பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

May 24, 2008

"விட்"நாம் வீடு! பாகம் # 01
எப்பவுமே எங்க ஊரில் மாறாத சில விஷயங்கள் இப்பவும் மாறவில்லை. கோடாலி தைலம் கொண்டுவந்தியா, டைகர் பாம் இருக்கா, அங்க மழை பெய்யுமா, இந்தியா காசுக்கு எத்தன சம்பளம் உனக்கு, என் பையனுக்கு அடுத்த தடவ ஒரு விசா எடுத்துட்டு வா, போன்ற வெகுளிகளின் கேள்விகள் அனேகமாக மறைய தொடங்கி விட்டாலும், முக்கியமாக மூன்று விஷயங்கள் மாறவே இல்லாமல் அப்படியே இருக்கின்றன. முதலாவதாக மணி எக்ஸ்சேஞ்ச் செண்டர்.

"சார் முழு நோட்டா இருக்கா"

"பின்ன என்ன சார் கிழிச்சா எடுத்து வருவோம்"

"அது இல்ல சார், சில்லரையா இருக்கா, பெரிய நோட்டா இருக்கா"

"பெரிய நோட்டா தான் இருக்கு, இன்னிக்கு என்ன ரேட்?"

"மோசம் சார். நீங்க நேத்திக்கு வந்திருக்கணும். செம ரேட். இன்னிக்கு சரிஞ்சு போச்சு ரேட்"

"நாளைக்கு எப்படி இருக்கும், நான் வேணா வெயிட் பண்னட்டுமா?"

"சொல்ல முடியாது சார். இன்னும் அம்பது நாளுக்கு ஒரே ஏத்துமுகம் தான். கச்சா எண்ணெய் ஒரு பேரல் இன்னிக்கு என்னமா ஏத்திட்டான் தெரியுமா"(நான் அம்பது நாள் லீவ்லே வந்தது என் முகத்தில் எழுதி ஒட்டியிருக்கும் போல இருக்கு")

அடுத்து ஜூவல்லரி!

"வாங்க எப்ப வந்தீங்க"

"1 வாரம் ஆச்சு. இன்னிக்கு கிராம் என்ன ரேட்"

"ஏறிடுச்சு. ஆனா நேத்திக்கு செம டவுன். நீங்க நேத்து வந்திருக்கலாம்."

"நாளைக்கு எப்படி இருக்கும் நான் வேண்ணா வெயிட் பண்ணட்டுமா?"

"வெயிட் பண்றது உங்க இஷ்டம். ஆனா குறையும்ன்னு சொல்ல முடியாது. ஒரே ஏத்துமுகமாத்தான் தெரியுது"

"அம்பது நாளாகுமே குறைய"

"ரைட், எப்படி உங்களுக்கு தெரியும்?"

"என் லீவ் அத்தன நாள் தான்ன்னு எனக்கு தெரியாதா"

இதல்லாம் போகட்டும். அடுத்து மீன்காரி!

எப்பவும் எங்க வீட்டு தங்கமணிக்கு நான் ஊருக்கு போனாலே காலை பொழுது போக்கு மீன்காரிகிட்டே மல்லுக்கு நிற்பதுதான். அவங்க அசைவம் சாப்பிட மாட்டாங்களே தவிர நல்லா சமைக்க தெரியும். அதுவும் நான் மார்கெட் போய் வாங்கிவரும் வச்சிரம் போன்ற பெரிய மீன்களை விட பட்டணத்திகள் என சொல்லப்படும் மீன்கார பெண்கள் தெரு தெருவாக கொண்டு வந்து விற்கும் சின்ன மீன்களான செங்காலா, பொருவா, நெத்திலி வகை மீன்கள் என்றால் எனக்கு பிடிக்கும். அதுவும் நான் மட்டுமே சாப்பிடுவதால் கொஞ்சமாக வாங்கினால் போதும்.


அதாவது முப்பது ரூபாய்க்கு வாங்கினால் போதுமானதாக இருக்கும். 6 சின்ன மீன்கள் கிடைத்துவிடும். ஆனா அந்த பட்டணத்தி பெண் எடுத்து வச்சிட்டு 100 ரூபாய் சொல்லும். எங்க வீட்டிலே 3 ரூபாய்க்கு கேப்பாங்க அதை. (யாத்தாடி....) மீன்கார ஆத்தா உடனே 40 கேட்கும். என் வீட்டிலே 5 ரூபாய்க்கு கேட்பாங்க. உடனே மீன்காரம்மா கோவிச்சுகிட்டு கூடையை எடுத்துகிட்டு போக எதிர் வீட்டம்மா, பக்கத்து வீட்டு அக்கா எல்லாரும் மீன்காரியை மடக்கி பிடித்து உட்கார வச்சி கடைசியா 30 ரூபாய் ரேஞ்சுக்கு வாங்கிடுவாங்க. என்க்கு இந்த பேரம் பேசுவது ரொம்ப பிடிக்கும். நான் கேட்பேன். "ஏன் ஆத்தா 100 ரூவா சொல்லாம எடுத்த உடனே 30 சொல்லவேண்டியது தானே"ன்னு. அதுக்கு அந்த அம்மா "ஆமா நான் 30 சொன்னா உம் பொண்டாட்டி சும்மா குடுன்னு கேட்டாலும் கேக்கும்"ன்னு அலுத்துக்கும். அந்த 30 ரூபாயை கொடுக்கவே வீட்டில் மூக்காலே அழுதுகிட்டு தருவாங்க. நான் கேட்பேன் வீட்டிலே உனக்கு திருப்தியே இல்லியா 30க்கு வாங்கினதிலே"ன்னு. அதுக்கு அவங்க மீன் பேரம் பேசி வாங்கினா குழம்பு ருசியா இருக்கும்ன்னு சொன்னாங்க அதான்"ன்னு சொல்லுவாங்க. அடப்பாவமேன்னு நெனச்சுகிட்டு "யார் அப்படி சொன்னது"ன்னு கேட்டா பதில் சொல்லாம போயிடுவாங்க.

நான் அந்த மீன்கார அம்மாகிட்டே "எப்படி இன்னிக்கு யாவாரம்"ன்னு கேட்டா அவங்களும் "என்ன போங்க இன்னிக்கு மீனே வலையிலே படல. இன்னும் 50 நாள் ஆகும் போலருக்கு சரியா மீன் வலையிலே பட"....அடங்கொய்யால நான் 50 நாள் லீவ்ன்னு கலைஞர் டிவியிலே போட்டுட்டாங்களா. இதுக்கு எல்லாம் ஒரு வழி பண்ண இதோ புறப்பட்டு விட்டேன் அபிஅப்பா! மீதி விட்நாம் வீடு பாகம் இரண்டிலே!! நாளை சந்திப்போமா!


திஸ்கி: நம்ம ஊர் பாசக்கார பசங்க ஊர் சேதி இல்லியா இல்லியா என அடிக்கடி கேட்பதால் ஒரு 3 பாகம் போட உத்தேசம். ஓக்கேவா?

46 comments:

 1. :)
  நல்ல அனுபவங்கள்!

  50 ஆகும்! நல்லா பின்னூட்டம்லாம் வர!

  ReplyDelete
 2. இதுக்கு பேர்தான் முகராசின்னு பேரா?

  ReplyDelete
 3. இம்புட்டு காமெடியா நடக்குது.......
  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
  அடுத்தடுத்த பாகங்களா?.... சஸ்பென்ஸ் வைக்காம போட்டுத் தாக்குங்க...

  ReplyDelete
 4. அடுத்த பாகம் வேற இருக்கா? ஆஹா போடுங்க. போடுங்க.

  ReplyDelete
 5. //அடங்கொய்யால நான் 50 நாள் லீவ்ன்னு கலைஞர் டிவியிலே போட்டுட்டாங்களா. //

  லண்டன் பி.பி.சி ல கூட போட்டாங்களே. யாரும் உங்ககிட்ட சொல்லலையா?

  ReplyDelete
 6. ஹாஹா.. வழக்கமா உங்கள வச்சி நீங்க தான் காமெடி பண்ணுவீங்க.. இப்போ எல்லாரும் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க போல..

  ஆபிஅப்பாவும் அம்பது நாளும்னு தலைப்பு வச்சிருக்கலாம்.. :P

  ReplyDelete
 7. இருந்தாலும் இவ்வளவு ஃபேமஸா இருக்கக் கூடாதுப்பா:)

  அபியைக் கேட்டா விவரமா சொல்லுவாளே!! சீக்கிரம் பாகம் ரெண்டு போடுங்க.

  ReplyDelete
 8. வாங்க கப்பி பாவலரே! என்ன ரொம்ப நாளா காணுமே:-))

  ReplyDelete
 9. வாங்க சிபிசாரே! அது என்ன 50 ஆகும் நல்லா பின்னூட்டம்லாம் வர, புரியலையே:-))

  ReplyDelete
 10. //நம்ம ஊர் பாசக்கார பசங்க ஊர் சேதி இல்லியா //

  நானே நானா?

  இல்லை வேற யாரோ தானா?


  மெல்ல மெல்ல ஊர்கதை சொல்லுவீங்களாம் :))))

  ReplyDelete
 11. இளா, எதுக்கு பேர் முகராசி! என்னப்பா எல்லாரும் பொடி வச்சே பேசறீங்க:-))

  ReplyDelete
 12. தமிழ்பிரியன், நான் இன்னும் காமடிக்கு உள்ளயே போகலை, இன்னும் இருக்கு கேளுங்க அடுத்த அடுத்த பாகத்திலே:-))

  ReplyDelete
 13. // முதலாவதாக மணி எக்ஸ்சேஞ்ச் செண்டர்.
  ///

  அந்த மணி எக்ஸ்சேஞ்சுக்குத்தானே போனீங்க?

  படா கில்லாடியான ஆளுங்க அவுரு :)

  ReplyDelete
 14. நிஜமா நல்லவரே, அடுத்த பாகமும் இருக்கு போட்டிடுவோம்.ஆமா பிபிசி என்ன லண்டன்லயா இருக்கு?:-)

  ReplyDelete
 15. ஆமா சஞ்சய், நம்ம பொழப்பு சிலசமயம் இப்படித்தான் ஆகிடுது:-))

  ReplyDelete
 16. வாங்க வல்லிம்மா, என்ன பேமஸ் போங்க ஆள் ஆளுக்கு காய்ச்சி எடுத்து நம்ம வீட்டிலே நம்மை காமடி பண்ணிட்டாங்க போங்க, அபியை கேட்டிருக்கலாமோ:-))

  ReplyDelete
 17. //ILA said...
  இதுக்கு பேர்தான் முகராசின்னு பேரா?//


  முகராசியாவது நேர்ல பார்க்கும் போதுதான் பேர் ராசி இருக்கே அப்பப்பா அபி அப்பா என்னத்த சொல்லுறது போங்க!

  ReplyDelete
 18. நான் ரொம்ப பிசியா இருக்கேன் (அப்டிதான் எல்லாரும் சொல்றாங்க) இருந்தாலும் ஒரு அட்டெண்டன்ஸ் !!

  ReplyDelete
 19. இதுல பாகம் 3 ஆ சரிதான்.
  ஆமா ஓட்டைவாய் உலகநாதன் சுகமா விசாரிச்சேன்னு சொல்லுங்க

  ReplyDelete
 20. ஆயில்யா நீயே நீதான், நீயே நீதானப்பா, நீ மட்டுமல்ல இன்னும் சிலரும்.

  நீ நினைக்கும் கில்லாடிகிட்டே நானெப்பவ்வும் போக மாட்டேன். நான் சொல்வது யுஏஇ எக்சேஞ்ச் செண்டர்:-))

  ReplyDelete
 21. நி.ந. நன்றிப்பா,பேர்ராசின்னு சொன்னதுக்கு. ஏன்னா நீ மட்டும் தான்ப்பா என் முகத்தை இனும் பார்க்கலை:-))

  ReplyDelete
 22. வாங்க சிவா, ஏதோ லவ்ஸ் ஓடுதுன்னு பட்சி சொல்லுச்சே. என்கிட்டே ரகசியமா சொல்லகூடாதா? வந்ததுக்கு நன்றிப்பா:-))

  ReplyDelete
 23. வரேவ்வாவ்! இங்க பாருங்க மக்கா நம்ம நெல்லை டீச்சர் வந்திருக்காக! எப்படி டீச்சர் நலமா? எங்களை மறந்துட மாட்டீங்கதானே! கண்டிப்பா ஓ.வா.உ.நாதனை விசாரிச்சு சொல்றேன்!

  ReplyDelete
 24. நல்ல அனுபவங்கள்தான்...

  ஆனா, துபாய்லருந்து வந்தவங்கன்னு சொன்னா, வருங்காலத்துல ஊரவிட்டே ஓடிப்போயிடுவாங்கபோல இருக்குதே...

  ReplyDelete
 25. எழுத்து ஓட்டம் கொஞ்சம் கூட நகைச்சுவையை பாதிக்காம இருக்கு.
  Good.

  ReplyDelete
 26. அரை நூறுலே இவ்வளோ 'அறு' சுவையா? :-))))

  ReplyDelete
 27. ///அபி அப்பா said...
  வரேவ்வாவ்! இங்க பாருங்க மக்கா நம்ம நெல்லை டீச்சர் வந்திருக்காக! எப்படி டீச்சர் நலமா? எங்களை மறந்துட மாட்டீங்கதானே! கண்டிப்பா ஓ.வா.உ.நாதனை விசாரிச்சு சொல்றேன்!///

  என்ன கொடுமை இது? தன்னைத் தானே விசாரிச்சி அதை விசாரிச்சவங்ககிட்ட சொல்லவேற வேற செய்வாங்களாம்

  ReplyDelete
 28. ///அபி அப்பா said...
  வாங்க சிவா, ஏதோ லவ்ஸ் ஓடுதுன்னு பட்சி சொல்லுச்சே. என்கிட்டே ரகசியமா சொல்லகூடாதா? வந்ததுக்கு நன்றிப்பா:-))///


  ஊரு உலகத்துக்கே தெரிஞ்சி கிடக்குது. உங்களுக்கு தெரியலையா? அதுசரி உங்ககிட்ட சொன்னா அதெப்படி ரகசியம் ஆகும்?

  ReplyDelete
 29. ///ஆயில்யன். said...
  //நம்ம ஊர் பாசக்கார பசங்க ஊர் சேதி இல்லியா //

  நானே நானா?

  இல்லை வேற யாரோ தானா?


  மெல்ல மெல்ல ஊர்கதை சொல்லுவீங்களாம் :))))///


  ஆயில்ஸ் அபிஅப்பா கிட்ட ரொம்ப கதை கேக்காதீங்க. ரோட்டுல நடக்கிறப்போ நம்மையும் அறியாம எறும்புகளை மிதிச்சுடுற மாதிரி அபிஅப்பா கதை சொல்லுற குஷில உங்க கதைய வெளிய சொல்லிட போறாரு. ஏற்கனவே அவர் உங்களை பத்தி சொன்ன ஒரு கதையை இப்ப நினைச்சாலும் சிரிப்பு தாங்கல. உஷாரா இருங்கப்பு.

  ReplyDelete
 30. ///அபி அப்பா said...
  வாங்க சிபிசாரே! அது என்ன 50 ஆகும் நல்லா பின்னூட்டம்லாம் வர, புரியலையே:-))///  இது கூட தெரியலையா? ஹையோ ஹையோ...

  ReplyDelete
 31. /
  அபி அப்பா said...

  வாங்க சிவா, ஏதோ லவ்ஸ் ஓடுதுன்னு பட்சி சொல்லுச்சே. என்கிட்டே ரகசியமா சொல்லகூடாதா? வந்ததுக்கு நன்றிப்பா:-))
  /

  ரகசியம்னா மொதல்ல உங்ககிட்டதான் சொல்லனும்னு எனக்கு தெரியாதா!?!?

  ReplyDelete
 32. \\ஒரு 3 பாகம் போட உத்தேசம். ஓக்கேவா?
  \\

  போடுங்க...;)))

  ReplyDelete
 33. வாங்க சுந்தரா! அப்படியெல்லாம் இல்லை. என்னை விட கில்லாடிகள் எல்லாம் ஜாஸ்தியா இருக்காய்ங்க நம்ம ஊரிலே:-))

  ReplyDelete
 34. வாங்க கொத்ஸ், என்ன சுஜாதா மாதிரி மையமா சிரிப்பு:-))

  ReplyDelete
 35. வாங்க மாயவரத்தான், நான் கூறிய 3 விஷயத்தில் 3வதில் உங்களுக்கு பரிச்சயம் இல்லாட்டியும் மத்தது பத்தி நான் சொன்னது உண்மைதானே:-))இது மாறவே மாறாதது!!

  ReplyDelete
 36. வாங்க குமார் அண்ணே! மிக்க நன்றி!!!

  ReplyDelete
 37. ரீச்சர், 6 மீன்களும் ஒரே ஜாதி மீன் தான். அதனால் எல்லாம் ஒரே சுவை தான் ரீச்சர். வருகைக்கு மிக்க நன்றி!!!

  ReplyDelete
 38. என்ன நி.நல்லவரே! ஆயில்யன் பத்தி நான் சொன்னதை யார் கிட்டயும் சொல்லிட வேண்டாம். காரணம் அது ரகசியம்:-))

  ReplyDelete
 39. //மங்களூர் சிவா said...
  /
  அபி அப்பா said...

  வாங்க சிவா, ஏதோ லவ்ஸ் ஓடுதுன்னு பட்சி சொல்லுச்சே. என்கிட்டே ரகசியமா சொல்லகூடாதா? வந்ததுக்கு நன்றிப்பா:-))
  /

  ரகசியம்னா மொதல்ல உங்ககிட்டதான் சொல்லனும்னு எனக்கு தெரியாதா!?!?

  \\

  என்ன சிவா இப்படி சொல்லீட்டிங்க, எனக்கு "ரகசியம் காப்போன்"ன்னு ஒரு பட்டம் கொடுக்க போவதா பேசிக்கறாங்கப்பூ:-))

  ReplyDelete
 40. // கோபிநாத் said...
  \\ஒரு 3 பாகம் போட உத்தேசம். ஓக்கேவா?
  \\

  போடுங்க...;)))//

  கோபி போட்டா போச்சு!!

  ReplyDelete
 41. \\என்ன சிவா இப்படி சொல்லீட்டிங்க, எனக்கு "ரகசியம் காப்போன்"ன்னு ஒரு பட்டம் கொடுக்க போவதா பேசிக்கறாங்கப்பூ:-))//
  appadiya... !!! :o

  ReplyDelete
 42. \\ கயல்விழி முத்துலெட்சுமி said...
  \\என்ன சிவா இப்படி சொல்லீட்டிங்க, எனக்கு "ரகசியம் காப்போன்"ன்னு ஒரு பட்டம் கொடுக்க போவதா பேசிக்கறாங்கப்பூ:-))//
  appadiya... !!! :o
  \\

  என்னது முத்துலெஷ்மியக்கா இப்படி கேட்டுட்டீங்க வேணும்னா ஒரு ரகசியம் சொல்லி பாருங்க:-))

  ReplyDelete
 43. இரண்டாவது பதிவும் போட்டுட்டதால இதுக்கு சூப்பரு மட்டும்
  நிஜமா சிரிச்சுகிட்டே படிச்சேன் :):)

  ReplyDelete
 44. /அவங்க மீன் பேரம் பேசி வாங்கினா குழம்பு ருசியா இருக்கும்ன்னு சொன்னாங்க அதான்"ன்னு சொல்லுவாங்க. அடப்பாவமேன்னு நெனச்சுகிட்டு "யார் அப்படி சொன்னது"ன்னு கேட்டா பதில் சொல்லாம போயிடுவாங்க./

  I love this. I enjoyed reading your post.

  Ramya

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))