கடந்த பிப்ரவரி முதல் தேதி எங்கள் தலைவர் டெல்லி சென்ற போது ஆரம்பித்த தேர்தல் திருவிழா இன்று ஒரு மிக முக்கியமான ஒரு கட்டத்தை திருப்பத்தை சந்தித்து இருக்கின்றது. பிப்ரவரி முதல் தேதி அன்று எங்கள் தலைவர் சோனியாவை சந்தித்த போது காங்கிரஸ் ஒரு குழு அமைக்கும் அந்த குழு தான் முடிவெடுக்கும் என சொல்லப்பட்டது. அப்போது திமுக தொண்டர்களிடம் ஒரு விதமான சோர்வு. ராகுல் பார்முலா கடைபிடிக்கப்படும் என சொல்லப்பட்டது. ஆக அப்போதே திமுக தொண்டர்களுக்கு ஒரு மாதிரியாக புரிந்து விட்டது. ராகுல் என்கிற பையன் எடுத்த முடிவுகள் இது வரை இந்திய அரசியலிலோ, காங்கிரஸ் கட்சி விவகாரத்திலோ அல்லது சமூகத்திலோ எந்த வித "பாஸிட்டிவ்" முடிவையும் கொடுத்ததில்லை. கொடுக்க போவதும் இல்லை என்பது அரசியல் நோக்கர்களுக்கு தெரியும். பறந்து பறந்து வந்து ஹைதராபாத் பிரியாணி சாப்பிடவும், கோவா, குமரகம் போன்ற பகுதிகளுக்கு சென்று உல்லாச வாழ்க்கை வாழ்வதற்குமான ஒரு விடலைப்பையன் (இனி பையன் என்று கூட சொல்ல கூடாது. ஒரு நடுத்தர வயது மனிதர்) என்றே மக்களின் புரிதலில் இருக்கும் நபர் அவர். அதை நம்பி அவர் காங்கிரஸ் தமிழ்நாட்டில் அபார வளர்ச்சி அடைந்து விட்டது என சொன்னதை நம்பி மூழ்கிய காங்கிரஸ் கப்பலை தூக்கி நிப்பாட்டிய சோனியாவும் தலையாட்டி வைத்தது தான் ஆச்சர்யம். பீகார் போன்ற நிலை தமிழகத்திலும் வர வேண்டும் என விதி இருக்கும் போது யார் என்ன செய்ய முடியும்.
இதனிடையில் இங்கு இருந்த அரசியல் அனாதை ஆனந்தன்களான இளங்கோவன், மற்றும் யுவராஜா போன்ற சிறுவர்களின் பேச்சுக்களும் திமுக தொண்டார்களை கொதிப்படைய செய்தது. முதல் கட்ட பேச்சுவார்த்தை இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தை அனைத்திலும் காங்கிரஸ் தன் தகுதிக்கு மீறிய ஆசைகளை அள்ளித்தெளிக்க ஆரம்பித்தது. ஆனால் அந்த ஐவர் குழுவில் இருந்த ஐவருக்கும் நன்கு தெரியும். இதே திமுக தவிர்த்து அதிமுக விடம் இப்படி எல்லாம் பேசிவிட்டு சிதம்பரம் திருச்சி விமானநிலையம் பக்கம் வந்து இறங்க முடியுமா என்று. அவர் ஏற்கனவே அதிமுக விட அடிவாங்கியவர். அது நடந்து நாள் ஆகிவிட்டதால் மறந்து விட்டார் என்றே நினைக்கிறேன். விஷயத்துக்கு வருவோம். இப்படியாக ராகுல் பார்முலா என்னும் சனி பிடித்து ஆட்டத்தொடங்கியது காங்கிரசை. திமுக தொண்டர்களுக்கோ இந்த சுமை தன் முதுகில் இருந்து இறங்கி தொலைத்தால் போதும் என்கிற மனோநிலை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போனது.
இதன் நடுவில் இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தையில் துரைமுருகன் நக்கலடித்தார் என ஜூவி எழுதியது. விஷயம் அறிந்த வட்டாரங்கள் இன்னும் மோசமாக கூட சொல்கின்றனர். அது நமக்கு தேவையில்லாத விஷயம். ஒட்டு மொத்த திமுக தொண்டர்களின் கருத்தை தானே துரைமுருகன் சொல்லியிருப்பார்.(இந்த வார்த்தை எங்கோ கேட்ட மாதிரி இருக்கின்றதா?)
உடனே குலாம்நபி ஆசாத வந்தார். பேசி எல்லாம் முடிவாகிடும்னு நினைச்சாங்க. அப்பவும் திமுக தொண்டர்களிடம் சோர்வுதான். அய்யோ கூட்டனி நீடிக்க கூடாதேன்னு. சும்மாவா பின்னே. அவன்வன் கஷ்ட்டப்படு உழைப்பான். இவனுங்க நோகாம நுக்கு தின்று விட்டு போவதோடு இல்லாமல் நம்மையே திட்டுவார்கள் என்கிற அதீத எரிச்சல். எங்கள் தலைவருக்கு பலமே தொண்டர்கள் தான். தொண்டர்கள் மனநிலையை நன்கு புரிந்து வைத்து இருப்பவர். 60 சீட் வரை ஒதுக்குவதாக அப்போது சொன்னாலும் அவர் மனநிலை அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்பது மாத்திரம் நன்கு புரிந்தது.
இதற்கிடையில் விசயகாந்து திமுக தென்மண்டல அமைப்பு செயலர் அஞ்சாநெஞ்சன் வழிகாட்டுதலில் திரிசங்கு நிலைக்கு வந்து விட அதுவும் ஒரு முட்டுகட்டையாக இருந்தது. காங்கிரசை கழுத்தறுக்க வேண்டும். அதிமுக பக்கமும் போக கூடாது. நம் கூட்டனியிலும் இருக்க கூடவே கூடாது. இத்தோடு அது அழிந்து போகவேண்டும் என திமுக தலைமை முடிவெடுத்துவிட்டது என்றே நினைக்கிறேன். உடனே அழகிரி அண்ணன் விசயகாந்தை பற்றி பேட்டி கொடுத்தார். ஒன்று தனியே நில். அல்லது அதிமுக பக்கம் ஓடிவிடு. காங்கிரசுக்கு நாங்கள் கழுத்தறுக்க வேண்டிட காலம் கனிந்து வர நீ ஒரு நிலைப்பாடு எடு என சொல்லாமல் சொல்வது போல நேற்று ஒரு பேட்டி கொடுத்தார். "அவர் ரோசம் உள்ளவர். மானம் உள்ளவர்" என்கிற ரீதியில். அதல்லாம் என்ன விலை என்று கேட்டுகொண்டே விசயகாந்து அதிமுக குட்டையில் போய் குதித்தார். முடிந்தது எல்லாம் முடிந்தது. நேற்று இரவு இதல்லாம் நடந்து கொண்டிருக்கும் போதே விடியல்காலை தலைவர் அறிக்கை வந்துவிடுகின்றது. காங்கிரஸ் பற்றி பேச்சுவார்த்தையில் நடந்த விஷயம் எல்லாம் வருகின்றது. தொண்டர்கள் உற்சாகம் தாங்க முடியவில்லை.
அறிவாலயத்தில் கூட்டம் அலைமோதுகின்றது. 15000 பேர் விருப்ப மனு கொடுக்கின்றனர். இன்று மாலை 5 மணிக்கு திமுக உயர்நிலை செயல்திட்ட கூட்டம் கூடுகின்றது என்கிற செய்தி எல்லா திமுக தொண்டனுக்கும் பரவுகின்ரது. அத்தனை வேலையும் விட்டுவிட்டு சன் செய்திகள், கலைஞர் செய்திகள் பார்க்க தொடங்குகின்றான். வெடிகள் வாங்கி குவிக்கின்றான். சென்னைக்கு தெரிந்தவர்களுக்கு போன் செய்கின்றான். இவனுக்கு தெரிந்த அதே செய்திகள் தான் எல்லோரும் சொல்கின்றனர். மாலை 5 மணிக்கு கூட்டம் தொடங்கியாகிவிட்டது. நகம் கடிக்கின்றான். எல்லா சேனலும் மாற்றி மாற்றி பார்க்கின்றான். ஆறு ஆகியது. 6.30 ஆகியது. இவனுக்கு இருப்பு கொள்ளவில்லை. பொதிகை கூட மாற்றி பார்க்கின்றான். இதனிடையே சில சில போன்கள். "தான் அவசர வேலையாக பஸ்ஸில் பயணம் செய்வதாகவும் எந்த செய்தியாக இருந்தாலும் போன் செய்யுமாறும் போன் செய்கின்றனர். இவன் நகம் கடித்தே விரலை சின்னதாக்கி கொள்கின்றான்.
பொதிகையில் ஜாஜிருசேனும், அரித்வாரமங்களமும் தனிஆவர்தனத்தில் பின்னி பெடலடுப்பது கூட இவனுக்கு பிடிக்கவில்லை. ஒரு வழியாக சன் செய்திகள் மெயின் செய்திகளில் தற்போது வந்த செய்தி என்று அந்த இனிப்பான செய்தி வருகின்றது. காங்கிரசுடன் கூட்டனி இல்லை. மத்திய அமைச்சரவையில் இருந்து விலகி விடுவது. துள்ளி குதிக்கின்றான். வெடி வெடிக்கின்றான். ஊரெங்கும் வெடி சத்தம். ஆட்டோவில் மைக் கட்டி "உங்கள் ஒட்டு உதயசூரியனுக்கே" என்னும் சத்தம் காதை கிழிக்கின்றது.
தலைவா!!!!! உனக்கு எங்கள் நன்றிகள். ஒரு தொண்டனின் ஆசையை பூர்த்தி செய்தாயே அது போதும். உடனே திமுக விருப்பமனு தாக்கல் செய்யும் தேதி இன்னும் இரண்டு நாட்களுக்கு தள்ளி வைக்கப்படுகின்றது.
இனி காங்கிரசில் இருந்து யாராவது சிவகங்கை சின்னபையன்கள் பேச்சு வார்த்தைக்கு வரலாம். எதுவும் நடக்கலாம்.முள்ளும் மலரும் கிளைமாக்ஸ் போல கூட இருக்கலாம். ஆனால் தலைவரே எங்கள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்தாயே அது போதும் தலைவா. உனக்கு 150 சீட்டுகள் கொண்டு வந்து காலடியில் கொட்டுகின்றோம். நாங்கள் இருக்கின்றோம் தலைவா. நீ தைரியமா இரு. நாங்கள் இனி எப்படி தேர்தல் வேலை செய்ய போகின்றோம் என்பதை மட்டும் உட்காந்து பார் தலைவா!
இதிலே இன்னும் ஒன்றும் சொல்லிக்கொண்டாக வேண்டும். இந்த குபீர் ஈழ ஆதரவாளிகள் எல்லாம் ரொம்ப சந்தோஷம் அடைய எதும் இல்லை இதிலே. ராஜீவ்காந்தியை ஒரு இந்திய பிரஜையை இந்திய நாட்டில் அதும் தேர்தல் நேரத்தில் தமிழ்நாட்டில் வந்து கொன்றது, அதனால் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தது எதையும் நாங்கள் மறக்க போவதில்லை. அதனால் உடனே நீங்கள் ரொம்ப ஆடாதீங்க. அறுந்து போன வாலை ஒட்டுகிட்டு ஆட்டிகாமிக்க வேண்டாம்.
காங்கிரஸ் எங்களை கழுத்தறுக்க நினைத்தாலே நாங்கள் அறுத்து விடுவோம் என்பதை உணருங்கள். அதையே தாங்க உங்களுக்கும் சொல்கின்றோம்!
கலைஞரின் திரைக் கதையில் இன்னொரு அரசியல் நாடகமாகவே தோன்றுகிறது. நாளை காலையில் பிரனாப் முகர்ஜி நேரில் வந்து இந்த நாடகத்தினை முடித்து வைப்பாரென தோன்றுகிறது.
ReplyDeleteஎப்படி பார்த்தாலும் கலைஞரிடம் ராகுல் காந்தியின் அரசியல் வித்தைகள் எடுபட வில்லை என்பதை ஒப்புக் கொண்டாக வேண்டும்.
//பீகார் போன்ற நிலை தமிழகத்திலும் வர வேண்டும் என விதி இருக்கும் போது யார் என்ன செய்ய முடியும்.
ReplyDelete//
தேர்தல் முடிவு வருவதற்கு முன்பே பீகார் நிலை தமிழகத்திற்கு வந்து விட்டது என்று தி.மு.க அனுதாபியாக இருந்தும் நீங்கள் சொல்வது ஆச்சரியமாக உள்ளது.
loosu piyaa thokka porathu neenga than
ReplyDeleteவாங்க சரவண குமார் நன்றி! @சதுக்க பூதம்! நல்ல நகைச்சுவையா பேசுவதா நினைச்சு நம்ம தமிழ்நாட்டை பீகாரோட கம்பேர் பண்ண எப்படி மனசு வந்துச்சு உங்களுக்கு. நான் சொன்னதின் அர்த்தம் உங்களுக்கு புரியலையா என்ன?
ReplyDeleteகாங்கிரஸ் : நான் தான் மாப்பிள்ளை. நடுவிரலிலே மோதிரம் போடு
ReplyDeleteதிமுக : நான் தான் மாப்பிள்ளை. நடுவிரலிலே மோதிரம் எனக்கே
தேர்தல் : முஹூர்த்தம் நேரம் ஆச்சி ...ஏப்ரல் 13
திக : மனமுள்ள தலைவா வெளியே வா முடிவு எடு ....
திமுக தொண்டன் : இப்படி உசுப்பேத்தி விடுரனே ...இவனுக்கு என்ன இனி அந்தம்மா சேலையே புடிச்சிட்டு நக்கிட்டு போய்டுவன்
திமுக : காங்கிரஸ்கரா இந்த நடுவிரலே உனக்குத்தான் ...
திமுக தொண்டன் : இப்படி வப்பாட்டி குடும்பம் தலைவரி சீரழித்து விட்டதே ...இனி தலைவர் செருப்பா தேய்வேன் கட்டுமரமா இருப்பேன் டயலாக் ரெடி பண்ணவேணும்.
மக்கள் : ரெண்டுபேரும் சேர்ந்து வந்தாலே நடுவிரல் தான் குடுப்போம் இப்போ ஈசிய வாயிலிலே கொடுத்துடலாம் ஹா ஹா ஹா
எப்படி உங்களால இப்படி தலைப்பெல்லாம் வைக்க முடியுது! ;)
ReplyDelete:)) :((
ReplyDeleteஇனி காங்கிரசில் இருந்து யாராவது சிவகங்கை சின்னபையன்கள் பேச்சு வார்த்தைக்கு வரலாம். எதுவும் நடக்கலாம்.முள்ளும் மலரும் கிளைமாக்ஸ் போல கூட இருக்கலாம். ஆனால் தலைவரே எங்கள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்தாயே அது போதும் தலைவா. உனக்கு 150 சீட்டுகள் கொண்டு வந்து காலடியில் கொட்டுகின்றோம். நாங்கள் இருக்கின்றோம் தலைவா. நீ தைரியமா இரு. நாங்கள் இனி எப்படி தேர்தல் வேலை செய்ய போகின்றோம் என்பதை மட்டும் உட்காந்து பார் தலைவா!
ReplyDelete// நல்ல நகைச்சுவையா பேசுவதா நினைச்சு நம்ம தமிழ்நாட்டை பீகாரோட கம்பேர் பண்ண எப்படி மனசு வந்துச்சு உங்களுக்கு. நான் சொன்னதின் அர்த்தம் உங்களுக்கு புரியலையா என்ன?
ReplyDelete//
நீங்கள் எழுதுவது நன்றாகவே புரிந்தது. சும்மா நக்கலுக்கு தான் கூறினேன். காங்கிரஸ் தனியாக நின்று தனது உண்மையான பலத்தை அறிந்து கொள்ளவேண்டிய நேரமிது.தன் உண்மையான பலத்துக்கு ஏற்றவாறு பிற்காலத்தில் பிற கட்சிகளுடன் கூட்டணி ஏற்படுத்தலாம்.
ஸ்டாலின் சிறந்த நிர்வாகியாக செயல்படுவதாக கேள்விபட்டேன். அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தால் நிர்வாகம், தமிழக தொழில் துறை மற்றும் பிற துறை வளர்ச்சி எபப்டி இருக்கும் என்பதும் அனைவரும் அறிந்ததே.இருக்கும் optionல் நல்ல option தேர்வு செய்தே தமிழக மக்களுக்கு நல்லது
மாயவரத்தில் ராஜ்குமாருக்கு வாய்ப்பில்லை. ம.தி.மு.க மகாலிங்கத்துக்கு சீட் கிடைக்குமா? தி.மு.க கூட்டணியில் யாருக்கு வாய்ப்பு? பா.ம.க வுக்கு போகுமா? உங்கள் கணிப்பு என்ன?
SUMMA MIRATTAL MATTUM THAN SAMATHANA PECHU VAARTHTHAI NADAKKUM, PIRAGU KANGALUM PANIKKUM ITHAYAMUM INIKKUM." அவர் ரோசம் உள்ளவர். மானம் உள்ளவர் " ENA AZHAGIRI SOLLUVATHU NALLA NAGAICHUVAI. IVAI ELLAM IRUNTHIRUNTHAAL UYARMATTA KUZHUVIL T.MARAN ARUGIL UTKAARRNTHU SIRITHUK KONDIRUKKA MAATTAR.
ReplyDeleteKALAIGNARIN SITHU VILAIYATTU
ReplyDeleteதிமுக அடிமைகள் என்றைக்கும் திருந்தமாட்டார்கள் என்பது இந்தப் படுகேவலமான மீசயில் மண்படாத பதிவில் இருந்து தெரிகின்றது. கோடி பெரியார் வந்தாலும் திமுக ஜால்ராக்களை திருத்தமுடியாது
ReplyDeleteஇந்த அனானி நடுநிசிநாய்கள் தொல்லை தாங்கலைப்பா. எந்த நாயும் பேரை வச்சுகிட்டு வந்து சொல்ல மாட்டேங்குது. என்னவோ இதுங்க தான் பெரியாரை எல்லாம் கரைச்சு குடிச்ச மாதிரி.
ReplyDeleteஎப்படி உங்களால இப்படி தலைப்பெல்லாம் வைக்க முடியுது! ;)\\\ இது என் தலைப்பு இல்லை. குமுதம் ஆசிரியர் எஸ் ஏ பி அவர்கள் மறைந்த போது இதே தலைப்பில் எங்கள் தலைவர் குமுதத்தில் எழுதிய கட்டுரையின் தலைப்பு அனானி அய்யா!
ReplyDeleteவாங்க சதுக்க பூதம். நீங்க சும்மா கிண்டலுக்கு தான் சொன்னீங்கன்னு தெரியும். போன வருஷம் ஏப்ரல் மாதமே மயிலாடுதுறை க்கு ராஜ்குமார் (காங்கிரஸ்) எம் எல் ஏ வாக வரக்கூடாது என்றும் அடுத்து யார் வர வேண்டும் என்றும் ஒரு பதிவு இதோ "மயிலாடுதுறையின் அடுத்த சட்ட மன்ற உறுப்பினர் இவர் தான் என்னும் தலைப்பில் எழுதியிருக்கின்றேன். நேரமிருப்பின் வாசித்துப்பார்க்கவும்.
ReplyDeleteஅவசரப்படாதீங்க. உங்க தலைவரின் முடிவுகள் முடிவான முடிவல்ல. அவை கடைசி நேர மாறுதல்களுக்குட்பட்டவை தான்.
ReplyDeleteஅந்த பதிவை பார்த்தேன். உண்மை நிலையை விளக்கும் அருமையான பதிவு. இனியாவது மாயவரத்துக்கு விடிவு காலம் வருமா என்று பார்ப்போம்
ReplyDeleteippa eppadi marupadi pakku pottutingala?
ReplyDeleteippo keezha thuppuna paakku thoolai, marupadiyum vaayile eduthu pottukiteengale? :-)
ReplyDeleteKaari thuppinatha valichu marupadiyum vaaila pottukkuveenga pola????
ReplyDeleteItha publish pannunga pls
Kaari thuppunatha valichu marupadium vaaila pottukka poreenga pola.
ReplyDeleteEnna kodumada saami....
Kaari thuppunatha valichu marupadium vaaila pottukka poreenga pola.... kevalama illayaa????
ReplyDeleteKaari thuppunatha valichu marupadium vaaila pottukka poreenga pola..
ReplyDeleteVekkamaavae illaya ungalukku....
Intha polappukku ___________________???!!!!
Anonymous'a naai solra neenga miga miga kevalamaanavan thaana.....
karunanidhi: COngress kootaniyil irrukkumm aaaaanaaaa irrukathu!!!!
ReplyDeleteAbi Appa: @&@*$(@#&$(#*$#$#$????
அண்ணாந்து கொண்டு துப்பவேண்டாம்.
ReplyDeleteஇப்ப துப்புன பாக்க வாயில போட்டு குதப்புவீங்களா அண்ணே?
ReplyDeleteகாறித்துப்பிய பாக்குத்தூளை மீண்டும் தேடிப்பிடித்து பல்லிடுக்கில் வைத்துக்கொண்டீர்கள் போல? இனிமேலும் கண்மூடித்தனமாக அரசியல்வியாதிகளை, குறிப்பாக உங்கள் தலைவரை, நம்புவதை விட்டு கொஞ்சம் உங்க மூளையை உபயோகிங்க.
ReplyDeleteஇந்த பதிவை எடுத்துவிடுங்கள்.
ReplyDeleteகாங்கிரஸ் 63 இடங்களில் போட்டி: மு.க.அழகிரி
புதுடெல்லி, மார்ச் 8,2011
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 63 இடங்களில் போட்டியிடும் என்று மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரித்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு 63 தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய ஒப்புக் கொள்ளப்பட்டதை அடுத்து, திமுக கூட்டணியில் கடந்த நில நாட்களாக நிலவி வந்த 'சிக்கல்'கள் செவ்வாய்க்கிழமை முடிவுக்கு வந்தது. (விரிவான செய்தி: காங்கிரஸுக்கு 63 தொகுதிகள்: முடிவுக்கு வந்தது திமுக கூட்டணிச் சிக்கல்!)
தொகுதிப் பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் - திமுக இடையே சமரசம் ஏற்பட்டதாக, டெல்லியில் நிருபர்களிடம் தமிழகத்துக்கான காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் குலாம் நபி ஆசாத் அறிவித்தார்.
அப்போது உடன் இருந்த மத்திய அமைச்சர்கள் மு.க.அழகிரி, தயாநிதி மாறன் ஆகியோரிடம் காங்கிரஸ் - திமுக இடையிலான சிக்கல்கள் களையப்பட்ட விதம் குறித்து நிருபர்கள் கேட்டனர்.
எந்த வகையான ஃபார்முலா கையாளப்பட்டது என நிருபர்கள் கேட்டதற்கு, "வின்னிங் ஃபார்முலா" என்றார் மு.க.அழகிரி.
அதுதொடர்பாக விவரிக்குமாறு கேட்டதற்கு, "தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 63-ல் காங்கிரஸ் போட்டியிடும். திமுக - காங்கிரஸ் கூட்டணி... வெற்றிக் கூட்டணி," என்றார் அழகிரி.
ஜயலலிதா ஜயிக்க வேறயாரும் வேண்டாம், திமுகா தானை தலைவர் போதும். சின்ன நம்பிக்கை இருந்தது. ஹம்.....
"வின்னிங் ஃபார்முலா" என்றார் மு.க.அழகிரி. யாருக்கு..............?????????
ReplyDeleteகாரி துப்பிய பாக்கு தூளா திரும்ப நக்க போய்டங்களே...
ReplyDeleteஇப்போ மூஞ்சிய எங்கே கொண்டுபோய் வெப்பீங்க..
hello abi appa pallidukkula mattina paakka thuppittu marupadiyum eduthu vaayila poda aruvaruppa illiya avamanama illiya enna koduma abiappa ithu
ReplyDeletepallu idukula maatina paakka thupitu marupadiyum atha vaayila poda aruvaruppa iliyah asinghama iliyah avamanama iliyah...ithellam oru polapu...
ReplyDeleteஅடுத்த பதிவு
ReplyDelete“துப்பிய பாக்குத்தூளைத் தலைவனுக்காக நக்கி எடுப்போம்”
what happened to pakku thul.again it entered ur teeth a ha ha ha ? Good leader...Good follower ...keep it up
ReplyDeleteஅபி அப்பா மயிலாடுதுறை காலி போலிருக்கு:-(
ReplyDeleteகாங்கிரஸுக்கு போயிடுச்சு
அண்ணே, நான் முன்னைய பதிவில் பின்னூட்டியது போல்... மாயூரம் காங்கிரஸுக்கு, பூம்புகார் பா.ம.க-வுக்கு. இனி நம்ம தொகுதியில் ஒரு தி.மு.க காரணும் களப்பணி செய்ய மாட்டான்... இம்முறையும் சங்குதான்.
ReplyDeletehahahah... innna thalaivere.... entha comments publish pannala... bayama?
ReplyDeleteHI DMK INMAI THN KANDIPA MUNNAIRUM
ReplyDelete