பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

February 18, 2009

"வேப்பங்கஞ்சி வித் அபிஅப்பா & இந்திய ஜனாதிபதி!!!

எனக்கு எப்பவுமே நம்ம ஜனாதிபதி மேல ஒரு கோவம் இருந்துகிட்டே இருக்கும். நேத்து ராத்திரி கூட ரொம்ப வருத்தப்பட்டுகிட்டு இருந்தேன் நம்ம நண்பர்கள் கிட்ட! இந்த பத்ம அவார்டு எல்லாம் சும்மா ஏனா தானோன்னு தர்ராங்க. நானும் ஒரு இந்திய குடிமகன் தான, என்னை ஒரு வார்த்தை கேட்டா என்னமா ஐடியா சொல்லுவேன்ன்னு புலம்பிகிட்டே தூங்கிட்டேன்.
பாருங்க நம்ம ஜனாதிபதிக்கு எப்படித்தான் இந்த விஷயம் தெரிஞ்சுதோ.ஒரு வேளை யாரு மானசுல யாரு நிகழ்சி பார்ப்பாங்க போல இருக்கு. கபால்ன்னு ரெண்டு கிங்காரகன் மாதிரி ஆளை விட்டு என்னை துபாய்ல இருந்து டெல்லி தூக்கிட்டு வந்துட்டாங்க. அப்ப விடிகாலை 4 இருக்கும்.
ஓவர் டு டெல்லி.............ஜனாதிபதி மாளிகை!

ஜனாதிபதி: வாங்க அபிஅப்பா வாங்க, இந்த தடவை 'பத்ம" விருது எல்லாம் உங்க கிட்ட கேட்டு குடுக்கலாம்ன்னு பார்க்கிறேன். முதல்ல என்ன சாப்பிடுறீங்க?

அபிஅப்பா: வேப்பங்கஞ்சி

ஜனாதிபதி: ஓ குட் அப்ப "வேப்பங்கஞ்சி வித் அபிஅப்பா"ன்னு மீடியாவுக்கு சொல்லிடலாம். சரி முதல்ல குழந்தைகள் விருது. சிறந்த வீர குழந்தை விருது யாருக்கு தரலாம்ன்னு நெனைக்கிறீங்க?

அபிஅப்பா: சமீபத்துல ஒரு பாட்டு பார்த்தேன் அ ஆ ன்னு ஒரு படம்.அப்படியே ஆன்னு வாயை பொளந்துட்டேன். அதிலே எஸ்.ஏ.சூர்யா ஒரு டைட்டில் சாங் பாடுவாரு. அப்ப ஒரு கட்டத்துல எம்சியார் மாதிரி நெனச்சுகிட்டு ரெண்டு சின்ன பசங்களை தூக்கி கிட்டு ஏகப்பட்ட எக்ஸ்பிரஷனை மூஞ்சில காமிச்சுகிட்டு பாடுவார் என்னவோ ஆறரை கோடி தமிழன் அப்புடி இப்புடின்னு, தூரமா இருந்து பார்க்கும் நமக்கே இப்படி இருக்கே அந்த 2 குழந்தைகள் பத்தி நெனச்சு பாருங்க. இதோ அந்த போட்டோ கூட இருக்குது.அதனால அவங்களுக்கே "வீரதீரர் செயல் புரிந்த குழந்தகள் அவார்டு தரலாம் என்பது அடியேனின் கருத்து.

ஜனாதிபதி: மை காட், பசங்க இப்ப எப்புடி இருக்காங்க. ஏன் இந்த ஆளை வன்கொடுமை சட்டத்துல உள்ளே தூக்கி போட கூடாது?

அபிஅப்பா: போடலாம் ஆனா சிறைக்கைதிகளை கொடுமை படுத்துனதா மனித உரிமை கமிஷன்ல உங்களை தூக்கி உள்ளே போடுவாங்க பர்வால்லயா?

ஜனாதிபதி: ஓ நோ, சரி இப்ப குழந்தைகள் இப்ப எப்படி இருக்காங்க?
அபிஅப்பா: இப்ப ஓக்கே ஆனா படம் வந்த கொஞ்ச நாள் பேஸ்தடிச்ச மாதிரியே இருந்தாங்க. எதை பார்த்தாலும் தெனாலி கமல் மாதிரி அலறி அலறி அழுதாங்க. பின்ன சிம்புதான் சரி பண்ணினார்.

ஜனாதிபதி: வாட், சிம்புவா? அவரும் விஜய் மாதிரி டாக்டரா ஆகிட்டாரா? ஓ காட்!
அபிஅப்பா: இல்லை சிம்பு நேரிடையா உதவி செய்யலை. கடவுள் எந்த காலத்துல நேர்ல வந்து உதவி செஞ்சிருக்கார். ஒரு மனோதத்துவ டாக்டர் அந்த பசங்களுக்கு ட்ரீட் பண்ணினார். தினமும் ஒரு சிம்பு படமா போட்டு காட்டினார். பசங்களுக்கு ஒரு தைரியம் வந்துடுச்சு. "ஆறிலும் சாவு நூறிலும் சாவுடா, இனி இந்த மனசு குஷ்பு வில்லு படத்தில டான்ஸ் ஆடினா கூட பயப்படாதுடா"ன்ற ரேஞ்சுல தேறிட்டாங்க மேடம்.

ஜனாதிபதி: ஓ வெரி குட். அப்ப அந்த பசங்களுக்கும் வீரதீர அவார்டு கொடுத்திடலாம். அது போல அந்த டாக்டருக்கும் ஒரு பத்மஸ்ரீ அவார்டை அள்ளி விடலாம் என்ன சொல்றீங்க அபிஅப்பா.

அபிஅப்பா: டாக்டர்ஸ்க்கு எதுக்கு டாக்டர் பத்மஸ்ரீ தரனும்?

ஜனாதிபதி: அது ஒரு வழக்கம் அபிஅப்பா! போன பிரியட்ல முட்டிகால் ஸ்பெஷலிஸ்ட்க்கு கொடுத்தோம். அது போலத்தான். கொஞ்சம் இருங்க ஒரு போன் வருது, மேடம்ஜி பேசறாங்க ..."ஹல்லோ....மேடம்ஜி ,ஆங்ஜி, ஜிஹாங்...என்னது முதுகு முன்னாடி இதயம் பின்னாடியா ஓக்கே மேடம் ஜி"(போனை வைத்துவிட்டு) ஸாரி அபிஅப்பா முதுகு முன்னாடி, இதயம் பின்னாடி, மனசு கட்ட கடேசிதான்.

அபிஅப்பா: என்ன மேடம் நீங்க என்னவோ வேப்பங்கஞ்சி குடிச்ச மாதிரி பேசறீங்க, சரி விடுங்க அந்த டாக்டருக்கு இப்ப வேண்டாம், சிம்புவை அவர் சரி பண்ணிட்டாருன்னா அப்ப கொடுக்கலாம்.

ஜனாதிபதி: சிம்புவையே அந்த டாக்டர் குணப்படுத்திடுவாரா, அப்ப அவருக்கு "மரணத்துக்கு பிந்தைய விருது"தான்னு சொல்லுங்க. சரி! இப்ப நாம் ஸ்போர்ட்ஸ்க்கு போவோம். சரி உங்க அபிப்ராயம் என்ன?

அபிஅப்பா: இதுவும் வழக்கம் தானே மேடம் நாம எப்போதும் டெண்டுல்கருக்கு தானே கொடுக்கனும். அதானே நம்ம அரசியல் சாசனத்திலே அம்பேத்கார் எழுதி வச்சிருக்கார். தவிர இப்ப ஸ்ரீலங்கா சீரீஸ்ல கூட அவர் பர்பார்மென்ஸ்ல நல்ல இம்ப்ரூவ்மெண்ட் தெரிஞ்சுது. முதல்ல 5 அடுத்து 6 அடுத்து 7ரன் இப்படி நல்ல முன்னேற்றம் இருந்துச்சே

.ஜனாதிபதி: நோ நோ அபிஅப்பா, நான் ஒரு பெண், அதனால ஒரு பெண்ணுக்கு தான் கொடுப்பேன். கர்னம் மல்லேஸ்வரிக்கே கொடுக்கலாம்ன்னு இருக்கேன். நல்ல பளு தூக்கும் பெண் அவங்க. என்ன ஓக்கேவா அபிஅப்பா?

அபிஅப்பா: மேடம் ஒரு பெண்ணுக்கு தான் அந்த அவார்டுன்னு முடிவாகி போச்சு, அப்ப இந்த போட்டோவை பாருங்க. முடிவை நீங்களே எடுங்க.


ஜனாதிபதி: வாவ், கொழந்த அழகா இருக்கா, பாருங்களேன் என அசால்ட்டா அந்த கழுத்து மணிய தூக்கிகிட்டு இருக்கா முகத்திலே அந்த கஷ்டத்தை காமிச்சுக்காம, அப்பீலே இல்லை இவளுக்கு தான் "பத்மஸ்ரீ" பளு தூக்கும் போட்டியிலே.

அபிஅப்பா: அதிலே ஒரு சிக்கல் மேடம்.

ஜனாதிபதி: மணியிலயா, நோ பிராப்ளம் கண்டிப்பா இந்த குழந்தைக்கு தான் "பத்மஸ்ரீ"
அபிஅப்பா: இல்ல மேடம் அவ குழந்தை தானே, அவ பிரண்டு ஒருத்தி இருக்கா அவளுக்கும் பத்மஸ்ரீ அவார்டு கொடுக்கனும்ன்னு இவ அழுவா, அதான் யோசிக்கிறேன்

ஜனாதிபதி: ஓ அவளுக்கு என்ன தனி திறமை இருக்கு?
அபிஅப்பா: ஒன்னு இல்லை மேடம் ரெண்டு திறமை இருக்கு. 1. அவ பேரே பத்மா, 2. அவ இருப்பது இப்ப இத்தாலில!

ஜனாதிபதி: மை காஆஆஆஆஆஆஆஆஆஆஆஆட் இந்த திறமை ஒன்னே போதுமே அப்ப ரெண்டு பேருக்கும் ஆளுக்கு ரெண்டா கொடுத்திடலாம்!
தொரரும்.....

அடுத்து சிறந்த ஓட்ட பந்தய வீரர் பத்ம அவார்டு, சிறந்த நகைச்சுவையாளர் பத்மஸ்ரீ விருது எல்லாம் இருக்கு. பதிவு பெருசா ஆகிடுச்சு அதான்....வர்ட்டா

30 comments:

 1. ஏன்ச்சாமி!

  ஆபிஸ் ல ஒத்த ஆணி கூடவா இல்ல... என்ன கொடுமை சார் இது எல்லாம்....

  ReplyDelete
 2. ஏன்ச்சாமி!

  ஆபிஸ் ல ஒத்த ஆணி கூடுவா இல்ல...

  என்ன கொடுமை சார் இது....

  ReplyDelete
 3. வாங்க சிவா! ஒத்தை ஆணி கிடைச்சா கூட அதை இப்ப இருக்கும் நிலமையிலே 1 வாரத்துக்கு அடிச்சு அடிச்சு பிடுங்குவோமே! அதுவும் இல்லை:-))

  ReplyDelete
 4. சூர்யா படம் வேண்டும் என கானாபிரபாகிட்ட கேட்டேன். அவரும் தேடி பார்த்து கிடைக்கலை. பின்னே சஞ்சய் தான் தேடி எடுத்து கொடுத்தார். நன்றி இருவருக்கும்.

  ReplyDelete
 5. ரெசெஸசன் பீரியட்ல அவனவன் பிசியா இருக்க மாதிரி பாவ்லா பண்ணிட்டு இருக்கான். இப்படி ஒரு நாளைக்கு ரெண்டு போஸ்ட்டா போடுறீரே? யாரும் கண்டுக்கிட மாட்டாங்களா?

  ReplyDelete
 6. //ஒரு சிம்பு படமா போட்டு காட்டினார். பசங்களுக்கு ஒரு தைரியம் வந்துடுச்சு. "ஆறிலும் சாவு நூறிலும் சாவுடா, இனி இந்த மனசு குஷ்பு வில்லு படத்தில டான்ஸ் ஆடினா கூட பயப்படாதுடா"ன்ற ரேஞ்சுல தேறிட்டாங்க மேடம். //

  செம கலக்கல்!

  ReplyDelete
 7. //நாகை சிவா said...
  ஏன்ச்சாமி!

  ஆபிஸ் ல ஒத்த ஆணி கூடவா இல்ல... என்ன கொடுமை சார் இது எல்லாம்....//

  அஹம் பிரம்பாஸ்மி!!!

  ReplyDelete
 8. //5 அடுத்து 6 அடுத்து 7ரன் இப்படி நல்ல முன்னேற்றம் இருந்துச்சே.//

  ஆங் அவரு அடிக்கனும் என்றால் ஜாகிர் கான் கிச்சான் வாங்கிட்டு வந்துதான் ஆடனும்!

  ஒவ்வொரு முறையும் நடுவர்களின் தவறான தீர்பாலேயே அவுட் ஆனார்!

  ReplyDelete
 9. வீர தீர அவார்ட் ரொம்ப நல்லா இருக்கு..
  அந்த கழுத்து மணி விசயம் நீங்க சொன்னப்பறம் தான் கவனிக்கிறேன்.. ஆகா நிச்சயமா திறமை தான்..இந்த வயசில்.. :)

  ReplyDelete
 10. நான் இப்ப ஃபிரியா இல்லை
  குசும்பன் போஸ்ட்ல கும்மி அடிச்சிகிட்டு இருக்கேன் :)
  இங்க வரலைனு தப்பாநினைக்க கூடாது

  ReplyDelete
 11. மத்தபடி பதிவை குறித்து சொல்ல ஒன்னும் இல்லை ஏன்னா இன்னும் படிக்கலை :)

  ReplyDelete
 12. ம் ரெடியா

  அங்க போதுமாம்

  குசும்பன் நிறுத்திக்க சொல்லி கெஞ்சுறாரு :)

  ReplyDelete
 13. ஹாஹா.. ஜூப்பரு... :))

  ஆனாலும் முதல் படம் உதவி : சஞ்சய்காந்தி என்று கார்டு போடாததை டீ குடித்து கண்டிக்கிறேன்.. :)

  ReplyDelete
 14. அப்ப விடிகாலை 4 இருக்கும்.
  //


  இங்கையுமா


  அவ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 15. விடயல் காலையில் கனவுகண்டா பலிக்குமாமே


  பாவம் ஜனாதிபதி

  ReplyDelete
 16. போரடிக்குது..

  :(

  செத்து செத்து விளையாடுவோமா ??

  ReplyDelete
 17. Your comment has been saved and will be visible after blog owner approval.
  //


  முடியல..


  அவ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 18. சூப்பரா இருந்துச்சு பதிவு!!!

  ReplyDelete
 19. அபிப்பா..

  நடுராத்திரி வரைக்கும் கண் முழிச்சு உங்க பதிவைத் தேடிப் பிடிச்சு இப்படியொரு பின்னூட்டம் போடுறனே..

  எனக்கு ஒரு பத்ம விருது வாங்கிக் குடுங்களேன்..

  புண்ணியமா இருக்கும்..

  ReplyDelete
 20. ஆஹா நம்ம பப்பு இனி பத்மஸ்ரீ பப்பு!
  வாழ்த்துக்கள் பப்பு. சந்தனமுல்லை, பப்புவுடன் டெல்லிக்குக் கிளம்ப ரெடியாகுங்கோ:)!

  ReplyDelete
 21. பின்னூட்டம் போடுறவங்க யார் பேரையாவது பத்ம அவார்டுக்கு சிபாரிசு பண்ணுவீங்களா சார்.

  ReplyDelete
 22. அமிர்தவர்ஷினி அம்மா said...
  பின்னூட்டம் போடுறவங்க யார் பேரையாவது பத்ம அவார்டுக்கு சிபாரிசு பண்ணுவீங்களா சார்.

  athana naanga evalavu kasta pattu unga pathivu padikurom athukavathu ennga yar namemavathu பத்ம அவார்டுக்கு சிபாரிசு pannanum ok.

  ReplyDelete
 23. பின்னூட்டம் போடுறவங்க யார் பேரையாவது பத்ம அவார்டுக்கு சிபாரிசு பண்ணுவீங்களா சார்.//

  :))

  ReplyDelete
 24. ஏப்பா செரி மொக்கை. நல்லா இருக்குங்க அபி அப்பா.

  ReplyDelete
 25. //ஒன்னு இல்லை மேடம் ரெண்டு திறமை இருக்கு. 1. அவ பேரே பத்மா, 2. அவ இருப்பது இப்ப இத்தாலில//

  அட!பத்மாவுக்கு வீட்டுக்கே அந்த விருது வந்துருச்சு!!!

  நன்றி அபி அப்பா!!!

  ReplyDelete
 26. என்னுடைய தலைப்பை காப்பி அடிச்சி தலைப்பு வைத்ததால் எனக்கு தான் பட்டத்தை சிபாரிசு பண்ணனும் !! :)

  ReplyDelete
 27. ஆபிஸ் ல ஒத்த ஆணி கூடவா இல்ல... என்ன கொடுமை சார் இது எல்லாம்....

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))