பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

March 26, 2011

அரசியல் பதிவல்ல, இது ஒரு அனுபவ பதிவு!!!

கடந்த மார்ச் ஒன்றாம் தேதி எங்க ஊர்ல இருந்து ஒன்பது கிமீ தூரத்தில் இருக்கும் எங்கள் கிராமம் பெருஞ்சேரிக்கு போக வேண்டிய வேலை இருந்தது. அன்றைக்கு என் வண்டியை என் நண்பர் எடுத்து போனதால் பஸ்ஸில் போகலாமே என நினைத்தேன். அந்த ஊர் திருவாரூர் மார்கத்தில் இருந்தாலும் மங்கைநல்லூருக்கு முன்னர் அரை கிமீ தூரத்துக்கு முன்பாகவே பிரிந்து தனி சாலையாக உள்ளே 3 கிமீ செல்ல வேண்டும். இல்லாவிடில் மங்கைநல்லூரில் இருந்து வீரசோழன் ஆற்றை தாண்டி பொறையாறு போகும் சாலையில் ஒரு 3 கிமீ போய் அங்கிருந்து திரும்பவும் வீரசோழன் ஆற்றை கடந்து பெருஞ்சேரிக்கு வர வேண்டும். ஆனால் அந்த கிராமத்துக்குள் போக ஒரே ஒரு டவுன் பஸ் 8ம் நம்பர் மட்டுமே. நான் எப்போது மாயவரத்தில் சுத்தினாலும் அது என் கண்ணில் தென்படும். ஆனால் நான் பெருஞ்சேரிக்கு செல்வதாக நினைத்து வந்தால் ஒரு 3 மணி நேரத்துக்கு கண்ணிலேயே படாது. நான் அதற்காகவே அந்த 8ம் நம்பரை பற்றி எப்போதும் கவலைப்படுவது இல்லை. மங்கைநல்லூருக்கு முன்பாக இறங்கி நடையை கட்டுவேன் அந்த கிராமத்துக்கு.

ஆனால் அன்றைக்கு என்று பார்த்து அந்த பஸ் நிறுத்தத்தை தவறவிட்டுவிட்டேன். நேராக மங்கைநல்லூரில் போய் பஸ் நின்றது. சரி இந்த முறை வேறு வழியாக அதாவது பொறையாறு பாதையில் நடந்து அதாவது தத்தங்குடி, மலைக்குடி வழியாக போய் வீரசோழனை கடந்து கிராமத்துக்குள் போகலாம் என நினைத்தேன். அந்த பகுதி அத்தனை கிராமத்துக்கும் மங்கைநல்லூர் தான் பஸார். ஜவுளிக்கடை, பெரிய பெரிய மளிகைக்கடை, உயர்நிலைப்பள்ளிக்கூடம், ஹோட்டல்,அரசு மருத்துவமணை உரம், பூச்சிமருந்து கடை, விவசாய கொள்முதல் நிலையம், கட்சிகளின் படிப்பகங்கள் (ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களில்), ஒரு பேருந்து நிழற்குடை (நல்ல நிலையில் டைல்ஸ் ஒட்டி நன்ராகவே இருக்கின்றது இப்போது) ஒரு வல்லளார் மடம், ஷாப்புகடை (அதாங்க ஸ்டேஷனரி போல) , ஒரு மின்சார அலுவலகம், ஒரு பொதுப்பணித்துறை அலுவலகம் என ஒரு தேர்வு நிலை பஞ்சாயத்து அந்த கிராமம். அங்கே சில ஆட்டோக்களும் நிற்கின்றன. ஆட்டோகாரரிடம் போய் " பெருஞ்சேரிக்கு எத்தனை ரூபாய் என கேட்டுப்பார்ப்போம் என நினைத்து கேட்டேன். 50 ரூபாய் என்று சொல்ல ஆரம்பித்து பின்னர் படிப்படியாக ஒரு கடலைமிட்டாய்க்கு கூட வரும் நிலையில் இருந்தார் அவர். எப்படித்தான் கட்டுப்படியாகின்றதோ என நினைத்துக்கொண்டேன். பின்னர் தான் அந்த பொறையாறு மார்கத்தில் நடந்து போக ஆசை வந்தது. ஏறக்குறைய 32 வருடங்களுக்கு முன்னர் அந்த வழியாக நடந்து போனடு ஞாபகம் வந்தது. மீண்டும் அந்த மாதிரி நடக்க மிகவும் ஆசையாக இருந்தது.

நான் ஏழாம் வகுப்பு படிக்கும் காலத்தில் ஒரு இரண்டு வருடம் எங்கள் கிராமத்துக்கு குடிபெயர்ந்தோம். அப்போது நான் ஏழாம் வகுப்பை எங்கள் நேஷனல் பள்ளியில் படிக்காமல் இங்கே வந்து மங்கைநல்லூரில் இருந்த K.S.O உயர்நிலைப்பள்ளியில் படிக்க நேர்ந்தது. எங்கள் கிராமத்தில் இருந்து ஒரு ஐந்து கிமீ தூரம் அத்தனை மாணவர்களும் அந்த மங்கைநலூர் உயர்நிலைப்பள்ளிக்கு நடந்து தான் வருவார்கள். எங்கள் கிராமம் மட்டும் அல்ல. வழுவூர், எலந்தகுடி, மேலமங்கநல்லூர், கோமல், கழனிவாசல், கொல்லுமாங்குடி, தத்தங்குடி, மலைக்குடி, கழனிவாசல், என சுத்து பட்டு அத்தனை கிராமங்களும் அந்த கிராமங்களுடன் சேர்ந்த குக்கிராமங்களும் அங்கே தான் படிக்க வரவேண்டும். காலை எட்டு மணிக்கே கிளம்பினால் தான் ஒரு பத்து மணிக்கு பள்ளி போய் சேர முடியும்.

அந்த பள்ளியை பற்றி சொன்னால் சொல்லிகொண்டே இருக்கலாம். நல்ல வயல்வெளி நடுவில் எதிரே ரயில்வே ஸ்டேஷன், பள்ளியை சுற்றிலும் போர்செட், ஒரு பக்கம் பாசன வாய்க்கால், பெரிய பெரிய வேப்ப மரங்கள், மிககுளுமையான சூழல், அமைதியான இடம் உள்ளே ஒரு வினாயகர் கோவில், வெள்ளை நிறதோலில் செய்யப்பட்ட ஹெட்மாஸ்டர், இந்திராகாந்தி மாதிரியான மூக்கு வைத்திருந்த ஆர்வி டீச்சர், பில்லூர் சார், பட்டாளத்து சார், விபி சார் என்கிற பிடி சார், திரா சார் என்கிற தமிழய்யா,புலவர் சடாட்சரம் அய்யா, மு.பா சார், முத்தூர் சார் என அருமையான ஆசிரியர்கள். கிராமத்து வெள்ளேந்தியான மாணவர்கள், மாணவிகள், ஐந்து கிமீ தூரம் காலில் செருப்பு இல்லாமல் நடந்து வந்தாலும் முகத்தில் அலுப்பை காட்டிக்காத அந்த மாணவர்கள், மதிய உணவையே நம்பி வரும் பரம ஏழை மாணவ மாணவிகள், (வாழ்க காமராஜர். மனதார சொல்கின்றேன்) , அந்த பள்ளி தாளாளர் கே. சிவவடிவேலு உடையார் பிறந்த தினத்தை கொண்டாடிவிட்டு அவர்கள் வீட்டில் அவர்களின் மாடர்ன் ரைஸ்மில்லில் போடும் சர்க்கரை பொங்கல், புளிசாதத்துக்கே அவரை மனதார வாழ்த்தும் அன்பான அந்த மாணவமாணவிகள் எல்லோரையும் எனக்கு மிகவும் பிடிக்கும்.

கடக்கம் என்னும் கிராமத்தில் இருந்து எங்கள் ஊர் வழியாக பள்ளிக்கு போகும் மாணவர்களுடன் எங்கள் ஊர் மாணவ மாணவிகளின் ஊர்வளமும் தொடரும். பெருஞ்சேரியையும் மலைக்குடி கிராமத்தையும் இனைக்கும் ஒரு மூங்கில் பாலத்தினை கடந்து செல்ல ஆரம்பிப்போம். வழியில் நாகப்பழம் காய்த்து குலுங்கும் மரத்தினையும் , நெல்லிக்காய் மரத்தினையும், அத்தனை ஏன் நார்தங்காய் மரத்தை கூட விட்டு வைப்பதில்லை. நடுவே யாராவது போய் பக்கத்து வயலில் இறங்கி ஒரு கரும்பை உடைத்து வந்தால் அதையும் விட்டு வைப்பதில்லை. சப்பாத்திகள்ளியில் இனிஷியல் எழுதி வைப்பதும் அதன் பழத்தை எடுத்து கைநகப்பூச்சு என மாணவர்களும் உதடுப்பூச்சு என மாணவிகளும் பூசிக்கொள்வதுடன், நாகப்பழம் சாப்பிட்டு ஊதா நிற நாக்குகளுடன், கரும்பை கடித்து தின்று வாய் ஓரம் வெத்து போயும், மாங்காய் பால் பட்டு கால், கையில் கொப்பளம் வந்தும், அது காய்ந்து போன நேரத்தில் அரிப்பெடுத்து அதை பிய்த்து அதிலிருந்து ஒழுகும் ரத்தம், சிரங்குகளுடன் ஒரு டிபிகல் கிராமத்து மாணவனாக நான் மாறிப்போனேன்.

ஆனாலும் நான் மட்டுமே அங்கே அப்போது ஃபாரின் ரிட்டர்ன் பையன் ரேஞ்சுக்கு இருந்து தொலைத்தேன். அந்த பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம் என்பது மட்டுமே அரிதான விஷயமாக இருந்தது. ஆனால் மற்ற பாடங்களில் எல்லாம் தமிழில் சொன்னால் புரிந்து கொள்ளும் பக்குவம் கண்டிப்பாக இருந்தது. அப்பா அறுப்புக்கும், அம்மா நாத்து பறிக்கவும், கரும்பு கட்டு தூக்கவும் போனதால் தன் தங்கச்சி, தம்பிகளை இடுப்பிலும் புத்தக மூட்டையை தோளிலும் சுமந்து ஐந்து கிமீ தூரம் வந்த மாணவர்களுக்கு, மாணவிகளுக்கு படிப்பு ஏற வில்லை என்று சொல்வது மகா அபத்தம். எனக்கு அப்படி இல்லை. படிப்பு மட்டுமே வேலை. அப்பா சம்பாதித்ததால் அம்மா குடும்பத்தை மட்டுமே கவனித்து கொண்டதால் எனக்கு படிப்பு மட்டுமே வேலை.தங்கச்சிபாப்பாவை தூக்க வேண்டாம் பள்ளிக்கூடத்துக்கு. அந்த மாணவர்கள் மதிய உணவு சாப்பிட்டு தன் தங்கச்சி பாப்பாவுக்கு தம்பி பாப்பாவுக்கு ஊட்டும், பின்னர் ஆய் போனால வாய்க்காலில் கொண்டு சுத்தம் செய்யும் எந்த வேலையும் எனக்கு இல்லாதபடியாலும் மேலும் என் பள்ளிக்கூடத்தில் நான் வழக்கமாக ஐந்து ரேங் எடுத்து வந்ததாலும், எனக்கு "சார் ஐ ஹம்ப்ளி ரெக்வஸ்ட் யூ டு கிராண்ட் மீ டூ டேஸ் லீவ்" என எழுத்து கூட்டி எழுத தெரிந்ததாலும் நான் ஒரு உயர்தர மாணவனாகவே கருதப்பட்டேன் அந்த மாணவர்கள் மத்தியில்.

இப்படியாக போய் கொண்டு இருந்த போதே முதல் மிட்டெர்ம் தேர்வு வந்தது. நான் 500 க்கு 410 மார்க்குகள் எடுத்து முதல் மாணவனாக இருந்தேன். எனக்கு அது முதல் அனுபவம். முதல் ரேங் என்பது எனகு எட்டாக்கனியாக இருந்தது. ஆர்வி டீச்சர் என்னை எழுந்து நிற்கச்சொல்லி எல்லோரையும் கைதட்ட சொன்ன போது எனக்கு வெட்கம் பிடுங்கி தின்றது. முதல் மாணவனாக இருப்பதில் இத்தனை சிக்கல்கள் வருமென்று அப்போது தான் உணர்ந்தேன். அடுத்த பீரியட் பில்லூர் சார் வரும் போது என்னை எழுந்து நிற்க சொல்லி கிட்டே வந்து கன்னத்தை வருடிக்கொடுத்த போது அவமானமாக இருந்தது. அவருடைய அறிவியல் பாடத்தில் நான் பியூரெட், பிப்பெட் படத்தை தேர்வில் வரைந்ததை சிலாகித்து பேசி என்னை "இவன் கே எஸ் ஓ பள்ளீயின் பிக்காசோ" என்ற போது எல்லோருக்கும் அது பிசாசு என்றே காதில், மனதில் விழுந்து தொலைத்தது. பியூரெட் பிப்பெட்க்கு எல்லாம் பிகாசோ உதாரணம் எல்லாம் டூ மச் என எனக்கு பிகாசோ யார் என்று அறிந்த பதின்ம வயதுகளில் அந்த நிகழ்வை பற்றி வெட்கம் வந்தது. ஆம் பலவருடங்கள் கழித்து!

இலங்கையின் தலைநகரம் கொழும்பு என சொன்னதற்காகவும் அது எங்கே இருக்கின்றது என வகுப்பில் மாட்டப்படிருந்த மேப்பில் நான் காட்டியமைக்கும் பட்டாளத்து சார் தன் கையில் எப்போது கர்ண கவச குண்டலம் மாதிரி வைத்திருந்த பிரம்பை மேசையில் வைத்து விட்டு உதடு துடிக்க சிவாஜி மாதிரி ஒரு முகபாவத்தில் கையிரண்டையும் நீட்டி என்னை அழைத்த போது எனக்கு உடம்பே கூசியது. ஒருவன் படித்தால் இத்தனை கஷ்ட்டங்கள் வரும் என அப்போது தான் தெரிந்தது. முதன் முதலாக எங்கள் மாயவரம் பள்ளியில் முதல் ரேங் எடுக்கும் கனேஷ்ராம், கணேஷ்குமார் மேல் இரக்கம் வந்தது. எப்படித்தான் முதல் ரேங் வாங்கி இத்தனை அவமானங்களையும் பொறுத்து கொள்கின்ரனரோ என்று.

பள்ளி விட்டு வரும் போது மங்கைநல்லூரை அடுத்து தத்தங்குடி கிராமத்தில் வலது பக்கமாக இருந்த சின்னம்மா கல்லரையிலே எல்லா மாணவர்களும் எப்போதும் உப்பும் , மிளகும் கொட்டி வழிபடுவதோடு, சிலர் மெழுகுவத்தியும் ஏற்றி வைப்பர். நெடுதூர நடைப்பயணத்தில் அந்த இடம் ஒரு ஓய்வெடுக்கும் இடமாகவும் இருந்தது. அன்று நான் முதல் ரேங் எடுத்த அன்று அந்த கழனிவாசல் கிராம பெண் காசாம்பூ ஒரு மெழுகுவத்தி ஏற்றி "நீ பஸ்ட்டு மார்க்கு வாங்கினா இந்த மெழுகு வத்தி ஏத்துறேன்னு சின்னம்மா கிட்ட வேண்டிகிட்டேன். அதான்" என சொல்லி ஒரு அன்பான பார்வை பார்த்தது. அதன் ஆட்டோகிராப் அர்த்தம் கூட எனக்கு பல ஆண்டுகள் கழித்த நிலையிலே தான் தெரிந்து வெட்கம் வந்தது. காளியப்பன் என்னிடம் "உனக்கு கால வலிச்சா சொல்லு தூக்கிகிட்டு வர்ரேன்" என சொன்ன போது ஏன் தான் முதல் மார்க் வாங்கினோம் என வருத்தப்பட்டேன். சரி போகட்டும் என என் புத்தக மூட்டையை மட்டும் தூக்கி வரச்சொன்னேன். (என்ன ஒரு மட்டமான குணம்)

இப்படியாக ஒரு மலரும் நினைவுகளின் ஊடாக அந்த வழியாக வந்த போது தான் அந்த சின்னம்மா கல்லரை வந்தது. அது இப்போது அழகாக கட்டப்பட்டு சுண்ணாம்பு அடிக்கப்பட்டு இருந்தது. அதற்கு ஒரு கேட் போடப்பட்டு இருந்தது. "புனித சின்னம்மா கல்லரை" என எழுதி இருந்தது. மதர் தெரசாவுக்கே புனிதர் பட்டம் கொடுக்கலாமா வேண்டாமா என ஜான் பெனடிக் யோசித்து கொண்டு இருக்கும் இந்த கால நேரத்தில் சர்வ சாதாரணமாக சின்னம்மாவுக்கு புனிதர் பட்டம் கொடுத்த தத்தங்குடி பக்தர்களை எந்த கோர்ட்டும் எதும் செய்ய முடியாது என நினைத்துக்கொண்டேன். காசாம்பூ இப்போது எப்படி இருக்கும் என நினைத்து பார்த்தேன். 45 வயதில் லூசான ஜாக்கெட்டுடன், தொப்பை விழுந்த வயிறு, காலகலில் சேற்றுப்புண் சுவடு, தலையில் நரை முடி, பற்களில் வெற்றிலை காவி இவைகளுடன் காசாம்பூவை நினைத்து பார்க்க ம்னம் இல்லாமையால் மனதுக்கு ஒரு மாற்றாக நமீதாவை நினைத்துக்கொண்டு நடந்தேன். கொஞ்சம் நடந்த்தும் இடது பக்கம் வீரசோழன் ஆற்றின் கரையில் இரு பக்கமும் சுடுகாடு புடை சூழ பொதுப்பணித்துறை குடியிருப்புகள் (மொத்தமே மூன்று வீடுகள்) இருந்தன. அப்போது நாங்கள் படிக்கும் போது அங்கே யாரும் குடிவரவில்லை. ஏனனில் சுடுகாடு பயம். ஆனால் நாங்கள் திங்கள் கிழமை அந்த பக்கம் வரும் போது பீர் பாட்டில்களும் சிதறிய பிரியானி பொட்டலங்களும் அதன் வாசலில் கிடக்கும். அப்போது கோவிந்தராசு தான் சொல்லுவான். அது பேய்களின் வேலை என்று. சனி, ஞாயிறு லீவில் வந்து அந்த பங்களாவில் பேய் குடித்து விட்டு பிர்யானி தின்று விட்டு அட்டகாசம் செய்வதாகவும் இரவு ஒரு மணி வரை ஒரே சிரிப்பு, சண்டை சத்தம் அதிகமாக இருப்பதாகவும் உடையாரின் உரக்கடையில் வேலை பார்த்து விட்டு இரவில் திரும்பி வரும் சாமிநாதன் அப்பா இவனுடைய அப்பா கிட்டே சொல்லும் போது இவன் கேட்டதாகவும் சொல்லுவான்.

எனக்கு இப்போது தான் தெரிகின்றது. எவன் வீட்டிலோ புது இனைப்பு கொடுத்த லஞ்ச காசில் எவனோ ஜேஈ, ஈ ஈ க்கள் வந்து சனி, ஞாயிரை கொண்டாடி இருக்கின்றனர் என்று.இப்போது அங்கே சில தைரியமான குடும்பத்தினர் குடிவந்து விட்டனர். அதன் பக்கத்தில் இருந்த சுடுகாடுகள் இப்போது கான்கிரீட் கொட்டகையாக ஆக்கப்பட்டு இருக்கின்றன. அந்த சாலையும் கொஞ்சம் அகலப்படுத்தப்பட்டு இருக்கின்றது. தொடர்ந்து நடந்தேன். மலைக்குடி கிராமம் ஆரம்பம் ஆகியது. இதோ வலது பக்கம் இருக்கும் வீடு தான் கப்பகாரங்க வீடு என்று அழைக்கப்படும் சிங்கபூர்காரங்க வீடு. அந்த வீட்டில் எல்லோரும் சிங்கப்பூரில் இருந்தனர். பின்னர் அந்த வருடம் தான் எல்லோரும் குடும்பத்துடன் இங்கே வந்து செட்டில் ஆனார்கள். வீடு ஒரு விதமாக அந்த காலத்துக்கு ஏற்ற மாதிரி முகப்பில் ஜாலி ஒர்க்ஸ் எல்லாம் செய்யப்பட்டு வித விதமான வர்ணம் பூசப்பட்டு இருந்தது.அந்த வீட்டில் ஒரு பையன் செந்தில் என்பவன் வந்திருப்பதாகவும் அவன் சிகப்பாக சப்பை மூக்காக இருப்பதாகவும் என்னை விட ஆங்கில புலமை பெற்றிருப்பதாகவும் அவனுக்கு சிங்கப்பூரில் இருந்தே சைக்கிள் வாங்கி வந்திருப்பதாகவும் என் வகுப்பில் தான் வந்து சேரப்போவதாகவும் வதந்திகள் இறக்கை கட்டி பறந்து அது என் காதிலும் வந்து விழுந்தது. எனக்கும் இந்த முதல் ரேங் அவமானத்தில் இருந்து மீள ஒரு வழி பிறந்துவிட்டதாகவே நினைத்தேன்.

பின்னர் தான் தெரிந்தது அந்த செந்தில் அதிகபட்சமாக பேசும் ஆங்கில வார்த்தையே அம்மாவை மம்மி என்றும் அப்பாவை டாடி என்றும் அழைப்பது மட்டுமே என்று. ஆனால் அவன் சைக்கிள் மாத்திரம் நன்றாக இருந்தது. எனக்கு சிங்கப்பூர் மேலே கோவம் கோவமாக வந்தது. என்னை பொறுத்தவரை நம்ம ஊரை தாண்ட தாண்ட ஆங்கிலம் பிரவாகமாக வந்து கொட்டும், சென்னையில் இருப்பவர்கள் பயங்கரமா ஆங்கிலம் பேசுவர், டெல்லி, பாம்பேன்னா சொல்லவே வேண்டாம், ஆனால் அதையும் தாண்டி தூரமாக இருக்கும் சிங்கபூரில் இருந்து வந்தவனுக்கு ஆங்கிலம் தண்ணி பட்ட பாடாக இருக்கும் என நினைத்த எனக்கு மட்டும் அல்ல அந்த பள்ளிக்கூடத்துகே வியப்பாக இருந்த்து. இப்போது அவன் வீட்டை பார்த்தேன். அந்த 30 வருடத்துக்கு முன்னர் அடித்த வர்ணத்துக்கு பின்னர் அடிக்கவில்லை என நன்றாக தெரிந்தது. வீடு பூட்டியிருந்தது. பின் பக்கம் எல்லாம் இடிந்து விழுந்து இருந்த்து. அதன் பக்கத்து வீட்டில் ஒரு குடிசையில் இருந்து படித்த ராமையன் வீடு இப்போது நன்றாக கட்டப்பட்டு வாஸ்து பெயிண்ட் எல்லாம் அடிக்கப்பட்டு அமாவாசை இரவினில் கூட கண்ணுக்கு தெரியும் வகையில் இருந்தது. வாசலில் ராமையன். B.Sc., P.G.D.C.A , ராணி கேபிள் விஷன் என போர்டு போடப்பட்டு இருந்தது.

அதன் பக்கத்தில் இருந்த ஆஞ்சனேயர் கோவில் அழகாக கட்டப்பட்டு இருந்தது. அதன் எதிரே இருந்த எங்கள் கிராமத்தை சேர்க்கும் மூங்கில் பாலம் காணாமல் போய் அங்கு சிமெண்ட் பாலம் அமைக்கப்பட்டு இருந்து. ஆனால் வீரசோழன் ஆறு இருக்கும் இடமே தெரியாமல் ஆர்றின் நடுவே கூட நாணல் மண்டி கிடந்தது. ஆண்கள் படித்துறை இடிந்து குளிக்க வசதியே இல்லாமல் ஆகியிருந்த்து. பெண்கள் படித்துறை காணாமல் போயிருந்தது. மாடு குளிப்பாட்டும் இடம் துர்ந்து போய் அந்த இடத்துக்கு பக்கத்தில் இறந்து போனவர்களுக்கு காரியம் செய்ய ஒரு கட்டிடம் எம் எல் ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்பட்டு இருந்தது. அந்த இடங்கள் பார்ப்பதற்கே பாவமாக இருந்தது. அந்த கட்டிடத்தில் ஒரு நான்கு விடலை பையன்கள் ஏதோ குடித்து கொண்டு முக்கியமான விஷயத்தை பற்றி காரசாரமாக விவாதித்துக்கொண்டு இருந்தனர். என்னவோ முக்கியமான பிரச்சனை போலிருக்கின்றது.


அதை எல்லாம் தாண்டி கட்டை முதலியார் போர்செட், கரும்பு வயல், சம்மந்தம் பிள்ளை போர்செட் எல்லாம் தாண்டி கணபதி குளம் வந்தேன். அது பாழடைந்து கிடந்தது. அதன் நடுவே ஒரு போர் போட்டு அதை ஒரு டேங்கில் ஏற்றி ஊராட்சி மன்றம் தண்ணீர் சப்ளை செய்கின்றது. ஒரு வழியாக நல்ல மலரும் நினைவுகளுடன் என் கிராமத்துக்கு வந்து சேர்ந்தேன். ம்... சொல்ல மறந்து விட்டேனே. அந்த பள்ளியில் நான் காலாண்டு தேர்விலும் முதல் ரேங் வாங்கியதால் அப்பாவுக்கு கோவம் வந்து என்னை 8ம் நம்பர் பஸ்ஸில் பாஸ் எடுத்து கொடுத்து திரும்பவும் (மூன்றே மாதத்தில்) மாயவரத்தில் கொண்டு வந்து சேர்த்து விட்டார்கள். நானும் வாஞ்சையுடன் போய் என் ராதா "வாடா வா" என இரு கைகளை நீட்டி அழைக்க ஓடிப்போய் மாப்பிள்ளை பெஞ்சில் உட்காந்து கொண்டேன். கணேஷ்ராம் என்னிடம் வந்து "என்னடா அங்க போய் பஸ்ட் ரேங் வாங்கினியாமே. இப்ப வா பார்ப்போம், நானா நீயான்னு " என சொல்ல "சே சே அதல்லாம் டூப்புடா, யாரோ தப்பா சொல்லியிருக்காங்க உன் கிட்டே. நான் அது மாதிரில்லாம் செய்ய மாட்டேன். சரி சரி இந்த விஷயம் நமக்குள்ளவே இருக்கட்டும்" என சொல்லி வைத்தேன். பின்னே முதல் ரேங் வாங்கியவன் என மற்ற மாணவர்களின் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாக நான் என்ன மடையனா? போகட்டும் அந்த அவமானங்கள் அந்த பள்ளியோடே....

March 24, 2011

மயிலாடுதுறைக்கு தலைவர் கலைஞர் வந்தார்!!!

"காலை 11 மணிக்கு கலைஞர் மயிலாடுதுறை வழியாக திருவாரூர்க்கு 2011 சட்டப்பேரவை தேர்தலுக்காக பிரச்சாரத்துக்காகவும் வேட்புமனு தாக்கல் செய்யவும் செல்கின்றார் ஆகவே அணி திரண்டு வாரீர். மயிலாடுதுறை எல்லையான கால்டேக்ஸ் பெட்ரோல் பங் எதிரில் நகர திமுக சார்பில் வரவேற்பு கொடுக்கப்படும்" என ஆட்டோ அலறிக்கொண்டு போன போதே உடம்பில் ஒரு வித முறுக்கேறியது திமுக தொண்டர்களுக்கு. ரங்கன், ஜெய்லாபாய், சைக்கிள்கடை காசிநாதன் போன்ற கலைஞர் காலத்து திமுக தொண்டர்கள் முதல் ஜனதாபாலு, அலக்சாண்டர் போன்ற நடுத்தர காலத்து தொண்டர்கள் முதல் இப்போதையை ஆர்.கே,சங்கர், முருகதாஸ் போன்ற இளைஞர்கள் வரை மகளிர் அணியினர், முன்னாள், இன்னாள் நகராட்சி பதவியில் இருப்போர், இல்லாதோர், எதிர்பார்ப்போர், கல்லூரி பேராசிரியர்கள், மாணவர் அணியினர், கான்வாய் வேடிக்கை பார்க்க வந்தவர்கள் என கால்டேக்ஸ் இடமே காலை 11 மணி முதல் பரபரப்பாகியது.

"இப்ப தான் கலைஞர்டிவில பார்த்தேன். ஒரு டெம்போ டிராவலர் மாதிரி வேன், அதிலே கலைஞர் முன் பக்க சீட்டுல உட்காந்து இருக்காரு. தயாநிதி மாறன் கடேசில உட்காந்து இருக்காரு. கனிமொழி வேன்ல ஏறிகிட்டு இருக்கு, கார்த்தால 7 மணிக்கு கெளம்பிட்டாரு. வரும் போது பாண்டிச்சேரில பலாரம் சாப்டு பின்ன அங்க இருந்து கிளம்பி வைத்தீஸ்வரன்கோவில்ல வந்து ஒன்னுக்கு கின்னுக்கு போயிட்டு திரும்பவும் எதுனா சாப்புட்டு ஒரு மணி நேரம் காங்கிரஸ் லிஸ்டு எதுனா ரிலீஸ் ஆகிடுச்சான்னு பார்த்துட்டு அப்புடி வந்திருந்தா எதுனா கொடும்பாவி எரிப்பு சண்டை எல்லாம் பார்த்துட்டு இங்க வர்ரத்துக்கு மணி 12 ஆயிடும். அப்படியே திருவாரூர்ல போய் சட்ட வேட்டி மாத்திகிட்டு கூட்டத்துக்கு வந்தா சரியா இருக்கும். பத்து மணிக்கு டான்னு முடிக்கினும்ல"

இப்படியாக தலைவரின் மொத்த புரொக்ராமும் மனப்பாடமாக சொல்லப்பட்டு கொண்டு இருந்தது. அதற்காக அவரு ஒன்னுக்கு போவது பத்தி எல்லாம் கூடவா யோசிப்பாங்க? அங்கே நான் பார்த்தது கேட்டது எல்லாம் சொல்ல ஆசையாகத்தான் இருக்கின்றது.

"அந்த காலத்துல நடிப்பிசைபுலவர் கே ஆர் ராமசாமிகிட்டே கேட்டு காரை வாங்கிகிட்டு வருவாரு அண்ணாதுரை. ஆனா அப்பவே கலைஞர் ஒரு பியூக் வச்சிருந்தாரு. அந்த கார் கொள்ளிடத்தை தொட்டுடுச்சுன்னா மன்னை தான் கூட ஏறிப்பாரு. அப்படியே காத்தாட கொள்ளிட மணல்ல உட்காந்து பேசிகிட்டு இருந்துட்டு வருவாரு கூட்டத்துக்கு. மேடைக்கு எடது பக்கமா நின்னு மைக்க புடிச்சாருன்னா அவரு போட்டிருக்கும் அந்த கதர் துண்டு தான் பாவம். அத்தோட ஒரு முனையை ஒரு கையிலயும் இன்னுமொறு முனையை முதுகு பக்கமா கொண்டு வந்து பூணூல் கணக்கா சருக்கு புருக்குன்னு இழுத்து கிட்டே பேச ஆரம்பிச்சா அணலு தான். ஒரு ரெண்டு மணி நேரம் பஞ்சா பறக்கும்" இது ஒரு பெருசு.

"பெருசு, நீ ஆரம்பிச்சுடாத, தோ அந்த பாரு, தெஷ்ணாமூர்த்தி கோவிலோட தேர் நிக்குது பாரு. அது அடில கொஞ்சம் நெழலு இருக்கு அங்க போய் உட்காந்துக்கயேன்" ஒரு நடுத்தரம் அந்த பெருசை பார்த்து சொல்ல

"அய்யய்யோ அண்ணே, அதுகிட்ட தெஷ்ணாமூர்த்தி, தேருன்னு எல்லாம் சொல்லாத அண்ணே, உடனே அது தலைவரோட பூர்வாசிரம், புண்ணாக்கு ஆஸ்ரமம் எல்லாம் சொல்ல ஆரம்பிச்சு அவரு திருவாரூரு தேரை ஓட்டுனது வரைக்கும் சொல்லி முடிப்பாரு" .. உடனே அத்தனை சிறுசுகளும் கொல்லென சிரிக்க அந்த நடுத்தரம் " விடுங்கடா, பெருசு ஆசைப்பட்டு வந்திருக்கு. இங்க பாரு தீவாளி நல்ல நாளு பெருநாளுக்கு கூட புதுசு கட்டாது. தலைவரு வந்தா மாத்திரம் பளிச்சுன்னு கரை வேட்டிகட்டிகிட்டு வந்திரும்" என சிலாகிக்க யாரோ ஒரு சிறுசு கையிலே ஒரு கொடியை வைத்து கொண்டு ஒரு அரை சுருதியோடு தொண்டை கிழிய "டாக்க்க்க்க்க்க்டர்ர்ர்ர்ர்ர் கலைஞர் வாழ்க.." என கத்திக்கொண்டே இருந்தது.

நேரம் ஆக ஆக அந்த பக்கம் போகும் வரும் போலீஸ் வண்டிகளில் தலைவர் எங்கே வந்து கொண்டிருக்கின்றார் என கேட்டுக்கொண்டு இருக்க அதிலே ஒரு நடுத்தரம் "அட சும்மா இருங்கப்பா என் பிரண்டு சிதம்பரம் தெக்கு வீதில சருபத்து கடை போட்டிருக்கான். அவன் கிட்டே கேட்குறேன்" என சொன்னதும் ஒரு பத்து ஜோடி காதுகள் அந்த நடுத்தரம் நோக்கி திரும்ப "ஆங் ஆங் இன்னும் வரலையா, நீ ஒன்னு பண்ணு. அவரு கிராஸ் பண்ணி இங்க வந்ததுக்கு பின்னே ஒரு எஸ்செம்மெஸு வுடு" என சொல்லிவிட்டு "இன்னும் வரலையாம்ப்பா கடலூர் கிட்ட ஏதோ கண்ணியாம்கோயிலாம் அதை தாண்டிபுட்டாராம். வழிமுச்சூடும் ஜனங்க தாங்கலையாம். வண்டி மாப்ள ஊர்வோலம் மாரி நவுருதாம். போங்கப்பா போங்க அங்க நகரம் குந்தி இருக்கு பாருங்க அந்த டிரான்ஸ்பார்மரு கிட்டே ஒரு கட மாடிப்படில. அது கிட்டே நம்ம ஏரியா பசங்க பசிக்குதுன்னு சொல்றாங்கன்னு நான் சொன்னேனு சொல்லி காசு வாங்கியாங்க" என சொல்ல ஒரு நாலு விடலைங்க அந்த பக்கம் நகரசெயலர் குண்டாமணி கிட்டே போய் விட்டு திரும்பவும் வந்து "அண்ணே நகரம் வையுதுண்ணே, தேவூரான், நாவுரான்னு பழமொழில்லாம் சொல்லி திட்டுதுண்ணே" என திரும்ப அந்த நடுத்தரம் நகரத்தை நோக்கி போனது.

அங்கே நகரம் " வாண்ணே, வா, உன் வண்டி நம்பர் என்னாது?" என சொல்லிகிட்டே "ஒ ஈரோ கோண்டா வாங்கிட்டியா, இந்தா இந்த நோட்டுல பேரையும் வண்டி நம்பரையும் எழுது. இத்த புடி 100 ரூவா. சுடும் பாரு. நாசிக்குல இருந்து நேரா பிளைட்ட புடிச்சு வருது. ஆமா உந்தெரு பசங்க டீ குடிக்க காசு வேணும்னு வந்தானுங்க. இருங்கடா தலைவரு வந்துட்டு போவுட்டும்னு சொல்லிட்டு திரும்பி பாக்குறேன், ஒரு பயலையும் காணும். அது கெடக்கட்டும் இது வரக்கிம் 23 வண்டிக்கு கைக்காசு ரெண்டாயிரத்து முன்னூறு குடுத்து இருக்கேன். கேண்டிடேட்டு யாருன்னே தெரியல. காலைல இருந்து நம்ம பயலுவோலுக்கு செலவு பண்ணி கொடிய மன்றத்துல இருந்து கொண்டாந்து நட்டு வச்சிருக்கேன். என்னவோ போ. இதல்லாம் திரும்பி வருமா வராதான்னே தெரியல. சரி உன் பசங்களை கூப்டு அண்ணே, லைட்டா மருந்து வச்சுக்க சொல்லு. இந்தா அதுக்கு இந்த நோட்டுல ஒரு கையெழுத்து போடு. புடி பெரியகாந்திய" என சொல்ல "அட நகரம் என்னாது இதல்லாம் சின்னத்தனமா. தலைவ்ரு எதுகிட்ட வந்துகிட்டு இருக்காருன்னு தெரிஞ்சுகிட்டு போலாம்னு இங்க வந்தா இதல்லாம் ஓடிகிட்டு இருக்குதா. சரி சரி நாம நின்னுருந்தா நம்ம கைக்காசை போட்டு நீயா நானான்னு பார்த்துபுடலாம். ஆனா ஒன்னு எல்லாத்தையும் குறிச்சு வச்சுக்க. ஐசா பைசா இல்லாம கணக்கை தீர்த்துக்க அந்த ஆளுகிட்ட. நான் சொல்றத சொல்லிட்டேன். மீதி ஏமாந்து போறதும் போவாததும் உஞ் சாமர்த்தியம் நகரம்" என சொல்லிக்கொண்டே ஒரு சிறுசை கூப்பிட்டு "எலேய் என் பைக்குல ஒரு நூறு ரூவாய்க்கு எதுத்தாப்புல பெட்ரோலு ஊத்திட்டு வா. ஒரு சேதி இருக்கு சொல்றேன்" என சொல்லிக்கொண்டே பக்கத்து கடைக்கு போய் "தம்பி ரெண்டு 500 தாளு குடு" என சொல்லி பெரிய காந்தியை நீட்ட, அவரு " அண்ணே ஒரு 500 இப்ப வாங்கிக்க அண்ணே, மீதிய சாயந்திரம் வாங்கிக்க" என சொல்லி கொடுக்க பெட்ரோல் ஊத்தி வந்தவன் கிட்டே இந்த நடுத்தரம் " எலேய் நக்ரத்துகிட்டே ஏடாகூடமா வஞ்சிபுட்டேன். சரி அதை வுடு. நம்ம பசங்க எத்தினி பேரு இருக்கீங்க. சரி கணக்கு எல்லாம் எதுக்கு, சின்ன சப்ப மருந்து 5 வாங்கிக்க, 10 கப்பும், 7 பாக்கெட்டு தண்ணியும் வாங்கிக்க, அத்தோ அந்த தேர் அடில இருக்கு பாரு பெருசு, அதுக்கும் ஒரு கட்டிங் மருந்து வையுங்கடா, இந்தா 500, அதுல 330 போவ மீதிக்கு நீங்க எதுனா சாப்புட்டுட்டு எல்லேய் அப்புடியே சாய்ந்திரம் வூட்டு பக்கம் வழியா போம்போது நெய்காராபூந்தி ஒரு இருவத்தி மூணு ரூவாய்க்கு வாங்கிட்டு வந்து என் சின்ன மொவன் வெள்ளாடிகிட்டு இருப்பான் அவன் கிட்ட குடுத்துடு. சாங்காலம் எப்புடியும் காங்கிரஸ்காரன் லிஸ்டு வந்துடும். நா காமராசரு மாளிகைக்கு ஒரு எட்டு பார்த்துட்டு லேட்டா தான் வருவேன் வூட்டு பக்கம். அண்ணி கிட்ட வெவரத்தை சொல்லிடு. கலைஞர் வாழ்கன்னு சத்தம் சரியே இல்லியேடா உங்க கிட்டே. நாங்கல்லாம் அந்த காலத்துல... அட இங்க பார்ரா கார்ல பாஜிரோல போறது யாருன்னு தெரியுதா? பழனிமாணிக்கம். அப்படின்னா இன்னும் பத்து நிமிஷத்துல தலைவர் வந்துடுவாரு. நீங்க அந்த டிரான்ஸ்பார்மர் அடில போய் மருந்து வச்சிட்டு சுருக்கா வந்துடுங்கடா" என சொல்லிக்கொண்டே போனது அந்த நடுத்தரம்.


அந்த நேரம் பார்த்து அந்த நடுத்தரத்துக்கு ஒரு எஸ் எம் எஸ் வர "அட கண்ணாடி எடுத்துட்டு வரலையேப்பா. எலேய் தம்பி இங்க வா. இது என்னான்னு படி" என சொல்லி கொடுக்க "kalaingnar passed away in chidambaram"ன்னு போட்டதை படிச்சுட்டு அதை அந்த கூட்டத்துல வெளியே சொன்னா அடிவிழும் என்ற காரணத்தால் "அண்ணே சிதம்பரம் தாண்டிட்டாராம். அனேகமா இந்நேரம் வல்லம்படுகைக்கு வந்திருப்பாரு"ன்னு சொல்ல அந்த நடுத்தரம் முகத்தில் பெருமையோ பெருமை. பக்கத்தில் இருந்த ஒரு போலீஸ் ஜீப் டிரைவரிடம் " எங்களுக்கு கன் மாதிரி நீஸ் வந்துடும்ல. தலைவரு கொள்டத்துல வரவேற்புல செம கூட்டத்துல மாட்டிகிட்டு இருக்குறாமாம். வண்டி அங்க இருந்தும் நவுந்துடுச்சாம். அடுத்து சீயாழி தான்" என சொல்லிக்கொண்டே "எலேய் மணி என்ன இப்ப 12 ஆச்சா? அடடா ஒரு போனை போட்டு சோழன் சரியான டைமான்னு பாரு. ஏன்னா தலைவரு அரசூரு கேட்டுல மாட்டிக்க கூடாது பாரு" என டிபிக்கல் அரசியல்வாதியாக சொல்ல அந்த மெசேஜ் படிச்ச பையன் " உன் இங்கிலீசுல தீயை வைச்சு கொளுத்த" என டைப் செய்து "அண்ணே அவருக்கு நன்றி சொல்லி ஒரு மெசேஜ் வுட்டுட்டேன் அண்ணே" என சொல்லிக்கொண்டே அதை அனுப்பினான்.

பின்னர் தலைவர் வைத்தீஸ்வரன் கோவில் ஹோட்டல் சதாபிஷேகத்தில் மதிய உணவு மற்றும் ஒய்வு எல்லாம் எடுத்து முடித்து வரும் வரை மருந்து வைக்கப்பட்ட இளசுகள் தலைவர் வாழ்க என கோஷம் போட்டு அந்த இடத்தையே சூடாக்கினர்.அதற்குள் ஒரு ஸ்பீக்கர் கட்டிய ஆட்டோ ஹனீபா பாட்டை போட்டு கொண்டு அந்த இடத்தையே சுற்றி சுற்றி வந்தது."இதே நம்ம அச்சுதன் மாத்திரம் சாவாம இருந்திருந்தா இந்நேரம் ஆட்டோவிலே சும்மா ரகளை கட்டி அடிச்சிருப்பாண்டா" என ஒரு பெருசு ஒரு மாதத்துக்கு முன்னர் இறந்து போன திமுக பிரச்சார பீரங்கி அச்சுதனை நினைவு கூர்ந்தது.

இப்படியாக நடந்து கொண்டு இருக்கும் போதே வெய்யில் மண்டையை காய்ச்சி எடுக்க மதியம் 3 மணிக்கு ஒரு போலீஸ் ஜீப் சகிதம் ஒரு பாஜிரோவில் அமைச்சர் எ.வ. வேலு போக நம்ம நடுத்தரம் " வேலு அண்ணன் அவரு சம்மந்தி ஆர். எஸ். கிருஷ்ணா வூட்டுக்கு சாப்புட போராரு" என சொல்லிக்கொண்டே இருக்க அடுத்து எம் எல் சி என திமுகவினரால் அன்போடு அழைக்கப்படும் அமைச்சர் கோ. சி. மணி அடுத்தது ஒரு ஸ்கார்பியோவில் போக ஒரு வித பரபரப்பு. அடுத்து ஒரு அம்பாசிட்டரில் மாவட்ட எஸ்பி வர உடனே பேண்டு வாத்தியம் எல்லாம் கச்சேரியை ஆரம்பிக்க இரு பக்கமும் ஒரே கூட்டம் சேர்ந்துவிட அந்த பக்கம் பள்ளிகள் விட்டு ராஜ் மெட்ரிக், சங்கராவில் இருந்தும் மாணவர்கள் வர சங்கரா பள்ளி மாணவர்கள் ஒதுங்கி போக அந்த இடமே கலைஞர் வாழ்க கோஷத்துடன் அல்லோகலப்பட்டது.
(இந்த காரின் உள்ளே கலைஞர் இருப்பதை கண்டு பிடித்து கொள்ளவும்)
அதற்குள்ளாக அமைச்சர் மதிவாணன் ஒரு காரில் போக சிறிது நேரத்தில் ஸ்ட்ரைக்கிங் ஃபோர்ஸ் என எழுதிய போலீஸ் வேனில் இருந்து சோம்பலாக சில போலீசார் இறங்கி வந்து ஒரு கயிறு எடுத்து நீட்டி பிடித்து கூட்டத்தை ஒழுங்கு செய்ய லிங்கராஜன், குண்டாமணி ஆகியோர் முன்பக்கமாக வந்து நிற்க நடுவே பாமக, விசிக கூட்டத்தினருடன் மூமுக தொண்டர்களும் வந்து நிற்க மதியம் 3.30க்கு 2728 என்கிற எண்ணுடைய ஒரு காரில் தலைவர் வந்தார். முன்பக்க சீட்டில் அமைச்சர் பொன்முடி இருக்க பின்பக்க சீட்டில் தலைவரும், கனிமொழியும் இருக்க கூட்டத்தை பார்த்து நிற்க குண்டாமணியும், லிங்கராஜனும் வந்து பொன்னாடை கொடுக்க அதை கனிமொழி வாங்கி பாதுகாப்பு போலீசாரிடம் கொடுக்க, அந்த இடமே கஜாமுஜான்னு ஆக தலைவர் வாழ்க என குரல் கொடுக்க தலைவர் கலைஞர் அதி அற்புதமான சிரித்த முகத்துடன் கையை காட்ட ஒட்டுமொத்த கூட்டமும் மெய்சிலிர்த்தது. சிலர் வாய்விட்டு அழுதனர் உண்ர்சி மேலீட்டால். சிலர் தான் எப்படி வாழ்த்து சொல்கின்றோம் என்று தனக்கே தெரியாத அளவு இஷ்ட்டத்துக்கு வாழ்க வாழ்க என உண்ர்சி குவியலாய் கத்த தொடங்க தலைவரின் கான்வாய் மயிலாடுதுறையை கடந்து சென்றது.

"அப்பாடா சாவதுக்குள்ள தலைவரை கிட்டத்துல பார்க்கனும்னு இருந்தேன். பார்த்துட்டேன்" என சொன்ன ஒருவருக்கு வயது 50 இருக்கும். அவரை பக்கத்தில் இருந்தவர் முறைக்க "நான் என்னை சொன்னேன். நான் சாவறத்துக்குள்ள " என அவர் திருத்தி சொன்னார். ஒட்டு மொத்த கூட்டமும் கலைந்து சென்றது. ஒருவன் சத்தமாக பேசிக்கொண்டே போனான். தலைவரு இந்த பீரியட் முதல்வரா முடிக்கும் போது 92 வயசு ஆகியிருக்கும். 7 வது முறை முதல்வரா இருந்து முடிக்கும் போது 97 ஆகியிருக்கும். அப்படின்னா அவரது நூற்றாண்டு விழாவுல அவரு எட்டாவது முறையா முதல்வராக இருப்பாரு. சூப்பர்டா.." என சொல்லிக்கொண்டே போனான். இதான் திமுக தொண்டன். தலைவர் சாவிற்க்கு அப்பாற்பட்டவர் என்ற எண்ணம் வலுவாக இருக்கின்றது. ஆச்சர்யப்பட எதும் இல்லை. இருப்பார். அவரது நூற்றாண்டை முதல்வராக தானே இருந்து நடத்துவார். வாழ்க கலைஞர்.வாழ்க கலைஞர். வாழ்க வாழ்கவே!!!

March 17, 2011

அரசியல் மிக்ஸ்! இன்றைய நிலை!!!!

இந்த அனானிங்க தொல்லை தாங்கலைப்பா. நான் பல்லிடுக்கில் சிக்கிய பாக்குதூளை பத்தி எழுதினதும் இவனுங்க ஆட்டம் தாங்கலை. இவனுங்க என்னா சொல்றாங்கன்னா என் அம்மாவை திட்டுவானுங்களாம் அதை நான் பிரசுரிக்கனுமாம். 4 பின்னூட்டம் அப்படி. பின்னாடி அதை ஏன் பிரசுரிக்கலைன்னு கேள்வி. உங்க கேள்வி நியாயம் தான். ஆனா என்னால பிரசுரிக்க முடியலை அனானி நாய்ஸ். பாவம் அம்மா, அது படு கிழவி, உங்க ஆசையை நிறைவேத்தி அது பாவத்தை ஏன் கொட்டிக்கனும்னு விட்டுட்டேன்.

அதை எல்லாம் விடுங்க. இப்ப பல்லிடுக்கில் சிக்கிய பாக்கு தூளுக்கு வ்ருவோம். இந்த அரசை எதிர்த்து போராட்டம்ன்னு ஆரம்பிப்பானுங்க பாருங்க. அங்க தான் காமடியே இருக்கு. "எனக்கு ஒபாமா மாதிரி சம்பளம் வேணும்"னு முதல்ல ஆரம்பிப்பானுங்க. அப்படியே பெருசா போகும். ரொம்ப பெருசா போகும். அரசும் இறங்கி வரும் பேச்சு வார்த்தைக்கு. ஆனா ஒத்துக்க மாட்டானுங்க. அடம் பிடிப்பானுங்க. உடனே தூக்கி உள்ள போடும். ரகளை நடக்கும். திரும்பவும் பேச்சு வார்த்தை. அப்ப ஒரு முடிவுக்கு வரும். என்னான்னா உள்ள பேச்சு வார்த்தைக்கு போனவன் வெற்றி வெற்றி"ன்னு கூவிகிட்டே வெளியே வருவான். "நம்ம கோரிக்கையை அரசு ஏத்துகிடுச்சு. பணிஞ்சுடுச்சு"ன்னு கூவுவான். உடனே வெளியே இருப்பவன் வெற்றி வெற்றின்னு கூப்பாடு போடுவான். என்னடா வெற்றி என்னடா கோரிக்கைன்னு பார்த்தா " ஸ்ட்ரைக் நடந்த இந்த பத்து நாளுக்கும் சம்பளம் வேணும், இதிலே ஒழுங்கு நடவடிக்கை எடுத்தவங்களுக்கு அந்த கேசை வாபஸ் வாங்கனும்" இது தான் கோரிக்கையா இருக்கும். அதை அரசு ஏத்துக்கும். ஆக தொழிலாளி கேட்டதை அரசு ஒத்துகிச்சு அதாவது பேச்சு வார்த்தையில். அரசு மறைமுகமாகவும் நேர்முகமாகவும் மிரட்டியதுக்கு பணியலை என்பது அரசுக்கு மட்டுமே தெரியும். ஆனா கூப்பாடு என்னவோ பயங்கரமா இருக்கும். நான் ஏன் இதை சொல்றேன்னா 110 சீட்டு, துணை முதல்வர், 3ல் ஒரு பங்கு அமைச்சர் இதல்லாம் கோடிக்கையா வச்சு அது 90 சீட்டா ஆன பின்னே நான் ஒரு பது போட்டேன். அதாவது "அந்த 89க்கு பின்னே வருமே அந்த 90 ஆ"ன்னு. நான் அந்த 110 மற்றும் அந்த 5 அம்ச கோரிக்கை எல்லாம் கூட சொல்லலை. ஆனா அப்பவே கலைஞர் 60ன்னு இருககாரு. ஆனா 63ன்னு இப்ப முடிவாகிடுச்சு.

ஆனா வெற்றி வெற்றின்னு கூப்பாடு போடும் இவங்களை பத்தி "எலேய் நீங்க கேட்டது 5 அம்ச கோரிக்கை என்னாச்சு? 110 என்னாச்சு? புதுசா என்னவோ K 72 ன்னு பார்முலா சொன்னானே ஒரு பையன் கார்த்திக் சிதம்பரம் அவன் கோரிக்கை என்னாச்சு? எவனாவது இது வரைபதிவுலகில் கேட்டானா இல்லியா இல்லை தானே? உடனே அடுத்த அஸ்திரம் "நாங்க கேட்ட தொகுதி வேண்டும்" ... என்ன சின்ன புள்ள தனமா இருக்கு? உங்களுக்கு எது வேண்டும்ன்னு கேட்க தெரியுமா முதல்ல? சரி அதுக்கு ஏன் 4 நாள் இழுத்தடிப்பு? அப்படின்னா கேட்டது எல்லாம் வந்துடுச்சா? அது போல போடி, தர்மபுரில உங்களுக்கு இடம் கிடைச்சுதா? அதாவது சின்ன சின்ன பையன் பார்முலாப்படி? என்னவோ போங்க.இப்ப கூட்டணி கட்சியா போயிடீங்க. அதனால தப்பிச்சீங்க.நாங்க காலை வாற மாட்டோம். உங்க இளைஞர் அணி தலைவர் எங்க தளபதியை பார்த்தாச்சு. ஈரோட்டிலே உங்களுக்கு வெற்றி தான். பீ கூல்... நாளை நடப்பதை நாம பார்ப்போம்.

அடுத்து... அதிமுக கூட்டணி பத்தி பார்ப்போம். அம்மாடியம்மோவ். ஒரு மாதம் முன்னே நாஞ்சில் சம்பத் மாயவரம் மீட்டிங் வந்தாரு. அப்பவே ஒரு திராவிட கட்சி பேச்சாளர் வருகின்றார்ன்னு மரியாதை நிமித்தமாக போய் பார்த்தோம். இதை ஒரு பதிவருக்கு கூட சொன்னேன். "தம்பிகளா, வாங்க என்னை கூப்பிட்டு பேச சொன்ன கட்சிகாரன் கூட வரலை. நீங்க வந்திருகீங்க"ன்னு சந்தோசமா பேசினாரு. நடுவே ஒரு வார்த்தை கூட விட்டாரு. "ஏம்ப்பா எதுனா கத்தி கித்தி எடுத்து வந்து இருக்கீங்களா?"ன்னு. அப்ப எங்க கூட வந்த ஒருத்தன் சொன்னான். "அண்ணே நீங்க பேசின பேச்சுக்கு நாங்க கொல்லனும்னு நினைச்சிருந்தா நீங்க செத்து 20 வருஷம் ஆகியிருக்கும் அண்ணே, அது போல நம்ம வெற்றிகொண்டான் அண்ணன் இந்நேரம் அப்பல்லோவிலே படுத்திருக்க மாட்டாரு அண்ணே, எப்பவோ பெரம்பலூர்ல சாம்பலா ஆகியிருப்பாரு அண்ணே": இதை கேட்ட நாஞ்சில் சம்பத் ஒரு நிமிடம் அழுதாரு.(அப்போது அண்ணன் வெ.கொ உயிரோடு இருந்தார்) ஆனால் அப்போது அவரை பார்க்க அந்த கூட்டத்துக்கு ஏற்பாடு செஞ்ச அந்த முக்கிய கட்சிகாரர்கள் யாரும் இப்படி வரவில்லை.

நான் இங்கே இப்போது தான் சொல்கிறேன். ஆனால் அன்றைக்கே ஒரு பழுத்த கலைஞர் எதிர்ப்பாளர் cum பதிவர் கிட்டே சொன்னேன் என்பதையும் இங்க சொல்லிக்கிறேன்.


ம் கம் டு தி பாயிண்ட்! காங்கிரஸ் திமுக போட்டியிடும் தொகுதிகளை வைத்தே ஜெ காய் நகர்த்துவார்ன்னு ஒரு பேச்சு இருந்துச்சு. அதாவது காங்கிரசுக்கும் திமுகவுக்கும் குடுமிபிடி சண்டையாம். அதானால திமுக காங்கிரசுக்கு ஓட்டு கேட்காதாம். ங்கொயால. எங்களுக்கும் காங்கிரசுக்கும் இருந்தது சும்மா பல்லிடுக்கில் சிக்கிய பாக்குதூள் மாதிரியான துக்கடா சண்டை. ஆனால் காடுவெட்டி குரு பேசிய பேச்சு அப்படி இல்லை. " கலைஞரின் தலையை சீவுவோம்"ன்னு பேசினாரு. ஆனா நடந்தது என்ன? காட்சிகள் மாறின. அப்பவும் குரு பிரச்சனை முடியவில்லை. உடனே ராமதாஸ் கலைஞரிடம் "உங்க பையன் குரு, நீங்க ஒரு சீட்டு தந்து ஜெயம்கொண்டான்ல ஜெயிக்க வைக்கனும்" ... இது பேச்சு. தமிழர்களின் சமாதான பேச்சு. "சரி நாளை கூட்டிட்டு வாங்க" இது கலைஞர். அடுத்த நாள் குருவுடன், டாக்டர் போகிறார். " குரு அய்யா கிட்டே நீ ஜெயம்கொண்டான்ல ஜெயிக்கனும்ன்னு ஆசி வாங்கு"--- இது டாக்டர். எல்லாம் நல்லபடியா நடக்குது. சரிசமமான சீட் கொடுக்கப்படுது குருவுக்கும். அங்க இருந்தே பெரம்பலூர் கட்சிகாரனுக்கு உத்தரவு போடுகின்ரார் கலைஞர். குரு ஊர் போய் சேரும் முன்னே அங்கு திமுக ஊழியர் கூட்டம் நடத்தி வெற்றி உறுதி செய்யப்படுகின்றது. அது போல நேற்று யுவராஜா போய் தளபதியை சந்திக்கின்றார். "நீ மத்த தொகுதிக்கு போப்பா, நானாச்சு உன் ஈரோட்டிலே ஜெயிக்க, அப்படி எதுனா தோத்தா நான் ரிசைன் பண்ணிட்டு அங்க உனக்கு சீட்... அதானால நீ தைரியமா போய் மத்த தொகுதியை கவனி"... இது தான் திமுக. யுவராஜா இனி இந்த கூட்டனி ராஜா. இளங்கோவன் எங்க ஆளு. இப்படியாக போய் கொண்டு இருக்கின்றோம். இருக்கின்ரனர். இப்போது சொல்லுங்க. காங்கிரஸ் போட்டியிடும் தொகுதியில் அதிமுக போட்டியிட்டா என்ன அந்த ஆண்டவனே போட்டியிட்டா என்ன? நாங்க இருக்கோம். எங்களுக்கு அவங்க இருக்காங்க. அது போல இன்று விடுதலை சிறுத்தைகள், பாமக வின் ஒற்றுமை. காண கண் கோடி வேண்டும். நாங்க இனி பிரிக்க முடியாத சக்தின்னு சொல்ராங்க. இது தான் கூட்டணி. இங்க கிடைக்க போவது தான் வெற்றி.

ஆனால் நேற்று முதல் அதிமுக கூட்டணியில் நடந்தது என்ன?

எல்லா உதிரி கட்சிகளையும் கூப்பிட்டு சீட் கொடுத்தாச்சு. ஆனால் இடதுசாரிகள், மதிமுக கூப்பிடப்படவில்லை. ஏன்? கடைசியாக மாக்சிஸ்ட் 19ம் தேதி வரை கெடு கொடுத்து 18 சீட் கேட்கிறாங்க. ஆனாலும் கூட தா.பாண்டியன் என்கிற அதிமுக விசுவாசி இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் அமைதிகாக்கின்றார். பின்னர் ஏதோ ஒதுக்கப்படுகின்றது. ஆனாலும் கூட மதிமுகவுக்கு ஒதுக்கப்படவில்லை. மாலை 4 மணிக்கு தேமுதிகவின் மச்சான் சுதீஷ் வருகின்றார். "எங்களுக்கு ஒதுக்கப்பட்ட சீட்டை நானே கையெத்து போட்டு வாங்கி போகின்றேன். எங்க தலைவர் தான் எங்க தலைமையகத்தில் இருந்து வெளியிடுவார்" என சொல்கின்றார். கொடுத்து விட்டார் ஜெ. ஆனால் நடந்தது என்ன? அவர்களுக்கு கொடுத்த இடத்தில் எல்லாம் அதிமுக வேட்பாளர் படியல் வெளியாகின்றது.

அதன் பின்னர் நடந்து எல்லாம் எல்லாருக்கும் தெரியும். இப்போது தேமுதிக கட்சியின் தலைமையில் 3 வது அணி அமைய போகின்றது. இது ந்டக்குமா நடக்காதா என தெரியாது. ஆனால் விசயகாந்து விதித்த நிபந்தனை இப்போது 1. மதிமுகவுக்கு சீட் கொடுக்க வேண்டும். (இதில் விசய்காந்தின் நல்ல மனது தெரிகின்றது) 2.தேமுதிக கேட்ட அதாவது அதிமுக அறிவித்த வேட்பாளர்களில் 20க்கும் மேல் தேமுதிகவுக்கு மீண்டும் வேண்டும், 3, தேர்தல் பிரச்சாரம் எல்லாம் எங்க்ளை கேட்டு தான் முடிவு செய்ய வேண்டும்) சூப்பர். சூப்பர்.. இதை ஜெ எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை. இதை ஜெ ஒத்து கொண்டால் அது ஜெ இல்லை. அடுத்து இனி எவனும் ஜெ க்கு காலில் விழ மாட்டன். அடுத்து முக்கியம் திமுகவுக்கு எதிர்கட்சி அதிமுக இல்லை விசயகாந்து மட்டுமே.

இதல்லாம் நடக்குமா? நடக்கவே நடக்காது. விசயாக்ந்தும் சரி ஜெவும் சரி. நான் என்கிற அகந்தை கொண்டவர்கள். இது இரண்டும் ஒரு இடத்தில் இருக்க முடியாது. ஆனால் அங்கே தா. பாண்டி இருக்காரு. அவரு ஜெவின் விசுவாசி. வைக்கோவை விட இன்னும் அதிகம். பார்ப்போம். நானும் உங்களைப்போல ஆர்வமுடன் எதிர்பார்க்கிறேன்.

ஆனால் இந்த நிமிடத்தில் நான் நேற்று நினைத்து பார்த்தது. அதாவது மருதமலை என்னும் படத்தில் வரும் சிரிப்பு காட்சி, இதில் கடைக்கார சிங்கமுத்து ஜெ, சிரிப்பு போலீஸ் வைகோ, பிச்சைகாரன் கார்திக் என நினைத்து பாருங்கள். சிரிப்பு நிச்சயம்.... இ...னி நடப்பதை பர்ப்போம்..

March 5, 2011

பல்லிடுக்கில் சிக்கிய பாக்குத்தூளை காறித்துப்பினோம்!!!


கடந்த பிப்ரவரி முதல் தேதி எங்கள் தலைவர் டெல்லி சென்ற போது ஆரம்பித்த தேர்தல் திருவிழா இன்று ஒரு மிக முக்கியமான ஒரு கட்டத்தை திருப்பத்தை சந்தித்து இருக்கின்றது. பிப்ரவரி முதல் தேதி அன்று எங்கள் தலைவர் சோனியாவை சந்தித்த போது காங்கிரஸ் ஒரு குழு அமைக்கும் அந்த குழு தான் முடிவெடுக்கும் என சொல்லப்பட்டது. அப்போது திமுக தொண்டர்களிடம் ஒரு விதமான சோர்வு. ராகுல் பார்முலா கடைபிடிக்கப்படும் என சொல்லப்பட்டது. ஆக அப்போதே திமுக தொண்டர்களுக்கு ஒரு மாதிரியாக புரிந்து விட்டது. ராகுல் என்கிற பையன் எடுத்த முடிவுகள் இது வரை இந்திய அரசியலிலோ, காங்கிரஸ் கட்சி விவகாரத்திலோ அல்லது சமூகத்திலோ எந்த வித "பாஸிட்டிவ்" முடிவையும் கொடுத்ததில்லை. கொடுக்க போவதும் இல்லை என்பது அரசியல் நோக்கர்களுக்கு தெரியும். பறந்து பறந்து வந்து ஹைதராபாத் பிரியாணி சாப்பிடவும், கோவா, குமரகம் போன்ற பகுதிகளுக்கு சென்று உல்லாச வாழ்க்கை வாழ்வதற்குமான ஒரு விடலைப்பையன் (இனி பையன் என்று கூட சொல்ல கூடாது. ஒரு நடுத்தர வயது மனிதர்) என்றே மக்களின் புரிதலில் இருக்கும் நபர் அவர். அதை நம்பி அவர் காங்கிரஸ் தமிழ்நாட்டில் அபார வளர்ச்சி அடைந்து விட்டது என சொன்னதை நம்பி மூழ்கிய காங்கிரஸ் கப்பலை தூக்கி நிப்பாட்டிய சோனியாவும் தலையாட்டி வைத்தது தான் ஆச்சர்யம். பீகார் போன்ற நிலை தமிழகத்திலும் வர வேண்டும் என விதி இருக்கும் போது யார் என்ன செய்ய முடியும்.

இதனிடையில் இங்கு இருந்த அரசியல் அனாதை ஆனந்தன்களான இளங்கோவன், மற்றும் யுவராஜா போன்ற சிறுவர்களின் பேச்சுக்களும் திமுக தொண்டார்களை கொதிப்படைய செய்தது. முதல் கட்ட பேச்சுவார்த்தை இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தை அனைத்திலும் காங்கிரஸ் தன் தகுதிக்கு மீறிய ஆசைகளை அள்ளித்தெளிக்க ஆரம்பித்தது. ஆனால் அந்த ஐவர் குழுவில் இருந்த ஐவருக்கும் நன்கு தெரியும். இதே திமுக தவிர்த்து அதிமுக விடம் இப்படி எல்லாம் பேசிவிட்டு சிதம்பரம் திருச்சி விமானநிலையம் பக்கம் வந்து இறங்க முடியுமா என்று. அவர் ஏற்கனவே அதிமுக விட அடிவாங்கியவர். அது நடந்து நாள் ஆகிவிட்டதால் மறந்து விட்டார் என்றே நினைக்கிறேன். விஷயத்துக்கு வருவோம். இப்படியாக ராகுல் பார்முலா என்னும் சனி பிடித்து ஆட்டத்தொடங்கியது காங்கிரசை. திமுக தொண்டர்களுக்கோ இந்த சுமை தன் முதுகில் இருந்து இறங்கி தொலைத்தால் போதும் என்கிற மனோநிலை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போனது.

இதன் நடுவில் இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தையில் துரைமுருகன் நக்கலடித்தார் என ஜூவி எழுதியது. விஷயம் அறிந்த வட்டாரங்கள் இன்னும் மோசமாக கூட சொல்கின்றனர். அது நமக்கு தேவையில்லாத விஷயம். ஒட்டு மொத்த திமுக தொண்டர்களின் கருத்தை தானே துரைமுருகன் சொல்லியிருப்பார்.(இந்த வார்த்தை எங்கோ கேட்ட மாதிரி இருக்கின்றதா?)

உடனே குலாம்நபி ஆசாத வந்தார். பேசி எல்லாம் முடிவாகிடும்னு நினைச்சாங்க. அப்பவும் திமுக தொண்டர்களிடம் சோர்வுதான். அய்யோ கூட்டனி நீடிக்க கூடாதேன்னு. சும்மாவா பின்னே. அவன்வன் கஷ்ட்டப்படு உழைப்பான். இவனுங்க நோகாம நுக்கு தின்று விட்டு போவதோடு இல்லாமல் நம்மையே திட்டுவார்கள் என்கிற அதீத எரிச்சல். எங்கள் தலைவருக்கு பலமே தொண்டர்கள் தான். தொண்டர்கள் மனநிலையை நன்கு புரிந்து வைத்து இருப்பவர். 60 சீட் வரை ஒதுக்குவதாக அப்போது சொன்னாலும் அவர் மனநிலை அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்பது மாத்திரம் நன்கு புரிந்தது.

இதற்கிடையில் விசயகாந்து திமுக தென்மண்டல அமைப்பு செயலர் அஞ்சாநெஞ்சன் வழிகாட்டுதலில் திரிசங்கு நிலைக்கு வந்து விட அதுவும் ஒரு முட்டுகட்டையாக இருந்தது. காங்கிரசை கழுத்தறுக்க வேண்டும். அதிமுக பக்கமும் போக கூடாது. நம் கூட்டனியிலும் இருக்க கூடவே கூடாது. இத்தோடு அது அழிந்து போகவேண்டும் என திமுக தலைமை முடிவெடுத்துவிட்டது என்றே நினைக்கிறேன். உடனே அழகிரி அண்ணன் விசயகாந்தை பற்றி பேட்டி கொடுத்தார். ஒன்று தனியே நில். அல்லது அதிமுக பக்கம் ஓடிவிடு. காங்கிரசுக்கு நாங்கள் கழுத்தறுக்க வேண்டிட காலம் கனிந்து வர நீ ஒரு நிலைப்பாடு எடு என சொல்லாமல் சொல்வது போல நேற்று ஒரு பேட்டி கொடுத்தார். "அவர் ரோசம் உள்ளவர். மானம் உள்ளவர்" என்கிற ரீதியில். அதல்லாம் என்ன விலை என்று கேட்டுகொண்டே விசயகாந்து அதிமுக குட்டையில் போய் குதித்தார். முடிந்தது எல்லாம் முடிந்தது. நேற்று இரவு இதல்லாம் நடந்து கொண்டிருக்கும் போதே விடியல்காலை தலைவர் அறிக்கை வந்துவிடுகின்றது. காங்கிரஸ் பற்றி பேச்சுவார்த்தையில் நடந்த விஷயம் எல்லாம் வருகின்றது. தொண்டர்கள் உற்சாகம் தாங்க முடியவில்லை.

அறிவாலயத்தில் கூட்டம் அலைமோதுகின்றது. 15000 பேர் விருப்ப மனு கொடுக்கின்றனர். இன்று மாலை 5 மணிக்கு திமுக உயர்நிலை செயல்திட்ட கூட்டம் கூடுகின்றது என்கிற செய்தி எல்லா திமுக தொண்டனுக்கும் பரவுகின்ரது. அத்தனை வேலையும் விட்டுவிட்டு சன் செய்திகள், கலைஞர் செய்திகள் பார்க்க தொடங்குகின்றான். வெடிகள் வாங்கி குவிக்கின்றான். சென்னைக்கு தெரிந்தவர்களுக்கு போன் செய்கின்றான். இவனுக்கு தெரிந்த அதே செய்திகள் தான் எல்லோரும் சொல்கின்றனர். மாலை 5 மணிக்கு கூட்டம் தொடங்கியாகிவிட்டது. நகம் கடிக்கின்றான். எல்லா சேனலும் மாற்றி மாற்றி பார்க்கின்றான். ஆறு ஆகியது. 6.30 ஆகியது. இவனுக்கு இருப்பு கொள்ளவில்லை. பொதிகை கூட மாற்றி பார்க்கின்றான். இதனிடையே சில சில போன்கள். "தான் அவசர வேலையாக பஸ்ஸில் பயணம் செய்வதாகவும் எந்த செய்தியாக இருந்தாலும் போன் செய்யுமாறும் போன் செய்கின்றனர். இவன் நகம் கடித்தே விரலை சின்னதாக்கி கொள்கின்றான்.

பொதிகையில் ஜாஜிருசேனும், அரித்வாரமங்களமும் தனிஆவர்தனத்தில் பின்னி பெடலடுப்பது கூட இவனுக்கு பிடிக்கவில்லை. ஒரு வழியாக சன் செய்திகள் மெயின் செய்திகளில் தற்போது வந்த செய்தி என்று அந்த இனிப்பான செய்தி வருகின்றது. காங்கிரசுடன் கூட்டனி இல்லை. மத்திய அமைச்சரவையில் இருந்து விலகி விடுவது. துள்ளி குதிக்கின்றான். வெடி வெடிக்கின்றான். ஊரெங்கும் வெடி சத்தம். ஆட்டோவில் மைக் கட்டி "உங்கள் ஒட்டு உதயசூரியனுக்கே" என்னும் சத்தம் காதை கிழிக்கின்றது.

தலைவா!!!!! உனக்கு எங்கள் நன்றிகள். ஒரு தொண்டனின் ஆசையை பூர்த்தி செய்தாயே அது போதும். உடனே திமுக விருப்பமனு தாக்கல் செய்யும் தேதி இன்னும் இரண்டு நாட்களுக்கு தள்ளி வைக்கப்படுகின்றது.

இனி காங்கிரசில் இருந்து யாராவது சிவகங்கை சின்னபையன்கள் பேச்சு வார்த்தைக்கு வரலாம். எதுவும் நடக்கலாம்.முள்ளும் மலரும் கிளைமாக்ஸ் போல கூட இருக்கலாம். ஆனால் தலைவரே எங்கள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்தாயே அது போதும் தலைவா. உனக்கு 150 சீட்டுகள் கொண்டு வந்து காலடியில் கொட்டுகின்றோம். நாங்கள் இருக்கின்றோம் தலைவா. நீ தைரியமா இரு. நாங்கள் இனி எப்படி தேர்தல் வேலை செய்ய போகின்றோம் என்பதை மட்டும் உட்காந்து பார் தலைவா!

இதிலே இன்னும் ஒன்றும் சொல்லிக்கொண்டாக வேண்டும். இந்த குபீர் ஈழ ஆதரவாளிகள் எல்லாம் ரொம்ப சந்தோஷம் அடைய எதும் இல்லை இதிலே. ராஜீவ்காந்தியை ஒரு இந்திய பிரஜையை இந்திய நாட்டில் அதும் தேர்தல் நேரத்தில் தமிழ்நாட்டில் வந்து கொன்றது, அதனால் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தது எதையும் நாங்கள் மறக்க போவதில்லை. அதனால் உடனே நீங்கள் ரொம்ப ஆடாதீங்க. அறுந்து போன வாலை ஒட்டுகிட்டு ஆட்டிகாமிக்க வேண்டாம்.

காங்கிரஸ் எங்களை கழுத்தறுக்க நினைத்தாலே நாங்கள் அறுத்து விடுவோம் என்பதை உணருங்கள். அதையே தாங்க உங்களுக்கும் சொல்கின்றோம்!

March 1, 2011

இந்த 89க்கு பின்னே வருமே அந்த 90 ஆ!!!


நல்ல நேரத்திலே தான் எனக்கு இந்த கம்பியூட்டர் புட்டுகிச்சு. இல்லாட்டி நான் திட்டும் திட்டிலே காங்கிரஸ் கட்டியிருக்கும் கோவணமும் கிழிஞ்சு 234 துண்டா ஆகியிருக்கும். பொதுவா அண்ணா காங்கிரசை அடிச்சு காலை உடைச்ச பின்னே யாராவது முதுகிலே உட்காந்து சவாரி செய்வது வழக்கம் தான். அடிச்சு உடைச்ச பாவத்துக்காக எதுனா ஒரு திராவிட கட்சி தூக்கி சுமந்துகிட்டு வந்து கிட்டு இருக்கு. ஆனாலும் அதிலே திமுக காரன் முதுகுன்னா மாத்திரம் ரொம்ப சவுகரியம். வாகா உட்காந்துகிட்டு காதையும் திருகிகிட்டு வரலாம். இந்த தபா ரொம்ப தான் கிள்ளிட்டானுங்கப்பா. தூக்கி கடாசிட்டு போலாமான்னு தோணுது.

பொதுவா கூட்டணி பேச்சுவார்த்தைன்னா காங்கிரஸ் கூட எப்படி இருக்கும்?. டெல்லில இருந்து வருவாங்க போவாங்க. பின்ன மூடி முத்திரையிடப்பட்ட கவர் கொண்டு வந்து கொடுத்துட்டு போயிடுவானுங்க. இதான வழக்கம். இப்ப என்னா புதுசா ஐவர் குழு மண்ணாங்கட்டின்னு. அதுல வேற இளங்கோவன், யுவராஜ்ன்னு ஒருத்தனும் அந்த பாழாய் போன குழுவிலே இல்லைன்னு சத்தியமூர்த்தி பவன்ல அடிதடி, உண்ணாவிரதம் எல்லா கூத்தும் நடக்குது. நடந்துச்சு. நடக்கவும் போவுது. புலிகேசி படத்துல வர்ர மாதிரி அந்த இத்தியமூர்த்தி பவன் என்பதே சண்டை போடும் களமாகத்தான் காங்கிரஸ்காரனுங்களுக்கு இருக்கு. பேசாம அதை இடிச்சுட்டு அதிலே ஆடுதொட்டி வச்சுடலாம். (தமிழக அரசு கவனிக்க, இது இலவச அறிவுரை இல்லை. ஒருவேளை செயல்படுத்தினால் எனக்கு சார்ஜ் கொடுக்கனும்) .

நான் இந்த பதிவிலே 234ல் 31 போச்சுன்னா 203 அதிலே 3 போச்சுன்னா 200 அதிலே பத்து போச்சுன்னா 190 ன்னு கணக்கு வழக்கு எல்லாம் போட போவதில்லை. அதல்லாம் மத்தவங்க போட்டுகிடட்டும். ரொம்ப சாதாரணமா மனசுக்கு பட்டதை தான் சொல்ல போறேன். கோர்வையா கூட இருக்காது.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

* அன்னை சோனியா கூட்டணி தொடரும் என்று சொன்னால் திமுகவுக்காக உழைக்க தயார். அதே ஒத்துழைப்பை திமுகவினரும் எங்கள் வேட்பாளர்களுக்கு தருவார்கள் என்று நம்புகின்றோம். நடக்காவிட்டால் அதன் பிறகு எங்களின் இன்னொரு முகம் தெரியும்.

*கருணாநிதிக்கு நான் ஒரு கோரிக்கை வைக்கிறேன். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் திட்டத்துக்கு ராஜீவ்காந்தி பெயரை சூட்டுங்கள். இதை கூட செய்யாவிட்டால் உங்களோடு இருந்து என்ன புண்ணியம்?

*இனியும் காங்கிரசை தவிர்த்து விட்டு யாராலும் தமிழகத்தை ஆள முடியாது. ஆட்சியில் பங்கு மட்டும் அல்ல. துணை முதல்வர் பதவியையும் சேர்த்து கேட்ப்போம். அதற்கான தகுதியும் வளர்ச்சியும் எங்களுக்கு இருக்கின்றது.

*வரும் சட்ட மன்ற தேர்தலில் கலைஞர் போட்டியிடக்கூடாது. இளஞர்களுக்கு வழிவிட வேண்டும். ஸ்டாலினிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு அவர் ஒதுங்கிக் கொள்ள வேண்டும்.

*ஈழத்தமிழர்கள் மீது எங்களுக்கு தான் உண்மையான அக்கறை உண்டு.

* இளைஞர் காங்கிரஸ் என்பது தனி அமைப்பு. இதற்கென தனிக்கொள்கைகள் உண்டு. அதன்படித்தான் எங்கள் செயல்பாடுகள் இருக்கும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

மேலே இருப்பது எல்லாம் சப்ஜக்ட் நம்பர் 3 சொன்னது. அதாவது வசூல்ராஜா படத்திலே மெடிக்கல் பாடம் எடுக்கும் போது சொல்லுவாங்களே அது போல மேலே சொன்னது எல்லாம் சப்ஜக்ட் # 3 சொன்னது. சப்ஜக்ட் # 2 ன்னு ஒன்னு இருக்குது. அது 234 தொகுதி கூட வேண்டாம். அதிலே பாதி வேண்டும் என கேட்கிறது. என்ன எழவுடா இது. கட்சி கட்டுப்பாடுன்னா என்னான்னு தெரியாத ஜென்மங்கள். இப்ப கடைசியா தொண்னூறு சீட்டு வேண்டுமாம். எது அந்த எம்ப்ளத்தி ஒம்போதுக்கு அடுத்து வருமே அந்த தொண்னூறு தான். எண்ணத் தெரியாதவனுக்கு எண்ணூறு புளியங்கொட்டை குடுத்த கதையால்ல ஆகிடும். தொண்னூறு குடுத்தா அதை வச்சிகிட்டு என்னடா செய்வீங்க? இதிலே கணக்கு வழக்கெல்லாம் கச்சிதமா சொல்றீங்க. முதல்ல தமாகாவுக்கு 7 சதம் இருந்துச்சாம். காங்கிரசுக்கு ஐந்து சதம் இருந்துச்சாம். கூட்டினா 12 சதம் வருமாம். இப்ப திடீர்ன்னு சப்ஜக்ட் # 1 செஞ்ச ராஜதந்திரத்தால 20 சதமா உசந்து போச்சாம். எலேய் உங்க லிஸ்டுல இருக்கிற பயலுவ எல்லாம் எங்க ஆளுங்கடா. பத்தாயிரம் குடுத்து ஒரு பதவியும் குடுத்தா எவண்டா போவாம இருப்பான். இப்ப எல்லாம் பறந்து வந்துட்டானுங்க செவுத்துல சுண்ணாம்பு அடிச்சு இடத்தை ரிசர்வ் பண்ணிகிட்டு இருக்கானுங்க அவனுங்க அவனுங்க கட்சிக்கு. போங்கடா போக்கத்த பயலுவலா. இந்த கூத்திலே ஆட்சியிலே பங்கு வேணுமாம். சிவப்பு விளக்கு வச்ச அம்பாசிட்டர் கார்ல ஒழுங்கா உட்கார கத்துகுங்க முதல்ல. துபாய் அபுதாபி ஹைவேஸ்ல லிஃப்ட் கேட்டு குத்த வச்சிருக்கும் பெஷாவர் பட்டான் மாதிரி அம்பாசிட்டர்ல உட்காரும் போதே ஆட்சியிலே பங்கு கேக்குறீங்களே, ஒழுங்கா கார்ல உட்கார தெரிஞ்சா என்ன என்ன கேட்பீங்க?

உடனே டெல்லில நாங்க உட்காரலையான்னு எதிர் வாதம் பண்ண கூடாது. நான் பேசுறது நம்ம நாட்டு தமிழ்நாட்டு கதையை தான். இதோ வரைவுவாக்காளர் பட்டியல் வெளியிட்டாச்சு. எல்லா தாலுக்காபீஸ்லயும் லிஸ்ட் ரெடியாகிடுச்சு. லிஸ்டை எடுத்து பார்த்தா பாதிபய பேர் இல்லை. போன 19, 20 தேதில வாக்காளர் சேர்க்கை முகாம். அங்க போய் என் பெயரை சேர்க்க போனா எங்க கட்சிக்காரன், அதிமுக, பாமக, விசி தவிர ஒருத்தன் இல்லை. அவனவன் தன் கட்சிகாரன் பேர் இருக்குதான்னு பார்த்துட்டு அப்படியே எதிர்கட்சிகாரன் பேர் இருந்தா "அய்யோ ஆப்பீசர் இந்த ஆள் செத்து போயிட்டானே"ன்னு ஒரு பிட்டும் போட்டுட்டு போறான். பின்னால தேர்தல் அன்னிக்கு வந்து 20 சதம் இருக்கு, 14 லட்சம் இருக்குன்னு பீலாவுட்டவன் எல்லாம் அய்யோ ஓட்டு இல்லியே நொட்டிகிட்டு போயிடுச்சேன்னு கத்திட்டு போய் "இதை நான் இந்துல எழுதுவேன், பொந்துல எழுதுவேன்"ன்னு போகவேண்டியது தான். இங்க தான் களப்பணி ஆரம்பிக்குது. உங்களுக்கு இந்த எழவெல்லாம் எங்க தெரிய போவுது. ஒரு காங்கிரஸ் கட்சிகாரனை பார்த்து கேட்டேன். வரைவு வாக்காளர் பட்டியல்ல உன் பேர் இருக்குதான்னு. பளிச்சுன்னு சொன்னான்."நான் டெல்லில கேக்காம எதும் சொல்ல மாட்டேன்"ன்னு. தலையிலே அடிச்சுகிட்டு அப்படின்னா படிவம் ஆறு புல்லப்பண்ணி அதிலே ஒரு போட்டோ ஒட்டி, ஒரு போட்டோ தனியா பின் பண்ணி குடுன்னு. அதுக்கு அவன் என்னைய மேலயும் கீழயும் ஒரு மாதிரியா பார்த்துட்டு போனான். போடா போ.. உன்னை முதுகிலே தூக்கிகிட்டு அலைஞ்சு முப்பது எம் எல் ஏ ஆக்கி வச்சோம்ல... ஆட்சிலயா பங்கு கேக்குற ...உன்னை நொங்கு எடுக்குறோம் பாரு இந்த தடவை.

மத்தியிலே ஆட்சில பங்கு குடுத்தோம்லன்னு பதிலுக்கு பதில் பேசுறான். வேற வழியில்லாம தானே குடுத்தீங்க. தனிமெஜாரிட்டில வந்தா நல்லா குடுப்பீங்களே, உங்களை பத்தி தெரியாதா எங்களுக்கு. ஆனா இங்க தமிழ்நாட்டுல ஆட்சில பங்கு கேட்கிற நிலமையிலா இருக்கீங்க. இதிலே சப்ஜக்ட் #1 பார்முலாவாம். அது என்னங்கய்யா பார்முலா. ஒரு ஒரு ஸ்டேட்டா "காரியம்" பண்ணிகிட்டே வர்ரதா? இதிலே மொத்தமா கிடைக்கும் பிச்சையிலே 3ல் ஒரு பங்கு சப்ஜெக்ட் நம்பர் 1னு ஆட்களுக்கு வேணுமாம். நாங்க எதுக்குடா உள்ளடி செய்யனும் உங்களை தோக்கடிக்க? முதியோர் காங்கிரஸ் போதாதா? அவனவன் கட்சில ஒரு நிலைக்கு வரவே நாப்பது வயசு ஆகுது.நாக்கு தள்ளி போவுது. அப்படி முக்கி முக்கி கட்சிய வளர்த்த நாப்பது வயசுக்காரன் முதியோர் காங்கிரசாம். அவனுக்கு சப்ஜக்ட் நம்பர் 1 ஆளுங்க மரியாதையும் தரமாட்டானுங்களாம். சீட்டும் தரமாட்டாங்கலாம். உங்க வீட்டிலே இருக்கும் அப்பனாத்தா ஓட்டு போடுறாங்களா உங்களுக்குன்னு முதல்ல பாருங்க. பின்ன காட்டலாம் உங்க இன்னும் ஒரு முகத்தை.

ஐவர் குழு முதல்ல சந்திச்சதே அவங்க கட்சி எம் எல் ஏக்களை தான். காங்கிரஸ்காரன் ஒத்துமையை அன்னிக்கு மட்டும் தான் தமிழகம் பார்த்துச்சு. எதுக்கு? எல்லாரும் கோரஸா பாடின ஒரே பாட்டு இதான். "சிட்டிங் எம் எல் ஏ எல்லாருக்கும் சீட் வேணும். எங்களில் சில பேர் தொகுதியை மறு சீரமைப்பு காக்கா தூக்கிட்டு போயிடுச்சு. அதனால அவங்களுக்கு பக்கத்து தொகுதியை கேட்டு வாங்கனும்" ங்கொய்யால.. மீண்டும் மீண்டும் சேவை செய்ய ஆசையாமாம். இப்ப இருக்கும் சிட்டிங் காங்கிரஸ் எம் எல் ஏ யாரையாவது போய் கேட்டு பாருங்க இப்ப. " உங்க கூட்டனிக்கு இருபது சீட்டு தான் கொடுக்க போறாங்களாம். எந்த எந்த தொகுதி வேணும். உங்க கருத்தை சொல்லுங்க"ன்னு கேட்டு பாருங்க. இதுக்கு மாத்திரம் டெல்லில கேட்கனும்னு ஒரு பயபுள்ள சொல்லாது. என் தொகுதி மாத்திரம் எனக்கு வேணும். ஒரே ஒரு தொகுதி காங்கிரசுக்கு குடுத்தா கூட போதும்ன்னு படார்ன்னு பதில் வரும். அய்யோ 90, 100ன்னு கேட்டுகிட்டு கூட்டனியை கெடுத்து தொலைச்சிட போறானுங்க இந்த படுபாவிங்கன்னு இப்ப இருக்குற சிட்டிங் எம் எல் ஏ எல்லாம் கதறிகிட்டு இருக்கானுங்க. இதான் நிலமை. இந்த லட்சனத்துல கட்சி வளர்ந்துடுச்சாம்.

இதே திமுக காரன் கிட்டே இதே கேள்விய கேட்டுபாருங்க. வெற்றி தோல்வி எல்லாம் வீரனுக்கு ஜகஜம். தனியா நில்லுங்க தலைவரே, 234ம் கொண்டாந்து கொட்டுறேன்ன்னு சொல்லுவான். 70 வயசான பழம் எல்லாம் வேட்டிய மடிச்சு கட்டிகிட்டு களத்திலே குதிக்கும். கட்டுடா கொடிய, நடுடா கம்பத்தைன்னு கிளம்பிடும். அதான் உணர்வு. அந்த கழகத்து பழத்துகிட்டே போய் சதவீத கணக்கு எல்லாம் கேட்டா "போங்கடா இவனுங்களா, இப்படி கணக்கு பார்த்தாடா நாங்க 1967ல் ஆட்சியை மிருக பலத்தோட பிடிச்சோம். உழைப்போம், மக்கள் கிட்டே போவோம், செஞ்சதை சொல்வோம். செய்ய போவதை சொல்வோம். மீதிய அவங்க பார்த்துப்பாங்க"ன்னு சொல்லிகிட்டு போய்கிட்டே இருக்கும் அந்த பழம்.இங்க என்னடான்னா நகத்திலே அழுக்கு பட்டா கூட ஆயிரம் தடவை சோப்பு போட்டு கதர் சட்டையிலே அழுக்கு படியாம ஜவுளிகடை பொம்மை மாதிரி நிப்பானுங்க. ஒரே அளவு சட்டை போட்டுகிட்டு எந்த நேரத்திலும் உடைஞ்சி விழுவது மாதிரி நிப்பானுங்க. டேய் அளவு எடுத்து சட்டை தைச்சு போட்டு பழகுங்கடா முதல்ல. அப்பால ஆட்சில இடம் எல்லாம் பார்த்துகிடலாம்.

இதோ எல்லா தொகுதிலயும் எல்லா கட்சிகாரனும் சுவர் விளம்பரத்துக்கு இடம் பிடிச்சுட்டானுங்க. எங்கயாவது ஒரு இடத்துல காங்கிரஸ் பிடிச்சு வச்சிருக்குதான்னு நெஞ்சை தொட்டு சொல்லுங்க. இருக்காது. ஏன்னா எவனும் இல்லை. 14 லட்சம் பேர் இருப்பதா சொல்லும் சப்ஜக்ட் # 1 ன் கம்பனி ஆட்கள் எல்லாம் மெடிக்கல் லீவ் போட்டுட்டு அவனவன் கட்சிக்கு போயிட்டான்.

சப்ஜக்ட் நம்பர் 1க்கு ஒன்னே ஒன்னு சொல்லிக்கிறேன். எங்க தலைவர் தப்பு பண்ணிட்டாரு. 2004 தேர்தல்ல கூட்டு புடலங்காய் சேர்ந்த போதே நீங்க எல்லாரும் உதயசூரியன் சின்னத்துல தான் நிக்கனும்னு சொல்லியிருக்கனும். அப்ப உங்களுக்கு உங்க சின்னத்துல போட்டியிட சொன்னது தான் தப்பா போயிடுச்சு.அப்படியே நாங்க பழக்கி வச்சிருந்தா எங்க கொறடா பேச்சை கேட்டுகிட்டு கிடக்கனும்ன்னு ஒரு நிலைல வச்சிருந்தா சப்ஜக்ட்டு நம்பர் 2 இப்படி பேசியிருக்குமா? சப்ஜக்ட் நம்பர் 2 ஐ விடுங்க. அதும் அங்க இங்கன்னு பிச்சை எடுத்து பார்லிமெண்ட் வரை போயிட்டு வந்துடுச்சு. இந்த சப்ஜக்ட் 3 இன்னும் முளைக்கவே இல்லை. அதுக்குள்ள நம்பர் 1 ஐ நம்பி தன் அரசியல் வாழ்க்கையை கெடுத்துகிடுச்சு. நம்பர் 1 போன இடம் தான் புல்லு முளைக்க மாட்டேங்குதே. பின்ன ஏன் அதை நம்பி மோசம் போவுது ஒரு கூட்டம்ன்னு தான் தெரிய மாட்டேங்குது.

அரசியல் பண்றீங்களா? இல்ல அராஜகம் பண்றீங்களா? ங்கொக்காமக்கா.. சிரிக்காம நீங்க பாட்டுக்கு ஆட்சில பங்கு, ஐந்து அம்சதிட்டம்ன்னு அடுக்கிகிட்டே போறீங்க. அதை எல்லாம் கேட்ட எங்க பயலுவ நவதுவாரம் வழியாவும் சிரிச்சு சிரிச்சு ஒரு ஃப்ளோவிலே ஆன்மாவையும் விட்டுடுறாய்ங்க. பத்து பயபுள்ள உங்க பேச்சு கேட்டு சிரிச்சு சிரிச்சு செத்து போயிட்டானுவ. நாங்க போடும் 45 சீட்டு எடுத்துகுங்க. மீதி எத்தினில நிக்கனுமோ அங்க நில்லுங்க. அங்க அதிமுக கூட கூட்டனி வச்சுகுங்க. இதல்லாம் உங்களுக்கு புதுசா என்ன? உங்க கட்சி துணை அமைப்பு தானே I.N.T.U.C போன தபா அதிமுக வோட தனியா கூட்டனி வச்சு அதுல ஒரு தொகுதி ஜெயிச்சும் காமிச்சுதே. இந்த கன்றாவி எல்லாம் வேற எந்த கட்சிலயும் நடக்காதுடா சாமீ. தலைமைக்கு கட்டுபடுவதுன்னா என்னான்னு உங்க கிட்டதாண்டா கத்துக்கனும் இந்த உலகம்.

உங்களை என்னா திட்டினாலும் மனசு அடங்க மாட்டேங்குது. தொண்டை நனைய தண்ணி குடிச்ச திருப்தியே இல்லியே. என்னாத்த பண்ண? தமிழ்நாட்டுல கூட்டனி ஆட்சின்னா மக்களுக்கு பிடிக்காதுன்னு சொன்னா பதிலுக்கு பதில் பேசுற நீ. இதே 1952ல நீங்க மைனாரிட்டியா ஆன போது கூட அப்ப கம்யூனிஸ்டுகள் கூட கூட்டனி சேராம உங்க ராசாசி மாணிக்கவேல் நாயக்கரை காங்கிரசுக்கு தள்ளிகிட்டு வந்து மந்திரியாக்கி மெஜாரிட்டி காமிச்சு தானே ஆண்டீங்க. இதே உங்க காமசாசரும் பின்னே அதே நிலை வந்தப்ப எஸ். எஸ். ராமசாமி படையாச்சிய தள்ளிகிட்டு வந்து தானே மெஜாரிட்டி காமிச்சு ஆட்சில பெவிக்கால் போட்டு ஒட்டிகிட்டீங்க. அப்ப கேட்டப்ப தமிழ்நாட்டு மக்களுக்கு கூட்டனின்னா பிடிக்காதுன்னு சொல்லி வச்சதே நீங்க தானே...

போங்கடா போங்கடா ரொம்ப ஆடாதீங்க. கலைஞரே உங்களுக்கு இப்ப சொல்றது என்னான்னா... ஊக்கூம் நாங்க சொல்லி என்னாத்த கேட்டீங்க போங்க. இருந்தலும் சொல்றோம். நடந்தது நடந்து போச்சு. இனி காங்கிரஸ்காரனுக்கு நீங்க 48 சீட் 50 சீட்டுன்னு குடுத்தா நாம கூட்டனி பேரத்திலே ஜெயிச்ச மாதிரி தான். ஆனா அது தான் உண்மையான தோல்வியா முடியும். ஏன்னா நம்ம பயலுவ சும்மா இருக்க மாட்டானுவோ.. நக்கலா சிரிப்பானுங்க. அவனுங்க உள்ளடி வேலை பார்ப்பானுங்க. நமக்கு தோல்வி தான் மிஞ்சும்.

இதே நீங்க 60 சீட்டுன்னு விட்டு கொடுத்தா நம்ம பயலுங்க ஓட்டு போடுவானுங்களே தவிர இறங்கி வேலை எல்லாம் செய்ய மாட்டானுங்க. அப்படியே செஞ்சாலும் அதிலே ஒரு உணர்வு இருக்காது. அப்பவும் காங்கிரஸ்காரன் நமக்கு உள்ளடி வேலை தான் பார்ப்பான். ஏன்னா அவனை பொறுத்தவரை திமுகவும் ஒன்னு தான் அதிமுகவும் ஒன்னு தான். எவன் முதுகாவது கிடைச்சா போதும். அதனால நம்மை விட அதிமுக அதிகமா ஜெயிச்சா அவனுங்க பின்னாடி போய் கூட்டனி ஆட்சின்னு கூவ போயிடுவானுங்க. அதானால அவனுங்க இழக்க எதும் இல்லை. (இதெ பாராளுமன்ற தேர்தல்னா... கோலெடுத்டா குரங்கு ஆடுவது போல ஆடுவானுங்க)

அதனால தேவையில்லாத புளிமூட்டையை இறக்கி வச்சிடுங்க. இனி அவனுங்க எங்கயும் போக முடியாது. தனியா நிக்கிற நிலை வரட்டும் அப்ப பாருங்க. அங்க சீட்டு கேட்க கூட நாதி இருக்காது. எதுக்கு தோற்பதுக்கு பணம் செல்வழிக்கனும்னு வாயை மூடிகிட்டு கிடப்பானுங்க. இல்லாட்டி கட்சி கொடுக்கும் பணத்திலே ஆட்டைய போட்டோமா செட்டில் ஆனாமான்னு ஒரு கும்பல் ஆடிகிட்டு இருக்கும். மூன்றாவது அணி அமைச்சானுங்கன்னா அதாவது தேமுதிக வச்சுகிட்டு அதும் திமுகவுக்கு நல்லது தான். கிளின் ஸ்வீப் வெற்றி தான் நமக்கு. அதிமுக கிட்டே போனா அப்ப இருக்கு வேற கச்சேரி. சீமான், வைக்கோ, கம்யூனிஸ்ட் எல்லாம் என்னா பண்ணும்னு அப்ப பார்ப்போம். தா. பாண்டியனை விடுங்க. அது அதிமுக தான். அதிமுகவின் ராஜதந்திரம் பலரை இது போல பல கட்சில வச்சிருக்கு.அத்தனை ஏன் வலையுலகில் கூட வச்சிருக்கு. தம்பி உனாதானா எல்லாம் அதிமுகவின் தீர கரும்புலி கூட்டம் தான். இப்படியே காங்கிரசை நாம இந்த தடவை புடிச்சு லாரி ரெட்டை டயர் இடுக்கிலே விட்டுட்டா இன்னும் 40 வருஷம் வாயை மூடிகிட்டு சக்கர வண்டில உட்காந்துகிட்டு கையால உந்தி தள்ளிகிட்டு நம்ம கூட வருவானுங்க.

சப்ஜக்ட் நம்பர் 1, உனக்கு ஒன்னே ஒன்னு சொல்லிக்கிறேன். நாங்க ஆதரிச்சாலும் தீவிரமா ஆதரிப்போம். எதிர்த்தோம்னா எப்படி எதிர்ப்போம்னு உங்க ஆயா சமாதில போய் நின்னு கேட்டுபாரு. சின்ன புள்ள விட்ட வெள்ளாம ஊடு வந்து சேராதுன்னு சொல்லுவாய்ங்க. நீ பேயாம இருக்கனும் இனிமே. ஆமா சொல்லிபுட்டேன்.
அட இதல்லாம் ஏன் எங்க சொல்லிகிட்டு இருக்கேன். ஆங் இன்னிக்கு எங்க தளபதி பிறந்த நாள். ஒரு நல்ல நாள் திருநாள்ல தான் நாங்க மைக்கு போட்டு அரசியல் பேசுவோம் அதான் எங்க கட்சி பாலிசி. அதனால தான் மைக்கு கிடைச்ச உடனே காங்கிரஸ் கோமணத்தை கிழிச்சு எங்க தளபதிக்கு வாழ்த்து சொன்னேன். வாருங்கள் தளபதி பதவி ஏற்க!