September 16, 2013
"தி இந்து" - தமிழ் தினசரி நாளிதழ் - "தரம்" பத்து பைசா!!!
நூற்றாண்டுகள் கடந்து வந்து கொண்டு இருக்கும் உலக நாளேடுகளில் "The Hindu" வும் ஒன்று என்ற புகழுரையுடன் ஒரு முழு பக்க விளம்பரம் "The Hindu" ஆங்கில நாளிதழில் இந்த "தி இந்து" - தமிழால் இணைவோம் என்னும் தமிழ் பத்திரிக்கைக்கான விளம்பரமாக வெளி வந்தது. அதை முழுவதும் படித்தேன். "தி இந்து" வின் ஆசிரியர் அசோகன் அந்த "The Hindu"வின் முதல் நாள் தலையங்கத்தை எல்லாம் கோட் செய்து எழுதி இருந்தார்.வரலாறு முக்கியமில்லையா அதான்!
அதன் பின்னர் இன்று மாலையில் தான் நான் "தி இந்து"வை முழுவதுமாக படித்தேன். இன்னும் நூறுவருஷம் கழித்து யாரோ ஒரு கிசோகன் ஆசிரியராக இருந்து இன்று 19.09.2013ல் வந்த "தி இந்து"வை படித்தால் அந்த கிசோகனுக்கு "கருணாநிதி" என்ற நபர் தமிழகத்தை ஆண்டார், அவர் ஐந்து முறை தமிழக முதல்வராக இருந்து தொலைத்தார், மாணவநேசன் என்னும் கையெழுத்து பத்திரிக்கையை 13 வயதில் ஆரம்பித்தார், முரசொலி என்னும் பத்திரிக்கையை 10.08.1942 ல் தொடங்கி இதோ 71 வருஷமாக நடத்தி கொண்டு வரும் தமிழக மற்றும் இந்திய ....அத்தனை ஏன் உலக மூத்த பத்திரிக்கையாளர்களில் ஒருவராக இருந்து வருகின்றார், இன்று வரை இந்திய அரசியலில் ஒரு அசைக்க முடியாத நபராக இருந்து வருகிறார், பல ஆண்டுகள் அது ஜனதா கட்சியாக இருந்தாலும், பி ஜே பி, பின்னர் காங்கிரஸ் கட்சியாக இருந்தாலும் மத்தியில் ஆள அந்த ஸ்திரத்தன்மைக்கு இந்த கருணாநிதி ஒரு காரணகர்த்தராக இருந்தார்.... இன்னும் எத்தனை எத்தனையோ இருந்தும் அந்த கருணாநிதி ஒரு திராவிட இயக்க சிந்தனையாளர், திராவிடத்தை உயிர்ப்பாக வைத்திருப்பவர் அவர் பெயர் "தி இந்து" என்னும் பத்திரிக்கை தமிழில் வரும் போது.... அந்த கருணாதியின் பெயரோ சின்ன புகைப்படமோ தவறியும் அதில் வெளி வந்து விடக்கூடாது. தீட்டாகிவிடும். 100 ஆண்டுகள் கழித்து இந்த முதல் நாள் இதழை பார்க்க போகும் அந்த "கிசோகன்" என்னும் தன் "இன பேரனுக்கு" தெரிந்து விடக்கூடாது இப்படி ஒரு "ஆபத்தானவன்" இருந்தான் என மிகவும் ஜாக்கிரதையாக இருந்தமை மிக நன்றாக தெரிந்தது இன்றைய "தி இந்து"வின் முதல் இதழில். அந்த அசோகன் அவர்களின் "இன உணர்வுக்கு" என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
மொத்தம் 16 பக்கங்கள் மெயின் பேப்பர். பின்னர் 16 பக்கங்கள் சப்ளிமெண்ட்ரி (அல்லது இன்னும் ஒரு மெயின் பேப்பர்). அடுத்து லோக்கல் சப்ளிமெண்ட்ரி 8 பக்கங்கள். (நாங்கள் திருச்சி டிவிஷன்) முதல் மெயின் பேப்பரில் தலைப்பே அபாரம். "அம்மா குடிநீர் பத்து ரூபாய்". பிரமாதம்... பிரமாதம்... ஒரு அரசு செய்ய வேண்டிய ஏராளமான விஷயங்கள் எல்லாம் குப்பை தொட்டியில் போய்விட்டன இந்த ஆட்சியில். சேது சமுத்திர திட்டம் , மதுரவாயில் - துறைமுகம் பறக்கும் சாலை, புதிய தலைமை செயலகம், மெட்ரோ ரயில் விரிவாக்கம்...இது போல பல திட்டம் குப்பைக்கு போய்விட்டன... ஆனால் ஒரு அரசை இட்லிகடை, தண்ணி கடை, பிராந்தி கடை என வியாபார நிறுவனமாக்கிய தமிழக அரசின் இந்த செயல் முதல் பக்கத்தில் பிரமாதமாக. அடுத்தடுத்த பக்கங்கள் கூட அம்மா புகழ். திமுக ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்டு இப்போது செயல்பாட்டுக்கு வரும் விஷயங்கள் "அம்மா ஆட்சி சாதனை"யாக... நேற்று தமிழகத்தின் மிக முக்கிய நாள். திராவிட இயக்க சிந்தனையாளர், ஒரு பிராந்திய கட்சியை (திமுகவை) ஆட்சி கட்டிலில் அமர்த்திய சுதந்திர இந்தியாவின் முதல் மனிதன் அறிஞர் அண்ணாவின் 105 வது பிறந்த தினம். அதற்கு கருணாநிதி மரியாதை செய்த செய்தி வர வேண்டாம். ஏனனில் "தி இந்து"வின் கொள்கைப்படி கருணாநிதி வந்தால் தீட்டாகிப்போகும் அந்த பத்திரிக்கை. ஆனால் அவர்கள் போற்றிப்புகழும் "அம்மா" நேற்று அண்ணாவுக்கு மரியாதை செய்கிறேன் பேர்வழி என்று "திமுகவையும் கருணாநிதியையும் அழிப்பதே அண்ணா பிறந்த தின சபதம்" என முழங்கிய அந்த நிகழ்வை கூட குறிப்பிடவில்லை. ஏனனில் அப்படி குறிப்பிட்டால் எங்கே "கருணாநிதி" என்னும் பெயர் தங்கள் முதல் இதழில் வந்து விடுமோ என்னும் அச்சம். மதிமுக பல கோடி செலவழித்து செய்த விருதுநகர் மாநாடு கூட 6ம் பக்கத்தில் சின்ன பையன் கோமணம் போல குட்டியாக வந்தது. (ஏனனில் வைக்கோவால் ஆரியத்துக்கு அத்தனை ஒரு பாதிப்பு பெரிதாக வந்து விடாது என நினைத்து விட்டனர் போலிருக்கு... உண்மை தானே)
இப்படியாக மெயின் பேப்பர் 16 பக்கமும் இப்படி போனதே எனா நினைத்து அடுத்த மெயின் பேப்பர் 16 பக்கத்தை எடுத்தால் அதன் தலைப்பே அருமை. "முதல் நாள்... முதலிடத்தை நோக்கி" என்னும் தலைப்பு. நான் கூட இவர்கள் ஆரம்பித்த "தி இந்து"வை தான் சொல்கிறார்கள் போலிருக்கு என நினைத்தேன். புரட்சி தலைவி அம்மாவே மறந்து தொலைத்த "விஷன் 2023" பற்றி மிகவும் சிலாகித்து அரே வாவ்..... 15 லட்சம் கோடி ரூபாய் திட்டமாம்... இந்த நிமிடம் வரை அதற்கான சின்ன துரும்பு கூட கிள்ளிப்போடவில்லை.... அதை பாராட்டி சீராட்டி ஒரு 16 பக்கம்...... பின்னர் திருச்சி டிவிஷனுக்காக ஒரு எட்டு பக்கம். அதிலும் அம்மா புகழ். ஓங்கி அடிச்சா ஒன்னரை டன் வெயிட்டுடான்னு செம மாத்து வாங்கிடுச்சு போலிருக்கு "The Hindu".அதான் இத்தனை அம்மா புராணம். அல்லது நாய் எச்சில் இலைக்காக நாக்கை தொங்க போட்டுக்கொண்டு அலைவதை போல அரசு விளம்பர ரொட்டி துண்டுக்காக இப்படி நடந்து கொள்வது கேவலத்தின் உச்சம்.
இதை நான் மிகப்பெரியதாக எழுதி முடித்து விட்டு வலைப்பூவில் பதிவேற்றும் போது தான் வினவு கட்டுரையை படித்தேன். கிட்ட தட்ட நான் எழுதிய எல்லாமே அதில் வந்து விட்டமையால் இங்கே அந்த கட்டுரையை சுட்டி கொடுத்து விட்டு நான் ஒதுங்குகிறேன். வினவின் கட்டுரையை படிக்க இதன் மேல் சுட்டவும் அது போல கொக்கரக்கோ சௌம்யன் கட்டுரையும் இந்த "தி இந்து" பற்றி... அதன் சுட்டியையும் இங்கே கொடுத்து விடுகிறேன். என் வேலை சுலபமாகும். கொக்கரக்கோவின் விமர்சனம் பார்க்க இதன் மேல் சொடுக்கவும்.
மொத்தம் இருக்கும் 40 பக்கத்தில் "அம்மா புகழ் பாட"15 பக்கம், "புரட்சித் தலைவி புகழ்பாட" ஒரு 15 பக்கம், தமிழக முதல்வர் புகழ் பாட 6 பக்கம், மோடிக்கு 1பக்கம் ஸ்பெஷலாக, அத்வானிக்கு ஆப்பாக ஒரு பக்கம், மீதி பக்கத்தில் எப்போதோ செத்து போன ஆர்.வெங்கட்ராமன் போட்டோ போட்டு ஏதோ ஒரு நியூஸ், அது போல அப்துல்கலாமய்யர் போட்டோ போட்டு ஒரு செய்தி... எவனுக்கும் புரியாத மொழியில் எழுதி எழவெடுக்கும் ஆர் எஸ் எஸ் தீவிரவாதி ஜெயமோகனுக்கு ஒரு அரைபக்கம்... ஆக மொத்தம் சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.
கலைஞரை தவிர்த்து விட வேண்டும் என்கிற முனைப்பு இப்படி பப்பரக்காவென தெரியும் போதே இவர்கள் லெட்சனம் நன்கு புரிகின்றது. இவர்கள் நடுநிலை தினசரி அல்ல. இவர்கள் கருத்துகளை மக்கள் மேல் திணிக்க வரும் ஒரு பாம்பு என புரிகின்றது. தமிழ் தினசரிகளில் இவர்களுக்கு போட்டியாளர்கள் என பார்ப்பின் தினமலர், தினகரன், தினமணி மற்றும் நமது எம்ஜிஆர் ஆகியவையே. ஆக மொத்தத்தில் எந்த ஒரு திமுக மற்றும் திராவிட சிந்தனாவாதிகளுக்கு இந்த தினசரி "தி இந்து" என்பது மேலும் ஒரு டாய்லெட் ட்ஷ்யூ மட்டுமே. தினசரிகள் படிக்கும் மக்களில் 70 சதத்தினர் திராவிட சிந்தனா மக்களே என்கிறதாம் ஒரு கருத்துக்கணிப்பு!
. நான் கல்லூரி படிக்கும் காலத்தில் "இந்தியா டுடே" தமிழில் வந்த போது நாங்கள் எல்லோரும் "ஆகா, இனி நமக்கு வட இந்திய மூளைகளை புத்திகளை, புத்திசாலித்தனத்தை எல்லாம் இந்தியா டுடே சாறு பிழிந்து நமக்கு புரியும் மொழியில் வாயை திறந்து ஊத்தும் என நம்பி வாங்க ஆரம்பித்தோம். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அதன் சொரூபம் தெரிந்தது. இன்று "பாக்யா" ஓடும் அளவுக்கு கூட "இந்தியா டுடே" இல்லை. அது பழைய உதாரணம்... இப்போ சமீபத்தில் மூன்று நான்கு ஆண்டுகள் முன்பாக "புதிய தலைமுறை" அப்படித்தான் ஆரம்பித்தது. ஒரே நடுநிலை கொக்கு என கூறிக்கொண்டது. ஏகப்பட்ட விற்பனை. இன்றைக்கு என்ன ஆனது? அது போல "தி இந்து"வும் கூடிய சிக்கிரம் காணாமல் போகும்.
ஏனனில் கலைஞருக்கு ஆதரவோ அல்லது எதிர்ப்போ செய்யாமல் இங்கு அரசியல் இல்லை. இதை தெரியாமல் "தினசரி" நடத்த வந்தால் அதன் கதி அதோகதி தான்! இந்த பதிவின் முதல் பத்தியில் நான் சொன்னது போல ஒரு நூற்றாண்டுக்கு பின்னர் ஏதோ ஒரு கிசோகன் என்னும் பேரன் எவனும் இந்த காழ்ப்புணர்வு கொண்ட "தி இந்து"வை சீந்த போவதில்லை. இதன் தரம் குறைவு என்பதால் இதன் ஆயுள் அத்தனை சிறப்பானாதாக இருக்க வாய்ப்பில்லை.
.
40 பக்கம் நான்கு ரூபாய். அதாவது பக்கத்துக்கு பத்து பைசா விலை! இதன் "தரமும்" பத்து பைசா மதிப்பிலானது மட்டுமே!
இந்த பத்து பைசா என்னும் தரத்தை “தி இந்து தமிழ் நாளிதழ்” உயர்த்திக்கொள்ள வேண்டும் எனில் இதே புறக்கணிக்கப்பட்ட அந்த மாபெரும் பத்திரிக்கையாளர் - அரசியல்வாதி போன்ற பன்முகம் கொண்ட தலைவர் கலைஞரை பற்றி “உண்மை” களை எழுதி பிராயச்சித்தம் தேடிக்கொள்வதை தவிர வேறு வழியில்லை!
குறிப்பு: இந்த கட்டுரை அங்கும் இங்குமாக அலைந்து ஏதோ சரியில்லாமை போல தொங்கல் விழுந்து இருப்பதாகவே என் மனதுக்கு படுகின்றது. காரணம் நான் கோர்வையாக எழுதி விட்டு வெளியிடும் முன்னர் வினவு கட்டுரையை படிக்க நேர்ந்தது. படித்த பின் என் கட்டுரையில் இருந்து பலவிஷயங்களை வெட்டி வெட்டி போட்ட பின் இப்படி ஆகிவிட்டது. ஆனாலும் என் எதிர்ப்பை "தி இந்து"வுக்கு எதிராக பதிவு செய்ய வேண்டும் என்கிற ஒரே நோக்குடன் எப்படி இருந்தாலும் இருக்கட்டும் என வெளியிடுகிறேன்!
Labels:
The Hindu,
அசோகன்,
ஊடகம்,
கொக்கரக்கோ தி இந்து,
செய்தித்தாள்,
தி இந்து,
வினவு தி இந்து
Subscribe to:
Post Comments (Atom)
ரசித்தேன்.
ReplyDeleteகந்தசாமி.
நெஜமாவே என் பேரை கந்தசாமிதானுங்க.
Hey....why u r obssessed with karunanidi.....
ReplyDeleteAdmiring thе hard work yoս ρut into your blog and
ReplyDeletedetailed іnformation үou provide. It's great tо
сome across a blog everу once in a whilе tһat isn't the
sаme old rehashed іnformation. Wonderful гead! I'ѵe bookmarked уour site
and I'm including ʏoᥙr RSS feeds to my Google account.