முதல் நாள்
அன்னக்கி காலைல எழுந்திருக்கும் போதே கத கதன்னு ஜுரம் அடிச்சுது. ''ஆஹா ஜாலி இன்னக்கி லீவு போடலாம் போலருக்கேன்னு ஒரு சந்தோஷம்.
.
.
போன எடுத்து வராத முக்கல வரவழச்சி " ரொம்ம்ப ஜொரமா இருக்கு, நான்னா மெதுவா வந்து பன்ச் பன்னிட்டு போய்டவா"ன்னு ஆபீஸ்ல கேட்டேன். "பரவாயில்ல நீ வந்து என்னாத்த கிழிக்கபோர, ரெஸ்ட் எடுத்துக்கோ"ன்னு பதில் வந்துச்சி. மயக்கத்தோட கூடிய தூக்கம் வந்துச்சி. அப்டியே தூங்கிட்டேன். முதநாள் பாத்த "தீபாவளி" மனசுக்குள்ள ஓடுச்சு. பாவனாவுக்கு வந்த மாதிரி நமக்கும் 2 வருஷம் எல்லாம் மறந்துச்சுன்னா என்ன ஆவும்ன்னு நெனச்சிகிட்டே தூங்கிட்டேன்.
.
.
திடீர்ன்னு முழிச்சு பாத்தா அது ராத்திரியா பகலா எதுவுமே தெரியல. சரி எதுக்கும் சன் டிவி பாப்போம்னு போட்டேன். சொர்க்கம் சீரியல் ஓடிக்கிட்டு இருந்துச்சி. நா சன் டி.வி பாத்து 1.5 வருஷமாச்சு.காரணம் 'அம்பிகை' சீரியல். "நா போய் அவன் கிட்ட 450 கோடிய வாங்கிகிட்டு வர்ர வ்ழியில சலூன்காரருக்கு 40 கோடி நான் தரவேண்டியிருக்கு, அதை குடுத்துட்டு, கோவில் வாசல்ல ஒரு பிச்சைக்காரன் ரொம்ப நாளா கஷ்டப்படுறான் அவனுக்கு 1 கோடி போட்டிட்டு 10 நிமிஷத்துல வரேன்" ன்ற ரீதியில் டயலாக். எனக்கு அந்த சீரியல் பாத்து டிசன்ட்ரி தொந்தரவு வந்ததால ஒட்டு மொத்தமா டி.வி பார்ப்பதை விட்டுட்டேன்.
.
.
ரொம்ப நாளாச்சே எல்லாரும் திருந்தியுருப்பாங்க, சரி பாப்போம்ன்னு பாத்தேன். மௌனிகா வழக்கம் போல சவால்வுட்டுகிட்டு இருந்தாங்க. நா 1.5 வருஷத்துக்கு முன்ன பாத்த காட்சிகளின் அடுத்த எபிசோட் மாதிரி இருந்துச்சு. எனக்கு பயமா போயிடுச்சு. பாவனாவுக்கு வந்த மாதிரி எனக்கும் 1.5 வருஷ ஞாபகம் எல்லாம் அவுட்டா??? பயந்துகிட்டே திரும்பி படுத்துட்டேன்.
.
.
சாயந்திரம் கொஞ்சம் கண்ண தொறந்து பாத்தேன். மை டியர் பூதம் ஓடிச்சு. இருக்குற பூதம் பத்தாதுன்னு எல்லா குழ்ந்தைகளும் சன் டிவிக்கு எழுதிபோட்டிருப்பாங்க போல. அன்னிக்கு ஒரு புது பூதம் கேரக்டர் புதுசா நுழைச்சிருந்தாங்க. அதுக்கு பேர்"அசின் பூதம்". நம்புங்க. இது காமெடியில்லை. சந்தேகம் இருந்தா ரெகுலரா சன் டி.வி பாக்குறவங்ககிட்டே கேட்டு தெரிஞ்சுக்கலாம்.
.
.
அதுக்குள்ள பழம், பால். இளநீர் அப்டீன்னு ரூம் கலை கட்டிடுச்சு. அப்புறம் என்ன..வரிசையா ஆனந்தம், மலர்கள், கஸ்தூரி,கோலங்கள், அரசி,லெஷ்மி அப்டீன்னு ரவுண்டு கட்டி அடிச்சாங்க.
.
.
'கோலங்கள்'ல ஆதி, அபிய போட்டு துவச்சி எடுத்துட்டு, அடுத்த 5 நிமிஷத்துல தலைய வழிச்சு சீவிகிட்டு 'அரசி'ல வந்து ரவுசு வுடுறார். எனக்கு ஏகப்பட்ட குழப்பம். இது கதைக்காவாதுன்னு தூங்கிட்டேன். (கீதா மேடம் வேற என்கிட்ட கோலங்கள் அபிக்கு ஒரு 3 கோடி தரக்கூடாதா தரக்கூடாதான்னு கேக்குறாங்க....அபிபாப்பாவுக்கு கொடுத்தாகூட ஆப்பிள் உண்டியல்ல போட்டு ஒழிச்சுவச்சுக்கும். கோலங்கள் அபிகிட்ட குடுத்தா போற வழியிலேயே தொலச்சிட்டு அழுதுகிட்டு இருக்கும்)
.
.
இரண்டாம் நாள்
.
காலைல கொஞ்சம் லேட்டா எழுந்திருச்சேன். வேற வழி. சன் டிவிதான். போட்ட உடனே ஒரு அம்மணி மண்ணை வாரி வாரி என் மேல எறியறாங்க. ஆஹா, நா எந்த வம்புதும்புக்கும் போகாதவனாச்சே!! அப்புறம்தான் தெறிஞ்சுது அது 'சூர்யா' சீரியலின் பிளாஷ்பேக் சீன். சரின்னு தங்கமணிக்கு போன் செய்து அம்மை போட்டதை சொல்லாமல்" பாப்பா ஸ்கூலுக்கு போயாச்சா?"ன்னு கேட்டேன். திரும்பவும் சீரியலில் முழுகிவிட்டேன்.
.
.
மாலை பூதம் பாத்துட்டு இருக்கும்போது விஜய டிஆரின் அரட்டைஅரங்கம் விளம்பரம். ஏதோ குந்திதேவி குந்திதேவிங்குறார். எனக்கு பக்கு பக்குங்குது. பயந்துகிட்டே தூங்கிட்டேன்.
.
.
திரும்பவும் முழிச்சபோது சூர்யா ஓடிச்சு. ஆஹா ரொம்ப நேரம் தூங்கிடோமேன்னு வீட்டுக்கு போன் செய்து "பாப்பா ஸ்கூலுக்கு போயாச்சா?"ன்னு கேட்டேன். தங்கமணியிடமிருந்து 'நற நற நற'. அப்புறம்தான் தெரிஞ்சுது டாக்டர் மூணு வேளைக்கு மருந்து குடுப்பது மாதிரி இந்த 'சூர்யா' காலை, மதியம்,இரவுன்னு ஓடிக்கிட்டே இருக்குமாம். நடுராத்திரி பாக்கணும்னா சன் டிவிக்கு ஒரு போன் போட்டா போதுமாம். உடனே போடுவாங்களாம்.
.
.
என்ன பாக்க வந்தவங்ககிட்டே "சன் டிவியால ரொம்ப அவதிபடுறேன். ஏதாவது புது படம் சி.டி இருந்தா கொண்டு வாங்க"ன்னேன். இதுதான் சொ.செ.சூங்கிறது.
.
.
3 வது நாள்
.
காலைல 9 மணிக்கு சி.டி வந்துச்சு. படத்தோட பேர பாத்ததுமே கை,காலெல்லாம் நடுங்குது. ரொம்ப நாள் வெறியோட இருந்திருக்கானுங்க பய புள்ளைங்க. இதுதான் சாக்குன்னு வச்சிட்டானுங்க ஆப்பு.
சரி வேண்டாம் சன் டி.வியே பாப்போம்ன்னு போட்டேன். வீராசாமி திரை விமர்சனம் ஓடுச்சு. ஐயோன்னு நெனச்சுகிட்டு உக்காந்தா அரட்டைஅரங்க விளம்பரம் 2 நிமிஷத்துக்கு ஒரு தடவை. திரும்பவும் குந்திதேவி, குந்திதேவின்னு ரப்சர் தாங்கலை.
.
.
சரி சன்நியூஸ் பாப்போம்ன்னு மாத்துனா கலைஞர் வெளிறி போன முகத்தோட ஒரு தியேட்டரில் இருந்து வர்ரார். கூட வர்ரவுங்க நம்ம டுபுக்கர் சொல்ற மாதிரி சவ ஊர்வலத்தில் வாயில துண்ட கடிச்சுகிட்டே வர்ர மாதிரி வர்ராங்க. பின்னாடியே விஜய டி.ஆர். 'வீராசாமி' பிரத்யோக காட்சி பாத்துட்டு வர்ராராமா!!!
.
.
சரி!! சனி ரவுண்டு கட்டிட்டார் நம்மலன்னு நெனச்சுகிட்டு எந்த பிரச்சனையா இருந்தாலும் நேருக்கு நேர் மோதிபாத்துடலாம்னு சி.டி ய போட்டேன். பார்த்தேன். வலையுளக மக்களே இப்ப தெறிஞ்சுதா நம்ம தைரியம். நாங்கல்லாம் வீர பரம்பரல்ல!!!
.
.
மும்தாஜ் தன் காதலை டி.ஆர் கிட்ட சொல்லும்போது இவருடைய நடிப்பு, நல்லா வாயை பொளந்துகிட்டு, கலங்குண கண்ணோடு தாவங்கட்டய மேல் பக்கமா தூக்கிகிட்டு எல்லா திசைக்கும் முகத்த திருப்புவார் பாருங்க...நா அழுதுட்டேன். ஆமா நெசமா. புல்லரிக்குதுன்னு ஒரு கட்டிய போட்டு சொறிஞ்சா ரத்தம் வராதா...வலிக்காதா..பின்ன அழுவமாட்டனா!!!
.
.
ஆக இப்படியா அடுத்த அடுத்த 4 நாட்கள் போச்சு!! இதுனால நா தெரிஞ்சுகிட்டது என்னன்னா....
.
1. பந்தங்கள் பாத்தா சொந்த பந்தங்கள் நம்மை விட்டு போயிடும். (ஆமா நானு அத பாத்து சொக்கிகிடக்கும் போது வந்த தங்கமணி போனை எடுக்காததால் ஏகப்பட்ட கட முடா)
.
2. சொர்கம் பாத்தா நரகம் கிட்டும்
.
3.நிம்மதி பாத்தா அது போயிடும்
.
4.ஆனந்தம் பாத்தா அது போயிடும்
.
5.கோலங்கள் பாத்தா வாழ்க்கை அலங்கோலமாயிடும்
.
6.மொத்தத்துல வீராசாமி பாத்தா உயிரே போய்டும்.
.
.
இந்த ஏழு நாளில் 7.5 சனி புடிச்சுவிட்டுடுச்சு!!! இனி எல்லாம் சுகமே!!!