பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

March 25, 2007

மொக்கராசு வர்ரான் ஓடியாங்க! ஓடியாங்க!!!



இந்த கோழி இருக்கே கோழி அது மண்ணுல கொத்தி கொத்தி எதுனா சாப்டுகிட்டே இருக்கும். ஒரு சிமெண்ட் தரையா பாத்துச்சுன்னா சர் புர்ன்னு மூக்கை(அலகை) தேய்ச்சு கூர்மையா ஆக்கிகிட்டு திரும்பவும் மண்ணுக்கு போய் கொத்தி கொத்தி திங்க ஆரம்பிச்சுடும்!

அதுபோல கொஞ்சம் மூக்கை தீட்டிக்கலாமேன்னு இந்த மொக்கை. நாம படிச்ச பள்ளி, செக்.ஷன், வாத்தியார் பேர் இதல்லாம் எத்தனை பேருக்கு ஞாபகம் இருக்கும். முதல்ல எனக்கு இருக்கான்னு பாப்போம்.

* 1 வது C - லெஷ்மி டீச்சர் - தேசிய ஆரம்ப பள்ளி

* 2 வது B - காமாட்சி டீச்சர் - "

* 3 வது C - குண்டு சார் - "

* 4 வது C - தியாகராஜன் சார் - "

* 5 வது A - மனசுல இருக்கு வரமாட்டங்குது - "

* 6 வது F - விசாலம் டீச்சர் - தேசிய உயர் நிலைப்பள்ளி

* 7 வது B - சரோஜா டீச்சர் - D.B.T.R.தேசிய மேல்நிலைப்பள்ளி

* 8 வது B - அதே சரோஜா டீச்சர் - "

* 9 வது F - சந்தான கோபாலன் சார்- "

* 10 வது C - N. வெங்கட்டராமன் சார் - "

* 11 வது A - K.ராஜேந்திரன் சார் - "

* 12 வது A - K. பத்மநாதன் சார் - "

அப்பாடா!
உங்களுக்கு ஞாபகம் இருந்தா சொல்லுங்க atleast section மட்டுமாவது!!

March 21, 2007

கோபி,பாசமலர்,கொத்ஸுக்கு அபிஅப்பாவின் சூடான பதில்!!!

முதல்ல அய்யனார் கோவில் பலி ஆடு மாதிரி தலையை குனிந்து நிக்கிறேன். ஏன்னு பதிவின் கட்ட கடேசில செப்புறேன்.

நம்ம கோபிதம்பி முதல்ல 5 வியர்டு விஷயத்த சொல்லுன்னு சொன்னார். அடுத்ததா தங்கச்சி ஜெயந்தி அதாங்க இம்சை செய்யாத இம்சை அரசி 5 சொல்லுங்கண்ணான்னு சொன்னாங்க. ஆக 10 சொல்லனுமான்னு நெனச்சிகிட்டு வந்து பாத்தா நம்ம கொத்ஸ் 5 கிறுக்குதனத்த சொல்லுய்யான்னு சொல்லியிருக்கார். நாம எது செஞ்சாலுமே அது கிறுக்குதனமாவே இருக்கும். இதுல என்ன தனியா 5ன்னு சரின்னுட்டேன்.

கடமை:

நான் ஒரு கடமை வீரன். ஒரு புராஜக்டுல ஒழுங்கா ஆணி புடுங்கிய என்னை பாத்து நீ ரொம்ப நல்லா புடுங்குற அதனால இன்னும் 3 புராஜக்டையும் சேத்து பாத்துக்கோன்னு சொல்லிட்டாங்க. இப்போ ஐயாவுக்கு 4 இடத்திலயும் சீட். அதுல ஒரு வசதி சுத்தி சுத்தி பின்னூட்டம் போடலாம். ஆனா அப்பப்ப ஆணியும் புடுங்குவேன். இதுல என்னா கிறுக்குன்னா என் டிபார்ட்மென்ட் ஆணியவிட அடுத்த டிபார்ட்மென்ட் ஆணிதான் அதிகமா புடுங்குவேன். இவன் கிட்ட சொன்னா முடிச்சுடுவான்டான்னு என் தலைல கட்டிடுவானுங்க. இது உணர்ந்தும் உணராத இந்த லூசு எல்லாத்தையும் கட்டிகிட்டு மாரடிக்கும். இந்த கடமைய விட 1 ம் தேதி வீட்டுக்கு பணம் அனுப்பும் கடமையை கச்சிதமா செய்வேன். (யாருய்யா அது"அடப்பாவி நீ ஒரு கயமை வீரன்"ன்னு யாருய்யா சவுண்டு குடுக்கிறது)

கண்ணியம்:

இந்த விஷயத்துல நா நெம்ப ரீஜண்டு. சகோதரிகள், சித்திகள், த்ம்பிகள் அப்டின்னு "வருஷம் 16" மாதிரியான குடும்பத்தில் பிறந்ததால் கூட இந்த கண்ணியம் வந்திருக்கலாம். பிளாக் எழுத ஆரம்பிக்குமுன் கூட என் தம்பி "எதை பத்திவேணா எழுது. ஆனால் அசிங்கமான வார்த்தை பிரயோகம் கூடாது"ன்னு சொன்ன காரணத்துக்காகவே நான் "குசும்பு" போன்ற வார்த்தைகளை பிரயோகிப்பதில்லைன்னா பாத்துகோங்க என் கண்ணியத்தை:-) என் தம்பி சொன்னது என்ன நா புரிஞ்சுகிட்டது என்ன. ரொம்ப கண்ணியமா இருக்கனாமா!

கட்டுப்பாடு:

என் கையில் ஒரு மெல்லிய நூல் கட்டப்பட்டு அதன் ஒரு முனை என் குடும்பத்தரிடம் (அப்போ அம்மா இப்போ தங்கமணி)இருக்கும். அந்த நூலை அறுத்து விடாமல் காப்பாத்தும் பொறுப்பு இரண்டு பக்கத்துக்கும் உண்டு. இது வரை நாங்கள் காப்பாத்தி வருகிறோம். என்ன! அம்மாவிடம் பிடியிருந்தபோது நூல் கொஞ்சம் பெருசா இருந்துச்சு. இப்போ தங்கமணிகிட்ட நூல் வந்தவுடன் சின்னதாகிவிட்டது. அப்பப்ப லீவ்விட்டா நூலை அவுத்து கட்டில்ல கட்டிட்டு ஃப்ரீ பேர்டு....

கிரிமினல்தனம்:

யாருக்கும் கேடு வராதபடி நக்கலான கிரிமினல்தனம் என்னிடம் எப்போதும் இழைந்து கொண்டிருக்கும். உதாரணத்துக்கு நேத்து ஒரு பதிவு போட்டேன். தமிழ்மணத்திலே பதிவின் பக்கத்துல என் பெயர் இல்லை. அதனால் ரெகுலர் கஸ்டமர்கள் வரலை. அது அபிஅப்பா பதிவுன்னு யாருக்குமே தெரியலை. சரி இந்த பதிவும் அப்டி போயிடுமோன்னு இந்த தலைப்பிலேயே அபிஅப்பான்னு வரவழைச்சுட்டேன். இது போன்ற சின்ன சின்ன கிரிமினல்தனங்கள்தான்.

நகைச்சுவை:

அபிஅப்பா பதிவு இவ்வளவு dry யா இருக்கேன்னு பாக்காதீங்க. நமக்கு பிடித்த விஷயமே நகைச்சுவைதான். என்னையும் கலைஞரின் செயலர் சண்முகநாதனையும் ஒரு ரூமில் போட்டு 24 மணி நேரம் பூட்டிவிட்டால் இரண்டில் ஒன்னு நடக்கும்.

1. அவர் சிரித்து கொண்டே வெளியே வருவார்.

2. அவர் சிரித்து கொண்டே வெளியே வருவார்.

எனக்கு பிடித்த நகைச்சுவை நிகழ்வு:

அபிபாப்பா சிதம்பரம் ஞானமணி ஹாஸ்பிட்டலில் பிறந்தாள். லேபர் வார்டிலிருந்து தங்கமணி வரும் முன்பே அபிபாப்பா வார்டுக்கு வந்துடுச்சு. சுருட்டை முடி கொட்டாபுட்டி கவுத்தமாதிரி, கருப்பு திராச்சை மாதிரி கண்ணு. யார்டா நீ ங்குற மாதிரி என்னை ஒரு பார்வை. என் அம்மா மட்டும் பாப்பாவை வச்சுகிட்டு உக்காந்து இருந்தாங்க. அவங்க தவிர நான் மட்டும். கொஞ்சம் ரிலாக்ஸா வெளியே வந்து நின்னேன்.

அப்போ ஒரு தாத்தாவும், ஒரு பாட்டியும் வந்து என் கைய புடுச்சுகிட்டு "நல்லா இருக்கியாப்பா"ன்னாங்க. "உன் கல்யாணத்துல உன்ன பாத்தது. அதுக்கப்புரம் 3 தடவை வந்தபோதும் உன்னய பாக்கமுடியல. இப்போ உம் பொண்டாட்டிய பிரசவத்துக்கு சேத்த சேதிவந்ததும் அவசர அவசரமா கிளம்பி வந்தோம். இன்னும் உன் மாமனார் வீட்டுக்கு கூட போகலை. அப்டியே பஸ்டாண்டிலேந்து இங்க வந்துட்டோம். சரி வா குழந்தைய பாக்க போவோம் "ன்னு சொல்ல நானும் சரி தங்கமணிக்கு சொந்தம் போலன்னு கூட்டிகிட்டு போனேன்.

என் அம்மாவிடம் அவங்க குசலம் விசாரிச்சுட்டு கொண்டுவந்த சாக்லெட்பாக்ஸ், சின்ன குழந்தை மெத்தை, டிரஸ், பால் பாட்டில் எல்லாத்தையும் கொடுத்துட்டு "சரி உன் மாமனார் வீட்டுக்கு போகிறேன்"ன்னு சொல்லிட்டு போயிடாங்க.

இதுல என்னா கூத்துன்னா வந்தவங்க யாரோ. அதே ஹாஸ்பிட்டல்ல பிறந்த வேற ஆண் குழந்தைய பாக்க வேண்டியவங்க. இது எங்களுக்கு அடுத்த நாள்தான் தெரியும். அந்த குழந்தையின் அப்பாவும் என் சாயல் போலயிருக்கு. சரின்னு அந்த குழந்தைக்கு நான் அவங்க கொடுத்தது போல எல்லாத்தையும் வாங்கி குடுத்தேன். ஆக அபிபாப்பாவின் குறும்பு பிறந்த அடுத்த நிமிஷமே ஸ்டாட்டாகிடுச்சு:-)

இது போல நகைச்சுவை நிகழ்வுகள் எல்லா இடத்திலிலும் நடக்கும். அதை பகிர்ந்துக்கும் போது மிக்க மகிழ்வாக இருக்கும். நகைச்சுவை எழுத 4,5 பாரா கூட வேண்டாம். ஜஸ்ட் ஒரு வரி போதும். நினைத்து நினைத்து சிரிக்கலாம்.

இதோ ஒரு பதிவுக்கு நம்ம கொத்ஸ் போட்ட பின்னூட்டம். நாமக்கல் சிபி "நான் ஓய்வெடுக்க போகிறேன்" ன்னு ஒரு பதிவு. அதுக்கு கொத்ஸ் "ஓய் வெடுக்குனு வா" . என்ன புரிஞ்சா குபீர் சிரிப்பு கியாரண்டி!!

இதுதான் நகைச்சுவை பற்றிய என் கருத்து. நகைச்சுவை பதிவுக்கு பேஸ்மென்டே கிறுக்குதனங்கள்தான்!

சரி மக்கா, இப்போ அந்த 5 பேர் யாருன்னு பாப்போம். பதிவு போடுவது கூட சுலபமாயிருக்கு. இந்த பட்டம் கொடுப்பது ரொம்ப கஷ்டமப்பா!

1.எனக்கு 1 வருஷ சீனியர் "கல்வி வள்ளல்" சீமாச்சு

2. என் அன்பு அம்மா "பாலாபிஷேக நாயகி" கீதாசாம்பசிவம்.

3.என் துபாய் நண்பர் "பவுலிங் புயல்" பாஸ்ட் பவுலர்"

4.எங்க ஊர் நண்பர் "சமூக சிந்தனை நாயகன்" மயிலாடுதுறை சிவா

5. அன்பு சகோதரி "காமடி கலைமாமணி" கண்மணி

வாங்க வந்து வியர்டான 5 விஷயத்த புட்டு புட்டு வைய்யுங்க!

இப்போ முதல் வரிக்கு போங்க. போயாச்சா. ரொம்ப நேரமா அப்டி நிக்கிறது கஷ்டமா இருக்கு. தர்ம அடி போடுறவங்க ஒரு வரிசையாகவும், மாலை,கீலை போடுறவங்க ஒரு வரிசையாகவும் வரவும். இது என்னோட 25 வது பதிவு:-))

March 20, 2007

உலக கோப்பை கிரிக்கெட் - இந்தியா vs பர்மூடா ஓர் அலசல்!!!

நேற்று நடந்த இந்தியா-பர்மூடா போட்டியை முழுவதும் பார்த்து ஒரு நல்ல விமர்சனம் போட முடிவெடுத்தேன். அப்படி ஒரு பதிவு போடும்போது நம்ம பக்கத்துல ஒரு தேர்ந்த கிரிக்கெட்டர் இருந்தா நல்லா இருக்குமேன்னு நம்ம 'பாஃஸ்ட் பவுலர்' க்கு போன் செய்தேன்.

"என்ன பாஃஸ்ட் பவுலர் இன்னிக்கு மேட்ச் இருக்கே வர்ரீங்களா நம்ம கூட பார்க்கலாம்"ன்னு கேட்டேன். அதற்கு அவரும் "நானே உங்களுக்கு போன் செய்யலாம்ன்னு இருந்தேன். போன மேட்சுக்கே தங்கமணி கிண்டல் தாங்கலை. அதனால உங்க கூட பாக்கலாம்ன்னு நெனச்சேன். கண்டிப்பா வர்ரேன்" அப்டீன்னாரு.

"சரி நீங்க என் வீட்டுக்கு வர்ரத்துகுள்ளே மேட்ச் முடிஞ்சுடும். அதனால கராமாவிலே என் ஃபிரண்ட் ஒருத்தர் ஊருக்கு போய்ட்டார், அவர் பிளாட் கீ என்கிட்ட தான் இருக்கு அங்க போயிடலாம்"ன்னு சொன்னேன். அவரும் "சரி என்கூட 2 பேர் வருவாங்க"ன்னு சொல்லிட்டு வச்சுட்டார்.

நானும் ஆஃபீஸில் இருந்து கிளம்பி அங்கே போய் சேரவும் பாஃஸ்ட் பவுலரும் வந்து சேரவும் சரியா இருந்துச்சு. அப்போ மணி 5.00 . துபாய் டைம் 5.30க்கு மேட்ச் ஆரம்பம்.

அப்போதான் அந்த போன் வந்தது. "மாப்ள முதல்லயே சொல்லிகிறேன் நா ராதா அதான்டா குரங்கு ராதா பேசுறேன். சன் டி.வி காமடி டைம் இல்ல"ன்னான் நம்ம ராதா. ஏற்கனவே அவன் பட்டது இன்னும் ஞாபகம் இருக்கும் போல. "சரி சொல்லுடா" ன்னேன். அதுக்கு அவன் "இன்னிக்கு மேட்ச் இருக்கு தெரியும்ல? நா உங்கூட பாக்கலாம்ன்னு வந்துகிட்டு இருக்கேன்"ன்னான். ஆஹா ஏழரைய கூட்டுரானேன்னு "மாப்ள நா என் இடத்துல இல்ல. என் பிஃரன்ட் வீட்டுல கராமாவுல இருக்கேன்" அப்டீன்னேன். அதுக்கு அவன் "கராமாவுல எங்க?"ன்னான். "உன்னால வரமுடியாது மாப்ள, இது வழி சொல்லவே முடியாத சந்துடா"ன்னேன்.

"பரவாயில்ல சொல்லு"ன்னான். சரி இன்னிக்கு நம்ம மண்டை காயபோவது நிச்சயம்ன்னு நெனச்சுகிட்டு வழியை சொன்னேன். சொல்ல சொல்ல "இதுக்கு பக்கத்துலயா, அதுக்கு பக்கத்துலயா, பில்டிங் பேர் என்ன, எத்தனையாவது மாடி, பிளாட் நம்பர் என்ன"ன்னு கேட்டுகிடே இருந்தான். அதுக்கு நான் "பிளாட் நம்பர்லாம் நீ கராமா வந்து சேந்தபிறகு சொல்றேன், போன வைடா, மேட்ச் ஆரம்பமாவ போவுது"ன்னு சொல்லிட்டு போனை கட்பண்ணீட்டேன். கொஞ்சம் இருங்க காலிங் பெல் சத்தம் கேக்குது. யாருன்னு பாத்துட்டு வந்து மீதிய சொல்றேன்.

போய் கதவை திறந்து பாத்தா நம்ம ராதா நிக்கிறான். "அடப்பாவி பறந்து வந்தியா"ன்னு கேட்டதுக்கு "நான் உனக்கு போன் பண்ணும் போதே பில்டிங் கீழதான் இருந்தேன்"ன்னான்.

"இவரு தான் "ஃபாஸ்ட்ப்வலர்" இவங்க ரெண்டு பேரும் அவர் பிரண்ட்ஸ் இப்போ நம்ம பிரண்ட்ஸ்" என அறிமுகமெல்லாம் முடிஞ்சுது. நம்ம பாஸ்ட்பவுலரோ செம டென்ஷன்ல இருந்தார். இன்னும் 15 நிமிஷத்துல மேட்ச் ஆரம்பம்.

சரின்னு எல்லாரும் அவங்க அவங்க சிலிப், கலிப்பாயிண்ட் அப்டீ இப்டீன்னு உக்காந்தாச்சு. அதுக்குள்ள டாஸ் போட்டாங்க. அவிங்க ஜெயிச்சாங்க! ராதா ஆரம்பிச்சுட்டான் கச்சேரிய. "இவுனுங்க எங்கடா ஜெயிக்க போறாங்க, டாஸையே ஜெயிக்கமுடியலை, நிக்க வச்சு சுடனும்டா, நீங்க என்ன சொல்றீங்க பாஸ்ட்பவுலர்"ன்னு கேட்டான். அவருக்கு 2 காதிலும் குபு குபுன்னு புகை. சரியா வந்து மாட்டிகிட்டோமேன்னு எரிச்சல்.

"என்னடா மாப்ள கழுத்தில கருப்பு கருப்பா கட்டியிருக்காணுங்க"ன்னு அடுத்த பந்தை போட்டான். யாரும் பதில் சொல்லலை. நிசப்தம். ஏன்னா கங்குலியும், உத்தப்பாவும் இறங்கிட்டாங்க!

"பேர பாரு உத்தப்பா, ஊத்தப்பான்னு ஊத்திக்க போறான்" இது அவன். மெதுவா பாஸ்ட்பவுலர் எங்கிட்ட வந்து "யோவ் அபி அப்பா இவன நீரு போன்ல கலாய்ச்சதால இவன் உன்னய பழிவாங்குறான். அதுக்கு நாங்க என்னய்யா பாவம் செஞ்சோம்" அப்டீன்னார். நானு பேசாம இருந்தேன்.

முதல் ஓவரில் உத்தப்பா 3 அடிச்சார். நான் பேசாம இருந்திருக்கலாம். "இப்ப என்னடா சொல்ற"ன்னு அவனை பாத்து கேட்டேன். அதுக்கு அவன்" நான்னா சொல்றேன், இப்ப பாருடா அவந்தான் பேஸ் பண்ன போறான். மொதோ பால்ல சிலிப்புல அந்த குண்டன் கிட்ட கேட்ச் குடுக்கல என் பேர மாத்திக்கோ"

பாஸ்ட்பவுல்ர்க்கு செம கடுப்பு. "அபிஅப்பா கொஞ்சம் வாய மூடுறீங்களா?"ன்னு கத்தல். பால் போட்டாச்சு. குண்டன் லீவராக் புடுச்சிட்டான். நம்ம பாஸ்ட்பவுலர் எந்திரிச்சுட்டார். கோவத்தோட உச்சகட்டம். என்னய தனியா கூப்பிட்டார். சரி ரூம்குள்ள வச்சி சாத்தபோறார்ன்னு பயந்துகிட்டே போனேன்.

"இந்த ஷர்ட் மாட்டும் சட்டத்த எடுத்து ராதா தலையில ஒரே போடா போடவா"ன் னு கேட்டார். அதுக்கு நான் "சட்டத்த நாம கையில எடுத்துக்க கூடாது"ன்னு சொல்லி அதை பிடுங்கி கீழே போட்டுட்டு"எதுனா செய்வோம்"ன்னு சொல்லிட்டு பாத்ரூம் போயிட்டேன். அதுக்குள்ள ராதா சிக்சரும் ஃபோரும் போட்டு நம்ம ஃபாஸ்ட்பவுலரை தாளிச்சு கொதிக்க வச்சுட்டான்.

"இங்க பாருங்க பாஸ்ட்பவுலர் எனக்கு ஒரு ராசி. நான் டி.வி ல மேட்ச் பாத்தா சர சரன்னு விக்கெட் விழும். இப்ப பாத்தீங்களா, நா சொன்ன மாதிரியே குண்டன் புடுச்சிட்டான்" அப்டீன்னு தற்பெருமை வேற.

நம்ம பாஸ்ட்பவுலர் டக்குன்னு கிளம்பி பாத்ரூம் போயிட்டார். ஒரு வேளை விஜய் மாதிரி பாத்ரூம் உள்ளே போய் மூஞ்ச மூடிகிட்டு அழ போறார்ன்னு நெனச்சுகிட்டேன். அவர் திரும்பி வந்ததும் ராதா போனான்.

அவன் போய் கதவை சாத்தியதும் நான் ஓடிப்போய் சத்தமில்லாம வெளிப்பக்கம் தாழ் போட்டேன். நம்ம பசங்க சேவாக் பிச்சு பினாட்ட ஆரம்பிச்சுட்டன். அந்த குண்டு மாமா பவுலிங் போட்டுட்டு அது 6க்கும் 4க்கும் போகும்போது சிரிக்குது. இங்க பாத்தா பாஸ்ட்பவுலர் முகத்துல 100 வாட் பல்பு எரியுது. மனசுக்குள்ளேயே நெனச்சு பாத்தேன் நம்ம மணிகண்டன், பெவிலியன் எல்லாரையும். கடந்து குதிக்கிறாங்க.

இந்த சந்தோஷத்தை கெடுக்க மனசில்லாம பாத்ரூம் கதவை ஒருமுறை நல்ல சோதிச்சு பாத்தேன். வெரிகுட். அவனால வெளியே வரமுடியாதுன்னு உருதி செஞ்சுகிட்டு நிம்மதியா வந்து உக்காந்தேன்.

கொஞ்ச நேரம் கழித்து "டேய் மாப்ள, கதவு திறக்க மாட்டங்குதுடா"ன்னான்.

"கொஞ்சம் நல்லா டிரை பண்ணுடா"

"போடா நா ரொம்ப நேரம் டிரை பண்ணிட்டுதாண்டா உன்னை கூப்புடுறேன்"

பாஸ்ட் பவுலர் போய் கதவுகிட்ட நின்னு கிட்டு "ஐயோ ராதா, லாக் சிக்கிகிச்சு. அடிக்கடி இப்டி ஆகும் இந்த பாத்ரூம்ல. இனிமே கார்பெண்டர் வந்துதான் சரி செய்யனும். அது வரை கொஞ்ஜம் வெயிட் பண்ணுங்க ராதா. நீங்க கவல படாதீங்க, நாங்க இருக்கோம்" அப்டீன்னு சொன்னார்.

"சரி, கொஞ்சம் சீக்கிரமா அழைச்சுட்டு வாங்க, இப்போ ஸ்கோர் என்ன?" ன்னு கேட்டான். அதுக்கு நான் "டேய் நாங்களே நீ உள்ள மாட்டிகிட்டேன்னு கவலையிலே இருக்கோம். உனக்கு ஸ்கோர் கேக்குதா?"ன்னு ஒரு அதட்டல் போட்டேன். திரும்பி பாத்தா பாஸ்ட்பவுலர் சன் டிவி சிட்டிபாபு மாதிரி ஆடிகிட்டு இருக்கார்.

சும்மா பூந்து புயல் மாதிரி அடிக்கிறாங்க நம்ம ஷேவாக்கும், கங்குலியும். ரன் 195 ஆச்சு. அப்போ பாத்ரூம்ல இருந்து ராதா "மாப்ள, கார்பெந்தர் வந்துட்டாரா?"ன்னு கேட்டான். "இல்லடா பாஸ்ட் பவுலர்தான் கூட்டிட்டு வர போயிருக்கார்"ன்னு சொன்னேன்.

"சரி இது என்னடா ஒரு ஆயின்மென்ட் இருக்கு இங்க"

"தெரியல. அதல்லாம் ஏன்டா எடுக்கற பேசாம உக்கார்"

"எவ்ளோவ் நேரம்தான் ஆகும். போரடிக்குது. அதான் சும்மா இந்த ஆயின்மென் ட்ட எடுத்து பாத்துகிட்டு இருக்கேன். சரியான லூசுடா ஒன் பிரன்ட் மெடிசின்ன கொண்டு வந்து எங்க வச்சிருக்கார் பாரு. சரி இதென்னடா அதோட கேப் மூக்கு மாதிரி நீட்டா இருக்கு. "

"சரி எடுத்ததுதான் எடுத்த ஆனா மோந்து கீந்து பாக்காத"

"பாத்துட்டேன்...உவ்வேவ்..உவ்வேவ்...உவ்வேவ்.."

அதுக்குள்ள பாஸ்ட்பவுலர்" அபிஅப்பா ராதாகிட்ட பேச்சு குடுக்காதீங்க, ஷேவாக் அவுட் , நல்ல பவர் உங்க பிரன்ட்க்கு" அப்டீன்னார்.

"டேய் என்னடா பாஸ்ட்பவுலர் குரல் கேக்குது. அவரு கார்பெந்தர் கூட்டிகிட்டு வரபோகலையா? இங்க நா வாந்தி எடுத்துகிட்டு இருக்கேன். கொஞ்சம் சீக்கிரம்டா"ன்னான்.

இந்தியா ஜெயிக்க என்ன பாடு படவேண்டியிருக்குன்னு நெனச்சுகிட்டு "மாப்ள பாஸ்ட்பவுலர் carpenter கூப்பிட போயிடார். இப்போ பேசினது "லொடுக்கு"டா.

பிறகு அடி அடின்னு நம்ம பசங்க அடிச்சு 413 வந்து ஓவர் முடிஞ்சதும், கதவை திறந்தா ராதா பேயடிச்ச மாதிரி நிக்கிறான். கை தாங்கலா அழைச்சிட்டு வந்து உக்கார வச்சா " மாப்ள அந்த ஆயின்மெந்த் ரொம்ப நாத்தம்டா எனக்கு வாந்தியே வந்துடுச்சு, டயர்டா இருக்கு நா தூங்க போறேன்"ன்னு சொன்னான்.

பாஸ்ட்பவுலர் பதறி போய்ட்டார். "அய்யோ இனிமேதான் உங்க உதவி வேணும் ராதா, ப்ளீஸ் தூங்காம கொஞ்சம் பாருங்க"ன்னு கெஞ்சுறார்.

அவன் டி.வி பாத்தாதான் டக்கு டக்குன்னு விக்கெட் விழுமே, அதான் அந்த கரிசனம்.

அவன் தூங்கி தூங்கி விழ நாங்க அவனை தூக்கி தூக்கி நிறுத்தி ஒரு விக்கெட் ஒரு விக்கெட்ன்னு 4,5 விக்கெட்ட காலி பண்ணிட்டோம். அவங்க 63 ரன் எடுத்திருந்தாங்க.

நாங்க பட்ட கஷ்டம் எங்களுக்குதான் தெரியும். அதன் பிறகு அவனை எழுப்பவே முடியலை. அவனை தூக்கி உக்காரவச்சு நானும் பாஸ்ட் பவுலரும் அவன் கண் இமைகளை புட்டு சிரமப்பட்டு டி.விக்கு முன்ன காட்டினோம். மினோர்ஸ் அவுட். இன்னும் 4 விக்கெட்தான்.

ஐயோ எனக்கு ரன்ரேட் வேணும், ரன்ரேட் வேணும் அப்டீன்னு பாஸ்ட் புலம்புது. சரின்னு ராதாவை உலுக்கினா அவன் பருத்திவீரன் முத்தழகு மாதிரி "உட்டுடுங்கடா முடியலைடா"ன்னு அழுவறான். இன்னும் 1 இன்னும் 1 அப்டீன்னு ஜோன்ஸ் அவுட் ஆகும் வரை நாங்க விடலை. 156 ல் ஆலவுட்.

கஷ்டபட்டு நாங்க ஜெயிச்ச சந்தோஷத்தில பாஸ்ட்பவுலர் "அப்பாடா இந்தியா ஜெயிக்க நாம என்னமா போராடிட்டோம், இன்னும் 1 மாசத்துக்கு ராதாவை புக் பண்ணுங்க அபிஅப்பா, நான் வீட்டுக்கு போகிறேன்"ன்னு கிளம்பிட்டார்.

March 18, 2007

என் சகோதரனுடன் நான் என்ன பேசினேன்?(பாகம் 1)

ஒரு சாதாரண டெலிபோன் பேச்சு சில சமயம் சுவாரஸ்யமாக அமைந்துவிடும். சில சமயம் ஒரு பதிவே போடுவது மாதிரி நல்ல விவாதமாகவே அமையும். அப்படித்தான் நான் என் தம்பியுடன் 2 நாள் முன்பு பேசியது கூட.

அபிஅப்பா: என்னடா எப்டியிருக்க!

அபிசித்தப்பா: ம்.. நல்லா. அப்புறம் உன் பிளாக் எல்லாம் படிச்சேன். நல்லாயிருக்கு.

அ அ: என்ன இப்டி பொத்தாம் பொதுவா சொல்ற?

அ.சி: வேற என்னத்த சொல்ல. நல்லா சிரிக்கும்படி இருக்கு. ஆனா எனக்கு இப்போ அலுத்துபோனது மாதிரி எல்லாருக்கும் இன்னும் 1 மாதமோ அதிகபட்சமாக 6 மாதமோ அலுத்து போக வாய்ப்பு இருக்கு.

அ.அ: என்னடா இப்டி சொல்ற. எல்லாரும் நல்லா காமடியா இருக்கு காமடியா இருக்குன்னு சொல்றாங்களே?

அ.சி: அந்த நேரம் சிரிச்சவுடனே உடனே பாராட்ட தோனும். டக்குன்னு ஒரு பின்னூட்டம் போட்டு பாராட்டிவிட்டு போயிடுவாங்க. நீயும் அந்த சின்ன புகழ் போதையிலேயே இதுதான் உன் வழின்னு அப்டியே கண்டின்யூ பண்ணுவ. ஒரு 6 மாசம் கழிச்சு வேற யாராவது கொஞ்சம் வேறமாதிரி எழுதுனா எல்லாரும் அங்க போயிடுவாங்க.

அ.அ: அதுக்கு என்ன செய்யலாம். வாங்க வாங்கன்னு கைய புடிச்சா இழுக்கமுடியும்.

அ.சி: உன்ன யாரு கைய புடிச்சு இழுக்க சொன்னாங்க. வெரைட்டி எழுது. சீரியஸ் எழுது. ஒரு மொக்கை போடு. அய்ய இவன் இப்டிதானான்னு அவங்க யோசிக்கும் போதே திடீர்ன்னு "துணை நகரம் தேவையா?" அப்டீன்னு ஒரு ச்மூக கட்டுரை போடு. நா உன்னை இப்போ கேக்கிறேன், துணை நகரம் தேவையா?

அ.அ: கண்டிப்பா தேவை. ஆனா பா.ம.க தான் எதுக்குதே.

அ.சி: ஏன் எதுக்குது?

அ.அ: விளை நிலங்கள் குறைந்தால் அப்டீங்குற பிரச்சனை வருதே.

அ.சி: சரி. நம்ம மயிலாடுதுறை எடுத்துக்கோ. சுப்ரமணியபுரம், சீனிவாசபுரம், காந்திநகர், திருவள்ளுவர் நகர், அப்டீ இப்டீன்னு பல்லாயிரக்கணக்கான விளை நிலங்கள் இன்று நகராயிப்போச்சே, உனக்கும் எனக்கும் தெரிந்து அதெல்லாம் எப்படி செழிப்பா இருந்துச்சு. நம்ம ஊர்லயும் பா.ம.க இருக்கு. இதெல்லாம் கண்ணுக்கு தெறியலையா?

அ.அ: நீ என்னை அரசியலுக்கு இழுக்கற. நா வரலை.

அ.சி: இல்லை. இது அரசியல் இல்லை. சமூக அக்கறை. சரி விடு. பா.ம.கவையும் சமாளிச்சு துணநகரமும் அமைய உன்கிட்ட ஏதாவது ஐடியா இருக்கா?

அ.அ: நான் என்ன மினிஸ்டரா? என் ஐடியாவை கவர்மெண்ட் கேக்க போவுதா? ஆனால் என்னிடம் சில கருத்துகள் உண்டு.

அ.சி: கேக்கும். புதுவை எம்.பி. ராமதாஸ் ஒரு முறை மன்மோகன் சிங் நிதியமைச்சராக இருந்த போது ஒரு 'மாதிரி' பட்ஜெட் போட்டு அனுப்பி வைத்தார். அதிலே 40% அளவுக்கு ஏத்துக்கப்பட்டது. அப்போது அவர் சாதாரண புரஃபஸ்ர் தான். அப்போ அவர் அரசியல்வாதிகூட இல்லை. துணை நகரம் சம்மந்தமாக உன்னிடம் உள்ள கருத்தை பதிவாக்கு.

அ.அ:யார் வந்து படிப்பாங்க?

அ.சி: உனக்கு பின்னூட்டம் போட்டவங்க மாத்திரம்தான் உன்னை படிப்பவர்களா? படிக்க தெரிந்த அத்தனபேருக்கும் பின்னூட்டம் போட தெரியனும்ங்கர அவசியம் இல்ல. ஏன் எனக்கே தெரியாது. ஆனால் நான் படிக்காத தமிழ் பிளாக்கே இல்லை. அதனால்தான் சொல்கிறேன், உன்னை அலுத்துபோகாமல் இருக்க வேண்டுமானால் நீ வெரைட்டியாக எழுது.

அ.அ: "அந்தரங்கம் விற்பவர்களை செருப்பால் அடி" ன்னு ஒரு ஆத்திரத்தை எழுதினேன். யாவாரம் சரியா ஆகலை.

அ.சி: தப்பு அது உன் களம் இல்லை. தவிர நீ சொல்லவந்ததை ஒருவித பயத்தில் சரியா சொல்லலை. தலைப்பில் இருந்த காரம் உள்ளே இல்லை. அதுதவிர வந்த புதுசு. உன்னை கவனிக்க ஆளே அப்போது இல்லை. உனக்கு தெரிந்த விஷயங்கள் நிறைய இருக்கு. அதை எழுது. "பெயர் வைக்கலாம் வாங்க"ன்னு ஒரு மொக்கை பதிவு படிச்சேன். அது ஒரு நல்ல விஷயம் சொல்லக்கூடிய பதிவு. திடீர்ன்னு அதை மொக்கையாக்கிட்டு அடுத்த காமடிக்கு போயிட்ட. அதுதவிர நல்ல விவாதங்களில்கூட நீ போய் கலந்துப்பதில்லை. போனாலும் ஏனோ தானோன்னு வருகை பதிவு மாத்திரம் செய்யுற.

அ.அ: எப்போ அப்டீ நடந்துச்சு!

அ.சி: இப்போ ரீஸண்டா, உஷா மேடம் பதிவுல ஒரு நல்ல வாக்குவாதம் நடந்தது. அவங்க அதான் பிரேமலதா உள்ள வந்தவுடன். கொத்ஸும், நாகை சிவாவும் நடத்திய களேபரத்தில் நீ சும்மா பாத்துகிட்டு மட்டும் இருந்தாய்.

அ.அ: இல்லியே! அவங்க சேதுக்கரசியை மறந்தவுடன் வந்து ஞாபகப்படுத்தினேனே!

அ.சி: வெரிகுட். நல்ல விஷயம். அதே போல் பிரேமலதா வந்தவுடன் சூடுபிடித்ததே அப்போது நீ உள்ளே நுழைத்திருக்க வேண்டும். சேதுக்கரசியை ஞாபகப்படுத்திய நீயும் கொத்ஸும் இம்சை அரசியை மறந்தது ஏன்? அதும் கொத்ஸ்கூட வ.வ.ச வில் இருக்காங்க. இந்த நிமிஷம் வரை நீங்கள் யாரும் வாய் திறக்கவில்லை. அதுபோல் பெண்கள் ஒத்துமை என கூவி கூவி கும்மாளமாக இருந்த எந்த பெண்களும் இம்சை அரசி பத்தி வாய் திறக்கவில்லை. இது ஏன்?

அ.அ: டேய் டேய் வேண்டாம். நா இங்க கொஞ்சம் மரியாதயா இருக்கேன். ஒரு வார்த்தை உஷா மேடத்துகிட்ட சொன்னா சேத்துக்க போறாங்க. அவங்ககுள்ள சண்டை போட வச்சிடாதடா. நா இந்த நிமிஷம் வரை நெசமாவே மறந்துவிட்டேன்.

அ.சி: ஆமாம். இருக்கலாம். ஆனா கொத்ஸ் ஞாபகமா மறந்துட்டார்.

அ.அ: சரி. அந்த விஷயத்த விடு. நா வேனுமின்னா பின்நவீனத்துவம் எழுதவா?

அ.சி: முதல்ல பின்நவீனத்துவம்ன்னு ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம எழுது. பின்ன பின்நவீனத்துவம் எழுதலாம். அது போல லக்கியின் பதிவு, வெட்டி பதிவு, கொத்ஸ், பின்நவீனத்துவத்துல பின்னி பெடலெடுக்கற மிதக்கும் வெளி, தம்பி, முத்துகுமரன், சமீபத்துல ஒரு கவிதை நிலவு நண்பன் இத பத்தியெல்லாம் பேசலாம். மீதி அடுத்த வாரம் பேசலாம்.

அ.அ: என்னடா இது என் பதிவு போலயில்லையே!

அ.சி: அது போகட்டும். எனக்கு ஒரு நோக்கியா 5300 வாங்கி அனுப்பு!

அ.அ: உன்கிட்டதான் அந்த மாடல் இருந்துச்சே?

அ.சி: அது உடைஞ்சு போச்சு. நான் பாப்பாவ கலாய்க்க கூப்பிட்டேன். வந்தா. நா ஒரு வேளையும் சொல்லாம பேப்பர் படிச்சுகிட்டு இருந்தேன். அவ ரொம்ப நேரம் நின்னு கிட்டு இருந்தா. பிறகு"என்ன சித்தப்பா வேளை செய்யனும்"ன்னு கேட்டா. அதுக்கு நான் "இங்க வான்னுதான் சொன்னேன், வேளை இருக்குன்னு சொன்னனா?" ன்னு சொன்னேன். சரின்னு போயிட்டா. சாயந்திரம் வந்து "சித்தப்பா உங்க போனை தூக்கிபோடுங்க"ன்னு சொல்லிகிட்டு கையை குவிச்சு வச்சுகிட்டா. நானும் போட்டேன். அவ பிடிக்காம விட்டுட்டு போயிட்டா. போன் கீழே விழுந்து உடஞ்சுடிச்சு. அதுக்கு அவ "போனை போடுங்கன்னுதான சொன்னேன். பிடிக்கிறேன்னு சொன்னனா?"ன்னு சொல்றா.

அ.அ: இப்போதான் என் பதிவு மாதிரி இருக்கு. சரி அடுத்த வாரம் பேசுவோம்.

March 15, 2007

பசு அவர்களே! சவாலுக்கு தயாரா?(பாகம் 2)

நேற்று பத்மா சுப்ரமணியம் அவர்களே! சவாலுக்கு தயாரா? ன்னு ஒரு பதிவு போட்டிருந்தேன். தமிழ் மணத்திலே பதிவின் பக்கத்திலே ஐயா பெயர் வரலை. ஒருவேளை பதிவின் பெயர் பெருசா இருப்பதால வரல போலன்னு நெனச்சுகிட்டு பத்மா சுப்ரமணியத்தை பசுவாக்கி இந்த 2ம் பாகம் போடுகிறேன்.

*************************************************************************************

எனக்கு அப்போதான் அந்த டவுட் வந்துச்சு. பாப்பாதான் 1 வாரத்திலே கு.வ கத்துகிட்டாளே, பிறகு ஏன் 1 மாசமா அதையே செய்றா, டீச்சர் வேற எதுவும் இன்னுமா சொல்லிதரலை??

சரி, இன்னைக்கு ஜன்னல் வழியா பாத்துட வேண்டியதுதான்னு முடிவு செஞ்சு டீச்சர் வருகைக்காக காத்திருந்தேன்.

டீச்சர் வந்தாங்க. இப்போல்லாம் அவங்க முன்ன மாதிரி கல கலன்னு இருப்பதில்லை. அவங்க வீட்டுல என்ன பிரச்சினையோன்னு நெனச்சுகிட்டேன்.

பாப்பா பர பரன்னு தங்கமணி கிட்டே காபி, பிஸ்கட் எல்லாம் வாங்கி ரூம் உள்ளே கொண்டு வச்சுட்டு சிரத்தையா கதவ சாத்திகிட்டா. அவங்க காபி குடிச்சு முடிக்கட்டும்ன்னு 15 நிமிஷம் காத்திருந்து மெதுவா ஜன்னல் திறந்து பார்தேன். பாப்பா குரு வணக்கம் செஞ்சா.

"சரி..போதும் இன்னைக்காவது அடுத்த பாடம் போகலாம்"ன்னாங்க. அவங்க இன்னைக்காவதுன்னு கொஞ்சம் அழுத்தி சொன்னதுல ஏதோ உள்குத்து இருக்கும் போலயிருக்கேன்னு எனக்கு டவுட்.

நா சந்தேகப்பட்டது சரியா போச்சு. அவங்க கதற கதற பாப்பா காதுலயே வாங்கிக்காம ஒன்லி கு.வ தான். "இங்க பாரும்மா. என் பேர் கெட்டுடும். வேற எதுவும் சொல்லிகுடுக்கலைன்னு, அதனால இன்னைக்காவது அடுத்த பாடம் போகலாம்"னு கெஞ்சுனாங்க.

பாப்பாவும் கொஞ்சம் மனசு இறங்கி "சரி"ன்னுச்சு. உடனே டீச்சர் சந்தோஷமா "சரிடா செல்லம், நீ ரொம்ப நேரம் கு.வ செஞ்சதால கால் வலிக்கும், அதனால அந்த சோஃபால உக்காந்துக்கோ, இப்பொ நா ஆடுவதை பாத்துக்கோ"ன்னாங்க.

பாப்பா சோஃபா வில சாஞ்சு உக்காந்துகிட்டு அட்டானிகால் போட்டுகிட்டு " டீச்சர் முதல்ல குருவணக்கம் அப்புறம்தான் அடுத்த பாடம்" அப்டீன்னுச்சு. "இல்லம்மா, அதான் உனக்கு அது நல்லா வருதே, நேரா அடுத்த பாடம் போகலாம்"ன்னாங்க.

"ஊகூம். முதல்ல கு.வ" ன்னு சொல்லீட்டு வாயில விரல் போட்டுகிச்சு. சரி ஆடி தொலச்சுட்டா அடுத்த பாடத்துக்கு போகலாமேன்னு அவங்களும் பாப்பாவுக்கு முன்னாடி குருவணக்கம் செஞ்சாங்க. பாப்பா என்னவோ குருநாதர் மாதிரி உக்காந்து அவங்க வணக்கத்தை ஏத்துக்காம "டீச்சர் இது மாதிரியில்ல, நேத்திக்கு வச்ச மாதிரி"ங்குது.

"நேத்திகும் இப்டீதானே செஞ்சேன்"ன்னாங்க. "இல்ல வேற மாதிரி"ன்னுச்சு பாப்பா. சரின்னு அவங்களும் இன்னுமொரு தடவை வச்சாங்க. பாப்பாவுக்கு திருப்தியேயில்லை 4,5 தடவை அவங்க செய்துகாட்டியும்! அதுக்குள்ள 1 மணி நேரம் முடிஞ்சுது. "சரி இன்னைக்கு இது போதும்" அப்டீன்னு டீச்சர் சொல்லலை..பாப்பா சொல்லுது!!

என்னவோ பாப்பா பென்ட நிமுத்தறேன்னு முதநாள் சொல்லிட்டு உள்ளே போன டீச்சர் பென்டு கழண்டு வெளியே வந்தாங்க.

பாப்பாவும் டைகரோட விளையாட போயிட்டா. நா மெதுவா டீச்சர்கிட்ட கேட்டேன் "டீச்சர் தினமும் இந்த கூத்துதான் நடக்குதா"ன்னு.

அதுக்கு அவங்க "ஆமா அபிஅப்பா, எனக்கு கொஞ்சம் உடம்புக்கு முடியலை. ஒரு 6 மாசம் கழிச்சு கிளாஸ் எடுக்கலாமா"ன்னு கேட்டாங்க. உங்க பொண்ணுக்கு என்னால மட்டுமல்ல அந்த பத்மா சுப்ரமணியம் வந்தாகூட கத்துகுடுக்க முடியாது என்பதை எவ்வளவு டீசண்டா சொல்றாங்க!!

சரின்னேன். பிறகு பாப்பாகிட்ட கேட்டேன். "என்னடா பரத நாட்டியம் பிடிக்கலயா?"ன்னு. அதுக்கு பாப்பா "என்னய கேட்டா சேத்திங்க"ன்னுது. அந்த கால குழந்தைகளுக்கும் இந்த கால விசுக்கட்டான்களுக்கும் எவ்வளவு வித்யாசம். இங்க பாருங்க உஷா மேடம் பட்ட கஷ்டத்த.

மறுநாள் டீச்சரை கோவிலில் பார்த்தேன். "அபிஅப்பா! பாப்பாவுக்கு நல்ல குரல் வளம் இருக்கு. என் வீட்டுக்கு பக்கத்துல ஒரு பாட்டு சார் இருக்காரு, அவர்கிட்ட வேணா சேத்துவிடுங்க" அப்டீன்னாங்க.

"ஏன் டீச்சர் அவர்கிட்ட சேக்கனும்"ன்னு கேட்டேன். அதுக்கு அவங்க "அவர் வீட்டுக் குப்பையெல்லாம் என் வீட்டு வாசல்ல வந்து கொட்டிட்டு போறார்"
அப்டீன்னாங்க. எனக்கு ஒன்னும் புரியலை. அதுக்கும் அவர்கிட்ட பாப்பா பாட்டு கத்துகறத்துக்கும் என்ன சம்பந்தம்?

நான் தங்கமணிகிட்ட வந்து விஷயத்த சொன்னேன். அதுக்கு தங்கமணி " ஏன், பாட்டு வாத்தியார் ஸா...பா...ஸா..பா ன்னே சாவறத்துக்கா"ன்னாங்க.

முற்றும்

March 14, 2007

பத்மாசுப்ரமணியம் அவர்களே!சவாலை சந்திக்க தயாரா?(பாகம்1)

எனக்கு அந்த விபரீத ஆசை வந்திருக்ககூடாது, வந்துடுச்சு. கிடுகிடுன்னு அடுத்த கட்ட வேலைய ஆரம்பிச்சிட்டேன். என்ன அந்த ஆசைன்னா கொஞ்ச நேரம் முன்ன டி.வி பாத்தப்ப நல்ல பரத நாட்டிய நிகழ்ச்சி அதாங்க பத்மா சுப்ரமணியம் பரத நிகழ்ச்சி. அடடா நம்ம கையில வெண்ணைய வச்சிகிட்டு நெய்க்கு பத்மா சுப்ரமணியத்த கேப்பானேன்னு பாப்பாவுக்கு பரதம் கத்துகுடுத்து அவங்கள விட பாப்பாவ பெரிய டான்ஸரா ஆக்கிடனும்னு முடிவு செஞ்சாச்சு.

பாப்பா இன்னும் கொஞ்சம் வளர்ந்த பிறகு இந்த கூத்தெல்லாம் வச்சுக்கலாமேன்னு தங்கமணி சொன்னத காதில போட்டுக்காம பக்கத்து தெரு கமலா டீச்சர்கிட்ட(பரத நாட்டிய டீச்சர்) ஒப்பந்தம் போட்டாச்சு.

"டீச்சர் 1 வாரம் ஆனாலும் பரவாயில்ல பாப்பாவ ஒரு பத்மா சுப்ரமணியமா ஆக்கிடுங்க"ன்னு சொன்னதுக்கு (தங்கமணி: ''அதுக்கு உங்க பேர கண்மணி சொன்ன மாதிரி ச்சுப்ரமணின்னும் பாப்பா பேர பத்மான்னும் மாத்தனும்'') அவங்க "1 வாரத்துல குருவணக்கம் வரைக்கும்தான் வரும்"ன்னாங்க. சரி போகட்டும்ன்னு "டீச்சர் அந்த டிரஸ் எல்லாம் எங்க தைக்கனும்னு கேட்டதுக்கு "உங்க ஆர்வம் ரொம்ப ஜாஸ்தி. அந்த டிரஸ் இன்னும் 3 வருஷம் கழிச்சு பாத்துகலாம், இப்போ கத்துக்க சுடிதார் மட்டும் போதும்"ன்னுட்டாங்க.ரொம்ப கராரா இருக்காங்களே பாப்பாவ என்ன பாடுபடுத்த போராங்களோன்னு லைட்டா ஒரு பயம் எனக்கு.

நல்ல நாள் பாத்து குரு தட்சினை எல்லாம் ரெடியாக்கி பாப்பாவை ரெடியாக்கி, அவ சுத்தி சுத்தி ஆட வசதியா ஒரு ரூமை காலியாக்கி ஜெக ஜோரா ஆரம்பிச்சாச்சு. அந்த நேரத்துல பாப்பா ஒரு கண்டிஷன் போடுறா. அவ ஆடுவதை யாரும் பாக்க கூடாதாம். ரூமை சாத்திட்டுதான் கத்துக்குமாம். டீச்சர்"குழந்தைதான, அதான் கொஞ்சம் வெக்கப்படுது. பரவாயில்ல நா பென்ட நிமித்துனா சரியாயிடும்"ன்னு சொன்னாங்க.

ஆச்சு 1 வாரம். பாப்பா அசத்த ஆரம்பிச்சுட்டா! டைகரை நிக்க வச்சு குருவணக்கம் செஞ்சா. நல்ல அழகா வலது கை, இடது கை எல்லாம் சரியா நீட்டி மடக்கி முதுகை வலைத்து நிமித்தி இரண்டு கையும் குவித்து சூப்பரா குருவணக்கம் வைச்சா. பாவம் டைகர்தான் புரியாம திருதிருன்னு முழிக்குது.

சரிதான், இன்னும் கொஞ்ச நாள்ல டைகர் குருவணக்கம் கத்துகிட்டு சமத்தா வீட்டுக்கு வர்ரவங்களை குரைக்காம குருவணக்கம் வைக்கபோகுது. இந்த அதிசயம் ஆனந்த விகடன்ல கவர் ஸ்டோரியா வரப்போகுது(அப்போ நல்ல டி ஷர்ட் போட்டுகிட்டு போஸ் குடுக்கனும்)அப்டீன்னு நெனச்சுகிட்டேன்.

எனக்கு, தங்கமணிக்கு, தாத்தா, பாட்டி, சித்தப்பா, சித்தின்னு தனித்தனியா குருவணக்கம். நாங்க என்னவோ ஒன்ஸ்மோர் கேட்ட மாதிரி திரும்ப திரும்ப வேற. பாவம் பாப்பாவுக்கு கால்வலிக்கபோவுதுன்னு தூங்க வச்சாச்சு.

காலைல பாப்பாவ பெட்டில் கானுமேன்னு ஹாலில் வந்து பாத்தா ஒரு சேரில் போன் இருக்கு, பாப்பா அதுக்கு முன்னாடி குருவணக்கம் வச்சுகிட்டு இருக்கா. இது யாருக்கு பாப்பான்னு கேட்டேன்."பெரிய அத்தை போன்ல இருக்காங்கப்பா"ங்குது.

பிறகு அந்த 1 மாதமும் ஸ்கூல் ஆட்டோகாரர், டிராஃபிக் போலீஸ், அவ ஃபிரன்ஸ், பாகனுக்கு தனியே, பொன்ஸக்காவுக்கு தனியே, கோயில் குருக்களுக்கு தனியே, சாமிக்குதனியேன்னு ஒரே குருவணக்கம்தான்.டைகரும் குருவணக்கம்ங்குற பேர்ல குட்டிகரணம் போட்டுட்டு இதுதான் கு.வ ங்குது. நா சரியா பாப்பா அளவு செஞ்சனான்னு ஒரு பார்வைவேற விடுது என்னய பாத்து.

மீனு வாங்கலையோ மீனுன்னு கூவிக்கிட்டு வந்த அந்த மீன்காரம்மா, வந்தா மீனை வித்துட்டு போகாம "பாப்பா எங்க டான்ஸ் ஆடு"ன்னு சொல்ல, பாப்பாவும் சந்தோஷமா ஒரு செஞ்சுரி அடிச்சா. அந்தம்மா போகும் போது "கருவாடு வாங்கலையோ கருவாடு"ன்னு கூவிகிட்டு போனாங்க!!

எனக்கு அப்போதான் அந்த டவுட் வந்துச்சு. பாப்பாதான் 1 வாரத்திலே கு.வ கத்துகிட்டாளே, பிறகு ஏன் 1 மாசமா அதையே செய்றா, டீச்சர் வேற எதுவும் இன்னுமா சொல்லிதரலை?? ----------தொடரும்


திஸ்கி: பதிவு பெருசா இருந்தா மக்கள்ஸ் ஸ்கிப்பாகி போகாம இருக்கவும், கொஞ்சம் ஆணி அதிகமாக புடுங்க வேண்டியிருப்பதாலும்......

March 8, 2007

காமடி தினமா? மகளிர்தினமா??

1ம்தேதின்னா எங்க சின்ன அக்கா பரபரப்பாயிடுவாங்க. அம்மாவுக்கு ஹெல்ப்பெல்லாம் நடக்கும். வேற என்ன தட்டுகள் கழுவி சுத்தமாக்கின்னு சுறு சுறுன்னு இருப்பாங்க. ஏன்னா அப்பாவின் சம்பள நாள். கண்டிப்பா காளியாகுடி அல்வா வாங்கிட்டு வருவாங்க.

வந்தவுடன் அம்மாதான் பங்கு பிரிப்பாங்க. தட்டில் ரவுண்டாக ஒவ்வொருவருக்கும் வைத்துவிட்டு நடுவே ஒரு பங்கு. அது தம்பிக்கு. அது கொஞ்சம் பெரியதாக இருக்கும். அவன் கடைகுட்டி அதனால. அதன் பிறகு அம்மா அவங்க பங்கிலேயிருந்து கொஞ்சம் கில்லி தம்பி பங்கின் தலையில் கிரீடம் மாதிரி வைப்பாங்க.

நான் கொஞ்சம் அவசர குடுக்கை. குடுத்த உடனே டபக்குன்னு தின்னுடுவேன். தம்பியோ அந்த கிரீடத்தையே நக்கிகிட்டு இருப்பான். சின்ன அக்காவோ ரசித்து ரசித்து கொஞ்சம் கொஞ்சமா எனக்கு எதிர்ல நின்னு திங்கும். அதை எப்படியாவது புடுங்கிடனும்ன்னு நா பிரம்ம பிரயத்தினம் செய்வேன்.

தம்பியோடத பிடுங்க முடியாது. அம்மா காவல் வளையத்துக்குள் இருப்பான். ஒருமுறை 90% பிடுங்கிட்டேன் சின்ன அக்காகிட்ட இருந்து. என்னை தள்ளிவிட்டுட்டு டபக்ன்னு வாய்குள்ளே போட்டு வாயை மூடி ஒரு உருட்டு உருட்டி வெளியே எடுத்து "எச்சிலாயிடுத்தே. இப்ப நீ சாப்பிடமுடியாதே"ன்னு நக்கல் செஞ்சுது.

ஒரே செகண்டில் அதை பிடுங்கி நான் வாயில் போட்டு முழுங்கி(நான் அதை ருசி பார்க்கனும் என்பதில்லை.அக்காவை ஜெயிக்கனும் அவ்வளவே) "எச்சியா இருந்தா பரவாயில்ல, இப்ப என்ன பண்ணுவ"ன்னு சொல்லிட்டு ஓடிட்டேன். பிறகு அக்கா துரத்தி துரத்தி அடித்தது தனி கதை.

பின்பு பெரிய அக்கா தன் பங்கில் எனக்கு கொஞ்சம் சின்ன அக்காவுக்கு கொஞ்சம் தந்தது.

அப்போது சவால் வேற..சின்ன அக்காகிட்ட"தோ பார். நா அப்பாவாட்டம் வேலைக்கு போய் மொதோ சம்பளம் வாங்கி 2கிலோ அல்வா வாங்கி லாட்ஜ்ல ரூம் போட்டு கதவ சாத்திகிட்டு நா மட்டும் தனியா திங்கல என் பேர மாத்திக்க". இதுவரை எனக்கு ரூம் போட்டு அல்வா சாப்பிட நேரம் கிடைக்கவில்லை.

6 மாதம் முன்பு அக்கா வீட்டுக்கு வந்தபோது "அக்கா காளியாகுடி அல்வா வாங்கிவர்ரேன் சாப்பிடுறாயான்னு கேட்டேன். அதுக்கு அக்கா" போடா இப்பல்லாம் அந்த ஆசையே இல்லை. காபிக்கு கூட ஜீனி போடுவது கிடையாது"ன்னு சலிச்சுகிட்டாங்க. அந்த காலம் இனி வருமா?

அபிபாப்பாகிட்ட 1 கிலோ அல்வா வாங்கி குடுத்தா ஒரே ஒரு வாய் கஷ்டப்பட்டு தின்னுட்டு மீதிய டைகர்தான் சாப்பிடுது. அவளுக்கு எனக்கும் என் அக்காகெல்லாம் கிடைத்த அனுபவமெல்லாம் அசைபோட கிடைக்குமா.

விஷயத்துக்கு வருகிறேன். இப்படி தினம் தினம் சண்டையும் ஜாலியுமாய் போய் கொண்டிருந்தது. நான் 9ம் வகுப்பு படித்தபோது பெரிய அக்காவும், காலேஜ் 2ம் வருடம் படித்த போது சின்ன அக்காவும் கல்யாணமாகி புகுந்த வீடு போய்ட்டாங்க!

அதன் பிறகு 13 வருஷம் எங்க வீடு வீடு மாதிரியே இல்லை. அம்மா மட்டும்தான் மகளிர். அவங்க தலைசீவிட்டு முடியை சீப்பிலேயே வைக்க மாட்டாங்க,ஸ்டிக்கர் பொட்டை கண்ணாடியில ஒட்ட மாட்டாங்க, கண் மையை சுவத்துல தடவ மாட்டாங்க, சாப்பிட்ட தட்டை காயவிட்டு கழுவமாட்டாங்க, கலர் கோலம் போட மாட்டாங்க, சினிமா பத்தி பேச மாட்டாங்க, ரிப்பன் கிடையாது, குஞ்சம் கிடையாது, கண்ணாடி வளையல் போட மாட்டாங்க, கொலுசு போட்டுக்க மாட்டாங்க, ஹீல்ஸ் கிடையாது சாதாரண ரப்பர் செருப்புதான், எங்கயாவது கிளம்பினா 2 நிமிஷத்துல மேகிமாதிரி ரெடியாயிடுவாங்க.(ஆனால் அன்பும், அருமையான சாப்பாடும் அம்மாவிடமிருந்து கிடைக்கும்)..ரொம்ப வெறுமையா போச்சு அந்த 13 வருஷம்.

அப்புறம் தங்கமணி வந்த பிறகு வீடு பழையபடி கல கலன்னு சிரிக்குது. ஆக வெறுமை இல்லாத உலகத்தை தந்து கொண்டிருக்கும் அம்மா, சகோதரிகள், நண்பிகள், மற்றும் அனைத்து மகளிருக்கும் இந்த அபிஅப்பாவின் மகளிர்தின வாழ்த்துக்கள்.

குறிப்பாக எனக்கு இந்த 1மாதமாக வலைப்பூவினால் கிடைத்த சகோதரிகள் இம்சைஅரசி,நர்மதா,அப்பாவிகுமாரி,சேதுக்கரசி,முத்துலெஷ்மி,வல்லிசிம்ஹன் மேடம்,மீனா,டுபுக்குடிசப்பிள்,பொன்ஸக்கா,மைஃபிரன்ட்,கண்மணி,துளசிடீச்சர், கீதா மேடம்,அபர்ணா, மங்கை,மதுரா,வேதா,உஷமேடம்,கீதாபாலராஜன்,ராதாஸ்ரீராம்,கோகிலாகார்த்திக்,கவிதா,ஷக்தி ஆகியோர்களுக்கு என் ஸ்பெஷல் வாழ்த்துக்கள்!!!

தலைப்பு: சும்மா தூண்டில்தான்:-)))

March 7, 2007

ஜெயலலிதா-பொன்முடி-முதலாம் பானிப்பட் யுத்தம்!!!!

திஸ்கி # 1 : 3 மாதங்கள் முன்பு ஜெயலலிதா கணிதத்தில் வாங்கிய மார்க் பற்றிய சர்ச்சையில் பொன்முடி சென்னை பல்கலை கழக மார்க் லிஸ்டயே காட்டி அந்த சண்டையில் ஜெயிச்சார். இந்த பதிவுக்கும் இந்த திஸ்கிக்கும் என்ன சம்பந்தம்??
.
*******************************************************************************
சமீபத்தில் எனக்கு கிடைத்த ஒரு 8ம் வகுப்பு மானவ or மாணவி யின் வரலாறு பரிட்சையின் விடை தாள் கிடைத்தது. அப்படியே கீழே தருகிறேன்.
*******************************************************************
.
1.முதலாம் பானிப்பட் யுத்தம் மற்றும் பாபரின் முடிசூட்டு விழா பற்றி விரிவாக எழுதுக:

அவனுக்கும், இவனுக்கும் யுத்தம். அவன் கையில் 200 வீரர்களும், 50 டேங்குகளும், 10 மிஸைல்களும், 5 யுத்த விமானங்களும் இருந்தன.

அதுபோல இவன் கையில் 300 வீரர்களும், 25 டேங்குகளும், 25 மிஸைல்களும், 10 யுத்த விமானங்களும் இருந்தன.

அவன் தான் முதலில் ஒரு மிஸைலை இவன் மேல் விட்டு யுத்தத்தை தொடங்கினான்.

முதல் நாள் முடிவில் அவன் 75 வீரர்கள், 6 டேங்குகள், 5 மிஸைல்கள், 2யுத்தவிமானங்கள் ஆகியவற்றை இழந்தான். அதுபோல் இவனுக்கும் பலத்த நஷ்டம் ஏற்ப்பட்டது.

3ம் நாள் யுத்தம் முடிவுக்கு வந்தபோது அவனும் இவனும் மற்ற எல்லாரும் இறந்துவிட்டனர்.

கடைசியில் ஐக்கிய நாடு என்னும் நாட்டில் உள்ள அண்ணன் கோபி என்பவர் வந்து அந்த பட்டாளத்தில் மிச்சமிருந்த ஒரு பாபருக்கு முடி சூட்டினார்.

2. 1869 ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி என்ன முக்கிய நிகழ்வு நடந்தது?

காந்தி பிறந்தார்.

3. 1874ம் ஆண்டு என்ன நடந்தது?

காந்திக்கு 5 வயது ஆனது.

4. ஜாலியன் வாலா பேக் பற்றிய உங்கள் அபிப்ராயம் என்ன?

அந்த பேக் அத்தனை நல்ல பேக் என்று சொல்லமுடியாது. ஃபாரினில் இருந்து வருபவர்கள் கொண்டு வரும் பேக் நன்றாக இருக்கின்றது. ஃபாரின் செல்ல முடியாதவர்கள் ஒரு அவசரத்துக்கு பாரீஸ் கார்னரில் வாங்கி உபயோகப்படுத்தலாம் என்பதே என் அபிப்ராயம்.

5.சுபாஷ் சந்திர போஸ் பற்றி விவரிக்கவும்?

இந்த உலகத்துக்கு எடுத்துக்காட்டாய் விளங்கும் இணை பிரியாத நண்பர்கள் சுபாஷும் சந்திரனும் போஸும். என்ன! இந்த போஸ் மட்டும் எப்போதாவது சிகரட் குடிக்கும் பழக்கம் உடையவன். அதை தவிர இந்த மூவரும் மிக்க நல்லவர்கள் என்பது என் கருத்து.

6. அக்பர் இந்தியர்களுக்கு செய்த நன்மைகள் பற்றி 2 பக்கம் விரிவாக எழுதவும் ?

அப்பப்ப ஐந்தோ பத்தோ கொடுத்திருப்பார். 2 பக்கம் விரிவாக சொல்ல சரித்திரத்தில் அவரைப் பற்றிய குறிப்புகள் இல்லை என்பதே என் கருத்து.

*****************************************************************************

மக்கா! பதிவு நீண்டு போய்விடும் என்பதால் மீதி பதில்களை விட்டுவிடுகிறேன்.

திஸ்கி# 2:
//என்ன அபி அப்பா நீங்க தமிழ் ல்ல அப்படி இப்படின்னு சொல்லிட்டு கொங்குதேர் ஒப்பிச்சீங்களா? பரவாயில்லையே.நானெல்லாம் அப்போ வரலாறு தான் இஷ்டமா படிப்பேன். // இது சகோதரி முத்துலெஷ்மி அவர்களின் ஒரு பின்னூட்டம்.

திஸ்கி # 3: மக்களே திஸ்கி#1,திஸ்கி#2, பதிவு இது எதுக்குமே சம்பந்தம் இல்லை. போட்டு குழப்பிக்க வேண்டாம். குழப்பிகிட்டா கொஞ்சம் சிரிப்பு வரும்.

March 6, 2007

பெயர் வைக்கலாம் வாங்க!!!


நண்பர் திரு. பொதக்குடியான் இங்கே ஒரு பதிவு போட்டிருந்தார். அது பற்றிய மேல் விபரங்கள் என்னிடம் இருக்கிறது தருகிறேன் இன்னும் கொஞ்சம் விளக்கமாக போடுங்கள் என்று பின்னூட்டமிட்டேன். அவரும் சரியென்றார். ஆனால் அந்த வீடியோ(கிராஃபிக்ஸ்) 116 MB யாக இருப்பதால் யூடியூபுக்குள் திணிக்க முடியவில்லை, மெயிலிலும் அனுப்ப முடியவில்லை. அதனால் கொஞ்சோண்டு இங்கே தருகிறேன்.
.
.
இதோ நிக்குதே "புர்ஜ் துபாய்" என்னும் இந்த கட்டிடம்...2008 ல் கட்டி முடிச்சவுடன் இப்படிதான் இருக்கும்.
.
இந்த ஒப்பீட்டை பாருங்கள்!
.
கனாரி வாஃர்ப்-லண்டன் - உயரம் 235 மீட்டர்(771 அடி)
.
எம்பயர் ஸ்டேட்- நியூயார்க் - உயரம் 381 மீ(1250 அடி)
.
சியர்ஸ் டவர் - சிக்காக்கோ - 442 மீ(1450 அடி)
.
பெட்ரோனாஸ் டவர் - கோலாலம்பூர் - 452 மீ(1483 அடி)
.
தேய்பே டவர் - ஜப்பான் - 509 மீ(1671 அடி)
.
ஆனால் நம்ம புர்ஜ் துபாய் 800மீட்டர் உயரம் (2625 அடி)
.
06/03/2007 இன்று 117வது மாடிக்கு காங்கிரீட் ஓடிக்கொண்டிருக்கிறது.
மொத்தம் 160 மாடிகள்.
.
இதெல்லாம் விஷயமில்லை. இந்த கட்டிடம் இந்தியாவில் இருந்து நமது அரசாங்கம் " இந்த தமிழ் பிளாக்கர் எல்லாம் ரொம்ப நல்லவங்க, அவிங்க யாராவது பேர் வைக்கட்டும்"ன்னு ஒரு சான்ஸ் நமக்கு குடுத்தா நீங்க என்ன பேர் வைப்பீங்க கட்டடத்துக்கு - அது தான் கேள்வி.
.
நீங்கள் வைக்கும் பெயரையும் சொல்லுங்க, உங்கள் வலை நண்பர்கள், மற்றவர்கள் வைத்தால் இன்ன பெயரைதான் வைப்பார்கள் என்பதையும் சொல்லுங்கள்.
.
உதாரணத்துக்கு நண்பர் செந்தழலார் வச்சா - "வீராசாமி டவர்" இப்டியாக...
.
வந்து குமுறுங்க...ஸ்டாட் மீசிக்...

March 4, 2007

அஞ்சு ஜார்ஜும் அபி பாப்பாவும்!!!

நான் வீட்டுக்குள் நுழையும் போது பாப்பாவும் டைகரும் ஓடி புடுச்சி விளையாடிக்கிட்டு இருந்தாங்க. என்னய பாத்ததும் "அப்பா எங்க மிஸ் உங்கள அவுங்களுக்கு போன் பண்ண சொன்னாங்க"ன்னு சொன்னா. பாப்பா நல்லா படிக்கிறதால ஏதாவது பண முடிப்பு தரப்போறாங்களோன்னு நெனச்சுகிட்டு போன் பண்ணினேன்.

"மிஸ் நா அபிஅப்பா. போன் செய்ய சொன்னீங்களாமே?" ன்னு கேட்டேன். அதுக்கு அவங்க "ஆமா, நாளைக்கு 'ஸ்போர்ட்ஸ் டே' அபி 3 ஈவண்டுக்கு சேத்துருக்கோம். பன் சாப்பிடுற போட்டி, சாக்கு ரேஸ், அப்புறம் லெமன்-ஸ்பூன் ரேஸ்" அப்டீன்னாங்க.

"சரி மிஸ் என்னன்ன எடுத்துகிட்டு வரணும்"ன்னு கேட்டேன். அதுக்கு அவங்க"சாக்கு ரேஸ்க்கு சாக்கு, லெமன்-ஸ்பூன் ரேஸ்க்கு லெமனும் ஸ்பூனும்"ன்னு சொன்னாங்க. நான்" பன்னு சாப்பிட என்ன கொண்டு வரனும்"ன்னு கேக்க "ம். வாயிதான்"ன்னு சொல்லி போன வச்சுட்டாங்க. ரொம்பதான் மிஸ்சுக்கு வாய்ன்னு நெனச்சுகிட்டு தங்கமணி கிட்ட விஷயத்த சொல்லிட்டு கிடுகிடுன்னு உபகரணங்களை ரெடிபண்ண ஆரம்பிச்சுட்டோம்.

பாப்பாவ பெரிய ஸ்போர்ட்ஸ் ஸ்டாரா அஞ்சு ஜார்ஜ் மாதிரி மாத்தணும்னு முடிவு செஞ்சாச்சு. அதுக்கு அந்த கெட்டப்ல மாத்தணும்னா டிராக் சூட், ஸ்போர்ட்ஸ் ஷு வாங்கணும்ன்னு 3அடி உயர சூட்டுக்கும், 4.5 இன்ச் ஷுவுக்கும் அலஞ்சி திரிஞ்சி வாங்கிட்டோம். தலை முடியெல்லாம் அஞ்சு மாதிரி குதிர வால் போட்டு கலக்கியாச்சு.

நான் போய் சாக்கும் ரெடி பண்ணிட்டேன். தன் பங்குக்கு பாப்பா கொல்லையில் இருந்து எலுமிச்சம் பழம் பொறுக்கிகிட்டு கிச்சன் போய் ஸ்பூனும் எடுத்துகிட்டு தன் ஸ்கூல் பேக்கில் வச்சுகிட்டா.

மறுநாள் காலையிலேயே கோயிலுக்கு போயிட்டு தேங்காய உடச்சிட்டு பாப்பாவ தூக்கிகிட்டு தங்கமணி, டைகர் சகிதமா களத்தில் குதிக்க கெலம்பியாச்சு.

முதல்ல பன்னு துன்ற போட்டி. பாப்பாவும் ஜாம்பவான் ஜாம்பவிகள் மத்தியில சும்மா கலக்கலா குந்திகிட்டு இருக்கு. அதோட கெட்டப்ப பாத்தா 10 பன்னு சாப்பிட்டுட்டு ப்த்தாதுன்னு கேக்கும் போலயிருக்கு. கண்டிப்பா பாப்பா இந்த ஈவன்ட்ல கலக்கப்போறா!

போட்டி ஆரம்பிச்சுது. தங்கமணி ஒரு பன் எடுத்து பாப்பாவுக்கு ஒரு வாய் டைகருக்கு ஒரு வாய்ன்னு அரை மணி நேரம் ஊட்டி விட்டுட்டு(வீட்டில் அப்டி ஊட்டினாதான் கொஞ்சமாவது சாப்பிடும்) "ஐ நான் ஜெயிச்சாச்சு. பாப்பாவ சாப்பிட வச்சாச்சு"ன்னு சந்தோஷப்பட்டுகிட்டாங்க.

பக்கத்து வீட்டு ராமனாதன் பையன் 5 சாப்பிட்டு 6 வது வேணும்னு அடம் புடிக்கிறான். சரி..இந்த ஈவண்ட் அவுட்டு. அடுத்ததுல பாத்துப்போம்னு சாக்கு ரேஸ்க்கு தயாராயிடோம்.

லைன்ல போய் நின்னு சாக்கை பிரித்தா அது சும்மா 5 அடிக்கு அவங்க மிஸ்ஸ உள்ள போட்டு கட்டலாம் போல இருக்கு. பிரிச்சு பாப்பாவ உள்ள இறக்கிவிட்டா தக்கினியூண்டு உள்ள கிடக்குறா. சாக்கு ரேஸ்ன்னா என்னான்னே தெறியாத பாப்பாவுக்கு இந்த முஸ்தீபுகளிள் பயங்கர சந்தோஷம். பெரிய சாக்கு எடுத்துட்டு வந்ததால நாதான் தங்கமணிகிட்ட..

இப்ப என்ன செய்யறதுன்னு யோசிச்சுகிட்டு இருந்தப்ப அவங்க பிரின்சிபால் மைக்கிலே"குழந்தைகளுக்கு அவங்க அவங்க பேரன்ட்ஸ் ஹெல்ப் செய்யலாம்"ன்னு சொன்னாங்க. அப்பதான் உயிரே வந்துச்சு.

ரெடி ஸ்டாட் சொன்னதும் நான் ஒருபக்க சாக்கின் வாயை பிடிச்சுகிட்டும் தங்கமணி ஒரு பக்கமாவும் பிடிச்சு தூக்கிகிட்டு ஓட ஆரம்பிச்சுட்டோம். பாப்பா ஏதோ பால்கனி கைப்புடிய பிடிச்சுகிட்டு தெருவ வேடிக்க பாக்குற மாதிரி ஜாலியா வருது. கூடவே டைகரும் ஓடி வருது. எனக்கே மூச்சு வாங்குது. இதுல பாப்பா என்னய பாத்து"அப்பா டைகர் பாவம்பா, அதையும் தூக்கி உள்ள போடுப்பா"ங்குது.

பய புள்ளங்க என்னமா ஓடுது. பாப்பா ஒழுங்கா நின்னுகிட்டு வராம பக்கத்துல வர்ர அவ ஃபிரன்ட் கிட்ட "பிரியா! நா புதுசா ஷு வாங்கிருக்கேனே"ன்னு சொல்லிகிட்டு காலை தூக்குறேன்னு பொதக்கடீன்னு சாக்கு உள்ளயே விழுந்துட்டா. சரி ஜெயிச்ச பிறகு தூக்கிப்போம்ன்னு வேர்க்க வேர்க்க இரண்டாவதா வந்து ஜெயிச்சோம்.

பரிச வாங்க போனா "போங்க போங்க அடுத்த கிரவுண்ட பாத்து"ன்னு பிச்சகாரன வெரட்டுற மாதிரி வெரட்டுராங்க பிரின்ஸ். "குழந்தைங்க கீழே விழுந்தா தூக்கி விட்டு ஹெல்ப் பண்ண சொன்னா நீங்களே தூக்கிகிட்டு ஓடுறீங்களே"ன்னு திட்டு வேற.

பாப்பா இத பத்தியெல்லாம் கவலைப்படாம அடுத்த ஈவண்ட்க்கு தயாராயிட்டா. தன் பேக்க எடுத்துகிட்டு ஸ்பூன் லெமன் சகிதமா கிளம்பிட்டா. நாங்க வந்தாதான் சொதப்பிகுதேன்னு அவளை தனியா விட்டாச்சு.

போன 3நிமிஷத்துலேயே "அப்பா நா இஜக்டட்"ன்னு சொல்லிகிட்டு திரும்பிட்டா. வர வர இந்த டீச்சர்களின் அட்டகாசங்கள் தாங்கலையேன்னு நேரா மிஸ்கிட்ட போய்"ஏன் அபி ரிஜக்டட்"ன்னு கேட்டேன். அவங்க பாப்பா பேக்க திறந்து எடுத்து காட்டினாங்க. ஒரு பெரீய்ய சாம்பார் குழி கரண்டியும், சுண்டைகாய் சைசுக்கு ஒரு லெமனும் இருந்துச்சு. சரிதான். பரவாயில்ல சின்ன குழந்ததானன்னு அனுமதிச்சு இருக்கலாம். மோசமான ஸ்கூலு.

ஆக ஒரு வழியா பாப்பா ஸ்போர்ட்ஸ் டேயை முடிச்சுகிட்டு வீட்டுக்கு வர்ர வழியில ஒரு கடைல ஒரு சோப்பு டப்பா, ஒரு எவர் சில்வர் தட்டு, ஒரு பென்சில் பாக்ஸ் வாங்கி பாப்பா கைல குடுத்து "பாட்டி கேட்டா நீ ஜெயிச்சு வாங்குனன்னு சொல்லனும்னு" சொல்லி குடுத்து வீட்டுக்கு கூட்டி வந்தா உள்ள நுழைச்ச உடனே அம்மாகிட்ட"பாட்டி நானு கிரவுண்டுல ஜெயிச்சதால அப்பா இதல்லாம் கடைல வாங்கி குடுத்தாங்க"ன்னு போட்டு உடச்சுட்டா.

நான் இன்னும் கொஞ்சம் வெவரமா சொல்லிகுடுத்து கூட்டி வந்திருக்கலாமோ!!!

March 1, 2007

மன்மோகன்சிங்கும் மன்னார்குடி குரூப்பும்....

இங்கே வெள்ளிகிழமை லீவ். வியாழன் இரவு தூக்கம் ரொம்ப ஜோர். காலைல சீக்கிரம் எழுந்திரிக்க வேண்டாம். அப்டியே காலை 10 மணி வரை தூங்கலாம். அப்போ போன் வந்தா செம கோவம் வரும்.

போன வெள்ளி அதுபோல சந்தோஷமா தூங்கிகிட்டு இருந்தேன். அப்பதான் அந்த போன் வந்துச்சு. சரியான கடுப்புல எடுத்தேன். அப்போ 6 மணி.

"மாப்ள நா யாரு தெரியுதா? கண்டுபிடி பாப்போம்"

நான், "தெரியலை. யார்"ன்னு கேட்டேன்.

"கண்டுபிடிடா.என்னய தெரியலையா?"

"இல்லீங்க. நெசமா தெரியல"ன்னேன்.

"என்னடா வாங்க போங்கன்னு. உன்னய யாரு மாப்ளன்னு சொல்வாங்க. இந்த க்ளூ போதுமா. இப்ப கண்டுபிடி"

என்னய என் மாமனார்தான் மாப்ளன்னு சொல்லுவாங்க. காலைல உயிர எடுக்கறானே மகாபாவி. வெள்ளிகிழமை வீணா போச்சேன்னு நெனச்சுகிட்டு " தெரியாது. நீங்களே சொல்லுங்க"ன்னு சொன்னேன்.

"நாமெல்லாம் சேந்து கொடைகானல் போனோமெ! இப்ப கண்டுபிடி. ராஸ்கல் இந்த தடவ கோட்ட விட்டீன்னா குரவலைய கடிச்சுடுவேன்"

தூக்கம் போன கோவம். குரவலைய காப்பாத்திகனும்ற பயம் எல்லாம் சேந்து போனை கட்பண்ணீட்டேன்.

திரும்பவும் கால் வந்துச்சு. "நாயே ஏண்டா கட் பன்ற"ன்னு குரல் கொஞ்சம் காட்டமா வந்துச்சு. பட்டுன்னு கட் பண்ணிட்டேன். போனை ஆஃப் செய்யவும் கூடாது. திடீர் திடீர்ன்னு ஆணி புடுங்க அழைப்பு வரும்.

தூக்கம் சுத்தமா போனதால நொந்து போய் எழுந்துட்டேன். ஒரு அரை மணிக்கு பின்ன அதே போன். அதே நம்பர்.

என் தூக்கத்த கெடுத்தவனே வந்துட்டன்டா. என் குரவலையா கடிப்ப, என்னயா நாயேன்னு திட்டுற, வச்சிகிறண்டா என் கச்சேரியன்னு நெனச்சுகிட்டு போனை எடுத்தேன்.

"ஏன்டா கட் பன்ற. இது கடைசி சான்ஸ். இப்ப ஒரு க்ளூ தரேன். நாம எட்டாவது படிக்கும் போது தமிழ் பரிட்சைல நீ பிட் அடிச்சத நா மாட்டிவுட்டனே, இப்ப ஞாபகம் வருதா?" ன்னு அடுத்த க்ளூ வேற. இவ்ளோவ் தூரம் ஞாபகம் இருந்தா "தம்பி""கைப்ஸ்" க்விஸ்கெல்லாம் பதில் சொல்ல மாட்டனா! இந்த நாயி நா 8வது படிக்கும்போது என்னய மாட்டி வேறவுட்டிருக்கு. நாம சும்மா உடலாமா?

"நானும் கடைசியா சொல்றேன். உங்களை எனக்கு தெரியாது ப்ளீஸ் சொல்லுங்க"ன்னு கடைசி கருணை மனுவும் போட்டேன்.

"சொல்லமுடியாது. கண்டுபுடி" ன்னு சொல்லிட்டு ஒரு நிசப்தம். எனக்கு கவுண்டவுன் கொடுத்தாராமா!!

நா உடனே "சார். கண்டுபுடிச்சுட்டேன். நீங்க சன் டி.வி அடையாறு ஆனந்தபவன் காமடிடைம் சிட்டிபாபு தானே.ஐயோ எனக்கு கையும் ஓடல காலும் ஓடல. எங்க லெட்டர் கெடச்சுதா சார்"ன்னேன்.

"டேய் என்னடா உளர்ர"ன்னான் தூக்கம் கெடுத்த சண்டாளன்.

"சார் அந்த லெட்டர்ல இருக்குற போட்டோவில வலது பக்க கடைசில இருக்கிறது நாதான் சார். ஒரு தடவ காமிரா முன்னால காமிச்சுடுங்க சார். நீங்க இப்ப அதுதான் செஞ்சுகிட்டு இருப்பீங்க. எனக்குதெரியும்" இது நான். அந்த பக்கம் பிரஷர் எகிர்வது நல்லா தெரிஞ்சுது.

"இல்லடா மாப்ள நா ராதாடா..ராதாகிஸ்னா"

"போங்க சார். அந்த போட்டோல எனக்கு பக்கத்துல இருக்கானே அவந்தான் ராதா. அவன் பேரயும் சொல்லிடுங்க சார். அவன் கூட கூடிய சீக்கிரம் துபாய் வர்ரான் சார். சார் பட படங்குது. நா டி.வில முத தடவ பேசறேன் சார். பக்கத்துல அர்ச்சனாமேடத்துகிட்ட போன குடுங்க சார்" ன்னு சொல்லிட்டு ஹாயா சோபாவுல சாஞ்சுகிட்டு டீயை சாப்பிட ஆரம்பிச்சுட்டேன்.

"இப்ப அர்ச்சனா இல்ல. அதுக்கு பதிலா சுப்ரியா"ன்னு சொன்னான்.

"பத்தீங்களா! அப்டீ ஒத்துகோங்க நீங்க தான் சிட்டிபாபுன்னு! சார் பரவாயில்ல அந்த சுப்ரியா கிட்ட குடுங்க. சார் அதுக்கு முன்ன நா ஒரு பாட்டு பாடவா. ஆனா ஒரு கண்டிசன். நா பாடும் போது நீங்களும், சுப்ரியாவும் கிண்டல் செஞ்சு ஆடக்கூடாது"ன்னு சொல்லிட்டு "நெஞ்சாங்கூட்டில் நீயே நிக்கிறாய்ய்ய்ய்ய். நெஞ்சாங்கூட்டில் நீயே நிக்கிறாய்ய்ய்ய்ய்....சார் இப்பதான சொன்னேன் ஆடக்கூடாதுன்னு. போங்க சார் நா பாடமாட்டேன்"ன்னு சொன்னேன்.

"மாப்ள நா ராதாதாண்டா. சிட்டிபாபு இல்லடா. குரங்குராதாடா. கீழவீதி ராதாடா. நேத்துதாண்டா இங்க வந்தேன். உங்க அம்மாகிட்டதான் உன் நம்பர் வாங்கியாந்தேன்."ன்னு கதறினான்.

நாதாறி நீ யாரு நீ யாருன்னு எத்தன தடவ கதறினேன் நானுன்னு நெனச்சுகிட்டு "சார் இப்ப அசத்த போவது யாருலயும் வந்து கலக்குறீங்க. சரி சார் சுப்ரியாகிட்ட போன குடுங்க சார். அது சரி அது எப்டி சார் ஒவ்வொரு தடவயும் ஒவ்வொறு மாதிரி வணக்கம் வக்கிறீங்க. இன்னிக்கு எப்படி சார் வைக்க போறீங்க. "ன்னேன்.

"என்னடா மாப்ள போனதடவ ஊருக்கு வந்தப்பகூட நாம மன்மோகன்சிங்லேர்ந்து மன்னார்குடி குரூப் வரைக்கும் பத்தி பேசிகிட்டு இருந்தோமேடா. நா ராதாதாண்டா..ராதாடா..மாப்ள மாப்ள ன்னு கூப்டுப்போமேடா அந்த ராதாதாண்டா" கொஞ்சம் வுட்டா அழுகிற நிலைக்கு வந்துட்டான்.

"சார் வள வளன்னு பேசாம சுப்ரியாகிட்ட போன குடுங்க சார். அவுங்ககிட்ட ஒரு கேள்வி கேக்கணும்"

போன் துண்டிக்கப்பட்டது. அப்பா என் தூக்கத்தை கெடுத்தவன் பிச்சுகிட்டு அலையுறான்.

ஒரு 5 நிமிஷம் கழித்து திரும்பவும் போன் வந்தது. "சார் என்னா கட்டாயிடுச்சு. நல்ல காமடியா போடுங்க சார். அந்த நாய்சேகர் ஜோக்கு போடுங்க சார். என்னக்கி சார் இத டி.வில போடுவீங்க" கட். திரும்பவும் போன் கட்டாயிடுச்சு.