பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

May 30, 2008

அப்பாக்களுக்கான ஒரு டெம்பிளேட் பதிவு!!








நான் என் வயசுக்கும் இத்தன ஒரு விஷமத்தை பார்த்ததில்லை. அய்யோ என்னா விஷமம் என்னா விஷமம். அவனை பார்த்துகறத்துக்கே நாலு ஆளு வேணும்.

காலையிலே அவங்க அம்மா எழுந்திருக்கும் போதே எழுந்துடுவான். ஆனா பாருங்க அப்பத்திலே இருந்து என் கிட்டத்தான் விளையாடிகிட்டு இருப்பான். நான்னா அவனுக்கு உசிரு.

ராத்திரி தூக்கத்திலே எங்கே புரண்டு படுத்திருந்தாலும் முழிப்பு வந்துச்சுன்னா ஓடி வந்து என் நெஞ்சு மேலே ஏறித்தான் படுத்துப்பான். எத்தன வியர்வைன்னாலும் கவலைப்பட மாட்டான். நான் கை வலிக்க விசிறி விட்டா சுகமா தூங்குவான். சரி தூங்கிட்டானேன்னு கீழே போட்டா அடுத்த செகண்டு என் மேலே ஏறி படுத்துப்பான்.

நான் காலையிலே குளிக்கும் போது வரை பேசாம வெளையாடிகிட்டு இருப்பான். குளித்து முடிஞ்ச பின்னே சட்டை மாட்டினா போதும் நேரா வண்டிகிட்டே போயிடுவான். அவனை நகர்ல ஒரு ரவுண்டு அடிக்காம நாம வெளியே எங்கயும் போக முடியாது.

வெளியே போயிட்டு நான் தெரு முனைக்கு வருவது எப்படித்தான் அவனுக்கு தெரியுமோ டக்குன்னு வந்துடுவான் கேட்டுக்கு. என்ன திரும்பவும் அவனை வச்சு ஒரு ரவுண்டு அடிச்சாத்தான் நான் உள்ளே போக முடியும்.

தெருவிலே பசங்க விளையாட முடியாது இவனை சேர்த்துக்கலைன்னா. கத்தி தீர்த்துடுவான். வேற வழி பௌலிங் போடுறவனும், பேட்டிங் புடிக்கிறவனும்,கீப்பிங் பண்றவனும் அத்தன ஏன் பிட்ச் இஞ்சினியர் கூட அவன் தான்.



அது தவிர விளையாடி முடிச்ச பசங்க கொஞ்சம் ஜாலியா பேசிகிட்டு இருக்கும் போதும் இவன் தன்னை சேர்த்துகலைன்னா செம கடுப்பாகிடுவான். வேற வழி சேர்த்துகிட்டுதான் ஆகனும். இல்லாட்டி அவங்க அக்காகிட்டே சொல்லி அடுத்த நாள் தண்ணி குடிக்க விட மாட்டான் வீட்டு வாசலில்

அட்ரார்டா நாக்க மூக்க நாக்க மூக்க, மொழ மொழன்னு யம்மா யம்மா,கத்தாழ கண்ணால, போன்ற கருத்தாழமிக்க பாட்டுன்னா தூங்கிகிட்டு இருந்தாலும் டான்ஸ் ஆடுவான்.

சீரியல் பார்த்து அழுவதை விட சீரியலை நிறுத்த சொல்லி அழுவான். அதுக்கு பதிலா டேனி&டேடி அனிமேஷன் பார்த்து சப்புகொட்டி சிரிப்பான்.

கலைஞர் டிவியில் அவனுக்கு பிடிச்ச நிகழ்ச்சி கலைஞரை கடலில் தூக்கி போடுவது தான். (இதுவே அதிமுக வீட்டு பிள்ளைக்கு ஜெ டிவியில் “மைனாரிட்டி அரசு”ன்னு சொல்லும் போது பசங்க சிரிப்பதாக மாத்திக்கலாம். தவிர அப்படி சொல்லும் போது அந்த செய்தி வாசிப்பாளரே சில சமயம் சிரித்து விடுவதாக கேள்வி)

அக்கா ஸ்கூல் பேக்ன்னா அவனுக்கு அல்வா மாதிரி. எடுத்து கை பரபரன்னு பத்து பேஜ் கிழிச்சாத்தான் நிம்மதியா தூங்குவான். அது போல லேப்டாப்பிலே உச்சா போறதுன்னா ரொம்ப இஷ்டம்.

குக்கர் கத்தினா கொஞ்ச நாள் கத்திகிட்டு இருந்தான். ஆனா இப்ப அவனும் எசப்பாட்டு பாட ஆரம்பிச்சுட்டான். அதுக்கு நாம வேற கைத்தட்டனும்ன்னு எதிர்பார்ப்பான்.

அட இத்தினி ஏங்க! அவன் பிறந்து 2 நாள் ஆச்சு. அப்போ தங்கமணி என் கிட்டே 100 ரூவா கொடுத்து மருந்து மாத்திரை வாங்கிட்டு வர சொன்னாங்க. நானும் 99 ரூபாய்க்கு வாங்கிட்டு வந்துட்டேன். மீதி எத்தனைன்னு நாங்க கணக்கு பார்த்துகிட்டு இருக்கும் போது இவன் ரெண்டு கையையும் மூடிகிட்டு தூங்கினவன் திடீர்ன்னு ஒரு விரலை பிரிச்சு காமிச்சான் பாருங்க அப்படியே அசந்துட்டேன் போங்க!!!




May 27, 2008

"விட்"நாம் வீடு! பாகம் # 03

இதுக்கு முன்ன உள்ள பகுதிகளை இங்க போய் படிங்க இந்த பதிவு படிக்கும் முன்னே!!

********************

காபிபொடி வாங்க கடைக்கு போகும் போதே அந்த எட்டாம் வகுப்பு கலாட்டா ஞாபகத்துக்கு வந்து போனது. ஒரு அரைகிலோ வாங்கி வச்சிகிட்டு ஒரு வாரம் ஓட்டுவோம் என்கிற நினைப்பே எங்க வீட்டிலே எப்போதும் கிடையாது. அன்னாடம் காச்சியா தினம் 50 கிராம் வாங்கி வாங்கி தான் அன்றைய காபி. காரணம் கேட்டா அம்மா "மொத்தமா வாங்கி வச்சா வாசம் போயிடும்"ன்னு அழகா காரணம் சொல்லுவாங்க. அப்போ அதை கொட்டி வைக்க இந்த காலம் மாதிரி பெட் டப்பா எதுவும் அத்தனை கிடையாது. ஹார்லிக்ஸ் பாட்டில் தான். அதன் மூடிகூட வெள்ளை தகர மூடி, அதிலே நீல கலரிலே Horlicks ன்னு எழுதியிருக்கும். அப்பப்ப பக்கத்து வீட்டுக்கு அந்த மூடியால ஒரு மூடி கடன் கொடுப்பதும் அதை வாங்கிப்பதும் நடுத்தர குடும்பங்களில் சர்வ சாதாரணம் அப்போ.

அப்படித்தான் ராஜீவ்காந்தி இறந்த போது அவங்க வீட்டை டிவியில் பார்த்த அம்மா "அய்யோ பாவம் காபிபொடி ஒரு மூடி கடன் வாங்கனும்ன்னா கூட பாவம் அந்த அம்மா ரொம்ப தூரம் நடந்து போகனும். ஆம்பள இல்லாத அந்த அம்மாவுக்கு எத்தினி கஷ்டம்"ன்னு எதேர்ச்சையா சொன்ன போது எனக்கு அப்போது இருந்த சூழ்நிலையில் எப்படித்தான் சிரிப்பு வந்தது என்றே தெரியலை. அப்படி ஒரு சிரிப்பு. அதுக்கு என் தம்பி "ஆமாம்மா, ராஜீவ்காந்தியா போய் காபிபொடி கடன் வாங்க போறாரு. அதான் துறு துறுன்னு ராகுல் இருக்கானே. ஒரு நாள் இப்படித்தான் சைக்கிள்ல ஒரு மிதி மிதிச்சுகிட்டு போய் பக்கத்து ஷீலாதீட்ஷித் ஆண்டி வீட்டிலே மீந்து போன கத்திரிக்காய் புளிகுழம்பை குடுத்துட்டு கடன் கொடுத்த ஒரு மூடி காபிபொடி வாங்கிட்டு சர்ன்னு வந்து சோனியாகிட்டே கொடுத்துட்டு திரும்ப போய் புளிகுழம்பு செம்படத்தை வாங்கிட்டு வந்து சோனியாகிட்டே கொடுத்தா செம்படத்தை திறந்து பார்த்த சோனியாவுக்கு ஆச்சர்யம். அதுக்குள்ளே பிரியங்கா அடுத்த நாள் கேர்ஸ்ஹைஸ்கூலுக்கு போகும் போது வச்சிகிட்டு போக டிசம்பர் பூ. சோனியா அழுத்தி அழுத்தி மூடியிலே குடுத்த காபிபொடிய ஷீலா ஆண்ட்டி பொல பொலன்னு குடுத்த விஷயம் இவங்களுக்கு தெரியாமலே இவங்க ஹார்லிக்ஸ் பாட்டில்ல கொட்டிகிட்டாங்களாம். எல்லாம் ஜூவி கழுகிலே போட்டிருந்துச்சும்மா"ன்னு சொல்ல எங்கம்மாவுக்கு வெக்கமா போயிடுச்சு என்னடா இந்த பசங்க கிட்டே இப்படி மாட்டிகிட்டோமேன்னு.

அதல்லாம் போகட்டும், விஷயத்துக்கு வருவோம். எட்டாம் வகுப்பு படிக்கும் போது ஒரு நாள் அம்மா ஒரு ரூபாய் ஐம்பது காசு கொடுத்து ஐம்பது கிராம் பீபரி வாங்க சொன்னாங்க. நானும் ஓட்டை பை டவுசரிலே கையை விட்டுகிட்டு கூட்டுறவு வங்கி எதிரிலே "இளமை ஊஞ்சலாடுகிறது" "இமயம்" "ஜஸ்டிஸ் கோபிநாத்" பாதிகிழிக்கப்பட்ட "அஞ்சரகுள்ள வண்டி"ன்னு பட போஸ்ட்டரை எல்லாம் பார்த்துகிட்டே நின்னுகிட்டு இருந்துட்டு அருகே இருக்கும் நூர்காலனி எதிர் கொல்லையில் இருக்கும் நெல்லிகாய் மரத்திலே நாலு கல் எரிஞ்சு ஒரு காய் பொருக்கிகிட்டு ஒய்யாரமா போய் அம்பானியின் நிறுவனத்தின் பெயர் கொண்ட அந்த காபிபொடி கடை(ஹப்பா மாயவரத்து ஆளுங்களே கண்டுபிடிக்க முடியாத அளவு கிசுகிசு சொல்லியாச்சு)யிலே போய் டவுசர் உள்ளே கைய விட்டா கை தொடை வழியே எட்டி பார்க்குது. காசை காணும். வீட்டுக்கு போனா உதை நிச்சயம். சரி இதுவும் கடந்து போகும்ன்னு வீட்டுக்கு திரும்ப போயிட்டேன்.

அம்மா "எங்கடா காபிபொடி"ன்னு கேட்டா என்ன பதில் சொல்றதுன்னு ஹோம் ஒர்க் ஏதும் பண்ணிக்கலை. காரணம் நான் ஹோம் ஒர்க் பண்ணினா சொதப்பிடுவேன். பொய் அந்த நேரத்திலே தானா பொங்கும். வீட்டுக்கு போயாச்சு. அம்மா கேட்ட போது கொஞ்சமும் யோசிக்காம "அம்மா உனக்கு தெரியாதா சேதி, ஓனர் போயிட்டாரு. அதனால கடை லீவு. நானே கேவி கேவி அழுத்துட்டேன் தெரியுமா"ன்னு சொல்ல அம்மா "சரி கமலா காபியிலேயாவது வாங்கிட்டு வந்திருக்கலாமே அப்பா வந்தா இப்ப காபிக்கு என்ன பண்ணுவேன்"ன்னு சொல்ல "என்னம்மா நீ, கமலாவும் தான் லீவு. அவரு துக்கத்துக்கு போக வேண்டாமா"ன்னு சொல்லி சமாளிச்சேன்.

அப்பா வந்தாச்சு. அம்மா அப்பா காபி கேக்கும் முன்னமே "தெரியுமா சேதி"ன்னு ஆரம்பிச்சு விஷயத்த சொல்லி அதனால இன்னிக்கு காபி இல்லைன்னு சொல்லிட்டாங்க. அப்பாவும் "நாளைக்கு ஞாயித்து கிழமை தானே. குளிக்கும் முன்ன நான் போய் விசாரிச்சுட்டு வந்திடறேன்"ன்னு சொன்ன போது தான் நான் சொன்ன பொய்யின் உக்கிரம் எனக்கு புளி கரைக்க ஆரம்பிச்சுது. அடுத்த நாள் என்ன ஆகுமோன்னு. ஆண்டவா எனக்கு ஜூரம் அது இதுன்னு எதுனா கொடுத்துடு ராத்திரிக்குள்ளே இல்லாட்டி என் வாக்கு பலிக்கும்படியாவது அவருக்கு மோட்டசத்தை கொடுத்திடு"ன்னு பைத்தியகாரத்தனமாக எல்லாம் வேண்டிகிட்டேன். (இப்போ நினைச்சாலும் அந்த பைத்தியகாரத்தனம் எனக்கு ஒரு மாதிரியான சிரிப்பை கொடுக்குது).

காலையிலே அப்பாவுக்கு வேற ஏதோ முக்கியமான வேலை இருந்ததால் அங்க போயிட்டாங்க. எனக்கு பரம திருப்தி. மதியம் மூணு மணிக்கு அப்பா வீட்டுக்கு கோவமா வரும் போது தான் விஷயம் புரிஞ்சுது. அப்பா பஸ்ட்டாண்டிலே இருந்து வரும் போது காபிபொடி கடை திறந்திருக்கவே அங்க போயிருக்காங்க. அவர் பெரிய பையன் தான் இருந்திருக்கார். என்னடா நேத்து தான் போய் சேர்ந்திருக்கார். இன்னிக்கே கடை விரிச்சாங்களேன்னு ஒரு வித சந்தேகத்தோட மெதுவா அவர் பையன் கிட்டே "அப்பாவுக்கு என்ன தான் இருந்தாலும் இப்படி ஆகியிருக்க கூடாது"ன்னு சொல்ல அவர் பையனும் "எல்லாம் விதி சார். விதி யாரை விட்டுச்சு"ன்னு சொல்ல அப்பதான் அப்பாவுக்கு கொஞ்சம் சந்தேகம் போயிருக்கு. பின்ன தைரியமா துக்கம் விசாரிக்க ஆரம்பிச்சு இருக்காங்க. "ஆமா கொழந்த அப்பா எப்படி தவறினாங்க?"ன்னு கேட்டதுக்கு "அம்மாவ ஏணிய புடிச்சுக்க சொல்லிட்டு பரண் மேல ஏற பாத்திருக்கா, அம்மா பால் பொங்குதுன்னு விட்டுட்டு போயிட்டா. அப்பா தவறிட்டா, கால் பிராக்சர் ஆகிடுச்சு"ன்னு சொல்ல அப்பா அங்க மிதிச்சது தான் சைக்கிளை. அடுத்த ஸ்டாப்பிங் என்கிட்டதான்.

இந்த உமி நார்த்தங்காய் ஊருகாய் எப்படி போடுவது தெரியுமா. நல்லா வேக வச்சுட்டு. அப்படியே ஸ்பிரிங் மாதிரி நருக்கி உள்ளே சதை தெரியும் இடத்திலே எல்லாம் கல் உப்பை தடவி, நல்ல வெள்ளை ஊசி மிளகாய் இருக்கே அதை அம்மியிலே நைய அரச்சி அதையும் அதன் மேலே பூசி குளிப்பாட்டி ஒரு பானையிலே போட்டு அதன் தலையிலே இன்னும் கொஞ்சம் கல் உப்பை கொட்டி பானையின் வாயை ரெண்டு கையாலும் பிடித்து நல்ல நாலா பக்கமும் உப்பும் உரைப்பும் சேரும் படி குலுக்கு குலுக்குன்னு குலுக்கி ........அதான் நடந்துச்சு அன்னைக்கு அபிஅப்பாவுக்கு:-((

அதனால் தான் நேத்து காபிபொடி ஓனர்ன்னு நான் ஆரம்பிச்சதும் தங்கமணி அப்படி சொன்னாங்க. பாத்தீங்களா, குசும்பன் கல்யாணத்துக்கு போன கதை வேற எங்கயோ போயிடுச்சு. அதனால என்ன நாளை மீதிய சொன்னா போச்சு!! நாளை சந்திப்போமா!!

May 25, 2008

'விட்'நாம் வீடு!!! பாகம் # 02

போனா போவுது எனக்காக இதன் முதல் பாகத்தை இங்கே போய் படிச்சிட்டு வந்து இதை படிங்க!

***********************

நம்ம ஊர் பசங்களுக்கு ஒரு நல்ல பழக்கம் உண்டு. எவனுமே ராத்திரி தூங்க மாட்டான். வைத்தா கடை, பஸ்ட்டாண்டு, ரயில்வேஸ்டேஷன், அல்லது எந்த தொழிலதிபர்(?) கடையிலோ உக்காந்து உலகமயமாக்கல் முதல் புஷ் பொண்ணுக்கு எத்தினி சீர் செஞ்சாங்க,அந்த கல்யாணத்தின் கட்டுசாத கூடை வெரைட்டி என்ன, AVC காலேஜ்ல அடுத்த சேர்மனா யாரை போடலாம்(அடப்பாவமே),பாதாள சாக்கடை, செல்ல கொசுக்கள், நல்ல பன்னிகள், ATS க்கு எத்தன சொத்து இன்னி தேதிக்கு தேரும், டாட்டா வர வர மோசம் இப்படியாக உருப்படியா விவாதிச்சுட்டு வந்து படுத்தா டாண்னு 5 மணிக்கு கீ கொடுத்த பொம்மை மாதிரி எழுந்துடுவானுங்க. இந்த குப்புற அடிச்சு தூங்கின நம்ம ஊர் பசங்கன்னு யாரையும் பார்க்க முடியாது. காலை எழுந்த உடனே இப்பல்லாம் எல்லாருமே சொல்லி வச்சமாதிரி டவுசர்,ஆக்ஷன் ஷு மாட்டிகிட்டு வண்டி எடுத்துகிட்டு என்னவோ 5.15க்கு எல்லாம் முதல் கேம் ஸ்டார்ட் பண்ணுவது போல பறந்து அடிச்சுகிட்டு (ஒவ்வொறு குரூப்புக்கும் தனி தனி இண்டோர் ஸ்டேடியம் வச்சிருக்கானுவ) போய் நைட் விட்ட கதையிலே இருந்து தொடருவானுங்க. அப்படியே முதல் கேம் ஆரம்பிக்க எட்டு மணி ஆகிடும்.

அன்றைக்கு அப்படித்தான் எல்லாம் முடிஞ்சு அப்படியே அரை தொடையோடு, ஷெட்டில் பேட்டை வண்டியில் சொருகி கொண்டு மகளிர் கல்லூரி வழியா ஒரு ஏழெட்டு பேரா வரும் போது "இங்க பாருடீ இந்த அங்கிள் அய்யன் திருவள்ளுவர் சிலை மாதிரி கோணிகிட்டு வண்டி ஓட்டுறார்" என்னும் எகத்தாளம் பிடிச்சதுங்க சொன்னதை எல்லாம் நான் காதில் வாங்கி கொண்டிருந்தால் மூட் அவட்டாகிவிடும் அபாயம் இருந்ததால் "விடுறா கைப்புள்ள" ரேஞ்சுக்கு வீடு வந்து சேர்ந்த போது தான் எங்க வீட்டு குழம்பு ருசிக்கான விஷயம் நடந்து கொண்டிருந்தது. அனேகமாக நான் கிளைமாக்ஸ்ல் போன போது முப்பது ரூபாய்க்கு பேரம் முடிந்து மணியடிக்கும் தருவாயில் உரிமைக்குரல் எம்ஜியார் மாதிரி வந்து "நிறுத்து யாவாரத்தை"ன்னு பிளிற தங்கமணிக்கு சந்தோஷம் தாங்கலை. "இந்தா பாரு அபிஅப்பா வந்தாச்சு. இப்ப வச்சிக்க உன் வாய் சவடால. கேக்க ஆள் இல்லன்னு உனக்கு நெனப்பு"ன்னு மீன்காரிய பார்த்து ஒரு சிக்ஸர் அடிக்க நான் வண்டிய ஸ்டைலா நிப்பாட்டறேன்ன்னு நிப்பாட்டி (அது கீழே விழுந்தது தெருவின் குற்றம் என்னுடையது அல்ல) மெதுவா வந்து "என்ன ஆத்தா இது எத்தினி ரூவா"

"முப்பது ரூவாய்ங்க"

"அது மத்தவங்களுக்கு, ஆமா பூம்புகார்ல இப்ப யாரு எம்மெல்லே" (10 ரூவா குறைக்க MLA வை கூப்பிடுவது அதிகம் தான்)

"ஆமா எனக்கு எங்க ஆம்பள பேரே தெரியாது"

"ஆமா பூம்புகார் கணேசன தெரியுமா?"

"எம் மொவந்தான் பால்வாடி படிக்கிறான்"

"நா அவன கேக்கல. சரி வுடு. இது எத்தினி ரூவா"

"முப்பது"

"எனக்கு"

"பத்து"

"சரி குடுத்துட்டு போ, இனி நீ எத்தினி ரூவாய்க்கு கொடுத்தாலும் பத்து ரூவாத்தான் வாங்கிகணும் சரியா"

"சரிங்க"

அடுத்த பத்து நிமிஷத்துல எங்க நகர் அல்லோகலபட்டு போச்சு. "என்னங்க இப்படி எலச்சு போயிட்டீங்களே, இஞ்சி தட்டி போட்டு நல்லெண்ணெய் காச்சி வச்சிருக்கேன் தலயிலே தேச்சுக்கோங்க, மதியத்துக்கு அன்னாசிக்காய் மோர்குழம்பும் பண்ணிடவா, நல்லதா நாலு டி ஷர்ட் எடுக்கணும் இன்னிக்கு உங்களுக்கு...... இப்படியாக நான் சந்தோஷத்தில் மிதந்து மதியம் சாப்பிட்டு படுத்தவுடன் எப்போதும் போல மகளிர் மாநாடு வீட்டு வாசலில் நடந்தது. கேக்கணுமா தங்கமணி தான் ஈரோயின். பின்னே இருக்காதா முப்பது ரூவா மீனை பத்துக்கு வாங்கினவர் பொண்டாட்டியாச்சே.

அடுத்த நாள் "என்னங்க பக்கத்து வீட்டு அக்காவுக்கும் நீங்க தான் வாங்கி தரனுமாம், ஒரே அடம்"ன்னு சொன்னபோது கொஞ்சம் ஜெர்காகி போனேன். சரின்னு ஒத்துகிட்டு வாங்கும் போது அந்த அக்கா எப்போதும் வாங்குவது போல இல்லாம ஐந்து மடங்கு வாங்கியது. கேட்டதுக்கு "அபிஅப்பாதான் மலிசா வாங்குவாங்களேன்னு என் தம்பி வூட்டுக்கும் சேத்து வாங்கினேன். அவன் வந்து அவன் பங்கை எடுத்துட்டு போவான். பட்டணத்திகிட்டே பத்துக்கு இருவதா கொடுத்தா போச்சு என்னங்க அபிஅப்பா"ன்னு சொன்ன போது எனக்கு மயக்கம் வராத குறை தான்.

பட்டணத்தி என்னிடம் "இத எத்தினிக்கு தரலாம் சாமீ"ன்னு கேட்ட போது மஞ்சக்காவே அவசரகுடுக்கை மாதிரி "இருவது ரூவா"ன்னு சொல்ல நான் சின்னமாரியம்மன் கோவிலில் தீமிதித்த எஃபக்டிலே இருந்தேன். அதை விட கொடுமை அவங்க தம்பி வந்த போது "இந்தா இது அம்பது ரூவா அபிஅப்பா மலிசா வாங்கி குடுத்தாங்க நீயும் தான் உள்ளூர்ல குப்ப கொட்டுற அவர பாரு எப்பவாவது வந்தா கூட பட்டணத்தி எல்லாம் பயந்துகிட்டு கேட்ட ரூவாய்க்கு குடுக்குறா"ன்னு சொல்லி லாபம் பார்க்க, அன்றைய மதிய மகளிர் மாநாட்டில் இன்னும் ஐந்து பேர் அடுத்த நாள் மீன் வாங்க வருவதாக என் தங்கமணி சொல்ல நான் கிராம நாடகத்தில் வில்லன் முகத்தில் ஆரம்பம் முதல் சிவப்பு லைட் அடிச்சாலும் கிளைமாக்ஸில் திடீரென பச்சைலைட் லைட் அடிப்பார்களே (திருந்திவிட்டானாமாம்) அது போல பலவழிகளில் மாப்பு கேட்டு நிசத்தை சொல்ல அவங்க கீதாம்மா மாதிரி கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு கத்த கதை இதோடு முடியலை இன்னும் கொஞ்சம் இருக்கு.

"எனக்கு தெரியுஞ்சாமீ நீங்க இப்படி எதுனா பண்ணுவீங்கன்னு. போய் 50 கிராம் பீபரி காபிபொடி வாங்கிட்டு சுருக்க வாங்க"

"நான் எலச்சி போகலையா"

"இல்ல நல்லா குண்டா லாலேட்டன் மாதிரித்தான் இருக்கீங்க"

"இஞ்சி தட்டி போட்ட ஜோதிகா இல்லியா தலை குளிக்க"

"இல்ல தேவையில்லை உங்களுக்கு"

"மதியத்துக்கு பருப்பு உருண்டை குழம்பும் வச்சிடுறியா"

"ஹல்லோ நான் என்ன மிஷினா"

"நேத்து ஏதோ டி ஷர்ட் வாங்கணும்ன்னு சொன்னியே சாயந்திரம் போலாமா"

"இல்ல இன்னிக்கு பிரதோஷத்துக்கு போகனும். இந்த சட்டைக்கு என்னா குறைச்சல் ராசா மாதிரி இருக்கு போங்க போய் காபி பொடி வாங்கிட்டு வாங்க"

"உனக்கு தெரியாதா சேதி. அந்த காபிபொடி கடை ஓனர்"

"போதும் போதும் மாமி ஏற்கனவே சொல்லியிருக்காங்க அந்த உங்க 8ம் வகுப்பு அட்டகாசத்தை. பதிவு பெருசா போயிடுச்சு. நாளை குசும்பன் கல்யாணத்துக்கு போய் வந்த கதை பதிவிலே ஆரம்பத்திலே ஒரு சின்ன கொசுவத்தியா அதை சுத்திடுங்க. இப்ப போய் காபிபொடி வாங்கிட்டு வாங்க"

தலையை வீட்டுகுள்ளே தொங்க போட்டுகிட்டா கூட வெளியே சிங்கம் மாதிரி வருவோம்ல. மெதுவா வண்டிய எடுத்துகிட்டு தெருமுனைக்கு வந்தா பட்டணத்தி "சாமீ சீக்கிரம் வாங்க இத்தோட உங்க கணக்கு நூத்து நாப்பது ஆச்சு. குடுத்தா நா வெரசா பஸ்ஸ புடிப்பேன்"

நல்ல வேளை நான் முதல்ல ஜூவல்லரி விளையாட்டையோ, எக்ஸ்சேஞ்ச் விளையாட்டையோ விளையாடலை. நூத்து நாப்பதோட போச்சு.

நாளை சந்திப்போமா!!

May 24, 2008

"விட்"நாம் வீடு! பாகம் # 01




எப்பவுமே எங்க ஊரில் மாறாத சில விஷயங்கள் இப்பவும் மாறவில்லை. கோடாலி தைலம் கொண்டுவந்தியா, டைகர் பாம் இருக்கா, அங்க மழை பெய்யுமா, இந்தியா காசுக்கு எத்தன சம்பளம் உனக்கு, என் பையனுக்கு அடுத்த தடவ ஒரு விசா எடுத்துட்டு வா, போன்ற வெகுளிகளின் கேள்விகள் அனேகமாக மறைய தொடங்கி விட்டாலும், முக்கியமாக மூன்று விஷயங்கள் மாறவே இல்லாமல் அப்படியே இருக்கின்றன. முதலாவதாக மணி எக்ஸ்சேஞ்ச் செண்டர்.

"சார் முழு நோட்டா இருக்கா"

"பின்ன என்ன சார் கிழிச்சா எடுத்து வருவோம்"

"அது இல்ல சார், சில்லரையா இருக்கா, பெரிய நோட்டா இருக்கா"

"பெரிய நோட்டா தான் இருக்கு, இன்னிக்கு என்ன ரேட்?"

"மோசம் சார். நீங்க நேத்திக்கு வந்திருக்கணும். செம ரேட். இன்னிக்கு சரிஞ்சு போச்சு ரேட்"

"நாளைக்கு எப்படி இருக்கும், நான் வேணா வெயிட் பண்னட்டுமா?"

"சொல்ல முடியாது சார். இன்னும் அம்பது நாளுக்கு ஒரே ஏத்துமுகம் தான். கச்சா எண்ணெய் ஒரு பேரல் இன்னிக்கு என்னமா ஏத்திட்டான் தெரியுமா"(நான் அம்பது நாள் லீவ்லே வந்தது என் முகத்தில் எழுதி ஒட்டியிருக்கும் போல இருக்கு")

அடுத்து ஜூவல்லரி!

"வாங்க எப்ப வந்தீங்க"

"1 வாரம் ஆச்சு. இன்னிக்கு கிராம் என்ன ரேட்"

"ஏறிடுச்சு. ஆனா நேத்திக்கு செம டவுன். நீங்க நேத்து வந்திருக்கலாம்."

"நாளைக்கு எப்படி இருக்கும் நான் வேண்ணா வெயிட் பண்ணட்டுமா?"

"வெயிட் பண்றது உங்க இஷ்டம். ஆனா குறையும்ன்னு சொல்ல முடியாது. ஒரே ஏத்துமுகமாத்தான் தெரியுது"

"அம்பது நாளாகுமே குறைய"

"ரைட், எப்படி உங்களுக்கு தெரியும்?"

"என் லீவ் அத்தன நாள் தான்ன்னு எனக்கு தெரியாதா"

இதல்லாம் போகட்டும். அடுத்து மீன்காரி!

எப்பவும் எங்க வீட்டு தங்கமணிக்கு நான் ஊருக்கு போனாலே காலை பொழுது போக்கு மீன்காரிகிட்டே மல்லுக்கு நிற்பதுதான். அவங்க அசைவம் சாப்பிட மாட்டாங்களே தவிர நல்லா சமைக்க தெரியும். அதுவும் நான் மார்கெட் போய் வாங்கிவரும் வச்சிரம் போன்ற பெரிய மீன்களை விட பட்டணத்திகள் என சொல்லப்படும் மீன்கார பெண்கள் தெரு தெருவாக கொண்டு வந்து விற்கும் சின்ன மீன்களான செங்காலா, பொருவா, நெத்திலி வகை மீன்கள் என்றால் எனக்கு பிடிக்கும். அதுவும் நான் மட்டுமே சாப்பிடுவதால் கொஞ்சமாக வாங்கினால் போதும்.


அதாவது முப்பது ரூபாய்க்கு வாங்கினால் போதுமானதாக இருக்கும். 6 சின்ன மீன்கள் கிடைத்துவிடும். ஆனா அந்த பட்டணத்தி பெண் எடுத்து வச்சிட்டு 100 ரூபாய் சொல்லும். எங்க வீட்டிலே 3 ரூபாய்க்கு கேப்பாங்க அதை. (யாத்தாடி....) மீன்கார ஆத்தா உடனே 40 கேட்கும். என் வீட்டிலே 5 ரூபாய்க்கு கேட்பாங்க. உடனே மீன்காரம்மா கோவிச்சுகிட்டு கூடையை எடுத்துகிட்டு போக எதிர் வீட்டம்மா, பக்கத்து வீட்டு அக்கா எல்லாரும் மீன்காரியை மடக்கி பிடித்து உட்கார வச்சி கடைசியா 30 ரூபாய் ரேஞ்சுக்கு வாங்கிடுவாங்க. என்க்கு இந்த பேரம் பேசுவது ரொம்ப பிடிக்கும். நான் கேட்பேன். "ஏன் ஆத்தா 100 ரூவா சொல்லாம எடுத்த உடனே 30 சொல்லவேண்டியது தானே"ன்னு. அதுக்கு அந்த அம்மா "ஆமா நான் 30 சொன்னா உம் பொண்டாட்டி சும்மா குடுன்னு கேட்டாலும் கேக்கும்"ன்னு அலுத்துக்கும். அந்த 30 ரூபாயை கொடுக்கவே வீட்டில் மூக்காலே அழுதுகிட்டு தருவாங்க. நான் கேட்பேன் வீட்டிலே உனக்கு திருப்தியே இல்லியா 30க்கு வாங்கினதிலே"ன்னு. அதுக்கு அவங்க மீன் பேரம் பேசி வாங்கினா குழம்பு ருசியா இருக்கும்ன்னு சொன்னாங்க அதான்"ன்னு சொல்லுவாங்க. அடப்பாவமேன்னு நெனச்சுகிட்டு "யார் அப்படி சொன்னது"ன்னு கேட்டா பதில் சொல்லாம போயிடுவாங்க.

நான் அந்த மீன்கார அம்மாகிட்டே "எப்படி இன்னிக்கு யாவாரம்"ன்னு கேட்டா அவங்களும் "என்ன போங்க இன்னிக்கு மீனே வலையிலே படல. இன்னும் 50 நாள் ஆகும் போலருக்கு சரியா மீன் வலையிலே பட"....அடங்கொய்யால நான் 50 நாள் லீவ்ன்னு கலைஞர் டிவியிலே போட்டுட்டாங்களா. இதுக்கு எல்லாம் ஒரு வழி பண்ண இதோ புறப்பட்டு விட்டேன் அபிஅப்பா! மீதி விட்நாம் வீடு பாகம் இரண்டிலே!! நாளை சந்திப்போமா!


திஸ்கி: நம்ம ஊர் பாசக்கார பசங்க ஊர் சேதி இல்லியா இல்லியா என அடிக்கடி கேட்பதால் ஒரு 3 பாகம் போட உத்தேசம். ஓக்கேவா?

May 19, 2008

கூடப்படிச்ச குறத்திகள்!!! பாகம் # 2




இதை படிக்கும் முன்னே முதல் பாகத்திலே போய் படிச்சுட்டு இங்க வாங்க. ஆக்சுவலி இந்த பதிவுகள் நம்ம இளவஞ்சிக்காக. காரணம் அவரே வந்து சொல்லுவார்.படம் உதவி மரக்கானம் பாலா


எனக்கு என்னவோ ரிகர்சல்ல கூட உறுத்திகிட்டே இருந்துச்சு. ராத்திரி முழுக்க எங்களுக்கு ரிகர்சல் , மேக்கப் இத்யாதி இத்யாதின்னு போய்கிட்டே இருக்க அந்த டவுசர் பாண்டிகள் மட்டும் பீடி குடிச்சபடியே (பின்ன எப்படித்தான் அவனுங்களை தரம் தாழ்த்துவது) I want somebody to share - the rest of my life - share my inner most thoughts - know my intimate details- ன்னு dépêche mode band பாடிக்கிட்டு கிதாரை மென்மையா சுரண்டிகிட்டே இருந்தானுங்க. என்னவோ அது "வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது" பாட்டை விட ஒசத்தி மாதிரி அந்த சுடிதார்களும் சுத்தி உக்காந்து ரசிச்சுகிட்டு இருக்க ராதா மாத்திரம் குறத்தி மகன் ரெக்கார்டு பிளேட்டையும் , கூம்பு பிளேயரையும் கஷ்டப்பட்டு "முருகன் சவுண்ட் சர்வீஸ்" வீட்டு பையன் கையிலே கால்லே விழுந்து வாரிகிட்டு மாலா வீட்டு பக்கம் ஓடினான். அப்படியே ராத்திரி ரெண்டு மணி வரை ஓடிச்சு.

அப்படியே காலை 8 மணிக்கு எல்லாம் எழுந்து வந்தோம். நான் மாத்திரம் கொஞ்சம் பயத்துடனே இருந்தேன். நாம் ஏதோ விளையாட்டுக்கு சொல்ல போக அவங்க எல்லாம் நம்பி வந்துட்டா கடிச்சு தின்னுடுவாங்களேன்னு ஒரு வித பயம். இந்த லெட்சனத்திலே அந்த கேர்ல்ஸ் ஸ்கூல் கன்வீனர் வீட்டுக்கும் என் சித்தப்பா வீட்டுக்கும் எல்லை பிரச்சனை வேற இருந்துச்சு. சித்தப்பா வீட்டு காய்ந்த மாவிலைகளை அவங்க வீட்டு காம்பவுண்ட் உள்ளே கொட்டும் பெரும் பொறுப்பு வேற என்னோடது அப்போ. என்னை பார்த்தே பேச மாட்டாங்க, என் கழுத்து குரல் வலையை பார்த்து தான் நேத்து முழுக்க பேசிகிட்டு இருந்தாங்க. இன்னிக்கு என்ன பண்ண போறாங்களோன்னு நெனச்சுகிட்டு இருந்தப்ப தான் முதல் ஆட்டோ வந்துச்சு. உள்ளே பத்மா அவங்க அம்மா கூட குறத்தி வேஷத்திலே வந்து இறங்கி அவங்க அம்மாகிட்டே என்னை பார்த்து கையை நீட்ட எனக்கு பயம் அப்பவே ஏறி பாக்கெட் உள்ளே உக்காந்துகிச்சு. அவங்க அம்மா என்னை கூப்பிட்டு "அம்பி, இவா புரொக்ராம சித்த முன்னாடியே நடத்தினா என்ன? நா வேணா அவா கிட்ட பேசட்டுமா, பாவம் குழந்தைகள் சின்னாளப்பட்டி அரை பாவாடைல ஜரிகை குத்தி செரமப்படுறா"ன்னு கேக்க அதுக்கு நான் "வேண்டாம் மாமீ கார்த்தால ராதா இதுக்குன்னா சண்ட போட்டு அவா கிட்டே மண்டை வீக்கினதுன்னா மிச்சம். அவா ஸ்கூல்ல குங்ஃபூ ஃப்ரீயா சொல்லி தரா போலரிக்கு"ன்னு சமாளிச்சு உள்ளே அனுப்ப பார்த்தேன்.

அப்போன்னு பார்த்து மாலா அவ அண்ணா கூட லூனாவிலே வந்து இறங்கினா. பாய்ஞ்சு குதிச்சு வந்த ஸ்டைலே பக்கா பல்லவராயன்பேட்டை குறத்தி மாதிரி இருந்துச்சு. தோளில் மாட்டியிருந்த ஹேண்ட் பேக், கழுத்து மணிகள், கால் முட்டிக்கு கொஞ்சம் கீழே இறக்கமாக இருந்த பாவாடை, அரை தாவணி, டெம்ப்ரவரி மூக்குத்தி(ஜிமிக்கி பேப்பரை முருங்கை கோந்தில் ஒட்டி அந்த மூக்குத்தியை செட்டப் பண்ணினதா சமீபத்திலே சொன்னா – என்னா பெருமை பாருங்க) இப்படியாக மாலா ஒரிஜினல் குறத்தி மாதிரி அப்படி என் கண்ணே பட்டுடும் போல இருந்துச்சு.



வரிசையாக எல்லா குறத்திகளும் (5 பேர்) வந்து சேர ராதா போய் அவங்க கிட்டே "முழுசும் நனஞ்சாச்சு இதிலே முக்காடு என்ன, அந்த போத்தியிருக்கும் காசி துண்டை எடுத்துடுங்க"ன்னு ரொம்ப ஆர்வமா சொல்லிகிட்டு இருக்க அப்ப எங்க கன்வீனர் KR சார் வந்து சேர அதே நேரம் என் வில்லி கன்வீனரும் வர சார் என் கிட்டே ஆச்சர்யமாக "இவங்க ரோல் எப்போ?"ன்னு கேக்க நான் "இலை எடுத்தோன்ன சார்"ன்னு பவ்யமாக சொன்னேன். அதுக்கு சார் என்னை ஒரு மாதிரி பார்க்க(புரிஞ்சு போச்சு) அந்த டீச்சர் "சார், என்ன புரியலையா காலை டிபன் முடிஞ்ச பின்ன எங்க புரொக்ராம் பஃர்ஸ்ட், ஆல்வேஸ் லேடீஸ் பஃர்ஸ்ட்"ன்னு சொல்லிட்டு வெடுக்குன்னு போனாங்க.



நிகழ்ச்சி எல்லாம் ஆரம்பிக்க ஆரம்பிக்க இந்த அஞ்சும் முன் வரிசையிலே குந்திகிட்டு டால்டா டப்பா(ஹேண்ட் பேக்)வை தட்டி ஆர்பரிச்சுகிட்டே இருக்க எனக்கு கொஞ்சம் கொஞ்சமா பயம் போயிடுச்சு. நானும் ரிகர்சல் போயிட்டேன். எங்க நாடகத்திலே நான் ஒரு அப்பாவுக்கு பையன். அப்பா சரஸ்வதி பூஜைக்கு குறுத்து ஓலை வேணும்ன்னு கேக்க நான் கத்தியை எடுத்துகிட்டு (ராதா தான் குரு- வாத்தியார்) வாத்தியார் தோலை வெட்ட போவேன். வாத்தியார் என்னை பிடிச்சுகிட்டே வந்து அப்பாகிட்டே நியாயம் கேட்பார். அதுக்கு அப்பா "அய்யோ என் பையனை பூஜைக்கு குறுத்தோலை தானே கொண்டு வர சொன்னேன்"ன்னு சொல்ல அதுக்கு வாத்தியார் "உம்ம பையனுக்கு தமிழ் எழுதும் போது தான் எழுத்துப்பிழைன்னு நெனச்சேன் அய்யா, பேசும் போதும் கூட அவனுக்கு எழுத்து பிழையா ஈஸ்வரோ ரட்சத்"ன்னு சொல்லிட்டு போவார். இந்த காட்சிக்கு எல்லாம் அந்த அஞ்சும் டால்டா டப்பா கிழிய கிழிய அடிக்க எனக்கு வேற மாதிரியான பயம் வந்துடுச்சு. ஆஹா அடுத்த நிகழ்ச்சி அவங்க மேடை ஏறிட்டா என்ன ஆகும் என் கதின்னு. அந்த சீன் முடிஞ்சதும் நான் "சார் எனக்கு அவசரமா வயித்தை கலக்குவதால் என்னால் கிளைமாக்ஸ் நடிக்க இயலாது"ன்னு ஒரு துண்டு பேப்பரில் எழுதிட்டு ஓடி ஒழிஞ்சுட்டேன். தேவர்மகன்ல கமல்க்கு ஆன கதி ஆகிடுச்சு எங்க சாருக்கு. "இந்த காட்சியில் இவருக்கு பதிலாக இவர் நடிப்பார்"ன்னு ஒரு அட்டையிலே எழுதி முகத்தை மறைச்சுகிட்டு மேடை முன்னே வந்து நின்னுட்டு பின்னே அட்டையை தூக்கி போட்டுட்டு சாரே நடிச்சார். ஆக இப்போது சின்னத்திரையில் செய்யும் தகிடுதித்தத்தை பெத்ததே எங்க சார் தான்:-))



இருங்க கொஞ்சம் டீயும், வாழைக்காய் பஜ்ஜியும் சாப்பிட்டுக்கறேன். பதிவின் கிளைமாக்ஸ் வந்தாச்சு.



நான் அந்த மேடையின் பக்கவாட்டில் இருக்கும் மேக்கப் ரூமில் ஒழிந்து இருக்க ,அந்த ஐந்து குறத்திகளும் அவங்க தாய்குலங்களும், வில்லி கன்வீனரும், எல்லோரையும் சமாளிச்சுகிட்டு இருக்கும் எங்க சாரும், முக்கியமா ராதாவும் தான் இப்போ பாத்திரங்கள்.



கன்வீனர் டீச்சர்: சார், உங்க பசங்க மேல எனக்கு நம்பிக்கையே கிடையாது சார். இவனுங்க இங்கிலீஷ்ல பேசி ஸ்லாட் வாங்கின போதே நான் சந்தேகப்பட்டேன். இப்போ நடந்துடுச்சு சார். எங்க மானமே போச்சு. பாவம் பசங்க என்னமா ஏமாந்துடுச்சு பாருங்க.



சார்: நடந்தது நடந்து போச்சு விடுங்க டீச்சர். அவன் எனக்கே டிமிக்கி கொடுத்துட்டு ஓடிட்டான்.



மாலா: (கொஞ்சம் கோவத்தோட) சார் அவன் உங்களுக்கு மாத்திரம் டிமிக்கி கொடுக்கலை. "மாலா, குறத்தி எங்கயாவது அஞ்சுகல் வச்ச தோடு போட்டிருப்பாளா. கொஞ்சம் இரு. லாகடத்திலே போய் எட்டனா ஜிமிக்கி வாங்கியாறேன்"ன்னு போய் இந்த ஜிமிக்கிய வாங்கி கொடுத்துட்டான் சார்.அப்பவாவது சொல்லியிருந்தா நான் போய் டிரஸ்ஸ மாத்திட்டு பாம்பே மாமா பொண்ணோட சுடிதார் போன தடவை வந்தபோது வாங்கி வச்சிருந்தேன். அதை போட்டுட்டு வந்து இந்த மெட்ராஸ் ராட்சசிங்க முன்னால அழகா வந்திருப்பேன் சார்.



பத்மாவின் அம்மா: சார். சின்ன பொண்ணு அழுக்காக்கிடுவான்னு நான் பட்டு புடவை கொடுக்கலைன்னு பட்டாச்சரியார் ஆத்து மாமிகிட்டே கேட்டு தாயார் கட்டின எண்ணெய் பிசுக்கு பட்டு புடவைய வாங்கி புது லக்ஸ் போட்டு பிசுக்கு எடுத்து பித்தளை காபிசட்டிலே கரிகங்கு போட்டு தேச்சு வச்சிருந்தா குழந்த. நேக்கு இப்போ குழந்தய பாக்கவே பெத்த வயிறு பிச்சுண்டு போறது சார். லோகத்திலே இப்படீல்லாமா செய்வா பெருமாளே! (அப்போ பத்மா அழுது கொண்டிருந்ததாக ராதா சொன்னான்.)

(அப்போது அழுது கொண்டிருந்த பூவிழியை பார்த்து டீச்சர்)


டீச்சர்: நீ எதுக்குடி அழற? அதான் இல்லைன்னு ஆகிடுச்சே.

பூவிழி: இல்ல டீச்சர் எனக்கு வீட்டுக்கு போக பயமா இருக்கு டீச்சர். ராதா டால்டா டப்பா தான் வேணும்ன்னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டான். ஆனா எங்க வீட்டிலே அது இல்லியா அதனால அண்ணனும் அண்ணியும் தூக்கின பின்னே குழந்தைக்கு வச்சிருந்த பேரக்ஸ் டப்பாவிலே கால் டப்பா இருந்துச்சு. அதை சாக்கடையிலே கொட்டிட்டு பேரக்ஸ் டப்பா மேலே மஞ்சள் பேப்பர் ஒட்டி அதிலே பச்சை ஸ்கெட்சாலே மரம் படம் போட்டு DALDA ன்னு நீல கலரிலே எழுதி முடிச்சு ஒட்டி அந்த டப்பாவை எடுத்துட்டு வந்தேன் டீச்சர். அதான் பயமா இருக்கு.

சார்: டேய் ராதா நீயும் தான் இதுக்கு உடந்தையா?


ராதா: சார், இது அத்தனையும் பொய்ன்னு தெரிஞ்சா நான் இத்தன சிரமபட்டு முருகன் எலக்ட்ரிகல்ஸ்ல பிளேயர் எல்லாம் வாங்கி தருவேனா சார். அவனை தான் நீங்க நம்புவீங்க சார். 3 வருஷம் முன்னமே அவன் என்னை ஸ்கூல் டிராமாவிலே, பின்னே இலக்கிய மன்றத்திலே எல்லாம் பாடாபடுத்தியது தெரியாதா சார் உங்களுக்கு. சார் இந்த தடவை அவனுக்கு சரியான பனிஷ்மெண்ட் கொடுக்கனும் சார். எனக்கே நம்ம பசங்களை பார்த்தா பாவமா இருக்கு சார். குறத்தி டிரஸ்ல ஒரு பஃங்ஷனுக்கு வந்த வியாசமானவங்க உலகத்திலேயே இவங்க தான்ன்னு கெட்ட பேர் வாங்கி கொடுத்துட்டானே சார்!!


ராதா பேச பேச எனக்கு செம கடுப்பாகிடுச்சு. முதல் தடவையா கவுத்திட்டியேடா நாதாறின்னு மனசிலே நெனச்சுகிட்டேன்!!!


இதல்லாம் முடிச்சு பல வருஷம் ஆன பின்னே கடந்த ஏப்ரல் 26 அன்னிக்கு அபிகூட கடைத்தெருவுக்கு போனேன். அப்போ மணிக்கூண்டுக்கு பின்னே கோவில் வாசல்ல பத்மாவை நான் அன்னிக்கு பார்த்த மாதிரியே ஆனா சுடிதார்ல பார்த்து பிரம்மித்து போனேன். ஆமா அது பத்மா பொண்ணு போல இருக்கு. பக்கத்திலே பத்மா. என்னை பார்த்ததும் நெசமாவே வெக்கப்பட்டு போயிட்டாங்க. போய் பாப்பாவை அறிமுகம் செஞ்சு வச்சேன். அவங்க பொண்ணு +2 வாம். சென்னையிலே. "இந்த ஆண்ட்டி குறத்தி வேஷம் போட்டு ஆடினாங்க"ன்னு சொன்னேன். அதுக்கு பாப்பா "வேஷம் போட்டா?"ன்னு கேட்டா.


என்னை கேட்டாங்க "இப்பவும் அப்படித்தானா இருக்கீங்க?"ன்னு. "இல்லை நான் திருந்திட்டேன்"ன்னு சொன்னதுக்கு அவங்க "இல்ல நீங்க அப்படியே இருந்தாத்தான் நல்லா இருந்திருக்கும். மே பீ வாரிசை வளர்த்திருப்பீங்கன்னு நெனைக்கிறேன். அவ பதில்லயே தெரியுதே"ன்னு சொல்லிட்டு சிரிச்சாங்க. எனக்கு கூச்சமா போயிடுச்சு.

May 10, 2008

நல்லா இருங்கடே!!!

நான் 50 நாள் முன்னதாகவே இந்த பதிவை போட்டிருக்க வேண்டும். நான் நொந்து நூலாகி போனது அப்போதுதான். சரி ஏதாவது மிராக்கிள் நடந்து 50 நாளில் திருந்தியிருப்பானுங்கன்னு நெனச்சேன். மாறாக இன்னும் அதிகமா கெட்டு போயிட்டானுங்க. திருச்சி ஏர்போர்ட் ஆளுங்கதாங்க. மிக மட்டமான சர்வீஸ். படிச்சவன், படிக்காதவன்,நல்லவன்,(மாங்கொட்டை சிம்பு மாதிரி)கெட்டவன், ஏழை, பணக்காரன், ஊனமுற்றவன், அரசியல்வாதி, விஞ்ஞானி போன்ற எந்த பாகுபாடும் இல்லாத அதாவது கடவுளுக்கு சமமாக எல்லோரையும் பாவிக்கும் ஒரு இடம் எது என்றால் அது திருச்சி ஏர்போர்ட் தான்.

அந்த நாய் கருப்பா இருந்துச்சு. நெத்தியிலே அந்த விடிய காலை 4.30க்கே ஆஞ்சநேயர் செந்தூரம் வச்சிருந்துச்சு. இமிக்ரேஷன்ல உக்காந்து இருந்துச்சு. என்னை மாத்திரம் இல்லை, எல்லோரையும் திருடனை போலவே பார்த்துச்சு. ஒருமையில் விளித்தது. சகட்டுமேனிக்கு திட்டியது. யாரும் எதிர் கேள்வி கேட்க்கவில்லை. நாயை அடிப்பானேன் என எல்லோரும் விட்டிருக்கலாம். அது தன்னை தானே திட்டிக்கொண்டது. தான் ஏதோ கழுதை மேய்க்கும் வேலை பார்ப்பதாக. இந்த வேலை கிடைக்காவிட்ட்டால் அது சத்தியமாக சைக்கிளில் வெங்காய மூட்டை வைத்து கொண்டோ, அல்லது கோல பொடி வித்துகிட்டோ தான் வாழ நேரிடும்.

என்ன ஒரு திமிர். மெட்டிஒலி அப்பா மாதிரி ஒரு பெரியவரை "ந்தா பெருசு, உயிரை வாங்காதே ஒன் ஊரு என்னா,எம்பர்கேஷன் கார்டு பில்லப் பண்ண தெரியல பிளைட் ஏற வந்துட்டியா"ன்னு கேக்குது.

"ஆல் பிளடி இண்டியன்ஸ்" என்பது போல எங்களை பார்த்தது. இதோ இப்போது நான் கொழும்பில் இருக்கிறேன். ஏர்ப்போர்ட் கிளி கொஞ்சுது. டாய்லெட் அம்சமா இருக்கு. ஓக்கே இலங்கை இந்தியாவை விட பணக்கார நாடு தான். திருச்சி ஏர்போர்ட் வருமைக்கு பிறந்ததாக கூட இருக்கலாம். அதற்காக டாய்லெட்டில் அனடாமி பாடம் எடுக்கனுமா என்ன. அந்த எகத்தாலம் பிடிச்ச நாய் கூட அந்த டாய்லெட்குக்கு தான் போகும் போல இருக்கு. அதை எல்லாம் அழிச்சா தான் என்ன!

இந்த நாய் டூட்டி முடிச்சு வீட்டுக்கு போன பின்னே அதன் குழந்தைகள் அதன் காலை கட்டி கொள்ளுமே, அதுக்காகவாவது கொஞ்சம் தன்மையா நடந்துக்க கூடாதா! தலைவலித்தால் சூடா காபி கிடைக்குமே அதற்காகவாவது கொஞ்சம் பரிந்து பேசக்கூடாதா!இவன் சம்பளத்தில் பாதி கொடுத்தா கூட நான் நாய் மாதிரி சேவகம் பண்ணுவேன் அங்கே! நாதாறி பய அவனுக்கு தான் கொடுக்கும் இந்த அரசாங்கம் வேலை.

நான் சம்பாதிச்சு தரும் அன்னிய செலாவனி மாத்திரம் இனிக்குது. ஆனா எங்களை மாத்திரம் நாய் மாதிரி நடத்தனுமா? என்ன அனியாயம்டா இது! நான் சொல்வது தப்புன்னு பட்டுச்சுன்னா சொல்லுங்க மக்கா!

May 5, 2008

அபிபாப்பா & நிலாகுட்டி பிறந்தநாள் கலாட்டா பதிவு!!!!

இன்று காலை முதல் வீடே ஜெகஜோதியா இருந்துச்சு. பாப்பாவுக்கு பிறந்த நாள். பதிவெல்லாம் போட்டிருக்காங்க. சென்ஷி முதல் வாழ்த்து. நிலாகுட்டிக்கும் இன்னிக்கு பிறந்தநாள். நான் ஏதோ வித்யாசமா பண்றேன்ன்னு ராத்திரி 12க்கு பாப்பாவை எழுப்பி வாழ்த்து சொன்னா அவ எப்பவும் போல டயலாக் எல்லாம் விடுறா! சரின்னு எழுப்பி உக்கார வச்சி நிலாவுக்கு போன் பண்ணி முதல் வாழ்த்து சொல்லலாம்ன்னு நெனச்சா நந்து டயலாக் அடிக்கிறார். என்ன கொடுமை சார்ன்னு! ஏன்னா பாப்பா “பேப்பி ஹர்த் டே நிலாகுட்டிம்மா…..போடா அப்பா………அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்”ன்னு!என்ன கோவம் வருது பசங்களுக்கு! அம்மாடியோவ்!

என்னிக்குமே இல்லாம திருநாளா இன்னிக்க்கு பாப்பாவை அழைச்சுகிட்டு ஒரு ஜாலி ரவுண்ட் போகலாம்ன்னு வண்டி எடுத்தேன். முதல்ல வீட்டை விட்டு கிளம்பிய பின்னே ஒரு சின்ன பாலம். அதை தாண்டும் போது எதுக்கே ஒருத்தர் தைய தக்கான்னு ஒரு டிவிஎஸ் 50 ல வந்துகிட்டே பிரேக் பிடிச்சுகிட்டே ரெண்டு காலையும் தரையிலே தேச்சுகிட்டே ஒதுங்கி போகாம கரெக்ட்டா என் வண்டியிலே மோதி நிப்பாட்டினார். பாப்பா உடனே “குட்மார்னிங் சார்” ன்னு சொன்னா! அப்போ சாயந்திரம். என்ன பாப்பா சாயந்திரமாச்சே குட்மார்னிங் சொல்றியேன்னு கேட்டதுக்கு “விடுங்கப்பா அவர் வாத்தியார் தானே மன்னிச்சுடுவார்”ன்னு கேஷுவலா சொன்னபின்ன நான் கேட்டேன் “அவரை உனக்கு தெரியுமா?”ன்னு. “இல்லப்பா, டிவிஎஸ் 50 யை பிரேக் பிடிச்சுகிட்டே வந்தும் டிவிஎஸ் மேலே நம்பிக்கை இல்லாம ரெண்டு கால் ஸ்லிப்பரையும் தேச்சுகிட்டே வந்து கரெக்ட்டா மோதினா அது எலிமெண்ட்ரி ஸ்கூல் வாத்தியார் தான்ப்பா, இவர் சீக்கிரம் ஹெட் மாஸ்ட்டரா ஆகிடுவார் பாருங்க”ன்னு சொன்னா. எனக்கு ஆச்சர்யமா போச்சு. என் சந்தேகத்தை போக்கிக்க வண்டிய திருப்பிகிட்டு போய் அவர் கிட்டே “சார் நீங்க வாத்தியாரா?”ன்னு கேட்டதுக்கு “ஆமா சார் சீக்கிரம் ஹெட்மாஸ்ட்டரா ஆகிடுவேன்”ன்னு சொன்ன போது நான் ஆச்சர்யத்தின் உச்சிக்கே போயிட்டேன்.

பாப்பாகிட்டே “அவர் ஹெட்மாஸ்ட்டராக போறார்ன்னு எப்படி தெரிஞ்சுகிட்டே”ன்னு கேட்டப்ப “சிம்பிள்ப்பா ரியர் பிரேக் போட்டும் டிவிஎஸ் மேல நம்பிக்கை இல்லாம ரெண்டு காலையும் தேச்சுகிட்டு வந்தா வாத்தியார். அவர் கால் மேலயும் நம்பிக்கை இல்லாம ஃபிரண்ட் பிரேக்கையும் பிடிச்சு குப்புற விழுந்தா அவர் ஹெட்மாஸ்ட்டர். இவர் இத்தன கலேபரத்திலும் ஃபிரண்ட் பிரேக்கை தேடினப்பவே நெனச்சேன் சீக்கிரமா ஹெட்மாஸ்ட்டரா ஆகிடுவார்ன்னு”ன்னு சொன்னா.

“அடப்பாவமே, பாப்பா நம்ம வலையிலே நிறைய வாத்தியார் இருக்காங்க தெரியுமா”ன்னு கேட்டப்ப “ஆமாப்பா நம்ம இளவஞ்சி அங்கிள் கூட புல்லட்டை கால் தேச்சுகிட்டே வருவாரான்னு கேக்கனும்ப்பா”ன்னு சொன்ன போது ஆஹா இவ நம்மை விட பயங்கரமா கலாய்ப்பா போல இருக்கேன்னு நெனச்சுகிட்டேன்.

“பாப்பா இப்படி எல்லாம் கலாய்க்கிறியே, நானெல்லாம் கலாய்ச்சா என்னா ஆகும் தெரியுமா, துபாயில் 1 மணி நேரம் டைம் பாஸுக்கு 2 திர்காம் ன்னு இரு போஸ்ட் படிச்சதில்லையா?”ன்னு கேட்டதுக்கு “அட போங்கப்பா, யாரோ இளிச்ச வாய் மாட்டினதுக்கு கலாய்ச்சு அதை போஸ்ட்டா போட்டு 50 கமெண்ட் வாங்குறது நல்லாவா இருக்கு. கலாய்ச்சா என்னை மாதிரி கலாய்க்கனும் இல்லாட்டி பிலாக்கை பிளாக் பண்ணிட்டு திருவிழாவிலே பால்பன் விக்க போகனும்ப்பா”ன்னு சொன்ன போது கொஞ்சம் ஆடிப்போயிட்டேன். அப்படி நீ என்ன கலாய்ச்சே யாரை கலாய்ச்சேன்னு கேட்டப்பதான் இந்த பதிவுக்கான மேட்டர் கிடைச்சுது.
*****************************************

அபிபாப்பா:ஹல்லோ! கலைஞர் டிவியோட இசையருவியாங்க!

சுதா(காம்பியரர்) : ஆமா நீங்க யாரு, யாருக்கு வாழ்த்து சொல்லனும் அதுக்கு முன்ன உங்க வீட்டு டிவியோட வால்யூம் கம்மி பண்றீங்களா?

அபி: என் பேர் அபிராமிங்க ஆண்ட்டி, நீங்க அழகா இருக்கீங்க,

சுதா: ரொம்ப சந்தோஷம், உங்க ஹாபி என்ன? அதுக்கு முன்ன உங்க வீட்டு டிவி வால்யூம் குறைச்சுடுங்க

அபி: என் ஹாபி தான் சொன்னனே ஆண்ட்டி முன்னடியே, எந்த டிவிக்கு போன் பண்ணினாலும் நீங்க அழகா இருக்கீங்கன்னு சொல்றதுதான் என் ஹாபி, அப்பதானே உங்களையும் என்கரேஜ் பண்ண மாதிரி இருக்கும்.

சுதா: (கொஞ்சம் ஜெர்க் ஆகி பின்ன சுதாரிச்சுகிட்டு) ஹி ஹி ஹி…தேங்க்ஸ், சரீ உங்க வீட்டு டிவிய சவுண்ட் கம்மி பண்ணும்மா

அபி: என்ன ஆண்ட்டி எங்க வீட்டு டிவிய ஆஃப் பண்ணியாச்சு, நீங்க திரும்ப திரும்ப சவுண்டை குறைக்க சொன்னா எப்படி?

சுதா: இல்ல அபிம்மா பொய் சொல்ல கூடாது, டிவி சவுண்ட் கம்மி பண்ணுங்கப்பா

அபி: என்ன ஆண்ட்டி சின்ன வயசிலே விரல் சூப்பினவங்க யாராவது பொய் சொல்லுவாங்களா? நீங்க வடிவேல் அங்கிள் ஜோக் எல்லாம் பாக்க மாட்டீங்களா?

சுதா(கொஞ்சம் எரிச்சலுடன்): சேப்பா இருக்கிறவங்க பொய் சொல்ல மாட்டாங்க, சின்ன வயசிலே விரல் சூப்பினா பொய் சொல்ல மாட்டாங்க, இதல்லாம் இருக்கட்டும்,முதல்ல உங்க வீட்டு டிவி வால்யூம் கம்மி பண்ணுங்கப்பா!ப்ளீஸ்!

அபி: என்ன ஆண்ட்டி என் மேல நம்பிக்கை இல்லன்னா வீட்டிலே அம்மா இருக்காங்க, அவங்க நம்பர் தாரேன், போன் பண்ணி கேளுங்க டிவி ஆஃப் பண்ணியிருக்கா இல்லியான்னு!

சுதா: (குழப்பத்துடன்) எதுக்கு போன் பண்ணனும் நீயே ரிசீவரை குடுத்தா போச்சு அம்மா கிட்டே!

அபி: என்ன ஆண்ட்டி எங்க வீடு பத்துவீடு தள்ளி இருக்கு அம்மாம் பெரிய ஒயரா இருக்கு உங்க வீட்டு ரிசீவர்ல. நான் தாத்தா வீட்டிலே இருந்து போன் பண்றேன். ஆனா சத்தியமா எங்க வீட்டு டிவி சுவிட்ச் ஆஃப் என்னை நம்புங்க!

சுதா: (கொஞ்சம் அழுதுகிட்டே) ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா இப்பவே கண்ணை கட்டுதே, யார் யாருக்கு வாழ்த்து சொல்லனும்!

அபி: எனக்கும் நிலாபாப்பாவுக்கும் தான் வாழ்த்து சொல்லனும். அதுவும் நீங்க தான் சொல்லனும், ஏன்னா இன்னிக்கு எங்களுக்கு இன்னிக்கு பிறந்த நாள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்!


“அப்பா கலாய்ச்சா இப்படி கலாய்க்கனும், அனேகமா அவங்க காம்பியரர் வேலையை விட்டுட்டு நம்ம ஊர் திருவிழாவிலே சர்பத் விக்க வந்துடுவாங்கன்னு நெனைக்கிறேன்!!!!”ன்னு பாப்பா சொல்லி முடிச்ச பின்னே சர்ர்ர்ர்ர்ர்ன்னு பிரேக் போட்டு நிப்பாட்டினேன்.எதிரே இன்னும் ஒரு வாத்தியார் போல இருக்கு)))