பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking
Showing posts with label ஆசிரியர் தினம். Show all posts
Showing posts with label ஆசிரியர் தினம். Show all posts

September 6, 2010

யார்ரா அது நட்ராஜின் வேர்கடலையை பிடுங்கியது?


நட்ராஜுக்கு இப்போ உகலத்திலேயே மோஸ்ட் பவர் ஃபுல் சக்தி என்பதே அவங்க மிஸ் தான். எங்க மிஸ்ஸால முடியாதது இந்த உலகத்திலேயே எதும் இல்லை என்கிற ஒரு நினைப்பு.


கிட்ட தட்ட நானும் அப்படித்தான் இருந்தேன். இப்போதும் எங்க பள்ளிக்கு போகும் போது எங்க ஆசிரியர்களை பார்க்கும் போது நான் அவர்களுக்கு முன்பாக பெட்டி பாம்பாய் தான் ஆகிவிடுகின்றேன்.


தானாகவே ஒரு பவ்யம் வந்துவிடுகின்றது. சர்வமும் அடங்கி ஒரு வித மரியாதை வந்து மனதில் உட்காந்து கொள்கின்றது. என் அன்பான ஆசிரியர்களுக்கு "ஆசிரியர் தின வாழ்த்துக்கள்".