பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

December 12, 2013

செயலாளர் 3 ரூபாய்! பொருளாளர் 2 ரூபாய்!! வாழ்க ரஜினி!!!



அவன் பெயர் மோகன் தாஸ். அதை காயவைத்து சின்னதாக "மோக்கு" என கூப்பிடுவோம். அவனுக்கு ரஜினி என்றால் அத்தனை ஒரு வெறி! முள்ளும் மலரும் நேரத்தில் இல்லாத மீசையை நீவிக்கொள்வான். ஆறு புஷ்பங்கள் படம் வந்த போது 70 MM பிரேம் போட்ட கண்ணாடி போட ஆசைப்பட்டு பிரேம் மட்டும் மாட்டிக்கொண்டான். ஆறிலிருந்து அறுபது வரை நேரத்தில் விட்டத்தை அடிக்கடி வெறித்துப்பார்த்து கொண்டிருந்தான். ப்ரியா வந்த போது கணேஷ் ஆகி வீட்டில் ஹார்லிக்ஸ் பாட்டில் அவன் அம்மா எங்கே வைக்கிறார்கள் என 'துப்பறிய" ஆரம்பித்துவிட்டான். ரஜினிக்கு நெற்றி முடிகள் குறைந்து ஏர் நெற்றி ஆனதும் ஓடிப்போய் "மாரிமுத்து, எனக்கும் இந்த முன்பக்கம் ரெண்டு சைடும் சரைச்சு விடு" என கேட்டு பார்பரை மயக்கமடைய வைத்தான். சோகமாய் இருக்கும் போது வீட்டு எரவானத்தில் தொங்கும் அரிகேன் லைட்டை ஆட்டியபடி 'ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை எனக்கு"ன்னு பாடினான். சந்தோஷமாக இருக்கும் போது 'பொதுவாக என் மனசு தங்கம், ஒரு போட்டியின்னு வந்து விட்டா சிங்கம்' என கர்ஜித்தான். தெய்வம் எனில் அவனுக்கு ரஜினியும், ராகவேந்திரரும் மட்டுமே.


இப்படியாக நாளுரு ரஜினியும் பொழுதொறு சினிமாவுமாக அவன் இருந்த போது தான் ரஜினியின் 100 வது படம் வந்தது. அப்போது நாங்கள் சிறு வயதில் இருந்து  டீன் ஏஜ் பருவம் வந்தாகிவிட்டது. அப்போது தான் அவனுக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கும் ஆசை வந்தது. அவனுக்கு நான் தான் எப்போதுமே ஆஸ்தான ஆலோசகர் இது போன்ற விஷயங்களுக்கு.


"மொதல்ல நாம "ரஜினியின் ராகவேந்திரா ரசிகர் மன்றம்" ஆரம்பிக்கனும். போஸ்டர் அடிக்கனும். முதல் நாள் பியர்லெஸ் தியேட்டரில் எல்லோருக்கும் சாக்லெட் தரனும்...." என நீண்ட பட்ஜட்க்கு சொல்லி கொண்டே போனான். நான் சொன்னேன்..."மன்றம் ஆரம்பிச்சா பலபேரை சேர்த்துகிட்டு போஸ்டரில் பெயர் போட்டுகிட்டு அவங்க கிட்டயும் காசு வாங்கிகிட்டா பட்ஜட் ஒத்து வரும்" என சொல்ல மோக்கு உடனே அதை செயல்படுத்த தொடங்கிவிட்டான். "இங்கு தலைவர் பதவி தவிர எல்லா பதவியும் தரப்படும்"ன்னு போர்டு போடாத குறை தான். செயலாளர் 3 ரூபாய், பொருளாளர் 2 ரூபாய், பொது ஆலோசகர், சட்ட ஆலோசகர், ஆடிட்டர், மக்கள் தொடர்பு அதிகாரி என (ஒரு கார்பரேட் கம்பனிக்கு இருக்கும் எல்லா அம்சங்களுடன்) பதவிகள் அமோக விற்பனை ஆனது. உறுப்பினர் பதவிக்கு 25 பைசா மட்டுமே என டிஸ்கவுண்ட் கொடுத்தும் அதை வாங்க ஆள் இல்லை. அதனால் செயலாளர் 5 பேர், பொருளாளர் 8 பேர் (இது உலகத்தில் அடுக்குமா?), சட்ட ஆலோசகர் மட்டுமே கிட்ட தட்ட 13 பேர். இப்படியாக மன்றத்தில் பலர் இருந்தும் போஸ்டர் அடிக்க காசு தேறவில்லை. போஸ்டர் என்பது கொஞ்சம் கொஞ்சமாக சைஸ் சுறுங்கி உள்ளங்கை அளவு போஸ்டர் ஆகிவிட்டது. (அதற்கு பெயர் நோட்டீஸ் என சொல்ல மனசு வரலை).


இன்னும் சொல்லப்போனால் அந்த சின்ன சைஸ் போஸ்டரை(?) வாங்கக்கூட காசு போதவில்லை. அப்பவும் மோக்கு சளைக்கவில்லை. அதுக்கும் ஒரு ஆளைப்பிடித்து விட்டான். ஆனால் அந்த ஆள் போட்ட கண்டிஷன் தான் ரொம்ப பெரிசு. மோக்கு தனக்காக வைத்திருந்த அந்த "விற்பனை" செய்யாத தலைவர் பதவியை கேட்டாரு. மோக்கு அடித்து பிடித்து என்னிடம் ஆலோசனைக்கு வந்த போது நான் கோவமாக அவனிடம் "பொது ஆலோசகர், சட்ட ஆலோசகர்"ன்னு ஏகப்பட்ட பேரை போட்டிருக்கியே அங்க போய் கேளு" என்றேன். அப்போது அவன் சொன்ன பதில் ....ஊஃப் இப்போது நினைத்து பார்த்தாலும் என்னால் சிரிப்பை அடக்க முடியலை.


"டேய் அவ்ங்களுக்கெல்லாம் பேச வராதுடா" என்றான். நான் பதறிப்போனேன். "என்னடா? அவங்கள்ளாம் ஊமையா? வாய் பேச வராதா?" என பாவமாக கேட்ட போது அவன் அவசரமாக குறுக்கிட்டு "வாயை கழுவுடா, இன்னும் பேச்சு வரலை. எல்லாரும் 2 நாள், 3 நாள் குழந்தைகள் தான்" என சொன்ன போது எனக்கு மூச்சே நின்றுவிட்டது.


விஷயம் இது தான். எங்கள் வீட்டுக்கு எதிரே முனிசிபாலிட்டியின் பிரசவ ஆஸ்பத்திரி. நாங்கள் எப்போதுமே அதன் வாசலில் இருக்கும் மாமரத்தில் தான் வாசம். அங்கே அப்போது ஒரு நாளைக்கு 3 பிரசவமாவது நடக்கும். எல்லாரும் கிட்ட தட்ட தெரிஞ்சவங்க தான். இவன் அங்கே குழந்தை பெத்து சாக்லெட் கொடுக்கும் அப்பன் காரன்க கிட்டே "உங்க பிள்ளைக்கு பதவி தரேன்"ன்னு சொல்லி வித்திருக்கான். இருப்பதிலேயே "சட்ட ஆலோசகர்" பதவி தான் ஒரு ரூபாய் என்பதாலும், பிறந்த உடனே தன் குழந்தைக்கு பதவி தேடி வருதேன்னு ஆசையிலும் ஒரு ரூபாய் கொடுத்து பதவி வாங்கி இருக்காங்க அந்த பெற்றோர்கள். அட தேவுடா....


ஒரு வழியாக "கௌரவ தலைவர்" என்னும் பதவியை அந்த ஆளுக்கு கொடுத்து போஸ்டர் அடிக்க கிளம்பினோம். "ட்ராப்ட்" செஞ்சது எல்லாம் நான் தான். அவன் கொடுத்த லிஸ்டில் இருக்கும் பெயர்களில் ஏகப்பட்ட பெண்கள் பெயர்கள் இருந்தன. கேட்ட போது மகளிர் அணி என்றான். ஒரு ஒரு பதவிக்கும் ஒரு ஒரு கேப்ஷன் இருக்க வேண்டும் என்று வேறு எனக்கு கண்டிஷன் போட்டான். அப்படியே எழுதியும் கொடுத்தேன்.


நோட்டீஸ் அடித்தும் வந்து விட்டது. முதல் நாள் பியர்லெஸ் சென்று சூடம் காண்பித்து தேங்காய் உடைத்து எல்லாம் முடிந்து படமும் பார்த்து விட்டு வந்தோம். தவிர அந்த நோட்டீஸ்ல் ஒரு சாக்லெட் பின் அடித்து காசு கொடுத்து பதவி வாங்கின எல்லாருக்கும் அவன் கொடுத்து வந்தான். அப்போதெல்லாம் நான் இல்லை.

அடுத்த நாள் அரக்க பரக்க ஓடிவந்தான் மோக்கு என்னிடம்.

"டேய் நீ அந்த மகளிர் அணிக்கு எழுதின கேப்ஷன்ல ஏதோ தப்பு இருக்குதாம். எல்லாரும் திட்டிகிட்டே காசை திருப்பி கேக்குறாங்கடா. நீ தான் எழுதினேன்னு சொன்னேன். உன் மேல செம கொல வெறில இருக்காங்கடா. உன்னை அழைச்சுட்டு வர சொன்னாங்க" என்றான்.


எதுனா எழுத்துப்பிழையா இருக்கும் என நினைத்து அந்த நோட்டீஸ் வாங்கி பார்த்தேன். பகீர் என ஆகிப்போச்சு எனக்கு. அதிலே "உடல் ரஜினிக்கு - உயிர் மண்ணுக்கு" என போட்டு அதன் கீழ் மகளிர் அணியினர் பெயர் இருந்தது. நான் போய் உதை வாங்க இளிச்சவாயனா என்ன?


இன்று அதல்லாம் நினைத்து பார்த்து கொண்டேன். ஏனனில் இன்று ரஜினிக்கு பிறந்த நாள்! மோக்குவிற்கு போன் செய்து வாழ்த்தினேன். டி வி டி யில் ஐந்து ரஜினி படம் பார்த்தானாம். இப்போது சென்னையில் இருக்கிறான்.



நாங்கள் சிறுவராக இருந்த போது ரஜினி ரசிகராக இருந்தோம். பின்னர் வாலிப வயசில், பின்னர் இப்போது நடுத்தர வயதில்.... அது போலவே இன்றும் ரஜினிக்கு குழந்தைகள் கூட ரசிகர்களாக ...... அவர்கள் நடுத்தர வயது ஆகும் போதும் ரசிகராக இருப்பார்கள். தலைமுறை தாண்டிய ரசிகர் கூட்டம். இது ரஜினிக்கு மட்டுமே சாத்தியம்! என் அன்பான வாழ்த்துக்கள் ரஜினிசார்!

November 4, 2013

காலச்சக்கரம் - ஷேவிங் ஆசை!



சின்ன வயதில் எப்போது பார்பர் ஷாப் போனாலும் யாராவது சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டு ஷேவ் செய்து கொள்ளும் போது அந்த பார்பர் "ரவுண்ட் ஷேவிங் சோப்"ல்லில் ஷேவிங் பிரஷை தண்ணீரில் நனைத்து விட்டு இரு விரல்களால் அழுத்தி தண்ணீர் அதிகம் இல்லாமல் அந்த ஷேவிங் ரவுண்ட் சோப்பில் ஒரு சுழட்டு சுழட்டி விட்டு சாய்ந்து கிடப்பவன் கன்னத்தில் விளையாடும் அந்த அழகை ரசிப்பேன். நொடியில் அவன் முகம் முழுக்க நுரை மூடும். பின்னர் அதை கத்தியால் லாவகமாக வழித்து எழுத்து தன் புறங்கையில் அதை தடவி சேகரித்து ஓரளவுக்கு மேல் ஆனதும் அதை ஒரு சிந்து பாத் அல்லது ஆண்டிப்பண்டாரம் பாடுகிறார் பிட்டு பேப்பரில் வழித்து அதை மடக்கி குப்பையில் போடுவதை பார்த்து கொண்டு இருப்பேன். அந்த ஷேவிங் ரவுண்ட் பார்த்தால் ஏதோ தேங்காய் மூடியில் தாய்மார்கள் பாதி திருகிவிட்டு மீதி வச்சமாதிரி இருக்கும்.

வீட்டில் அப்பா செல்ஃப் ஷேவிங் செய்துக்கும் போது இந்த வித சடங்குகள் எதும் இல்லாமல் "டேய் ஓடிப்போய் ஒரு 'அஷோக்' பிளேடு வாங்கியா" என நாலணா நீட்டும் போது அடுத்த கேள்வி "அது இல்லைன்னா?" என்பேன் .... அதுக்கு அப்பா "எடுத்ததும் ஏன் நெகடிவா பேசுற? இல்லைன்னா 'பனாமா' வாங்கிட்டு வா" என அனுப்புவாங்க. வாங்கி வந்ததும் அதை பிரித்து ஒரு ரேசரில் போட்டு தண்ணி தொட்டு அவாசரமாய் இரு கன்னத்திலும் தடவி விட்டு  ஏதோ குளிக்கும் சோப் கொஞ்சம் கையில் பிடித்து தாவங்கட்டையில் சர சரவென கடமைக்கு தடவிகிட்டு... அது நுரையே வராது... இருப்பினும் ரேசரை எடுத்து வரட்டு வரட்டுன்னு இழுக்க ஆரம்பிச்சு மீசை கிட்டே மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்தி, அதும் கூட ஒரு நிமிஷத்தில் முடிஞ்சிடும்...  முடிக்கும் முன்பே "வென்னீர் ரெடியா?"ன்னு  குரல் கொடுத்து கொண்டே குளிக்க போய்விடுவாங்க. ஷேவ் செய்த தடயங்கள் எதும் இருக்காது அந்த இடத்தில்.

ச்சே... என்ன அப்பா இப்படி இருக்காங்க... நானென்லம் பெரியவனாகி மூஞ்சி முழுக்க தாடி இருக்கும் போது ஒரு நல்ல "ஷேவிங் ரவுண்ட் சோப்" வாங்கி, பிரஷ் எல்லாம் வாங்கி சூப்பரா செஞ்சுக்கனும் என நினைத்துக்கொள்வேன். பின்னர் பதின்ம வயதுகளில் அரும்பு மீசை எட்டி பார்த்த காலத்தில் தாவாங்கட்டையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நாலு முடி நீட்டி நிற்கும் போதே மெனக்கெட்டு சைக்கிள் எடுத்து கிட்டு நண்பன் வீட்டில் சென்று "இன்னிக்கு எனக்கு ஷேவிங் செஞ்சுக்கனும். நான் கடைத்தெருவுக்கு வர மாட்டேன். என்னை வந்து டிஸ்டர்ப் பண்ணாதே"ன்னு பந்தால்லாம் விட்டு விட்டு வருவேன். அன்று எந்த வேலை வீட்டில் சொன்னாலும் ... "நோ நோ... நான் ஷேவிங் செஞ்சுக்கனும்... ச்சேச்சே இந்த மீசை, தாடி வேற வளர்ந்து தொங்குது... ஆம்பிளையா பொறந்தாலே எத்தனை தொல்லை, எத்தனை தொல்லை..." என போலியாக அலுத்துக்கொள்வேன். தவிர இன்னும் ஒரு பயம்... இன்றைக்கு ஷேவ் செய்து கொண்டால் அந்த நாலு முடி மீண்டும் எட்டிப்பார்க்க இன்னும் எத்தனை நாள் ஆகுமோ??? மீண்டும் இந்த பந்தா காட்ட ஊஃப்ப்ப்...

வீட்டு முற்றத்தில் வாகாய் மனைக்கட்டை எடுத்து எனக்கு ஆசனமாய் போட்டுக்கொண்டு முற்றத்தின் மேல் தாழ்வாரத்தில் இருக்கும் தூணில் பெரிய கண்ணடி எடுத்து வைத்துக்கொண்டு ஒரு சின்ன கிண்ணத்தில் உப்பு போட்ட வென்னீர் ( காயம் பட்டால் செப்டிக் ஆகக்கூடாதாம்... கல்கண்டில் படித்த டிப்ஸ்), ஷேவிங் ரவுண்டு சோப், படிகாரக்கல், டெட்டால், ஷேவிங் ப்ரஷ், ரேஸர், வில்கின்ஸ் ப்ளேடு (அது தான் அப்போதிக்கு ஒஸ்தி) எல்லாம் ஒரு அட்டகாசமான செட்டப்பில் வைத்து கொண்டு சோப்பில் சுழட்டிய பிரஷ் எடுத்து நெற்றி, கண் தவிர்த்து எல்லா இடத்திலும் அப்பிக்கொண்டு (ஹூம் அந்த நீட்டிக்கொண்டு இருக்கும் நாலு முடியை கண்ணை மூடிக்கொண்டு கையால் பிடிங்கினால் கூட மொத்தமே 8 வினாடி போதுமானது) வீட்டு கதவை யாரும் தட்டாத போதே "யாரது வீட்டு கதவை திட்டுவதுப்பா இந்த நேரத்திலே... நிம்மதியா ஷேவ் பண்ணிக்க கூட முடியல..." என அலுத்துக்கொண்டே துண்டை பெரிய மனுஷனாட்டம் போர்த்தி கொண்டு வாசலில் நுரை முகத்துடன் வந்து சாலையை பார்த்து "யாருப்பா கதவை தட்டுனது..."ன்னு ....ஆகா என்ன ஒரு அமர்களம்....

அப்பன்னு சாலையில் போகும் யாராவது தெரிஞ்சவங்க "என்னப்பா என்ன பார்க்கிறே"ன்னு கேட்டுட்டா போதும்... சொர்கமே அது தான்... "அடடே நாகராஜ் அண்ணனா... ஒண்ணும் இல்லைன்னே... ஷேவ் பண்ணிக்க உட்காந்தேன். யாரோ வந்து கதவை தட்டினாங்க. அதான் யாருன்னு  பார்க்க வந்தேன்" என சொல்லிட்டு வருவேன். மெதுவாக வழித்து எடுத்து எடுத்து பார்ப்பின் அந்த சோப் நுரைக்குள் அந்த நாலு முடி மாட்டாமல் நுரை எல்லாம் வந்த பின்னும் நட்டுகிட்டு நிக்கும்... பின்னே சுத்தி சுத்தி பார்த்து விட்டு கையால் அதை பிடுங்கி எரிந்து விட்டு காயம்படாத கன்னத்தில் படிகாரம் போட்டு எரிச்சல் ஆகிக்கிட்டு "அய்யோ... எரியுதே"ன்னு புலம்பிகிட்டு பின்னே அதுக்கு மேலே டெட்டால் வேறு போட்டுப்பேன்.

இப்படியாக பதின்ம வயது எல்லாம் முடிந்து, பின்னே படிப்பு எல்லாம் முடிந்து வேலைக்கு போகும் காலத்தில் தினமும் ஆபீஸ்க்கு ஷேவிங் செஞ்சு கிட்டு தான் போக வேண்டும் என்ற நிலையில் நிஜமாகவே ஷேவ் செஞ்சுக்க அலுப்பாய் தெரிந்தது. எதற்காக ஆசைப்பட்டனோ அது மிக மிக ஒரு எரிச்சலான விஷயமாக மாறிப்போனது எனக்கு.
இரண்டு நாள்  ஷேவ் செய்யாமல் விட்டால் "என்னாச்சி உடம்புக்கு? ஜுரமா?" என்றெல்லாம் கேட்க ஆரம்பித்தனர். ஆக இந்த பாழாய்ப்போன சமூகத்துக்காகவே ஷேவ் செய்து தொலைக்க வேண்டியதாய் போனது.

எப்போது எனக்கு ஷேவிங் என்பது எரிச்சலான சமாச்சாரமாக ஆனதோ அப்போதிலிருந்தே இந்த ஷேவிங் சோப்... ஆஃப்டர் ஷேவிங் லோஷன் இதல்லாம் தூக்கி கடாசிட்டேன். இந்த பதிவின் ஆரம்பத்தில் சொன்னேனே என் அப்பா ஷேவிங் செய்து கொள்ளும் லட்சனம்... அது போலத்தான் இப்போதெல்லாம் வரட்டு வரட்டுன்னு இழுத்து விட்டு  ஐந்து நிமிடத்தில் குளிக்க போய்விடுகிறேன்.

இரு நாட்கள் முன்பாக என் மகனை அழைத்து கொண்டு தீபாவளிக்காக கடைத்தெரு சுற்றிக்காட்ட போன போது மணிக்கூண்டு அருகே ஒரு சின்ன பாட்டிலில் ஏதோ சோப் நுரை வைத்து கொண்டு அதில் ஒரு சின்ன வளையம் முக்கி எடுத்து பப்பிள்ள் விட்டு கொண்டு இருந்தான் ஒரு ஆசாமி. ரோட்டோர வியாபாரி. அது வேண்டும் என என் மகன் கேட்க வாங்கி கொடுத்தேன். "இந்தநுரை தீர்த்து பேச்சுதுன்னா இவன் அழுவானேப்பா, இந்த நுரை எது வச்சிப்பா செய்வே?" என நான் முன் ஜாக்கிரதை முத்தண்ணாவாக கேட்க அந்த வியாபாரி "அது ஷேவிங் கிரீம் இருக்குல்ல சார், அதை கொஞ்சம் தண்ணில கரைச்சு இந்த பாட்டில்ல ஊத்திகுங்க. சோப்பை விட அதிலே நிறைய பப்பிள்ஸ் வரும்" என சொன்னான்.

மீண்டும் நடந்து வரும் போது என் மகன் என்னிடம் கேட்டான் "அப்பா, நீ மட்டும் ஏன்ப்பா மூஞ்சில நிறைய நுரை வச்சிகிட்டு ஷேவ் பண்ணிக்க மாட்டேங்குற. அந்த க்ரீம் வாங்கிட்டு போவுமா? நம்ம வீட்டிலே தான் அது இல்லியே. நீ சோப்பு தானே போட்டு ஷேவ் பண்ணிக்கிற. நான் ஹேர் கட் பன்ணிக்க போகும் போது அந்த கடைல பார்ப்பேன்.. எவ்ளோவ் நுரை தெரியுமா அவரு வரவழைப்பாரு... நான் பெரியவனா ஆனதும் நிறைய நுரை எல்லாம் போட்டு பெரிய மீசைல்லாம் வச்சு ஷேவ் பண்ணிக்குவேன்"


காலச்சக்கரம் என்ன வேகமாய் சுழலுகின்றது!

October 30, 2013

ஜே பி சி இறுதி அறிக்கையும், காங்கிரஸ் 29.10.2013 முதல் அரசியலில் மீண்டும் "உத்தம பத்தினி" ஆன கதையும்!

ஜே பி சி இறுதி அறிக்கையும், காங்கிரஸ் 29.10.2013 முதல் அரசியலில் மீண்டும் "உத்தம பத்தினி" ஆன கதையும்!



2ஜி ஸ்பெக்ட்ரம் பிரச்சனையை  விசாரிக்கிறேன் பேர்வழி என ஆளும் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற கூட்டுக்குழு ஒன்றை அமைத்து அதற்கு தலைவராக கேரள எம் பி யான பி.சி சாக்கோ அவர்களை நியமித்து விசாரித்து இன்று அந்த குழு தன் இறுதி அறிக்கையை பாராளுமன்ற சபாநாயகர் திருமதி மீரா குமார் அவர்களிடம் சமர்பித்தது. அதில் "பிரதமரை  ஆ.ராசா அவர்கள் தவறாக வழி நடத்தி விட்டார்" எனவும் "இந்த பிரச்சனைக்கும் பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களுக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை" என சொல்லிவிட்டார்.

எனக்கு திரு.ஜெயகாந்தன் கதை தான் நியாபகம் வந்து தொலைக்கின்றது. கற்பிழந்து போனவளை ஒரு குடம் ஜலம் தலையில் ஊற்றி "ச் சூ... ஓடிப்போ"ன்னு சாத்தானை விரட்டி "இன்று முதல் நீ மீண்டும் கற்புக்கரசி" என செய்வது போல நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர்  அவசர அவசரமாக பிரதமர் மன்மோகன் சிங், நிதி ப.சி மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு  பி.சி சாக்கோவால் "ஜே பி சி விசாரனை இறுதி அறிக்கை" என்னும் ஒரு குடம் ஜலம் கொண்டு அவர்கள் தலையில் ஊற்றி இன்று முதல் "மீண்டும் கற்புக்கரசி" பட்டாபிஷேகம் செய்விக்கப்பட்டது!

2010ல் இந்த ஸ்பெக்ட்ரம் பிரச்சனை ஆரம்பித்த போது என்ன செய்திருக்க வேண்டும் காங்கிரஸ்? உடனே பிரதமர் அறிக்கை வெளியிட்டு இருக்க வேண்டும். என்னவென்று? "ஒன்னே முக்கால் லட்சம் கோடி அரசுக்கு இழப்பு என சி ஏ ஜி சொன்னது உண்மை அல்லது பொய் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். ஏனனில் அரசு என்பது கார்பரேட் கம்பனி இல்லை. இது மக்களுக்காக நடத்தப்படும் ஒரு அரசாங்கம். தவிர தொலை தொடர்பு என்பதே ஒரு "சேவை" நிறுவனம் தான். அரசுக்கு இழப்பு என்பது எங்களுக்கும் தெரியும். இது அரசு கொள்கை. சி ஏ ஜி சொல்வது போல அரசுக்கு இழப்பு ஏற்படாமல் இந்த தொலை தொடர்பு சேவை நிறுவனத்தை லாபகரமாக ஆக்கி காட்டவும் அரசுக்கு முடியும். ஆனால் அப்படி செய்யப்படின் எப்படி பத்து பைசாவுக்கு போன் செய்ய முடியும்? ஒரு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 950 ரூபாய் என இருக்கும் போது அரசு ஒரு சிலிண்டருக்கு 500 ரூபாய் வரை மானியம் கொடுக்கின்றதே... அது கூட அரசுக்கு இழப்பு தான். அது போல பொது வினியோக அரிசி விலைக்கும் அரிசியின் அடக்க விலைக்கும் கூடத்தான் ஒரு கிலோவுக்கு பத்து ரூபாய் வரை இழப்பு அரசுக்கு. அதனால் சி ஏ ஜி தன் வேலை... கணக்கு பார்த்து சொல்வது. அத்தோடு நிறுத்தி கொள்ள வேண்டும். அது போல அது ஒன்னே முக்கால் லட்சம் கோடி இழப்பா என்பதை எல்லாம் நாங்கள் பாராளுமன்ற கூட்டுக்குழு  அமைத்து விசாரித்துக்கொள்வோம்" என கூறிவிட்டு அப்போதே  அனைத்து கட்சிகள் உள்ளடக்கிய ஒரு குழு அமைத்து இதை விசாரித்து இருந்தால் காங்கிரஸ் ஒரு உத்தம கட்சி. அதன் பிரதமர் யோக்கிய சிகாமனி என நம்பி இருக்கலாம்.

ஆனால் நடந்தது என்ன? அப்போது இந்த பிரச்சனை பூதாகரம் ஆன போது அதிலே எதிர்கட்சிகள் பூச்சாண்டி காட்ட எவ்வித முகாந்திரமும் இல்லை என காங்கிரசுக்கு நன்கு தெரிந்தும் கூட்டணி கட்சியாக இருக்கும் திமுகவை தன் கட்டுப்பாட்டுக்குள் வரவழைக்க இதுவே சரியான சந்தர்ப்பம் என ஏதோ கத்துக்குட்டி காங்கிரஸ் தலைவர்கள் செய்த துர்போதனையின் காரணமாக காங்கிரஸ் தலைமையும் திமுகவிடம் "ஆ.ராசாவை ராஜினாமா செய்ய சொல்லுங்கள்" என கேட்டு அதன் பின்னர் ஒட்டுமொத்த பழியையும் திமுக மீதும், ராசா மீதும் மட்டும் சுமத்தி விட்டால் அவர்கள் வழிக்கு வந்து தன் கட்சியை காங்கிரசிடம் அடமானம் வைத்து விடுவர் என தப்பு கணக்கு போட்டது காங்கிரஸ்.

ஆனால் திமுக தலைமையோ ஆ.ராசா அவர்களையும் கைவிடவில்லை. அது போல காங்கிரசுக்கும் பணிந்து போகவில்லை. அதிக பட்சமாக காங்கிரஸ் சாதித்துக்கொண்டது 2011 தமிழக சட்டமன்ற தேர்தலில் 63 சீட்டுகள் பெற்றது தான். அதிலே ஐந்து மட்டுமே வெற்றி கண்டது என்பது தனிக்கதை. இந்த 63 சீட்டு தானம் என்பதை தவிர திமுகவும் எதற்கும் பணியவில்லை. காரணம் அதற்கு முன்னரே விஷயம் உச்சநீதிமன்றத்துக்கு பொதுநல புலிகள் வழியாக போய் சேர்ந்து உச்சநீதிமன்ற நீதிபதிகளே ஒன்னேமுக்கால் லட்சம் கோடி என்றதும் வாயடைத்துப்போய் சி பி ஐ கிட்டே "உடனே என்ன ஏதுன்னு விசாரிக்கவும். விசாரித்து கைது நடவடிக்கை எனில் அதையும் செய்து முதல் தகவல் அறிக்கையின் படி வழக்கை தொடுக்கவும். இதற்காக தனி சிறப்பு நீதிமன்றம் கூட அமைத்து தருகிறோம். தினம் தினம் வழக்கு நடக்க வேண்டும்" என்றெல்லாம் பொங்கி வெடிக்க அதுவே திமுகவுக்கு சாதகமாகவும் காங்கிரசுக்கு பாதகமாகவும் ஆகித்தொலைந்தது. ஏனனில் இந்த ட்விஸ்டை  காங்கிரஸ் கூட எதிர்பார்க்கவில்லை. திமுகவை மிரட்டுவோம். ராசாவை ராஜினாமா செய்ய வைப்போம். வரும் 2011 தமிழக சட்ட மன்ற தேர்தலில் 117 சீட் சரிக்கு சமமா இந்திரா காலத்தில் செய்தது போல செய்வோம். அதன் பின்னே வெற்றி பெற்றால் கூட்டனி மந்திரி சபை, அல்லது ஒருவேளை காங்கிரஸ் அதிக சீட் வாங்கினால் காங்கிரஸ் முதல்வர் என கனவு கண்டது காங்கிரஸ். அறிஞர் அண்ணா கருவறுத்த காங்கிரசை மீண்டும் தமிழகத்தில் முதல்வர் நாற்காலியில் பக்தவத்சலத்துக்கு பின்னர் அதாவது 1966க்கு பின்னர் 45 வருடங்களுக்கு பின்னர் அமர்த்திப்பார்த்து அழகு பார்க்கலாம் என நினைத்தது காங்கிரஸ்.

அதற்கெல்லாம் இடம் கொடுக்காமல் ராசாவின் ராஜினாமா கடிதம் வாங்கப்பட்ட உடனேயே பொதுநல புலிகள் பிரஷாந்த் பூஷன், சுனாசுவாமி ஆகியோர் உச்சநீதிமன்றம் சென்று அங்கே களேபரம் ஆகி ராசா தனக்கு தானே வாதிடவும், ஜாமீன் கூட கேட்காமல் சி பி ஐ யே திணறும் அளவுக்கு வாதங்கள் முன் வைத்த நிலையில் .... இது என்ன கூத்து என இதை படிக்கும் நீங்கள் கேட்கலாம்... சொல்கிறேன்... ஒன்னே முக்கால் லட்சம் கோடி இழப்பு என சொன்ன போது "ஆஆஆஆ... அப்படியா?" என வாய்பிளந்த உச்சநீதிமன்றம் சி பி ஐ வழக்கு தொடுக்கும் போது ஆரம்பமே சறுக்கல்.. சி பி ஐ வழக்கு தொடுத்ததே சுமார் 40000 கோடி இழப்பு ஆகிவிட்டது ராசாவால் என சொன்ன போதே முதல் சறுக்கல். பின்னர் அந்த தொகை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. பின்னர் காணாமல் போய்விட்டது. ஒரு கட்டத்தில் ராசாவின் மனைவிக்கு மொரீஷியஸ் நாட்டில் பல்லாயிரம் கோடி இருக்கின்றது என்றது. அதை டைம்ஸ் ஆஃப் இந்தியா உள்ளிட்ட பல பத்திரிக்கைகள் அப்போது தலைப்பு செய்தியாக வெளியிட்டன. ராசா அப்போது நீதிமன்றத்தில் நீதிபதி ஓ பி சைனியிடம் எதுவும் பேசவில்லை. "அப்படியா? அப்படி எனில் அதை கைப்பற்றி இந்தியாவுக்கு கொண்டு வாருங்கள்" என்றார். சி பி ஐ கூட நாங்கள் ஒரு குழுவை அங்கே அனுப்பி விசாரிக்க சொல்கிறோம் என்றது. பின்னர் பல மாதங்கள் கடந்த நிலையில் ராசா அதே நீதிபதி ஓ பி ஷைனியிடம் "அந்த மொரீஷியஸ் பணம் வந்து விட்டதா?" என கேட்க சி பி ஐ அதிகாரிகள் வெலவெலத்துப்போனது இங்கே எத்தனை பேருக்கு தெரியும். ஓ பி ஷைனி சி பி ஐ வசம் "என்ன ஆனது அந்த விசாரணை" என கேட்ட போது பதில் எதும் இல்லை சி பி ஐ வசம் இருந்து. அது போல மாத்தூர் என்னும் ஓய்வு பெற்ற ஐ ஏ எஸ் அதிகாரி அடித்த பல்டி, இப்போது அட்டர்னி ஜெனரல் ஆக இருக்கும் வாகன்வது வியர்த்து விறுவிறுத்து போனது எல்லாம் அங்கே தினம் தினம் சி பி ஐ க்கு பெரிய இடியாக இருக்கின்றது . இப்டியாக அங்கே வழக்கு அருமையான கோணத்தில் போய் கொண்டு இருந்த போது அப்போதும் காங்கிரசுக்கு எரிச்சல் திமுக மீது.

உடனே கலைஞர் தொலைக்காட்சிக்கு பணம் கடனாக கைமாறியது என காரணம் காட்டி கனிமொழியை சிறை வைத்தனர் தன் கைவசம் இருந்த தலையாட்டி பொம்மைகளான சி பி ஐ கொண்டு. ஆனது... அதற்கும் திமுக சட்டப்படி அந்த சவாலையும் சமாளித்து இன்று கனிமொழி ஜாமீனில் வெளிவந்து அந்த வழக்கில் இருந்தே தன்னை விடுவிக்க வேண்டும் என கனிமொழி அவர்கள்  தனியே ஒரு ரிட் மனு தாக்கல் செய்யும் அளவு அந்த சி பி ஐ தொடுத்த வழக்கில் ஓசோன் படலம் போல பெரிய பெரிய ஓட்டைகள்.

இந்த நேரத்தில் தான் ராசா அவர்கள் தன் அடுத்த அடுத்த அஸ்திரம் பாய்ச்சத் தொடங்கினார் நீதிமன்றத்தில். தான் செய்த எல்லாமே அமைச்சரவை ஒப்புதல் பேரில் தான், அமைச்சரவை ஒப்புதலில் பேரில் தான் என்று. (அதிலே பிரதமர் மன்மோகன் சிங் கையெழுத்து இட்டதும், அதற்கு முன்பாக பிரதமர் அலுவலகம் முழுக்க முழுக்க அதிலே "நோட்" எழுதியதையும்  அப்பட்டமாக பின்னி பினைந்து கிடப்பதையும் சமீபத்தில் மிக சமீபத்தில் "The Hindu" கூட வெளியிட்டது.)

இதற்கு முன்னரே வழக்கை சந்திக்க திமுகவும் ஆ.ராசாவும் தயாராகிவிட்டனர் என்ற நிலையில் காங்கிரஸ் உடனே அவசர அவசரமாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்கும் என்றது. இதே கட்டுரையில் நான் ஆரம்பத்தில் சொன்னது போல சி ஏ ஜி அறிக்கை வந்தவுடனேயே இதை செய்திருக்க வேண்டும். ஆனால் கத்துக்குட்டி தலைவர்களின் துர்போதனை... மீண்டும் நான் பகிரங்கமாக சொல்கிறேன்.... திமுகவை அடக்கி அடமானமாக அந்த கட்சியை வாங்க வேண்டும் என்ற நினைப்பில் அந்த கத்துக்குட்டி தலைவர் செய்த காரணத்தால் எல்லாம் சொதப்பலாகிப்போனது காங்கிரசுக்கு.

நீதிமன்றத்தில் வழக்கு நல்ல படி நடந்து கொண்டு இருப்பதும்,இந்த ஸ்பெக்ட்ரம் பிரச்சனை காரணமாக  திமுக கொஞ்சம் சுனக்கமாக இருந்த நிலை மாறி சிலிர்ப்பி கொண்டு எழுந்து நின்றதையும் கண்ட காங்கிரஸ்... இனியும் நீதிமன்ற போக்கில் விட்டால் 2014 பாராளுமன்ற தேர்தலில் பல் இளிக்க வேண்டிய நிலை வந்து விடும் என நினைத்து உலக உத்தமர் பி.சி சாக்கோ என்னும் தலையாட்டி பொம்மையை தேர்ந்தெடுத்து அவரை தலைவராக்கி ஒரு அனைத்து கட்சி குழுவை அமைத்து அதிலே மிக ஜாக்கிரதையாக மெஜாரிட்டி உறுப்பினர்கள் காங்கிரஸ் நிலைப்பாட்டை ஆதரிக்கும் வகையில் பார்த்து பார்த்து உறுப்பினர் ஆக்கியது. குழு உறுப்பினர்கள் எண்ணிக்கையை அவர்களுக்கு சாதகமாக இருக்கும் படி பார்த்துக்கொண்டது.

பி.சி சாக்கோ விசாரித்த லட்சனம் நாடே அறிந்தது. ஒரு மனிதன் மீது குற்றம்  சுமத்தப்படுகின்றது. இப்போது மத்திய அரசின் அட்டர்னி ஜெனரலாக இருக்கும் வாகன்வதி இதே ஜே பி சி க்கு முன்னர் வந்து ஆ.ராசா மீது பொய்யான ஒரு குற்றச்சாட்டை சொல்கிறார். (இதே வாகன்வதி தான் அப்படி பொய் தகவல் சொல்லும் ஒரு சில நாட்கள் முன்பாக சி பி ஐ சிறப்பு நீதி மன்றத்தில் முன்னுக்கு பின் முரணாக பேசி ராசா அவர்களால் குறுக்கு விசாரணையின் போது பேந்த பேந்த விழித்தார்.)  உடனே ராசா அவர்கள் ஜே பி சி தன்னையும் இது விஷயமாக  நேரில் அழைத்து விசாரிக்க வேண்டும்  என கோரிக்கை விடுத்தார். ஆனால் அவரை விசாரிக்க மாட்டார்களாம். இது உலக வரலாற்றில் எங்காவது பார்த்தது உண்டா? இந்த அநீதியை எங்காவது கேள்விப்பட்டது உண்டா? சட்ட விரோதமாக நடக்கும் கட்டப்பஞ்சாயத்தில் கூட இரு தரப்பையும் அழைத்து தான் ஒரு பக்கமாக நீதி சொல்லி பார்த்தும் கேட்டும் இருக்கின்றோம். ஆனால் இதிலே உலகமே உற்று நோக்கும் ஒரு விஷயத்தில் குற்றம் சுமத்தப்பட்டவர் விசாரிக்கப்படவில்லை. அதை விட கொடுமை... அந்த குற்றம் சாட்டப்பட்ட ஆ.ராசா அவர்களே தானே வலிய வந்து "என்னை விசாரிக்கவும்" என யார் அந்த விசாரிப்பு குழுவை அமைத்தாரோ அந்த நாடாளுமன்ற சபாநாயகருக்கு  3 பக்க கடிதம் எழுதுகிறார். ஆதன் காப்பியை  ஜே பி சி தலைவர் பி சி சாக்கோவுக்கும் அனுப்புகிறார். அதன் பிரதிகள் எப்படியோ பத்திரிக்கையில் வெளியாகின்றது.அந்த விசாரனை குழுவில் இருக்கும் ஒரு உறுப்பினர் திமுகவின் டி ஆர் பாலு, இன்னும் ஒரு உறுப்பினர் திருச்சி சிவா. இருவரும் பி சி சாக்கோவிடம் மன்றாடி பார்த்தும் அந்த கடிதங்களை குப்பையில் தூக்கி போட்டு விட்டு "ராசாவின் கடிதம் நிராகரிக்கப்பட்டது" என மார்தட்டுகின்றார் இந்த உலக உத்தமர் பி சி சாக்கோ. அப்போதே தெரியும் நீதி எப்படி வரும் என்று.

இதன் நடுவே பாஜக உள்ளிட்ட பல கட்சிகள் "ராசாவை விசாரணைக்கு அழைக்க வேண்டும் " என குரல் கொடுக்க வேறு வழி இல்லாமல் "ராசா எழுத்து மூலமாக பதில் அளிக்கலாம்" என சொல்லப்படுகின்றது. ராசாவும் சளைக்காமல் 17 பக்கத்துக்கு விளக்கம் அனுப்புகின்றார்.அதில் தொலை தொடர்பு துறை எடுத்த முடிவுகள் இந்த ராசா எடுத்த தனிப்பட்ட முடிவு இல்லை. பிரதமரும், அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரமும். அப்போதைய 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு குழு தலைவராக இருந்த அப்போதைய வெளிவிவகார துறை அமைச்சர் பிரணாப்பும் எல்லோரும் சேர்ந்து எடுத்த முடிவு தான் என தெரிவித்து இருந்தார்.
 அந்த விளக்கத்தின் படி மன்மோகன்சிங், ப.சிதம்பரம் இருவரும் பாராளுமன்ற கூட்டுக்குழுவுக்கு முன்னர் தன்னை விசாரனைக்கு உட்படுத்திக்கொண்டிருக்க வேண்டும் அவர்கள் உத்தமர்களாக இருக்கும் பட்சத்தில். இல்லை. அது நடக்கவில்லை. அது போல பி சி சாக்கோ அவர்கள் திட்டவட்டமாக "பிரதமரும் , ப.சிதம்பரமும் விசாரணைக்கு வர தேவை இல்லை" என சொல்கிறார். இது தான் நாடாளுமன்ற கூட்டு விசாரனை கமிஷன் செயல்படும் விதமா? இது தான் நியாயமா?

பின்னர் ராசா அவர்களை விசாரிக்காமலேயே ஏப்ரல் 22ம் தேதி,2013  என நினைக்கிறேன். ஜே பி சி தலைவர் பி சி சாக்கோ ஒரு வரைவு அறிக்கை தயாரிக்கின்றார். சாக்கோ தன் வரைவு அறிக்கையை தன் தலைமையில் இயக்கும் விசாரணை குழுவினருக்கு கூட கொடுக்கும் முன்னரே பத்திரிக்கைக்கு கொடுத்து நாடாளுமன்ற உரிமை மீறல் செய்து தன் ராகுல் விசுவாசத்தை காட்டிக்கொண்டார்.ஆனாலும் ஜே பி சி வரைவு தீர்ப்பில் இதல்லாம் மன்மோகனுக்கு தெரியாது, ப.சிதம்பரத்துக்கு தெரியாது. பிரணாப்க்கு தெரியது ...ராசாவுக்கு மட்டுமே தெரியும். ராசா எடுத்த முடிவு தான் எல்லாம் என்னும் பாணியில் சொல்லப்பட உடனே  அதாவது வரைவு அறிக்கை வெளியான 24 மணி நேரத்திற்குள் ஆ.ராசா அவர்களின் தன்னிலை விளக்கம் ஜே பி சி க்கு அனுப்பப்பட்டது.

இதோ இந்த பதிவில் இணைக்கட்ட "லிங்"ல் சென்று ஆ.ராசா அவர்களின் 112 பக்க தன்னிலை விளக்க கடித்தம் படித்து பாருங்கள். அதிலும் குறிப்பாக 72ம் பக்கம் எல்லாம் கொஞ்சம் ஆழ்ந்து படியுங்கள். பிரதமரை எத்தனை முறை ராசா அவர்கள் இந்த விஷயத்துக்கக நேரிடையாக அவரது அலுவலகத்திலும், அவரது வீட்டிலும், அவர் கூட்டிய அமைச்சரவை கூட்டத்திலும் சந்தித்தார், எத்தனை முறை கடிதம் மூலமாக தொடர்பு கொண்டு ஆலோசித்தார், அதில் எத்தனை முறை பிரதமர் அலுவலக அதிகாரிகள் குறிப்புகள் எழுதி பிரதமருக்கு அனுப்பி அதை முழுவதும் படித்து விட்டு பிரதமரும் குறிப்பு எழுதி இருக்கின்றர் என்றெல்லாம் விளக்கி எழுதியுள்ளார் ஆ.ராசா அவர்கள். இன்னும் சொல்லப்போனால் இந்த விவகாரம் மிகப்பெரிய பிரச்சனையாக ஊதி பெரிதாக்கப்பட்ட பின்னர் ஒரு வாரம் கழித்து கூட பிரதமரிடம் தான் ஆலோசித்ததை சொல்லி இருக்கின்றார்.

இந்த 112 பக்க கடிதம் ஒரு புத்தகம் போல முதல் பக்கத்தில் "INDEX CONTENT" எல்லாம் போட்டு எந்த பக்கத்தில் என்ன தலைப்பில் விஷயம் இருக்கின்றது என ஒரு வரலாற்று சிறப்பு மிக்க புத்தகம் போல அமைந்துள்ளது. இதையும் ஆனால்  சாக்கோ அவர்கள்  அதை தன் நாற்காலிக்கு முட்டு கொடுத்து விட்டு இப்போது இந்த இறுதி அறிக்கையில் "ஒரு கேவலமான தீர்ப்பை" எழுதி முடித்துள்ளார்.  படித்து உண்மை அறியுங்கள். இதோ இந்த சுட்டியில் சென்று அந்த 112 பக்க ராசாவின் விளக்கத்தை ஆழ்ந்து படியுங்கள் நடுநிலையாளர்களே!  படித்து பாருங்கள்!
 http://www.scribd.com/doc/137506637/JPC-Written-Statement-of-A-Raja-Date-22-04-2013

அதை வாங்கி புட்டத்துக்கு முட்டுக்கொடுத்து விட்டு தன் முதலாளிகள் மன்மோகன் சிங்கையும், சோனியா அம்மையாரையும், காங்கிரசை வரும் காலத்தில் கைதாங்கலாக இமயமலை உச்சிக்கு அழைத்து செல்ல இருக்கும் தேவதூதன் பிரபல "லெக்தாதா" ராகுல்ஜி அவர்களையும் இவர்களுக்கு சற்றும் சளைக்காத குணங்கள் கொண்ட கோமான், சிவகங்கை பெற்றெடுத்த சின்ன பையன், பல்லாயிரக்கணக்கான வாக்கு வித்யாசத்தில் "வெற்றி" (????) பெற்ற சிங்கம் ப.சி அவர்களையும் காப்பாற்ற வேண்டியும் வரிந்து கட்டிக்கொண்டு "வரைவு அறிக்கை" யை "விரைவு அறிக்கையாக" கொல்லைப்புற வழியாக ஊடகங்களுக்கு கொடுத்து விட்டு நீதியை நிலைநாட்டி விட்டு நிம்மதி பெருமூச்சு விட்டு விட்டார் பி.சி சாக்கோ அவர்கள். இதற்கு "மூச்சை விட்டிருந்தால்" கூட நீதி தேவன் மன்னித்திருப்பான்.

வரைவு அறிகையை தாக்கல் செய்த அன்று  பாராளுமன்றம் தொடங்கியதும் உ.புத்திரன் பி.சி சாக்கோ மீது உரிமை மீறல் பிரச்சனை கொண்டு வந்தது திமுக. "இது எப்படி ஜே பி சி யில் இருக்கும் எனக்கே அந்த "வ(வி)ரைவு அறிக்கை" வந்து சேராத போது இந்தியாவின் கடைக்கோடி கன்யாகுமரி டீக்கடை காரருக்கு கூட விரைவா போச்சுதுன்னு திருச்சி சிவாஅவர்கள் கொசின் கேட்க அன்றைக்கு பாராளுமன்றமே ரசாபாசமாகிடுச்சு. அப்டி என்னத்தான் அந்த "வ(வி)ரைவு அறிக்கை"ல இருக்குன்னு திருச்சி சிவா கேட்டாரு.

அதுக்கு முன்ன காங்கிரஸ் கைக்கூலி பி.சி சாக்கோ அந்த விரைவு அறிக்கைல என்னா சொல்லியிருக்காருன்னு ஒரு தபா நாமும் பார்த்துடனும்ல. இதாங்க அந்த அறிக்கை. "அதாவாது மன்மோகன் நல்லவரு, வல்லவரு, நாலும் தெரியாதவரு, வாயிலே விரலை வைத்தால் கூட ஒரு தபா சப்பிட்டு 'எச்சிவுட்டேன்'ன்னு சொல்லும் நல்ல பிள்ளை, அவரை ராசா என்னும் பெரம்பலூர் பூச்சாண்டி மயக்க சாக்லெட் கொடுத்து கூட்டிட்டு போய் "நான் கடவுள்" படத்தில் வருவது போல கண்ணை நோண்டி பிச்சை எடுக்க விட்டாரு. திருட்டு மாங்காய் அடிக்க சொல்லி அதிலே உப்பு தொட்டு துன்னுட்டு சப்பு கொட்டி கித்தாப்பா சிரிச்சாரு. மத்தபடி மன்மோகன் சிங்கு நெம்ப நல்லவரு. அதுமாரியே தான் சிதம்பரம் பையனும். குஞ்சி பிடிச்சு உச்சா போவக்கூட தெரியாம படுக்கைல உச்சா போவாருன்னு தர்காவுல மந்திரிச்சு கயித்த கட்டிகிட்டவரு, முனியசாமி கோயில்ல குனிய வச்சு நேத்திகடன் செஞ்ச பின்னாலக்க தான் வாயில ஒழுவுன வாணி கூட நின்னுச்சு, அத்தினி பச்ச மண்ணு ரெண்டும். ராசா பையன் தான் ரெண்டு பேரையும் கெடுக்க பாத்தான்" - இதான் நம்ம உத்தம புத்திரன் பி சி சாக்கோவின் "விரைவு அறிக்கை". கலைஞர் கூட "எங்கூட்டு பையன் ராசா, ஒசரத்திலும் அண்ணா தான் ..வெவரத்திலும் அண்ணாதான். எப்பத்திக்கும் பஷ்ட் மார்க்கு தான். அந்த ரெண்டும் தான் தத்தாரிங்க. அதுங்களை எங்கூட்டு பையன் கெடுத்தான்னு சொன்னா எந்த மடப்பயமொவன் நம்புவான். கேப்பைல கெரசின் வடியுதுன்னா கேக்குறவன் சைதை நுரைசாமியா தான் இருப்பான்"ன்னு ஒரே போடா போட்டாரு.

மக்களவை, மாநிலங்களவை ரெண்டிலும் 22,ஏப்ரல் 2013 வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட அன்று  திமுக எம் பிக்கள் இந்த பிரச்சனை எழுப்பி அந்த சாக்கோ ஒரு சைக்கோ, அந்த ஆளை டவுசர் கழட்டாம உட மாட்டோம்னு தாண்டி தோண்டில குதிக்க ...கூடவே பாஜகவின் ரவிசங்கர் பிரசாத்தும் சேர்ந்து குதிக்க மீராகுமார் சிரிச்சுகிட்டே கழுத்தை அறுத்துட்டாங்க. "சபை ஒத்தி வைக்கப்பட்டது"ன்னு. அது போல மாநிலங்களவை அமீத் அன்சாரியும் "அ யம் சாரி"ன்னு சொல்லிட்டு ஒத்தி வச்சுட்டாரு. அன்னிக்கு இதான்ப்பா நடந்துச்சு பாராளுமன்றத்திலே.

பின்னர் அந்த கூட்டுக்குழு உறுப்பினரில் ஒருவரான திருச்சி சிவா அவர்களின் பதவிக்காலம் முடிவடைகிறது. அவருக்கு பதிலாக வேறு ஒரு திமுக உறுப்பினர் அங்கே நியமிக்கப்பட வேண்டும். அந்த சின்ன இடையூறு கூட வேண்டாம் என நினைத்த காங்கிரஸ் அந்த ஒரு உறுப்பினர் பதவியை கூட திமுகவுக்கு கொடுக்கவில்லை. அப்படி கொடுப்பின் எங்கே அந்த குழுவில் தனது மெஜாரிட்டி பறிபோய்விடுமோ என்கிற பயம்.

இந்த நிலையில் தான் இன்று விசாரனை அறிக்கை - இறுதி அறிக்கை வெளியானது. அதே வரைவு அறிக்கையே "இறுதி அறிக்கையாக"!அது உத்தமபுத்திரன் பி.சி சாக்கோவால் இன்று(29.10.2013) பாராளுமன்ற சபாநாயகர் மீராகுமாரிடம் இன்று வழங்கப்பட்டது. "பிரதமரை ஆ.ராசா தவறாக வழி நடத்தினார்". இது தான் சாராம்சம் அந்த இறுதி அறிக்கையில். மேலும் "பிரதமரும், நிதி அமைச்சர் ப.சிதம்பரமும் இதில் எவ்வித சம்மந்தமும் இல்லாதவர்கள்" . பிரமாதம். நான் கட்டுரையின் ஆரம்பத்தில் சொன்னது போல இதோ எதிர்வரும்  டிசம்பர் 4 தேதி நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தல்கள் மற்றும் வரும் மே மாதம் 2014 ல் நடக்க இருக்கும் பாராளுமன்ற தேர்தல் இரண்டுக்கும் முன்பாக மன்மோகன், சிதம்பரம் மற்றும் காங்கிரஸ் தலையில் புனித நீர் ஊற்றியாகிவிட்டது. இனி அவர்கள் "அரசியல் உத்தமர்கள்". இதை உலகம் நம்பும்? இந்திய மக்கள் நம்புவார்கள்? ஹூம்... கேவலமாக ஆனது காங்கிரஸ் அந்த கத்துகுட்டி தலைவரால் என்பது மட்டுமே உண்மை. இந்த கத்துகுட்டியின் கையில் இனி இந்தியா கிடைத்தால் இந்தியா  வெளங்கிடும்!

ஆனால் இந்த ஜே சி பி இறுதி அறிக்கை ஒன்றும் இங்கே முக்கியமானது இல்லை. நீதிமன்றம் இருக்கின்றது. அதிலே வழக்கு நடந்து கொண்டு இருக்கின்றது. இதிலே இனிமேல் உச்சநீதிமன்றம் பெரிதா? நாடாளுமன்றம் பெரிதா? என்னும் கூக்குரல்கள் ஒலித்து முடிக்க வேண்டும். எது பெரியது என முடிவுக்கு வரவேண்டும். இதல்லாம் நடக்கட்டும். பின்னர் அதை எல்லாம் பார்த்து கொள்வோம்.
இன்னும் நடக்க வேண்டியது எவ்வளவோ இருக்கின்றது. காங்கிரசுக்கு சாவுமணி அடிக்கும் பிரச்சனை இனி இதான். எப்படியும் பாராளுமன்றத்தில் அறிக்கையை சாக்கோ தாக்கல் செய்யனும். அதுக்கு முன்ன ஜே பி சி கூட்டத்தில் அதை தாக்கல் செஞ்சு ஒப்புதல் வாங்கனும்.அதை செஞ்சாங்கலான்னு தெரியவில்லை. பாராளுமன்றத்துக்கு அந்த அறிக்கை வந்தா அங்க விவாதம் இருக்கு. அதிலே ஆ.ராசா அவர்களே தனது வாதத்தை எடுத்து வைப்பாரு. அது ஒன்னும் தமிழக சட்ட சபை இல்லை. எல்லாம் லைவ் ரிலே. மக்கள் கவனிப்பாங்க. காங்கிரஸ் அரசே ,காங்கிரஸ் அரசே இதிலே இருந்து நீங்க தப்பிக்க ஒரே வழி தான் இருக்கு. கொஞ்ச நாள் ரெண்டல் பேசிஸ்ல தனபாலை அங்க கொண்டு போங்க. லைவ் டெலிகாஸ்ட் செய்ய செயா டி விக்கு மட்டும் உரிமை கொடுங்க. மேசை தட்ட த கு செமிழரசன், கொரத்து சமாரு, அணிசரசு, ரைக்கேல் மாயப்பன்ன்னு மேசை தட்டும் கூட்டத்தையும் கொண்டு போங்க. எவன் பேச்சும் எவன் காதிலும் விழாம பார்த்துப்பானுங்க. போங்கடா போக்கத்த பயலுவலா....
இனி பி சி சாக்கோ அய்யா அவர்கள் வெட்டியாய் பொழுதை கழிப்பார். விடாதீங்க காங்கிரஸார்களே, உடனே நாளை முதல் "நிலக்கரி சுரங்க ஊழல் ரெண்டு லட்சம் கோடியாம். அதை ஒரு பாராளுமன்ற கூட்டுக்குழு அமைத்து அய்யாவை தலைவராக்கி டிசம்பர் 4ம் தேதிக்கு முன்னதாக ஒரு நல்ல தீர்ப்பை சொல்லும் படி பணிக்கவும். அது முடிந்ததும் .... உங்களுக்கு என்ன குறைச்சல். அதான் ஏகப்பட்ட ஊழல்கள் உங்கள் அக்கவுண்டில் இருக்குதே. இனி சாக்கோவை பிஸியாகவே வைத்திருக்கலாம். ஓடுற ஓட்டம் மே மாதம் 2014 வந்துடும். பின்னே உங்களுக்கு இந்த கவலை எதும் இருக்காது.

இதில் இன்னும் ஒரு விஷயம்... ஆ.ராசா என்னும் தன் சக கேபினட் அமைச்சரின் வழிகாட்டுதலால் பிரதமர்  நடக்கின்றார் எனில் இவர் என்ன மண்ணா? களிமண்ணா? பி சி சாக்கோ இதை பிரதமருக்கு செய்யும் விசுவாசமாக நினைத்துக்கொண்டு  இபப்டி ஒரு அறிக்கை கொடுத்து அசிங்கம் செய்த நிலையில் இனியும் சொல்வார் பேச்சை கேட்கும் கேடு கெட்ட பிரதமர் இந்தியாவுக்கு தேவையா என்பதையும் அந்த பிரதமர் சார்ந்து இருக்கும் காங்கிரஸ் கட்சி நாட்டுக்கு தேவையா என்பதையும் மக்கள் உணர வேண்டும். அதற்காக மோடி என்னும் கொலைகார கும்பலும் வேண்டாம். மூன்றாவது உருப்படியான அணி அமையட்டும். அது என்ன செய்கிறது இந்தியாவை எனவும் முயன்று பார்ப்போம்! மீண்டும் சொல்கிறேன். அந்த மூன்றாவது அணியும் உருப்படியான அணியாக இருக்கும் பட்சத்தில் இருந்தால் மட்டுமே இந்தியா உருப்பரும். இனி மக்கள் தலையெழுத்து எப்படியோ அப்படியே நடக்கட்டும்!

October 27, 2013

எனக்கு ஏன் அண்ணன் ஆ.ராசா அவர்களை பிடிக்கும்?



எனக்கு ஏன் ஆ.ராசா அண்ணனை பிடிக்கும் என யோசித்து பார்க்கிறேன். எப்போதில் இருந்து பிடிக்கும் எனவும் யோசித்து பார்க்கிறேன். பல ஆண்டுகள் பின்னோக்கி போகின்றது மனது. சின்ன வயதில்  யாராவது "நீ என்ன பெரிய டாட்டா, பிர்லாவா?" என கேட்கும் போதெல்லம் என் மனதில் "அவர்கள் என்ன பெரிய ஆள்.. அவர்கள் வந்து என்னை பார்க்க "நேரம்" கேட்க வேண்டும்.அந்த இடத்தில் நாம் இருக்க வேண்டும் என நினைத்துக்கொள்வேன். ஆனால் நான் சாமானியன். மிக மிக சாமானிய ஒரு சின்ன நகரத்தில் வசிக்கும் ஒரு நடுத்தர வர்க்கம். இதல்லாம் சாத்தியமா?


சாத்தியம் ஆனது. என்னால் அல்ல. என்னைப்போல ஒரு சாமானியனால். மிக மிக சாதாரண ஒரு குடும்பத்தில் பிறந்த, ஒரு வறட்சியான நகரத்தில் பிறந்த ஒரு மனிதனால். அது அண்ணன் ஆ.ராசா அவர்கள். அவர் மத்தியில் கேபினட் அமைச்சர் ஆனார். உலகம் அவரை திரும்பி பார்த்தது. அவரோ  அப்போது கூட தலைக்கனம் இல்லாமல் தான் வாழ்ந்த பிரதேசத்தை வறட்சி நீக்கி வளம் கொழிக்க வைக்க அந்த பகுதியை பார்த்தார். தன்னைப்போன்ற மக்களை பார்த்தார். இது முதலே எனக்கு அண்ணனை பிடித்து போனது. டாட்டாவும், பிர்லாவும், அம்பானிகளுமே கூட இவரை சுற்றி சுற்றி வந்தனர். என்னைப்போன்ற சாமான்யர்கள் சந்தோஷப்பட்டனர். ஆதிக்க வர்க்கம் இதை ஒத்துகொள்ளுமா? வாய்ப்பில்லை.


2010 ஆரம்பம் முதலே இவர் மீது குறி வைத்தது. கிட்ட தட்ட பிப்ரவரி, மார்ச் மாதங்கள் முதல் இவரை கொத்த தொடங்கின. ஒரே வருடம்... அடுத்த 12 மாதத்தில் அதாவது 2011 பிப்ரவரியில் இவரை தூக்கி காராக்கிரகத்தில் அடைத்து குதூகலித்தது. ஒன்னேகால் வருடம் இவர் சிறையில் இருந்தார். மனிதன் கொஞ்சமும் கலங்கவில்லை. பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். டெல்லியில் இருந்து சென்னை வந்ததும் போய் பார்க்கலாம் என நினைத்துக்கொண்டிருந்தேன். ஏனனில் நான் இந்த 2ஜி அலைக்கற்றை பிரச்சனையில் அண்ணன் ஆ.ராசா அவர்களை ஊடகங்கள் தாக்க தொடங்கியதில் இருந்தே அது பற்றி அதிகமாக விவாதித்துக்கொண்டிருந்தேன் இணையத்தில். அது பற்றி எந்த செய்தி எங்கே வந்தாலும் மனதில் சேகரிக்க தொடங்கி இருந்தேன். சி ஏ ஜி அறிக்கையை முழுமையாய் படித்து முடித்திருந்தேன். அது போலவே அய்யா திராவிட தென்றல் சுபவீ மற்றும் அண்ணன் திருச்சி சிவா ஆகியோர் எங்கு இது பற்றி பேசினாலும் போய் கேட்டுக்கொண்டு இருந்தேன். எனக்கு இருந்த சந்தேகங்களை விஷயம் தெரிந்தவர்களிடம் கேட்டு தெளிந்து கொண்டிருந்தேன். அது போல எனக்கு புரிந்த விஷயங்களையும் மற்றவர்களிடம் நேரிலும், இணையம் வாயிலாகவும் புரியவைக்க முயன்று கொண்டிருந்தேன். இதல்லாம் பிப்ரவரி முதல் வாரம் 2011 அண்ணன் சிறை புகும் முன்னரேயே  நடந்து கொண்டிருந்தன.


சிறைக்கு சென்ற பின்னர் வழக்குகளை உன்னிப்பாய் பார்க்க தொடங்கினேன். இப்போது அண்ணன் சிறையில் இருந்து வெளிவந்தாகிவிட்டது என்னும் நிலையில் அதாவது சென்ற வருடம் 2012 அக்டோபரில் நான் சென்னையில் இருந்த போது ராசா அண்ணன்  சென்னையில் இருப்பதாக செய்தி அறிந்து அரியலூர் மாவட்டம் திரு. எஸ்.எஸ்.சிவசங்கர் சாருக்கு போன் செய்தேன். "நான் ராசா அண்ணனை பார்க்க வேண்டுமே. எனக்கு "நேரம்" வாங்கி தர இயலுமா? என்றேன். நான் இணையத்தில் இந்த 2ஜி அலைக்கற்றை விஷயமாக பல இடங்களில் வாதிடுவதை அவரும் அறிவார். உடனே அவர் சொன்னார்... "தாராளமாக.. இன்று ஞாயிற்று கிழமை. காலையில் இங்கு (பெரம்பலூரில்)ஒரு கட்சி திருமணம். கலந்து கொள்ள பெரம்பலூர் வந்தாங்க அண்ணன். இன்று மதியம் அனேகமாக சென்னைக்குள் நுழையலாம். நீங்க நான் சொல்லும் இடத்துக்கு போய் பாருங்க. நான் அண்ணனிடம் நேரம் வாங்கிய பின்னர் மீண்டும் போன் செய்கிறேன்" என்றார். அது போலவே அடுத்த பத்து நிமிடத்தில் "நீங்க 2 மணிக்கு நான் சொல்லும் அட்ரசுக்கு போங்க. அங்கே விவேகானந்தன் என்னும் அண்ணனின் உதவியாளர்  இருப்பாங்க. அவங்க கிட்டே உங்க பெயரை சொல்லுங்க. பார்த்து விட்டு வாங்க" என சொல்லி அட்ரஸ் கொடுத்தார். மணி அப்போது மதியம் ஒன்று. இன்னும் ஒரு மணிநேரத்தில் நான் திருவான்மியூரில் இருந்து டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலைக்கு போகவேண்டும். சாத்தியமா? இல்லை. ஏனனில் என்னிடம் டூவீலர் கூட இல்லை.


உடனே இணைய தோழர் சரவணகுமாருக்கு போன் செய்து விஷயம் சொன்னேன். அதற்கு அவர் "கரும்பு தின்ன கூலியா? கிளம்பி மாடியில் இருந்து கீழே வாங்க. இன்னும் 10 நிமிடத்தில் நான் அங்கே வருவேன். சரியாக 2 மணிக்குள் அங்கே போகலாம்" என சொன்னார். அது போலவே வந்தார். அண்ணனுக்கு பரிசளிக்க புத்தகம் எதும் வாங்கிப்போம் என கடை தேடினோம். அன்று ஞாயிறு என்பதால் கடை எதும் இல்லை. ராதாகிருஷ்ணன் சாலை நோக்கி போய்கொண்டு இருக்கும் போதே "அடடே நம் தம்பியண்ணன் அப்துல்லாவை கூப்பிடலாமே" என யோசித்தேன். உடனே போன் செய்தேன். மிகவும் ஆர்வமான அப்துல்லா "அண்ணே நீங்க பிரசிடண்ட் ஹோட்டல் வாசலில் நில்லுங்க. நான் பத்தே நிமிஷத்தில் அங்கே இருப்பேன். சேர்ந்து போகலாம்" என சொல்ல ... மணி 1.50க்கு நாங்கள் மூவரும் பிரசிடண்ட் ஹோட்டல் வாசலில் சந்திக்கும் போது தான் ராசா அண்ணன் கார் எங்களை கடந்து அவருடைய வீட்டை நோக்கி சென்றது. ஆமாம்... அப்போது தான் பெரம்பலூரில் இருந்து வந்து நுழைகிறார்.


நாங்கள் மூவரும் ஒரு ஐந்து நிமிட இடைவெளி விட்டு அங்கே வீட்டுக்கு சென்றோம். வாசலில் கூட்டம் இருந்தது. துப்பாக்கி ஏந்திய போலீசார் இருந்தனர். நாங்கள் உள்ளே நுழைந்து சிவசங்கர் சார் சொன்னது போல அண்ணனின் உதவியாளர்  திரு.விவேகானந்தன் அவர்களை சந்தித்தோம். அதற்கு அவர் "முதல்ல சாப்பிடுங்க" என்றார். "இல்லை. நாங்கள் சாப்பிட்டாச்சு சார்" என்றோம். கொஞ்சம் அந்த ஹால்ல போய் வெயிட் பண்ணுங்க. சார் இப்ப தான் வந்தாங்க. ஒருத்தர் கூட பேசிகிட்டு இருக்காங்க. ஐந்து நிமிடத்தில் அவர் வெளியே வந்துடுவார். வந்ததும் நீங்க உள்ளே போங்க" என்றார்.


நாங்கள் ஒரு ஐந்து நிமிடம் அந்த ஹாலில் காத்திருந்தோம். உள்ளே பேசிக்கொண்டு இருந்த நபர் வெளியெ வந்ததும் நாங்கள் மூவரும் உள்ளே சென்றோம். எழுந்து நின்று அப்துல்லா கொண்டு வந்த  சால்வையை போர்த்தினோம். "என்னப்பா இது ஃபார்மாலிட்டீஸ் எல்லாம். இதல்லாம் எதுக்கு?" என்றார்.

எனக்கு அங்கே என்ன நடக்குது என்று புரியவே இல்லை. பிரதமர் கூட பேசினவர், பேசிக்கொண்டு இருப்பவர், பேசப்போகின்றவர், என் தலைவர் கூட காரில் போகும் நபர், என் தளபதி கூட இருப்பவர், டாட்டா, அம்பானி போன்றோர்கள் இவரை கண்டு பேதி போய் கொண்டு இருக்கின்றனர்... அவர் அருகே நான். தவிர என் ஆதர்ஷன புருஷர். இன்னும் சொல்லப்போனால் இணையத்தில் ஆ.ராசா என தேடினால் இவரை திட்டாதவன் எவனும் இல்லை.உலகமே இவரது வழக்கை உற்று நோக்குகின்றது, உச்சநீதிமன்ற நீதிபதிகள் தூக்கத்தில் கூட ஆ.ராசா என்றே கனவு வரும் நிலையில் இருப்பவர், இப்போது அவர் அருகில் நான்.... நான் இணையத்தில் 2 ஜி அலைக்கற்றை சம்மந்தமாக எனக்கு எழுந்த சில சந்தேகங்களை கேட்க வேண்டும் என நினைத்து வந்தேன். ஆனால் என் உடம்பு கொஞ்சம் நடுங்குகிறது. ஏன்? ஏன்? அது குளிரூட்டப்பட்ட அறை என்பதாலா? இல்லை. நிச்சயமாக இல்லை... ஒரு பெரிய ஆகிருதி என் முன்னே... தும்பைப்பூ வேட்டியும் முழுக்கை பளீர் வெள்ளை சட்டையும் அணிந்திருந்தார். "எந்த கடையில் அயர்ன் செய்கிறார்" என மனது அல்பமாக நினைத்துக்கொண்டது.


அவர் அறையை நான் நோட்டமிடுகிறேன். அவருக்கு எதிரே அந்த அறையில் வலது மூலையில் ஒரு பெரிய எல் சி டி டிவி. இவர் டேபிள் ரொம்ப பெரிதாக இருக்கு. டேபிளின் வலது பக்கம் ஒரு பத்து புத்தகங்கள். மேலே இருந்த புத்தகம் பெயர் பார்க்கிறேன். அதுவரை நான் அதை கேள்விப்பட்டது கூட இல்லை. தமிழ் புத்தகங்கள் தான். அவர் நாற்காலி கருப்பு கலர். அது போல எதிரே இருந்த எங்கள் நாற்காலிகளும் கருப்பு கலர் தான். இப்போது கேஷுவலாக சாய்ந்து அமர்ந்து கொள்கிறார். எதிரே இரண்டு செல்பேசிகள். ஒன்று ஸ்மார்ட் போன். அடுத்து ஏதோ ஒறு 1100 மாடல் போன்ற சாதாரண போன். இவைகள் தானே இத்தனை களேபரங்களுக்கும் காரணம் என நினைத்துக்கொண்டேன்.


"சொல்லுங்கப்பா.... இணையத்தில் நீங்கள் எல்லாம் எழுதுறீங்க. ம்.. சிவா சொன்னாப்டி. ம்..கேளுங்க"


அப்துல்லா முதலில் "அண்ணே, எப்டின்னே போகுது கேஸ் எல்லாம். இந்த 2ஜி பத்திதான் நிறைய கேட்கனும் அண்ணே"


"கேஸ் தான் தினம் தினம் நடக்குதே. கிட்ட தட்ட 50 சதம் முடிஞ்சுடுச்சு. நல்ல ஃபாஸ்ட். கேள்வி கேளுங்க. ஆனா அதுக்கு முன்னே எடுத்ததும் டாப் கியரில் போகாம, ஆரம்பம் முதல் கேளுங்க. ஒரு டீக்கடை வாசலில் அமர்ந்து டீ குடிக்கும் ஒரு சாமானிய மனிதன் என்னை பார்த்தா கேட்கக்கூடிய கேள்வி என்னவாயிருக்கும்? அப்படி ஆரம்பிங்க"


நான் உடனே "அண்ணே மாத்தூர் இருக்காரே"


அவர் உடனே "ஹூம்.. எந்த சாதாரண ஆளுக்கு மாத்தூர் பத்தில்லாம் தெரியும்? ஒரு ரிக்ஷா தொழிலாளி என்னை பார்த்தா முதலில் எந்த கேள்வியில் ஆரம்பிப்பார்ன்னு உங்களுக்கு படுதோ அதில் இருந்தே ஆரம்பிங்கப்பா... டோண்ட் ஹெசிட்டேட்"


எங்களுக்கும் தெரியும் ஒரு டீக்கடை வாசலில் அமர்ந்து பேசுபவர்கள் எப்படி பேசுவார்கள் என்று. ஆனால் ஒரு சிம்மத்தின் முன்னே அதை எப்படி கேட்க இயலும் என நான் யோசித்து கொண்டு இருக்கும் போதே அப்துல்லா பேசினார்.


"அண்ணே, அந்த ஸ்பெக்ட்ரம் 2ஜி யில் அடிச்ச ஒன்னே முக்கால் கோடி ரூபாயை எங்க கொண்டு வந்து வச்சிருக்கீங்க?"


எனக்கும் சரவணகுமாருக்கும் பகீர் என ஆனது. எப்படி இப்படி ஒரு தைரியம் வந்தது அப்துல்லாவுக்கு? அது தான் திமுக. மனதில் பட்டதை தைரியமாக கேள்வியாக கேட்டு பதில் வாங்கி அதை வெட்டியாய் புறம் பேசும் வீணர்களுக்கு விளக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் தான் நாங்கள் வந்திருக்கிறோம் இன்று அண்ணனை பார்க்க. அப்படி எனில் இப்படித்தான் கேட்க வேண்டும். இந்த தைரியமான கேள்வியை எதிர்கொள்ள ஜெயா போன்றவார்களுக்கு தைரியம் உண்டா? அல்லது ஜெயா முன்பு எந்த அதிமுக தொண்டனாவது கேட்க இயலுமா? முடியாது.. ஏன்.. மடியில் கனமில்லை. அதனால் கேள்வியை எதிர்கொள்ள ராசா அண்ணனுக்கு பயம் இல்லை.


மிக அழகாக பதில் சொன்னார். "சி ஏ ஜி கூட ஊழல்  தட் மீன்ஸ் ஸ்கேம் என்னும் பதத்தை பயன் படுத்தவில்லை தன் அறிக்கையில். அரசுக்கு வருவாய் இழப்பு என்றே சொன்னது. இது அடிமட்டு மக்களுக்கு ஒன்னேமுக்கால் லட்சம் கோடி ஊழல் என்ற வகையில் எப்படி போய் ஆதிக்க ஊடகங்களால் பரப்பப்பட்டது என விளக்கினார்.


பின்னர் பேச்சு அந்த பிரச்சனையின் அடி ஆழம் முதல் போனது. பாஜகவின் பிரமோத்மகாஜன், அருண்ஷோரியில் இருந்து ஆரம்பித்து தயாநிதிமாறன் பின்னர் ராசா அண்ணன் வரை தொடர்ந்த்து. இதில் ட்ராய் என்னும் தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆனையம் அது சி ஏ ஜி போன்ற தன்னிச்சையான ஆனால் அரசின் கொள்கை முடிவெடுக்கும் மத்திய கேபினட் அமைச்சரவையின் கீழ் வருவது போன்ற எல்லாம் பேசப்பட்டது.


கிட்ட தட்ட நாங்களும் ரிக்ஷா தொழிலாளி நிலையில் இருந்து கொஞ்சம் மேலெழும்பி இணையத்தில் விவாதிக்கும் நபர்கள் என்னும் நிலைக்கு வந்து கேள்வி கேட்க தொடங்கினோம். அப்போது எனக்கு இருந்த ஒரு சந்தேகத்தையும் நான் கேட்டேன். அந்த கேள்வி....


\\ அண்ணே, கிட்ட தட்ட நீராராடியாவுடன் நீங்கள் பேசியதாக கிட்ட தட்ட ஏப்ரல் 2010ல் செய்திகள் வந்தன... பிரச்சனையே நீங்கள் 2 ஜி யை ஏலம் விடாமல் முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என சொன்னதால் தான் என ஊடகங்களும், அரசியல் கட்சிகளும் வரிந்து கட்டி கொண்டு இருந்தன. அப்போது அதே மே மாதம் 20ம் தேதி 2010ம் வருஷம் நீங்கள்  3 ஜி யை ஏலம் விட்டதால் அரசுக்கு 67,719 கோடி ரூபாய் லாபம். ஆனால் அரசு ப்ரொஜக்ஷன் என்பது  35,000 கோடி எனவும் கிட்ட தட்ட டபுள் ஆக கிடைத்தமை குறித்து நான் அந்த துறையின் அமைச்சர் என்ற வகையில் பெருமை படுகிறேன்" என்றும் சொன்னீங்க. பொருளாதார புலி பிரதமரும், நிதி அமைச்சர் பிரணாப்பும் கூட ரொம்ப பெருமைப்பட்டாங்க. உடனே ஊடகங்கள் "பத்தீங்களா, பத்தீங்களா மக்களே, இதே 2 ஜி யை ஏலம் விட்டிருந்தா நாடு எங்கயோ போயிருக்கும்" என வரிந்து கட்டிக்கொண்டு பிரச்சாரம் செய்தன. என் கேள்வி இப்போ என்னன்னா அந்த 2 ஜி ஏலம் விடாம பிரச்சனை வந்ததால் தான் நீங்க 3 ஜியை ஏலம் விட்டீங்களா? இதனால் தானே ஊடகங்கள் எல்லாம் குதற ஆரம்பிச்சுது?\\ கேள்வியை கேட்டு விட்டு மூச்சு வாங்கினேன்.... என்ன பதில் வருமோ என பயம்....


பதில் தெளிவாக இருந்தது.


அண்ணன் ஆரம்பித்தார்....."முதலில் உன் கேள்வியில் இரண்டாம் பகுதிக்கு வரேன். அதாவது "2ஜியை ஏலம் விடக்கூடாது முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை, அது போல 3ஜியை ஏலத்தில் தான் விட வேண்டும்" இப்படி ஒரு ஆர்டர் போட்டது "ட்ராய்". நான் அல்ல. நான் அதில் எதும் செய்ய முடியாது. ட்ராய் அப்படி செஞ்சது மத்திய கேபினட் அமைச்சரவையின் முடிவுப்படி, அதாவது இது இந்திய அரசின் கொள்கை முடிவு. இந்திய அரசின் கொள்கை முடிவை மாற்ற இந்த ராசா என்னும் தனிப்பட்ட மனிதனாலும் முடியாது. மன்மோகன் சிங் என்னும் தனிப்பட்ட மனிதனாலும் முடியாது. மத்திய கேபினட் அமைச்சரவை கூடி அரசின் கொள்கை முடிவை மாற்ற வேண்டும். அது சின்ன பார்மாலிட்டி இல்லை. அதன் பின்னரும் வால் போல நீண்டு கொண்டு போகும் பிரச்சனை. இன்னும் சொல்லப்போனால் அப்படி ஒரு கொள்கை முடிவு எடுக்கப்படின் எதிர்கட்சியான பாஜகவுக்கு பார்லிமெண்டில் பதில் சொல்ல வேண்டும். ஏனனில் அந்த கொள்கை முடிவு வாஜ்பாய் காலத்தில் எடுக்கப்பட்ட அரசு கொள்கை, இது பாலிசி மேட்டர்.

இதில் இன்னும் ஒரு விஷயம் என்னான்னா அந்த ஜி.ஓ என்பதே ஒரு A4 ஷீட்ல முதல் பாராவில் "2ஜியை முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கொடுக்க வேண்டும்" என்றும் இரண்டாம் பாராவில் "3 ஜியை ஏலம் விட வேண்டும்" என்றும் இருக்கும். அடுத்த அடுத்த  ஜி.ஓ கூட இல்லை. அல்லது ஒரே ஜி.ஓ வில் அடுத்த அடுத்த பக்கங்கள் கூட இல்லை. ஒரே A4 ஷீட்ல அடுத்த அடுத்த பாரா தான்". - இது ராசா அண்ணன் பதில்


நான் சொன்னேன்.... "அண்ணே, ஏன் இப்படி இருக்கு அரசு கொள்கை? பாஜக கொண்டு வந்த அரசு கொள்கை சரியில்லை எனில் மாத்த வேண்டியது தானே. அதை தானே இப்போது இணையத்தில் எங்களை கேட்கிறாங்க. "முன்னாடி உள்ளவன் தப்பு செஞ்சா, அதே தப்பை நானும் செய்வேன்  எனில் எதுக்கு ஒரு கேபினட் அமைச்சர்? அதுக்கு ஒரு பத்தாம் வகுப்பு படித்த குமாஸ்தா போதுமே"ன்னு கேட்கிறாங்க அண்ணே?" என்றேன்.


அதற்கு ராசா அண்ணன் "நான் மேலே சொன்ன பதிலில் அந்த கொள்கை தவறானதுன்னு சொல்லவில்லையே. இன்னும் என்னை தனிப்பட்ட முறையில் கேட்டா அது மிக மிக சரியான கொள்கை தான். இதை இப்ப உணர மாட்டீங்க. ஒரு வேளை இப்போ இதில் அமைச்சரா இருக்கும் கபில்சிபல் 2ஜி யை ஊடக வாய்களுக்கு பயந்து "முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை" என்பதை எடுத்து விட்டு எடுத்து விட்டுன்னா அமைச்சரவை கூடி ஏலமுறை என அரசு கொள்கையை மாற்றினால் மிகப்பெரிய இழப்பு ஏற்படும். யாரும் ஏலம் எடுக்க முன் வர மாட்டாங்க. இது தான் நடக்கும்".  என்றார்.


" உடனே நான் அப்படின்னா அந்த கொள்கை முடிவு எப்படி சரின்னு இந்த குருவி மூளைக்கு புரியும் படி சொல்ல முடியுமா அண்ணே" என்றேன்.


"முடியும்... இப்போ ரேஷன் கடையில் விற்கும் அரிசி என்ன விலை?"


"இப்போ சும்மா குடுக்குறாங்க"


"சரி இப்போ விடு. இதற்கு முன்னர்?" - ராசா அண்ணன்.


"ஒரு ரூபாய் ஒரு கிலோ" - சரவண குமார்


"பாய் பிரியாணி அரிசி எவ்ளோவ்யா?"அப்துவிடம் கேட்டார்.


"அண்ணே அது 45 ரூவாய் முதல் 100 ரூவாய் வரை இருக்குண்ணே" - தம்பியண்ணன் அப்துல்லா.


"இரண்டுமே அரிசி தானே. பின்ன ஏன் மாறுபட்டு இருக்கு விலை?"


"தரம்னு ஒன்னு இருக்குல்ல அண்ணே" - இது நாங்கள்


"சரி, ஒரு ரூவாய் அரிசி வாங்குவது யாரெல்லாம்?"- ராசா அண்ணன்

"ஏழைகள், நடுத்தர வர்க்க மக்கள்" - நாங்கள்

"பிரியாணி அரிசி?"- ராசா அண்ணன்

"அது பணம் இருக்குறவன் வாங்குவான்" - நாங்கள்


"சரி இப்போ இந்த ஏழைகள் வாங்கும் அரிசி ஒரு ரூபாய் அரிசியால் அரசுக்கு எவ்வளவு நஷ்டம் தெரியுமா. இழப்பு தெரியுமா? - அமைச்சர்


எங்களுக்கு புரிந்தது.இவர் எங்கே வருகின்றார் என.

மீண்டும் தொடர்ந்தார்......


"இப்ப தெளிவா கோர்வையா சொல்றேன் பாருங்க, மேலே நாம பேசினதையே அதாவது .2 ஜி என்பது பொது விநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் அரிசி போன்றது. 3ஜி என்பதோ பிரியாணிக்கு பயன்படும் உயர்தர பாசுமதி அரிசி போல! பொது விநியோகத் திட்டத்தில் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்கப்படுகிறது என்பதற்காக, பாசுமதி அரிசியை ஒப்பீடு காட்டி 'ஒரு ரூபாய் அரிசி விநியோகத்தால் அரசுக்கு நஷ்டம்' என்று சொன்னால் ஏற்றுக்கொள்வீர்களா? 2 ஜி சேவை என்பது சாதாரண மனிதனுக்கும் போய்ச் சேரவேண்டிய குரல் (Voice) சேவை. 3 ஜி என்பது வர்த்தக ஆவணங்களை அனுப்புவதற்கும், வீடியோ சினிமா போன்ற உயர்ரக சேவைக்கும் உரியது. 2 ஜி சேவை கல்வி, சுகாதாரம், கிராமிய வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் கடைசி மனிதனுக்கும் பயன்படவேண்டிய ஒன்று. 3ஜி என்பது வர்த்தகம் சார்ந்த மற்றும் வசதி படைத்தவர்களுக்கு சேவை அளிக்கக் கூடியது. ஒழுங்குமுறை ஆணையம் உலக நாடுகளில் உள்ள நடைமுறைகளை எல்லாம் கருத்தில்கொண்டுதான், 3ஜி அலைவரிசையை ஏலம்விட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. இப்போதைய இந்தியாவின் சமூகப் பொருளியல் புள்ளி விவரங்களின் அடிப்படையில், சாதாரண குரல் வழி சேவை வழங்கும் 2ஜி சேவைதான் சாதாரண சாமானிய மக்களுக்கு தேவையே தவிர, 3ஜி அல்ல! இன்னுமொரு 4 அல்லது 5  ஆண்டுகள் கழித்து நிலைமை மாறலாம். 1994-ம் ஆண்டு 2ஜி சேவை வந்தபோது எத்தனை பேர்கள் செல்போனை பயன்படுத்தினார்கள்? இப்போது நிலை என்ன? அதேபோல கல்வி அறிவும், தொழில்நுட்ப தாக்கமும் சாதாரண மக்களிடையே உயருமானால் இன்னும் சில ஆண்டுகளுக்குப் பிறகு 3ஜி சேவைகூட எளிதாக்கப்படலாம்; படவேண்டும்! அப்போது, 4ஜி சேவையும் வந்துவிடும். இதுகுறித்து ஒழுங்குமுறை ஆணையம் உரிய முடிவுகளை சூழலுக்கு ஏற்ப எடுக்கும். இப்போதைய ஒழுங்குமுறை ஆணையத்தின் முடிவின்படி 3ஜி ஏலம் விடப்படுகிறது.'' இது ராசா அண்ணன் பதில்.


 எங்களுக்கு மூச்சு முட்டியது.


"அண்ணே, புரியுது. அபிஅப்பா கேட்ட கேள்விக்கு முதல் பகுதிக்கு இன்னும் பதில் சொல்லலையே... அந்த லேடி நீராராடியா.. நீராராடியா" - இது அப்துல்லா.


சிரித்து கொண்டார்....

"அதாவது நீரா ராடியா டாடா கம்பனியின் அஃபீஸியல் பி ஆர் ஓ. இது நான் சொல்லலை.  டாடா கம்பனியே  தெளிவா நியூஸ் லெட்டர்  வெளியிட்டது. எந்தத் தொலைத்தொடர்புத் துறை அமைச்சருக்கும் இருக்கும் முக்கியமான வேலைன்னா  - இத்துறையில் உள்ள பி.எஸ்.என்.எல். உள்ளிட்ட தொலைபேசி நிறுவனங்களிடையே அரசோடு நல்லிணக்கத்தை ஏற்படுத்தி, யாவாரத்தை  சீராக வைத்திருப்பதுதான். அந்த வகையில் ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல் பலமுறை என்னை சந்திக்கிறார். ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் அனில் அம்பானி என்னை சந்திக்கிறார். அதேபோல வோடஃபோன், ஏர்செல் போன்ற எல்லா நிறுவனங்களின் தலைவர்களோ, தலைமை அதிகாரிகளோ சந்திப்பதும் சாதாரணமானது. அந்த வகையில் 'டாடா டெலிகம்யூனிகேசன்' நிறுவனத்துக்காக நீரா ராடியா ஆபரேட்டர் மீட்டிங்லயும் , வேற பல  மீட்டிங்லயும்  கலந்து கிட்டாங்க. என்னிடம் பல்வேறு சட்டப்படியான கோரிக்கைகளை கடந்த காலத்தில் வலியுறுத்தியுள்ளார்.


ஒன்னு புரிஞ்சுக்கனும்... ஒரு நிறுவனத்தின் தலைவரோ, அதிகாரியோ என்னை துறை சார்பாக சந்திக்கிறார் என்பதற்காக அவர் துறைக்கு வெளியேயும் மத்த இடத்திலும் பார்க்கும் சினிமா முதல் பேசும் பழகும் நபர்கள் எல்லாத்துக்கும்  நான் எப்படி ரெஸ்பான்ஸ் ஆவேன்? என்னோடு இன்னிக்கு நீங்க உட்காந்து பேசிகிட்டு இருக்கீங்க. போட்டோ எடுத்துகுறீங்கன்னு வச்சுப்போம். நீங்க வீட்டுக்கு போகும் போது ட்ராஃபிக் ரூல்ஸ் மீறி போலீஸ் உங்களுக்கு ஃபைன் போட்டுச்சுன்னா  அதுக்கு நானா பொறுப்பு? இது போல் ஊடகங்கள் செய்தி வெளியிட முயற்சிப்பது அயோக்கியத்தனம் தவிர்த்து வேறில்லை. " என்றார் அண்ணன் ஆ.ராசா அவர்கள்!

நான் இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் சொன்னதை மீண்டும் படியுங்கள். \\  சின்ன வயதில்  யாராவது "நீ என்ன பெரிய டாட்டா, பிர்லாவா?" என கேட்கும் போதெல்லம் என் மனதில் "அவர்கள் என்ன பெரிய ஆள்.. அவர்கள் வந்து என்னை பார்க்க "நேரம்" கேட்க வேண்டும்.அந்த இடத்தில் நாம் இருக்க வேண்டும் என நினைத்துக்கொள்வேன். ஆனால் நான் சாமானியன். மிக மிக சாமானிய ஒரு சின்ன நகரத்தில் வசிக்கும் ஒரு நடுத்தர வர்க்கம். இதல்லாம் சாத்தியமா? \\

 இதோ இங்கே இது சாத்தியம் ஆயிற்று பாருங்கள். ஒரு சாமானியனை இந்த அளவு உயர்த்திய திராவிடத்துக்கும், பெரியாருக்கும், அதை சாத்தியம் செய்த அண்ணாவுக்கும் என் தலைவர் கலைஞர் அவர்களுக்கும், எங்கள் தளபதி அவர்களுக்கும் இந்த நேரத்தில் கண்ணீருடன் நன்றி சொல்கிறேன்!



மீண்டும் சரவணகுமார் கேட்டார் ஒரு கேள்வி....


"அண்ணே, நீராராடியா அமைச்சராக யார் வர வேண்டும் என்றெல்லாம் பேசினதாக செய்தி வந்துச்சே? -


"ஓர் அரசு புதிதாக அமையும்போது, எந்தவொரு துறைக்கும் வரப்போகும் புதிய மினிஸ்டர் யார் வருவாங்கன்ன்னு தெரிஞ்சுக்க  பல்வேறு நிறுவனங்களும், தொழிலதிபர்களும், ஊடகங்களும் ஆர்வம் காட்டுவார்கள். இது இயற்கை. உதாரணமாக, 'ஆ.இராசாவுக்கு அமைச்சரவையில் மீண்டும் இடமில்லை' என்று பல டி.வி. சேனல்கள் ஒளிபரப்பின. அதற்காக அந்த சேனல்கள், பிரதமரின் அதிகாரத்தில் தலையிட்டன என்று சொல்ல முடியுமா? பிரதமரிடம் கேட்டுக்கொண்டா அப்படி அவர்கள் செய்தி வெளியிட்டார்கள்? இவையெல்லாம் அனுமானங்கள் மட்டுமல்ல... அது அவங்களோட சொந்த விருப்பு வெறுப்பு தான். இதுக்கெல்லாம்  எந்த அமைச்சரும் விளக்கமளிக்க முடியாது.


அதே மாதிரி , இந்த முறை அரசு அமைந்தபோது, 'ஆ.இராசாவுக்கு மந்திரிப் பதவி உண்டா?’ உண்டு எனில் எந்த இலாகா என்பதை எனக்கு வேண்டியவங்களும் கூட ஆராய்ந்து இருப்பாங்க. 'இல்லையா' என்பதை அறிய வேண்டாதவர்களும் தெரிஞ்சுக்க முயற்சி செஞ்சிருப்பாங்க . அதே மாதிரி  என் கிட்டயும்  பல அதிகாரிகள்,  அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், பத்திரிக்கை நண்பர்கள் அந்த நேரத்தில் வெவ்வேறு கருத்துகளை கூட சொன்னாங்க. ஆனால், தலைவர் கலைஞரைத் தாண்டி - காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாரதப் பிரதமர் ஒப்புதல் இன்றி இன்னொருவர் எனக்கு அமைச்சர் பதவியையோ குறிப்பிட்ட இலாகாவையோ தர முடியும் என்று நம்புகிற அளவுக்கு நான் அரசியலில் - அட்மினிஸ்ட்ரேஷன்ல முட்டாள் அல்ல. இதல்லாம் மே மத்தியில் 2010ம் வருடத்தில் ஜூனியர் விகடனுக்கு அளித்த பேட்டியின் போது கூட இதையே சொன்னேன்" - இது அண்ணன் ஆ.ராசா!


நாங்கள் அண்ணன் ராசா அவர்கள் அறைக்கு சென்ற போது மதியம் 2.10 .... இப்போது மணி 3.50 ஆகி இருந்தது. அண்ணன் அவர்களுக்கு இரவு 8 மணிக்கு டெல்லி செல்ல விமானம். இதற்கிடையே தலைவரின் நேர்முக உதவியாளர் திரு.சண்முகநாதன் அவர்களிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. 5 மணிக்கு தலைவர் வீட்டில் இருந்து அறிவாலயம் செல்ல கிளம்ப வேண்டும். 4.50க்கு நீங்கள் தலைவர் வீட்டில் இருக்க வேண்டும்" என்று.


நடு நடுவே இரண்டு முறை தேனீர் வந்தது. நான் அறைக்குள் நுழைந்த போது எனக்கு இருந்த குளிரோ அல்லது நடுக்கமோ இப்போது  இல்லை. உடம்பே லேசானது போல உணர்ந்தேன். எழுந்தோம்... அவரும் எழுந்தார்.
"இது சம்மந்தமா என்ன சந்தேகம் இருப்பினும் எப்போதும் தயங்காம கேளுங்க. ஏனனில் இணையத்தில் பலதரப்பட்ட மக்கள் இருக்காங்க. அவங்களுக்கு புரிய வைக்கும் படி விவாதம் செய்யனும். எப்போதுமே தவறான தகவல் தந்து விடக்கூடாது" என்றார்.


நால்வரும் பேசிக்கொண்டே அறையை விட்டு வெளியே வந்தோம்... வாசலில் இருந்த மழைமரம் தந்த நிழலில் நாங்கள் பேசியது எல்லாம் கனவா நிஜமா யோசித்து சிரித்து கொண்டோம்.  தெளிவான மனோநிலையுடன் வண்டியை எடுத்து எதிர்காற்று காதில் சில்லிட பறந்தோம்.


இது நடந்து ஒரு வருடம் ஆகின்றது. இப்போது தான் இதை வெளியிடுகிறேன். காரணம்... கடந்த நான்கு வருடங்களாக அண்ணன் ராசா அவர்கள் இணையத்தில் கற்பழிக்கப்பட்டது போல யாரும் சீரழிந்து இருக்க மாட்டார்கள். அப்போதெல்லாம் மௌனமாக பதில் சொல்லி கொண்டு இருந்தேன். ஆனால் நேற்று அவருக்கு பிறந்த நாள் ( 26.10.2013). இணையத்தில் எங்கு திறப்பினும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லி பதிவுகள். நான் மட்டுமே என்ன எழுதுவது எப்படி எழுதுவது என குழம்பிவிட்டேன். நேற்று தொலைபேசியில் இதை சிவசங்கர் சார் கிட்டே சொன்னபோது "நீங்கள் போய் அண்ணனை  பார்த்து விட்டு கேள்வி கேட்டு பெற்ற பதிலையே கூட பதிவாக போடலாமே" என சொன்னார். அதனால் இதை இப்போது வெளியிட்டு விட்டேன்.

இதே சந்திப்பில் நாங்கள் பேசியது இன்னும் பல விஷயங்கள் இருக்கு. புதியதலைமுறை பேட்டி, காங்கிரஸ், உள்கட்சி விவகாரங்கள்,மாவட்ட விவகாரங்கள் என பல இருப்பினும் அதல்லாம் இங்கே தேவை இல்லை என்பதால் விட்டுவிட்டேன்.

இப்போது நினைத்துப்பார்க்கிறேன். இதே 26.10.2011 ல் அண்ணன் ஆ.ராசா அவர்கள்  டெல்லி திகார் சிறையில் இருந்த போது இதே இணையத்தில் எத்தனை ஒரு எகத்தாளம், ஏளனம், நய்யாண்டிகள்.... ஆனால் இன்று 26.10.2013 இன்று பிறந்த நாள் காணும் அண்ணன் ஆ.ராசா அவர்களுக்கு பல நடுநிலையாளர்கள் வாழ்த்துகளை அள்ளி குவிக்கின்றனர். ஏன்??? 2 ஜி வழக்கு கிட்ட தட்ட 80 சதம் முடிந்து விட்டது. ஒன்னே முக்கால் லட்சம் கோடி என்னும் மாய பலூன் உடைந்து விட்டது. இது அல்ல உண்மையான கொண்டாட்டம். அடுத்த வருடம் 26.10.2014 தான் உண்மையான கொண்டாட்டங்கள் உள்ளன. ஏனனில் வழக்கில் இருந்து அண்ணன் ஆ.ராசா குற்றமற்றவர் என வெளியே வரும் நாள்  வெகு விரைவில் உள்ளது.... தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும்... தர்மம் மீண்டும் வெல்லும்!


October 19, 2013

கொஞ்சு தமிழில் விளையாடக்கூட மட்டுமல்ல ,வசைபாடவும் இன்னும் யார் பிறக்க போகின்றனர்?



கொஞ்சு தமிழில் விளையாடவும் மட்டுமல்லா ,வசைபாடவும்  இன்னும் யார் இங்கே பிறக்க  போகின்றனர்? இந்த நாவடக்கம் இல்லா நயவஞ்சக பேயை நாயை விமர்சிக்க அவள்  16.10.2013ல் எழுதிய கடிதமே போதும். அந்த நாய் இது சம்மந்தமாக வழக்கு தொடுப்பின் அவள் வாக்குமூலம் 16.10.2013 இருக்கின்றது! வழக்கை போட்டுப்பார்! அவமானம் சந்தித்துப்பார்!



*****************************************

நாடாளும் பெண்ணே, நாவடக்கம் தேவை!

(குறிப்பு :- இந்த அறிக்கை சற்றுக் கடுமையாக எழுதப்பட்டது என்று
யாராவது நினைத்தால், முதலமைச்சர் பொறுப்பிலே இருக்கும் ஜெயலலிதா
16-10-2013 அன்று விடுத்துள்ள அறிக்கையை முழுவதுமாகப் படித்துப்
பார்க்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்)

நாடாளுமன்றத் தேர்தல் வரப் போகிறது என்ற செய்தி வந்தாலும் வந்தது; நடுத்தெரு நாராயணியாம் ஜெயலலிதாவுக்கு """"நடுங்கா நாக்கழகி"" என்று
பட்டமும் பதக்கமும் கிடைக்க வேண்டுமென்ற நப்பாசையோடு யாரைப் பார்த்துக் குரைக்கலாம், எவரைத் தாக்கிக் கடித்துக் குதறலாம் என்ற வெறி பிடித்து விட்டது.


என்றைக்காவது ஒரு நாள், திடீரென்று புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரை நினைத்துக் கொள்வார். அவரை பூமான், கோமான், சீமான் என்றெல்லாம்
புகழ்ந்து தள்ளி விட்டு, அதே நேரத்தில் என் மீது பிறாண்டுவார்! அவருடைய வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்தால் அரசியல் நிகழ்ச்சிகள் அல்லது தேர்தல்கள்
போன்ற முக்கியமான நேரம் வரும் போதெல்லாம் முக்காடிட்டு, முழங்காலைக் கட்டிக் கொண்டு பெங்களூரு வழக்கு என்ன ஆகுமோ? எப்படியெல்லாம்
அதைத் திசை திருப்பலாம்; அந்த வழக்கில் வென்றிட என்ன தான் வழி, என்ன செய்யலாம் சதி; என்று கணக்குப் பார்த்துக் கொண்டிருப்பவருக்கு திடீரென்று
வந்து விடும் ஞானோதயம்! அந்த ஞானோதயம் வந்து விட்டால், அருமை நண்பர் எம்.ஜி.ஆர். அவர்களைப் பற்றி இந்த அம்மையார் செய்த பழைய அர்ச்சனைகள்
எல்லாம் அவருக்கு மறந்தே போய் விடும் அல்லது பறந்தே போய் விடும். அந்தக் காலத் திலிருந்து அவருடைய பெயரைப் பயன்படுத்திக் கொண்டு கலை
வாழ்விலும், பொது வாழ்விலும் உச்சத்துக்கு வர வேண்டுமென்ற நினைப்புடன் நச்சரவுக் கருத்துக்களை நாட்டில் பரப்புவதிலும் ஏட்டில் அறிக்கைகளாகத்
தருவதிலும் ஜெயலலிதாவைப் போன்ற ஒரு கொள்ளி வாய்ப் பைசாசத்தை வலை போட்டுத் தேடினாலும் எந்தக் கட்சியிலும் கண்டு பிடிக்க முடியாது.

பிரதமர் பதவிக்கு உங்கள் ஆதரவு நரேந்திர மோடிக்கு உண்டா என்று யாரோ கேட்ட போது அந்தப் பதவிக்கு தன் பெயரை அல்லவா முன் மொழிய வேண்டும் என்று தருக்கு மிகக் கொண்டு தாண்டிக் குதித்தவர் ஜெயலலிதா
என்பது நமக்கு நன்றாகவே தெரியும். அவர் தான் இப்போது நாடாளுமன்றத் தேர்தலுக்கு தன்னுடைய கட்சியின் தொண்டர்களைத் தயார் படுத்துவதாக
எண்ணிக் கொண்டு அவர்களை உசுப்பி விட்டு வேலை வாங்குவது என்றால், அதற்கு முதல் பலியாக என்னைத் (கருணாநிதி) தாக்கி தொண்டர்களைத்
துhண்டி விட வேண்டும் என முடிவெடுத்துக் கொண்டு புறப்பட்டிருக்கிறார். அவருடைய அநாகரீக, அறிமுக அறிக்கையை தமிழ்நாட்டில் உள்ள தாசானுதாசர்களான ஏடுகள் சிலவும், எகிறிக் குதித்து வெளியிட்டு எக்காள
மகிழ்ச்சியில் திளைத் திருக்கின்றன. பாவம்! பரிதாபத்திற்குரிய தமிழ் மக்கள் !


"தினத்தந்தி"யின் புகழ் பெற்ற உரிமையாளர் சிவந்தி ஆதித்தன் மறைந்த போது; ஒரே பகுதியில், மூன்றாவது வீட்டிலே இருந்த ஜெயலலிதாவுக்கு சிவந்தி
வீட்டிற்குச் சென்று துக்கம் விசாரிக்கத் தோன்றவில்லை. ஓர் அமைச்சரைக் கூட அதற்காக அனுப்பவில்லை. ஆனால் இன்றைக்கு ராமச்சந்திர ஆதித்தன் மறைந்தவுடன் நான்கு அமைச்சர்கள், ஜெயலலிதாவால் துக்கம் கேட்க அனுப்பப்பட்டிருக்கிறார்கள். பொது மக்களே, புரிகிறதா?

தேர்தல் வருகிறது என்றாலே அம்மாவுக்கு திடீரென்று இது போன்ற ஞானோதயங்கள் எல்லாம் பிறக்கும். காயிதே மில்லத் நினைவிடத்தில் மலராடை
போர்த்த வேண்டும் என்ற எண்ணம் கூட தேர்தல் வரும்போது தான் அம்மாவுக்கு ஏற்படும். எஞ்சியுள்ள நாட்களில் காயிதேமில்லத் நினைவிடம் எங்கே
இருக்கிறது என்று கூடத் தெரியாது. அவ்வளவு ஏன்?

எம்.ஜி.ஆர். பற்றிய நினைவே கூட சிக்கலான வழக்கு, சிக்கலான தேர்தல் வந்தால் தான் அம்மையார் மூளையில் திடீரெனத் தோன்றும்!

அறிஞர் அண்ணா தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக தீட்டிய திட்டங்களை, மத்திய அரசு நிறைவேற்றிட நினைத்தாலும் அதற்கு குறுக்கே நின்று அந்தத் திட்டத்தைக் குழி தோண்டிப் புதைப்பதிலே பலே கில்லாடியாக ஜெயலலிதா விளங்குகிறார்.

சேது சமுத்திரத் திட்டத்தை நுhறாண்டு காலக் கனவாகத் தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்த்து அதை நிறைவேற்றத் துடித்துக் கொண்டிருக்கும்போது அந்தத் திட்டத்திற்காக """"எழுச்சி நாள்"" கொண்டாடுங்கள் என்று எந்த அண்ணா அவர்கள் அறிவித்தாரோ, அந்தத் திட்டத்தையே மட்டம் தட்டி மறுப்புக் கூறி, உச்ச நீதி மன்றத்தில் அதற்குத் தடை கோரிய தாட்சாயணி தான் இந்த அம்மையார் என்பதை நாடு நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறது.

சேதுத் திட்டம் என்பது வெறும் சில்லறைத் திட்டமல்ல; எதிர்காலத் தமிழகத்தை வாழ வைக்கக் கூடியதும், பல துறைமுகங்கள் உருவாகி, வாணிபத்தை நாடுகள் பலவற்றிலும் பெருக்கிடக் கூடியதுமான வளமார் திட்டம். வளமான பொருளாதாரத்திற்கு மேலும் வளம் சேர்க்கும் திட்டம்.
"நீரின் வந்த நிமிர் பரிப் புரவியுங்
காலின் வந்த கருங்கறி மூடையும்
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்
ஈழத்துணவும் காழகத் தாக்கமும்""

என வரும் பட்டினப்பாலை பாடலை மீண்டும் நினைவுபடுத்தி; மாண்ட நம் புகழை யெல்லாம், மறு மலர்ச்சிக்கு உரியதாக்கும் திட்டம்; அந்தத் திட்டத்தைத் தான் நிறைவேற்ற வேண்டுமென்று அதற்காக """"எழுச்சி நாள்"" கொண்டாடுங்கள் என்று தி.மு.கழகத் தோழர்களை யெல்லாம் பேரறிஞர் அண்ணா அவர்கள் 1967ஆம் ஆண்டு ஆட்சி அமைந்தவுடன் உசுப்பி
விட்டார். அந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால், சோனியா காந்தியும், பிரதமர் மன்மோகன் சிங்கும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் கலந்து
கொண்டு நடைபெற்ற அந்தத் திட்டத்தின் தொடக்க விழாவினை அடுத்துப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றிருந்தால் இந்நேரம் எத்தனையோ துறைமுக
நகரங்கள் தமிழகத்தில் தோன்றியிருக்கும்.

அதையெல்லாம் கெடுத்தது யார்? எந்தச் சண்டாளர்கள்
கெடுத்தார்கள்?

இப்போதும் அந்தத் திட்டம் வந்து விடக் கூடாது என்பதற்காக உச்ச நீதி மன்றத்திலே வழக்கு தொடுத்திருப்பது யார்? அந்த வஞ்சகர்கள், வன்கணாளர்கள் அண்ணாவின் கனவையே நிறைவேற்ற முடியாது என்று நீதி மன்றத்திற்குச் சென்றிருப்பவர்கள் - அண்ணாவைப் பற்றிப் பேச
அணுவளவும் அருகதை இல்லாதவர்கள் என்பதை நாட்டிலே உள்ள நல்லறி வாளர்கள் - நாடு வாழ வேண்டும் வளமாக வாழ வேண்டும், வலிமையான
பொருளாதாரமும், வளமான வாணிபத் துறையும் பெற்று வையகத்தில் பெரும் புகழ் நாட்டிட வேண்டும் என்று கனவு காணுகிற நம்மைக் கயவர்கள்
என்றும், துரோகிகள் என்றும், அண்ணாவின் கொள்கைகளுக்கு விரோதிகள்
என்றும் பேசித் திரிபவர்கள் அறிக்கை விட்டு அங்கலாய்ப்பவர் கள் யார் என்று
புரிகிறதா?

"அண்ணா நாமம் வாழ்க" என்று கூறிக் கொண்டே அவருக்கு பட்டை நாமம் சாற்றுகின்ற சண்டாளத்தனத்தை, தமிழகம் இனியும் பொறுத்துக்
கொண்டிருக்காது.

ஜனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைத்து சர்வாதிகாரத்தைத் தர்பாரில் உட்கார வைத்திருப்பவர்களுக்கு அறவழியில், ஜனநாயகப்
பாதையில் தமிழ் நாட்டு மக்கள் வாக்குச் சீட்டையே பயன்படுத்திப் பாடம் புகட்டி இவர்களை வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்தியே தீருவார்கள்.

அதற்குள்ளாக இவர்களுக்கு நெஞ்சிலே இருக்கிற கொழுப்பு வாய் வழியாக வெளிவருமானால் அந்தக் கொழுப்பே கொடிய விஷமாக மாறி
இவர்களுடைய திமிரை அடக்கிக் காட்டும்.

யாகாவார் ஆயினும் நாகாக்க; காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

இந்தக் குறளை அய்யன் வள்ளுவர்; இப்படிச் சில பிறவிகள் தமிழ்நாட்டில் தலையெடுப்பார்கள் என்று முன்பே அறிந்து தான் பாடி வைத்திருக்கிறார்
போலும்!

என்றைக்காவது ஒரு நாள், திடீரென்று புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரை நினைத்துக் கொள்வார். அவரை பூமான், கோமான், சீமான் என்றெல்லாம்
புகழ்ந்து தள்ளி விட்டு, அதே நேரத்தில் என் மீது பிறாண்டுவார்! அவருடைய வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்தால் அரசியல் நிகழ்ச்சிகள் அல்லது தேர்தல்கள்
போன்ற முக்கியமான நேரம் வரும் போதெல்லாம் முக்காடிட்டு, முழங்காலைக் கட்டிக் கொண்டு பெங்களூரு வழக்கு என்ன ஆகுமோ? எப்படியெல்லாம்
அதைத் திசை திருப்பலாம்; அந்த வழக்கில் வென்றிட என்ன தான் வழி, என்ன செய்யலாம் சதி; என்று கணக்குப் பார்த்துக் கொண்டிருப்பவருக்கு திடீரென்று
வந்து விடும் ஞானோதயம்! அந்த ஞானோதயம் வந்து விட்டால், அருமை நண்பர் எம்.ஜி.ஆர். அவர்களைப் பற்றி இந்த அம்மையார் செய்த பழைய அர்ச்சனைகள்
எல்லாம் அவருக்கு மறந்தே போய் விடும் அல்லது பறந்தே போய் விடும். அந்தக் காலத் திலிருந்து அவருடைய பெயரைப் பயன்படுத்திக் கொண்டு கலை
வாழ்விலும், பொது வாழ்விலும் உச்சத்துக்கு வர வேண்டுமென்ற நினைப்புடன் நச்சரவுக் கருத்துக்களை நாட்டில் பரப்புவதிலும் ஏட்டில் அறிக்கைகளாகத்
தருவதிலும் ஜெயலலிதாவைப் போன்ற ஒரு கொள்ளி வாய்ப் பைசாசத்தை வலை போட்டுத் தேடினாலும் எந்தக் கட்சியிலும் கண்டு பிடிக்க முடியாது.

ஜனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைத்து சர்வாதிகாரத்தைத் தர்பாரில் உட்கார வைத்திருப்பவர்களுக்கு அறவழியில், ஜனநாயகப்
பாதையில் தமிழ் நாட்டு மக்கள் வாக்குச் சீட்டையே பயன்படுத்திப் பாடம் புகட்டி இவர்களை வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்தியே தீருவார்கள்.


அதற்குள்ளாக இவர்களுக்கு நெஞ்சிலே இருக்கிற கொழுப்பு வாய் வழியாக வெளிவருமானால் அந்தக் கொழுப்பே கொடிய விஷமாக மாறி
இவர்களுடைய திமிரை அடக்கிக் காட்டும்.


யாகாவார் ஆயினும் நாகாக்க; காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.


இந்தக் குறளை அய்யன் வள்ளுவர்; இப்படிச் சில பிறவிகள் தமிழ்நாட்டில் தலையெடுப்பார்கள் என்று முன்பே அறிந்து தான் பாடி வைத்திருக்கிறார்
*********************************

இப்போது புரிகின்றதா! இவர் "தீ" என தெரிகின்றதா?


October 13, 2013

மின் கட்டண உயர்வும், அதிமுக ஆட்சி அகற்றப்பட வேண்டிய அவசியமும்!!! (அல்லது) ஏற்காடு இடைத்தேர்தலில் உதயசூரியனுக்கு ஓட்டு போடுங்கள்!!!

மின்கட்டணம் கணக்கிடும் முறை (இப்போது அதிமுக ஆட்சியில்)

நடுநிலையாளர்கள் இந்த பதிவை தயவு செய்து உதாசீனம் செய்யாமல்  படிக்கவும்.


திமுக ஆட்சியில் மின்வெட்டு என்பது இரண்டு மணிநேரம். ஒரு சில மாதங்கள் மட்டும்  ஐந்து மணி நேரம் இருந்தது. அது போல மின் கட்டணம் என்பதும் வீடுகளுக்கு 1.50 ரூபாய் மட்டும் இருந்தது ஒரு யூனிட்டுக்கு. இதற்கே  அப்போது மின் துறை அமைச்சராக இருந்த ஆற்காட்டார் அவர்கள் ஆட்சி மாற்றம் ஏற்ப்பட்டால் அது நான் வகிக்கும் மின் துறை தான் பொறுப்பாக வேண்டும் போலிருக்கு. என்னால் இரவில் இதை நினைத்து நிம்மதியாய் தூங்கக்கூட முடியவில்லை" என சொன்னார். அது நேர்மை.

ஆனால் தேர்தல் நேரத்தில் "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மூன்றே மாதத்தில் மின்சாரம் கொட்டோ கொட்டு என்று கொட்டும்" என வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்தது அதிமுக. அப்போது கூட திமுகவினர் "நாங்கள் கொண்டு வந்துள்ள மின் திட்டங்கள் இன்னும் 6 மாதத்தில் செயல்பாட்டுக்கு வந்துவிடும். அந்த தைரியத்தில் அதிமுக இப்படி சொல்கின்றது என கூறினர். ஆனால் ஆட்சிக்கு வந்த அதிமுக அதைக்கூட  செய்யவில்லை. திமுக ஆட்சியில் கொண்டு வந்த மின் திட்டங்களை கூட  இன்னும் செயல்பாட்டுக்கு முழுமையாக கொண்டு வரவில்லை.

அதனால் தமிழகம் இருளிள் மூழ்கியது. "குஜராத்தில் இருந்து குதித்து வரும் மின்சாரம்" என தலைப்பிட்டு ஜூனியர் விகடன் புகழ்ந்து தள்ளியது. இன்று அதே ஜூவியிடம் போய் கேட்டுப்பாருங்கள் நடுநிலையாளர்களே. குஜராத்தில் இருந்து மின்சாரம் குதித்து வந்ததா இல்லையா என! அவர்கள் இதோ ஏற்காடு இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு சாமரம் வீசி காசு பார்க்க கிளம்பி இருப்பார்கள் இன்னேரம்.

இப்படியாக இருளிள் கிடந்த தமிழகத்துக்கு கடந்த மூன்று மாதங்களாக "காற்றாலை" வழியே கிடைத்த மின்சாரத்தினால் மின்வெட்டு இல்லாமல் போனது. (இப்போது காற்றாலை மின்சாரத்தையும் தமிழக அரசு வாங்காமல் விட்டு விட்டது. தமிழக அரசு மின்சாரம் வாங்கும் என  நம்பி காற்றாலை அமைத்த கம்பனிகள் இன்று வங்கி கடனை கட்ட இயலாமல் நீதிமன்றம் சென்று விட்டன) காற்றாலை வழியே கிடைத்த மின்சாரத்தை கூட அதிமுகவினர் "அம்மா வாயால் ஊதி ஊதி மின்சாரம் கொண்டு வந்தாங்க" என கூறிய கேடுகெட்ட செயலும் நடந்தது. எல்லாம் தமிழன் தலையெழுத்து.

போகட்டும்! இந்த கட்டுரையின் சாராம்சம் என்பது வேறு. மின்வெட்டு என்பது இல்லை. அதை மக்கள் நேரிடையாக உணர்ந்து கொண்டு விட்டமையால் நான் இங்கே சொல்லப்போவது "மின் கட்டண உயர்வு" பற்றியது. தமிழக அரசு 2011 மே மாதம் 13ல் ஆட்சிக்கு வந்தது முதல்  பால் விலை உயர்வு, பேருந்து கட்டண உயர்வு, அத்யாவசிய பொருட்கள் உயர்வு என எத்தனையோ உயர்வுகள் மக்கள் தலையில் விடிந்தாலும் மிக மிக முக்கியமான உயர்வு மின்கட்டண உயர்வு என்பதே.

ஒவ்வொறு விலை உயர்வும் உடனடியாக மக்களை பாதித்தது. ஒரு ஊருக்கு  பேருந்தில் போனவன் திரும்பி வரும் போது பேருந்து கட்டணம் இரவோடு இரவாக உயர்த்தப்பட்டதால் இரட்டிப்பாக உயர்ந்து விட்ட போது பாதி தூரம் நடந்து வந்து ஊர் சேர்ந்தான். அப்போது அவன் பேருந்து கட்டண உயர்வை முழுமையாக உணர்ந்தான். அது போல இரவில் பால் லிட்டருக்கு 6 ரூபாய்க்கு வாங்கின அம்மா அடுத்த நாள் காலை குழந்தைக்கு கொடுக்க லிட்டருக்கு 20 ரூபாய் செலவழித்த போது மும்மடங்குக்கும் மேலான விலை  உயர்வால் கலங்கி போனாள்.

ஆனால் மின்கட்டண உயர்வு என்பது ஜெயா ஆட்சியில் தினம் தோறும் 18 முதல் 20 மணி நேரம் தமிழகம் இருளில் கிடந்த போது உயர்த்தப்பட்டது. அதனால் திமுக ஆட்சியில் செலுத்திய மின் கட்டணமே அப்போதும் அவன் செலுத்தி வந்தமையால் (அதாவது 18 மணி நேர மின் வெட்டு அமலில் இருந்தமையால்) அவனால் முழுமையாக மின் கட்டண உயர்வை புரிந்து கொள்ள முடியவில்லை.

ஆனால் காற்றாலை வழியே இப்போது மின்வெட்டு இல்லாமல் போனதால்.... அவன் கட்டும் மின் கட்டணம் என்பது இப்போது அவன் நினைத்துப்பார்க்க இயலாத ஒரு நிலைக்கு சென்றுவிட்டது. அதிலும் குறிப்பாக அந்த மின் கட்டண உயர்வை "தயாரித்து" கொடுத்தவர் ஒரு மனசாட்சி கொண்ட ஐ ஏ எஸ் அதிகாரியாக இருக்க முடியாது. ஒரு மனிதாபிமானம் கொண்ட நிதி அதிகாரியாக இருக்க முடியாது. ஒரு கைதேர்ந்த மீட்டர் வட்டிக்காரன் தயாரித்த ஒரு  கட்டண உயர்வு என்றே சொல்ல வேண்டும்.

அந்த மின் கட்டணம் உயர்வு வந்த போது எல்லா பத்திரிக்கைகளும் கூட குழம்பிப்போயின. இது எத்தனை சதம் உயர்வு என ஒவ்வொறு பத்திரிக்கையும் வேறு வேறு செய்தியை வெளியிட்டன. ஆனால்  மக்கள் அப்போது அதைப்பற்றி கவலை கொள்ளவில்லை. காரணம் "செத்த கிளிக்கு சிங்காரம் எதுக்கு" என விட்டு விட்டனர். ஆனால் இப்போது காற்று அடிக்க அடிக்க செத்த கிளி உயிருடன் எழுந்து நிற்கும் போது தான் இந்த மின்கட்டண உயர்வு என்பது சாமானியன் கழுத்தை நெரித்துக்கொண்டு இருப்பது எல்லோருக்கும் புரிகின்றது.

இதோ அந்த கட்டண உயர்வு எப்படி என்று பார்ப்போம். தயவு செய்து கொஞ்சம் கூர்ந்து படியுங்கள்.

============================================
முதல் நிலை:-

1-100 யூனிட் வரை ரூபாய் 1.00
நிலைக்கட்டணம் இல்லை.
(நீங்கள் 100 யூனிட்டுக்குள் எவ்வளவு உபயோகித்தாலும்
ஒரு யூனிட்டுக்கு ஒரு ரூபாய் மட்டும் தான். கூடுதலாக
எந்த கட்டணமும் இல்லை.)
===============================================

இரண்டாம் நிலை:-

1-200 யூனிட் வரை ரூபாய் 1.50.
நிலைக்கட்டணம் ரூபாய் 20.00.
(நீங்கள் 100 யூனிட்டுக்கு மேல் உபயோகிக்கும்
சமயம் இந்த இரண்டாம் நிலைக்கு வந்துவிடுவீர்கள்.
நீங்கள் 110 யூனிட் உபயோகித்தால் உங்களுக்கான
தொகை 165.00 + நிலைக்கட்டணம் ரூ.20.00 ஆகமொத்தம்
ரூபாய் 185.00 செலுத்தவேண்டும்.)
=============================================


மூன்றாம் நிலை:-

1-200 யூனிட் வரை ரூபாய் 2.00.
201-500 யூனிட் வரை ரூபாய் 3.00.

நிலைக்கட்டணம் ரூபாய் 30.00.
(நீங்கள் 200 யூனிட்டுக்கு மேல் உபயோகிக்கும்
சமயம் இந்த மூன்றாம் நிலைக்கு வந்துவிடுவீர்கள்.
நீங்கள் 210 யூனிட் உபயோகித்தால் உங்களுக்கான
தொகை 200 யூனிட் வரை 400.00+ 10 யூனிட்டுக்கு
3.00 வீதம் 30.00+ கூடுதல் கட்டணம் ரூ,30.00
ஆகமொத்தம் ரூபாய் 460.00
செலுத்தவேண்டும்.)
=============================================


நான்காம் நிலை:-

1-200 யூனிட் வரை ரூபாய் 3.00.
201-500 யூனிட் வரை ரூபாய் 4.00.
500 க்கு மேல் ரூபாய் 5.75
நிலைக்கட்டணம் ரூபாய் 40.00

(நீங்கள் 500 யூனிட்டுக்கு மேல் உபயோகிக்கும் சமயம்
இந்த நான்காம் நிலைக்கு வந்துவிடுவீர்கள்.
நீங்கள் 510 யூனிட் உபயோகித்தால்

முதல் 200 யூனிட்டுக்கு 600.00+ அடுத்த 300
யூனிட்டுக்கு 4 ரூபாய் வீதம் 1200.00+ 10
யூனிட்டுக்கு 5.75 வீதம் ரூபாய்
57.50+கூடுதல் கட்டணம் ரூபாய் 40.00
ஆகமொத்தம் ரூ.1898.00 நீங்கள்
செலுத்தவேண்டும்)
==================================================


நன்றாக கவனிக்கவும் முதல் நிலை என்பது 1 முதல் 100 யூனிட் வரை பயன்படுத்தும்  குடும்பம். ஒரு குடும்பத்தில் ஒரே ஒரு லைட் இரவில் மட்டும் அதும் மாலை ஆறு முதல் பத்து மணி வரை என வைத்துக்கொண்டால் கூட 100 யூனிட்டை தாண்டும். அப்படி 101 யூனிட்  வந்தால் கூட அவன் செத்தான். 100 யூனிட் வரை அவன் செலுத்த  வேண்டிய கட்டணம் 100 ரூபாய் தான். அதே 101 யூனிட் ஆனால் அவன் 185 ரூபாய் கட்ட வேண்டும். தமிழகத்தில் 100 யூனிட் மட்டும் செலவழிக்கும் ஆள் யாரும் இல்லை. ஏனனில் மின் கட்டணம் என்பது இரண்டு மாதத்துக்கு ஒரு முறை தான் கணக்கிடப்படும் என்பதை மனதில் கொள்க!

அது போல நிலைக்கட்டண வசூல் என்னும் புதிய முறை கூட இப்போது ஜெயா அரசால் கொண்டு வரப்பட்டுள்ளது. தவிர எந்த ஒரு சின்ன குடும்பமும் 500 யூனிட்டுக்கு குறையாமல் தான் பயன் படுத்துகின்றன தமிழகத்தில். ஆக கலைஞர் ஆட்சியில் 500 முதல் 700 வரை மின் கட்டணம் கட்டிய குடும்பம் இன்று 2500 முதல் 3000 வரை கட்ட வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இது தான் உண்மை. தமிழகத்தில் எல்லோருமே நான்காம் நிலையில் (மேற் கூறிய கட்டணப்படி) தான் உள்ளனர். ஏனனில் அதுதான் எல்லோர் வீட்டிலும் மிக்சி, கிரைண்டர், பேன், அயர்ன் பாக்ஸ், லைட்டுகள் , ப்ஃரிட்ஜ் என எல்லாம் உள்ளதே! தவிர காற்று புக முடியா ஜன்னல் வசதி இல்லா புறாக்கூண்டுகள் சென்னை போன்ற இடங்களில். அங்கே அதன் காரணமாகவே ஏ.சி வசதி செய்து கொள்கிறான். அப்பாடி ஏ சி வசதி கொண்டவன் கட்டும் மின் கட்டணம் 6000 முதல 8000 வரை வருகின்றது.



முன்பெல்லாம் அதாவது கலைஞர் ஆட்சியில் வீட்டு வாடகையில் பத்தில் ஒரு பங்கு மின் கட்டணம் என  இருந்த நிலை இன்று வீட்டு வாடகை 3000 எனில் அந்த சின்ன வீட்டுக்கு அவன் கட்டும் மின் கட்டணம் 3500 ரூபாய்.வீட்டுக்கட்டணம் மட்டுமே இந்த லட்சனம். இன்னும் தொழிற்சாலை கட்டணங்கள் பற்றி நான் இந்த கட்டுரையில் சொல்லவே இல்லை.


இதான் இன்றைய உண்மை நிலை! மின்வெட்டு இருந்த போது இந்த சுமை அத்தனை வீரியமாக தெரியவில்லை. ஆனால் "காற்றாலை" மின்சாரம் இப்போது கிடைப்பதால் (கவனிக்க... ஜெயா அரசு இது வரை எந்த மின் திட்டமும் தொடங்கவில்லை... திமுக ஆட்சியில் கொண்டு வந்த மின் திட்டங்களையும் இன்னும் முழுமையாக செயல்பாட்டுக்கு கொண்டு வரவில்லை. காற்று அடிப்பாதால் வரும் மின்சாரம்) நாம் இப்போது கடுமையான மின் கட்டண உயர்வால் பாதிக்கபட்டுள்ளோம் என்பதை உணர்ந்து ஏற்காடு இடைத்தேர்தலில் அதிமுக அரசுக்கு தக்க பாடம் கற்பிப்போம்!
ஏற்காடு இடைத்தேர்தல் வேட்பாளர் வெ.மாறனை வெற்றிமாறன் ஆக்குங்கள்!
ஏற்காடு இடைத்தேர்தலில் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களியுங்கள்!


இத்துடன் இணைக்கப்பட்டுள்ள  அட்டவணையை பார்த்து உங்கள் வீட்டு மின் கட்டணம் எவ்வளவு வருகின்றது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அதே போல திமுக ஆட்சியில் நீங்கள் கட்டிய பணம் என்ன என்று பழைய மின் அட்டையை பார்த்து ஒப்பீடு செய்து கொண்டு வாக்களியுங்கள்!

October 12, 2013

இந்த பதிவு புலம் பெயர்ந்த புண்ணாக்குகளுக்கானது!

மேற் கண்ட இந்த புகைப்படத்தில் இருப்பது சுப்ரமணியம் சாமி என்னும் மாமாப்பயல். இவன் அமர்ந்திருக்கும் புகைப்படம் இலங்கை "பாதுகாப்பு கூட்டத்தில்" . அதாவது உங்கள் பிரபாகரனை அழித்த கூட்டத்தில்.

இவன் பாரதீய ஜனதா கட்சியில்! அதற்கு பிரதமர் வேட்பாளர் மோடி. இவன் மோடிக்கு மிக நெருங்கிய நண்பன். அந்த காரணத்துக்காகவே தன் லெட்டர் பேடு கட்சி "ஜனதா கட்சியை" அதன் சின்னம் "ஏர் உழவனை" தூக்கி கடாசிட்டு அந்த கட்சியில் சேர்ந்துள்ளான்.

இவன் பாஜக ஆட்சி அமைப்பின்..... ஒருவேளை அமைப்பின்.... அனேகமாக அமைச்சர் ஆவான். அவன் கேட்டுப்பெறும் இலாக்கா என்பது 'வெளியுறவு துறை அல்லது உள்துறை அல்லது பாதுகாப்புத்துறை என்பதாக இருக்கும்.

அப்படி இருப்பின் இவன் இலங்கை பிரச்சனையை தான் முன்னெடுப்பான். இப்போதே  இலங்கை  பாதுகாப்பு ராணுவ மாநாட்டுக்கு தலைமை வகித்து ஆலோசனை சொல்பவன், தவிர ராஜபக்ஷேவுக்கு "பாரத் ரத்னா" தர வேண்டும் என சொல்பவன்..... எப்படி செயல்படுவான்???

இவனுடன் கூட்டு வைக்க நினைக்கும் வைக்கோ உங்களுக்கு அதாவது புலம் பெயர் புண்ணாக்குகளுக்கு வைக்கோ எனில் இனிக்குது... ஆனால் கலைஞர் எனில் கசக்குதா? 

போங்கடா போக்கத்த பயலுங்களே! 

உங்களுக்கு பயம்.... எங்கே இலங்கையில் அமைதி திரும்பி விடின் உங்கள் றொறண்றோ, கேனடா, அவுஸ்திதேலியா, நோற்வே, விசாக்கள் கேன்சல் செய்யப்பட்டு இலங்கைக்கு திரும்ப வேண்டுமோ எனும் அச்சம். அங்கே சொகுசு வாழ்கை வாழ்ந்து விட்டு மீண்டும் ஏர்கலப்பை பிடிக்க வேண்டுமோ எனும் அச்சம். (என்னா எழவு தமிழடா இது)

இல்லாட்டி வைக்கோ, சீமான், நெடுமரம்ன்னு சொம்மா பெனாத்திகிட்டு இருப்பீங்களா? இதுக்கும் கலைஞரை வசை பாட வருவீங்க. வாங்க வாய்லயே வெட்டுறேன்....

September 21, 2013

நன்றி கெட்ட, முதுகெலும்பில்லா சினிமாத்துறை நாசமாய் போகட்டும்!!!



இந்திய சினிமா நூற்றாண்டு விழா - தென்னிந்திய சினிமா வர்த்தகர் சங்கம் நடத்துகின்றதாம். ஏழ்மையில் இருக்கும் சினிமா உலகுக்கு தமிழக அரசு பத்து கோடி கொடுத்து விழா "பார்ட்னர்" ஆகின்றதாம்! இந்திய சினிமா வரலாற்றில் அமிதாப், ஸ்ரீதேவி போன்ற ஜாம்பவான்களும் பேஜ்பூரி உள்ளிட்ட 17 மொழி சினிமா அப்பாடக்கர்களும் விழாவுக்கு வருகை தந்து சினிமாவை செழிக்க வைக்க இருக்கின்றராம்.தமிழக முதல்வரும் இந்திய சினிமா வராலாற்றில் 1965 முதல் 1980 வரை 15 ஆண்டுகள் நடிகையாக இருந்தவருமான ஜெ.ஜெயா தலைமையில் இன்று முதல் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் கோலாகலமாம். விழா முடிவில் மூன்றாம் நாள் நான்கு மாநில ஆட்சி பொறுப்பில் உள்ளவர்கள் உள்ளிட்ட இந்திய ஜனாதிபதியும் தமிழக ஆளுனரும் வருகை தர இருக்கின்றனராம்.

இது குறித்தெல்லாம் என் விருப்பு வெறுப்பு எதும் இல்லை. ஆனால் விழாவுக்கு திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான திரு.கருணாநிதி அவர்களுக்கு ஒரு அழைப்பிதழ் கூட அனுப்பவில்லை என்பது குறித்தும் எனக்கு எவ்வித மன அழுத்தமும் வேதனையும் கிஞ்சித்தும் இல்லை. முன்னாள் முதல்வரை அழைக்க வேண்டும் என எவ்வித அஜண்டாவும் கிடையாது, அது போலவே ஒரு கட்சி தலைவரை அழைக்க வேண்டும் என்று எவ்வித நியாயங்களும் இல்லவே இல்லை.

ஆனால் நான் வேதனைப்படுவது ---- இந்த "சினிமா 100"ல் கிட்ட தட்ட 70 ஆண்டுகளாக இருக்கும் உயிர்ப்புடன் இருக்கும் ஒரு கலைஞனுக்கு ஏன் விழா அழைப்பிதழ் கூட அனுப்பவில்லை என்பதே என் ஒரே கேள்வி. இன்றைக்கு ஸ்ரீதேவி, அமிதாப் போன்ற ஜாம்பவான்கள் என வர்ணிக்கப்படும் ஆட்கள் சினிமா உலகில் செய்த சாதனை என்ன என்று பார்ப்பின் படம் நடித்தார்கள். பணம் பெற்றார்கள் என்னும் ஒரு சிறிய வட்டத்துக்குள் அடக்கி விடலாம். சினிமா ஆரம்பித்த ஆண்டு இந்தியாவில் பேசாப்படம் ஆரம்பித்த ஆண்டு என்பது 1913. நான் அழைப்பிதழ் அனுப்பவில்லை என்று ஆதங்கப்படும் மனிதர் சினிமாவின் உள்ளே நுழைந்த ஆண்டு என்பது 1947. கோவை ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த ராஜகுமாரி என்னும் படம் மூலமாக உள்ளே நுழைந்தார். அப்போது அவருக்கு வயது 23 மட்டுமே.

அப்போது இந்திய சினிமாவுக்கு வயது 34 தான். அப்போது இந்திய சினிமாவில் நுழைந்த அவர் இதோ இப்போது சிமிமா பிரபல்யங்கள் என சொல்லப்படும் நபர்கள் போல பணம் மட்டுமா சம்பாதித்தார்? இல்லை. ஒரு சமூக மாற்றத்தை அல்லவா கொண்டு வந்தார்! ஒரு கணவனை மனைவி அழைக்கும் போது கூட "என் பிராண நாதா" போன்று ஆணாதிக்கத்தனமாக அழைத்ததை "அத்தான், கண்ணே" என அழகாய் மாற்றியது கலைஞர் செய்த புரட்சி அல்லவா! சீர்திருத்த கருத்துகளை தன் அனல் தெறிக்கும் வசனம் வழி புகுத்தியது கலைஞர் செய்த புரட்சி அல்லவா! "ரெண்டு மாலை, வாழ்த்து சொல்ல ஒரு மைக்..திருமணம் என்பது ரொம்ப சிம்பிள்" என சொல்லி பராசக்தி யின் எஸ் எஸ் ஆர் வழி செய்து காட்டி புரட்சி செய்தது கலைஞர் அல்லவா! தமிழர்களை பார்த்து "நான்சென்ஸ்" என சொன்ன நேருவை மக்கள் மனதில் பதியவைக்க ஒரு ஆண்டி ஹீரோவாக (சிவாஜி) நேரு போல ஷர்வானி அணிந்து கொண்டு படம் முழுக்க "நான்சென்ஸ்" என சொல்ல வைத்து மக்கள் மனதில் 'போராட்ட விதை' விதைத்தவர் கலைஞர் அல்லவா? இந்திய , தமிழக சினிமாவில் சென்ற நூற்றாண்டின் மிகப்பெரும் பகுதியை ஆக்கிரமித்து தன்பால் வைத்து கொண்ட மாபெரும் சக்திகள் எம் ஜி ஆர், சிவாஜி ஆகிய இருவரின் முதல் படம்(ராஜகுமாரி, பராசக்தி) இவரின் கைவண்ணம் அல்லவா! 1950 வெளிவந்த மந்திரிகுமாரி என்னும் படத்தில் "பெரியம்மா குத்து விளக்கு, சின்னம்மா எலக்ட்ரிக் விளக்கு" என்னும் வசனம் எழுதிய தீர்க்கதரிசி அல்லவா! (எம் ஜி ஆர் இறந்த பின்னர் ஜானகி, ஜெ என பிரிந்த போது இப்போதைய மாமனாரும் அப்போதைய ஜெயாவின் எமனாருமாய் இருந்த காளிமுத்து இந்த வசனத்தை எடுத்து பேசாத மேடை தமிழகத்தில் இல்லை எனலாம்)

1952ல் வெளிவந்த பராசக்தி படத்தில் "ஹூம் தமிழ்நாட்டில் தாலி அறுத்தவர்களுக்கு இட்லி கடை தானே தாசில் உத்யோகம்" என தீர்க்கதரிசன வசனம் எழுதியது கலைஞர் அல்லவா? பொதுநலம் என்னும் புத்தியை மக்கள் மனதில் ஊட்ட தமிழக முன்னாள் முதல்வர் அண்ணா அவர்களின் ரங்கோன்ராதா படத்தில் கலைஞர் எழுதிப பகுத்தறிவு பாடல்.....
திண்ணை தூங்கி பண்டாரம்
திருவோடு ஏந்தும் பரதேசி
தெருவில் உருளும்
திருப்பதி கோவிந்தா.. கோவிந்தா
இந்த சோம்பேரி நடைப்பிணங்களுக்கு
உயிர் கொடுக்கும் மருந்து...
நல்ல மருந்து பொதுநலம்
என்றும் எதிலும் பொதுநலம்

என பாட்டெழுதி பிற்காலத்தில் பி ஜே பி என்னும் காவி கட்சி வந்து நாட்டை நாசமாக்கும் என தீர்க்கதரிசனமாய் எழுதியவர் கலைஞர் அல்லவா!

1960ல் தன் படத்துக்கு "எல்லோரும் இந்நாட்டு மக்கள்" என பெயரிட்டு தன் கம்யூனிச சித்தாந்தத்தை திரைப்படம் மூலமாக வெளிக்காட்டியது கலைஞர் என்னும் புரட்சியாளர் அல்லவா!

1961ல் தாயில்லாப்பிள்ளை என்னும் தன் படத்தில் பார்பனர் இல்லா ஒரு பையன் பார்ப்பனர் வீட்டில் மாப்பிள்ளையாகி படும் சிரமத்தை நகைச்சுவை கலந்து கொடுத்த புரட்சியாளர் கலைஞர் அல்லவா?

1966களில் "அவன் பித்தனா?" என்னும் படத்தில் "இறைவன் இருக்கின்றானா?" என ஒரு பாடலால் கேட்ட கலைஞர் அந்த படத்திலும் தன் கூரிய வசனங்களால் ஆரியத்தை குத்தி கிழித்து புரட்சி செய்யவில்லையா?

சாக்ரடீஸ் நாடகம் ஒரு சிவாஜிகணேசன் படத்தில் வரும். அதிலே சாக்ரடீசாக தந்தை பெரியாரை மனதில் கொண்டு வசனம் வடித்திருப்பார். அதிலே சாக்ரடீஸ் மீது அரசு குற்றம் சுமத்தும். ஏதன்ஸ் தேசத்து இளைஞர்களை சீர்திருத்த கருத்துகள் கொண்டு கெடுத்து விட்டார்" என குற்றம் சுமத்தும். அதற்கு அந்த சாக்ராடீஸ் என்னும் பெரியார் என்னும் சிவாஜி கணேசன சொல்வார் "ஒரு கிழவன் எப்படி அய்யா இளைஞர்களை கெடுக்க முடியும்?" என கேட்டு ஒரு நீண்ட வசனம். முழுக்க முழுக்க பெரியார் கருத்துகளை திணித்து இருப்பார். அப்படி தன் கருத்துகளால் சமூக புரட்சி செய்தவர் கலைஞர் அல்லவா!

காலம் மாறினாலும் அதற்கு எற்றபடி தன் வசனங்களை மாற்றி அப்போது இருக்கும் வழக்கத்துக்கு தகுந்தது போல எழுதுவதில் கலைஞருக்கு இணை இங்கே இந்திய சினிமாவில் யார்? 1987ல் தன் நாவல் "ஒரே ரத்தம்" என்னும் படம். இதில் பண்ணையார் வீட்டில் ஒரு தாழ்த்தப்பட்டவன் மாப்பிள்ளை ஆவதும், தாத்தப்பட்ட வீட்டில் பண்ணையார் பெண் மருமகள் ஆவதும் என்பதாக கதை. அந்த கதையில் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஒரு புரட்சி இளைஞராக நம் தளபதி முக ஸ்டாலின் அவர்கள் நடித்திருப்பார். இதுவே தளபதி அவர்கள் நடித்த ஒரே படம். அதில் ஆதிக்க சாதியினரால் கொலை செய்யப்படுவார். அதுவே கதைக்கு ஒரு திருப்புமுனை ஆகும். அதே கதை தானே இன்று வரை தர்மபுரி இளவரசன் வரை நடந்து கொண்டு இருக்கின்றது.

அதன் பின்னர் "பாலைவனரோஜாக்கள்" என்னும்படத்தில் இப்போது பெரிய அப்பாடக்கராக இருக்கும் சத்தியராஜ் அவர்கள் வளர்ந்து வரும் ஒரு நடிகர் அப்போது. அதில் ஒரு வசனம் "நாங்கள் சாத்வீக முறையில் கொடி பிடித்து போராடுகிறோம்" என சொன்ன மக்களிடம் மந்திரி சொல்வார் "ம்.. பிடிக்கிறது என்னவோ கொடிதான். அதை திருப்பி பிடிச்சா என்னான்னு எங்களுக்கும் தெரியும்" .... காலத்துக்கு ஏற்ற வசனம்!

இதோ 2008-9களில் உளியின் ஓசை என்னும் சரித்திர படம்! அது கூட கட்சியில் இருந்து பிரிந்து செயல்பட்ட மாறன் சகோதரர்களுக்காக ஒரு வசனம் வரும் "பறக்க தெரியும் என்பதற்காக சூரியனுக்குள் பாயக்கூடாது". இந்த ஒரே வசனத்தில் மீண்டும் மாறன் சகோதரர்கள் தாய்கழகத்துக்கு ஓடிவந்து விட்டனர்.

இதோ கிட்ட தட்ட 2010ம் ஆண்டு அவர் கதை திரைக்கதை வசனம் எழுதிய "பொன்னர் சங்கர்" படம் வெளி வந்தது. அதன் பின்னர் கூட செம்மொழி மாநாட்டு பாடலை எழுதி அதை ஆஸ்கார் விருது வாங்கிய ஏ ஆர் ரகுமானை பிழிந்து எடுத்து ஒரு அருமையான பாடல் பிறந்தது. அதை படமாக்க கௌதம்வாசுதேவ் என்ன பாடு பட்டிருப்பார் கலைஞர் அவர்களிடம் என அவர்களை கேட்டு பாருங்கள்.

இதை எல்லாம் எதற்கு சொல்கிறேன்! 1947ல் "இந்திய சினிமா அதன் 34 வயதாக" இருக்கும் போது அதனுள் நுழைந்த ஒரு சினிமா கலைஞன் இன்று அதன் 100 வது வயது வரை அதிலேயே உழண்டு கொண்டு சமூக மாற்றம், ஆட்சி மாற்றம் என பல புரட்சிகளை செய்து கொண்டு இருக்கும் இந்த சினிமா கலைஞனுக்கு "சினிமா 100"ல் ஒரு அழைப்பிதழ் இல்லை. ஆனால் "பணம்" மட்டுமே சினிமாவில் குறிக்கோளாய் இருக்கும் பலருக்கு இன்று அங்கு ராஜமரியாதை!

இதே கலைஞர் தான் தமிழக சினிமாவுக்கு "மாநில அரசு விருதுகளை" அறிவித்தார் அவர் முதல்வராக இருக்கும் போது. அது போல தமிழக அரசின் உயரிய விருதான "கலைமாமணி" விருதை சினிமா கலைஞர்களுக்கும் வழங்கியவர் இதே கலைஞர். தமிழில் பெயர் வைத்தால் கேளிக்கை வரி ரத்து செய்து தமிழக சினிமாவை வாழவைத்தவர் இதே கலைஞர். சினிமா கலைஞர்களுக்கு சென்னையில் குடியிருக்க நிலம் ஒதுக்கியவர் கலைஞர் அவர்கள்.

ஆக கலைஞர் அவர்களுக்கு அரசியலுக்காக, ஆண்டமைக்காக கூட அழைத்து தொலைக்க வேண்டாம். அவரிடம் பெற்ற சலுகைகளுக்காக நன்றி செலுத்த அழைக்க வேண்டாம். இந்திய சினிமாவின் 34வது வயது (கவனிக்க கலைஞரின் 34 வது வயதில் அல்ல...சினிமாவின் 34 வயதில்) முதல் இந்திய சினிமாவில் புரட்சிகள் செய்து வரும் .... இன்றைக்கும் சினிமா உலகில் இயங்கியும் இயக்கியும் கொண்டு இருக்கும், தனக்கு நிகராக இந்திய சினிமா உலகில் இப்போதைக்கு யாரையுமே கொண்டிராத ஒரு ஒப்பற்ற சினிமா கலைஞனை அழைத்து மரியாதை செய்ய வேண்டும் எனக்கூட நான் ஆதங்கப்படவில்லை. குறைந்தபட்சம் ஒரு அழைப்பிதழ் கூட கொடுக்க இயலாத அளவுக்கு இந்திய சினிமா நன்றி கெட்டு, மானம் கெட்டு, தரம் கெட்டு போய் கிடக்கின்றதே என்பதே என் ஆதங்கம்.

இது வரை இந்த கட்டுரையில் ஏன் கலைஞரை அழைக்க வேண்டும், எந்த விதத்தில் அவர் தகுதியானவர் என்பதை குறிப்பிட்டேன். ஆனால் இனி எழுதப்போவது என் ஆதங்கம் அல்ல என் ஆசைகள்!

சினிமா உலகில் நடிக்க வரும் நடிகர்கள் எல்லாம் தங்கள் பால பாடமாக கலைஞரின் பாராசக்தி, மனோகரா, சாக்ரடீஸ் வசனங்களை சொல்லித்தான் உள்ளே நுழைந்தோம் என சிவாகுமார் முதல் சத்தியராஜ் வரை பேட்டி கொடுத்து பார்த்துள்ளேன்.புரட்சி நடிகர், இசைஞானி, கலைஞானி என்ற பட்டமெல்லாம் அவர்களுக்கு கொடுக்கப்பட்டது கலைஞரால். கலைஞர் முதல்வாராக இருக்கும் போது ஒரு விழாவில் இன்று இளையதலைமுறையை வசீகரித்து கொண்டு இருக்கும் (!!?)"தல" அஜித் எழுந்து சபை நாகரீகம் இல்லாமல் "அய்யா, எங்களை விழாவுக்கு வர சொல்லி வற்புறுத்தி அழைத்து வந்தார்கள்" என சொன்ன போது எழுந்து நின்று கைதட்டி ஆரவாரம் செய்த "சூப்பர் ஸ்டார்"(!!?) ரஜினி ..... ஆக கலைஞர் முதல்வராக இருக்கும் போதே இத்தனை தைரியம் காட்டிய சூரப்புலிகள் இப்போது நவதுவாரத்தையும் அடக்கி கொண்டு விழாவில் பல் இளிப்பர். எடிட்டர் லெனின் அவர்கள் மட்டுமே இதுவரை முதுகெலும்பு உள்ள மனிதனாக சினிமா உலகில் தன்னை காட்டிக்கொண்டுள்ளார். அவருக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்!

விழாவுக்கு அழைக்கவில்லை என நான் ஜெயா மீது எந்த கோவமும் படப்போவதில்லை. ஏனனில் எனக்கு நன்றாக தெரியும் நாய் வாலை நிமிர்த்த இயலாது என்று. 75 ஆண்டு கால சட்ட சபை வரலாற்றில் அதன் "வைரவிழா"வில் அதே சட்டமன்றத்தில் 60 ஆண்டுகால உறுப்பினர், 5 முறை முதல்வர், எதிர்கட்சி தலைவர், சட்ட மேலவை உறுப்பினர் என இருந்த,இருக்கின்ற மூத்த, அதி மூத்த கலைஞர் மு.கருணாநிதி அவர்களை அழைத்து மரியாதை செய்ய தெரியாத ஜெயாவை நான் குறை சொல்லவில்லை. ஏனனில் அது கருவின் குற்றம். அது பற்றி எனக்கு கவலை இல்லை. அதே விழாவுக்கு இதே ஜனாதிபதி திரு பிரணாப் முகர்ஜியும், ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு ஆளுனரும் எதற்கு என அண்ணா கேட்டமைக்கு இலக்கணமாய் திகழும் திரு ரோசையா (ரோசம் கெட்ட அய்யா என கூட பெயர் வைத்திருக்கலாம்) அவர்களும் கலந்து கொண்டனர். இதே ரோசையா அவர்கள் மறந்தும் கூட கலைஞர் பெயரை உச்சரிக்கவில்லை அந்த விழாவில். ஏனனில் பயம். ஏற்கனவே சென்னாரெட்டி என்னும் தன் மாநில கவர்னர் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டார் என பழிசுமத்தி அந்த மன உளைச்சலில் அந்த மருத்துவர் சென்னாரெட்டி மறைந்து போனது ரோசையாவுக்கு தெரியாமலா இருந்திருக்கும். அதனால் தானோ என்னவொ ஜெயா அரசு எழுதிக்கொடுத்ததை படித்து விட்டு பம்மிவிட்டார். ஆனால் பழகிய தோசத்துக்கும், ஆதரித்து வாக்களித்து ஜனாதிபதியாக்கிய நன்றிக்காகவும் ஜனாதிபதி உண்மையை சொன்னார் அந்த விழாவில். அது போல நாளை விழாவுக்கு வரும் ஜனாதிபதி மீண்டும் ஒரு முறை தன் மேட்டிமைதன்மையை காட்டுவார் அந்த விழாவில் என நம்புவோம்.

ஆனால் இந்த திரைப்படத்துறை சூரப்புலிகள் நிலை???? இதோ ஓடுகின்ற ஓட்டம் இன்னும் 3 வருடம் கூட இல்லை. அதன் பின்னர் திமுக ஆட்சி வரும். அப்போது மீண்டும் பல் இளித்து கொண்டு கோபாலபுரம் வீட்டு வாசலுக்கு வண்டியை விடுவர்.

நான் ஒரு திமுக தொண்டனாக கலைஞரை பார்த்து கேட்கும் கேள்வி, கேள்வி எனக்கூட சொல்லக்கூடாது ஒரு விண்ணப்பம்..... நாங்கள் எங்கள் தலைவரை பக்கத்தில் நின்று பார்க்க மாட்டோமா என ஏங்கி தவிக்கும் வேளைகளில் நீங்கள் சினிமா உலகினர் வந்தால் "செலிபிரிட்டி" என்னும் காரணமாக உள்ளே அனுமதித்து சரி சமமாக அமரவைத்து பேசி அனுப்பி வைக்கின்றீர்கள். இனி அது நடக்க கூடாது. இன்று உங்களை அழைக்க வில்லை என மாரிலும் வயிற்றிலும் அடித்து கொண்டு புலம்பும் நாங்கள் அதாவது அடிமட்ட அடிமட்ட தொண்டர்கள் தான் உங்களுக்கு எப்போதும் "செலிபிரிட்டி". அந்த சினிமா நாய்கள் உங்களோடு சமமாக உட்காந்த நாய்கள் இன்று அங்கே என்ன ரொட்டி துண்டு கிடைக்கும் என போய் பல் இளித்து கொண்டுள்ளன. இனி நம் ஆட்சி வந்தால் சினிமா துறைக்கு வரிவிலக்கு போன்ற சலுகைகள் கூடாது. கூடவே கூடாது அந்த நன்றி கெட்ட நாய்களுக்கு! அடுத்து நீங்கள் தமிழக அரசின் உயரிய விருதான "கலைமாமணி" விருதை சினிமா கலைஞர்களுக்கு கொடுக்கவே கூடாது. ஏனனில் நீங்கள் கலைமாமணி விருது கொடுத்து கவுரவித்த எழுத்தாளர்கள், நாதஸ்வர கலைஞர்கள், நாட்டுப்புற கலைஞர்கள் என எல்லோரும் அதை பெருமையாக மதித்து தன் பெயருக்கு முன்னர் போட்டுக்கொண்டு அரசை மதிக்கும் போது எந்த சினிமாகாரன் அந்த விருதை தன் பெயருக்கு முன்னர் போட்டுக்கொண்டான் என சொல்லுங்கள். எனவே அதை நிறுத்துங்கள். அது போல அவர்களுக்கு இலவச நிலம் கொடுக்கிறேன் என தயவு காட்டாதீர்கள். அவைகள் நன்றி கெட்ட நாய்கள். நான் ஒட்டு மொத்தமாக சினிமா உலகில் இருக்கும் எல்லோரையும் சொல்லவில்லை. எடிட்டர் லெனின் போன்ற இன்னும் பல நல்லவர்கள் இருக்கின்றனர். அவர்களை தேர்ந்தெடுத்து நல்லது செய்யவும். சரி சீட் கொடுத்து பேசவும். இப்போது பல் இளித்து கொண்டு போய் அங்கே "அம்மா" புகழ் பாடும் நபர்களை இனி கொண்டாடாதீர்கள்! இதுவே இன்று உங்களை அவர்கள் அவமானம் செய்தமையால் எங்கள் இதயம் புண்பட்டமைக்கு நீங்கள் தடவும் அருமருந்து!

நன்றி கெட்ட, முதுகெலும்பில்லா சினிமாத்துறை நாசமாய் போகட்டும்!!!

September 17, 2013

நீதி வெல்லும்; நிச்சயம் வெல்லும்!!!

நீதி வெல்லும்! நிச்சயம் வெல்லும்!!

ஜெயா சொத்து குவிப்பு நடந்து வரும் பித்தலாட்டங்களை விரிவாக எடுத்து சொல்லும் "கலைஞர் கடிதம்" தான் இந்த "நீதி வெல்லும்; நிச்சயம் வெல்லும்!" இதை அச்சிட்டு பொதுமக்களுக்கு வினியோகம செய்ய சொல்லி தலைமை உத்தரவிட்டுள்ளது. இதை இணையத்தில் இருக்கும் நாம் நம் வலைப்பூக்கள், முகநூல், கூகிள் கூட்டல் மற்றும் நாம் உறுப்பினராக இருக்கும் போரம்கள் இவற்றில் இட்டு உண்மையை உலகுக்கு சொல்வோம்!

===========================================================
எந்தவித சிக்கல் வந்தாலும் அதை ஏற்பது என்ற ஒரே முடிவோடு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். ஏனென்றால் நீதி நிலைக்க வேண்டும் என்பதில் எனக்குள்ள அசையா நம்பிக்கை தான்.
பெங்களூர் சிறப்பு நீதி மன்றத்தில் ஜெயலலிதாவின் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராக அரசு சார்பில் வழக்கறிஞராக இருந்தவர் திரு. பவானி சிங். இவருக்கு முன் இந்தப் பதவியில் இருந்தவர் திரு. ஆச்சார்யா.

ஆச்சார்யா அரசு வழக்கறிஞராக இருந்த போது, அவர் மீது ஜெயலலிதா தரப்பில் பல புகார்கள் சொல்லப்பட்டதுடன், அங்கே பா.ஜ.க. ஆட்சி இருந்த போது, சென்னையிலிருந்து அதிகார பலமிக்க ஒரு குழு, பெங்களூர் சென்று, முகாமிட்டு பணியாற்றியதன் விளைவாக, கனத்த மனதுடன், வெளிப்படையாக தனது மன சங்கடத்தைத் தெரிவித்து விட்டு இந்த வழக்கிலிருந்தே தன்னை விடுவித்துக் கொண்டார். சிறப்பு அரசு வழக்கறிஞராகப் பணியாற்றிய பி.வி. ஆச்சார்யா பதவி விலகல் கடிதத்தை கர்நாடக உயர் நீதி மன்ற நீதிபதிக்கு அனுப்பிய போது, தலைமை நீதிபதியாக இருந்த திரு. விக்ரமஜித் சென் அவர்கள் அந்தப் பதவி விலகலை ஏற்றுக் கொள்ளவில்லை. அந்த தலைமை நீதிபதி உச்ச நீதி மன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்று சென்ற பிறகு, பொறுப்பு தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றவர் திரு. ஸ்ரீதர் ராவ். அவர் ஆச்சார்யா அவர்களின் பதவி விலகலை உடனடியாக ஏற்றுக் கொண்டார்.

ஆச்சார்யா அவர்கள் விலகிய பின், அவருடைய இடத்திற்கு கர்நாடக அரசால் அரசு வழக்கறிஞராக, ஜெயலலிதாவுக்கு எதிராக வாதிடு வதற்காக நியமிக்கப்பட்டவர் தான் பவானி சிங். ஆனால் அவரது நடை முறைகள் குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருந்து வந்தன. ஜெயலலிதாவின் சாட்சியங்கள் விசாரணை முடிவுற்றபின், அரசு வழக்கறிஞர் தான் தன் வாதங்களை எடுத்து வைத்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக ஜெயலலிதாவின் வழக்கறிஞர் பி. குமார் தன்னுடைய வாதங்களை எடுத்து வைக்க, அரசு வழக்கறிஞர் அதை கண்டு கொள்ளவே இல்லை.

உச்ச நீதி மன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றபோது, கர்நாடக அரசுக்காக வாதாடிய மூத்த வழக்கறிஞர் திரு வாகனவதி; திரு. பவானி சிங் அவர்களை, அரசு வழக்கறிஞராக நியமிக்க வேண்டுமென்று கர்நாடக அரசு பரிந்துரையே செய்யவில்லை என்றும், கர்நாடக அரசு வேறு நான்கு வழக்கறிஞர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, அவர்களிலே ஒருவரை கர்நாடக உயர் நீதி மன்றத்தின் தலைமை நீதிபதி நியமித்துக் கொள்ளலாம் என்றும் பரிந்துரை செய்த விவரத்தைக் குறிப்பிட்டார் என்பதும் நினைவில் கொள்ளத் தக்கது.
அப்போது கர்நாடக மாநிலத்தில் தலைமை நீதிபதியாக பொறுப்பு நீதிபதி ஒருவர் இருந்தார். அவர் தான் இந்த வழக்கில் ஏற்கனவே அரசு வழக்கறிஞராக இருந்த ஆச்சார்யா அவர்களின் பதவி விலகலை உடனடியாக ஏற்றுக் கொண்டார். ஆனால் பொறுப்பு தலைமை நீதிபதி அரசு ஏற்கனவே பரிந்துரை செய்த நான்கு வழக்கறிஞர்களிலிருந்து ஒருவரைத் தேர்ந்தெடுக்காமல், தன்னிச்சையாக இந்த பவானி சிங் என்பவரை அரசு வழக்கறிஞராக நியமித்தார்.

இந்த வழக்கின் விசாரண அதிகாரியாக இருந்த நல்லம்ம நாயுடுவுக்குப் பிறகு, இதனை விசாரித்த டி.எஸ்.பி. சம்பந்தம் என்பவர் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக ஆஜராகி சாட்சியம் அளித்தார். அப்போதும் அரசு வழக்கறிஞர் பவானி சிங் அதைக் கண்டு கொள்ளவில்லை. ஒரு விசாரணை அதிகாரியை அதே வழக்கில் சாட்சியாக பதிவு செய்ய வேண்டுமென்றால், நீதி மன்றம் தான் அவரை சம்மன் செய்து அழைக்க வேண்டும். அந்தக் குறைந்த பட்ச நடைமுறை கூட இந்த வழக்கிலே பின்பற்றப்படவில்லை. கடைசி சாட்சியாக (99வது சாட்சி) டி.எஸ்.பி. சம்பந்தத்தை ரகசியமாகக் கொண்டு வந்து நீதி மன்றத்தில் சாட்சியமளிக்கச் செய்தார்கள். லஞ்ச ஒழிப்புத் துறையைச் சேர்ந்த இந்த அதிகாரி, குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பு சாட்சியாக விசாரிக்கப்பட்டு, சாட்சி ஆவணங்களை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாகக் குறிப்பிடவும் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொறுப்பு விசாரணை அதிகாரி இப்படி சாட்சியம் அளித்ததற்கு தனது உயர் அதிகாரிகளின் அனுமதியைக் கூட முறையாகப் பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கெல்லாம் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டிய அரசு வழக்கறிஞர் ஆட்சேபிக்கவில்லை. நீதிபதியும் அதை அனுமதித்திருக்கிறார்.

இதே பொறுப்பு விசாரணை அதிகாரி தான், அரசு வழக்கறிஞரை மீறி, நேரடியாக சிறப்பு நீதிபதிக்கு இந்த வழக்கு தொடர்பாக மறு விசாரணை செய்யப்பட வேண்டுமென்று முன்பு கடிதம் எழுதியவர். இதுகுறித்து கர்நாடக உயர் நீதி மன்றத்தில் நாம் தாக்கல் செய்த மனுவை, கர்நாடக உயர் நீதி மன்றம் ஏற்றுக் கொண்டு, டி.எஸ்.பி.. சம்மந்தத்தின் கோரிக்கையைத் நிராகரித்ததுடன், தமிழகத்தின் தற்போதைய முதல்வர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி செயல்படும் பொறுப்பு விசாரணை அதிகாரி சம்பந்தத்தையும் கண்டித்தது.
பவானி சிங் பொறுப்பேற்றவுடன் அரசு தரப்பு சாட்சிகளான 259 பேர், மற்றும் ஆயிரக்கணக்கான ஆவணச் சாட்சியங்களைப் படித்து தெரிந்து கொள்ள இரண்டு மாதம் அவகாசம் வேண்டுமென்று கோரி 28-2-2013 அன்று மனு தாக்கல் செய்தார். இதுநாள் வரை இந்த மனு மீது சிறப்பு நீதி மன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. அவர் கேட்ட அவகாசமும் தரப்படவில்லை. அதற்காக அவர் உயர் நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யவே இல்லை.
இதையெல்லாம் கண்டபிறகு தான், இந்த வழக்கில் அரசு தரப்புடன் இணைந்து, ஜெயலலிதாவுக்கு எதிராக வாதாட எங்களை அனுமதிக்க வேண்டு மென்று கோரி சிறப்பு நீதி மன்றத்தில் தி.மு. கழகத்தின் சார்பில் வழக்கு தொடரப் பட்டது. ஆனால் நீதிபதி பாலகிருஷ்ணா எழுத்துப் பூர்வமாக உங்கள் கருத்துகளை எழுதித் தாக்கல் செய்யலாமே தவிர, வாதாட அனுமதியில்லை என்று தெரிவித்து விட்டார். விசாரணை அதிகாரியாக இருந்த நல்லம்ம நாயுடு வை விசாரிக்க வேண்டுமென்ற கோரிக்கைக்கும் இது நாள் வரை பதில் இல்லை.

இந்த முக்கியமான வழக்கின் சான்றாவணங்களாக உள்ள கைப்பற்றப் பட்ட நகைகள் சென்னை ரிசர்வ் வங்கியின் கருவூலத்தில் உள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணையின்போது, அந்தச் சொத்துக்களான நகைகள் எல்லாம் நீதி மன்றத்தின் பொறுப்பிற்குக் கொண்டு வரப்படவேண்டும். அவ்வாறு இது வரை கொண்டு வரப்படவில்லை. இறுதி வாதம் நடைபெறுவதற்கு முன்பாக, அந்த நகைகளை நீதி மன்றத்தில் ஒப்படைப்பது பற்றி சிறப்பு நீதி மன்றம் எந்த விதமான உத்தரவும் பிறப்பிக்கவில்லை. அந்த நகைகளைக் கொண்டு வந்து விசாரணை நடத்துவதற்கு முன்பாகவே, இந்த வழக்கில் தீர்ப்பளித்து விட வேண்டுமென்று நீதிபதி அவசரப்படுவது, அவர் தன் பதவி ஓய்வுக்கு முன்பாகவே தீர்ப்பளித்திட வேண்டும் என்று கருதினார் போலும்! நகைகளை நீதி மன்றத்திற்கே கொண்டு வந்து பார்வையிடாமல், இந்த வழக்கில் தீர்ப்பளிக்க முடியாது.

அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை மாற்ற வேண்டுமென்று கோரி கர்நாடக உயர் நீதி மன்றத்தில் 23-8-2013 அன்று பொது;ச செயலாளர் பேராசிரியர் மனு தாக்கல் செய்தார். 26-8-2013 அன்று கர்நாடக மாநில உயர் நீதி மன்ற நீதிபதி திரு. போபன்னா, கர்நாடக மாநில சட்டத் துறைக்கு நோட்டீஸ் அனுப்பினார். இந்தச் சொத்துக் குவிப்பு வழக்கினை பெங்களூரு சிறப்பு நீதி மன்றம் விசாரிக்க வேண்டுமென உத்தரவிட்ட உச்ச நீதி மன்றம், நியாயமான விசாரணை நடைபெறுவதை கர்நாடக உயர் நீதி மன்றம் உறுதி செய்ய வேண்டுமென்று தெரிவித்திருந்தது. அதனால் தான் கர்நாடக மாநில உயர் நீதி மன்றம் கர்நாடக மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அன்றையதினமே கர்நாடக மாநில அரசு, பவானிசிங் அவர்களை மாற்றி உத்தரவிட்டது.
கர்நாடாக மாநில அரசு பவானி சிங் அவர்களை மாற்றி 26ஆம் தேதியே ஆணை பிறப்பித்த போதும், 27ஆம் தேதியன்று சிறப்பு நீதி மன்றத்தில் பவானி சிங் ஆஜராகி வாதிடுவதில் முனைப்பு காட்டினார். அவர் அவ்வாறு வாதிட்டுக் கொண்டிருக்கும் நேரத்திலேயே அவரை அந்தப் பதவியிலிருந்து கர்நாடக மாநில அரசு நீக்கிய ஆணை பற்றி நீதிபதிக்குத் தெரிய வந்து விட்டதால், நீதிபதி நீதி மன்ற நடவடிக்கைகளை அப்படியே நிறுத்தி விட்டு தன் அறைக்குச் சென்று விட்டார். அப்போது பவானி சிங் நீதி மன்றத்திலிருந்து வெளியேறி அ.தி.மு.க. வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார். என்ன ஆச்சரியம் பாருங்கள்! புலியும் மானும் ஒரே இடத்தில் நீர் அருந்திய கதையைப் படித்தது இல்லையா? அதைப் போல, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கான வழக்கறிஞர்களும், அவர்களை எதிர்த்து வாதிட வேண்டிய வழக்கறி ஞரும் கூடி ஆலோசனை நடத்திய வேடிக்கையும் பெங்களூர் சிறப்பு நீதி மன்றத்திலே நடைபெற்றிருக்கிறது.
கர்நாடக மாநில அரசு பவானி சிங் அவர்களை மாற்றி யிருக்கா விட்டால், 27ஆம் தேதியன்றே அரசு தரப்பின் வாதத்தை பவானி சிங் முடித்துவிட்டதாகத் தெரிவித்து, நீதிபதியும் தீர்ப்பிற்கான தேதியை அறிவித்திருப்பார்.
கர்நாடகாவுக்கு சொத்துக் குவிப்பு வழக்கு மாற்றப்பட்ட நாளிலிருந்து மனு மேல் மனு போட்டு வழக்கை இழுத்தடிப்பு செய்து வந்த குற்றம் சாட்டப்பட்டவர்கள் புதிய சிறப்பு நீதிபதியாக திரு. பாலகிருஷ்ணா நியமிக்கப்பட்ட பிறகு, இந்த வழக்கை விரைவில் முடிப்பதற்கான அத்தனை முயற்சிகளிலும் ஈடுபட்டார்கள். அதற்காகவே அரசு தரப்பு வழக்கறிஞர் இரண்டு மாத காலம் அவகாசம் வேண்டு மென்று கேட்டதைக் கூட அளிக்காமல், தன்னுடைய பதவி ஓய்வு நாளான செப்டம்பர் 30ஆம் தேதிக்குள்ளாக இந்த வழக்கில் தீர்ப்பளிக்கும் அவசரத்துடன் செயல்பட்டதையும் புரிந்து கொள்ள முடிந்தது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் தரப்பில் முதலில் 133 சாட்சிகளை விசாரிக்க வேண்டுமென்று கோரியிருந்தனர். ஆனால் 99 சாட்சிகளை மட்டும் விசாரித்து விட்டு, தங்களுடைய சாட்சிப் பட்டியலை திடீரென்று குறைத்துக் கொண்டனர். இந்த 99 சாட்சிகளிடமும் கூட, அரசு வழக்கறிஞரான பவானி சிங் முறையாக குறுக்கு விசாரணை செய்யவில்லை.

குற்றம் சாட்டப்பட்ட தரப்பு முக்கியமான ஆவணங்களை """"ஜெராக்ஸ்"" நகல் களாகக் கொடுத்த போதிலும், சிறப்பு நீதிபதி அதற்கு எந்தவிதமான ஆட்சேபணையும் தெரிவிக்காமல் பெற்றுக் கொண்டார். இது """"ஒரிஜினல்"" ஆவணங்களையே சமர்ப்பிக்க வேண்டும் என்ற விதியை மீறியதாகும். """"ஜெராக்ஸ்"" நகல்களை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய அரசு வழக்கறிஞரும் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை.
அரசு வழக்கறிஞர் பவானி சிங் நீக்கப்பட்டதாக கர்நாடக மாநில அரசு ஆணை பிறப்பித்ததும், தனது பதவி நீக்கத்தை எதிர்த்து உச்ச நீதி மன்றம் செல்லப் போவதாக 28ஆம் தேதி பவானி சிங் அறிவித்த நிலையில், 29ஆம் தேதி யன்று அரசு வழக்கறிஞர் நீக்கப்பட்டது நியாயமற்ற செயல் என்று குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா சார்பில் உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. என்ன வேடிக்கை? எதிர் தரப்பு வழக்கறிஞரை மாற்றியது தவறு என்று ஜெயலலிதா தரப்பினர் உச்ச நீதி மன்றத்திற்கே சென்று விட்டார்கள். எதிர் தரப்பு வழக்கறிஞர் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து குற்றம் சாட்டப்பட்டவரே உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்த விநோதத்தை டெல்லியிலே உள்ள மூத்த வழக்கறிஞர்கள் எல்லாம் பார்த்து தங்களுக்குத் தாங்களே சிரித்துக் கொண்டார்களாம்!

உச்ச நீதி மன்றம் ஜெயலலிதா தாக்கல் செய்த இந்த வழக்கினை 30ஆம் தேதியன்றே விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவிட்டது. அரசு வழக்கறிஞர் பவானிசிங் அவர்களை கர்நாடக மாநில அரசு நீக்கியதற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டுமென்ற ஜெய லலிதாவின் கோரிக்கையை ஏற்று, தடை விதிக்க மறுத்த உச்ச நீதி மன்றம், புதிய அரசு வழக்கறிஞரை அந்த இடத்திலே நியமிக்கவும் கூடாது என்று கூறியதுடன், அந்த மனு மீது கர்நாடக மாநில அரசின் கருத்தினை தெரிவிக்க வேண்டுமென்று நோட்டீஸ் அனுப்பியது.

6-9-2013 அன்று உச்ச நீதி மன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, கர்நாடக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பவானி சிங்கின் நியமனமே சரியானது அல்ல என்பதால் அவரைத் திரும்பப் பெற முடிவு செய்வதாகவும், தலைமை நீதிபதியுடன் கலந்து புதிய வழக்கறிஞரை நியமனம் செய்யத் தயாராக இருப்பதாகவும் கூறினார். அதையேற்ற நீதிபதிகள், புதிய வழக்கறிஞரை கர்நாடக ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியுடன் ஆலோசனை நடத்தி நியமிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

10-9-2013 அன்று பவானி சிங் அவர்களுக்கே கர்நாடக மாநில அரசின் சார்பாக அதன் சட்டத் துறை செயலாளர் ஒரு கடிதம் அனுப்புகிறார். அந்தக் கடிதத்தில் குறிப்பாக, """"ஹள வாந ழுடிஎநசnஅநவே டிக முயசயேவயமய றயள டிக வாந எநைற வாயவ லடிரச யயீயீடிiவேஅநவே றயள nடிவ அயனந in யஉஉடிசனயnஉந றiவா வாந னசைநஉவiடிளே ளைளரநன லெ வாந ளுரயீசநஅந ஊடிரசவ in வாயவ வாந சநளூரசைநஅநவே டிக உடிளேரடவயவiடிn hயள nடிவ நெநn உடிஅயீடநைன றiவா, வாந ழுடிஎநசnஅநவே றiவானசநற லடிரச யயீயீடிiவேஅநவே..... ஐn வாந உசைஉரஅளவயnஉநள வாந ழுடிஎநசnஅநவே ளை டிக வாந எநைற வாயவ வை றடிரடன நெ யயீயீசடியீசயைவந வாயவ யீநனேiபே உடிளேனைநசயவiடிn டிக வாந அயவவநச லெ ழடிn’டெந வாந ஊhநைக துரளவiஉந, லடிர னடி nடிவ iளேளைவ ரயீடிn யயீயீநயசiபே நெகடிசந வாந ஊடிரசவ in வாந யகடிசநளயனை உயளந யள ளுயீநஉயைட ஞரடெiஉ ஞசடிளநஉரவடிச"" என்று தெரிவித்து விட்டது. அதாவது தங்களின் நியமனம் உச்ச நீதி மன்றத்தின் வழிகாட்டுதலின்படி அமையவில்லை என்று கர்நாடக அரசு கருதுவதால் தங்களின் நியமன உத்தரவை இந்த அரசு திரும்பப் பெற்றுக் கொண்டது; இப்போதுள்ள சூழ்நிலை யில் தலைமை நீதிபதியின் முன்னால் புதிய வழக்கறிஞர் குறித்த நடவடிக்கை நிலுவையில் இருப்பதை மனதிலே கொண்டு, சிறப்பு அரசு வழக்கறிஞராக நீங்கள் ஆஜராக வேண்டும் என்பதை வலியுறுத்தக் கூடாது என்று அரசு கருதுகிறது என்று கர்நாடக அரசு கடிதமே எழுதியிருக்கின்றது.

10ஆம் தேதி கர்நாடக அரசு இவ்வாறு திட்டவட்டமாகத் தெரிவித்தவுடன், பவானி சிங் என்ன செய்வதென்று முடிவெடுப்பதற்குப் பதிலாக, ஜெயலலிதா தரப்பினர் முடிவெடுத்து விட்டார்கள். அதாவது இன்று (13-9-2013) மதியம் 1 மணி அளவில் உச்ச நீதி மன்றத்தில் பவானி சிங் இந்த வழக்கிலே ஆஜராகக் கூடாது என்று கர்நாடக மாநில அரசு எழுதியுள்ள கடிதத்திற்கு இடைக்காலத் தடை வழங்கிட வேண்டுமென்று ஜெயலலிதா கோரிக்கை மனு தாக்கல் செய்தார்.

பவானி சிங் அரசு வழக்கறிஞர் - ஜெயலலிதாவுக்கு எதிராக வாதாடு வதற்காக அரசால் நியமிக்கப்பட்டவர் - அவரே இந்த வழக்கில் நீடிக்க வேண்டு மென்று ஜெயலலிதா எதற்காகத் துடிக்கிறார்? உச்ச நீதி மன்றமும், ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்று, கர்நாடக மாநில அரசு பவானி சிங் அவர்களுக்கு எழுதிய கடிதத்திற்கு இடைக்காலத் தடை பிறப்பித்துள்ளது. ஜெயலலிதா தரப்பிலே அதற்காக எடுத்து வைத்த வாதம் என்ன? அதைப் பற்றி யெல்லாம் பின்னர் எழுதுகிறேன்.

உச்ச நீதி மன்றத்தின் இடைக்காலத் தடை காரணமாக, இந்த வழக்கு சிறப்பு நீதி மன்றத்தில் 17ஆம் தேதியன்று விசாரணைக்கு வரவிருக்கிறது. இதற்கிடையே பவானி சிங் அவர்கள் வாதாடக் கூடாது என்று கர்நாடக உயர் நீதி மன்றத்தில் கழகத்தின் சார்பில் தொடுத்த வழக்கின் விசாரணை 16ஆம் தேதி யன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருக்கிறது.
எப்படியோ கர்நாடக மாநில சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாலகிருஷ்ணா இந்த மாதம் 30ஆம் தேதியோடு ஓய்வு பெறவிருக்கிறார். அதற்குள் இந்த வழக்கிலே தீர்ப்பு வழங்கப்பட வேண்டுமென்று குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் கருதுகிறார்கள். நீதிபதி அவர்களும் தான் ஓய்வு பெறுவதற்குள் தீர்ப்பு வழங்க வேண்டுமென்று கருதினார். இதிலே இடையிலே ஒரு சிக்கல். சிறப்பு நீதி மன்ற நீதிபதியின் பிறந்த நாள்படி அவர் இந்த மாதம் 12ஆம் தேதியோடு ஓய்வு பெற்றிருக்க வேண்டும். மாதத்தின் மத்தியில் யாராவது ஓய்வு பெற நேரிட்டால், அவர்கள் ஓய்வூதியம் பெறுவதற்கு ஏதுவாக, அந்த மாதக் கடைசி வரையிலே தொடர்ந்து பணியாற்றலாம் என்று அரசு அளித்த சலுகை காரணமாக, நீதிபதி பாலகிருஷ்ணா செப்டம்பர் 30ஆம் தேதி வரை பணியாற்றலாம். ஆனால் அவர் இயற்கையாக ஓய்வு பெற வேண்டிய 12ஆம் தேதிக்குப் பிறகு, இந்த மாதம் 30ஆம் தேதி வரை அவர் பணியாற்றினாலுங்கூட, முக்கிய தீர்ப்புகளை அவர் வழங்கக் கூடாது என்பது நீதி மன்ற மரபு. அதன்படி அவர் 30ஆம் தேதிவரை நீதிபதியாக பணி நீடித்தாலும், இனிமேல் அவரால் இந்த வழக்கிலே தீர்ப்பு வழங்கிட இயலாது என்பது தான் உண்மை. இதையும் மீறி சிறப்பு நீதி மன்ற நீதிபதி வழக்கினை நடத்துவாரா என்பது கேள்விக் குறி!

பேரறிஞர் அண்ணா அவர்கள் """"நீதி தேவன் மயக்கம்"" என்று ஒரு புகழ் பெற்ற நாடகம் எழுதினார். அதில் அண்ணா அவர்களே நடிப்பார். அதைப் போல இந்தச் சொத்துக் குவிப்பு வழக்கிலும் நீதி தேவன் மயக்கம் அடையப் போகிறரா? நிமிர்ந்து நிற்கப் போகிறாரா? நீதி தேவன் மயக்கம் அடைந்தாலும், உண்மையான நீதிபதிகளாகிய தமிழ் நாட்டு மக்கள் முன்பாக இந்த வழக்கின் இறுதிக் கட்டத்தில் உள்ள நிலைமைகளை எடுத்து வைத்திருக்கிறேன்.

===================================================