பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

January 14, 2010

எங்க வீட்டு இஞ்சி கொத்து!!!


திமுகவினருக்கு புத்தாண்டு வாழ்த்தும், மத்தவங்களுக்கு பொங்கல் வாழ்த்தும் சொல்ல வேண்டும் என மனதில் மனப்பாடம் செய்து கொண்டே நேற்று படுத்து தூங்கி காலை எழுந்து வாசலில் வந்து பார்த்தேன்.கலர் கோலம் நல்லா தான் இருந்தது. நடு நாயகமாக பிள்ளையார் பூசணி பூ அணிந்து கலக்கலா உட்காந்திருந்தார். அபி கோலத்தின் அடியில் ஹேப்பி பொங்கல்ன்னு ஆங்கிலத்தில் எழுதி கொண்டிருந்தாள். கோலத்தை பார்க்க வந்த பக்கத்து வீட்டு ராமனாதனை பார்த்து "புத்தாண்டு வாழ்த்துக்கள்" சொன்னேன். "ஏன் பொங்கல் வாழ்த்துன்னு சொல்ல கூடாதா? எங்களுக்கு சித்திரை 1ம் தேதி தான் புத்தாண்டு"ன்னு வெடுக்குன்னு சொல்லிட்டு போனார்.அவரு அக்மார்க் பி ஜே பின்னு மறந்து தொலைச்சுட்டேன்.

அடுத்து வீட்டு வழியா வந்த மாவட்டபிரதிநிதி கிட்ட "பொங்கல்வாழ்த்து"ன்னு சொன்னதுக்கு அவர் "இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்"ன்னு 'வெடுக்'கிகிட்டு போனார். மனப்பாடம் பத்தலை போலிருக்குன்னு நினைச்சுகிட்டேன்.

இனி வாயை திறப்பது இல்லைன்னு முடிவு பண்ணிட்டேன். அப்பதான் ராதா வந்தான். நான் பேசாமல் வாயை மூடிகிட்டேன். "என்னடா பொங்கல் வாழ்த்து, புத்தாண்டு வாழ்த்துன்னு எதுனா சொன்னா என்ன?வாயிலே இருக்கும் முத்து கீழ கொட்டிடுமா"ன்னு கேட்டான். ஆகா சைத்தான் சைக்கிள்ல வந்து திட்டிட்டு போவுதேன்னு நினைச்சுகிட்டேன்.

போகட்டும் நடப்பது நடக்கட்டும் இன்னிக்காவது வீட்டுக்கு நல்ல பிள்ளையா நடந்துப்போம்ன்னு அபிஅம்மா கிட்டே " நான் எதுனா பொறுப்பா பொங்கல் வேலை செய்யலாம்ன்னு நினைக்குறேன்,என்ன செய்யட்டும்"ன்னு கேட்க மிகுந்த ஆச்சர்யத்துடன் "அப்படியா அப்படின்னா சம்பிரதாயத்துக்கு ஒரு மண் பானை வாங்கிட்டு வாங்க"ன்னு சொல்ல நான் நட்ட்டுவையும் கூட்டிகிட்டு ஆயில்யன் வீட்டுக்கு போய் ராம்கி, ஆயில்யன் கிட்டே எல்லாம் கதை பேசிட்டு ஒரு 3 மணி நேரம் கழித்து வீட்டுக்கு வந்த போது நான் வாங்கி வந்த பானைக்கு வேலையே இல்லாமல் போய் விட்டது. நானா கண் முறைப்புக்கு பயப்படுவேன். "சரி சரி விடு. வேற எதுனா வேலை கொடு சக்ஸஸா செஞ்சு முடிக்கிறேன்"ன்னு சொன்ன போது ரெண்டு கையையும் எடுத்து கும்பிட்டாங்க. "வேணா சாமீ, நான் பொங்கல் வைத்து சாமி கும்பிட்டு முடிக்கும்வரை பேசாம நெட்ல உட்காந்து தொல்லை கொடுக்காம இருந்தா போதும்"ன்னு அன்பா சொல்ல அப்படியே செஞ்சேன்.
வெங்கல பானையில் சர்க்கரை பொங்கலுக்கு இஞ்சி கொத்தும்,வெண்பொங்கலுக்கு மஞ்சள் கொத்தும் கட்டி "கட்டி அடுப்பில்" வைத்து,விறகு மூட்டி எங்க வீட்டு முறைப்படி பொங்கல் வைத்து அது பொங்கி வரும்போது பித்தளை தாம்பாலத்தில் கரண்டியால் சத்தம் எழுப்பி "பொங்கலோ பொங்கல்"ன்னு கத்தி சாமிக்கு கற்பூரம்காட்டி வெளியே வந்து சூரியனுக்கு காட்டி வராத கிருஷ்ணபருந்தை அதோ தெரியுது பார் கன்னத்திலே போட்டுக்கோ கன்னத்திலே போட்டுக்கோன்னு போட்டுகிட்டு பசுவுக்கு பொங்கல் வாழைப்பழம் கொடுத்து வழக்கம் போல படைக்கும் முன்னமே நட்டு வடையை திங்க ...... இனிமையாய் எங்களை கடந்து போய் கொண்டிருக்கின்றது இந்த வருட பொங்கல்...ம்ம்ம்ம்ம்ம்ம் புத்தாண்டு.............அட போங்கப்பா எதுவோ ஒண்ணு.

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்


யாருக்கு எது வேண்டுமோ எடுத்துகோங்கப்பா!!!

11 comments:

 1. இனிய பொங்கல்... அதுவந்து... புத்தாண்டு வாழ்த்துக்கள் அபிஅப்பா!!

  பொங்கலின்போது என்னென்ன செய்வீர்கள் என்று இப்பத்தான் தெரிஞ்சுகிட்டேன்;நன்றி. விறகு அடுப்பில வெண்கலப் பானை பொங்கல் - அழகு!!

  நட்டு இஸ் சோ ஸ்வீட்!!

  ReplyDelete
 2. அபிஅப்பாவுக்கும் குடும்பத்தினருக்கும் எனது இனிய பொங்கல் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 3. கலக்கல் பொங்கல் தலைவா ;)))

  ReplyDelete
 4. பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  எது வேண்டுமோ எடுத்துக்கோங்க அபி,நட்டு அப்பா.

  ReplyDelete
 5. இனிய தை திருநாள் வாழ்த்துக்கள் அபி அப்பா

  ReplyDelete
 6. பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  தை திருநாள் வாழ்த்துக்கள்

  எது எது வேண்டுமோ எடுத்துக்கோங்க

  ReplyDelete
 7. கொல்லு சனா எந்தூ தையூப்...

  ஸ்தம்தா.... :))

  ReplyDelete
 8. வாழ்த்துக்கள் ராஜா..

  போன் நம்பர் மாத்தினா எங்களுக்கெல்லாம் சொல்றதில்லையா? அப்புறம் எப்படி பேசறது?

  ReplyDelete
 9. //ஆயில்யன் வீட்டுக்கு போய் ராம்கி, ஆயில்யன் கிட்டே எல்லாம் கதை பேசிட்டு ஒரு 3 மணி நேரம் //

  ம்... சொத்J தகராறு வந்தா எனக்குதான் பாதகமா முடியும் போலிருக்கு... மாபியா மக்களே.. பஞ்சாயத்துக்கு வாங்களேன்!

  ReplyDelete
 10. தாமதமானாலும் சொல்லிக் கொள்கிறேன்:),
  இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 11. திமுக காரவெங்க சாமி கும்பிடுவாங்களா ?
  ;)

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))