இது தான் அந்த அழகிய அழைப்பிதழ்! |
ஒரு 48 நாட்கள் முன்பாக நம் இணைய குழுக்களில் தீவிரமாக செயல்படும் தம்பி இளவரசன் அவர்கள் புதுகைக்கு பணி நிமித்தமாக சென்ற போது புதுகை தினகரன் அரசு அண்ணன் அவர்களுடன் புதுகை மாவட்ட செயலர் அன்பு தோழர் திரு. பெரியண்ணன் அரசு அவர்களை சந்தித்து பேசிக்கொண்டு இருந்த போது மாவட்டம் அவர்கள் தன் நீண்ட நாள் விருப்பமான "புதுகையில் ஒரு இணைய பயிற்சிப் பாசறை நடத்தி காட்டாற்று வெள்ளமாக இருக்கும் திமுக இணைய உடன்பிறப்புகளை "வெற்றி" என்னும் ஒரு வழிப்பாதைக்கு திருப்பி விட வேண்டும் என ஒரு ஆசை இருக்கு" என தன் பேச்சினூடில் தெரிவிக்க தினகரன் அரசு அண்ணனும், இளவரசனும் மாவட்டத்துக்கு இன்னும் ஊக்கம் கொடுத்து பேச உடனே மாவட்டம் செய்த வேலை திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் பேராசிரியர் திரு. சுபவீ அய்யாவுக்கு தொலைபேசியது தான். அய்யாவிடம் விஷயத்தை சொல்லி 'நீங்கள் அந்த இணைய பயிற்சிப் பாசறையில் சிறப்புரை ஆற்ற வேண்டும் அதற்கான தேதி கொடுங்கள்' என்ற போது சுபவீ அய்யாவும் உடனே செப்டம்பர் முதல் தேதி 2013 என சொல்ல உடனே புதுகை மாவட்டம் பாசறைக்கான தன் ஒப்புதலை கொடுக்க மாநில செயற்குழு உறுப்பினர் தம்பி கீரை தமிழ்ராஜா, மற்றும் பொதுக்குழு உறுப்பினர் தம்பியண்ணன் எம் எம் அப்துல்லா, தினகரன் அரசு அண்ணன் என புதுகையில் இருந்து இணையத்தில் இயங்கும் தோழர்கள் மாவட்டசெயலர் அவர்களின் ஆணைப்படி சுற்றி சுழன்று பாசறைக்கான ஏற்பாடுகளை தொடங்கினர்.
அதன் தொடர்சியாக நான் மயிலாடுதுறையில் இருந்து புதுகைக்கு அழைக்கப்பட்டேன். புதுகைக்கு எப்போதும் ஒரு தனி சிறப்பு உண்டு. நம் தலைவர் கலைஞரை முதன் முதலாக முதல்வராக ஆக்கிய மாவட்டம் புதுகை. ஆக்கியவர் புதுகை அரிமளம் இராம.சுப்பையா அவர்கள். ஆக்கிய ஆண்டு 1953. என்ன குழப்பமாக இருக்கின்றதா? 1953ம் ஆண்டு நடந்த மும்முனை போராட்டம் தெரியுமா? கல்லக்குடி போராட்டம், குலக்கல்வி எதிர்ப்பு போராட்டம், நேரு தமிழர்களை நான்சென்ஸ் என சொன்னமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவருக்கு கருப்பு கொடி காட்டும் போராட்டம். அந்த மும்முனை போராட்டத்தின் முடிவில் நம் தலைவர் உள்ளிட்ட எல்லோரும் சென்னை சிறையில். அப்போது புதுகை இராம. சுப்பையா அவர்கள், மன்னையார் உள்ளிட்ட சிலர் கூடி சிறையில் ஒரு நிழல் மந்திரிசபை அமைக்கின்றனர். அதில் இவர்கள் தலைவர் கலைஞரை "முதல்வராக " தேர்ந்தெடுத்து அமர வைக்கின்றனர். பின்னர் தனக்கு சிறையில் வரும் சாப்பாட்டை மற்றவர்களுக்கு கொடுத்து விட்டு தான் சிறை உணவை சாப்பிடும் திரு .இராம சுப்பையா அவர்களுக்கு 'உணவு துறை அமைச்சர்' பதவி தருகின்றார் கலைஞர். நீர்ப்பாசன அமைச்சராக மன்னையார் தேர்வு செய்யப்படுகிறார் முதல்வர் கலைஞரால். தினமும் சிறையில் "மாதிரி" சட்டசபை கூட்டம் நாடைபெறுகிறது. அதில் கேள்வி நேரம், 'சீரோ அவர்' எல்லாம் உண்டு. கவனிக்கவும் தோழர்களே, அப்போது இதில் யாருமே எம் எல் ஏ கூட ஆகி இருக்க வில்லை. ஆக அன்றே கலைஞரை முதல்வர் ஆக்கிய மாவட்டம் புதுகை. இன்று அதே புதுகை - காரைக்குடி சுப்பையா அவர்கள் புதல்வர் விழா சிறப்புரை. அன்று தலைவருடன் பல முறை சிறை புகுந்த அண்ணன் பெரியண்ணன் அவர்களின் புதல்வர் இணைய கூட்டம் நடத்தி மீண்டும் கலைஞரை, தளபதியை, ஆட்சியில் அமைக்க அச்சாரம் போடும் விழா "இணைய பயிற்சிப் பாசறை". மிக மிக அருமை.
நான் புதுகை சென்ற அன்று மாவட்டமும், தமிழ்ராஜாவும் சென்னைக்கு தலைவரை சந்திக்க சென்று விட்டு அப்படியே மாவட்ட செயலர்கள் கூட்டத்திலும் கலந்து கொள்ள சென்று விட்டனர். புதுகையில் நானும், இளவரசனும், தினகரன் அரசு அண்ணனும் விழாவை எப்படி நடத்துவது என ஆரம்பகட்ட வேலைகளை முடித்தோம். நடுவே தொலைபேசியில் மாவட்டம் மற்றும் கீரை தமிழ்ராஜா ஆகியோருடன் ஆலோசனை செய்து கொண்டே ஒரு அவுட்லைன் போட்டு முடித்தோம். அப்போது மாவட்டம் அவர்கள் ஒரு உறுதியான முடிவில் இருந்தார். அதாவது இந்த கூட்டத்துக்கு வருபவர்கள் எல்லோருமே கம்பியூட்டர் பயன்பாட்டில் இருப்பவர்கள். இதை ஒரு இண்டலக்சுவல் கூட்டமாக நடத்த வேண்டும். மார்பில் அணிந்து கொள்ளும் பேட்ஜ் கூட 'ஐடி' அலுவலக பாணியில் டேக், கார்ட் ஹோல்டர் என இருக்க வேண்டும், ட்ரஸ் கோட் வேண்டும். ப்ளூ ஜீன்ஸ், வெள்ளை டி ஷர்ட், ஷூ இவைகளுடன் கையில் எல்லோரும் லேப்டாப் என ஒரு 'ஐடி' கார்பரேட் மீட்டிங்கில் இருப்பதை போல இருக்க வேண்டும். ஒரு நாள் முழுக்க நிகழ்வுகள் இருக்க வேண்டும். காலை சிற்றுண்டி, மதியம் நல்ல உணவு, இடையிடையே கட்லெட், பிஸ்கட், டீ, காபி, நல்ல அக்வா குடிநீர் என எல்லா விதத்திலும் உயர்வான தரமாக இருக்க வேண்டும். ப்ரொஜக்டர், பெரிய திரை, லைவ் ரிலே என டெக்னிக்கல் விஷயங்களில் அசத்த வேண்டும். முதல் நாளே 31. 8.2013 மாலையே நண்பர்கள் புதுகை வந்து விட வேண்டும். இரவு சாப்பாடு, ஏ சி அறைகளில் தங்குமிடம் என எல்லா ஏற்பாடுகளும் அருமையாக உயர்ந்த தரத்துடன் இருக்க வேண்டும். அது போல அவர்கள் திரும்பி செல்லும் போது அவர்கள் அனைவருக்கும் 'ஷீல்டு' கொடுத்து கவுரவிக்க வேண்டும். அது போல லேப்டாப் பேக், அதனுள் லெட்டர் பேட், பேனா (இரு வகை), ஒரு திராவிட இயக்க சம்மந்தமான புத்தகம், கீ செயின், தலைக்கு காட்டன் தொப்பி போன்ற பொருட்கள் அது தவிர ஒரு கூட்டத்துக்கு வந்து விட்டு வீட்டுக்கு போகும் போது மனைவியின் கோபம் தணிக்கும் வகையில் அவர்கள் முகம் மலர அவர்களுக்கு தேவையான வீட்டு உபயோகப் பொருள் (என்றதும் ரமனாஸ் கொழுக்கட்டை மாவு அரை கிலோ பாக்கெட் கொடுக்கலாம் என முடிவானது) கொடுக்க வேண்டும் என்பதில் எல்லாம் மிக உறுதியாக இருந்தார். இப்படியாக முடிவானதும் தோழர் சரவணகுமார், மின்னும் மன்னை தோழர் டி ஆர் பி ராஜா, சபேசன் அண்ணன், சீதை பதிப்பகம் கௌரா.ராஜசேகர், நக்கீரன் இணை ஆசிரியர் கோவி.லெனின், கீரை தமிழ்ராஜா, தம்பியண்ணன் அப்துல்லா, சிங்கப்பூர் தோழர்கள் நரசிம்மன் நரேஷ், சார்லஸ் பொன்னையா, வினோத் பாண்டியன், பூபதி,கோவை நவீன்ராஜ் உள்ளிட்ட தோழர்கள் இன்னும் பல தோழர்கள் மற்றும் பலர் கொடுத்த ஊக்குவிப்புக்கும் உதவிக்கும் நன்றி சொல்லி மாளாது.
பின்னர் நிகழ்சி நடைபெறும் நாளின் இடைப்பட்ட அந்த 45 நாட்களில் இந்த நிகழ்சி சம்மந்தமான பரப்புரைகள் இணைய குழுக்களில் "மிகக்திறம்பட" செய்யப்பட்டது. நிகழ்சி நாள் நெருங்க நெருங்க ஒரு வித சந்தோஷ படபடப்பு தொற்றிக்கொண்டது. கிட்ட தட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்ட தோழர்கள் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்தனர். (தவிர சிங்கப்பூரில் இருந்து அந்த தோழர்கள் சார்பாக பூபதி கலந்து கொண்டார். மலேஷியாவில் இருந்து தோழர் அப்துல் ரஷீத் கலந்து கொண்டார். )பின்னர் சென்னைக்கு சென்று மாவட்டமும், தமிழ்ராஜாவும் தலைவரிடமும், தளபதியிடமும் நிகழ்சி நிரலை காட்டி ஆசி வாங்கி வந்தனர்.
தலைவர் கலைஞரிடம் அழைப்பிடழ் கொடுத்த போது! |
கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்தவர்கள் எண்ணிக்கை அதிகமான போது புதுகை மாவட்ட அலுவலகத்தில் இருக்கும் அய்யா "கீரை தமிழ்செல்வன் அரங்கத்தில்" 200 பேர் மட்டுமே அமர முடியும், வரக்கூடிய கூட்டம் அதிகம் இருக்கும் போல் தெரிகின்றது என புதுகை மாவட்ட செயலரிடம் அப்து, ராஜா, தினகரன் அரசு ஆகியோர் முறையிட உடனே மாவட்டம் "செலவை பற்றி கவலை இல்லை. எப்படியும் பகிர்ந்து பார்த்துப்போம். ஒரு மண்டபத்தை பிடியுங்கள் " என சொல்ல 30.8.13 அன்று எஸ்.எஸ் மண்டபம் பிடிக்கப்பட்டது.
31ம் தேதி காலையே தோழர் சரவணகுமார் காரில் ஜெயின்கூபி அண்ணன், மற்றும் கோவி.லெனின் குடும்பத்தினர் கிளம்பியயதும் காலை அவர்கள் எனக்கு போன் செய்த போது மணி 7.10. "நாங்கள் சென்னை ட்ராபிக் தாண்டி செங்கல்பட்டு வந்து விட்டோம்" என சொன்ன போதில் இருந்தே தமிழகம் முழுக்க இருந்து இணைய உடன்பிறப்புகள் தொலை பேசியில் தாங்கள் இந்த இந்த இடத்தில் வந்து கொண்டு இருக்கின்றோம் என தகவல் தந்து கொண்டு இருந்தனர். அது போல வரும் வழியில் தங்கள் வாகனத்தை நிறுத்தி தேனீர் அருந்தும் போட்டோக்களுடன் இணையத்தில் உலவ விட உடனுக்குடன் புதுகை மாவட்டம் அந்த புகைப்படங்களில் "லைக்" போட வருபவர்களுக்கு ஒரே சந்தோஷம். மாவட்டம் தங்களை வரும் வழியில் இருந்தே வரவேற்பதாக அப்படி ஒரு சந்தோஷம்.
மதியம் 12.30 மணிக்கு தோழர் சரவணகுமார் போன் செய்த போது அவர் இருந்த இடம் ஹோட்டல் சத்யா - புதுகை. அது வரை நான் இங்கே மாயவரத்தில் இருந்து கிளம்பவில்லை. நான் கொக்கரக்கோ சௌமியனுடன் கிளம்பும் போது மதியம் 2.30. பின்னர் 3 மணி நேர பயணத்தில் தோழர் ஓ ஆர் பி ராஜா அவர்கள் போன் செய்து தான் புதுகையை நெருங்கி விட்டதாக தெரிவித்தார். அப்போது அரியலூர் மாவட்ட செயலர் திரு எஸ் எஸ் சிவசங்கர் சாருக்கு போன் செய்த போது "இங்கே மினிஸ்டர் வந்தாச்சு. நாளை ஒரு மூன்று திருமணம் முக்கிய திருமணம் இருக்கு. அதனால எப்படியும் மதியம் செஷன்க்கு வந்துடுவேன். புதுகை மாவட்டம் கிட்டே விஷயத்தை மெதுவா சொல்லிட்டேன்" என்றார். அடுத்த நாள் அவர்கள் கலந்து கொள்ள இருக்கும் அந்த திருமணம் டாக்டர் தேவராஜன் என்னும் அதிமுக எக்ஸ் எம் எல் ஏவை, எக்ஸ் அதிமுகவாக ஆக்க இருக்கும் திருமணம் என்பது எங்கள் யாருக்கும் அப்போது தெரியாது:-)))
ஒட்டு மொத்த தமிழக திமுக இணைய தோழர் கூட்டமும் புதுகையை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்தது. டான் அசோக், அவர் தம்பி, சபேசன் சார் , அமர்நாத், தம்பி அழ.பிரபு, வழக்கறிஞர் வைரமுத்து என மதுரை பட்டாளம் ஆர்பரித்து புதுகைக்குள் புகுந்தது. அது போல திண்டுக்கல் ஐ பி கணேஷ் உள்ளிட்ட தோழர்கள் அங்கே இராமநாத புரத்தில் "தளபதி" அவர்கள் கூட இருந்து கொண்டே தோழர் மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் திரு ஐ பி செந்தில் குமார் அவர்கள் ஆணைப்படி நிலவரம் கேட்டு தெரிந்து கொண்டு இருந்தனர். அவர்களும் வந்து கொண்டு இருந்தனர்.
அது போலவே மாநில மாணவர் அணி துணை அமைப்பாளர் திரு.பூவை ஜெரால்டு அவர்களை தொடர்பு கொண்ட போதுஅவரும் அவருடன் சில மாணவர் அணி பொறுப்பாளர்களும் சென்னை ட்ராபிக் தாண்டி விட்டதாகவும் இரவு பத்து மணி வாக்கில் புதுகை வந்து விடுவேன் என்று உற்சாகமாக கூறினார். அம்பத்தூர் அருண், மேட்டுக்குப்பம் ரமேஷ் ராஜ், திருவள்ளூர் மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் மிதுன் சக்ரவர்த்தி, அம்பேத்கார் சட்ட கல்லூரி மாணவர் பேரவை தலைவர் தீபக் (மாணவர் அணி) எல்லோரும் தங்கள் இனோவாவை புதுகைக்குள் நுழைத்தனர்.
நாங்கள் புதுகை வந்து சேர்ந்ததும் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட ராயல் பார்க் ஹோட்டலில் ரீஃப்ரஷ் செய்து கொண்டு சத்யம் ஹோட்டலுக்கு சென்ற போது அங்கே ஒரு அறையில் புதுகை மாவட்டம் திரு. பெரியண்ணன் அரசு, தமிழ்ராஜா, அப்துல்லா, தினகரன் அரசு , சரவண குமார், கோவி.லெனின் எல்லோரையும் பார்த்தோம். எல்லையில்லா மகிழ்ச்சி எல்லோர் முகத்திலும். இன்னும் சிறிது நேராத்தில் அய்யா சுபவீ அவர்களின் கார் அந்த ஹோட்டலுக்கு வரும் என செய்தி மாவட்டத்தின் காதில் யாரோ சொல்ல மாவட்டத்தை தொடர்ந்து எல்லோரும் கீழே வருவதற்கும் அய்யா சுபவீ வந்து சேரவும் மிகச்சரியாய் இருந்தது. அவரை வரவேற்று அவருக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு அழைத்து சென்று விட்ட பின் மாவட்டம் எங்களை பார்த்து "வாங்க எல்லோரும் மண்டபத்துக்கு போகலாம்" என சொன்ன போது கரகாட்டக்காரான் படத்தில் கவுண்டமணியும் ராமராஜனும் "நாளைக்கு ஆடும் தெரு எப்படி இருக்குன்னு பார்த்து வாருவோம்" என சொல்லி கிளம்புவது நியாபகம் வந்தது. மூன்று நான்கு கார்களில் அங்கே சென்றோம்.
அருமையான மண்டபம். அங்கே நாற்காலிகள் அடுக்கி இருந்தன. அதை எடுத்து பிரித்து போடும் வேலையை செய்ய மாவட்டம் முனைந்த போது எனக்கு அதிர்ச்சி. இது தான் திமுக. ஒரு மாவட்ட செயலர் திமுகவுக்காக அதன் நிகழ்சிக்காக தானே முன்னின்று வேலை செய்ய முற்படுவது ... செய்வது...இது ஒரு வகை பயிற்சி. மிசா காலத்தில் கோவை மு.கண்ணப்பன் அவர்கள் தலைவருக்கு கார் ஓட்டவில்லையா? அது போல... திமுக என்றைக்கும் ஆட்சியில் மட்டுமே இருப்பதில்லை. சிறை,போராட்டம், உழைப்பு இதல்லாம் தான் திமுகவினருக்கு நிரந்தரம். ஆட்சி என்பது வந்து வந்து போகும். அதனால் தலைவர் ,தளபதி முதல் ,மாவட்ட செயலர் முதல் அடிமட்ட தொண்டன் வரை போஸ்டர் ஒட்டுவது முதல் மேடையில் வீற்றிருப்பது வரை எல்லாவற்றுக்கும் தன்னை தயார் நிலையிலேயே வைத்திருக்க வேண்டும் என்ற அண்ணாவின் பாலபாடத்தை கற்றவர்கள் நம் மாவட்ட செயலர்கள் என்பதையே அவரின் இந்த செய்கை காட்டியது.
பின்னர் எல்லோரும் வெளியே வந்ததும் அப்துவின் புதுகார் டஸ்டரை ஓட்டி ப்பார்க்க ஆசைப்பட்ட தோழர்கள் அதை ஓட்டிப்பார்த்து வியந்தனர். அது போல அப்துல்லா சௌமியனின் மான்சா காரை என்னை வைத்து ஓட்டிப்பார்த்து "அண்ணே, நீயும் நானும் ஒருவாரம் முன்னே சண்டை போட்டுப்பதா நடிச்சு விழாவுக்கு விளம்பரம் செய்தது பார்த்த நம் தோழர்கள் நாம ரெண்டு பேரும் இப்படி ஒரே காரில் போவது பார்த்து என்ன நினைப்பாங்க?" என கேட்ட போது காரின் பின் இருக்கையில் இருந்த சாரவணகுமார் "ஹூம்... சாரியான திருட்டு பசங்கன்னு நினைப்பாங்க" என கமெண்ட் அடிக்க அந்த இடமே சிரித்து சிரித்து கலகலப்பானது.
பின்னர் அந்த மண்டபத்தில் இருந்து கிளம்பும் முன்னர் மாவட்டம் அப்துவை அழைத்து காதில் ஏதோ சொல்ல அப்து என்னிடம் வந்து "அண்ணே, ஓ ஆர் பி ராஜாவை கொஞ்சம் என்கேஜ் பண்ணிகுங்க. மாவட்டம் , 5ம் தேதி தளபதி புதுகை வரும் வேலையா என்னை கொஞ்சம் காரைக்குடி போக சொல்லி இருக்காங்க, நான் வர எப்படியும் இரவு 12 ஆகும் அது வரை கொஞ்சம் ராஜாவை பார்த்துகுங்க" என சொல்லிவிட்டு மாயமானார்.
பின்னர் நாங்கள் அனைவரும் புதுகை மாவட்ட திமுக அலுவலகமான "பெரியண்ணன் மாளிகை"க்கு சென்றோம். முகப்பில் பெரிய அளவில் தலைவர் படம், தளபதி படங்கள் இருக்க உள்ளே, அருமையான நூலகம், விருந்தினர் அறை, மாவட்ட செயலர் அலுவலகம், கீரை தமிழ்செல்வன் அய்யா அவர்கள் பெயரில் அமைந்த அவைக்கூடம்,
”பெரியண்ணன் மாளிகை”யில் புதுகை மாவட்டத்துடன் இதழாளர்கோவியார் மற்றும் கொக்கரக்கோ சௌம்யன் மற்றும் நான்! |
தளபது திறந்து வைத்த நூலகத்தில் குறிப்பெழுதும் மூத்த இதழாளர் கோவியார் |
புதுகை மாவட்ட செயலர் அலுவலகத்தில் நாங்கள்! |
மாவட்டம் அவர்கள் அதை எல்லாம் எங்களுக்கு சுற்றி காண்பித்து கொண்டே விளக்கி கூறிவிட்டு அங்கே இருந்த புகைப்படங்கள் அவர்கள் கட்சிக்காக செய்த தியாகங்கள், வகித்த பதவிகள் என சொல்லிக்கொண்டே வந்தார். நூலகத்தில் சுமார் 6000 பொக்கிஷங்கள் இருந்தன. திராவிட புத்தகங்கள் மட்டுமல்ல ஆரிய வகைகள் நம்மை எதிர்த்து எழுதும் எழுந்தாளர்கள் புத்தகங்கள் கூட இருந்தன. ஐ ஏ எஸ் போன்ற தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கான புத்தகங்கள் கூட இருந்தன. தினம் தினம் வரும் முரசொலி பல வருட முரசொலிகள் பைண்ட் செய்யப்பட்டு இருந்தன. அந்த நூலகத்துக்கு வருகை தந்த அனைத்து திமுக முன்னோடிகளும் அந்த நூலக லாக் புக்கில் தங்கள் கருத்துகளை எழுதி வைத்திருந்தனர். முதல் பக்கத்தில் தளபதி தன் கருத்துகளை தன் கைப்பட ஒரு பக்கத்துக்கு எழுதி கையெழுத்திட்டு இருந்தார்.
.
அந்த மாவட்ட அலுவலகத்தை பார்வையிட்டு முடிந்த பின்னர் தன் அருகில் இருந்த பாலு என்னும் திமுக தோழரை மாவட்டம் அழைத்து ஒரு ஹோட்டல் பெயரை சொல்லி "ஒரு பத்து பதினைந்து பேர் சாப்பிட வருகிறோம், இடம் கொஞ்சம ஒதுக்கி வைக்க சொல்" என சொல்லி அனுப்ப நாங்கள் பின்னர் அங்கு மாவட்டத்துடன் அங்கு சென்றோம். அது மாயவரம் தட்டி மெஸ் போன்ற ஒரு ட்ரடிஷனல் ஹோட்டல். உள்ளங்கை அளவு பரோட்டா. ஓ ஆர் பி ராஜாவும் நானும், ஜெயின்கூபீ அண்ணனும் மீண்டும் மீண்டும் அந்த பரோட்டா பற்றி சிலாகித்து பேசிக்கொண்டு இருந்தோம். மாவட்டமும், கொக்கரக்கோ சௌம்யனும், சரவணகுமாரும், கோவி லெனினும் ஒரு டேபிளில் மென்மையாக சாப்பிட்டு கொண்டு காரசாரமாக ஏதோ விஷய விவாதத்தில் இருந்தனர். ஒரு கட்டத்தில் மாவட்டமும், கொக்கரக்கோ சௌம்யனும், கோவி.லெனின் அவர்களும் ஒரே சமகாலத்தில் பூண்டி புஷ்பம் கல்லூரியில் படித்தவர்கள் என்பதும் கீரை தமிழ்ராஜா இவர்கள் கல்லூரி விட்டு வெளியேறிய பின்னர் அங்கு நுழந்த அடுத்த செட் எனவும் தெரிந்து கொண்டு அந்த பழைய கல்லூரி காலத்துக்கு சென்றனர். ஒரு அருமையான சாப்பாடு முடிந்த பின்னர் எல்லொரும் மீண்டும் சத்யா ஹோட்டலுக்கு வந்து கோவியார் குடும்பத்தினரை சந்தித்தோம். தங்கை பிரதீபா, எங்கள் செல்ல மருமகள் நிலா ஆகியோரிடம் பேசி விட்டு நானும், சரவணகுமார், ஓ ஆர் பி ராஜா , சௌம்யன் ஆகியோர் மீண்டும் ராயல் பார்க் வந்தோம். அங்கே மேட்டுக்குப்பாம் ரமேஷ்ராஜ், மிதுன், மலேஷியா ரஷீத், சட்ட கல்லூரி பேரவை தலைவர் தீபக், ஜெயின் அண்ணன், என எல்லோரும் அந்த ஹோட்டலில் மொட்டை மாடிக்கு வந்து காற்றோட்டமாக பேசிக்கொண்டும் சிரித்து கொண்டும் இருந்த போது அப்துல்லாவும் பின்னர் கீரை தமிழ்ராஜாவும், தினகரன் அரசு அண்ணனும் வந்து சேர்ந்து கொள்ள விடிகாலை 3 மணி வரை பேசிக்கொண்டு இருந்தோம். அதே ஹோட்டலில் அண்ணன் ஒப்பிலாமணி உள்ளிட்ட பலர் ஒரு குழுவாகவும், மற்ற மற்ற ஹோட்டல்களில் தங்கி இருந்தவர்கள் தனித்தனி குழுக்களாகவும் பேசிக்கொண்டு இருக்கும் போதே மின்னும் மன்னை குழுவினர் மற்றும் தஞ்சை ஏ பி எஸ் அசோக்குமார் உள்ளிட்ட தஞ்சை குழுவினர் வந்து விட்டனர். தஞ்சை வி எஸ் கே செந்தில் மதுரைக்கு போய்விட்டு அங்கிருந்து வந்து சேர்ந்து விட்டார். அது போல கோகுல் காங்கேயம் சென்னையில் இருந்து விடிகாலை 4 மணிக்கு வந்து சேர்ந்தார்.
பின்னர் எல்லோரும் உறங்க சென்று விட்ட பின்னர் நானும் உறங்க சென்றேன். நான் காலை ஏழு மணிக்கு கண் விழிக்கும் போது சௌம்யன் குளித்து முடித்து விட்டு தன் லேப்டாப்பில் இணையத்தில் உலவிக்கொண்டு இருந்தார்.
செப்டம்பர் முதல் தேதி. திமுகவுக்கு உகந்த மாதம் பிறந்தது. மணி ஏழு ஆனதால் அவசரமாய் குளித்து முடித்து நானும் கொக்கரக்கோ சௌம்யனும் கிளம்பி எஸ் எஸ் மண்டபத்துக்கு சென்றோம். மாவட்டம் சொன்ன ட்ரஸ் கோட் படி நீல வர்ண ஜீன்ஸ் எங்கும் எங்கும் எங்கும் மண்டபம் முழுக்க.
கூட்டத்தில் எங்கள் கடமையை நாங்கள் செய்யும் போது (இணைய பணி) |
வரவேற்பு இடத்தில் புதுகை மாணவர் அணி செல்வங்கள் சிலர் புதுக்கோட்டை திமுக மாணவர் அணி அமைப்பாளர் முல்லை முபாரக் தலைமையில் எல்லோரிடமும் மினிட் புத்தகத்தில் பெயர், முகவரி, செல்பேசி எண், இ மெயில் முகவரி மற்றும் கையொப்பம் பெற்றுக்கொண்டு அவரவர் அளவுக்கான வெள்ளை நிற, கருப்பு சிவப்பு பார்டர் இரு கைகளில் போட்ட நெஞ்சில் தலைவர் மற்றும் தளபதி படம் போட்ட டி ஷர்ட் கொடுத்து கொண்டு இருந்தனர். அப்போது கருப்பு சிவப்பு டாக் ம் நம் பெயர் போட்டு கழுத்தில் மாட்டப்பட்டது. மண்டபத்தில் எங்கு திரும்பினாலும் ஜீன்ஸ், டி ஷர்ட், கழுத்தில் அடையாள அட்டை, காலில் ஷூ சகிதம் நம் உடன்பிறப்புகள் ஜெகஜோதியாய் நீக்கமற நிறைந்து இருந்தனர். இவைகளை வாங்கி அணிந்த பின்னர் எல்லோரையும் கீழ்தளத்தில் இருந்த சாப்பிடும் இடத்துக்கு அழைத்து செல்ல ஒரு மாணவர் அணி குழு வேலை செய்து கொண்டு இருந்தது.
அங்கே சாப்பிட செல்லும் முன்னர் மண்டபத்துக்கு வெளியே நின்று கொண்டு இருந்த நம் திமுக குழுக்களிடம் யாரோ ஒரு நடுநிலை மனிதர் 'ஏன் எல்லோரும் ஜீன்ஸ், டி ஷர்ட் அணிந்து இருக்கீங்க?" என கேட்க, ஒரு உடன்பிறப்பு "அதாவதுங்க... இன்னிக்கு கல்லூரிகளில் இனி ஜீன்ஸ், டி ஷர்ட் அணிந்து வரக்கூடாதுன்னு ஜெயா உத்தரவு போட்டாங்கல்ல, அதுக்கு எதிர்ப்பு தெரிவித்து இங்கே ஜீன்ஸ், டி ஷர்ட் போட்டு போராட்டம் நடத்துறோம்" என குறும்பாய் சொன்னார். அதிகாலையிலேயே பேப்பர் படிக்கும் ஆட்கள் அல்லவா நாம்.
காலை சிற்றுண்டி பரிமாறும் இடத்தில் மாவட்டம் திரு. பெரியண்ணன் அரசு அவர்கள் நின்று கொண்டு எல்லோரையும் உபசரிக்க தொடங்கினார். "இது அசோகா அல்வா, ரொம்ப நல்லா இருக்கும் இன்னும் கொஞ்சம் வச்சிகுங்க" என ஆரம்பித்து வரிசையாக இட்லி, பொங்கல், பூரி,வடை என திக்குமுக்காட செய்தார் மாவட்டம். அங்கே புதுக்கோட்டை திமுக இளைஞர் அணியினர் அந்த பரிமாறும் வேலையை கச்சிதமாக செய்ய மாநில மாணவர் அணி துணை செயலர் திரு.பூவை ஜெரால்டு அவர்கள் உள்ளே நுழைய அவரை சுற்றிலும் மாணவர் அணி தோழர்கள் குழுமிக்கொண்டனர். இரவு 10 மணிக்கு வந்து சேர்ந்த அவரை நான் அப்போது தான் சந்தித்தேன். இருவரும் பரஸ்பரம் விசாரித்து விட்டு நகர மாணவர் அணி கூட்டம் அவர் பின்னால் சென்று மேலே கூட்டம் நடக்கும் இடத்துக்கு செல்ல அங்கே அய்யா சுபவீ அவர்கள் உள்ளே நுழைந்தார். பின்னர் பூவை ஜெரால்டு அவர்களும் சுபவீ அய்யாவும் பேசிக்கொண்டெ வந்து முதல் வரிசையில் அமர்ந்தனர்.
பேராசிரியர் உடன் மிதுன், மேட்டுக்குப்பம் ரமேஷ் ராஜ்! |
இப்படி காலை சிற்றுண்டி முடிந்து மணி சரியாக 8.40க்கு எல்லோரும் கிட்ட தட்ட வந்து விட நானும் சரவண குமாரும் தினகரன் அரசு அண்ணனும் எங்கள் லேப்டாப் சகிதம் புரஜக்டர் பக்கத்தில் சென்று தனியே அமர்ந்து எங்கள் முழு கவனத்தையும் மேடை நோக்கி குவித்தோம். மேடையில் காலை செஷனில் பேச வேண்டிய மாநில மாணவர் அணி துணை அமைப்பாளர் பூவை ஜெரால்டு, கொக்கரக்கோ சௌம்யன், O.R.B.ராஜா, தம்பியண்ணன் புதுகை அப்துல்லா, கோவி.லெனின், கோவை மாநகர திமுக செயலர் அண்ணன் திரு.வீரகோபால் ஆகியோர் மற்றும் வரவேற்புரை வழங்க இருந்த கீரை. தமிழ்ராஜா , ஆகியோருடன் தலைமை உரை நிகழ்த்த இருந்த மாவட்ட செயலர் புதுக்கோட்டை திரு.பெரியண்ணன் அரசு மற்றும் விழா சிறப்புரை ஆற்ற வந்த திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் பேராசிரியர் அய்யா சுப.வீ ஆகியோர் மேடை ஏறினர். சரியாக ஒன்பது மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்தும் பின்னர் செம்மொழி வாழ்த்தும் இசைக்கப்பட எல்லோரும் எழுந்து நின்று மரியதை செலுத்தி வணங்கினோம்.
அப்போது வரை மினிட் புத்தகத்தில் ஒப்பம் இட்டோர் எண்ணிக்கை 295 ஆக இருந்தது. (மொத்தம் வந்தது 448 பேர்) .
முதலில் வரவேற்புரை நிகழ்த்திய கீரை தமிழ்ராஜா முகத்தில் ஏக சந்தோஷம்.
சின்ன ஆற்காட்டார் என எங்களால் அழைக்கப்படும் கீரை தமிழ் ராஜா! |
அன்று காலை மீடியா பேட்டியின் போது! |
பின்னர் புதுக்கோட்டை மாவட்டம் தலைமை உரை ஆற்ற வந்தார். அவருடைய நினைப்பு எல்லாமே மாவட்ட மாநில திமுகவின் முன்னேற்றம் என்பது மட்டுமே இலக்கு. அஃப்கோர்ஸ்... எல்லா மாவட்ட செயலரும் அப்படித்தான். இவர்கள் பேச மாட்டார்கள். பேச வைத்து அழகு பார்ப்பார்கள்.ஆனாலும் இவர் பேசினார்.... மிக அழகான ஒரு தலைமை உரை. ஏனனில் இவரால் வளர்த்து விடப்பட்ட "சின்ன ஆற்காட்டார்" இவருடைய சட்டையை பிடித்து பின்னால் இருந்து இழுப்பாரோ என்கிற பயமா அது? இல்லை... தான் வளர்த்த ஆற்காட்டார் தன் வேலையை சரியாக செய்கின்றாரா என சோதிக்கும் பாசறை இது. இதை படிக்கும் நடுநிலை வாசகர்களே, உங்களுக்கு எங்கள் "ஆற்காட்டார்" பற்றி தெரியாது. அவர் ஒரு கூட்டத்தை அழகுபட நடத்தும் விதம் உங்களுக்கு தெரியாது. அவர் "சட்டை பிடித்து இழுக்காத திமுக பெருந்தலைகள் இங்கே கிடையாது. (ஒரு சமயம் தன் முன்னுரை பேசும் போது தன் சட்டையை தானே பிடித்து இழுத்து கொண்டார் எனில் பார்த்துகுங்க அவர் கடமை உணர்ச்சியை)அதனால் அவரை கோவித்து கொண்டவர்கள் யாரும் இல்லை. ஏனனில் அவர் பேராசிரியர் , தலைவர் ஆகியோரின் குரல். அது போல புதுக்கோட்டை மாவட்ட எங்கள் சின்ன ஆற்காட்டார் தன் கடிகாரம் பார்க்கும் படி வைக்கவில்லை மாவட்டம். முடித்து விட்டார்.
புதுகை மாவட்டத்தின் மாண்புமிகு உரை! |
அது போல "காம்பியரிங்" செய்ய மாணவர் அணி, இளைஞர் அணி என இருவரை ஏற்பாடும் செய்து இருந்தனர். அடுத்து "கொக்கரக்கோ சௌம்யன்" "இணையமும் கழகமும்" என்ற தலைப்பில் பேசுவார் என சொன்ன போது நான் அனிச்சையாக கைதட்டினேன். தான் ஆடாவிட்டாலும் தன் எலும்பு ஆடுமே:-))
கொக்கரக்கோ சௌம்யனின் உரை! |
கொக்கரக்கோ சௌம்யன் .... என் தம்பி... இதில் எனக்கு பெருமை எப்போதும் இருந்தது இல்லை. ஆனால் தலைவரை , நம் தளபதியை யாராவது ஒரு சுடு சொல் சொன்னால் பொங்கி எழுவதும், சில சமயம் பலப்பிரயோகம் வரை போவதும் தான் அவரைப்பற்றி எனக்கான பெருமை. பேச ஆரம்பித்தார். மனசு திக்... திக்..
ஒரு திமுக காரனுக்கே உண்டான ப்ரோட்டோகால் பேச்சு.... யார் வரவேற்புரை, யார் தலைமை, யார் சிறப்புரை... இப்படியாக அவருக்கு கொடுக்கப்பட்ட 30 நிமிடத்தில் 9 நிமிடம் போனது. "சரிடா பாய்ண்டுக்கு வா" என மனசு கூவியது. பின்னர் பேச்சை தொடர எனக்கு கொஞ்சம் நிம்மதி. ஒரு 40 நிமிடங்கள். திக்கல் இல்லாமல் திணறல் இல்லாமல் பேசி முடித்த போது நான் ஒரு பாட்டில் தண்ணீர் குடித்து கீழே வைத்தேன். மிக அருமையான கருத்துகள் வைத்தார். நான் சௌமியின் பேச்சை கவனிக்கவில்லை. சுபவீ அய்யா தனக்கு கொடுக்கப்பட்ட குறிப்பேடுகளில் குறிப்பு எடுத்து கொண்டதை கவனித்தேன். புதுக்கோட்டை மாவட்டம் சிரித்து கை தட்டியதை பார்த்தேன். "அட ஆமாம் தானே" என மாநில மாணவர் அணி துணை செயலர் கைதட்டியதை பார்த்தேன். 40 நிமிடம் பேசி முடிந்ததும் மேடையில் இருப்பவர்கள் சௌமிக்கு கை கொடுத்து பாராட்டியதை கவனித்தேன். பல சமயம் பாரதிதாசன் பல்கலை கழகம், சில கல்லூரிகளில் செமினார் பேசி முடிந்ததும் அங்கே கொடுத்த செக் கொண்டு வந்து கொடுப்பான். அப்போது எல்லாம் எனக்கு வராத ஒரு ஆர்வம் இதில் எனக்கு கிடைத்தது. ஏனனில் இது நாம் இந்த அளவு நிற்க காரணமாக இருந்த திராவிட கூட்டம் ஆயிற்றே!
கொக்கரக்கோ சௌம்யன் பேச்சில் ஒரு இடத்தில் "இணைய போராளிகளை தளபதி உற்பத்தி செய்து காட்டாற்று வெள்ளமாக திறந்து விட்டார். அதை பாசனத்துக்கு பயன் படுத்த இதோ புதுகை மாவட்டத்தில் அணை கட்டப்பட்டு விட்டது. அடுத்தடுத்த மாவட்டங்கள் கடைமடைக்கும் சென்று சேரும் விதமாக பாசன வாய்க்கால் கட்டி விட வேண்டும்" என சொன்னது மனதுக்கு பிடித்தது. அது போல கலைஞரை, பாரதியார் கண்ணனை சொன்னது போல "கலைஞர் என் காதலன், கலைஞர் என் கணவன், கலைஞர் என் மனைவி, கலைஞர் என் தாத்தா, கலைஞர் என் அப்பா, கலைஞர் என் அம்மா, கலைஞர் என் சாகோதரன், கலைஞர் என் சகோதரி, எல்லாத்துக்கும் மேலாக கலைஞரே என் தெய்வமும் கூட" என சொன்னபோது நானும் கூட்டத்தின் கைத்தட்டலில் கலந்தேன். அது போல சுபவீ அய்யாவை சொல்லும் போது " இந்த துரோணாச்சாரியாரிடம் வித்தை கற்ற ஏகலைவன்கள் பலரில் நானும் ஒருவன். நான் ஒரு திருடன். ஏனனில் அவருக்கு குருதட்சினை கொடுக்காமல் அவர் கருத்துகளை திருடிக்கொண்டு இருக்கிறேன்" என சொன்னதும் சுபவீ அய்யா சிரித்து கொண்டதும் என் மனதை கவர்ந்தது. கொக்கரக்கோ சௌம்யன் சொன்ன கருத்துகளில் ஒன்று "நாம் தினமும் டெய்லி அபயர்ஸ் செய்தி போட்டு பரவலாக்க வேண்டும். இதோ கடந்த ஒரு வாரத்தில் நம்மை எதிர்த்து எழுதும் பத்திரிக்கைகளுக்கு அரசு போடும் தீனி 12 கோடி ரூபாய். இதை நான் சொல்லவில்லை, கலைஞர் அவரது முகநூலில் சொல்லி இருக்கின்றார். அதை அவரும் சொல்லவில்லை... சரியான சோர்ஸ் அரசாங்க குறிப்பேடு பார்த்து சொன்னார். இது இன்றைய செய்தி" என சொன்ன போது தான் அந்த கொக்காரக்கோ ஏன் விடிகாலை விழித்து இணையத்தில் உலாவியது என புரிந்தது. போகட்டும்... அடுத்து பார்ப்போம்...
மேலும் அவருடைய பேச்சு என்ன என்பது பற்றி நான் இங்கே விலாவாரியாக பேசக்கூடாது. ஏனனில் இது திமுக இணைய பயிற்சிப் பாசறை. அவர் பல கருத்துகளை சொன்னார். இது இந்த பதிவுக்கு தேவை இல்லை.ஏனனில் இதை நான் பொதுவெளியில் பகிர்கின்றேன். அதனால் இத்துடன் போதும்!
அடுத்து மீண்டும் நம் சின்ன கீரையார். வந்து பேச அழைத்தது நண்பர் ஓ ஆர் பி ராஜா!
திரு. ஓ ஆர் பி ராஜா அவர்களின் உரை! |
ராஜாவின் பேச்சு என்பது தனி ஸ்டைல். அவர் பேசிய பேச்சு இன்னும் பத்து வருடம் கழித்து இதை நான் என் வலைப்பூவில் போட்டு சேமித்து வைத்து பின்னர் மீள் பதிவாக போடும் போது கூட பலருக்கு புரியலாம். ஆனால் அவர் பேசிய பேச்சில் குறிப்பிட வேண்டிய விஷயம் இரண்டு.
1. தம்பியண்ணன் என எல்லோரும் அப்துல்லாவை கூப்பிடுவது சரி. ஆனால் அதுக்கு காபிரைட் என்னிடமே உள்ளது. ஏனனில் அந்த பெயரை உண்டாக்கியதே நான் தான். (ஓக்கே ஓக்கே பாணியில் சொல்லப்போனால் ஃபேக்டு, ஃபேக்டு ஃபேக்டு)
2. சௌமி அண்ணன் புனைப்பெயர் கொக்கரக்கோ. அது நம் அண்ணா எழுதிய சிறுகதையின் பெயர். அப்போது அண்ணாவின் புனைப்பெயர் "சௌம்யன்" . ஆனால் இந்த சௌம்யன் அண்ணன் உண்மை பெயரே அது தான்!இவர் வலைப்பூவின் பெயர் "கொக்கரக்கோ"
இப்படியாக ராஜா பேசிய பின்னர்... நம் தம்பிஅண்ணன் பேச ஆரம்பித்தார்!
ப்ரோட்டோகால் முடித்தார்....
தம்பியண்ணன் புதுகை எம் எம் அப்துல்லா உரை! |
அடுத்து, டிஜிட்டல் சேகர் திருப்பூர் ஒரு எழுச்சி பாடல் பாடினார். அந்த பாடல் எங்கள் அனைவரையும் கவர்ந்தது.
டிஜிட்டல் சேகரின் பாட்டு! |
மாணவர் அணி மாநில துணை அமைப்பாளர் திரு பூவை ஜெரால்டு அவர்கள் மாலை செஷனிலும் "ஆன் ஸ்டேஜ்" என்பதால் அவருக்கு முன்னர் சிறப்பு பேச்சாளர்களில் ஒருவரான நக்கீரன் இணை ஆசிரியர், திராவிட இயக்க சிந்தனையாளர் திரு கோவி லெனின் அவர்களை பேச அழைக்க மாவட்டம் முடிவு செய்தார். அடுத்து சின்ன ஆற்காட்டார் , சின்ன கீரையார் தமிழ்ராஜா அவர்கள் கோவியாரை பேச அழைத்தார்!
மூத்த இதழாளரும் நக்கீரன் இணை ஆசிரியருமாகிய கோவியார் உரை! |
கூட்டம் கைத்தட்டி முடிந்த பின் வழக்கம் போல திருச்சி மாவட்ட இணைய அணி பொன்னாடை போர்த்தி மரியாதை செய்த பின் பேச ஆரம்பித்தார்.
ப்ரோட்டோக்கால் பேச்சு முடிந்ததும் " அட என்னப்பா எல்லோருக்கும் அழைப்பிதழில் கருப்பு சிவப்பு, சுபவீ அய்யாவுக்கு கருப்பு சிவப்பு அதை சூழந்து நீலம்... சரி போகட்டும்.. ஆழி சூழ் உலகுக்கு உள்ளே கருப்பு சிவப்பு.. எனக்கு ஏன் பச்சை நிறம்??? சரி .. நான் சிறுபான்மை இன மக்களுக்கான நிறமாக அதை வைத்து கொள்கிறேன், என் இஸ்லாமிய சமூக தோழர்களுக்கான நிறமாக அதை எடுத்து கொள்கிறேன் என ஆரம்பித்த போது அரங்கம் எழுந்து நின்றது. கை தட்டியது. அவரை ஆரத்தழுவ ஆசைப்பட்டது. பேச ஆரம்பித்தார்.
"ஒரே மாவு... உளுந்தும், அரிசியும் கொண்ட மாவு, அதை தோசை ஊத்தலாம், இட்லி சுடலாம், ஊத்தப்பம் சுடலாம்... எல்லாமே சௌமி சுட்டு விட்டார்..." என சொன்ன போதும் கைதட்டல். அழகாய் பேசினார். சௌமி ஊத்தினது இட்லி, அப்துல்லா, ராஜா எல்லாம் தோசை, நைஸ் என இருக்கும் போது இவர் ஊத்தப்பம் ஊற்றினார். "எனக்கு கொடுக்கப்பட்ட தலைப்பு "நவீன ஊடங்களில் திராவிட இயக்கம்" இது தானே. நவீன ஊடகம் எனில் அது "நெட்" அதாவது இணையம். , அடுத்து திராவிட இயக்கம் எனில் அது திமுக தானே, ஆக மாவு ஒன்று தான்! என சொன்ன போது கூட்டம் மீண்டும் கைதட்டியது.
அவர் பேச்சில் பொதுவெளியில் சொல்ல முடிந்தவைகளை மட்டும் சொல்கிறேன். குறிப்பாக "ஒரு நாள் கலைஞர் ஆட்சியில் சுபவீ அய்யா விடிகாலை பேசினார். "என்ன அய்யா, இத்தனை அதிகாலையில் என்றேன். "ஒரு முக்கிய விஷயம் நான் உடனடியாக உங்கள் கோபால் அல்லது காமராஜை தொடர்பு கொள்ள வேண்டும்"என சொன்னார். நான் உடனே எங்கள் இணை ஆசிரியர் காமராஜ் அண்ணனுக்கு இவரை தொடர்பு செய்தேன். ஒரு முக்கியமான ஆள் ஈழத்தில் இருந்து வந்துள்ளார். அவரை ராமேஸ்வரம் பக்கத்தில் ஒரு தீவில் வைத்து இருக்கின்றோம், அவரை ஒரு நாட்டில் ஒப்படைக்க வேண்டும்" என கோரிக்கை. .............................................................................................................................. அந்த மனிதர் போக வேண்டிய இடத்துக்கு அழகாய் இந்திய கடற்படை பிடிக்காமல், சிங்கள அரசு பிடிக்காமல் போக வேண்டிய இடத்துக்கு போனார். இது எத்தனை சீமான்களுக்கு, நெடுமாறன்களுக்கு தெரியும்,எத்தனை வைக்கோவுக்கு தெரியும்........என்றார்.
கோவி லெனின் அவர்கள் பேச்சு என்பது..... ஒரு மடை திறந்த வெள்ளமாக பாய்ந்து கொண்டு இருந்தது. நான் அவரையே பார்த்து கொண்டு இருக்கிறேன். அவர் பேச்சில் ஒரு தடை... கூட்டம் சலசலப்பு..... புதுக்கோட்டை மாவாட்டம் தன் இரு கை நீட்டி க்கொண்டு இருக்கின்றார்....
மத யானை திரு ஐ பி எஸ் செஞ்தில் குமார் உள்ளே நுழைகையில்! |
அந்த புயல் வருகின்றது. மாணவர் அணி துணை செயலர் பூவை ஜெரால்டு அவர்களை பார்க்கின்றேன். அவர் தன் சக தோழனை கண்டு ஆனந்த புன்னகை பூக்கின்றார். ஒரு புயல் வருகின்றது மேடை நோக்கி... தன் தோழர்களுடன் வந்து திண்டுக்கல் ஐ பெ, செந்தில் குமார் என்னும் மாநில இளைஞர் அணி துணை செயலர் வருகின்றார். மேடை நோக்கி போய் தன் இருக்கையில் அமர்கின்றார். புதுக்கோட்டை மாவட்டம் கையில் தமிழ்ராஜா ஒரு டி ஷர்ட் கொடுக்க அதை மாவட்டம் அவர்கள் ஐ பி எஸ் அவர்களுக்கு கொடுக்க அதை அங்கேயே தன் சட்டை கழட்டி விட்டு அணிகின்றார். "மன்னிக்க வேண்டும் உங்கள் பேச்சில் இடையூறு செய்தமைக்கு, எனக்கு ஒரு 4 திருமணம் நிகழ்சி முடித்து விட்டு தளபதியை ரயில் ஏற்றி விட்டு வர தாமதம் ஆகிவிட்டது" என கோவி லெனின் பார்த்தும் சுபவீ அய்யா பார்த்தும் சொல்கிறார்.
கோவியார் பேச்சு தொடர்கிறது! "ஒரு சில வார்டுகளில் ஒரு வேளை உணவு குறைந்த விலைக்கு விற்கும் ஒருவர் அன்னலெஷ்மி எனில் மூன்று வேளைக்கும் குறைந்த விலையில் உணவளிக்கும் சோனியாவை மணிமேகலை என சொல்வதில் என்ன குறை கண்டீர்?" என்கிறார். சரி.... கோவியார் பேச்சில் எனக்கு மனதில் தைத்த மேலும் ஒரு விஷயம் மட்டும் சொல்லி முடிக்கிறேன்.
"திமுகவில் அவுட்சோர்ஸ் முறையில் பேச்சாளார் வேண்டாம். ஒபாமா இந்தியனை எடுப்பது போல வேண்டாம்.(உடனே கூட்டத்தில் சிலர் பாக்கியராஜ், ராஜேந்தர், வடிவேலு என சொன்னார்கள்) நாம் இங்கே உண்டாக்குவோம் பேச்சாளர்களை" என சொன்னார். கோவியாரை ஏன் சிறப்பு பேச்சாளர் ஆக அழைத்தார் புதுக்கோட்டை மாவட்டம் என அப்போது புரிந்தது. அருமையான பேச்சு!
இதை படிக்கும் வாசகர்களே உங்களுக்கும் இது உடன்பாடு என்றே நினைக்கிறேன். ஏனனில் நாம் பேச்சாளர்களை "நட்சத்திரமாக" ஆக்கிய பரம்பரை. நன்னிலம் நடராசன், வெற்றி கொண்டான், விடுதலை விரும்பி, தீப்பொறியார், இப்போது ஆ.ராசா அண்ணன், திருச்சி சிவா அண்ணன், பேராசிரியர் சபாபதி மோகன் அண்ணன் இப்படியாக நாம் நட்சத்திர பேச்சாளர் உண்டாக்கிய காலம் போக நாம் ஏன் இப்போது நட்சத்திரங்களை பேச்சாளர் ஆக்க வேண்டும்? நாம் ஏன் உற்பத்தி செய்யக்கூடாது? என்ற வினா என் மனதில் எழும் போது... புதுக்கோட்டை மாவட்டம் மைக் முன்னர் வந்து "இத்துடன் இந்த காலை நிகழ்வுகள் முடிந்தன. அடுத்து மதிய உணவு. பின்னர் 2 மணிக்கு மாலை நிகழ்வுகள் தொடரும்" என சொன்னார்.
காலை செஷன் முடிந்தது. நான் அவ்வப்போது பதிவுகள் போட்டுக்கொண்டு இருந்தேன். பலரும் ஆசைப்படும் திண்டுக்கல் ஐ .பெ . செந்தில்குமார் அவர்கள் மேடையை விட்டு இறங்கி நேராக என்னிடம் வந்து கொண்டு இருக்கின்றார் என எனக்கு தெரியாது. நான் கம்பியூட்டரில் மூழ்கி இருந்தேன். வந்து "அபிஅப்பா, நான் உங்களை சந்திக்க மிக ஆர்வமாக இருந்தேன்" என சொல்லி கட்டி அணைத்த போது..... ஒரு எளிய திமுக தொண்டனுக்கு தளபதியின் பிரதிநிதியாக வந்திருப்பவர் என்னிடம் வந்து நலம் விசாரிப்பது.... திமுகவில் மட்டுமே நடக்கும்.... இது தான் திமுக... நான் சாகும் வரை திமுக என்பதுக்கு மேலாக செத்த பின்னும் என் வாரிசுகள் திமுக தான் ... வார்தைகள் வரவில்லை தோழர்களே... மன்னிக்கவும்....
இதோ மதிய உணவுக்கு செல்வோம் வாசகர்களே! அதற்கு முன்னர் மாலை செஷனில் மதுரை வழக்கறிஞர் வைரமுத்து அவர்கள் பேசியதை வரிவடிவில் காணுங்கள்.
மதுரை வழக்கறிஞர் வைரமுத்துவின் போர் பிரகடனம்! |
\"மேடையில் வீற்றிக்கும் ஆன்றோருக்கும், இணையத்தால் இணைந்து என் இதயத்தில் நிறைந்திருக்கும் இணையதள உடன்பிறப்புகளுக்கும் முதற்க்கண் என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மண் ஐயா பெரியண்ணன் வாழ்ந்த மண். நெருக்கடிநிலை காலத்தில் மிசா சட்டத்தில் திருச்சி சிறையில் அடைபட்டுக் கொண்டிருந்து, தன்னை காண வந்த தாயார் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்து விட்டார் என்ற செய்தி தெரிந்தும் தன் சொந்த தாய்க்கு இறுதி அஞ்சலி கூட செலுத்த இயலாமல் திருச்சி சிறையிலே இருந்த தியாகத் திருமகன் ஐயா பெரியண்ணனின் புதுக்கோட்டை மண்ணிலே நின்று பேசுவதிலே மிக பெருமை அடைகிறேன்.
(இந்த இடத்தில் ஐயா கீரை தமிழ்ச்செல்வன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் க. வீரையா உள்ளிட்ட புதுக்கோட்டை மாவட்டக் கழக முன்னோடிகள் பெயரையும் குறிப்பிட்டு மரியாதை செலுத்த இருந்ததாக சொன்னார் பின்னர் என்னிடம். நேர நெருக்கடியால் இயலவில்லையாம்)
கடந்த சட்டமன்ற தேர்தலில் ஏற்ப்பட்ட தோல்வியை புயன்படுத்தி நம்மை முற்றிலும் அளித்து விட வேண்டுமென்று ஆரிய ஊடகங்கள் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்றன. தேர்தல் அரசியலில் வெற்றியும் தோல்வியும் சதுரங்க விளையாட்டு போல் தான். ஆனால் நம் தி.மு.க கொள்கையின் மீது கட்டப்பட்டுள்ள கோட்டை. இதை யாரும் அளித்து விட முடியாது. ஆரிய ஊடகங்களின் பொய்யான பரப்புரைகளை இணையத்தில் நாம் நாள்தோறும் சந்தித்து முறியடித்து வருகிறோம்.
1967 தேர்தலில் வென்றவுடன் பேரறிஞர் அண்ணாவிடம் இந்த வெற்றியை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். அதற்கு அண்ணா "நான் தி.மு.கவை அழகிய பூந்தோட்டமாக வளர்க்க நினைத்தேன். ஆனால் இன்று பெருங்காடாக வளர்ந்து விட்டது. இதன் வளர்ச்சியில் எனக்கு மகிழ்ச்சி என்றால் கட்டுபாட்டோடு இருக்க வேண்டுமே என்ற கவலை வருகிறது. இனி மேல் யாராலும் தி.மு.கவை தோற்கடிக்க முடியாது. தி.மு.க வை தி.மு.க தான் தோற்கடிக்க முடியும்" என்று சொன்னார்.
அந்த அரசியல் தீர்க்கதரிசியின் வார்த்தைகள் இன்று வரை பலிக்கிறது. நமது பங்காளிகள் தான் பகையாளிகளாக மாறி நம்மிடமிருந்து ஆட்சியை பிடித்திருக்கிறார்கள். இன்று இணையத்திலும் இதே நிலை தான். நாம் அசுர வளர்ச்சி அடைந்திருக்கிறோம் என்றாலும் ஒற்றுமை நமக்குள் மிக அவசியம். நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் செங்கோட்டையில் அமர்வது யார் என்பதை நம் செம்மொழித் தலைவர் சுட்டிக்காட்டிய அந்த 2004 வரலாறு மீண்டும் 2014இலும் நிகழும். நாளை நமதே. நாற்பதும் நமதே. நாடும் நமதே.
அதே போல் 2016 சட்டமன்ற தேர்தலிலும் நாம் வெற்றிக்கனியை பறித்து தலைவர் கலைஞரின் காலடியிலே தருவோம். எப்படி காஷ்மிரத்திலே பருக் அப்துல்லா வென்று உமர் அப்துல்லாவை முதல்வர் ஆக்கினாரோ, எப்படி உத்தரப் பிரதேசத்திலே முலாயம் சிங் வென்று அகிலேஷ் சிங்கை முதல்வர் ஆக்கினாரோ அப்படி நம் தளபதியாரை முதல்வர் ஆக்கும் வரை நமக்கெல்லாம் ஓய்வில்லை !ஓய்வில்லை !! ஓய்வில்லை !!!
வாய்ப்புக்கு நன்றி. வணக்கம்". \\
இப்போது பிரியாணி விருந்துக்கு செல்வோமா????
இணைய பயிற்சிப்பாசறை பாதி கிணறு தாண்டி விட்ட மனோநிலை, மீதியும் அதி முக்கியமான இரண்டாவது செஷன் கண்டிப்பாக நல்ல படி நடக்கும் என்றும் என் உள் மனது சொல்ல கீழ் தளத்துக்கு சாப்பிட நானும் சரவணகுமாரும், டான் அசோக் உள்ளிட்ட நண்பர்களும் சென்றோம். அப்போது மணி மதியம் 1 ஆனது. காலை 9 முதல் 1 மணி வரை போனதே தெரியவில்லை. ஒரே இடத்தில் அமர்ந்து இருந்தேன். நடு நடுவே காபி, தேனீர், பிஸ்கட், கட்லட், அக்வா தண்ணீர் என இருக்கும் இடத்துக்கே வந்து விட்டபடியால் ஒரே இடத்தில் அமர்ந்த காரணத்தால் வருகை தந்த நண்பர்களை பார்க்க இயலவில்லை. கால்கள் மரத்து போய் இருந்தது. எழுந்து நடந்து கீழ் தளத்துக்கு போன போது தஞ்சை வி எஸ் கே என்கிற செந்தில் குமார், ஏ பி எஸ் அசோக்,ராஜாகுப்பம் முருகானந்தம், நந்தா சேலம் உள்ளிட்ட சேலம் தோழர்கள், கோவை இனியவன், கோவை ரவிக்குமார் உள்ளிட்ட கோவை தோழர்கள் உள்ளிட்டோரை பார்த்து நலம் விசாரித்து கொண்டே போனேன். நண்பர்கள் கூட்டம் கூட்டமாக நின்று புகைப்படம் எடுத்து கொண்டு அதை தங்கள் முகநூலில் ஏற்றிக்கொண்டும் இருந்தனர். தோழர் கோவி. லெனின் பொறாமைப்படும் விஷயம் என்னவெனில் அவரை விட வருங்கால மகளிர் அணி எங்கள் செல்ல மருமகள் நிலாவுக்கு ரசிகர்கள் அதிகம் இருந்தனர்:-)) நிலோவோடு போட்டி போட்டு கொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். பாவம் குழந்தை மிகவும் கலைத்து விட்டது. தன் சுடிதார் மேலேயே பாயிற்சி பாசறை டி ஷர்டும் அணிந்திருந்தது குழந்தை.
கீழே அப்துல்லா, கீரை தமிழ்ராஜா, முல்லை முபாரக் ஆகியோரே இப்போது நேரிடையாக பரிமாறினர். நம் முன்னாள் எம் பி ஜனாப் ஜி. எம். ஷா அவர்களின் பையன் வந்திருந்தார். அவர் அப்துல்லாவிடம் "நீங்களே ஏன் தம்பி பரிமாறிகிட்டு இருக்கீங்க? யாரையாவது செய்ய சொல்லி கிட்ட இருந்து மேனேஜ் செய்யலாமே?" என கேட்க நான் அப்போது தான் அந்த இடத்தை கடந்து சென்றேன். என் அவசரம் எனக்கு. பந்திக்கு முந்திக்கனும் என்ற பழமொழியை செயல்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன். எனக்கு துணையாக டான் அசோக். இருவரும் அமர்ந்து விட்டு பாதி பிரியாணி முடிக்கும் போது தான், கூட வந்த கொக்கரக்கோ சௌம்யன், சரவணகுமார் ஆகியோர் இடம் தேடிக்கொண்டு இருந்தது நியாபகம் வந்தது. இப்போது மெனுவை சொல்லி உங்களை உசுப்பேத்த வேண்டும். மட்டன் பிரியாணி, சிக்கன் வறுவல், வெங்காயம் தயிர் ரைத்தா, தயிர் சாதம், உருளை கிழங்கு வறுவல், தேங்காய் சாதம், கூழ் வடகம், ஊறுகாய் என தடபுடல். மாவட்டம் அவர்கள் ஒவ்வொறு தலைவாழை போராளிகளிடமும் வந்து இன்னும் போடுகிறேன் என சொல்லி சொல்லி கவனித்து கொண்டே பின்னர் டிஜிட்டல் சேகர்,தினகரன் அரசு உள்ளிட்டோரோடு அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தார்.
ம்திய உணவு! |
நான் சாப்பிட்டு கொண்டு இருக்கும் போதே சிங்கப்பூரில் இருந்து போன். நரேஷ் தான். மெனு என்ன என கேட்டு விட்டு "ஒரு சேதி சொல்லனும். நாங்க இங்க சிங்கப்பூர்செயல்வீரர்கள் ஒரு கேமிரா வாங்கி எங்கள் சிங்கை நண்பர் பூபதி கிட்டே கொடுத்து அங்கே அனுப்பி இருக்கோம். அந்த கேமிரா திமுகவின் எல்லா நிகழ்வுகளுக்கும் சென்று புகைப்படம் எடுத்து இணையத்தில் ஏற்றி எல்லோரும் கண்டு மகிழ காரணமாக இருக்கும் திரு.ஜெயின் கூபீ அண்ணனுக்கு சிங்கை செயல்வீரர்கள் சார்பாக ஒரு பரிசாக தர இருக்கோம். அதை மாவட்டம் கையால மேடையில் தரனும்" என சொன்னார். நானும் "ஓக்கே நரேஷ், உடனே கீரை தமிழ்ராஜா காதில் இதை போடுகிறேன்" என சொல்லிக்கொண்டே வாயில் ஒரு பெரிய மட்டன் பீஸ் போட்டுக்கொண்டேன். அந்த மெனுவை நரேஷ் உடனடியாகபதிவாக போடுவார் என நான் அப்போது நினைக்கவில்லை:-) பின்னர் பார்த்து தெரிந்து கொண்டேன்!
மதுரை மாவீரர்களுடன் அண்ணன் ஜெயின் கூபீ அவர்கள்! |
சாப்பிட்டு முடிந்து வெளியே வந்து வெளிக்காற்று வாங்க மண்டப வாயிலில் நானும் ரா. அசோக், சபேசன் சார் உள்ளிட்ட சிலர் நின்று கொண்டு இருந்த போது ஒரு "குடிமகன்" எனக்கு ஒரு டி ஷர்ட் கொடுக்க கூடாதா? என அலப்பரை செய்து கொண்டு இருந்தார். அவருக்கு தன் டி ஷர்ட் கழட்டி கொடுத்தார் ரா. அசோக். பின்னர் 2 மணிக்கு மாலை செஷன் ஆரம்பிக்க இருந்தமையால் எல்லோரும் அவரவர் இடத்துக்கு சென்று அமர சென்று கொண்டு இருந்த போது அரியலூர் மாவட்ட தோழர்கள் அரங்கன்தமிழ் உள்ளிட்ட சிலர் அவர்கள் மாவட்ட செயலர் திரு எஸ்.எஸ். சிவசங்கர் சாருக்கு போன் செய்து கொண்டு இருந்தனர். அவர்களுக்கு அரியலூர் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் திரு. லூயி கதிரவன் லைவ் ரிலே செய்து கொண்டு இருந்தார். "இதோ மினிஸ்டர் ராசா அண்ணன் கிளம்பியாச்சு, இதோ நாங்கள் திருவையாறு தொட்டாச்சு. இதோ தஞ்சை நுழைந்தாகிவிட்டது... என சொல்லிக்கொண்டே இருக்க அரியலூர் மற்றும் பெரம்பலூர் தோழர்கள் பெரிய குழுவாக தனியாக நின்று கொண்டு அவரை வாசலில் இருந்து வரவேற்க கொஞ்சம் படபடப்புடன் காத்திருந்தனர். அதே போல மின்னும் மன்னை தோழர் டி ஆர் பி ராஜா அவர்கள் வருகைக்காக மன்னை ராஜா கார்த்திக், வடுவூர் ஏ ஜி கதிரவன்,ஆரூர் அஜ்மல்கான் உள்ளிட்ட அவரது மாவட்ட தோழர்கள் தோழர் டி ஆர் பி ராஜா அவர்களின் சகோதரருடன் வெளியே நின்று கொண்டு காத்திருந்தனர்.
மாலை செஷன் ஆரம்பம் ஆனது. மேடையில் சென்று மாவட்டம் அமர்ந்த பின்னர் சுபவீ அய்யா, கோவி.லெனின் உள்ளிட்ட எல்லோரும் மேடைக்கு செல்ல பயிற்சிப் பாசறை மீண்டும் ஆரம்பம் ஆனது. முதலில் புதுகை மாவட்டம் பேசி விட்டு அமர கீரை தமிழ்ராஜா மதுரை வழக்கறிஞர் திரு. வைரமுத்து அவர்களை பேச அழைத்தார். ஒரு தீப்பொறி போன்ற பேச்சு அது. அவர் பேசிய பேச்சுகளின் வரி வடிவத்தை முன்பே இங்கு கொடுத்தேன். அதன் பின்னர் திருப்பூர் கார்திக் Trp அவர்கள் பேசி முடித்தார்.
அதன் பின்னர் நம் இணைய தோழர் சென்னை திரு சிவானந்தம் அரசன் பேசினார்.
அண்ணன் சிவா நந்தம் அரசன் அவர்கள் சிற்றுரை! |
அடுத்த சிறு நிமிடங்களில் அரியலூர் தோழர்கள் எழுந்து நிற்கும் போதே தெரிந்து விட்டது.
உள்ளே நுழையும் அன்பான அரியலூர்! வ்ரவேற்று அழைத்து வரும் சின்ன கீரையார்! |
இப்போது கீரை தமிழ்ராஜா அவர்கள், தளபதி அவர்களின் கேடயம், மாணவர் அணி மாநில அமைப்பாளர் திரு கடலூர் புகழேந்தி அண்ணனின் போர்வாள் , மாணவர் அணி மாநில துணை அமைப்பாளர் திரு. பூவை ஜெரால்டு செங்குட்டுவன் அவர்களை பேச அழைத்தார்.
மா நில மாணவர் அணி துணை செயலர் திரு பூவை ஜெரால்டு அவர்களின் முழக்கம்! |
மதயானை முழக்கம்! |
அடுத்து நம் தளபதியின் முக்கிய தளகர்த்தர், தளபதியின் சார்பாக அவரின் பிரதிநிதியாக இந்த பயிற்சி பாசறைக்கு வந்திருந்த மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் திண்டுக்கல் ஐ. பெ. செந்தில்குமார் அவர்கள் வந்து மைக் பிடித்தார். கிட்ட தட்ட 70 நிமிடங்கள். நயாகரா அருவியாக, ஆழிப்பேரலையாக, பொங்கி வரும் சுனாமியாக, அப்படி ஒரு பேச்சு. பெரியாரில் பேச்சை தொடங்கினார். சுயமரியாதை, சமூகநீதி, அண்ணா, கலைஞர், தளபதி என இவர் அன்று தொடாத தலைப்புகளே எதுவும் இல்லை. இணையம் பற்றி மிகவும் விரிவாக பேசினார். வலைப்பூ, ட்விட்டர், பேஸ்புக், அழிந்து போன ஆர்குட், யாகூ குழுமங்கள், கூகிள் குழுமங்கள், கூகிள் பிளஸ் என இவர் தொடாத விஷயங்கள் இல்லை. கூகிள்ல் தேடினால் எது கிடைக்கும், எப்படி கிடைக்கும் என எல்லாம் சொன்னார். வலைப்பூ பற்றி பேசும் போது நான் எழுதிய வலைப்பூக்கள் இப்போது அல்ல நாம் ஆட்சியில் இருந்த காலத்திலேயே எதிராளிகளுக்கு வலைப்பூவில் கொடுத்த பதிலடிகள் பற்றி சொன்ன போது நான் நெகிழ்ந்து போனேன். ஆக இணையத்தில் ஆரம்பத்தில் இருந்து தோழர் ஐ பி எஸ் படித்து வருவது எல்லோருக்கும் புரிந்தது. அடுத்து இது போன்ற பயிற்சி பாசறை திண்டுக்கல் மாவட்டத்தில் நடத்துவது பற்றி திண்டுக்கல் மாவட்ட செயலரிடம் பேசப்போவதாக கூறினார். 70 நிமிடங்காள் எப்படி போயின என யாருக்கும் தெரியவில்லை. கூட்டம் சிறிது கூட அசையாமல் கேட்டது அவருடைய பேச்சை. பேசி முடித்து அமர்ந்ததும் அரங்கம் முழுக்க கைத்தட்டல்.
ஒரு மிகச்சிறந்த பேராசிரியர் போல பயிற்றுவிக்கும் தோழர் டி ஆர் பி ராஜா அவர்கள் |
அடுத்து மின்னும் மன்னை தோழர் டி ஆர் பி ராஜா பேச ஆரம்பிக்கும் முன்னே அவரால் தயாரிக்கப்பட்ட பவர்பாயிண்ட் பிரசண்டேஷன் மிகப்பெரிய திரையில் ஓட ஆரம்பித்தது. ஒரு தேர்ந்த மேலான்மை படிப்புக்கான பேராசிரியர் மாணவர்களுக்கு பாடம் எடுப்பதை போல அருமையான பேச்சு. பேச்சு முழுக்க சிரிப்பலைகள். அவர் பேச்சு முழுமையும் இங்கே போட இயலாது. மீண்டும் சொல்கிறேன். அந்த பேச்சில் பாதிக்கும் மேலாக இணைய பொதுவெளியில் பகிர முடியாத பயிற்சி பாசறைக்கு வந்தவர்களுக்கான் பிரத்யேக பேச்சு. அதனால் அந்த பேச்சில் இருந்த ஹைலைட்ஸ் மட்டும் சில.
* பேஸ்புக், ட்விட்டர், கூகிள் பிளஸ், வலைப்பூ இவற்றில் கூகிள் பிளஸ் சிறிய கூட்டம் மட்டுமே கொண்டது. அதனால் உங்கள் நேரத்தை அதில் விரயம் செய்ய வேண்டாம்.
* பேஸ்புக்கில் கூட்டம் அதிகம், அதை விட ட்விட்டர் ரீச் அதிகம். வட இந்திய தலைவர்கள் அனைவரும் ட்விட்டரில் தான் இருக்கின்றனர். அதனால் அங்கே வாருங்கள். (இதை சொல்லும் போது நான் அங்கே தனியா கிடந்து அல்லாடிகிட்டு இருக்கேன். நீங்களும் துணைக்கு வாங்க என சொன்ன போது சிரிப்பலை)
* முட்டாள்களிடமும், அதிமுககாரர்களிடமும் விவாதிக்காதீர்கள். (இரண்டுமே ஒன்று தான் என்றார்) ஏனனில் நம் புத்திசாலித்தனத்தை அவர்கள் மொக்கையாக்கி விடுவர். எனவே உங்களை விட புத்திசாலி என நினைப்பவர்களிடம் மட்டுமே விவாதம் செய்யவும். அவன் கிட்டே இருந்து நமக்கு சில பாயிண்ட்ஸ் கிடைக்கும்
*அதிமுக காரனை இணையத்தில் பார்த்தால் ஸ்டேஷனில் குத்துகாலித்து உட்காந்து இருக்கும் பிக்பாக்கெட்காரனை காரணம் தெரியாமலே ஏட்டய்யா, எஸ் ஐ என எல்லோரும் தலையில் அடிப்பது போல "ஜனநாயக" முறையில் ஒரு ப்ளாக் பட்டனை தட்டுங்கள்:-))
*நடுநிலை மற்றும் புது வாக்காளர்களை கவர்ந்து கொண்டு வாருங்கள் நம் திமுக பக்கம்
* இணையத்தில் மூழ்கிவிடாமல் ஒரு நாளைக்கு இத்தனை மணி நேரம் என்று மட்டும் இருந்து கொண்டு குடும்பத்தையும், வேலையையும் கவனிக்க வேண்டும். நாம் குடும்பத்தை ஒதுக்கினால் நம்மை குடும்பம் ஒதுக்கிவிடும் அபாயம் உள்ளது.
* செய்தியை நீட்டாக சொல்லாமல் சின்னதாக சொல்லி பழகுங்கள். இது அவசர உலகம். அதனால் யாருக்கும் படிக்க நேரம் இருக்காது.
* படம் போடுங்கள். காமடியாக படம் போடுங்கள்.நாகூர் ஜலால் என்னும் தோழர் போல அருமையாக படம் போடுங்கள். அதிலேயே கமெண்ட் இருக்கட்டும். சில காமடி படங்களுக்கு வசனம் கூட தேவை இல்லை. இதோ இந்த படத்தை பாருங்கள். {கூட்டம் எழுந்து நின்று சிரித்தது. சிலர் விழுந்து விழுந்து சிரிக்க மேடையில் அமர்ந்தவர்களுக்கு அந்த பெரிய திரையில் இருந்த படம் தெரியவில்லை. "என்னப்பா அது படம்? எங்களுக்கு தெரியலையே?" என அரியலூர் மாவட்டம் கேட்க அந்த படம் மேடையில் காட்டப்பட மேடையில் தண்ணீர் குடித்து கொண்டு இருந்த சுபவீ அய்யாவுக்கு தண்ணீர் மூக்கில் ஏறிவிட்டது.}
இப்படியாக அவர் பேச்சு முழுக்க சிரிப்பலைகள். வெயிட் வெயிட்... அது என்ன படம் என எனக்கு போன் செய்து கேட்க வேண்டாம், சொல்லிவிடுறேன். அவர் காட்டிய படத்தில் கேப்டன் விசயகாந்து ஒரு கம்பியூட்டர் மானிட்டர் முன்பு அமர்ந்து சீரியசாக வேலை பார்த்து கொண்டு இருந்தார்:-)))) கிட்ட தட்ட தோழர் டி ஆர் பி ராஜா அன்று ஒரு "சின்ன துரைமுருகனாக" ஆனார் அன்றைய கூட்டத்தில்:-)
அடுத்து நீங்கள் மற்றும் நாங்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்த அரியலூர் மாவட்ட கழக செயலாளர், குன்னம் சட்டமன்ற உறுப்பினர், இணைய முன்னோடி, அருமையான, சுவாரஸ்யமான எழுத்துக்கு சொந்தக்காரர், திரு.எஸ்.எஸ் சிவசங்கர் சார் பேச எழுந்தார்.
அரியலூருக்கு புதுகையின் மரியாதை இது! |
திருச்சி மாவட்ட இணைய தோழர்கள் சார்பாக பொன்னாடை மரியாதை செய்த பின் மாவட்ட கழகம் சார்பாக புதுக்கோட்டை மா.செ அவர்கள் மரியாதை செய்து ஷீல்டு கொடுத்த பின் பேச்சை துவங்கினார்.
"கடைசியாக பேச வருபவர்களுக்கு இருக்கும் பிரச்சனை, பேச விஷயம் எதுவும் இருக்காது" என ஆரம்பித்தாலும் புதுப்புது சுவாரஸ்ய தகவல்கள் கொட்டினார். அதை விட முக்கியம் அவர் வந்து அமர்ந்த பின் பேசிய திரு.பூவை ஜெரால்டு, திரு ஐ பி எஸ், திரு டி ஆர் பி ராஜா ஆகியோர் பற்றி அரியலூர் மாவட்டம் பேசியது தான். "நான் இந்த மூவரும் பேசியதை முன்பு பார்த்துள்ளேன். ஆனால் இவர்கள் இன்று பேசியது வேறு விதம். ஜெரால்டு அவர்கள் புள்ளி விபரங்களோடு இன்று பேசியது தான் இது வரை அவர் பேசியதில் உச்சம். மிக அருமையான பேச்சு. அது போல தம்பி செந்தில்.... பராசக்தி சிவாஜி அண்ணன் பேசியது போலவே உணர்ந்தேன். அது போல ராஜா சட்டமன்றத்தில் பேசியும் சில கூட்டங்களில் பேசியும் நான் பார்த்தது உண்டு. ஆனால் இன்று ஒரு கல்லூரி பேராசிரியர் போல அத்தனை ஒரு அருமையாக பாடம் நடத்தினார்" என்று சொன்னார். பின்னர் சுபவீ அய்யா, கோவி .லெனின் ஆகியோரை பற்றி சொன்னார். எனக்கு கொடுக்கப்பட்ட தலைப்பு "காலத்தால் மாறிவரும் களப்பணிகள்". இந்த தலைப்பை பார்த்து விட்டு அபிஅப்பா "அருமையான தலைப்பு சார்" என சொன்னார். 1940 களில் நமக்காக நம் திராவிட இயக்கத்துக்கான பத்திரிக்கைகள் ..." என சொல்லிவிட்டு"குடியரசு, விடுதலை, திராவிடன், திராவிடநாடு, முரசொலி, முத்தாரம், தோழன், நகரதூதன், போர்வாள், தாய்நாடு, குயில், இனமுழக்கம், தென்றல்,தென்னகரம், தாரகை, தன்னாட்சி, தனியரசு, மாலைமணி.... ஊஃப் ... கல்லூரி காலங்களில் படிக்க சொன்னாலெ படிக்க மாட்டோம், அதுவும் இங்கே சிறப்புரையோ பேராசிரியர் சுபவீ அய்யா அவர்கள்... அவர்கள் முன்னர் எப்படி பேசுவது என பேசினார்.
அரியலூரின் அசத்தல் பேச்சு! |
அன்று மாலை 7.30க்கு தஞ்சையில் இருந்து ''உழவன் எக்ஸ்பிரஸ் தொடக்க விழா'' இருப்பதால் சீக்கிரம் வந்து விடுமாறு தஞ்சை மா.செ அண்ணன் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் அவர்கள் தஞ்சை இணைய தோழர்களுக்கு சொல்லி இருந்தார். ஆனால் மணி அப்போது 5.23 ஆனது. ஆனாலும் கூட்டம் கலையவில்லை. ஏனனில் கூட்டத்தின் முக்கிய பயிற்சியே அய்யா சுபவீ அவர்களின் பேச்சு தானே! (பின்னர் அவர்கள் சரியான நேரத்துக்கு தஞ்சை சென்று கலந்து கொண்டது தனி விஷயம்)
திருச்சி மாவட்டம் சுபவீ அய்யாவுக்கு செய்யும் மரியாதை! |
மதுரை அஞ்சா நெஞ்சன் பை பாஸ் பால. சிவக்குமார் அவர்கள் பேராசிரியருக்கு மரியாதை! |
அய்யா சுபவீ அவர்கள் பேச்சை தொடங்கியதும் திருச்சி மாவட்ட இணைய தோழர்கள் சார்பாக பொன்னாடை மற்றும் மாவட்ட கழகம் சார்பாக மரியாதை ஷீல்டுகள் என எல்லாம் முடிந்து அய்யா பேச்சை தொடங்கும் போது மணி 5.30
திராவிடத்தென்றலின் முழக்கம்! |
அய்யா பேச ஆரம்பித்ததுமே "எல்லோருக்கும் தலைப்பு கொடுத்து இருக்காங்க, சௌமிக்கு "இணையமும் கழகமும்", அப்துல்லாவுக்கு "இணையத்தில் கழக வரலாறு" , கோவி.லெனின் அவர்களுக்கு "நவீன ஊடகங்களில் திராவிட இயக்கம்", தம்பி ஐ பி எஸ்க்கு "இணையமும் இளைஞர்களும்", தம்பி ராஜாவுக்கு "இணையத்தில் பிரச்சார யுக்தி", தம்பி ஜெரால்டு "மாணவர் அணியின் இணையத்தில் பங்கு பற்றி பேசினார், அரியலூர் மாவட்ட கழகம் தம்பி எஸ் எஸ் எஸ் அவர்கள் "காலத்தால் மாறி வரும் கழக களப்பணிகள்" என பேசினர். ஆனால் இதிலேஒரு விஷயம் என்னவெனில் இவர்கள் எல்லோருக்கும் இணையம், கணினி எல்லாம் தெரியும். அதனால் தலைப்பு கொடுத்து பேச சொல்லிவிட்டு புதுக்கோட்டை மாவட்டம் எனக்கு கம்பியூட்டர் இவர்கள் அளவு தெரியாது என்பதால் எது வேண்டுமானாலும் பேசட்டும் என "சிறப்புரை"ன்னு சொல்லிட்டார் போலிருக்கு" என்றதும் கூட்டம் சிரிக்க ஆரம்பித்தது. சிரிப்பில் ஆரம்பித்து பின்னர் சிந்திக்க பல விஷயங்கள் பேசினார் அய்யா அவர்கள். அவரே பேராசிரியர், அவருக்கு வலைப்பூ இருக்கின்றது.... இருப்பினும் தன்னடக்கமாக ஆரம்பித்து கூட்டத்தை தன் பக்கம் இழுத்து வந்து விட்டார். தமிழருவி மணியன் காங்கிரசில் இருந்த போது காங்கிரஸ் ஈழ மக்களுக்கு செய்தமை, அப்போது இவர் வாய்மூடி மௌனியாக இருந்தமை போன்ற ஈழ விஷயங்கள் அதிகம் பேசினார். "எனக்கு ஏகப்பட்ட ஏகலைவர்கள் இருப்பதாக சொன்னார்கள். இது பெருமையான விஷயம் என்றார். இணையத்தை விட்டு விலகி விடாதீர்காள், அதற்காக இனையத்தில் தொலைந்து விடாதீர்கள் என்றார். மோடி ஒரு பைஜாமா போட்ட ஜெயலலிதா, ஜெயாலலிதா ஒரு சேலை கட்டிய மோடி என ஒரே போடாக போட்டார். அது போல கலைஞர் தோளில் விழுந்த மாலைகளை விட முதுகில் விழுந்த கத்தி குத்துகள் அதிகம் என்றார். விடிகாலை ஒரு முக்கிய விஷயமாக போன் செய்த போது தலைவரே எடுத்து"என்னய்யா வீரபாண்டி, இத்தனை அதிகாலையிலே பேசுற, எதுனா முக்கிய விஷயமா?" என கேட்டதை அய்யா அவர்கள் கரகர குரலில் கலைஞர் போலவே பேசிக்காட்டினார். தலைவர் குரலை கேட்டதும் கூட்டம் ஆர்பரித்தது.
பயிற்சி பாசறையை மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்த புதுக்கோட்டை மாவட்ட செயலர் திரு.பெரியண்ணன் அரசு அவர்களை "ஒரு சிறந்த செயல் வீரன்" என பாராட்டினார். அது போல அரியலூர் மாவட்டம் பேசும் போது 1940 களில் இருந்த திராவிட பத்திரிக்கைகள் பெயர்களை சொல்லி அவை 40 என்றார். இல்லை மொத்தம் 134 பத்திரிகைகள் என்று சொல்லிவிட்டு (குடியரசு, விடுதலை, திராவிடன், திராவிடநாடு, முரசொலி, முத்தாரம், தோழன், நகரதூதன், போர்வாள், தாய்நாடு, குயில், இனமுழக்கம், தென்றல்,தென்னகரம், தாரகை, தன்னாட்சி, தனியரசு, மாலைமணி, நம்நாடு, பிறப்புரிமை, நக்கீரன், அண்ணா, தென்புலம், மன்றம், முல்லை,,நீட்டோலை, புதுவாழ்வு,தம்பி, மக்களாட்சி, அறப்போர், அன்னை, முன்னணி, காஞ்சி, பகுத்தறிவு, உரிமை,வேட்கை, மக்களரசு, தீப்பொறி, ஈட்டி, திராவிடஸ்தான், தமிழரசு, தென்னரசு,,திராவிட ஏடு, அருவி, பொன்னி, ஞாயிறு, பூம்புகார், வெள்ளி வீதி, கனவு,அமிர்தம், தஞ்சை அமுதம், தென்னாடு, முன்னேற்றம், தீச்சுடர், களஞ்சியம்,திருவிடம், பூமாலை, சங்கநாதம், எரியீட்டி, புரட்சிக்குயில், திருவிளக்கு ) அவைகளின் ஆசிரியர் யார்? எந்த ஊரில் இருந்து வெளிவந்தது எனவும் சொன்னார். மேடையில் இருந்த சிவசங்கர் சார் என்னைப்பார்த்தார். இருவரும் கண்களால் சிரித்து கொண்டோம். அது தான் பேராசிரியர் துரோணர் சுபவீ அய்யா... அவருக்கு முன்னர் நம் போன்ற மாணவர்கள் எம்மாத்திரம் என சொல்வது போல இருந்தது சிவசங்கர் சாரின் சிரிப்பு. பேராசிரியர் சுபவீ அய்யா முத்தாய்ப்பாக "இந்த பத்திரிக்கைகளில் இப்போது உயிரோடு இருப்பது என்றும் இருக்க போவது முரசொலி மட்டுமே. ஏனனில் அதை நடத்துபவர் அப்படி" என முடிக்கும் போது கூட்டத்தில் "கலைஞர் வாழ்க, முரசொலி வாழ்க, திமுக வெல்க" என்னும் குரல்கள் ஓங்கி ஒலித்தன. அய்யா சொன்னதில் ஆயிரம் அர்த்தங்கள்.
முடிவாக "நாம் இணையத்தில் சௌமி சொன்னது போல குழு குழுவாக அதாவது "ப்ரொடக்ஷன் டீம், டிஸ்ட்ரிபியூட்டிங் டீம், விவாத குழு என பிரிந்து செயல்பட வேண்டும் என பேசி முடித்தார். கூட்டம் ஆர்பரித்து கை தட்டியது. அய்யா பேச ஆரம்பித்து முடிக்கும் வரை என் தொலைபேசி வழியே மயிலாடுதுறையை சேர்ந்த வாஷிங்டன் சிவா அவர்கள் அமரிக்காவில் இருந்து கொண்டே சுபவீ அய்யாவின் பேச்சை கேட்டார். இதை பின்னர் நான் சுபவீ அய்யாவிடம் மேடையில் சொன்னேன். மகிழ்ந்தார். பின்னர் என்னிடம் "பேராண்மை படத்துக்கான என் கலைஞர் தொலைக்காட்சி விமர்சனம் சௌமி பேசியது எனக்கு வேண்டுமே, என் மெயில் முகவரிக்கு அந்த லிங் அனுப்ப இயலுமா என கேட்டுவிட்டு அய்யா அவரது மெயில் ஐடி கொடுத்தார். (இன்னும் அனுப்பவில்லை. இன்று அனுப்ப வேண்டும்)அது போல சுல்தான் இப்ராகிம், அபுல்பசர், நரசிம்மன் நரேஷ், பொன்னையா சார்லஸ் ஆகியோர் கூட்டம் நடக்கும் போது பலமுறை போனில் தொடர்பில் இருந்து விஷயம் கேட்டு கேட்டு (மெனு முதல் அத்தனையையும்) பதிவு இட்டுக்கொண்டு இருந்தனர்.
என் கடமை! |
அடுத்து இந்த பயிற்சிப்பாசறை நடக்க ஆரம்பம் முதல் ஒரு மண்டலம் மிகச்சிறப்பாக நடைபெற காரணமாக இருந்த தினகரன் அரசு அவர்கள் நன்றியுரை பேச அழைக்கப்பட்டார். முதல் நாள் இரவில் பேசிக்கொண்டு இருக்கும் போது "எனக்கு ரொம்ப பேச தெரியாது. எப்படி பேசுவதுப்பா நன்றியுரை" என அண்ணன் தினகரன் அரசு கேட்ட போது தோழர் மிதுன் "ரொம்ப சிம்பிள். "பாசறைக்கு வந்தவர்களுக்கு லைக், மேடையில் பேசியவர்களுக்கு கமெண்ட், புதுக்கோட்டை மாவட்ட செயலருக்கு ஒரு ஷேர், இத்துடன் நான் லாக் அவுட் செய்து நன்றியுரையை முடித்துகொள்கிறேன்" என சொல்லுங்க என்றார். எல்லோரும் சிரித்தோம். என்ன ஒரு டைமிங் பாருங்க நம் தோழர்களுக்கு! ஆனால் அப்படி இல்லாமல் எல்லோருக்கும் தனித்தனியே நன்றி சொன்னார் தினகரன் அரசு அவர்கள்.
வீரபாண்டியாரின் போர்வாள்கள்! |
சிவசங்கர் சார் பேசும் போது அப்துல்லா எங்கோ போனார் என்றேனே.... நம் இணைய நண்பர் கோவையை சேர்ந்த ராயல் செந்தில் அவார்களுக்கு மிதமான நெஞ்சு வலி இருந்ததை கேள்விப்பட்டு உடனே தக்க நேரத்தில் மருத்துவமணைக்கு கொண்டு சேர்த்து கூட இருந்து காப்பாற்றி... இந்த விஷயம் யாருக்கும் விழா முடியும் வரை தெரியாமல் கடப்பாரையை முழுங்கியது போல சிரமப்பட்டு சிரித்து கொண்டு அவரை நல்லபடியாக ஊருக்கு அனுப்பினார். நான் கலங்கின விஷயம் இது என்றால் மிகையாகாது. இப்போது திரு ராயல் செந்தில் அவர்கள் பூரண உடல் நலத்துடன் இருக்கின்றார். கோவை இனியவன், டிஜிட்டல் சேகர், இக்னேஷியஸ் இளங்கோ, கோவை ரவிக்குமார், நவீன்ராஜ் போன்ற கோவை நண்பர்கள் ஒத்துழைப்பு இந்த விஷயத்தில் நன்றி சொல்லி மாளாது. அது போல ஆரம்பம் முதல் இந்த பாசறைக்கு உழைத்த திரு இளவரசன் அவர்களுக்கு கூட்டம் நடக்கும் இரு நாட்கள் முன்பாக குடல்வால் 15 செமீ வீங்கி உடனடி அறுவை சிகிச்சைக்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இவர் மருத்துவமனையில் இருந்து கெஞ்சி கூத்தாடி அனுமதி வாங்கி கொண்டு இங்கு வந்தார். அவருடைய இந்த செயல் கண்டிக்கத்தக்கது தான் எனினும் கழகத்தின் பால் இவர் கொண்ட பற்றும் ஆர்வமுமே இவருக்கு மனாதைரியம் கொடுக்கும்... தலைவர், தளபதி என்னும் மந்திரமே இவரை காக்கும் என இவர் கொண்ட நம்பிக்கைக்கு ஒரு ராயல் சல்யூட் வைக்காமல் இருக்க முடியாது.
அது போல சீதைப்பதிப்பகம் கௌரா. ராஜசேகர் அவர்கள் ஆரியமாயை புத்தகம் எல்லோருக்கும் பரிசளித்ததோடு திரு.கோவியார், அவரை எனக்கு அறிமுகம் செய்த போது "இது போன்ற அடுத்த அடுத்த இணைய கூட்டம் எங்கே நடத்தினாலும் நான் இந்த புத்தகம் பரிசளிக்க தயாராக இருக்கிறேன் என்றார். அவருக்கு மேடையில் புதுக்கோட்டை மாவாட்டம் மரியாதை செய்து நன்றி சொன்னதையும் நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். நம் தோழர் ஜெயின் கூபீ அண்ணன் அவர்களுக்கு பரிசு கொடுக்கப்பட்டது. அது போல ஒரு முக்கியமான அரசு பணி (காக்கும் பணி) யில் இருக்கும் தோழர் ஒருவருக்கு மரியாதை செய்யப்பட்டது. அவருக்கு என் வணக்கங்கள்!
ஒரு காவல் அதிகாரிக்கு சின்ன பாராட்டு! |
சிங்கை சிங்கங்கள் வழங்கிய கேமிரா நம் ஜெயின் அண்ணனுக்கு வழங்கும் போது! |
சிங்கை சிங்கங்கள் சார்பாய் பூபதி முழக்கம்! |
அங்கே எல்லோருக்கும் கொடுக்கப்பட்ட ஷீல்டுகள்! |
பின்னர் கூட்டத்துக்கு வந்திருந்த அனைவருக்கும் ஷீல்டு மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டு விழா இனிதே நிறைவு பெற்றது. விழா முடிந்து கிட்ட தட்ட ஒரு மணி நேரம் எல்லோரும் புகைப்படம் எடுத்து கொள்ள, காரில் ஏறி ஊருக்கு ஒரு நீங்கா நினைவுகளுடன் பறந்தனர். பலர் சிங்கை செயல்வீரர்கள் பரிசாக கொடுத்த கருப்பு கலரில் சிவப்பு பார்டர் போட்ட கார்ட்ராயர் துணியில் செய்த தொப்பி அணிந்து, கழுத்தில் லேப்டாப் பேக் மாட்டி கொண்டு சந்தோஷமாக சென்றனர். பார்க்கவே சந்தோஷாமாக இருந்தது. எங்கள் அன்பு புதுக்கோட்டை மாவட்ட செயலர் திரு. பெரியண்ணன் அரசு அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!
எல்லோருக்கும் கொடுக்க வைத்து இருக்கும் லேப்டாப் பைகள் மற்றும் பரிசு பொருட்கள்! |
இத்துடன் புதுக்கோட்டை இணையப் பயிற்சிப் பாசறை கூட்டத்தின் நேர்முக வர்ணனை இனிதே நிறைவு பெறுகின்றது.
இப்போது என் கருத்து ஒன்று உள்ளது தோழர்களே! இதை நம் கழக தோழர்கள் பலர்,பல மாவட்ட செயலர்கள், மாநில சார்பு அணி இணை அமைப்பாளர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள், மூத்த பத்திரிக்கையாளர்கள், தலைவரோடு மிகவும் நெருக்கமாக இருக்கும் தோழமை கட்சி தலைவர்கள் படித்திருப்பீர்கள்! மாறிவரும் இந்த கால கட்டத்தில் இணையம் என்பது மிகப்பெரிய ஊடகம் என உங்களுக்கு தெரியும் இப்போது. கழகத்துக்காக உழைத்த எழுத்தாளார்கள், பேச்சாளர்கள், களப்பணியாளர்கள், இசை, நாடக உறுப்பினர்கள் என எல்லோருக்கும் பெரியார் விருது, அண்ணா விருது, பாவேந்தர் விருது, கலைஞர் விருது என வழங்கி இதே செப்டம்பர் மாதத்தில் நம் முப்பெரும் விழாவில் கௌரவிக்கப்படுகின்றது. இணையத்தில் உழைப்பவர்களும் கழகத்துக்காக உழைக்கும் ஒரு கூட்டம் என்பதை நீங்கள் ஒத்து கொள்ளும் பட்சத்தில் இணையத்தில், கழகத்தில் இருந்துமுதன்முதலில் நுழைந்து வெற்றிக்கொடி நாட்டிய நம் தளபதி அவர்கள் பெயரில் "தளபதி விருது" என தரவேண்டும் என பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இதை கழகத்தின் தலைமைக்கு எடுத்து செல்வீர்கள் என நம்புகிறேன்.அதுவும் விரைவில் தேர்தல் வர இருப்பதால் இந்த வருடம் முதலே கொடுத்தால் இணையத்தில் இன்னும் எழுச்சி அதிகமாகும். வருடத்துக்கு ஐந்து பேருக்கு தர வேண்டும். ஏனனில் இங்கு இருக்கும் கூட்டம் மிகப்பெரியது. இணைய போராளிகளுக்கு இப்போதைய தேவை ஒரு அங்கீகாரம், ஒரு ஊக்குவிப்பு அத்தனையே. இணையத்தில் கழகத்துக்காக போராடுபவர்களை கொத்தி குதறி எடுக்கும் எதிராளிகளால் அவர்களுக்கு ஏற்படும் காயத்துக்கு ஒரு மருந்தாய் அமையும் இந்த அங்கீகாரம். நான் முன்பே ஒரு பதிவில் குறிப்பிட்டது போல 24 மணி நேரமும் எல்லா நாடுகளில் இருந்தும் உழைக்கும் இந்த கூட்டத்துக்கு ஒரு சின்ன அங்கீகாரம் தாருங்கள் தலைவரே, தளபதியாரே! அவர்கள் மூச்சிருக்கும் வரை கழகாத்துக்காக உழைக்க எப்போதும் தயார் நிலையில் இருக்கின்றனர்! வாழ்க தலைவர் கலைஞர், வாழ்க தளபதி, வெல்க திமுக! இப்படை வெல்லும்!
----------------------------------------------------------------------------------------------
மேலும் சில புகைப்படங்கள்!
பேராசியரும் மாணவருக்கும் ஏதோ முக்கிய பேச்சு! |
புதுகை மாவட்டமும், கொக்கரக்கோ சௌம்யனும் யாரை இப்படி கவனிக்கின்றனர்? |
தஞ்சை சிங்கங்கள் ஏ பி எஸ் அசோக், வி எஸ் கே செந்தில் உள்ளிட்டவர்கள்! |
மூத்த இதழாளர் கோவியார் குடும்பத்தினர்கள்! |
திரு. பூவை ஜெரால்டு அவர்களுக்கு மரியாதை! |
அண்ணனுக்கும் தம்பிக்கும் அப்படி என்ன முக்கிய பேச்சு???? |
அண்ணே, நாம ரெண்டு பேரும் மட்டும் டி ஷர்ட் போடாம புதுகை மாவட்டத்தை சமாளிச்சிட்டோம்! |
கோவியாரே! நாம ரெண்டு பேரும் “அண்ணா” மாதிரின்னு முபாரக் சொன்ன போதே எனக்கு மைல்டா ஒரு டவுட்டு:-)) |
உங்க அடுத்த புத்தகம் சீதை பதிப்பகம் தான்! என்னா சொல்றீங்க? |
அண்ணே! நான் காலையிலேயே வந்தாச்சு. உங்களை தான் காணும்:-)) |
யோவ் ஃபைசல்! எப்படிங்கானும் இருக்கீர்? |
உதயசூரியன் தான் உதிக்க போகுது! |
ஜூனியர் ஐ பி எஸ், கீரையார், தம்பியண்ணன், தினகரன் அரசு அண்ணன் ஆகியோர் அன்பு பிடி இது! |
கொக்கரக்கோ சௌம்யனுக்கு மரியாதை! |
கோவை சிங்கம், கோவை மா நகர செயலர் அண்ணன் வீர கோபால் மற்றும் தொழிலதிபர் நவீன் ராஜ் அவர்கள்! |
மிலிட்டரிக்கு மிலிட்டரி பரிசு ( இக்னேஷியஸ் இளங்கோ) |
இது டான் அசோக்கின் இளவல் இளஞ்செழியன் ராஜேந்திரன்! |
இது கோகுல் காங்கேயம்! |
கோவியார் குடும்பம்! |
சேலம சிங்கங்கள்! |
இந்த பதிவில் இருக்கும் புகைப்படங்கள் அண்ணன் திரு. ஜெயின் கூபீ அவர்கள் எடுத்தது. நன்றி திரு.ஜெயின்கூபீ அண்ணன்.
நன்றி வணக்கம்!!!
Amazeing
ReplyDeleteDetailed coverage ... thanks, Abi Appa :))
ReplyDelete