பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

May 5, 2008

அபிபாப்பா & நிலாகுட்டி பிறந்தநாள் கலாட்டா பதிவு!!!!

இன்று காலை முதல் வீடே ஜெகஜோதியா இருந்துச்சு. பாப்பாவுக்கு பிறந்த நாள். பதிவெல்லாம் போட்டிருக்காங்க. சென்ஷி முதல் வாழ்த்து. நிலாகுட்டிக்கும் இன்னிக்கு பிறந்தநாள். நான் ஏதோ வித்யாசமா பண்றேன்ன்னு ராத்திரி 12க்கு பாப்பாவை எழுப்பி வாழ்த்து சொன்னா அவ எப்பவும் போல டயலாக் எல்லாம் விடுறா! சரின்னு எழுப்பி உக்கார வச்சி நிலாவுக்கு போன் பண்ணி முதல் வாழ்த்து சொல்லலாம்ன்னு நெனச்சா நந்து டயலாக் அடிக்கிறார். என்ன கொடுமை சார்ன்னு! ஏன்னா பாப்பா “பேப்பி ஹர்த் டே நிலாகுட்டிம்மா…..போடா அப்பா………அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்”ன்னு!என்ன கோவம் வருது பசங்களுக்கு! அம்மாடியோவ்!

என்னிக்குமே இல்லாம திருநாளா இன்னிக்க்கு பாப்பாவை அழைச்சுகிட்டு ஒரு ஜாலி ரவுண்ட் போகலாம்ன்னு வண்டி எடுத்தேன். முதல்ல வீட்டை விட்டு கிளம்பிய பின்னே ஒரு சின்ன பாலம். அதை தாண்டும் போது எதுக்கே ஒருத்தர் தைய தக்கான்னு ஒரு டிவிஎஸ் 50 ல வந்துகிட்டே பிரேக் பிடிச்சுகிட்டே ரெண்டு காலையும் தரையிலே தேச்சுகிட்டே ஒதுங்கி போகாம கரெக்ட்டா என் வண்டியிலே மோதி நிப்பாட்டினார். பாப்பா உடனே “குட்மார்னிங் சார்” ன்னு சொன்னா! அப்போ சாயந்திரம். என்ன பாப்பா சாயந்திரமாச்சே குட்மார்னிங் சொல்றியேன்னு கேட்டதுக்கு “விடுங்கப்பா அவர் வாத்தியார் தானே மன்னிச்சுடுவார்”ன்னு கேஷுவலா சொன்னபின்ன நான் கேட்டேன் “அவரை உனக்கு தெரியுமா?”ன்னு. “இல்லப்பா, டிவிஎஸ் 50 யை பிரேக் பிடிச்சுகிட்டே வந்தும் டிவிஎஸ் மேலே நம்பிக்கை இல்லாம ரெண்டு கால் ஸ்லிப்பரையும் தேச்சுகிட்டே வந்து கரெக்ட்டா மோதினா அது எலிமெண்ட்ரி ஸ்கூல் வாத்தியார் தான்ப்பா, இவர் சீக்கிரம் ஹெட் மாஸ்ட்டரா ஆகிடுவார் பாருங்க”ன்னு சொன்னா. எனக்கு ஆச்சர்யமா போச்சு. என் சந்தேகத்தை போக்கிக்க வண்டிய திருப்பிகிட்டு போய் அவர் கிட்டே “சார் நீங்க வாத்தியாரா?”ன்னு கேட்டதுக்கு “ஆமா சார் சீக்கிரம் ஹெட்மாஸ்ட்டரா ஆகிடுவேன்”ன்னு சொன்ன போது நான் ஆச்சர்யத்தின் உச்சிக்கே போயிட்டேன்.

பாப்பாகிட்டே “அவர் ஹெட்மாஸ்ட்டராக போறார்ன்னு எப்படி தெரிஞ்சுகிட்டே”ன்னு கேட்டப்ப “சிம்பிள்ப்பா ரியர் பிரேக் போட்டும் டிவிஎஸ் மேல நம்பிக்கை இல்லாம ரெண்டு காலையும் தேச்சுகிட்டு வந்தா வாத்தியார். அவர் கால் மேலயும் நம்பிக்கை இல்லாம ஃபிரண்ட் பிரேக்கையும் பிடிச்சு குப்புற விழுந்தா அவர் ஹெட்மாஸ்ட்டர். இவர் இத்தன கலேபரத்திலும் ஃபிரண்ட் பிரேக்கை தேடினப்பவே நெனச்சேன் சீக்கிரமா ஹெட்மாஸ்ட்டரா ஆகிடுவார்ன்னு”ன்னு சொன்னா.

“அடப்பாவமே, பாப்பா நம்ம வலையிலே நிறைய வாத்தியார் இருக்காங்க தெரியுமா”ன்னு கேட்டப்ப “ஆமாப்பா நம்ம இளவஞ்சி அங்கிள் கூட புல்லட்டை கால் தேச்சுகிட்டே வருவாரான்னு கேக்கனும்ப்பா”ன்னு சொன்ன போது ஆஹா இவ நம்மை விட பயங்கரமா கலாய்ப்பா போல இருக்கேன்னு நெனச்சுகிட்டேன்.

“பாப்பா இப்படி எல்லாம் கலாய்க்கிறியே, நானெல்லாம் கலாய்ச்சா என்னா ஆகும் தெரியுமா, துபாயில் 1 மணி நேரம் டைம் பாஸுக்கு 2 திர்காம் ன்னு இரு போஸ்ட் படிச்சதில்லையா?”ன்னு கேட்டதுக்கு “அட போங்கப்பா, யாரோ இளிச்ச வாய் மாட்டினதுக்கு கலாய்ச்சு அதை போஸ்ட்டா போட்டு 50 கமெண்ட் வாங்குறது நல்லாவா இருக்கு. கலாய்ச்சா என்னை மாதிரி கலாய்க்கனும் இல்லாட்டி பிலாக்கை பிளாக் பண்ணிட்டு திருவிழாவிலே பால்பன் விக்க போகனும்ப்பா”ன்னு சொன்ன போது கொஞ்சம் ஆடிப்போயிட்டேன். அப்படி நீ என்ன கலாய்ச்சே யாரை கலாய்ச்சேன்னு கேட்டப்பதான் இந்த பதிவுக்கான மேட்டர் கிடைச்சுது.
*****************************************

அபிபாப்பா:ஹல்லோ! கலைஞர் டிவியோட இசையருவியாங்க!

சுதா(காம்பியரர்) : ஆமா நீங்க யாரு, யாருக்கு வாழ்த்து சொல்லனும் அதுக்கு முன்ன உங்க வீட்டு டிவியோட வால்யூம் கம்மி பண்றீங்களா?

அபி: என் பேர் அபிராமிங்க ஆண்ட்டி, நீங்க அழகா இருக்கீங்க,

சுதா: ரொம்ப சந்தோஷம், உங்க ஹாபி என்ன? அதுக்கு முன்ன உங்க வீட்டு டிவி வால்யூம் குறைச்சுடுங்க

அபி: என் ஹாபி தான் சொன்னனே ஆண்ட்டி முன்னடியே, எந்த டிவிக்கு போன் பண்ணினாலும் நீங்க அழகா இருக்கீங்கன்னு சொல்றதுதான் என் ஹாபி, அப்பதானே உங்களையும் என்கரேஜ் பண்ண மாதிரி இருக்கும்.

சுதா: (கொஞ்சம் ஜெர்க் ஆகி பின்ன சுதாரிச்சுகிட்டு) ஹி ஹி ஹி…தேங்க்ஸ், சரீ உங்க வீட்டு டிவிய சவுண்ட் கம்மி பண்ணும்மா

அபி: என்ன ஆண்ட்டி எங்க வீட்டு டிவிய ஆஃப் பண்ணியாச்சு, நீங்க திரும்ப திரும்ப சவுண்டை குறைக்க சொன்னா எப்படி?

சுதா: இல்ல அபிம்மா பொய் சொல்ல கூடாது, டிவி சவுண்ட் கம்மி பண்ணுங்கப்பா

அபி: என்ன ஆண்ட்டி சின்ன வயசிலே விரல் சூப்பினவங்க யாராவது பொய் சொல்லுவாங்களா? நீங்க வடிவேல் அங்கிள் ஜோக் எல்லாம் பாக்க மாட்டீங்களா?

சுதா(கொஞ்சம் எரிச்சலுடன்): சேப்பா இருக்கிறவங்க பொய் சொல்ல மாட்டாங்க, சின்ன வயசிலே விரல் சூப்பினா பொய் சொல்ல மாட்டாங்க, இதல்லாம் இருக்கட்டும்,முதல்ல உங்க வீட்டு டிவி வால்யூம் கம்மி பண்ணுங்கப்பா!ப்ளீஸ்!

அபி: என்ன ஆண்ட்டி என் மேல நம்பிக்கை இல்லன்னா வீட்டிலே அம்மா இருக்காங்க, அவங்க நம்பர் தாரேன், போன் பண்ணி கேளுங்க டிவி ஆஃப் பண்ணியிருக்கா இல்லியான்னு!

சுதா: (குழப்பத்துடன்) எதுக்கு போன் பண்ணனும் நீயே ரிசீவரை குடுத்தா போச்சு அம்மா கிட்டே!

அபி: என்ன ஆண்ட்டி எங்க வீடு பத்துவீடு தள்ளி இருக்கு அம்மாம் பெரிய ஒயரா இருக்கு உங்க வீட்டு ரிசீவர்ல. நான் தாத்தா வீட்டிலே இருந்து போன் பண்றேன். ஆனா சத்தியமா எங்க வீட்டு டிவி சுவிட்ச் ஆஃப் என்னை நம்புங்க!

சுதா: (கொஞ்சம் அழுதுகிட்டே) ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா இப்பவே கண்ணை கட்டுதே, யார் யாருக்கு வாழ்த்து சொல்லனும்!

அபி: எனக்கும் நிலாபாப்பாவுக்கும் தான் வாழ்த்து சொல்லனும். அதுவும் நீங்க தான் சொல்லனும், ஏன்னா இன்னிக்கு எங்களுக்கு இன்னிக்கு பிறந்த நாள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்!


“அப்பா கலாய்ச்சா இப்படி கலாய்க்கனும், அனேகமா அவங்க காம்பியரர் வேலையை விட்டுட்டு நம்ம ஊர் திருவிழாவிலே சர்பத் விக்க வந்துடுவாங்கன்னு நெனைக்கிறேன்!!!!”ன்னு பாப்பா சொல்லி முடிச்ச பின்னே சர்ர்ர்ர்ர்ர்ன்னு பிரேக் போட்டு நிப்பாட்டினேன்.எதிரே இன்னும் ஒரு வாத்தியார் போல இருக்கு)))

17 comments:

 1. போஸ்ட்டா போட்டு 50 கமெண்ட் வாங்குறது நல்லாவா இருக்கு. கலாய்ச்சா என்னை மாதிரி கலாய்க்கனும் இல்லாட்டி பிலாக்கை பிளாக் பண்ணிட்டு திருவிழாவிலே பால்பன் விக்க போகனும்ப்பா”ன்னு சொன்ன போது கொஞ்சம் ஆடிப்போயிட்டேன். அப்படி நீ என்ன கலாய்ச்சே யாரை கலாய்ச்சேன்னு கேட்டப்பதான் இந்த பதிவுக்கான மேட்டர் கிடைச்சுது.
  *****************************************
  பிறந்த நாளைச் சந்தோஷமாய்க் கொண்டாடும் அபி பாப்பாவுக்கும், நிலா பாப்பாவுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. அபி அப்பா, அபி பாப்பா எங்கேயோ போயிடுச்சு! :P

  ReplyDelete
 3. //என் ஹாபி தான் சொன்னனே ஆண்ட்டி முன்னடியே, எந்த டிவிக்கு போன் பண்ணினாலும் நீங்க அழகா இருக்கீங்கன்னு சொல்றதுதான் என் ஹாபி, //
  :)))))))

  ReplyDelete
 4. வாழ்த்தெல்லாம் இருக்கட்டும். முதலில் இந்த பால்பன் என்றால் என்ன என்று 200 வார்த்தைகளுக்குக் குறையாமல் ஒரு கட்டுரை எழுதவும்.

  ReplyDelete
 5. அபி..இவ்வளவு லொள்ளா..!
  நல்ல வேளை நான் நேரில் பாத்தப்ப சிக்கலை!

  வாழ்த்துக்கள் அபி...

  அபி அப்பா ஏன் இவ்வளவு கலாய்க்கிறாருன்னு இப்பதான் தெரியுது!

  பட்டையக்கிளப்பு!

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள் ;))

  என்ன ஒரு தகவலும் இல்ல!??

  ReplyDelete
 7. //என் ஹாபி தான் சொன்னனே ஆண்ட்டி முன்னடியே, எந்த டிவிக்கு போன் பண்ணினாலும் நீங்க அழகா இருக்கீங்கன்னு சொல்றதுதான் என் ஹாபி, //

  கலாய்ச்சா இந்த மாதிரி கலாய்க்கனும்...
  :))))))))))))))
  அபி பாப்பாவுக்கும், நிலா பாப்பாவுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்..

  Senthil,
  Bangalore

  ReplyDelete
 8. நட்டு இப்பதான் பேச ஆரம்பிக்கிறான். அவன் எப்படியெல்லாம் கலாய்க்கபோறானோ?

  ReplyDelete
 9. யாரோ ஒரு வாத்தியார புடிக்கல போல. நடத்துங்க நடத்துங்க:)

  ReplyDelete
 10. அபி பாப்பாவுக்கும், நிலா பாப்பாவுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.. :))

  சரி, டீச்சரம்மாவை எப்படி கண்டுபிடிப்பீங்க?

  யானைய பாத்துட்டு வாய் பிளந்து நின்றா அவங்க தான் டீச்சர்னு சொல்லபடாது. :p

  ReplyDelete
 11. \\ஆமாப்பா நம்ம இளவஞ்சி அங்கிள் கூட புல்லட்டை கால் தேச்சுகிட்டே வருவாரான்னு கேக்கனும்ப்பா”ன்னு சொன்ன போது ஆஹா \\ உங்ககிட்ட மாட்டாத ஆளுங்க ரொம்ப கம்மி போல இருக்கு. கலக்குங்க

  ReplyDelete
 12. பேசாம ப்ளாக்கை அபிக்கு ஹான்ட் ஓவர் பண்ணிடுங்க.
  :-)
  வாழ்த்துக்கள் அபி!

  ReplyDelete
 13. அபி பாப்பாவுக்கும், நிலா பாப்பாவுக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 14. அபி என்னம்மா இவ்வளவு வேகமா இருக்க...:)

  ReplyDelete
 15. நல்ல வேளை.. எனக்கு போன்ல பர்த்டே சாக்லேட் குடுத்த கதையை அபி சொல்லல போல... அப்பப்பா.... என்னா ஒரு வில்லத்தனம்.. ஒரு சாக்லேட் கேட்டது அவ்வளவு பெரிய குற்றமா? அதுல இருந்து எனக்கு சாக்லேட் சாப்டற எண்ணமே சுத்தமா போய்டிச்சி. :((

  ReplyDelete
 16. ஆவ்வ்வ்வ்.. ஆரம்பிச்சுட்டாருய்யா.. ஆரம்பிச்சுட்டாருய்யா..:))))

  சூப்பரு:))))

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))