பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

March 21, 2007

கோபி,பாசமலர்,கொத்ஸுக்கு அபிஅப்பாவின் சூடான பதில்!!!

முதல்ல அய்யனார் கோவில் பலி ஆடு மாதிரி தலையை குனிந்து நிக்கிறேன். ஏன்னு பதிவின் கட்ட கடேசில செப்புறேன்.

நம்ம கோபிதம்பி முதல்ல 5 வியர்டு விஷயத்த சொல்லுன்னு சொன்னார். அடுத்ததா தங்கச்சி ஜெயந்தி அதாங்க இம்சை செய்யாத இம்சை அரசி 5 சொல்லுங்கண்ணான்னு சொன்னாங்க. ஆக 10 சொல்லனுமான்னு நெனச்சிகிட்டு வந்து பாத்தா நம்ம கொத்ஸ் 5 கிறுக்குதனத்த சொல்லுய்யான்னு சொல்லியிருக்கார். நாம எது செஞ்சாலுமே அது கிறுக்குதனமாவே இருக்கும். இதுல என்ன தனியா 5ன்னு சரின்னுட்டேன்.

கடமை:

நான் ஒரு கடமை வீரன். ஒரு புராஜக்டுல ஒழுங்கா ஆணி புடுங்கிய என்னை பாத்து நீ ரொம்ப நல்லா புடுங்குற அதனால இன்னும் 3 புராஜக்டையும் சேத்து பாத்துக்கோன்னு சொல்லிட்டாங்க. இப்போ ஐயாவுக்கு 4 இடத்திலயும் சீட். அதுல ஒரு வசதி சுத்தி சுத்தி பின்னூட்டம் போடலாம். ஆனா அப்பப்ப ஆணியும் புடுங்குவேன். இதுல என்னா கிறுக்குன்னா என் டிபார்ட்மென்ட் ஆணியவிட அடுத்த டிபார்ட்மென்ட் ஆணிதான் அதிகமா புடுங்குவேன். இவன் கிட்ட சொன்னா முடிச்சுடுவான்டான்னு என் தலைல கட்டிடுவானுங்க. இது உணர்ந்தும் உணராத இந்த லூசு எல்லாத்தையும் கட்டிகிட்டு மாரடிக்கும். இந்த கடமைய விட 1 ம் தேதி வீட்டுக்கு பணம் அனுப்பும் கடமையை கச்சிதமா செய்வேன். (யாருய்யா அது"அடப்பாவி நீ ஒரு கயமை வீரன்"ன்னு யாருய்யா சவுண்டு குடுக்கிறது)

கண்ணியம்:

இந்த விஷயத்துல நா நெம்ப ரீஜண்டு. சகோதரிகள், சித்திகள், த்ம்பிகள் அப்டின்னு "வருஷம் 16" மாதிரியான குடும்பத்தில் பிறந்ததால் கூட இந்த கண்ணியம் வந்திருக்கலாம். பிளாக் எழுத ஆரம்பிக்குமுன் கூட என் தம்பி "எதை பத்திவேணா எழுது. ஆனால் அசிங்கமான வார்த்தை பிரயோகம் கூடாது"ன்னு சொன்ன காரணத்துக்காகவே நான் "குசும்பு" போன்ற வார்த்தைகளை பிரயோகிப்பதில்லைன்னா பாத்துகோங்க என் கண்ணியத்தை:-) என் தம்பி சொன்னது என்ன நா புரிஞ்சுகிட்டது என்ன. ரொம்ப கண்ணியமா இருக்கனாமா!

கட்டுப்பாடு:

என் கையில் ஒரு மெல்லிய நூல் கட்டப்பட்டு அதன் ஒரு முனை என் குடும்பத்தரிடம் (அப்போ அம்மா இப்போ தங்கமணி)இருக்கும். அந்த நூலை அறுத்து விடாமல் காப்பாத்தும் பொறுப்பு இரண்டு பக்கத்துக்கும் உண்டு. இது வரை நாங்கள் காப்பாத்தி வருகிறோம். என்ன! அம்மாவிடம் பிடியிருந்தபோது நூல் கொஞ்சம் பெருசா இருந்துச்சு. இப்போ தங்கமணிகிட்ட நூல் வந்தவுடன் சின்னதாகிவிட்டது. அப்பப்ப லீவ்விட்டா நூலை அவுத்து கட்டில்ல கட்டிட்டு ஃப்ரீ பேர்டு....

கிரிமினல்தனம்:

யாருக்கும் கேடு வராதபடி நக்கலான கிரிமினல்தனம் என்னிடம் எப்போதும் இழைந்து கொண்டிருக்கும். உதாரணத்துக்கு நேத்து ஒரு பதிவு போட்டேன். தமிழ்மணத்திலே பதிவின் பக்கத்துல என் பெயர் இல்லை. அதனால் ரெகுலர் கஸ்டமர்கள் வரலை. அது அபிஅப்பா பதிவுன்னு யாருக்குமே தெரியலை. சரி இந்த பதிவும் அப்டி போயிடுமோன்னு இந்த தலைப்பிலேயே அபிஅப்பான்னு வரவழைச்சுட்டேன். இது போன்ற சின்ன சின்ன கிரிமினல்தனங்கள்தான்.

நகைச்சுவை:

அபிஅப்பா பதிவு இவ்வளவு dry யா இருக்கேன்னு பாக்காதீங்க. நமக்கு பிடித்த விஷயமே நகைச்சுவைதான். என்னையும் கலைஞரின் செயலர் சண்முகநாதனையும் ஒரு ரூமில் போட்டு 24 மணி நேரம் பூட்டிவிட்டால் இரண்டில் ஒன்னு நடக்கும்.

1. அவர் சிரித்து கொண்டே வெளியே வருவார்.

2. அவர் சிரித்து கொண்டே வெளியே வருவார்.

எனக்கு பிடித்த நகைச்சுவை நிகழ்வு:

அபிபாப்பா சிதம்பரம் ஞானமணி ஹாஸ்பிட்டலில் பிறந்தாள். லேபர் வார்டிலிருந்து தங்கமணி வரும் முன்பே அபிபாப்பா வார்டுக்கு வந்துடுச்சு. சுருட்டை முடி கொட்டாபுட்டி கவுத்தமாதிரி, கருப்பு திராச்சை மாதிரி கண்ணு. யார்டா நீ ங்குற மாதிரி என்னை ஒரு பார்வை. என் அம்மா மட்டும் பாப்பாவை வச்சுகிட்டு உக்காந்து இருந்தாங்க. அவங்க தவிர நான் மட்டும். கொஞ்சம் ரிலாக்ஸா வெளியே வந்து நின்னேன்.

அப்போ ஒரு தாத்தாவும், ஒரு பாட்டியும் வந்து என் கைய புடுச்சுகிட்டு "நல்லா இருக்கியாப்பா"ன்னாங்க. "உன் கல்யாணத்துல உன்ன பாத்தது. அதுக்கப்புரம் 3 தடவை வந்தபோதும் உன்னய பாக்கமுடியல. இப்போ உம் பொண்டாட்டிய பிரசவத்துக்கு சேத்த சேதிவந்ததும் அவசர அவசரமா கிளம்பி வந்தோம். இன்னும் உன் மாமனார் வீட்டுக்கு கூட போகலை. அப்டியே பஸ்டாண்டிலேந்து இங்க வந்துட்டோம். சரி வா குழந்தைய பாக்க போவோம் "ன்னு சொல்ல நானும் சரி தங்கமணிக்கு சொந்தம் போலன்னு கூட்டிகிட்டு போனேன்.

என் அம்மாவிடம் அவங்க குசலம் விசாரிச்சுட்டு கொண்டுவந்த சாக்லெட்பாக்ஸ், சின்ன குழந்தை மெத்தை, டிரஸ், பால் பாட்டில் எல்லாத்தையும் கொடுத்துட்டு "சரி உன் மாமனார் வீட்டுக்கு போகிறேன்"ன்னு சொல்லிட்டு போயிடாங்க.

இதுல என்னா கூத்துன்னா வந்தவங்க யாரோ. அதே ஹாஸ்பிட்டல்ல பிறந்த வேற ஆண் குழந்தைய பாக்க வேண்டியவங்க. இது எங்களுக்கு அடுத்த நாள்தான் தெரியும். அந்த குழந்தையின் அப்பாவும் என் சாயல் போலயிருக்கு. சரின்னு அந்த குழந்தைக்கு நான் அவங்க கொடுத்தது போல எல்லாத்தையும் வாங்கி குடுத்தேன். ஆக அபிபாப்பாவின் குறும்பு பிறந்த அடுத்த நிமிஷமே ஸ்டாட்டாகிடுச்சு:-)

இது போல நகைச்சுவை நிகழ்வுகள் எல்லா இடத்திலிலும் நடக்கும். அதை பகிர்ந்துக்கும் போது மிக்க மகிழ்வாக இருக்கும். நகைச்சுவை எழுத 4,5 பாரா கூட வேண்டாம். ஜஸ்ட் ஒரு வரி போதும். நினைத்து நினைத்து சிரிக்கலாம்.

இதோ ஒரு பதிவுக்கு நம்ம கொத்ஸ் போட்ட பின்னூட்டம். நாமக்கல் சிபி "நான் ஓய்வெடுக்க போகிறேன்" ன்னு ஒரு பதிவு. அதுக்கு கொத்ஸ் "ஓய் வெடுக்குனு வா" . என்ன புரிஞ்சா குபீர் சிரிப்பு கியாரண்டி!!

இதுதான் நகைச்சுவை பற்றிய என் கருத்து. நகைச்சுவை பதிவுக்கு பேஸ்மென்டே கிறுக்குதனங்கள்தான்!

சரி மக்கா, இப்போ அந்த 5 பேர் யாருன்னு பாப்போம். பதிவு போடுவது கூட சுலபமாயிருக்கு. இந்த பட்டம் கொடுப்பது ரொம்ப கஷ்டமப்பா!

1.எனக்கு 1 வருஷ சீனியர் "கல்வி வள்ளல்" சீமாச்சு

2. என் அன்பு அம்மா "பாலாபிஷேக நாயகி" கீதாசாம்பசிவம்.

3.என் துபாய் நண்பர் "பவுலிங் புயல்" பாஸ்ட் பவுலர்"

4.எங்க ஊர் நண்பர் "சமூக சிந்தனை நாயகன்" மயிலாடுதுறை சிவா

5. அன்பு சகோதரி "காமடி கலைமாமணி" கண்மணி

வாங்க வந்து வியர்டான 5 விஷயத்த புட்டு புட்டு வைய்யுங்க!

இப்போ முதல் வரிக்கு போங்க. போயாச்சா. ரொம்ப நேரமா அப்டி நிக்கிறது கஷ்டமா இருக்கு. தர்ம அடி போடுறவங்க ஒரு வரிசையாகவும், மாலை,கீலை போடுறவங்க ஒரு வரிசையாகவும் வரவும். இது என்னோட 25 வது பதிவு:-))

60 comments:

 1. கடமை!!!
  கடமை வீரர் காமராஜர்னு சொல்லுங்க... நம்பிட்டேன்

  ReplyDelete
 2. கண்ணியம்:
  அட அவனா நீ??

  ReplyDelete
 3. கட்டுப்பாடு:
  இது உங்களோட கட்டுப்பாடு இல்லீங்க.. நீங்க கட்டுக்கடங்காத காளையாக கூடாதுனு உங்களை பிடிச்சிட்டு இருக்காங்க!!!

  ReplyDelete
 4. //நகைச்சுவை:
  அந்த குழந்தையின் அப்பாவும் என் சாயல் போலயிருக்கு. சரின்னு அந்த குழந்தைக்கு நான் அவங்க கொடுத்தது போல எல்லாத்தையும் வாங்கி குடுத்தேன். //
  அந்த குழந்தையோட அப்பா உங்க சாயல்ல இருந்தா தப்பு இல்லை .. அந்த குழந்தை உங்க சாயல்ல இருந்தா தான் தப்பு

  ReplyDelete
 5. அது சரி.. வியர்டான விஷயங்களை பத்தி எழுதுங்கன்னு சொன்ன.. என்ன கடமை, கண்ணியம், கட்டுப்பாடு,கிரிமினல்தனம் அப்படின்னு ஒரே போலீஸ் வார்தைகளா இருக்கு.... இதுவே ஒரு வியர்டா இருக்கே!!!

  ReplyDelete
 6. ஏங்க இப்படிப் பழி வாங்கறீங்க? நான் ஒருத்தி எத்தனை தரம் வியர்டா ஆகிறது? :D ஏற்கெனவே தானே சிரிக்கிறதைப் பார்த்துட்டு என்னோட மறுபாதிக்குச் சந்தேகம் வருது, என்ன ஆச்சு? மூளை இல்லாமலேயே கிறுக்கு எல்லாம் பிடிக்கிறது உண்டான்னு? நீங்க வேறே அதை உறுதிப் படுத்தற மாதிரி என்னோட பேரையும் சேர்த்துட்டீங்களே! நறநறநறநறநறநற நறநற
  இந்த "நறநற" உங்களுக்கு மட்டும்தான். படிக்கிறவங்க எல்லார் சார்பாவும் ஒரு ஸ்மைலி போட்டுடறேன். :)))))))))))))))))

  ReplyDelete
 7. hihihiகரெக்டா முதல் பின்னூட்டம் போட்டிருக்கேன் போலே இருக்கே? இதிலே இருந்தே தெரிஞ்சுடுமோ நாம வியர்டுதான்னு. ஐயோ, ஏன் இன்னிக்குப் பார்த்து முதல்லே இங்கே வந்தேன்? :)))))))))

  ReplyDelete
 8. //இது என்னோட 25 வது பதிவு:-))//

  ஓ........அப்படியா? வாழ்த்து(க்)கள்.

  ReplyDelete
 9. //அந்த குழந்தையோட அப்பா உங்க சாயல்ல இருந்தா தப்பு இல்லை .. அந்த குழந்தை உங்க சாயல்ல இருந்தா தான் தப்பு //

  :-))))))))

  வாங்க டுபுக்கு சிஷ்யை!

  அவனேதான் நான்!

  ReplyDelete
 10. கோர்த்து விட்டுட்டீரே நீர்... ஹும்.. பாக்கலாம்... :)

  ReplyDelete
 11. //மூளை இல்லாமலேயே கிறுக்கு எல்லாம் பிடிக்கிறது உண்டான்னு? //

  வாங்க மேடம்! நல்லா சொன்னீங்க போங்க :-)))))))))
  கொஞ்ச நேரம் பின்ன வர்ரேன், கொஞ்சம் ஆணி!

  ReplyDelete
 12. கடமை
  கண்ணியம்
  கட்டுப்பாடு
  தட்டுப்பாடு
  பெரும்பாடு
  குறும்பாடு
  கூப்பாடு
  ஆற்காடு
  ஏற்காடு
  பனங்காடு
  கரும்புக்காடு
  வடநாடு
  தென்னாடு
  டு
  டு
  டு
  ...

  டுட்டு டுடு

  ReplyDelete
 13. உமக்கு எழுதினத வேற பதிவுல தப்பாப் போட்டுட்டேன். :( அது எந்த பதிவுன்னும் தெரியலை. :((

  நகைச்சுவையா எழுதச் சொன்னா இப்படி ட்ரையா எழுதிட்டேரே. ரொம்ப உணர்ச்சி வசப்பட்டுட்டீரா?

  நம்ம கிறுக்குத்தனங்கள் பத்தி ஒண்ணும் சொல்லலையே.

  ReplyDelete
 14. இன்னிக்கு இதோட ஐந்து கிறுக்குத் தனம் பாத்தாச்சு.
  வாழ்க கிறுக்குகள் ஒலகம். உங்கள் 25ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
  கயித்தை விட்டுடாதீங்க. தங்கமணிகிட்டே போட்டுக் கொடுத்துடுவேன்.

  ReplyDelete
 15. //நகைச்சுவையா எழுதச் சொன்னா இப்படி ட்ரையா எழுதிட்டேரே. ரொம்ப உணர்ச்சி வசப்பட்டுட்டீரா?

  நம்ம கிறுக்குத்தனங்கள் பத்தி ஒண்ணும் சொல்லலையே. //

  ஆமா கொத்ஸ்! முதல்ல திருப்தியா எழுதினேன். save செய்யலை. கரண்ட் கட்டாகி எல்லாம் போச்சு! (UPS ம் இல்லை) சரி சீக்கிரம் போடனும்ன்னு(மதியம் வீக் என்ட் மீட்டிங் அதனால)அவசர அவசரமா ஏனோ தானோன்னு போட்டுட்டேன்:-))

  ReplyDelete
 16. //கயித்தை விட்டுடாதீங்க. தங்கமணிகிட்டே போட்டுக் கொடுத்துடுவேன்.//

  விட மாட்டேன் மேடம். ஜாக்கிரதையா கட்டிடுவேன்:-)) (சும்மா)

  ReplyDelete
 17. //துளசி கோபால் said...
  //இது என்னோட 25 வது பதிவு:-))//

  ஓ........அப்படியா? வாழ்த்து(க்)கள்//

  நன்னி நன்னி டீச்சர்:-))

  ReplyDelete
 18. //துளசி கோபால் said...
  //இது என்னோட 25 வது பதிவு:-))//

  ஓ........அப்படியா? வாழ்த்து(க்)கள்//

  நன்னி நன்னி டீச்சர்:-))

  ReplyDelete
 19. //நறநறநறநறநறநற நறநற
  இந்த "நறநற" உங்களுக்கு மட்டும்தான். படிக்கிறவங்க எல்லார் சார்பாவும் ஒரு ஸ்மைலி போட்டுடறேன். :)))))))))))))))))//

  யப்பா! என்ன ஒரு நற நற:-)

  ReplyDelete
 20. அபி அப்பா....எப்ப என் அழைப்பையும் ஏற்றதற்கு ரொம்ப நன்றி ;-))

  கடமை ;-))

  கண்ணியம் ;-))))

  கட்டுப்பாடு ;-)))))))))))

  கிரிமினல்தனம் ;-))))))))))))

  நகைச்சுவை ;-))))))))))))))))))))))))))

  ReplyDelete
 21. \\இது என்னோட 25 வது பதிவு:-))\\

  வாழ்த்துக்கள் தலைவா ;-))))))))

  ReplyDelete
 22. \\அன்பு சகோதரி "காமடி கலைமாமணி" கண்மணி\\

  நீங்களுமா!!!!!!

  ReplyDelete
 23. //இது என்னோட 25 வது பதிவு:-))//

  வாழ்த்துக்கள் அண்ணா...

  உங்க ப்ளாக்ல ஃபர்ஸ்ட் கமெண்ட் போட்டேன். ஆனா 25வது பதிவுல போடாம விட்டுட்டேன் :(((

  பரவால்ல. 25வது பதிவுல என் பேர் வந்துடுச்சு இல்ல :)))))

  ReplyDelete
 24. //இது உணர்ந்தும் உணராத இந்த லூசு எல்லாத்தையும் கட்டிகிட்டு மாரடிக்கும். //

  சேம் பிஞ்ச்.. :(

  //இது போல நகைச்சுவை நிகழ்வுகள் எல்லா இடத்திலிலும் நடக்கும். அதை பகிர்ந்துக்கும் போது மிக்க மகிழ்வாக இருக்கும். நகைச்சுவை எழுத 4,5 பாரா கூட வேண்டாம். ஜஸ்ட் ஒரு வரி போதும். நினைத்து நினைத்து சிரிக்கலாம்//

  உண்மைதான் அபிஅப்பா... இன்னும் உங்களோட ஆ.வி'யில் அபிஅப்பா பதிவை படிச்சிட்டு சிரிச்சிட்டே இருக்கேன்... ஆனா அதுக்கப்புறம் சரியா ஒங்க பதிவுகளை படிக்கலை... :(

  Caz So many Aani'ss :(

  ReplyDelete
 25. //உமக்கு எழுதினத வேற பதிவுல தப்பாப் போட்டுட்டேன். :( அது எந்த பதிவுன்னும் தெரியலை. :((//

  தேவ் பதிவில்..........

  ReplyDelete
 26. //எங்கே புலி! எங்க இருந்தாலும் இங்க வராம அபிஅப்பாகிட்ட போகவும். யாவாரம் டல் அங்க:-)//

  வந்தாச்சு... வந்தாச்சு...

  ReplyDelete
 27. //"கோபி,பாசமலர்,கொத்ஸுக்கு அபிஅப்பாவின் சூடான பதில்!!!" //

  சூடா இல்லையே, கொஞ்சம் ஆறி போச்சே.... என்ன பண்ணலாம்.... ஒவன்ல வச்சு சூடுப்படுத்தி பாக்கலாமா?

  ReplyDelete
 28. அந்த குசும்பு அப்படிங்ககுற வார்த்தைக்கு அப்படி ஒரு அழுத்தம் ஏன் தொல்ஸ்....???

  :-))))))))))

  ReplyDelete
 29. //இதுதான் நகைச்சுவை பற்றிய என் கருத்து. நகைச்சுவை பதிவுக்கு பேஸ்மென்டே கிறுக்குதனங்கள்தான்!//

  இது எனக்கு வரதுக்கு என்ன பண்ணனும். ????

  ReplyDelete
 30. //அம்மாவிடம் பிடியிருந்தபோது நூல் கொஞ்சம் பெருசா இருந்துச்சு. இப்போ தங்கமணிகிட்ட நூல் வந்தவுடன் சின்னதாகிவிட்டது. அப்பப்ப லீவ்விட்டா நூலை அவுத்து கட்டில்ல கட்டிட்டு ஃப்ரீ பேர்டு....

  //
  அபிஅப்பா ரொம்ப நல்லா எழுதறீங்க.. மாயவரத்துக்காரருக்கு எழுத சொல்லியாத் த்ரணும். தமிழுக்கே முதல் நாவல் எழுதியது மாயவரத்துக்காரர் வேதநாயகம் பிள்ளை (பிரதாப முதலியார் சரித்திரம்) தானே.. அதும் நகைச்சுவை நாவல்...

  என்னையும் இந்த விளையாட்டில் இழுத்து விட்டுட்டீங்க.. எனக்கு நகைச்சுவை அவ்வளவாக வராது.. கொஞ்சம் சீரியஸாப் போயிடும்.. பரவாயில்லையா?

  என்றென்றும் அன்புடன்,
  சீமாச்சு..

  ReplyDelete
 31. அன்பு அபிஅப்பா..
  உங்கள் வேண்டுகோளுக்கிணங்கி என் பதிவு..

  சீமாச்சுவின் கிறுக்குத்தனங்கள்..

  http://seemachu.blogspot.com/2007/03/42.html

  என்றென்றும் அன்புடன்,
  சீமாச்சு...

  ReplyDelete
 32. 25 பதிவுக்கு வாழ்த்துக்கள்.

  \\அம்மாவிடம் பிடியிருந்தபோது நூல் கொஞ்சம் பெருசா இருந்துச்சு. இப்போ தங்கமணிகிட்ட நூல் வந்தவுடன் சின்னதாகிவிட்டது. //

  எப்படிங்க இப்படி எல்லாம்.
  அனுபவ நகைச்சுவை தான் ரொம்ப சிறந்த நகைச்சுவைன்னு அன்னைக்கு முனைவர் ஞானசம்பம்ந்தம் சொன்னார் . நகைச்சுவை வரணும்ன்னா
  ரொம்ப சிந்திக்க தெரிந்திருக்கணும்ன்னு வேற சொன்னார்.

  ReplyDelete
 33. //இதுல என்னா கிறுக்குன்னா என் டிபார்ட்மென்ட் ஆணியவிட அடுத்த டிபார்ட்மென்ட் ஆணிதான் அதிகமா புடுங்குவேன்//

  same pinch.. ;-)

  ReplyDelete
 34. //இந்த தலைப்பிலேயே அபிஅப்பான்னு வரவழைச்சுட்டேன். இது போன்ற சின்ன சின்ன கிரிமினல்தனங்கள்தான்.//

  நீங்கள் கில்லாடிதான்..;-)

  ReplyDelete
 35. 25 போட்ட அபி அப்பாவுக்கு வாழ்த்துக்கள்..

  இந்த வியர்ட் 5 சுத்தி சுத்தி வருது!!

  ReplyDelete
 36. இன்னா அண்ணாத்த நீங்களும் நம்மள கலைமாமணி ன்னு சொல்லி ஆச்சி ரேஞ்சிக்கு வயசானவளா ஆக்கிட்டீங்க.[பொன்ஸ் ஏற்கனவே மனோரமா மாதிரின்னு சொல்லிடிச்சு]
  ஞானமணி ஆஸ்பத்திரியா ஹூம் அப்ப அண்ணிக்கு சொந்த ஊரு சிதம்பரமா?[அபி பாப்பா முதல் குழந்தைன்னா மாமனார் தலையிலதானே செலவு கட்டியிருப்பீங்க]

  ReplyDelete
 37. //நகைச்சுவை:
  அந்த குழந்தையின் அப்பாவும் என் சாயல் போலயிருக்கு//
  நிச்சயமா இருக்காது.உம்ம மாதிரி கிறுக்கு வேறு யாரு இருக்க முடியும்ணேன்.

  ReplyDelete
 38. அவங்கவங்க 100,200 ன்னு சைலண்ட்டா இருக்காங்க நீரு 25 க்கு இந்த அலப்பரையா மாயவரத்து லொல்லு தாங்கல சாமீ

  ReplyDelete
 39. //ஞானமணி ஆஸ்பத்திரியா ஹூம் அப்ப அண்ணிக்கு சொந்த ஊரு சிதம்பரமா?//
  சிதம்பரம் இல்லை. காரைக்குடி பக்கம். மாம்ஸ் சிதம்பரம் அண்ணாமலைல விரிவுரையாளர் அத்னால அங்க இருந்தாங்க!


  //[அபி பாப்பா முதல் குழந்தைன்னா மாமனார் தலையிலதானே செலவு கட்டியிருப்பீங்க]//

  ஹி.ஹி:-))

  //உம்ம மாதிரி கிறுக்கு வேறு யாரு இருக்க முடியும்ணேன்.//

  ஹும்:-))

  //அவங்கவங்க 100,200 ன்னு சைலண்ட்டா இருக்காங்க நீரு 25 க்கு இந்த அலப்பரையா மாயவரத்து லொல்லு தாங்கல சாமீ //

  எல்லாம் ஒரு விள்ம்பரம்தான் தாயீ. கண்டுக்காம போங்க, கூடிய சீக்கிரம் உங்களுக்கு 50 ஆக போகுது, அப்ப வந்து வச்சிக்கறேன் என் கச்சேரிய:-))

  மக்கள்ஸ்! 39 ஆயிடுச்சு, கொஞ்ச நேரம் தமிழ்மணத்துல நிக்கட்டும். பின்ன வந்து பதில் சொல்கிறேன்:-))

  ReplyDelete
 40. //மக்கள்ஸ்! 39 ஆயிடுச்சு, கொஞ்ச நேரம் தமிழ்மணத்துல நிக்கட்டும். பின்ன வந்து பதில் சொல்கிறேன்:-)) //

  நின்னது போதும், வந்து பதில் சொல்லுங்க.....

  ReplyDelete
 41. //காரைக்குடி பக்கம். //

  எங்குட்டு..... தேவக்கோட்டை பக்கமா, இல்ல அரியக்குடி பக்கமா

  ReplyDelete
 42. //எப்படிங்க இப்படி எல்லாம்.
  அனுபவ நகைச்சுவை தான் ரொம்ப சிறந்த நகைச்சுவைன்னு அன்னைக்கு முனைவர் ஞானசம்பம்ந்தம் சொன்னார் . நகைச்சுவை வரணும்ன்னா
  ரொம்ப சிந்திக்க தெரிந்திருக்கணும்ன்னு வேற சொன்னார். //

  அவரு அப்படிதாங்க ஏதாச்சும் சொல்லிட்டு போயிடுவார், நீங்க அதை எல்லாம் உண்மைனு நினைச்சுக்கிட்டு, இங்க வந்து.... ஐய்யோ ஐய்யோ.... சின்னப்புள்ளத்தனமால இருக்கு....

  ReplyDelete
 43. எங்க என் பின்னூட்டத்துக்கு பதில்???

  ReplyDelete
 44. இப்போ பதில சொல்ல முடியுமா முடியாதா???

  ReplyDelete
 45. வந்துட்டேன் வந்துட்டேன்!! ஆஹா மக்கா கொஞ்சம் பொட்டி தட்டலாம்ன்னு பாத்தேன். பாசக்கார பசங்கப்பா:-))

  ReplyDelete
 46. //கீதா சாம்பசிவம் said...
  hihihiகரெக்டா முதல் பின்னூட்டம் போட்டிருக்கேன் போலே இருக்கே? இதிலே இருந்தே தெரிஞ்சுடுமோ நாம வியர்டுதான்னு. ஐயோ, ஏன் இன்னிக்குப் பார்த்து முதல்லே இங்கே வந்தேன்? :))))))))) //

  இல்லியே இல்லியே, டுபுக்கு சிஷ்யை முந்திகிட்டாங்களே:-))

  ReplyDelete
 47. // Fast Bowler said...
  கோர்த்து விட்டுட்டீரே நீர்... ஹும்.. பாக்கலாம்... :)//

  அது சரி, இன்னும் ஏன் பதில் பதிவு போடலை?:-)

  ReplyDelete
 48. // தம்பி said...
  கடமை
  கண்ணியம்
  கட்டுப்பாடு
  தட்டுப்பாடு
  பெரும்பாடு
  குறும்பாடு
  கூப்பாடு
  ஆற்காடு
  ஏற்காடு
  பனங்காடு
  கரும்புக்காடு
  வடநாடு
  தென்னாடு//

  என்ன தம்பி ஒரே டுட்டுடூவாயிருக்கு:-))

  ReplyDelete
 49. பொட்டி முக்கியமா நாங்க முக்கியமா???

  ReplyDelete
 50. //கோபிநாத் said...
  அபி அப்பா....எப்ப என் அழைப்பையும் ஏற்றதற்கு ரொம்ப நன்றி ;-))//

  கோபிதம்பி சொன்னா தட்ட முடியுமா?:-))

  //வாழ்த்துக்கள் தலைவா ;-))))))))//

  நன்னி நன்னி:-))

  ReplyDelete
 51. ////இது என்னோட 25 வது பதிவு:-))//

  வாழ்த்துக்கள் அண்ணா...

  உங்க ப்ளாக்ல ஃபர்ஸ்ட் கமெண்ட் போட்டேன். ஆனா 25வது பதிவுல போடாம விட்டுட்டேன் :(((

  பரவால்ல. 25வது பதிவுல என் பேர் வந்துடுச்சு இல்ல :))))) //

  என் அன்பு இம்சை தங்கைக்கு! நான் பிளாக் ஆரம்பிச்சு "வணக்கம்"ன்னு போட்டதுக்கே வந்து முதல் பின்னூட்டம் போட்டு என்னை ஊக்குவித்த எங்கள் வீட்டு செல்ல பெண் ஜெயந்திக்கு நான் நன்றி சொல்ல மறப்பேனா?

  இதோ 50 வது பின்னூட்டம். உங்களுக்கான பதில். நன்றி நன்றி:-)))))))

  ReplyDelete
 52. ////இது என்னோட 25 வது பதிவு:-))//

  வாழ்த்துக்கள் அண்ணா...

  உங்க ப்ளாக்ல ஃபர்ஸ்ட் கமெண்ட் போட்டேன். ஆனா 25வது பதிவுல போடாம விட்டுட்டேன் :(((

  பரவால்ல. 25வது பதிவுல என் பேர் வந்துடுச்சு இல்ல :))))) //

  என் அன்பு இம்சை தங்கைக்கு! நான் பிளாக் ஆரம்பிச்சு "வணக்கம்"ன்னு போட்டதுக்கே வந்து முதல் பின்னூட்டம் போட்டு என்னை ஊக்குவித்த எங்கள் வீட்டு செல்ல பெண் ஜெயந்திக்கு நான் நன்றி சொல்ல மறப்பேனா?

  இதோ 50 வது பின்னூட்டம். உங்களுக்கான பதில். நன்றி நன்றி:-)))))))

  ReplyDelete
 53. //உண்மைதான் அபிஅப்பா... இன்னும் உங்களோட ஆ.வி'யில் அபிஅப்பா பதிவை படிச்சிட்டு சிரிச்சிட்டே இருக்கேன்... ஆனா அதுக்கப்புறம் சரியா ஒங்க பதிவுகளை படிக்கலை... :(

  Caz So many Aani'ss :(//

  மிக்க நன்றி இராம்! ஆணிதான் முக்கியம். பிறகு நேரம் கிடைக்கும் போது நம்மள எட்டி பார்க்கவம்:-))

  ReplyDelete
 54. // நாகை சிவா said...
  //உமக்கு எழுதினத வேற பதிவுல தப்பாப் போட்டுட்டேன். :( அது எந்த பதிவுன்னும் தெரியலை. :((//

  தேவ் பதிவில்..........//

  சரி தேவ்கிட்டேயிருந்து நான் வாங்கி வச்சுகறேன் புலி:-))

  // நாகை சிவா said...
  //எங்கே புலி! எங்க இருந்தாலும் இங்க வராம அபிஅப்பாகிட்ட போகவும். யாவாரம் டல் அங்க:-)//

  வந்தாச்சு... வந்தாச்சு...//

  அது..அது:-))

  // சூடா இல்லையே, கொஞ்சம் ஆறி போச்சே.... என்ன பண்ணலாம்.... ஒவன்ல வச்சு சூடுப்படுத்தி பாக்கலாமா?//

  உள்குத்து இல்லியே! ஓவன்ன என்னய வச்சிடாத புலி:-))

  //அந்த குசும்பு அப்படிங்ககுற வார்த்தைக்கு அப்படி ஒரு அழுத்தம் ஏன் தொல்ஸ்....???

  :-))))))))))//

  நானும் சிரிப்பான்:-)))

  // //இதுதான் நகைச்சுவை பற்றிய என் கருத்து. நகைச்சுவை பதிவுக்கு பேஸ்மென்டே கிறுக்குதனங்கள்தான்!//

  இது எனக்கு வரதுக்கு என்ன பண்ணனும். ???? //

  அப்பாவியா கேக்கபிடாது! கிறுக்கின் மொத்த உருவமே நீதானப்பா:-))

  ReplyDelete
 55. //அபிஅப்பா ரொம்ப நல்லா எழுதறீங்க.. மாயவரத்துக்காரருக்கு எழுத சொல்லியாத் த்ரணும். தமிழுக்கே முதல் நாவல் எழுதியது மாயவரத்துக்காரர் வேதநாயகம் பிள்ளை (பிரதாப முதலியார் சரித்திரம்) தானே.. அதும் நகைச்சுவை நாவல்...

  என்னையும் இந்த விளையாட்டில் இழுத்து விட்டுட்டீங்க.. எனக்கு நகைச்சுவை அவ்வளவாக வராது.. கொஞ்சம் சீரியஸாப் போயிடும்.. பரவாயில்லையா?

  என்றென்றும் அன்புடன்,
  சீமாச்சு.. //

  மிக்க நன்றி சீனு அண்ணா! உங்கள் வருகைக்கும் நான் tag செய்ததுக்கு ஒரு நல்ல பதிவு போட்டதுக்கும்.

  நீங்கள் நம் பள்ளிக்கும் மற்ற நல்ல விஷயங்களுக்கும் செய்துவரும் ஏராளமான உதவிகளுக்கும் நன்றி சொல்லி ஒரூ பத்வே போடலாம். நிறைய பேர்களுக்கு அது ஒரு உந்துதலாக இருக்கும்.

  மிக்க நன்றி அண்ணா!

  ReplyDelete
 56. //எப்படிங்க இப்படி எல்லாம்.
  அனுபவ நகைச்சுவை தான் ரொம்ப சிறந்த நகைச்சுவைன்னு அன்னைக்கு முனைவர் ஞானசம்பம்ந்தம் சொன்னார் . நகைச்சுவை வரணும்ன்னா
  ரொம்ப சிந்திக்க தெரிந்திருக்கணும்ன்னு வேற சொன்னார்.//

  நாகை சிவா சொன்னாதே ரிப்பீட்டே:-))

  ReplyDelete
 57. //எப்படிங்க இப்படி எல்லாம்.
  அனுபவ நகைச்சுவை தான் ரொம்ப சிறந்த நகைச்சுவைன்னு அன்னைக்கு முனைவர் ஞானசம்பம்ந்தம் சொன்னார் . நகைச்சுவை வரணும்ன்னா
  ரொம்ப சிந்திக்க தெரிந்திருக்கணும்ன்னு வேற சொன்னார்.//

  நாகை சிவா சொன்னாதே ரிப்பீட்டே:-))

  ReplyDelete
 58. // .:: மை ஃபிரண்ட் ::. said...
  //இதுல என்னா கிறுக்குன்னா என் டிபார்ட்மென்ட் ஆணியவிட அடுத்த டிபார்ட்மென்ட் ஆணிதான் அதிகமா புடுங்குவேன்//

  same pinch.. ;-)//

  வாங்க மைஃபிரண்ட்!

  //நீங்கள் கில்லாடிதான்..;-)//

  :-))

  // 25 போட்ட அபி அப்பாவுக்கு வாழ்த்துக்கள்..//

  நன்றி! நன்றி!;-)))

  ReplyDelete
 59. //பொட்டி முக்கியமா நாங்க முக்கியமா???//

  ஆஹா உசுப்பேத்தறாங்களே:-))

  ReplyDelete
 60. யப்பா புலி, இம்சை பதில் சொல்லியாச்சு:-))

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))