என்ன காம்பினேஷன் இது???

    :)))//

    அட வல்லிம்மா இப்ப சென்னை தான்!ஒரு போன் பண்ணிட்டு போய் ஒரு எட்டு பார்த்துட்டு என் விசாரிப்புகளை சொல்லிட்டு வாங்க:-))

    //பதிவோட தலைப்புல ஜீனியும்கிற வார்த்தையப் பார்த்தவுடனே கோவிஅண்ணே,முத்துலெஷ்மிக்கா மாதிரி சுகர் பார்ட்டியெல்லாம் சீக்கிரம் வந்துருச்சு பாருங்க :))))//

    அட ஆண்டவா ரெண்டு பேருக்குமே பேச்சிலே தான் சுகர்(அத்தனை நல்லா பேசுவாங்க, மத்தபடி ஆண்டவன் எந்த குறையும் வைக்கலைப்பா:-))

    ReplyDelete
  26. // SanJai காந்தி said...
    :)))

    ஜூப்பரு.. :))//

    வாய்யா பொடிசு! என்ன ரொம்ப லேட்டு?

    ReplyDelete
  27. //அபி அப்பா said...

    // ramachandranusha(உஷா) said...
    அவியல் நல்லா இருக்கு :-)//

    அப்ப பரிசில்காரன் பதிவிலே போய் சூடான இட்லியும் நெய்யும் ஜீனியும் நல்லா இருந்துச்சுன்னு சொல்வீங்களா:-))
    //

    ROFTL!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  28. அமரிக்க பொருளாதாரம் சரிஞ்சுதோ என்னவோ தெரியலை, ஆனா துபாய் சரிஞ்சு போச்சு. எல்லா கட்டுமான கம்பனி நிலையும் "அம்மா தாயே" லெவலுக்கு போயாச்சு.
    //


    அப்படியா..??

    புச்சா இருக்கு நியுஸூ.. :)

    ReplyDelete
  29. தமிழ்மணத்திலே சூடு கொஞ்சம் குறைந்து ஒரே பிங் மயம்.
    //





    சீசன் கூத்து தான் சரியாயிடும்..:)

    ReplyDelete
  30. நல்ல பதிவுன்னு சொல்லனும்ன்னா ஓரினச்சேர்கை பற்றிய ஒரு பதிவு.
    //


    சரி உங்க கருத்து என்னா?





    //
    அவனா நீ... :) :) :)

    :)))))))))

    ReplyDelete
  31. அட, சூடான இட்லி நெய் ஜீனி இனி மாதமிருமுறை வழக்கப் படுமா? முன்னர் படித்த பதிவென்றல்லவா நினைத்தேன்:)? சுடச் சுட வழங்கிய கையோடு இப்படி திருநெல்வேலிக்காரர்களை வாரியும் விட்டிருக்கிறீர்களே? இது நியாயமா ஃப்ரெண்ட்? ஒவ்வொரு முறை ஊருக்குப் போகையிலும் வாங்கி வந்து அன்போட அல்வா கொடுத்தே எனக்கு எத்தனை ஃப்ரெண்ட்ஸ் தெரியுமா பெங்களூரில்:)?

    ReplyDelete
  32. ஹாஹா.... :-)))

    சூடான இட்லியும் + நெய்யும் + ஜீனியும் சூப்பர்... சரியா சொல்லிட்டேனா?????

    ReplyDelete
  33. //அட்டகாசம் அருமையா இருந்துச்சு. நான் மாதவன், பழையகை அமானுல்லா, ப்பெரியபையன்... இதல்லாம் யாருப்பா? குசும்ப சித்தருக்கே வெளிச்சம்!
    //

    எனக்கு இதிலே ஒருத்தர் மட்டும்தான் தெரியும்....

    ஹிஹி...

    ReplyDelete
  34. /ச்சின்னப் பையன் said...
    ஹாஹா.... :-)))

    சூடான இட்லியும் + நெய்யும் + ஜீனியும் சூப்பர்... சரியா சொல்லிட்டே//

    வர்றதுக்குள்ள இட்லி ஆறிடுச்சு. பரவாயில்ல.. நெய்யும் ஜீனியும் சூப்பர்

    ReplyDelete
  35. எனக்கு இதிலே ஒருத்தர் மட்டும்தான் தெரியும்....

    ஹிஹி...
    //


    நல்ல வேலை இது எல்லாம் குசும்பனே போட்டதுனு உண்மையை சொல்லாமல் விட்டுங்களே அது போதும் :)

    ReplyDelete
  36. வர்றதுக்குள்ள இட்லி ஆறிடுச்சு. பரவாயில்ல.. நெய்யும் ஜீனியும் சூப்பர்
    //


    இதுல நெய் எது ?

    இட்ட்லி எது ?

    ஜீரா சாரி ஜீனி எது ?


    சொல்லிட்டு போங்க :)

    :)

    ReplyDelete
  37. கார்க்கி...

    புரோஃபயில் போடோவில் இருக்குற ஹீரோ யாரூ ??

    :)

    ReplyDelete
  38. அத்தான்
    என்னைய மறந்துட்டிங்களா...

    ReplyDelete
  39. ஜி ராகவன் இன்னிக்கு என் கிட்ட ச்சேட்டிகிட்டார்ன்னு சொல்வதை விட மாட்டிகிட்டார்ன்னு சொல்லலாம்.
    //


    அத்தான் நீங்க ஏன் என்கிட்ட "சேட்ட" (பண்ண) மாட்டங்கிறீங்க.. ??

    உடனடி தேவை பதில் ..


    டிஸ்கி :
    (கோவி அத்தான் ரொம்ப நல்லவரு...)

    ReplyDelete
  40. என்னா அத்தான்

    ஆளையே காணும்

    இருக்கிங்களா...??


    ஜினி மாதிரி நான் இனிப்பேனா..?

    ReplyDelete
  41. அந்தப் புது வீட்டுக்குப் பக்கத்து வீட்டுல ஒருத்தர் இருக்காராம். அவரு ஒயினைக் கொண்டா கொண்டான்னு குண்டா குண்டாவாக் குடிப்பாராம்.
    //


    எங்க அத்தானை சொல்லலையே..?

    பிச்சிபுடுவேன் பிச்சி...


    (டிஸ்கி எங்க அத்தானை)

    ReplyDelete
  42. தீபா ஒரு கழுதைய்யை காட்டி இதுதான் எம்புருஷன்னு சொன்னாகூட ஏத்துபேன்


    ஆனா இவன் வேண்டாம்


    அதுக்கு இவன் சரிபட்டு வரமாட்டான்..
    :)

    ReplyDelete
  43. ஆமா எங்க அத்தான் எதுக்கு சரிபட்டு வரமாட்டாரு...??





    <<<<
    50 போட்டாச்சி வேற யாராவது கடையை தொறந்து இருக்காங்களா பாத்துட்டு வர்ரேன் :)))

    >>>>

    ReplyDelete
  44. எல்லாத்துக்கு பதில் சொல்லுவேனு போன பதிவில் சொன்ன சொல்லை காப்பாற்று


    நீ அதுக்கு சரிபட்டு வருவியா மாட்டியானு சொல்லுறேன்


    :)

    ReplyDelete
  45. எல்லா பின்னுட்டத்திற்கும் பதில் சொன்னா.....:)



    இந்த அனானி யாருனு சொல்லுவேன்

    டீல் ஒகே..?

    :)

    ReplyDelete
  46. அமுக நண்பர்களே! மன்னிக்கவும் சில பின்னூட்டங்களை தவிர்த்து விட்டேன்!நீங்க எல்லாம் எந்த நாடு? யார் யாரெல்லாம் சம்மந்தப்பட்டு இருக்கிய, ஒரிஜினல் அக்மார்க் அமுகன்னு சர்ட்டிபிகேட் இருக்கா? கொஞ்சம் விலாவாரியா சொல்ல முடியுமா?

    ReplyDelete
  47. எலேய் ஒரு குரூப்பாத்தான் திரியுரிங்களா? இப்ப எந்த நாட்டுக்கு போக உத்தேசம்! சாப்புட்டு போங்கடா கண்ணுங்களா!

    அய்யோ அய்யோ எல்லாம் வெள்ள கார ஊர்ல இருந்து வந்தவனுங்க போல இருக்கே! அப்பவே சொன்னனே கடிக்காதீங்க கடிக்காதீங்கன்னு இது வைரம் பாஞ்ச கட்டைடான்னு! கேட்டானுவளா? இப்படி தோத்து ஓடிட்டானுவகளே! அய்யோ நான் என்ன பண்ணுவேன்!

    ReplyDelete
  48. \\வைரம் பாஞ்ச கட்டைடான்னு! \\

    அய்தான்! அதாரு வைரம்! நம்ம தெரு வைரநாயகியா? டூ பேட் உங்க டேஸ்ட்! நான் அடுத்த நாட்டுக்கு போறேன்!

    ReplyDelete
  49. அட காவாளி பயளுவளா! போங்கடா, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  50. ஹாலோவ்வ்வ்


    என்ன

    தூங்கிட்டிங்களா..???


    அத்தான் :)

    ReplyDelete
  51. நான் அடுத்த நாட்டுக்கு போறேன்!
    //



    சாரி இன்னைக்கு யாரும் கிடைக்கல


    அதான் திரும்ப வந்துட்டேன்ன்ன்ன்

    ReplyDelete
  52. அபி அப்பா said...

    அட காவாளி பயளுவளா! போங்கடா,
    //


    என்ன அத்தான் யார திட்டுரீங்க

    என் மீது கோவமா..

    இல்லை தீபா தொல்ஸ் மேலே கோவமா.. :)

    ReplyDelete
  53. இப்ப எந்த நாட்டுக்கு போக உத்தேசம்! சாப்புட்டு போங்கடா கண்ணுங்களா!
    //


    பாசகாரபுள்ளங்கே விட்டுடு சாப்பிட மாட்டானுவோ


    சிம்ரன் ஆப்ப கடைக்கு போவமா

    இல்லை

    kfc போவவா ...


    ஐ ஆம் ரெடி

    ReplyDelete
  54. இப்படி தோத்து ஓடிட்டானுவகளே! அய்யோ நான் என்ன பண்ணுவேன்!
    //


    யாரு நாங்களா..?

    நாங்கல்லாம் யாரு சங்கத்து சிங்கமுல :)

    ReplyDelete
  55. இவ்வளவு கலாய்ச்சிட்டு பேர சொல்லாம போனா நல்லாயிருக்காது

    அதனால.....


    ஒரு க்ளு தருகிறேன் கண்டுபிடிக்க முடிஞ்சா பிடிச்சுக்கங்க

    ReplyDelete
  56. தட்டானுக்கு சட்டை போட்டால்
    குட்டை பையன் கட்டையால் அடிப்பான்

    அவன் யார்..?

    "இவன்" படம் போட்ட பதிவர் !!!



    யாரங்கே யாரடா அங்கே..!!!!

    ReplyDelete
  57. பை டார்லிங்


    பை பை



    உம்ம்மாஅ

    ReplyDelete
  58. //காலை முதல் "காதலனே"ன்னு ஒரு கவிதை முகப்பிலே இருந்துச்சு. சரி பின்ன படிப்போம் பின்ன படிப்போம்ன்னு இருந்துட்டேன். பின்ன டைம் கிடைச்சப்ப ஓப்பன் பண்ணி பார்த்தா ...மை காட்.... எனக்கு ஒரு மாசம் லீவ் கொடுங்க கவிஞர்களே! நான் கொஞ்சம் பயந்த சுபாவம். ஆனா "கார்த்திகை பாண்டியன்" என்ற "கெட்டவர்":-)) மாத்திரமே அதை படித்ததாக சிலர் ஜொள்ளி கொண்டனர். எனக்கு அது பத்தி எல்லாம் ஒன்னும் தெரியலை. ஆனா பாருங்க அது சூடான இடுகைல வரும். ஒரே ஒரு கார்த்திகை பாண்டியன் பார்த்து அது சூடாச்சுன்னா அவர் பார்வை எத்தனை உக்கிரம்ன்னு அவருக்கு தமிழ்மண விருது கொடுக்கலாம், நான் சிபாரிசு செய்கிறேன்.//
    ஏம்ப்பா.. எனக்கே தெரியாம என்ன வச்சு இங்க ஒரு கும்மியே நடந்திருக்கா.. ஒரு கவிதைய படிச்சு.. நல்லா கவனிங்க.. கவிதைய மட்டும் படிச்சு பின்னூட்டம் போட்டா தப்பா.. வளர்ற மக்களை ஊக்குவிங்கப்பா.. பரவா இல்ல.. என்கிட்டே சொல்லி இருந்தா.. நானும் கும்மில்ல ஐக்கியம் ஆகி இருப்பேன்ல.. நம்மள பத்தி எழுதுனதுக்கு ரொம்ப நன்றி "நல்லவரே".. நீங்க தான் அந்த கவிதைய படிக்கவும் இல்ல.. பார்க்கவும் இல்லையே.. அப்ப நல்லவர்தான.. அப்புறம்.. அந்த தமிழ்மணம் விருத மறந்துராதீங்க..

    ReplyDelete
  59. நல்லா இருக்கு. இந்தப் பத்தியைத் தொடர்ந்து எழுதுங்கள்.

    அனுஜன்யா

    ReplyDelete
  60. என்ன அபிஅப்பா ரெடியா..

    ReplyDelete
  61. சூடான இட்லியும் + நெய்யும் + ஜீனியும் (15/02/2009//

    சுவைக்கு பஞ்சமில்லை!

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))