பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

January 2, 2010

மாயவரம் (நா)மாறிப்போச்சு!!!!!!


நான் எதிர்பார்த்தது நடந்தது. 31ம் தேதி நான் மரியாதையா மாலை 5 மணிக்கு கடைதெருவுக்கு போய் வருகிறேன்னுன்னு சொன்னப்ப என் தங்கமணி "ஓக்கே 8 மணிக்கு வாங்க"ன்னு சொன்ன போது விபரீதம் புரியலை.

தூங்கி எழுந்து பார்க்கும் போது அந்த கருப்பு போஸ்ட்டர், பச்சை போஸ்ட்டர் எல்லாம் சூப்பர். 2 கோஷ்ட்டி அடிச்சுகிட்டு இருக்கும் போது எனக்கும் விரக்தியா இருக்கு. ஆயிரம் கோடி சொத்து ட்ரஸ்ட் அன்பனாதபுரம் வகையறா மாயவரத்தின் அழகே அவங்க தான். நாங்க படிச்ச கல்லூரி. அடிச்சிகிட்டு சாக காரணம் ...... பாவம் அதிலே எனக்கு என்ன ஆசைன்னா பாலு பிள்ளை, E.S.கனபதி பிள்ளை, சொக்கலிங்க டாக்டர், ராதா பிள்ளை, ராம் மோகன் சண்முகம் பிள்ளை எல்லாரும் காசு பார்க்காம கல்லூரியை ஏழை பணக்காரன் வித்யாசம் இல்லாம படிக்க வச்சாங்க.

இன்னிக்கு அரசியல் வந்து உள்ளே புகுந்து ஆடுது. அய்யா மேலெ சொன்ன அய்யா எல்லாரும் என்னை மன்னிக்கவும். இதிலே உயிரோடு யாராவது இருந்தா ஒரு குழி தோண்டி தீ குளிக்கவும். (அல் மோஸ்ட் இந்த போஸ்ட்டர் பார்த்து பிணமா ஆகியிருப்பீங்க) இல்லாட்டி சொல்லுங்க உங்களால் படிச்ச நாங்க எதாவது செய்கிறோம்.
குறிப்பு:
இந்த பதிவு எங்க மாயவரம் பதிவர்களுக்காக மனசு ஒடிஞ்சு போட்ட பதிவு. வந்து கமெண்டுங்க.

6 comments:

 1. என்னத்த கமெண்டுறது...

  எல்லாத்திலேயும் அரசியல் புகுந்துடுச்சு...

  ReplyDelete
 2. அன்பின் அபி அப்பா,


  ஆனால் உண்மையானது இந்த இரண்டு உண்மையான பொய்களுக்கு நடுவில் தான் உள்ளது. உங்களால் அதை கண்டுபிடிக்க முடிந்ததா? நான் கண்டு பிடித்து விட்டேன். எப்படி ?


  அப்பறம் உங்க சுட்டிப்பையன் நட்ராஜ் எப்படி இருக்கிறார்? (மரியாதையாகவே அழைத்து வைப்போம். பின்னாளில் வளர்ந்து இந்த இடுகையெல்லாம் படித்து பார்த்தால் என் மீது ஒரு மரியாதை இருக்குமல்லவா? நம்ம திட்டம் எல்லாம் நெடுங்காலத்திற்கானது தான்)


  பிறகு இணைய இணைப்பு சரியாகிவிட்டது போலிருக்கே ? பண்ணைக்கோழி இடும் முட்டைகளைப்போல் தினசரி வரும் இடுகைகளே அதற்க்கு சாட்சி !!!


  இதைக்குறைக்க ஓரே வழி நட்ராஜீவிற்கான மென்பொருள்களை அந்த மடிக்கணனியில் நிறுவி விட்டால் உங்களுக்கு மடிக்கணனி தொடக்கூட இயலாது. பதிவர்கள் யாராவது இந்த ஆபரேஷனுக்கு ஸ்பான்ஸர் செய்யத்தயாரா?


  with care & love,

  Muhammad Ismail .H, PHD,
  http://gnuismail.blogspot.com

  ReplyDelete
 3. உங்க மாயவரம் மட்டுமா நம்ம நாடே இப்படித்தான் நாறிப் போய் இருக்கு. உண்மையாக மக்களின் தாகம் ஒரு எரிமலையாக அல்லது இயற்கைச் சீற்றமாக வரும் என நினைக்கின்றேன். வெயிட்டிங் பார் ஜட்ஜ்மெண்ட் டெ பார் ஆல். நன்றி. -

  ReplyDelete
 4. Feeling very bad to know abt this... Hope all these issue are resolved soon and the AVCC regains its glory...

  ReplyDelete
 5. தினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. http://simplygetit.blogspot.com/2009/12/make-money-online-100-orginal-ptc-site.html

  ReplyDelete
 6. அன்புள்ள அபி அப்பா, நீங்கள் நகைச்சுவையாக எழுதுவது போல சம்பந்தப்பட்ட பெரியவர்களின் மனதை புண்படுத்துவது போல எழுதி இருக்கீறீர்கள். அவர்களை தற்கொலை செய்ய சொல்ல நீங்கள் யார் ?.யாரோ ஒருவர் அல்லது ஒரு ஜாதி அமைப்பு போஸ்டர் அடித்ததை உங்கள் போன்ற படித்தவர்கள் நம்பினால் குற்றம் சாற்றப்பட்டவர் இது போன்ற மலிவான ஒரு முயற்சியில் ஈடுபட தள்ளபடுகிறார்கள். ஆகவே எதையும் ஆராய்ந்து தயவு செய்து எழுதவும்.

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))