பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

September 21, 2013

நன்றி கெட்ட, முதுகெலும்பில்லா சினிமாத்துறை நாசமாய் போகட்டும்!!!இந்திய சினிமா நூற்றாண்டு விழா - தென்னிந்திய சினிமா வர்த்தகர் சங்கம் நடத்துகின்றதாம். ஏழ்மையில் இருக்கும் சினிமா உலகுக்கு தமிழக அரசு பத்து கோடி கொடுத்து விழா "பார்ட்னர்" ஆகின்றதாம்! இந்திய சினிமா வரலாற்றில் அமிதாப், ஸ்ரீதேவி போன்ற ஜாம்பவான்களும் பேஜ்பூரி உள்ளிட்ட 17 மொழி சினிமா அப்பாடக்கர்களும் விழாவுக்கு வருகை தந்து சினிமாவை செழிக்க வைக்க இருக்கின்றராம்.தமிழக முதல்வரும் இந்திய சினிமா வராலாற்றில் 1965 முதல் 1980 வரை 15 ஆண்டுகள் நடிகையாக இருந்தவருமான ஜெ.ஜெயா தலைமையில் இன்று முதல் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் கோலாகலமாம். விழா முடிவில் மூன்றாம் நாள் நான்கு மாநில ஆட்சி பொறுப்பில் உள்ளவர்கள் உள்ளிட்ட இந்திய ஜனாதிபதியும் தமிழக ஆளுனரும் வருகை தர இருக்கின்றனராம்.

இது குறித்தெல்லாம் என் விருப்பு வெறுப்பு எதும் இல்லை. ஆனால் விழாவுக்கு திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான திரு.கருணாநிதி அவர்களுக்கு ஒரு அழைப்பிதழ் கூட அனுப்பவில்லை என்பது குறித்தும் எனக்கு எவ்வித மன அழுத்தமும் வேதனையும் கிஞ்சித்தும் இல்லை. முன்னாள் முதல்வரை அழைக்க வேண்டும் என எவ்வித அஜண்டாவும் கிடையாது, அது போலவே ஒரு கட்சி தலைவரை அழைக்க வேண்டும் என்று எவ்வித நியாயங்களும் இல்லவே இல்லை.

ஆனால் நான் வேதனைப்படுவது ---- இந்த "சினிமா 100"ல் கிட்ட தட்ட 70 ஆண்டுகளாக இருக்கும் உயிர்ப்புடன் இருக்கும் ஒரு கலைஞனுக்கு ஏன் விழா அழைப்பிதழ் கூட அனுப்பவில்லை என்பதே என் ஒரே கேள்வி. இன்றைக்கு ஸ்ரீதேவி, அமிதாப் போன்ற ஜாம்பவான்கள் என வர்ணிக்கப்படும் ஆட்கள் சினிமா உலகில் செய்த சாதனை என்ன என்று பார்ப்பின் படம் நடித்தார்கள். பணம் பெற்றார்கள் என்னும் ஒரு சிறிய வட்டத்துக்குள் அடக்கி விடலாம். சினிமா ஆரம்பித்த ஆண்டு இந்தியாவில் பேசாப்படம் ஆரம்பித்த ஆண்டு என்பது 1913. நான் அழைப்பிதழ் அனுப்பவில்லை என்று ஆதங்கப்படும் மனிதர் சினிமாவின் உள்ளே நுழைந்த ஆண்டு என்பது 1947. கோவை ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த ராஜகுமாரி என்னும் படம் மூலமாக உள்ளே நுழைந்தார். அப்போது அவருக்கு வயது 23 மட்டுமே.

அப்போது இந்திய சினிமாவுக்கு வயது 34 தான். அப்போது இந்திய சினிமாவில் நுழைந்த அவர் இதோ இப்போது சிமிமா பிரபல்யங்கள் என சொல்லப்படும் நபர்கள் போல பணம் மட்டுமா சம்பாதித்தார்? இல்லை. ஒரு சமூக மாற்றத்தை அல்லவா கொண்டு வந்தார்! ஒரு கணவனை மனைவி அழைக்கும் போது கூட "என் பிராண நாதா" போன்று ஆணாதிக்கத்தனமாக அழைத்ததை "அத்தான், கண்ணே" என அழகாய் மாற்றியது கலைஞர் செய்த புரட்சி அல்லவா! சீர்திருத்த கருத்துகளை தன் அனல் தெறிக்கும் வசனம் வழி புகுத்தியது கலைஞர் செய்த புரட்சி அல்லவா! "ரெண்டு மாலை, வாழ்த்து சொல்ல ஒரு மைக்..திருமணம் என்பது ரொம்ப சிம்பிள்" என சொல்லி பராசக்தி யின் எஸ் எஸ் ஆர் வழி செய்து காட்டி புரட்சி செய்தது கலைஞர் அல்லவா! தமிழர்களை பார்த்து "நான்சென்ஸ்" என சொன்ன நேருவை மக்கள் மனதில் பதியவைக்க ஒரு ஆண்டி ஹீரோவாக (சிவாஜி) நேரு போல ஷர்வானி அணிந்து கொண்டு படம் முழுக்க "நான்சென்ஸ்" என சொல்ல வைத்து மக்கள் மனதில் 'போராட்ட விதை' விதைத்தவர் கலைஞர் அல்லவா? இந்திய , தமிழக சினிமாவில் சென்ற நூற்றாண்டின் மிகப்பெரும் பகுதியை ஆக்கிரமித்து தன்பால் வைத்து கொண்ட மாபெரும் சக்திகள் எம் ஜி ஆர், சிவாஜி ஆகிய இருவரின் முதல் படம்(ராஜகுமாரி, பராசக்தி) இவரின் கைவண்ணம் அல்லவா! 1950 வெளிவந்த மந்திரிகுமாரி என்னும் படத்தில் "பெரியம்மா குத்து விளக்கு, சின்னம்மா எலக்ட்ரிக் விளக்கு" என்னும் வசனம் எழுதிய தீர்க்கதரிசி அல்லவா! (எம் ஜி ஆர் இறந்த பின்னர் ஜானகி, ஜெ என பிரிந்த போது இப்போதைய மாமனாரும் அப்போதைய ஜெயாவின் எமனாருமாய் இருந்த காளிமுத்து இந்த வசனத்தை எடுத்து பேசாத மேடை தமிழகத்தில் இல்லை எனலாம்)

1952ல் வெளிவந்த பராசக்தி படத்தில் "ஹூம் தமிழ்நாட்டில் தாலி அறுத்தவர்களுக்கு இட்லி கடை தானே தாசில் உத்யோகம்" என தீர்க்கதரிசன வசனம் எழுதியது கலைஞர் அல்லவா? பொதுநலம் என்னும் புத்தியை மக்கள் மனதில் ஊட்ட தமிழக முன்னாள் முதல்வர் அண்ணா அவர்களின் ரங்கோன்ராதா படத்தில் கலைஞர் எழுதிப பகுத்தறிவு பாடல்.....
திண்ணை தூங்கி பண்டாரம்
திருவோடு ஏந்தும் பரதேசி
தெருவில் உருளும்
திருப்பதி கோவிந்தா.. கோவிந்தா
இந்த சோம்பேரி நடைப்பிணங்களுக்கு
உயிர் கொடுக்கும் மருந்து...
நல்ல மருந்து பொதுநலம்
என்றும் எதிலும் பொதுநலம்

என பாட்டெழுதி பிற்காலத்தில் பி ஜே பி என்னும் காவி கட்சி வந்து நாட்டை நாசமாக்கும் என தீர்க்கதரிசனமாய் எழுதியவர் கலைஞர் அல்லவா!

1960ல் தன் படத்துக்கு "எல்லோரும் இந்நாட்டு மக்கள்" என பெயரிட்டு தன் கம்யூனிச சித்தாந்தத்தை திரைப்படம் மூலமாக வெளிக்காட்டியது கலைஞர் என்னும் புரட்சியாளர் அல்லவா!

1961ல் தாயில்லாப்பிள்ளை என்னும் தன் படத்தில் பார்பனர் இல்லா ஒரு பையன் பார்ப்பனர் வீட்டில் மாப்பிள்ளையாகி படும் சிரமத்தை நகைச்சுவை கலந்து கொடுத்த புரட்சியாளர் கலைஞர் அல்லவா?

1966களில் "அவன் பித்தனா?" என்னும் படத்தில் "இறைவன் இருக்கின்றானா?" என ஒரு பாடலால் கேட்ட கலைஞர் அந்த படத்திலும் தன் கூரிய வசனங்களால் ஆரியத்தை குத்தி கிழித்து புரட்சி செய்யவில்லையா?

சாக்ரடீஸ் நாடகம் ஒரு சிவாஜிகணேசன் படத்தில் வரும். அதிலே சாக்ரடீசாக தந்தை பெரியாரை மனதில் கொண்டு வசனம் வடித்திருப்பார். அதிலே சாக்ரடீஸ் மீது அரசு குற்றம் சுமத்தும். ஏதன்ஸ் தேசத்து இளைஞர்களை சீர்திருத்த கருத்துகள் கொண்டு கெடுத்து விட்டார்" என குற்றம் சுமத்தும். அதற்கு அந்த சாக்ராடீஸ் என்னும் பெரியார் என்னும் சிவாஜி கணேசன சொல்வார் "ஒரு கிழவன் எப்படி அய்யா இளைஞர்களை கெடுக்க முடியும்?" என கேட்டு ஒரு நீண்ட வசனம். முழுக்க முழுக்க பெரியார் கருத்துகளை திணித்து இருப்பார். அப்படி தன் கருத்துகளால் சமூக புரட்சி செய்தவர் கலைஞர் அல்லவா!

காலம் மாறினாலும் அதற்கு எற்றபடி தன் வசனங்களை மாற்றி அப்போது இருக்கும் வழக்கத்துக்கு தகுந்தது போல எழுதுவதில் கலைஞருக்கு இணை இங்கே இந்திய சினிமாவில் யார்? 1987ல் தன் நாவல் "ஒரே ரத்தம்" என்னும் படம். இதில் பண்ணையார் வீட்டில் ஒரு தாழ்த்தப்பட்டவன் மாப்பிள்ளை ஆவதும், தாத்தப்பட்ட வீட்டில் பண்ணையார் பெண் மருமகள் ஆவதும் என்பதாக கதை. அந்த கதையில் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஒரு புரட்சி இளைஞராக நம் தளபதி முக ஸ்டாலின் அவர்கள் நடித்திருப்பார். இதுவே தளபதி அவர்கள் நடித்த ஒரே படம். அதில் ஆதிக்க சாதியினரால் கொலை செய்யப்படுவார். அதுவே கதைக்கு ஒரு திருப்புமுனை ஆகும். அதே கதை தானே இன்று வரை தர்மபுரி இளவரசன் வரை நடந்து கொண்டு இருக்கின்றது.

அதன் பின்னர் "பாலைவனரோஜாக்கள்" என்னும்படத்தில் இப்போது பெரிய அப்பாடக்கராக இருக்கும் சத்தியராஜ் அவர்கள் வளர்ந்து வரும் ஒரு நடிகர் அப்போது. அதில் ஒரு வசனம் "நாங்கள் சாத்வீக முறையில் கொடி பிடித்து போராடுகிறோம்" என சொன்ன மக்களிடம் மந்திரி சொல்வார் "ம்.. பிடிக்கிறது என்னவோ கொடிதான். அதை திருப்பி பிடிச்சா என்னான்னு எங்களுக்கும் தெரியும்" .... காலத்துக்கு ஏற்ற வசனம்!

இதோ 2008-9களில் உளியின் ஓசை என்னும் சரித்திர படம்! அது கூட கட்சியில் இருந்து பிரிந்து செயல்பட்ட மாறன் சகோதரர்களுக்காக ஒரு வசனம் வரும் "பறக்க தெரியும் என்பதற்காக சூரியனுக்குள் பாயக்கூடாது". இந்த ஒரே வசனத்தில் மீண்டும் மாறன் சகோதரர்கள் தாய்கழகத்துக்கு ஓடிவந்து விட்டனர்.

இதோ கிட்ட தட்ட 2010ம் ஆண்டு அவர் கதை திரைக்கதை வசனம் எழுதிய "பொன்னர் சங்கர்" படம் வெளி வந்தது. அதன் பின்னர் கூட செம்மொழி மாநாட்டு பாடலை எழுதி அதை ஆஸ்கார் விருது வாங்கிய ஏ ஆர் ரகுமானை பிழிந்து எடுத்து ஒரு அருமையான பாடல் பிறந்தது. அதை படமாக்க கௌதம்வாசுதேவ் என்ன பாடு பட்டிருப்பார் கலைஞர் அவர்களிடம் என அவர்களை கேட்டு பாருங்கள்.

இதை எல்லாம் எதற்கு சொல்கிறேன்! 1947ல் "இந்திய சினிமா அதன் 34 வயதாக" இருக்கும் போது அதனுள் நுழைந்த ஒரு சினிமா கலைஞன் இன்று அதன் 100 வது வயது வரை அதிலேயே உழண்டு கொண்டு சமூக மாற்றம், ஆட்சி மாற்றம் என பல புரட்சிகளை செய்து கொண்டு இருக்கும் இந்த சினிமா கலைஞனுக்கு "சினிமா 100"ல் ஒரு அழைப்பிதழ் இல்லை. ஆனால் "பணம்" மட்டுமே சினிமாவில் குறிக்கோளாய் இருக்கும் பலருக்கு இன்று அங்கு ராஜமரியாதை!

இதே கலைஞர் தான் தமிழக சினிமாவுக்கு "மாநில அரசு விருதுகளை" அறிவித்தார் அவர் முதல்வராக இருக்கும் போது. அது போல தமிழக அரசின் உயரிய விருதான "கலைமாமணி" விருதை சினிமா கலைஞர்களுக்கும் வழங்கியவர் இதே கலைஞர். தமிழில் பெயர் வைத்தால் கேளிக்கை வரி ரத்து செய்து தமிழக சினிமாவை வாழவைத்தவர் இதே கலைஞர். சினிமா கலைஞர்களுக்கு சென்னையில் குடியிருக்க நிலம் ஒதுக்கியவர் கலைஞர் அவர்கள்.

ஆக கலைஞர் அவர்களுக்கு அரசியலுக்காக, ஆண்டமைக்காக கூட அழைத்து தொலைக்க வேண்டாம். அவரிடம் பெற்ற சலுகைகளுக்காக நன்றி செலுத்த அழைக்க வேண்டாம். இந்திய சினிமாவின் 34வது வயது (கவனிக்க கலைஞரின் 34 வது வயதில் அல்ல...சினிமாவின் 34 வயதில்) முதல் இந்திய சினிமாவில் புரட்சிகள் செய்து வரும் .... இன்றைக்கும் சினிமா உலகில் இயங்கியும் இயக்கியும் கொண்டு இருக்கும், தனக்கு நிகராக இந்திய சினிமா உலகில் இப்போதைக்கு யாரையுமே கொண்டிராத ஒரு ஒப்பற்ற சினிமா கலைஞனை அழைத்து மரியாதை செய்ய வேண்டும் எனக்கூட நான் ஆதங்கப்படவில்லை. குறைந்தபட்சம் ஒரு அழைப்பிதழ் கூட கொடுக்க இயலாத அளவுக்கு இந்திய சினிமா நன்றி கெட்டு, மானம் கெட்டு, தரம் கெட்டு போய் கிடக்கின்றதே என்பதே என் ஆதங்கம்.

இது வரை இந்த கட்டுரையில் ஏன் கலைஞரை அழைக்க வேண்டும், எந்த விதத்தில் அவர் தகுதியானவர் என்பதை குறிப்பிட்டேன். ஆனால் இனி எழுதப்போவது என் ஆதங்கம் அல்ல என் ஆசைகள்!

சினிமா உலகில் நடிக்க வரும் நடிகர்கள் எல்லாம் தங்கள் பால பாடமாக கலைஞரின் பாராசக்தி, மனோகரா, சாக்ரடீஸ் வசனங்களை சொல்லித்தான் உள்ளே நுழைந்தோம் என சிவாகுமார் முதல் சத்தியராஜ் வரை பேட்டி கொடுத்து பார்த்துள்ளேன்.புரட்சி நடிகர், இசைஞானி, கலைஞானி என்ற பட்டமெல்லாம் அவர்களுக்கு கொடுக்கப்பட்டது கலைஞரால். கலைஞர் முதல்வாராக இருக்கும் போது ஒரு விழாவில் இன்று இளையதலைமுறையை வசீகரித்து கொண்டு இருக்கும் (!!?)"தல" அஜித் எழுந்து சபை நாகரீகம் இல்லாமல் "அய்யா, எங்களை விழாவுக்கு வர சொல்லி வற்புறுத்தி அழைத்து வந்தார்கள்" என சொன்ன போது எழுந்து நின்று கைதட்டி ஆரவாரம் செய்த "சூப்பர் ஸ்டார்"(!!?) ரஜினி ..... ஆக கலைஞர் முதல்வராக இருக்கும் போதே இத்தனை தைரியம் காட்டிய சூரப்புலிகள் இப்போது நவதுவாரத்தையும் அடக்கி கொண்டு விழாவில் பல் இளிப்பர். எடிட்டர் லெனின் அவர்கள் மட்டுமே இதுவரை முதுகெலும்பு உள்ள மனிதனாக சினிமா உலகில் தன்னை காட்டிக்கொண்டுள்ளார். அவருக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்!

விழாவுக்கு அழைக்கவில்லை என நான் ஜெயா மீது எந்த கோவமும் படப்போவதில்லை. ஏனனில் எனக்கு நன்றாக தெரியும் நாய் வாலை நிமிர்த்த இயலாது என்று. 75 ஆண்டு கால சட்ட சபை வரலாற்றில் அதன் "வைரவிழா"வில் அதே சட்டமன்றத்தில் 60 ஆண்டுகால உறுப்பினர், 5 முறை முதல்வர், எதிர்கட்சி தலைவர், சட்ட மேலவை உறுப்பினர் என இருந்த,இருக்கின்ற மூத்த, அதி மூத்த கலைஞர் மு.கருணாநிதி அவர்களை அழைத்து மரியாதை செய்ய தெரியாத ஜெயாவை நான் குறை சொல்லவில்லை. ஏனனில் அது கருவின் குற்றம். அது பற்றி எனக்கு கவலை இல்லை. அதே விழாவுக்கு இதே ஜனாதிபதி திரு பிரணாப் முகர்ஜியும், ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு ஆளுனரும் எதற்கு என அண்ணா கேட்டமைக்கு இலக்கணமாய் திகழும் திரு ரோசையா (ரோசம் கெட்ட அய்யா என கூட பெயர் வைத்திருக்கலாம்) அவர்களும் கலந்து கொண்டனர். இதே ரோசையா அவர்கள் மறந்தும் கூட கலைஞர் பெயரை உச்சரிக்கவில்லை அந்த விழாவில். ஏனனில் பயம். ஏற்கனவே சென்னாரெட்டி என்னும் தன் மாநில கவர்னர் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டார் என பழிசுமத்தி அந்த மன உளைச்சலில் அந்த மருத்துவர் சென்னாரெட்டி மறைந்து போனது ரோசையாவுக்கு தெரியாமலா இருந்திருக்கும். அதனால் தானோ என்னவொ ஜெயா அரசு எழுதிக்கொடுத்ததை படித்து விட்டு பம்மிவிட்டார். ஆனால் பழகிய தோசத்துக்கும், ஆதரித்து வாக்களித்து ஜனாதிபதியாக்கிய நன்றிக்காகவும் ஜனாதிபதி உண்மையை சொன்னார் அந்த விழாவில். அது போல நாளை விழாவுக்கு வரும் ஜனாதிபதி மீண்டும் ஒரு முறை தன் மேட்டிமைதன்மையை காட்டுவார் அந்த விழாவில் என நம்புவோம்.

ஆனால் இந்த திரைப்படத்துறை சூரப்புலிகள் நிலை???? இதோ ஓடுகின்ற ஓட்டம் இன்னும் 3 வருடம் கூட இல்லை. அதன் பின்னர் திமுக ஆட்சி வரும். அப்போது மீண்டும் பல் இளித்து கொண்டு கோபாலபுரம் வீட்டு வாசலுக்கு வண்டியை விடுவர்.

நான் ஒரு திமுக தொண்டனாக கலைஞரை பார்த்து கேட்கும் கேள்வி, கேள்வி எனக்கூட சொல்லக்கூடாது ஒரு விண்ணப்பம்..... நாங்கள் எங்கள் தலைவரை பக்கத்தில் நின்று பார்க்க மாட்டோமா என ஏங்கி தவிக்கும் வேளைகளில் நீங்கள் சினிமா உலகினர் வந்தால் "செலிபிரிட்டி" என்னும் காரணமாக உள்ளே அனுமதித்து சரி சமமாக அமரவைத்து பேசி அனுப்பி வைக்கின்றீர்கள். இனி அது நடக்க கூடாது. இன்று உங்களை அழைக்க வில்லை என மாரிலும் வயிற்றிலும் அடித்து கொண்டு புலம்பும் நாங்கள் அதாவது அடிமட்ட அடிமட்ட தொண்டர்கள் தான் உங்களுக்கு எப்போதும் "செலிபிரிட்டி". அந்த சினிமா நாய்கள் உங்களோடு சமமாக உட்காந்த நாய்கள் இன்று அங்கே என்ன ரொட்டி துண்டு கிடைக்கும் என போய் பல் இளித்து கொண்டுள்ளன. இனி நம் ஆட்சி வந்தால் சினிமா துறைக்கு வரிவிலக்கு போன்ற சலுகைகள் கூடாது. கூடவே கூடாது அந்த நன்றி கெட்ட நாய்களுக்கு! அடுத்து நீங்கள் தமிழக அரசின் உயரிய விருதான "கலைமாமணி" விருதை சினிமா கலைஞர்களுக்கு கொடுக்கவே கூடாது. ஏனனில் நீங்கள் கலைமாமணி விருது கொடுத்து கவுரவித்த எழுத்தாளர்கள், நாதஸ்வர கலைஞர்கள், நாட்டுப்புற கலைஞர்கள் என எல்லோரும் அதை பெருமையாக மதித்து தன் பெயருக்கு முன்னர் போட்டுக்கொண்டு அரசை மதிக்கும் போது எந்த சினிமாகாரன் அந்த விருதை தன் பெயருக்கு முன்னர் போட்டுக்கொண்டான் என சொல்லுங்கள். எனவே அதை நிறுத்துங்கள். அது போல அவர்களுக்கு இலவச நிலம் கொடுக்கிறேன் என தயவு காட்டாதீர்கள். அவைகள் நன்றி கெட்ட நாய்கள். நான் ஒட்டு மொத்தமாக சினிமா உலகில் இருக்கும் எல்லோரையும் சொல்லவில்லை. எடிட்டர் லெனின் போன்ற இன்னும் பல நல்லவர்கள் இருக்கின்றனர். அவர்களை தேர்ந்தெடுத்து நல்லது செய்யவும். சரி சீட் கொடுத்து பேசவும். இப்போது பல் இளித்து கொண்டு போய் அங்கே "அம்மா" புகழ் பாடும் நபர்களை இனி கொண்டாடாதீர்கள்! இதுவே இன்று உங்களை அவர்கள் அவமானம் செய்தமையால் எங்கள் இதயம் புண்பட்டமைக்கு நீங்கள் தடவும் அருமருந்து!

நன்றி கெட்ட, முதுகெலும்பில்லா சினிமாத்துறை நாசமாய் போகட்டும்!!!

21 comments:

 1. என்னடா சொல்ல வர ?

  ReplyDelete
  Replies
  1. karunanthi never respected his party workers, respected only stars
   now stars paying for that. karunanidhi deserves

   Delete
 2. Mr Abi Appa...

  Do you believe in "MuRpagal seyyin piRpagal vilaiyum"? I do..

  Just recollect ur memory on "Semmozhi Function"... Did Mr MK invite all Tamil Scholars?

  In our TN politics, it is tit for tat...and Mr MK is very well known for that.

  Please do not waste your effort and energy. Use ur energy to uplift ur family, Mr MK has done that for his next 7 generations ans do not get carried away like Vaigai puyal...

  Regards,
  S.N.Thiagarajan
  Amsterdam

  ReplyDelete
  Replies
  1. //பொதுநலம் என்னும் புத்தியை மக்கள் மனதில் ஊட்ட தமிழக முன்னாள் முதல்வர் அண்ணா அவர்களின் ரங்கோன்ராதா படத்தில் கலைஞர் எழுதிப பகுத்தறிவு பாடல்.....
   திண்ணை தூங்கி பண்டாரம்
   திருவோடு ஏந்தும் பரதேசி
   தெருவில் உருளும்
   திருப்பதி கோவிந்தா.. கோவிந்தா
   இந்த சோம்பேரி நடைப்பிணங்களுக்கு
   உயிர் கொடுக்கும் மருந்து...
   நல்ல மருந்து பொதுநலம்
   என்றும் எதிலும் பொதுநலம்

   என பாட்டெழுதி பிற்காலத்தில் பி ஜே பி என்னும் காவி கட்சி வந்து நாட்டை நாசமாக்கும் என தீர்க்கதரிசனமாய் எழுதியவர் கலைஞர் அல்லவா!//

   1999-பொதுத் தேர்தல்...... :)

   Delete
 3. // ஒரு கணவனை மனைவி அழைக்கும் போது கூட "என் பிராண நாதா" போன்று ஆணாதிக்கத்தனமாக அழைத்ததை "அத்தான், கண்ணே" என அழகாய் மாற்றியது கலைஞர் செய்த புரட்சி அல்லவா! //

  என்னண்ணேய்ய்ய்ய்...! இதுக்கு மேலல்லாம் பொரட்சி பண்ணின ஷக்கீலா அக்காவுக்கே அழைப்பு இல்லியாம். இதுக்கு போயி மூசுமூசுன்னு மூச்சுமுட்ட பதிவெல்லாம் எழுதிக்கிட்டு...

  ReplyDelete
 4. பாசத்தலைவனுக்கு பாராட்டுவிழா நடந்த போது கண்கள் பனித்ததோ......இப்போ தலைவர் ஆட்சியில் இருந்தால் இவங்களுக்கு அழைப்பு அனுப்பி இருப்பாங்களா.....கொஞ்சம் think பன்னுங்க boss.....

  ReplyDelete
  Replies
  1. திங்க் பண்றதா ? தி மு க காரன் எவனுக்கு அந்த பழக்கம் இருக்கு ?

   Delete
  2. அரசியல் பண்ணாம இது கலை நிகழ்ச்சி என்ற அடிப்படையில் பார்த்தால் நல்லா இருக்கும். இது ரெண்டு{திமுக,அதிமுக } பேருக்கும்தான்

   Delete
 5. //கலைஞர் முதல்வாராக இருக்கும் போது ஒரு விழாவில் இன்று இளையதலைமுறையை வசீகரித்து கொண்டு இருக்கும் (!!?)"தல" அஜித் எழுந்து சபை நாகரீகம் இல்லாமல் "அய்யா, எங்களை விழாவுக்கு வர சொல்லி வற்புறுத்தி அழைத்து வந்தார்கள்" என சொன்ன போது//

  துதிபாடல் விழாவிற்கு வர விருப்பம் இல்லாதவர்களை மிரட்டி வரவைத்துட்டு சபை நாகரிகம் பற்றி பேசுவது வீண் வேலை sir,அதே போன்று இது துதிபாடல் விழா இல்லை 100year celebration of cinema vizha sir...
  நீங்கள் ஒத்து கொண்டாளும் கொள்ளாவிட்டாலும் இன்றைய இளையதலைமுறையின் மந்திரச்சொல் தல boss....

  ReplyDelete
  Replies
  1. அதே போன்று இது துதிபாடல் விழா இல்லை 100year celebration of cinema vizha sir...
   எனவே தான் கலைகர கூப்பிட சொல்றார்

   Delete
 6. மிகச்சரியான விமர்சனம். நன்றி கெட்ட நாய்கள் இந்த சினிமா உலகத்தினர்!

  ReplyDelete
 7. அன்புள்ள நண்பருக்கு,

  இன்றும் மு. க. ஆட்சியில் இருந்து இந்த விழா நடந்திருந்தால் ஜெயாவை புறக்கணித்திருப்பார்கள். இந்த இருவருமே தமிழர்களின் உணர்வுகளை புரிந்துகொண்டதாக சரித்திரமே இல்லை.
  அதுசரி, ஒன்று கேட்கட்டுமா?
  முத்தைய ஆட்சியில் செம்மொழி மகாநாடு என கோவையில் நடத்தினார்களே அப்போது முன்னாள் பாரத குடியரசு தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்களை மதித்து அழைத்தீர்களா? இவ்வளவுக்கும் அவர் ஒன்றும் உங்கள் கட்சிக்கும் ஆட்சிக்கும் விரோதி அல்லவே? தி.மு.க வின் விருப்பத்தின் பேரிலும் தானே அவரை அந்த பதவியில் உட்கார வைத்தீர்கள்? ஓய்வு பெற்றுதானே ஒதுங்கி இருந்தார் அவரை அழைத்தீர்களா அந்த செம்மொழி விழாவுக்கு? ஏன் இல்லை என்பதும் எங்களுக்கு தெரியும்.

  // ஒருவன் பிறருக்கு கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக்கொள்கிறான் - இது நானில்லை - ரமணர்//

  இது உங்களின் பதிவின் தலைப்பில் உள்ள வாசகம். மு.க. பிறருக்கு என்ன கொடுத்தாரோ அதை திரும்பவும் பெற்றுகொள்கிறார் என்று கொள்ளலாமா ?
  ஒரு உண்மையை நீங்கள் இன்னமும் புரிந்துகொள்ளவில்லை. சினிமா காரர்கள அப்படித்தான் இருப்பார்கள். இது நாள் வரை அப்படித்தான் இருந்து வருகிறார்கள். யாரோ ஒரு சிலர் மட்டுமே வெளிப்படையாக தங்கள் சார்ந்த அரசியல் கட்சியில் செயல் படுவார்கள். நான் நண்பர் தியாகராஜன்-ஆம்ஸ்டர்டாம் அவர்களின் கருத்தை முற்றிலும் வரவேற்கிறேன். நீங்கள் உங்கள் கட்சி தலைவர் குறித்து சற்று அதிகமாகவே உணர்ச்சி வசப்டுகிரீர்களோ என்று தோன்றுகிறது அதுதேவையா என்றும் கேட்கத்தோன்றுகிறது.

  நட்புடன் கக்கு-மாணிக்கம்

  ReplyDelete
 8. all are income tax evaders &black money holders

  ReplyDelete
 9. மரியாதை செய்ய தெரியாத ஜெயாவை நான் குறை சொல்லவில்லை. ஏனனில் அது கருவின் குற்றம்.
  இதில் எதோ உறுத்தல்

  ReplyDelete
 10. If you Use any resources for your own benefits, you are not fit for Politics and administration! Itherkku mika sariyaana eduthukaattu- Karunanithi, enakku ondre ondru ketkka vendum, Avarukku konjamavathu Manasaatchi yenna ondru irukiratha?

  ReplyDelete
 11. நீங்க நல்லவங்களா?

  ReplyDelete
  Replies
  1. எதிர்க்கட்சியாய் இருக்கும் போது மட்டும்

   Delete
 12. dont waste your time for thritu mk

  ReplyDelete
 13. Unna ellam thiruthave mudiyathu

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))