பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking
Showing posts with label டாக்டர்கள் தினம். Show all posts
Showing posts with label டாக்டர்கள் தினம். Show all posts

July 1, 2007

டாக்டர்.ராமமூர்த்தி M.B.,B.S., F.R.C.H(Lon) Of மயிலாடுதுறை

இன்றைக்கு டாக்டர்கள் தினம் என நம்ம வலைப்பூ டாக்டர் டெல்பின் ஒரு பதிவு போட்டு முடிஞ்சா தெரிஞ்ச டாக்டருக்கு ஒரு ரோஜா பூவாவது கொடுக்கலாமேன்னு சொல்லியிருந்தாங்க! நல்ல விஷயம் தான். என்னால பொக்கே கொடுக்கும் தூரத்தில் என் டாக்டர் இல்லாமையால் ஒரு பக்கா பதிவு வேண்டுமானால் தரலாம் என நினைத்தே இந்த பதிவு.

நான் மட்டுமல்ல மயிலாடுதுறைவாசிகள் அத்தனை பேருக்கும் இவரை தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை. சுத்து வட்டார அத்தினி கிராம மக்களுக்கும் இவர் கிட்டத்தட்ட தெய்வம் மாதிரிதான்.

எனக்கு தெரிஞ்சு அவருக்கு 70 வயதுக்கு மேல இருக்கும். ஒரு ஏழ்மையான குடும்பத்தில் முடிகொண்டான் என்னும் கிராமத்தில் பிறந்து வள்ர்ந்து படித்து டாக்டராகி மயிலடுதுறையில் செட்டிலாகி மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கௌரவ டாக்டராக (அதாவது சம்பளம் வாங்கமல் உழைப்பது-அப்போது அது நடைமுறையில் இருந்தது, இப்போது இல்லை) இருந்து கொண்டே ஒரு கிளினிக் ஆரம்பித்து ஏழைகளுக்கு முடிந்த வரை இலவசமாக பணி செய்து தனக்கு வரும் சாம்பிள் மாத்திரைகளை அவர்களுக்கு கொடுத்து அப்பப்பா அவரின் குணம் யாருக்கும் வராது.

நான் சின்ன வயசா இருக்கும் போது அவரின் ஃபீஸ் நம்பினால் நம்புங்க 1 ரூபாய் தான். மாத்திரை கூட 10 பைசா ரேஞ்சுக்குதான் எழுதி தருவார். விலைவாசி ஏற ஏற அவர் பீஸ் ஏத்திக்காமலே இருந்ததால் 1 ரூபா ஃபீஸா தர மக்கள் வெக்கப்பட்டு 2 ரூபாயா கொடுக்க ஆரம்பிச்சு இப்போ நான் போன போது 10 ரூபாய்க்கு வந்து விட்டார்.

அவருடைய கிளினிக் அத்தனை ஒரு சுத்தமாக இருக்கும். அழகான ரோஸ்வுட் டேபில்/சேர் இருக்கும். ஆனால் அதில் அவர் ஒரு முறை கூட உக்காந்து பார்த்ததில்லை. அது போல் சட்டை போட்டும் பார்த்ததில்லை. கை வைத்த பனியன், தோளில் ஸ்டெத்தை துண்டு மாதிரி போட்டிருப்பார். அது போல் அவர் பேண்ட் போட்டு மயிலாடுதுறையில் யாரும் பார்த்ததில்லை. அதுபோல் பேஷண்ட் உட்கார ஒரு ஸ்டூல் இருக்கும் அதில் உட்கார வச்சி அவர் வைத்தியம் பார்த்ததே இல்லை. அப்படியே நின்னுகிட்டே பார்த்து பேசி பிரிஸ்கிரிப்ஷன் எழுதி கொடுத்து அனுப்பி விடுவார். ஆனால் கண்டிப்பாக மாத்திரை வாங்கியவுடன் அவரிடல் வந்து காட்டிவிட்டு போக சொல்லுவார். காரணம் அவர் எழுத்து மயூரா பார்மஸிக்கும் ஆண்டவனுக்கும் மட்டுமே புரியும். சில சமயம் மயூரா பார்மஸி தப்பு செஞ்சுட்டா என்ன பண்ணுவது என்பதால் அவரிடம் காட்டி செல்ல வேண்டும்.

எங்க ஊர்ல இருக்கும் டாக்டரிலேயே அதிகம் கூட்டம் வரும் டாக்டர் இவர்தான். ஆனால் கிளினிக் எப்பவும் காலியாவே இருக்கும். ஏனனில் ஒரு பேஷண்ட்க்கு இவர் எடுத்து கொள்ளும் நேரம் 5 நிமிடம் மட்டுமே. அது போல் இவர் நோயை டயகனைஸ் செய்வது போல் சுத்து வட்டாரத்தில் வேறு யாரும் இவருக்கு நிகரில்லை எனலாம்.

மத்த பெரிய பெரிய டாக்டர்கள் எல்லாம் கூட செகண்ட் ஒப்பீனியனுக்கு இவரிடம் தான் அனுப்புவார்கள் சில கிரிட்டிகள் கேஸ்களுக்கு. இவருக்கு ஒரு மகன் பெயர் சீனிவாசன் எனக்கு ஒரு வருஷ ஜூனியர் 1 முதல் 12 படிக்கும் வரை. இப்போது தமிழ்நாட்டிலேயே புகழ் வாய்ந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நிபுனர். அவர் மனைவியும் அதேபோல் புகழ் பெற்ற டாக்டர். (அனேகமாக டாக்டர் டெல்பின் அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு-சென்னையில்தான் இருக்கிறார்) அப்பாவுக்கு தப்பாத பிள்ளை. அப்பா லெட்டர் கொடுத்து விடுவார். பையன் காசு வாங்காமல் அறுவை சிகிச்சை செய்வார். அப்படி ஒரு குணம்.

எங்க ஊர்ல உள்ள அத்தனை குடும்பமும் அவருக்கு அத்துப்படி. நான் போனால் என்னய விட்டுட்டு பெரியப்பா/சித்தப்பா/அப்பா/மாமா/ அப்படீன்னு ஆரம்பிச்சு கிளப்பிளே இந்த வருஷம் யார ப்ரசிடெண்ட்டா ஆக்க போறேள்ன்னு ஆரம்பிச்சு எல்லாத்தையும் பேசிடுவார்.

சென்னையில் கிரிக்கெட் மேட்சுன்னா கண்டிப்பா ஆஜராகிவிடுவார். அதுபோல கார்த்திகை அன்னிக்கு வைத்தீஸ்வரன் கோவிலுக்கு செல்வமுத்துகுமரன் அபிஷெகத்துக்கு எதுத்தப்புல உள்ள டாக்ஸி ஸ்டாண்டில் கார் பிடித்து கொண்டு போயிடுவார். அன்னிக்கு அந்த கை பனியனும் கிடையாது மேல் துண்டுதான். அவருக்கு தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ், ஏழை,பணக்காரன், ஜாதி,மதம் எதுவுமே கிடையாது.

காலை 7.00 மணிக்கு திறந்துடுவார். மதியம் 1.00 சாத்திட்டு வீட்டுக்கு உள்ள போயிடுவார். மாலை 3.30க்கு ஆரம்பிச்சு டான்னு 7.00க்கு உள்ளே போயிடுவார். தெய்வ கடாச்சமா இருப்பார்.

அவருக்கு நண்பர்ன்னு பார்த்தா டாக்டர் நாராயனன் L.I.M அவர்கள் தான். அவர் எதித்த வீடு. ரெண்டு பேரும் காம்பவுண்ட் சுவத்துல கை வச்சுகிட்டு (நடுவே பிசியான ரோடு) பேசிக்கிட்டே இருப்பாங்க. ஒரு தனி கேரக்டர் அவர்.

எனக்கு ஒரு ஆசை. அவர் வாழும் காலத்திலேயே அந்த பட்டமங்கல தெருவுக்கு "டாக்டர் ராமமூர்த்தி சாலை"ன்னு பேர் வச்சு மயிலாடுதுறை நகராட்சி நல்ல பேர் எடுத்துக்கனும். விதை போட்டுவிட்டுதான் வந்திருக்கேன். பார்ப்போம்!!