Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts
July 1, 2013
அன்னக்கொடியும் அந்த கேடு கெட்ட முதுகும்!
எனக்கும் என் நண்பன் பண்டியன் டிம்பர் டிப்போ சங்கருக்கும் வாய்க்கால் சண்டை. பேசுவது இல்லை சில ஆண்டுகளாக. ஆனாலும் நடுவே 'பொம்மலாட்டம்" படம் வரும் போது ஒரு போன் "நான் 3 டிக்கெட் எடுத்து விட்டேன். நமக்கு இடையே ஒரு சீட்". நானும் அவனும் பேசாவிடினும் "பேசாமல் படம் பார்போம்" .
இப்ப்டியகத்தான் மதியம் போன். "டேய் பாரதிராஜா ப்டம் வந்திருக்கு. சமீபத்தில் நீ "முதல் மரியாதை"படம் விமர்சனம் உன் ப்ளாக்கில் போட்டாயாம்.. வா.. வா... இப்ப வா " .... பாரதிராஜா படம் "அன்னக்கொடியும் கொடிவீரனும்"இப்படியாகத்தான் பார்த்தேன்.
அதாவது கி பி 1000ல் அனிருத்த பிராம்மராயர் தன் பினாமி பெயரில் படம் எடுத்தா "இங்க பாருங்க... அதிலே ஒரு வில்லன்... அவன் சாகும் போது அவன் இண்ட்ரட்யூஸ் ஆகும் போது பேசும் வசனத்தை ....அதையேத்தான் பேசிகிட்டே சாகனும்... இது தமிழ் சினிமாவிலே புதிதாக இருக்க வேண்டும்" என சொன்னது போலவே இருக்கு படம். அத்தனை ஒரு புதுமை! படம் ஆரம்பம் முதல் முடியும் வரை ராதா பொண்ணு ஜாக்கெட் இல்லாம உள்பவாடையுடன் ஓடுவது தவிர்த்து பார்ப்பின் எல்லாம் புதுமை.
ஒரே ஒரு ஊர்ல ஒரே ஒரு வில்லன். அடச்சே... உண்மை தமிழன் மாரியே பேசுறேன் பாருங்க. இருங்க சொல்றேன். ஒரு ஊர்ல ஒரு வில்லன். அவனுக்கு ஒரு மகன். வில்லன் கந்துவட்டி கந்த சாமி. அடுத்த ஊர் காரன் பாரதிராஜாவின் குலவழக்கப்படி ஆடு மேய்க்கும் ஆட்டுக்காரன். இது வரை தமிழ் சினிமாவில் வராத கதைக்களம். நிற்க. அந்த ஆடு மேய்ப்பவன் வழக்கம் போல ஆடு மேய்பதை தவிர மத்த வேலை ... அதாவது பக்கத்து ஊர் ராதா பொண்ணு வை லவ்றான்.
லவ்வுன்னா லவ்... இதுவரை தமிழ் சினிமாவில் வராத லவ். ரொம்ப புதுமை. ஆடு மேய்ப்பவன் ஆட்டுப்பாலை பீய்ச்சி அடிக்கனும் தானேன்னு நீங்க பாரதிராஜாவின் கேப்டன் படம் நினைச்சு வந்தீங்கன்னா... யூ ஆர் ய ஃபூல். இப்ப அப்படி இல்லை. ஆட்டுப்பால் அனாயஸ்யமாக கதாநாயகி வாயில் பின்னர் அங்கிருந்து கதநாயகன் மூஞ்சியில் என ட்விஸ்ட் இருக்கு. இதுவும் தமிழக சினிமா கண்ட புதுமை!
அதை விடுங்கள். இப்படியாக லவ்விகிட்டு இருக்கும் போது வில்லன் பையன் கதா நாயை தள்ளி கிட்டு போய் கட்டிகிடுறான். சரி ஒரு மகா ட்விஸ்ட். பின்ன தான் புரியுது. கதாவில்லன் ஒரு கத்தியை உறை யில் இருந்து எப்போதும் எடுப்பதும் பின்ன உள்ள போட்டுப்பதும். அப்பவே தெரியுது... இந்த வில்லன் கத்தி வேலை செய்யாதுன்னு. ரொம்ப ஈசியா இதை புரிஞ்சுக்க வச்சிடுறார் டிரக்டர்.
அதையும் விடுங்க.. யோவ் எல்லாத்தையும் விட்டா பின்ன கதை தான் என்ன?ன்னு நீங்க கேட்டா... கடேசியா தான் அந்த "பிட்டு" சீன் வருது. ராதா பொண்ணு ஜாக்கட் இல்லாம ஓடுது. அது ஏன்னு தெரியலை. அந்த வீட்டில் இருக்கும் எல்லாரும் நல்ல உடையுடன் அழகா தப்பிச்சு ஓடும் போது இந்த புள்ள மட்டும் ஏன் இப்படி என தியேட்டரில் முறுக்கு வித்தவன் என்னை பார்த்து கேட்ட போது கடுப்பாக முறைத்தேன்.
கடைசியில் ... ராதா பொண்ணு அந்த பழைய பையனை கட்டிகிடுச்சு. அவ்ளோவ்தாங்க.
@ பாரதிராஜா என்னும் பழைய பிம்பம் நினைச்சு போனவன் எல்லாம் செத்தான்
@பொதுவாகவே பாரதிராஜா என்பவர் ஒரு லூசு என பொதுத்தமிழனுக்கு தெரியும். அது இப்போது டபுள் ஆக ஆனது
@படத்தில் காமடி இல்லையா,என கேட்பவர்கள் வாயை மூடிக்கொள்ளும் அளவு காமடி என்னான்னா மனோஜ் வில்லன் என்பதும், அவர் படம் முடியும் வரை 188 தடவை தன் வேட்டியை அவுத்து விட்டு பட்டாப்பட்டியுடன்அந்த வேட்டியை உருமா கட்டிப்பதும் தான்.
@படத்தின் வெற்றி என்பது வில்லன் வரும் போது குழந்தைகள் சிரிப்பது தான். மனோஜ் வரும் போது நனே மூணு தபா சி ரிச்சு தொலைச்சேன் என்றால் பார்த்து கொள்ளவும்.
@அந்த கிருத்திகாவின் முதுகை வைத்து அடுத்த படம் வாய்ப்பு வரலாம். ஆனால் நடிப்பை வைத்து அல்ல. இந்த படத்துக்கு "பின்னால "உனக்கு பெரிய வாய்ப்பு வரும் என டிரக்டர் சொன்னா அதிலே மாற்றம் இருக்காதுல்லா....
@மனோஜ் ஒரு நல்ல நடிகன். சரண் தான் முதலில் பாரதிராஜா மேல் இருந்த கோவத்தில் படம் எடுத்து அவுட் ஆக்கியது. அதை உணர்ந்த பாரதிராஜா" போங்கடா வெண்ணைகளா, என் பையனை நீங்க என்னடா கேவலம் செய்வது" என முழங்கி விட்டு எடுத்த படம் இது! ஏன்னா பாரதிராஜாவை விட இன்னும் ஒருத்தன் பிறந்து வர வேண்டும் மனோஜ் அவர்களை அசிங்கம் செய்ய! பல சமயம் அந்த மீசை வெளியே வந்து விழுந்து விடுமோ என நாம் சீட் முனைக்கு வரும் நேரங்கள் தான் படத்தின் த்ரில் டைம்!
@மகேந்திரன் அதாவாது "முள்ளும் மலரும்" மகேந்திரன், மற்றும் "பரதேசி" பாலா ஆகியோர்களை கட்டிப்போட்டு இந்த் படத்தை காண்பித்தால் அவர்கள் சாவு நிச்சயம். இதை யாரும் செய்ய மாட்டார்கள் என நம்புகிறேன். அத்தனை ஒரு கொலைவெறி யாருக்கும் இருக்காது என தீர்க்கமாய் நம்புகிறேன்.
@ புருவம் திருத்திய கிராமத்து கிளி அனேகமாய் பாரதிராஜா என்னும் மாபெரும் கலைஞர் மட்டுமே காண்பிக்க முடியும். "ரே" எழுந்து வந்து இந்த படம் பார்க்க வேண்டும். ப்ளீஸ். அந்த ப்ரீவ்யூ ஷோவில் நானும் இருக்க வேண்டும். ஒரு கலைஞன் சாவதை நான் நேரிடையாக காண ஆசை!
@பை தி பை நான் இன்னும் அதிஷா விமர்சனம் பார்க்கவில்லை!
@கலைஞர் தொலைக்காட்சிக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். "முதல் மரியாதை" தொடர் வரப்போகுதாம்!
படம் முடிந்து வெளியே வந்ததும் சங்கர் சொன்னான்.... "இதுக்கு நாம் பேசித்தொலைத்து இருக்கலாம்"
May 8, 2013
"முதல் மரியாதை! " - கொஞ்சம் தாமதமான விமர்சனம்!
தமிழகத்தின் தென்மாவட்டத்தில் இருக்கும் ஒரு ஊர்ல ஆதிக்க சாதியை சேர்ந்த ஒருத்தர் இருந்தாரு. அவரு பெரும் பணக்காரரு. அவருக்கு ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு ஒரு பொண்ணு. பேரு பொன்னத்தா. அந்த பொண்ணு தன் பருவ வயசை அடைஞ்சதும் ஒரு ஜீன்ஸ், கூலிங் கிளாஸ், தொப்புள் அளவுக்கான டைட் சட்டைல்லாம் போட்டுக்காத அந்த காலத்தில் இருந்த மாடர்ன் டிரஸ்ஸான பட்டாப்பட்டி டவுசர், நலுமுழம் வேட்டி, பெரிய மீசை சகிதம் இருந்த ஒரு வேத்து சாதி பையனை லவ்ஸ் பண்ணுது. ஒரு கட்டத்திலே தப்பு தண்டா நடந்து வவுத்துல புள்ளய வாங்கிடுச்சு. இது தெரிஞ்ச அந்த லவ்பாய் அதை கூட்டிகிட்டு பக்கத்து ஊர்ல இருக்கும் ஒரு வைத்தியர் வூட்டுக்கு அழைச்சுகிட்டு போறாரு. அந்த வைத்தியனோ அந்த பொன்னாத்தாவின் அப்பனுக்கு வத்தி வச்சுடறார். இது தெரிஞ்ச அந்த லவ்ஸ்பாய் பக்கத்தில் கிடந்த ஒரு அருவாளை எடுத்து வைத்தியரை ஒரே போடா போட்டுட்டு ஜெயிலுக்கு போய்டுறான்.
"வேத்து சாதிலயா லவ்ஸ் அடிச்சு வவுத்துல புள்ளய வாங்கிட்டு வந்துட்ட சிறுக்கி மொவளே, இப்ப ஒன்னய என்ன பண்றேன் பாரு"ன்னு அந்த ஆதிக்க சாதி அய்யா குதி குதின்னு குதிச்சுட்டு தன் சாதில மாப்ள பார்க்குறாரு. இந்த லெவல்ல வயித்து புள்ள வளர ஆரம்பிச்சு வயிறு காட்டி கொடுக்குது பொன்னாத்தாவுக்கு. அந்த ஆதிக்க சாதில வயித்த தள்ளிகிட்டு போனா மாப்ள புடிக்க முடியுமா? யோசிச்சாரு அந்த அய்யா. ஒடனே தன் அக்கா மொவன் ஒருத்தன் வெட்டியா ஒரு துறுபிடிச்ச தொரட்டு குச்சி வச்சுகிட்டு 20 வெள்ளாடு மேய்ச்சிகிட்டு இருந்தான். அவனை கூட்டி வந்து "மாப்ள மாப்ள, எனக்கு பொன்னாத்தாவோட காதலை விட என் சாதி மேல இருக்கும் காதல் தான் அதிகம். அவளை வேத்து சாதில கட்டி கொடுத்தா என் மானம் மருவாதி எல்லாம் புட்டுகிட்டு போய்டும். நாள பின்னக்கி நான் மந்தைல ஒக்காந்து சொம்பிலே தண்ணி குடிச்சு கிட்டு ஜட்ஜ்மெண்ட் எல்லாம் சொல்ல முடியாம போய்டும். நீ என் பொன்னாத்தாவ கட்டிக்க. அதுக்கு பர்த்தியா நான் என் சொத்து பத்து எல்லாம் ஒன் பேருக்கு எழுதி வச்சிடுறேன். அவ வயித்துல வளர்ர புள்ளய ஒம் புள்ளன்னு இனிசியல் வச்சிக்க மாப்ள, அத்தோட என் ஜட்ஜ் போஸ்டை எனக்கு பொறவு நீயே வச்சிக்க. ஆக மொத்தம் ஒரு 'மிச்சர்' மாப்ளயா இரு மாப்ள"ன்னு சொல்ல அந்த டீலிங் பிடிச்சு இருந்துச்சு அந்த மாப்ளக்கி. இந்த டீலிங் பேசுனப்ப செங்கோடன்னு ஒரு செருப்பு தைக்கும் ஆளு பார்த்துடறான். இந்த மிச்சர் மாப்ள தன்னோட மாமன் தன் கால்ல மேல போட்டிருந்த செருப்பு படும் படி கால்ல விழுந்து கேட்டதால இனி இந்த மானம்கெட்ட செருப்பை போட மேட்டேண்டா போ"ன்னு வீரசபதம் எடுக்க செருப்பு தைக்கும் செங்கோடனுக்கு ஒரு கஸ்டமர் போயிட்டாரேன்னு கெதக்குன்னு ஆகிப்போச்சுது. அப்பப்ப அதனால செங்கோடன் வந்து "அய்யா ஒங்க காலுக்கு நான் ஒரு செருப்பு தைச்சு போடனும்" ன்னு சொல்லும் போது அந்த மிச்சர் மாப்ளக்கி பயத்துல ஒன்னுக்கு வந்துடும். "இந்த ஆளுக்கு உண்மை தெரிஞ்சு போச்சுதே"ன்னு பயந்து வரும்.
இப்படியா அந்த மிச்சர் மாப்ள தன் மாமா கிட்டே "நான் ஒன் சொத்து பத்தும், ஒன் பொண்ணு பொன்னாத்தாவையும் வச்சுக்கறேன். நீ ஜட்சு போஸ்ட்டை வச்சுக்கோ" ன்னு மானத்தோட வாழ்ந்து கிட்டு இருக்கும்போது அந்த மாமாவும் மண்டைய போட அந்த ஜட்ஜ் போஸ்டும் மிச்சர் மாப்ளக்கி வந்துடுச்சு. இது நடுவே அந்த மிச்சருக்கு ஒரு ஒன்னுவிட்ட அக்கா மொவன் ...அவன் ஒரு ரெண்டுங்கெட்டான். ஆடு மேய்க்கத்தான் லாயக்கு. அவனையும் தன் கூடவே வளர்த்து வராரு மிச்சர் மாப்ள.
ஆனா பொன்னாத்தா இருக்காளே பொன்னாத்தா... அவளுக்கு சம காண்டு இந்த மிச்சர் மாப்ள மேல. தன்னோட காதலே இந்த ஆளால கெட்டுப்போச்சுதேன்னு நினைச்சாளோ, இல்லாட்டி ஒருத்தன் கூட படுத்துட்டு இன்னுமொருத்தன் கூட வாழனுமான்னு நினைச்சாளான்னு தெர்ல. ஆனா மிச்சர் மாப்ள கூட படுக்குறதில்லை. மனுசனா கூட மதிக்கிறது இல்லை. தான் காதலிச்ச மவராசனை மனசிலே வச்சிகிட்டு ஒரு துறவி மேரி வாழ்ந்து கிட்டு கிடக்கா.
மிச்சர் மாப்ள, தான் இனிசியல் கொடுத்த பொன்னாத்தாவுக்கு பொறந்த அந்த பொண்ணுக்கு ஏனோ தானோன்னு ஒரு கேடுகெட்டவனுக்கு தன் சாதிலயே பார்த்து கட்டி கொடுக்குறாரு. தனக்கு பொறந்த பொண்ணா இருந்தா இப்படி நடந்துப்பாரா மிச்சர் மாப்ள. இதையும் நாம கவனிக்கனும். கட்டிக்கொடுத்தவன் ஒரு களவாணிப்பயபுள்ள. இந்த நிலமையிலே அந்த ஊருக்கு வேற சாதிய சேந்த ஒரு நாடோடி பொண்ணு தன் அப்பனோட பரிசல் ஓட்ட வருது. இந்த மிச்சர் மாப்ளக்கு 50+ வயசு ஆனாலும் கன்னிகழியாம கெடக்குல்ல... இதும் அந்த பொண்ணை... அதுக்கு பேர் குயிலு... அதை லைட்டா சீண்டி கிட்டு இருக்காரு. ஊர்ல சும்மா இருப்பானுங்கலா??? கண்ணு மூக்கு வச்சு பேச ஆரம்பிச்சானுங்க.
அங்க விட்டுட்டு இங்க வாங்க... அந்த மிச்சர் மாப்ளக்கி ஒரு மருமொவன் தெண்டம் இருந்தானே ஆடு மேய்க்கும் அறிவாளி...அவனுக்கு லவ்ஸ் வருது. யார் கூட வேத்து சாதி செருப்பு தைக்கும் செங்கோடன் மொவ கூட. மிச்சர் மாப்ளக்கி என்னா செய்றதுன்னு தெரியலை. கட்டி கொடுக்காட்டா செங்கோடன் சொம்மா இருக்க மாட்டான். மாப்ள எப்படி மிச்சர் மாப்ள ஆனாரு என்பதை ஊருக்குள்ள சொல்லிடுவான்னு பயந்து போன மிச்சர் ... ஆடு மேய்ச்ச மாரியும் ஆச்சுது, அண்ணனுக்கு பொண்ணு பார்த்தது மாரியும் ஆச்சுது"ன்னு கணக்கா "எனக்கு, வேத்து சாதில என் மருமொவனுக்கு கண்ணாலம் கட்ட இஷ்டம் தான். நான் அந்த சாதிக்கு பாதுகாவலன்" ரேஞ்சில டயலாக்கை வுட்டுட்டு கண்ணாலம் கட்டி வைக்கிறரு. இது பொன்னாத்தாவுக்கு புடிக்குமா? "அட நாறப்பயலே,இதைத்தானடா நானும் அந்த காலத்திலே சொன்னேன், நானு அந்த காலத்திலேவேத்து சாதி ஒருத்தன் கிட்ட லவ்ஸ்ம் பண்ணி, படுத்தும் எந்திரிச்சு ஒரு புள்ளய வவுத்துல வாங்கிட்டு வந்த பொறவும் கூட சாதி..கூ ன்னு பேசிட்டு இப்ப ஒன் மருமொவனுக்கு மட்டும் டயலாக்கவுட்டுட்டு திரியிறயே ன்னு பொன்னாத்தாவுக்கு செம கடுப்பாகிடுச்சு.
பொன்னத்தாவின் மருமகப்பய தான் ஒரு களவாணிப்பயன்னு ஏற்கனவே சொன்னோமில்ல. அவன் அந்த செங்கோடன் மொவளை கொண்டு போட்டு காதுல மூக்குல இருந்ததை களவாண்டு போலீஸ்ல மாட்டிகிறான். அது கெடக்கட்டும்... அது இப்போ முக்கியமில்லே...
இந்த நெலமையிலே தான் மிச்சர் மாப்ள, பரிசல்கார பொண்ணு கூட கும்மாளம் அடிக்கும் சேதி வந்து பொன்னாத்தாவோட தண்டட்டி போட்ட காதிலே விழுந்துச்சு. வுடுமா பொன்னாத்தா? தன் சாதி சனம் எல்லாத்தையும் கூட்டி கெடா வெட்டி சாராயம் குடுத்து மிச்சர் மாப்ளயோட அட்டகாசத்தை கேக்க சொல்லுது. அவனுங்களும் அந்த பரிசல்கார குயிலு குடிசைய கொளுத்துறேன்னு போக அதுக்கு மின்னாடியே மிச்சர் மாப்ள அந்த பொண்ணை நான் வச்சிருக்கேன் ன்னு பானையை போட்டு ஒடைக்கிறமாரி சொல்லிட்டு குடிசைக்கு காவலுக்கு போவசொல்ல... அங்கிட்டு அந்த குயிலு ஊரை விட்டே போலாம் போ.. இந்த மிச்சரை நம்பி என்ன பிரயோசனம்னு கெளம்புது. பரிசலை ஓட்ட ரெடியா இருக்கும் போது தான் பொன்னாத்தாவின் பழைய லவ்வர் செயில் வாழ்க்கை முடிஞ்சு பொன்னாத்தாவையும் தனக்கு பொறந்த பொண்ணையும் பார்க்க வரான்.
வர்ரவன் பரிசல்ல வரும் போது குயிலு கிட்டே நடந்த பழைய கதை எல்லாம் சொல்றான். இந்த குயிலுக்கு தேவையில்லாத வேலையை பார்த்துபுடுது அந்த புள்ள. அந்த அப்பாவி காதலனை ஒரே போடா போட்டு தள்ளிட்டு செயிலுக்கு போவுது. பின்ன என்ன ஆச்சுது? மிச்சர் மாப்ள என்ன ஆனாரு? என்பதுல்லாம் வெள்ளி திரையிலே பார்த்துகுங்க.
கதாநாயகனாக "காதலன்" வேடத்தில் சத்தியராஜும், கதாநாயகி பொன்னாத்தாவாக "வடிவுக்கரசி"யும், மிச்சர் மாப்ளயாக நடிகர் திலகம் சிவாஜிகணேசனும், பரிசல் கார குயிலாக ராதாவும் நடிச்சு இருக்காங்க.
கதாநாயகனாக சத்தியராஜ் இருப்பினும் அவரை விட மிச்சர் மாப்ள கேரக்டரில் நடிச்ச நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பு தான் எல்லார் நடிப்பை விட தூள். அது போல பரிசல்கார குயிலும் தன் பாத்திரம் அறிந்து நடித்து இருக்கின்றார். பொன்னாத்தாவாக வரும் வடிவுக்கரசி அய்யா சிவாஜி கணேசனுக்கு போட்டி போட்டு பிய்த்து உதறி இருக்கார். ஆக மொத்தம் சாதி வெறி ஏத்தும் சூப்பர் படம் இது. கண்டிப்பாக தென் மாவட்டங்களில் சூப்பராக ஓடும். அனால் ஒட்டப்பிடாரம் போன்ற ஊர்களில் படத்தை வெளியிடாமல் இருந்தால் முதல்வர் சட்டம் ஒழுங்கை காப்பத்தலாம். இந்த படத்தை ஒரு சில வசனங்கள் மாற்றி ஆதிக்க சாதி பெயர்களை கொஞ்சம் லைட்டா பட்டி டிங்கரிங் பார்த்து வட மாவட்டங்களில் வெளியிடலாம். ஒரே தமிழ் படத்தை தமிழகத்தின் வேறு வேறு பகுதிகளில் ரீமேக் செய்த முதல் படம் என்னும் பெருமையை பெறலாம். அப்படி வெளியிடும் போது மரக்காணம் போன்ற ஊர்களில் மறக்காம தடை செஞ்சுடனும்.
ஆக மொத்தம் படம் இப்போதைய சூழலில் வெளிவந்தா அது பல அப்பாவிகளுக்கு "இறுதி மரியாதை" ஆகும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது!
குறிப்பு 1: இது சத்தியமாக ஒரு காமடிப்பதிவு மட்டுமே. நானும் ஒரு தீவிர சிவாஜி ரசிகர் என்பதை கூறிக்கொள்கிறேன். அதில் பெருமையும் கொள்கிறேன். கோவம் வந்தால் தனி மடலில் திட்டவும். பொதுவெளியில் வேண்டாம். அஜக்........ ஒஜக்...........நஜக்.......... அஜக்....ஒஜக்.... நஜக்..... அஜக். ஒஜக்.நஜக். அஜக் ஒஜக் நஜக் அஜகொசநஜக்....... போதும்... நெக்ஸ்ட் ரெஸ்ட்....
குறிப்பு 2: இப்படி கேணைத்தனமாக மாத்தி யோசிப்பதுக்கு... ஒண்ணுமில்லை... வேண்டம் வுட்டுடுங்க..
Labels:
சினிமா,
நகைச்சுவை மாதிரி,
முதல் மரியாதை,
விமர்சனம்
Subscribe to:
Posts (Atom)