நல்ல நேரத்திலே தான் எனக்கு இந்த கம்பியூட்டர் புட்டுகிச்சு. இல்லாட்டி நான் திட்டும் திட்டிலே காங்கிரஸ் கட்டியிருக்கும் கோவணமும் கிழிஞ்சு 234 துண்டா ஆகியிருக்கும். பொதுவா அண்ணா காங்கிரசை அடிச்சு காலை உடைச்ச பின்னே யாராவது முதுகிலே உட்காந்து சவாரி செய்வது வழக்கம் தான். அடிச்சு உடைச்ச பாவத்துக்காக எதுனா ஒரு திராவிட கட்சி தூக்கி சுமந்துகிட்டு வந்து கிட்டு இருக்கு. ஆனாலும் அதிலே திமுக காரன் முதுகுன்னா மாத்திரம் ரொம்ப சவுகரியம். வாகா உட்காந்துகிட்டு காதையும் திருகிகிட்டு வரலாம். இந்த தபா ரொம்ப தான் கிள்ளிட்டானுங்கப்பா. தூக்கி கடாசிட்டு போலாமான்னு தோணுது.
பொதுவா கூட்டணி பேச்சுவார்த்தைன்னா காங்கிரஸ் கூட எப்படி இருக்கும்?. டெல்லில இருந்து வருவாங்க போவாங்க. பின்ன மூடி முத்திரையிடப்பட்ட கவர் கொண்டு வந்து கொடுத்துட்டு போயிடுவானுங்க. இதான வழக்கம். இப்ப என்னா புதுசா ஐவர் குழு மண்ணாங்கட்டின்னு. அதுல வேற இளங்கோவன், யுவராஜ்ன்னு ஒருத்தனும் அந்த பாழாய் போன குழுவிலே இல்லைன்னு சத்தியமூர்த்தி பவன்ல அடிதடி, உண்ணாவிரதம் எல்லா கூத்தும் நடக்குது. நடந்துச்சு. நடக்கவும் போவுது. புலிகேசி படத்துல வர்ர மாதிரி அந்த இத்தியமூர்த்தி பவன் என்பதே சண்டை போடும் களமாகத்தான் காங்கிரஸ்காரனுங்களுக்கு இருக்கு. பேசாம அதை இடிச்சுட்டு அதிலே ஆடுதொட்டி வச்சுடலாம். (தமிழக அரசு கவனிக்க, இது இலவச அறிவுரை இல்லை. ஒருவேளை செயல்படுத்தினால் எனக்கு சார்ஜ் கொடுக்கனும்) .
நான் இந்த பதிவிலே 234ல் 31 போச்சுன்னா 203 அதிலே 3 போச்சுன்னா 200 அதிலே பத்து போச்சுன்னா 190 ன்னு கணக்கு வழக்கு எல்லாம் போட போவதில்லை. அதல்லாம் மத்தவங்க போட்டுகிடட்டும். ரொம்ப சாதாரணமா மனசுக்கு பட்டதை தான் சொல்ல போறேன். கோர்வையா கூட இருக்காது.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
* அன்னை சோனியா கூட்டணி தொடரும் என்று சொன்னால் திமுகவுக்காக உழைக்க தயார். அதே ஒத்துழைப்பை திமுகவினரும் எங்கள் வேட்பாளர்களுக்கு தருவார்கள் என்று நம்புகின்றோம். நடக்காவிட்டால் அதன் பிறகு எங்களின் இன்னொரு முகம் தெரியும்.
*கருணாநிதிக்கு நான் ஒரு கோரிக்கை வைக்கிறேன். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் திட்டத்துக்கு ராஜீவ்காந்தி பெயரை சூட்டுங்கள். இதை கூட செய்யாவிட்டால் உங்களோடு இருந்து என்ன புண்ணியம்?
*இனியும் காங்கிரசை தவிர்த்து விட்டு யாராலும் தமிழகத்தை ஆள முடியாது. ஆட்சியில் பங்கு மட்டும் அல்ல. துணை முதல்வர் பதவியையும் சேர்த்து கேட்ப்போம். அதற்கான தகுதியும் வளர்ச்சியும் எங்களுக்கு இருக்கின்றது.
*வரும் சட்ட மன்ற தேர்தலில் கலைஞர் போட்டியிடக்கூடாது. இளஞர்களுக்கு வழிவிட வேண்டும். ஸ்டாலினிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு அவர் ஒதுங்கிக் கொள்ள வேண்டும்.
*ஈழத்தமிழர்கள் மீது எங்களுக்கு தான் உண்மையான அக்கறை உண்டு.
* இளைஞர் காங்கிரஸ் என்பது தனி அமைப்பு. இதற்கென தனிக்கொள்கைகள் உண்டு. அதன்படித்தான் எங்கள் செயல்பாடுகள் இருக்கும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மேலே இருப்பது எல்லாம் சப்ஜக்ட் நம்பர் 3 சொன்னது. அதாவது வசூல்ராஜா படத்திலே மெடிக்கல் பாடம் எடுக்கும் போது சொல்லுவாங்களே அது போல மேலே சொன்னது எல்லாம் சப்ஜக்ட் # 3 சொன்னது. சப்ஜக்ட் # 2 ன்னு ஒன்னு இருக்குது. அது 234 தொகுதி கூட வேண்டாம். அதிலே பாதி வேண்டும் என கேட்கிறது. என்ன எழவுடா இது. கட்சி கட்டுப்பாடுன்னா என்னான்னு தெரியாத ஜென்மங்கள். இப்ப கடைசியா தொண்னூறு சீட்டு வேண்டுமாம். எது அந்த எம்ப்ளத்தி ஒம்போதுக்கு அடுத்து வருமே அந்த தொண்னூறு தான். எண்ணத் தெரியாதவனுக்கு எண்ணூறு புளியங்கொட்டை குடுத்த கதையால்ல ஆகிடும். தொண்னூறு குடுத்தா அதை வச்சிகிட்டு என்னடா செய்வீங்க? இதிலே கணக்கு வழக்கெல்லாம் கச்சிதமா சொல்றீங்க. முதல்ல தமாகாவுக்கு 7 சதம் இருந்துச்சாம். காங்கிரசுக்கு ஐந்து சதம் இருந்துச்சாம். கூட்டினா 12 சதம் வருமாம். இப்ப திடீர்ன்னு சப்ஜக்ட் # 1 செஞ்ச ராஜதந்திரத்தால 20 சதமா உசந்து போச்சாம். எலேய் உங்க லிஸ்டுல இருக்கிற பயலுவ எல்லாம் எங்க ஆளுங்கடா. பத்தாயிரம் குடுத்து ஒரு பதவியும் குடுத்தா எவண்டா போவாம இருப்பான். இப்ப எல்லாம் பறந்து வந்துட்டானுங்க செவுத்துல சுண்ணாம்பு அடிச்சு இடத்தை ரிசர்வ் பண்ணிகிட்டு இருக்கானுங்க அவனுங்க அவனுங்க கட்சிக்கு. போங்கடா போக்கத்த பயலுவலா. இந்த கூத்திலே ஆட்சியிலே பங்கு வேணுமாம். சிவப்பு விளக்கு வச்ச அம்பாசிட்டர் கார்ல ஒழுங்கா உட்கார கத்துகுங்க முதல்ல. துபாய் அபுதாபி ஹைவேஸ்ல லிஃப்ட் கேட்டு குத்த வச்சிருக்கும் பெஷாவர் பட்டான் மாதிரி அம்பாசிட்டர்ல உட்காரும் போதே ஆட்சியிலே பங்கு கேக்குறீங்களே, ஒழுங்கா கார்ல உட்கார தெரிஞ்சா என்ன என்ன கேட்பீங்க?
உடனே டெல்லில நாங்க உட்காரலையான்னு எதிர் வாதம் பண்ண கூடாது. நான் பேசுறது நம்ம நாட்டு தமிழ்நாட்டு கதையை தான். இதோ வரைவுவாக்காளர் பட்டியல் வெளியிட்டாச்சு. எல்லா தாலுக்காபீஸ்லயும் லிஸ்ட் ரெடியாகிடுச்சு. லிஸ்டை எடுத்து பார்த்தா பாதிபய பேர் இல்லை. போன 19, 20 தேதில வாக்காளர் சேர்க்கை முகாம். அங்க போய் என் பெயரை சேர்க்க போனா எங்க கட்சிக்காரன், அதிமுக, பாமக, விசி தவிர ஒருத்தன் இல்லை. அவனவன் தன் கட்சிகாரன் பேர் இருக்குதான்னு பார்த்துட்டு அப்படியே எதிர்கட்சிகாரன் பேர் இருந்தா "அய்யோ ஆப்பீசர் இந்த ஆள் செத்து போயிட்டானே"ன்னு ஒரு பிட்டும் போட்டுட்டு போறான். பின்னால தேர்தல் அன்னிக்கு வந்து 20 சதம் இருக்கு, 14 லட்சம் இருக்குன்னு பீலாவுட்டவன் எல்லாம் அய்யோ ஓட்டு இல்லியே நொட்டிகிட்டு போயிடுச்சேன்னு கத்திட்டு போய் "இதை நான் இந்துல எழுதுவேன், பொந்துல எழுதுவேன்"ன்னு போகவேண்டியது தான். இங்க தான் களப்பணி ஆரம்பிக்குது. உங்களுக்கு இந்த எழவெல்லாம் எங்க தெரிய போவுது. ஒரு காங்கிரஸ் கட்சிகாரனை பார்த்து கேட்டேன். வரைவு வாக்காளர் பட்டியல்ல உன் பேர் இருக்குதான்னு. பளிச்சுன்னு சொன்னான்."நான் டெல்லில கேக்காம எதும் சொல்ல மாட்டேன்"ன்னு. தலையிலே அடிச்சுகிட்டு அப்படின்னா படிவம் ஆறு புல்லப்பண்ணி அதிலே ஒரு போட்டோ ஒட்டி, ஒரு போட்டோ தனியா பின் பண்ணி குடுன்னு. அதுக்கு அவன் என்னைய மேலயும் கீழயும் ஒரு மாதிரியா பார்த்துட்டு போனான். போடா போ.. உன்னை முதுகிலே தூக்கிகிட்டு அலைஞ்சு முப்பது எம் எல் ஏ ஆக்கி வச்சோம்ல... ஆட்சிலயா பங்கு கேக்குற ...உன்னை நொங்கு எடுக்குறோம் பாரு இந்த தடவை.
மத்தியிலே ஆட்சில பங்கு குடுத்தோம்லன்னு பதிலுக்கு பதில் பேசுறான். வேற வழியில்லாம தானே குடுத்தீங்க. தனிமெஜாரிட்டில வந்தா நல்லா குடுப்பீங்களே, உங்களை பத்தி தெரியாதா எங்களுக்கு. ஆனா இங்க தமிழ்நாட்டுல ஆட்சில பங்கு கேட்கிற நிலமையிலா இருக்கீங்க. இதிலே சப்ஜக்ட் #1 பார்முலாவாம். அது என்னங்கய்யா பார்முலா. ஒரு ஒரு ஸ்டேட்டா "காரியம்" பண்ணிகிட்டே வர்ரதா? இதிலே மொத்தமா கிடைக்கும் பிச்சையிலே 3ல் ஒரு பங்கு சப்ஜெக்ட் நம்பர் 1னு ஆட்களுக்கு வேணுமாம். நாங்க எதுக்குடா உள்ளடி செய்யனும் உங்களை தோக்கடிக்க? முதியோர் காங்கிரஸ் போதாதா? அவனவன் கட்சில ஒரு நிலைக்கு வரவே நாப்பது வயசு ஆகுது.நாக்கு தள்ளி போவுது. அப்படி முக்கி முக்கி கட்சிய வளர்த்த நாப்பது வயசுக்காரன் முதியோர் காங்கிரசாம். அவனுக்கு சப்ஜக்ட் நம்பர் 1 ஆளுங்க மரியாதையும் தரமாட்டானுங்களாம். சீட்டும் தரமாட்டாங்கலாம். உங்க வீட்டிலே இருக்கும் அப்பனாத்தா ஓட்டு போடுறாங்களா உங்களுக்குன்னு முதல்ல பாருங்க. பின்ன காட்டலாம் உங்க இன்னும் ஒரு முகத்தை.
ஐவர் குழு முதல்ல சந்திச்சதே அவங்க கட்சி எம் எல் ஏக்களை தான். காங்கிரஸ்காரன் ஒத்துமையை அன்னிக்கு மட்டும் தான் தமிழகம் பார்த்துச்சு. எதுக்கு? எல்லாரும் கோரஸா பாடின ஒரே பாட்டு இதான். "சிட்டிங் எம் எல் ஏ எல்லாருக்கும் சீட் வேணும். எங்களில் சில பேர் தொகுதியை மறு சீரமைப்பு காக்கா தூக்கிட்டு போயிடுச்சு. அதனால அவங்களுக்கு பக்கத்து தொகுதியை கேட்டு வாங்கனும்" ங்கொய்யால.. மீண்டும் மீண்டும் சேவை செய்ய ஆசையாமாம். இப்ப இருக்கும் சிட்டிங் காங்கிரஸ் எம் எல் ஏ யாரையாவது போய் கேட்டு பாருங்க இப்ப. " உங்க கூட்டனிக்கு இருபது சீட்டு தான் கொடுக்க போறாங்களாம். எந்த எந்த தொகுதி வேணும். உங்க கருத்தை சொல்லுங்க"ன்னு கேட்டு பாருங்க. இதுக்கு மாத்திரம் டெல்லில கேட்கனும்னு ஒரு பயபுள்ள சொல்லாது. என் தொகுதி மாத்திரம் எனக்கு வேணும். ஒரே ஒரு தொகுதி காங்கிரசுக்கு குடுத்தா கூட போதும்ன்னு படார்ன்னு பதில் வரும். அய்யோ 90, 100ன்னு கேட்டுகிட்டு கூட்டனியை கெடுத்து தொலைச்சிட போறானுங்க இந்த படுபாவிங்கன்னு இப்ப இருக்குற சிட்டிங் எம் எல் ஏ எல்லாம் கதறிகிட்டு இருக்கானுங்க. இதான் நிலமை. இந்த லட்சனத்துல கட்சி வளர்ந்துடுச்சாம்.
இதே திமுக காரன் கிட்டே இதே கேள்விய கேட்டுபாருங்க. வெற்றி தோல்வி எல்லாம் வீரனுக்கு ஜகஜம். தனியா நில்லுங்க தலைவரே, 234ம் கொண்டாந்து கொட்டுறேன்ன்னு சொல்லுவான். 70 வயசான பழம் எல்லாம் வேட்டிய மடிச்சு கட்டிகிட்டு களத்திலே குதிக்கும். கட்டுடா கொடிய, நடுடா கம்பத்தைன்னு கிளம்பிடும். அதான் உணர்வு. அந்த கழகத்து பழத்துகிட்டே போய் சதவீத கணக்கு எல்லாம் கேட்டா "போங்கடா இவனுங்களா, இப்படி கணக்கு பார்த்தாடா நாங்க 1967ல் ஆட்சியை மிருக பலத்தோட பிடிச்சோம். உழைப்போம், மக்கள் கிட்டே போவோம், செஞ்சதை சொல்வோம். செய்ய போவதை சொல்வோம். மீதிய அவங்க பார்த்துப்பாங்க"ன்னு சொல்லிகிட்டு போய்கிட்டே இருக்கும் அந்த பழம்.இங்க என்னடான்னா நகத்திலே அழுக்கு பட்டா கூட ஆயிரம் தடவை சோப்பு போட்டு கதர் சட்டையிலே அழுக்கு படியாம ஜவுளிகடை பொம்மை மாதிரி நிப்பானுங்க. ஒரே அளவு சட்டை போட்டுகிட்டு எந்த நேரத்திலும் உடைஞ்சி விழுவது மாதிரி நிப்பானுங்க. டேய் அளவு எடுத்து சட்டை தைச்சு போட்டு பழகுங்கடா முதல்ல. அப்பால ஆட்சில இடம் எல்லாம் பார்த்துகிடலாம்.
இதோ எல்லா தொகுதிலயும் எல்லா கட்சிகாரனும் சுவர் விளம்பரத்துக்கு இடம் பிடிச்சுட்டானுங்க. எங்கயாவது ஒரு இடத்துல காங்கிரஸ் பிடிச்சு வச்சிருக்குதான்னு நெஞ்சை தொட்டு சொல்லுங்க. இருக்காது. ஏன்னா எவனும் இல்லை. 14 லட்சம் பேர் இருப்பதா சொல்லும் சப்ஜக்ட் # 1 ன் கம்பனி ஆட்கள் எல்லாம் மெடிக்கல் லீவ் போட்டுட்டு அவனவன் கட்சிக்கு போயிட்டான்.
சப்ஜக்ட் நம்பர் 1க்கு ஒன்னே ஒன்னு சொல்லிக்கிறேன். எங்க தலைவர் தப்பு பண்ணிட்டாரு. 2004 தேர்தல்ல கூட்டு புடலங்காய் சேர்ந்த போதே நீங்க எல்லாரும் உதயசூரியன் சின்னத்துல தான் நிக்கனும்னு சொல்லியிருக்கனும். அப்ப உங்களுக்கு உங்க சின்னத்துல போட்டியிட சொன்னது தான் தப்பா போயிடுச்சு.அப்படியே நாங்க பழக்கி வச்சிருந்தா எங்க கொறடா பேச்சை கேட்டுகிட்டு கிடக்கனும்ன்னு ஒரு நிலைல வச்சிருந்தா சப்ஜக்ட்டு நம்பர் 2 இப்படி பேசியிருக்குமா? சப்ஜக்ட் நம்பர் 2 ஐ விடுங்க. அதும் அங்க இங்கன்னு பிச்சை எடுத்து பார்லிமெண்ட் வரை போயிட்டு வந்துடுச்சு. இந்த சப்ஜக்ட் 3 இன்னும் முளைக்கவே இல்லை. அதுக்குள்ள நம்பர் 1 ஐ நம்பி தன் அரசியல் வாழ்க்கையை கெடுத்துகிடுச்சு. நம்பர் 1 போன இடம் தான் புல்லு முளைக்க மாட்டேங்குதே. பின்ன ஏன் அதை நம்பி மோசம் போவுது ஒரு கூட்டம்ன்னு தான் தெரிய மாட்டேங்குது.
அரசியல் பண்றீங்களா? இல்ல அராஜகம் பண்றீங்களா? ங்கொக்காமக்கா.. சிரிக்காம நீங்க பாட்டுக்கு ஆட்சில பங்கு, ஐந்து அம்சதிட்டம்ன்னு அடுக்கிகிட்டே போறீங்க. அதை எல்லாம் கேட்ட எங்க பயலுவ நவதுவாரம் வழியாவும் சிரிச்சு சிரிச்சு ஒரு ஃப்ளோவிலே ஆன்மாவையும் விட்டுடுறாய்ங்க. பத்து பயபுள்ள உங்க பேச்சு கேட்டு சிரிச்சு சிரிச்சு செத்து போயிட்டானுவ. நாங்க போடும் 45 சீட்டு எடுத்துகுங்க. மீதி எத்தினில நிக்கனுமோ அங்க நில்லுங்க. அங்க அதிமுக கூட கூட்டனி வச்சுகுங்க. இதல்லாம் உங்களுக்கு புதுசா என்ன? உங்க கட்சி துணை அமைப்பு தானே I.N.T.U.C போன தபா அதிமுக வோட தனியா கூட்டனி வச்சு அதுல ஒரு தொகுதி ஜெயிச்சும் காமிச்சுதே. இந்த கன்றாவி எல்லாம் வேற எந்த கட்சிலயும் நடக்காதுடா சாமீ. தலைமைக்கு கட்டுபடுவதுன்னா என்னான்னு உங்க கிட்டதாண்டா கத்துக்கனும் இந்த உலகம்.
உங்களை என்னா திட்டினாலும் மனசு அடங்க மாட்டேங்குது. தொண்டை நனைய தண்ணி குடிச்ச திருப்தியே இல்லியே. என்னாத்த பண்ண? தமிழ்நாட்டுல கூட்டனி ஆட்சின்னா மக்களுக்கு பிடிக்காதுன்னு சொன்னா பதிலுக்கு பதில் பேசுற நீ. இதே 1952ல நீங்க மைனாரிட்டியா ஆன போது கூட அப்ப கம்யூனிஸ்டுகள் கூட கூட்டனி சேராம உங்க ராசாசி மாணிக்கவேல் நாயக்கரை காங்கிரசுக்கு தள்ளிகிட்டு வந்து மந்திரியாக்கி மெஜாரிட்டி காமிச்சு தானே ஆண்டீங்க. இதே உங்க காமசாசரும் பின்னே அதே நிலை வந்தப்ப எஸ். எஸ். ராமசாமி படையாச்சிய தள்ளிகிட்டு வந்து தானே மெஜாரிட்டி காமிச்சு ஆட்சில பெவிக்கால் போட்டு ஒட்டிகிட்டீங்க. அப்ப கேட்டப்ப தமிழ்நாட்டு மக்களுக்கு கூட்டனின்னா பிடிக்காதுன்னு சொல்லி வச்சதே நீங்க தானே...
போங்கடா போங்கடா ரொம்ப ஆடாதீங்க. கலைஞரே உங்களுக்கு இப்ப சொல்றது என்னான்னா... ஊக்கூம் நாங்க சொல்லி என்னாத்த கேட்டீங்க போங்க. இருந்தலும் சொல்றோம். நடந்தது நடந்து போச்சு. இனி காங்கிரஸ்காரனுக்கு நீங்க 48 சீட் 50 சீட்டுன்னு குடுத்தா நாம கூட்டனி பேரத்திலே ஜெயிச்ச மாதிரி தான். ஆனா அது தான் உண்மையான தோல்வியா முடியும். ஏன்னா நம்ம பயலுவ சும்மா இருக்க மாட்டானுவோ.. நக்கலா சிரிப்பானுங்க. அவனுங்க உள்ளடி வேலை பார்ப்பானுங்க. நமக்கு தோல்வி தான் மிஞ்சும்.
இதே நீங்க 60 சீட்டுன்னு விட்டு கொடுத்தா நம்ம பயலுங்க ஓட்டு போடுவானுங்களே தவிர இறங்கி வேலை எல்லாம் செய்ய மாட்டானுங்க. அப்படியே செஞ்சாலும் அதிலே ஒரு உணர்வு இருக்காது. அப்பவும் காங்கிரஸ்காரன் நமக்கு உள்ளடி வேலை தான் பார்ப்பான். ஏன்னா அவனை பொறுத்தவரை திமுகவும் ஒன்னு தான் அதிமுகவும் ஒன்னு தான். எவன் முதுகாவது கிடைச்சா போதும். அதனால நம்மை விட அதிமுக அதிகமா ஜெயிச்சா அவனுங்க பின்னாடி போய் கூட்டனி ஆட்சின்னு கூவ போயிடுவானுங்க. அதானால அவனுங்க இழக்க எதும் இல்லை. (இதெ பாராளுமன்ற தேர்தல்னா... கோலெடுத்டா குரங்கு ஆடுவது போல ஆடுவானுங்க)
அதனால தேவையில்லாத புளிமூட்டையை இறக்கி வச்சிடுங்க. இனி அவனுங்க எங்கயும் போக முடியாது. தனியா நிக்கிற நிலை வரட்டும் அப்ப பாருங்க. அங்க சீட்டு கேட்க கூட நாதி இருக்காது. எதுக்கு தோற்பதுக்கு பணம் செல்வழிக்கனும்னு வாயை மூடிகிட்டு கிடப்பானுங்க. இல்லாட்டி கட்சி கொடுக்கும் பணத்திலே ஆட்டைய போட்டோமா செட்டில் ஆனாமான்னு ஒரு கும்பல் ஆடிகிட்டு இருக்கும். மூன்றாவது அணி அமைச்சானுங்கன்னா அதாவது தேமுதிக வச்சுகிட்டு அதும் திமுகவுக்கு நல்லது தான். கிளின் ஸ்வீப் வெற்றி தான் நமக்கு. அதிமுக கிட்டே போனா அப்ப இருக்கு வேற கச்சேரி. சீமான், வைக்கோ, கம்யூனிஸ்ட் எல்லாம் என்னா பண்ணும்னு அப்ப பார்ப்போம். தா. பாண்டியனை விடுங்க. அது அதிமுக தான். அதிமுகவின் ராஜதந்திரம் பலரை இது போல பல கட்சில வச்சிருக்கு.அத்தனை ஏன் வலையுலகில் கூட வச்சிருக்கு. தம்பி உனாதானா எல்லாம் அதிமுகவின் தீர கரும்புலி கூட்டம் தான். இப்படியே காங்கிரசை நாம இந்த தடவை புடிச்சு லாரி ரெட்டை டயர் இடுக்கிலே விட்டுட்டா இன்னும் 40 வருஷம் வாயை மூடிகிட்டு சக்கர வண்டில உட்காந்துகிட்டு கையால உந்தி தள்ளிகிட்டு நம்ம கூட வருவானுங்க.
சப்ஜக்ட் நம்பர் 1, உனக்கு ஒன்னே ஒன்னு சொல்லிக்கிறேன். நாங்க ஆதரிச்சாலும் தீவிரமா ஆதரிப்போம். எதிர்த்தோம்னா எப்படி எதிர்ப்போம்னு உங்க ஆயா சமாதில போய் நின்னு கேட்டுபாரு. சின்ன புள்ள விட்ட வெள்ளாம ஊடு வந்து சேராதுன்னு சொல்லுவாய்ங்க. நீ பேயாம இருக்கனும் இனிமே. ஆமா சொல்லிபுட்டேன்.
அட இதல்லாம் ஏன் எங்க சொல்லிகிட்டு இருக்கேன். ஆங் இன்னிக்கு எங்க தளபதி பிறந்த நாள். ஒரு நல்ல நாள் திருநாள்ல தான் நாங்க மைக்கு போட்டு அரசியல் பேசுவோம் அதான் எங்க கட்சி பாலிசி. அதனால தான் மைக்கு கிடைச்ச உடனே காங்கிரஸ் கோமணத்தை கிழிச்சு எங்க தளபதிக்கு வாழ்த்து சொன்னேன். வாருங்கள் தளபதி பதவி ஏற்க!
வலையுலகத்துல இருக்கற ஒரே ஒரு காங்கிரஸ்காரரும் இப்ப புது மாப்பிள்ளை....யாரு உங்க கேள்விக்கெல்லாம் பதில் சொல்லுவா!! :)
ReplyDeleteமத்தியிலே ஆட்சில பங்கு குடுத்தோம்லன்னு பதிலுக்கு பதில் பேசுறான். வேற வழியில்லாம தானே குடுத்தீங்க. தனிமெஜாரிட்டில வந்தா நல்லா குடுப்பீங்களே, உங்களை பத்தி தெரியாதா எங்களுக்கு.
ReplyDeleteகடந்த 5 வருஷமா, தமிழ்நாட்டில் கூட திமுக மைனாரிட்டி தான். காங்கிரஸ் தயவால தான் ஆட்சி நடத்தினார்கள். நீங்க ஏன் குடுக்கலை?
//..மத்தியிலே ஆட்சில பங்கு குடுத்தோம்லன்னு பதிலுக்கு பதில் பேசுறான். வேற வழியில்லாம தானே குடுத்தீங்க. தனிமெஜாரிட்டில வந்தா நல்லா குடுப்பீங்களே, உங்களை பத்தி தெரியாதா எங்களுக்கு. ..//
ReplyDeleteஎல்லாம் சரி, இது எல்லாம் எப்படி வந்துச்சு?
2ஜி, ராஜா, கனி, ராடியா, டேப் எல்லாம் இருக்கபோய் தான இத்தனை கேட்டல்லும் இதுக்கு மேல கேட்டாலும் நவ துவரத்தையும் சாத்திகிட்டு இருக்கங்க?
எப்படி வேறு வழியில்லாம அப்ப அவங்க கொடுத்தாங்களோ... அதேபோல் இப்ப இவங்க கொடுப்பங்க .. இல்லனா.. ஜெயிச்சாலும் ..356/360 தெரியுமில்ல .. அப்புரம் ராசாவுக்கு பக்கத்து ரூம்மில் எல்லாரும் போய் உக்காரவேண்டியது தான்..
இது உங்களுக்கு தெரியாம இருக்கலாம்...உங்க தலைமைக்கு நல்ல தெரியும் ...அதனால பழய நினைப்புல மட்டும் இருக்கதிங்க..
நான் ஒன்றும் காங்கிரஸ் தொண்டனோ, அனுதாபியோகூட இல்லை. ஆன போன மந்திரி சபையை பார்த்து செம கடுப்பனவன். தேர்தலுக்கு உழைக்க ஓட்டு போட எல்லாரும் வேணும். ஆன பதவி குடும்பத்துக்கு மட்டுமா?
காங்கிரஸ் மட்டுமல்ல மத்த கூட்டணி கட்சிக்கு எதாவது உதவாத துறை.. தெரு விளக்கு , குப்பை தொட்டின்னு குடுத்து இருந்தாலும்.. ஆட்சிங்கிரது கூட்டணி பொறுப்பா அகி இருக்கும்.
ஆனா இப்போ.. தன்னை தவிர மத்த எல்லாரையும் ஏமாளின்னு நினைச்சதுக்கு பலன் வருது...இப்ப கூவி என்ன செய்ய?
தப்பா நினைக்க வேண்டாம். அவர் எங்க பதவி ஏற்க ? சிம்மாசனத்தை காலி பண்ண மனசில்லாம உக்காந்து இருக்கார் ஒருத்தர்
ReplyDeleteabi appaa konjam thanni kudinga
ReplyDeleteதலைவரே! தப்பா நெனக்காதிய! இந்த கருமம் புடிச்ச காங்கிரசுக்காரனுவளத்தான் 40 வருசம் முன்னாடியே கோமணத்த உருவிக்கிட்டு வுட்டமே! அப்புறம் என்னாத்துக்கு மறுவடி செத்த பாம்ப ஊதி ஊதி உசிரு கொடுக்கணும்னு கேட்டேன்! "அவளத் தொடுவானேன் கவலப் படுவானேன் கச்சேரி வாசல்ல கைகட்டி நிப்பானேன்?"
ReplyDeleteகட்சிய கார்ப்பரேட் கம்பெனியா மாத்தி பதவி மயக்கத்துல கெறங்கிப்போயி பக்கத்து நாட்டுல நம்ம பங்காளிங்க செத்தப்பகூட கம்னு கெடந்தீய! இப்ப பாருங்க, அவனுங்க ஆப்பை பதமா எறக்க, அய்யாவால கொஞ்சம் நிம்மதியா மூச்சுகூட வுட முடியல. தி.மு.க னு பேரக்கேட்டாலே மூச்சா போற பயலுவ நம்ம மூச்சப் புடிச்சி நிறுத்துற அளவுக்கு பேசிக்கிட்டு திரியிறானுவ. ஹ்ம்ம்ம்... என்னத்த பண்றது? "உப்பத் தின்னா தண்ணி குடிச்சித்தானே ஆவணும்?"
ATHU SARI KUUTTANAI UNDAA ILLAIYAA...?
ReplyDelete:))))))))))
ReplyDeleteஅதெப்டி அண்ணாத்த கொஞ்சம் கூட கூச்சப் படாம கச்சி கட்டுப்பாடு பத்தி எல்லாம் பேசறிங்க? :) வெறும் கையோட வாக்கிங் போன வயோதிகரை ஆள் வச்சிப் போடும் வீர பராக்கிரம கச்சிக் கட்டுப்பாட்டாளர்கள் உல்ல கச்சி தானே திமுக. :) போட்டி வேட்பாளர்களை நிறுத்தி திமுகவின் அத்தனை துவாரங்களிலும் ஆப்பு அடிச்சவர் தானே இன்னைக்கு அந்த மண்டலத்துக்கே செயலாளர். நீங்க எல்லாம் கச்சிக் கட்டுப் பாடு பத்தி பேசலாமா? :)
ஒரு பக்கம் ராசாத்தி அம்மா தனி ராஜாங்கமே நடத்துது.. தயாநிதி மாறன் தனி லாபி. திமுகவுல யாருக்கு என்ன மந்திரின்னு முடிவு பண்றதே நீரா ராடியா தான். அங்க என்ன நடக்குதுன்னு ஒண்ணுமே பரிதாபமா வாழ்ந்துட்டு இருக்கிறவர் தான் கருணாநிதி. மிருகபலம் கொண்ட கட்சி தலைவருக்கு தோள் கொடுத்து நின்றவர் திகார் ஜெயிலில் களி திங்கறார். தைரியம் இருந்தா பொங்கி எழ வேண்டியது தானே? திருடனுக்கு தேள் கொட்டின மாதிரி முழிச்சிட்டு இருக்கிங்க. இன்னும் சில வருஷம்ல கனிமொழி திமுக, ஸ்டாலின் திமுக, மாறன் திமுக, அழகிரி திமுக என துண்டு துண்டா சிதறும் ஒரு கட்சியில இருந்துட்டு என்னா ஒரு சிரிப்புப் பதிவு.. :))))
எஞ்சாய்ய்ய்ய்ய்ய்ய்
அபி அப்பா, களப்பணியாற்ற ஆரம்பிச்சிட்டீங்களா? மயிலாடுதுறை தொகுதி யாருக்கு காங்கிரஸுக்குத்தானே? பிறகு பூம்புகார் தொகுதி பா.ம.க-வுக்கு... என்னமோ போங்க.
ReplyDelete