October 27, 2013
எனக்கு ஏன் அண்ணன் ஆ.ராசா அவர்களை பிடிக்கும்?
எனக்கு ஏன் ஆ.ராசா அண்ணனை பிடிக்கும் என யோசித்து பார்க்கிறேன். எப்போதில் இருந்து பிடிக்கும் எனவும் யோசித்து பார்க்கிறேன். பல ஆண்டுகள் பின்னோக்கி போகின்றது மனது. சின்ன வயதில் யாராவது "நீ என்ன பெரிய டாட்டா, பிர்லாவா?" என கேட்கும் போதெல்லம் என் மனதில் "அவர்கள் என்ன பெரிய ஆள்.. அவர்கள் வந்து என்னை பார்க்க "நேரம்" கேட்க வேண்டும்.அந்த இடத்தில் நாம் இருக்க வேண்டும் என நினைத்துக்கொள்வேன். ஆனால் நான் சாமானியன். மிக மிக சாமானிய ஒரு சின்ன நகரத்தில் வசிக்கும் ஒரு நடுத்தர வர்க்கம். இதல்லாம் சாத்தியமா?
சாத்தியம் ஆனது. என்னால் அல்ல. என்னைப்போல ஒரு சாமானியனால். மிக மிக சாதாரண ஒரு குடும்பத்தில் பிறந்த, ஒரு வறட்சியான நகரத்தில் பிறந்த ஒரு மனிதனால். அது அண்ணன் ஆ.ராசா அவர்கள். அவர் மத்தியில் கேபினட் அமைச்சர் ஆனார். உலகம் அவரை திரும்பி பார்த்தது. அவரோ அப்போது கூட தலைக்கனம் இல்லாமல் தான் வாழ்ந்த பிரதேசத்தை வறட்சி நீக்கி வளம் கொழிக்க வைக்க அந்த பகுதியை பார்த்தார். தன்னைப்போன்ற மக்களை பார்த்தார். இது முதலே எனக்கு அண்ணனை பிடித்து போனது. டாட்டாவும், பிர்லாவும், அம்பானிகளுமே கூட இவரை சுற்றி சுற்றி வந்தனர். என்னைப்போன்ற சாமான்யர்கள் சந்தோஷப்பட்டனர். ஆதிக்க வர்க்கம் இதை ஒத்துகொள்ளுமா? வாய்ப்பில்லை.
2010 ஆரம்பம் முதலே இவர் மீது குறி வைத்தது. கிட்ட தட்ட பிப்ரவரி, மார்ச் மாதங்கள் முதல் இவரை கொத்த தொடங்கின. ஒரே வருடம்... அடுத்த 12 மாதத்தில் அதாவது 2011 பிப்ரவரியில் இவரை தூக்கி காராக்கிரகத்தில் அடைத்து குதூகலித்தது. ஒன்னேகால் வருடம் இவர் சிறையில் இருந்தார். மனிதன் கொஞ்சமும் கலங்கவில்லை. பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். டெல்லியில் இருந்து சென்னை வந்ததும் போய் பார்க்கலாம் என நினைத்துக்கொண்டிருந்தேன். ஏனனில் நான் இந்த 2ஜி அலைக்கற்றை பிரச்சனையில் அண்ணன் ஆ.ராசா அவர்களை ஊடகங்கள் தாக்க தொடங்கியதில் இருந்தே அது பற்றி அதிகமாக விவாதித்துக்கொண்டிருந்தேன் இணையத்தில். அது பற்றி எந்த செய்தி எங்கே வந்தாலும் மனதில் சேகரிக்க தொடங்கி இருந்தேன். சி ஏ ஜி அறிக்கையை முழுமையாய் படித்து முடித்திருந்தேன். அது போலவே அய்யா திராவிட தென்றல் சுபவீ மற்றும் அண்ணன் திருச்சி சிவா ஆகியோர் எங்கு இது பற்றி பேசினாலும் போய் கேட்டுக்கொண்டு இருந்தேன். எனக்கு இருந்த சந்தேகங்களை விஷயம் தெரிந்தவர்களிடம் கேட்டு தெளிந்து கொண்டிருந்தேன். அது போல எனக்கு புரிந்த விஷயங்களையும் மற்றவர்களிடம் நேரிலும், இணையம் வாயிலாகவும் புரியவைக்க முயன்று கொண்டிருந்தேன். இதல்லாம் பிப்ரவரி முதல் வாரம் 2011 அண்ணன் சிறை புகும் முன்னரேயே நடந்து கொண்டிருந்தன.
சிறைக்கு சென்ற பின்னர் வழக்குகளை உன்னிப்பாய் பார்க்க தொடங்கினேன். இப்போது அண்ணன் சிறையில் இருந்து வெளிவந்தாகிவிட்டது என்னும் நிலையில் அதாவது சென்ற வருடம் 2012 அக்டோபரில் நான் சென்னையில் இருந்த போது ராசா அண்ணன் சென்னையில் இருப்பதாக செய்தி அறிந்து அரியலூர் மாவட்டம் திரு. எஸ்.எஸ்.சிவசங்கர் சாருக்கு போன் செய்தேன். "நான் ராசா அண்ணனை பார்க்க வேண்டுமே. எனக்கு "நேரம்" வாங்கி தர இயலுமா? என்றேன். நான் இணையத்தில் இந்த 2ஜி அலைக்கற்றை விஷயமாக பல இடங்களில் வாதிடுவதை அவரும் அறிவார். உடனே அவர் சொன்னார்... "தாராளமாக.. இன்று ஞாயிற்று கிழமை. காலையில் இங்கு (பெரம்பலூரில்)ஒரு கட்சி திருமணம். கலந்து கொள்ள பெரம்பலூர் வந்தாங்க அண்ணன். இன்று மதியம் அனேகமாக சென்னைக்குள் நுழையலாம். நீங்க நான் சொல்லும் இடத்துக்கு போய் பாருங்க. நான் அண்ணனிடம் நேரம் வாங்கிய பின்னர் மீண்டும் போன் செய்கிறேன்" என்றார். அது போலவே அடுத்த பத்து நிமிடத்தில் "நீங்க 2 மணிக்கு நான் சொல்லும் அட்ரசுக்கு போங்க. அங்கே விவேகானந்தன் என்னும் அண்ணனின் உதவியாளர் இருப்பாங்க. அவங்க கிட்டே உங்க பெயரை சொல்லுங்க. பார்த்து விட்டு வாங்க" என சொல்லி அட்ரஸ் கொடுத்தார். மணி அப்போது மதியம் ஒன்று. இன்னும் ஒரு மணிநேரத்தில் நான் திருவான்மியூரில் இருந்து டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலைக்கு போகவேண்டும். சாத்தியமா? இல்லை. ஏனனில் என்னிடம் டூவீலர் கூட இல்லை.
உடனே இணைய தோழர் சரவணகுமாருக்கு போன் செய்து விஷயம் சொன்னேன். அதற்கு அவர் "கரும்பு தின்ன கூலியா? கிளம்பி மாடியில் இருந்து கீழே வாங்க. இன்னும் 10 நிமிடத்தில் நான் அங்கே வருவேன். சரியாக 2 மணிக்குள் அங்கே போகலாம்" என சொன்னார். அது போலவே வந்தார். அண்ணனுக்கு பரிசளிக்க புத்தகம் எதும் வாங்கிப்போம் என கடை தேடினோம். அன்று ஞாயிறு என்பதால் கடை எதும் இல்லை. ராதாகிருஷ்ணன் சாலை நோக்கி போய்கொண்டு இருக்கும் போதே "அடடே நம் தம்பியண்ணன் அப்துல்லாவை கூப்பிடலாமே" என யோசித்தேன். உடனே போன் செய்தேன். மிகவும் ஆர்வமான அப்துல்லா "அண்ணே நீங்க பிரசிடண்ட் ஹோட்டல் வாசலில் நில்லுங்க. நான் பத்தே நிமிஷத்தில் அங்கே இருப்பேன். சேர்ந்து போகலாம்" என சொல்ல ... மணி 1.50க்கு நாங்கள் மூவரும் பிரசிடண்ட் ஹோட்டல் வாசலில் சந்திக்கும் போது தான் ராசா அண்ணன் கார் எங்களை கடந்து அவருடைய வீட்டை நோக்கி சென்றது. ஆமாம்... அப்போது தான் பெரம்பலூரில் இருந்து வந்து நுழைகிறார்.
நாங்கள் மூவரும் ஒரு ஐந்து நிமிட இடைவெளி விட்டு அங்கே வீட்டுக்கு சென்றோம். வாசலில் கூட்டம் இருந்தது. துப்பாக்கி ஏந்திய போலீசார் இருந்தனர். நாங்கள் உள்ளே நுழைந்து சிவசங்கர் சார் சொன்னது போல அண்ணனின் உதவியாளர் திரு.விவேகானந்தன் அவர்களை சந்தித்தோம். அதற்கு அவர் "முதல்ல சாப்பிடுங்க" என்றார். "இல்லை. நாங்கள் சாப்பிட்டாச்சு சார்" என்றோம். கொஞ்சம் அந்த ஹால்ல போய் வெயிட் பண்ணுங்க. சார் இப்ப தான் வந்தாங்க. ஒருத்தர் கூட பேசிகிட்டு இருக்காங்க. ஐந்து நிமிடத்தில் அவர் வெளியே வந்துடுவார். வந்ததும் நீங்க உள்ளே போங்க" என்றார்.
நாங்கள் ஒரு ஐந்து நிமிடம் அந்த ஹாலில் காத்திருந்தோம். உள்ளே பேசிக்கொண்டு இருந்த நபர் வெளியெ வந்ததும் நாங்கள் மூவரும் உள்ளே சென்றோம். எழுந்து நின்று அப்துல்லா கொண்டு வந்த சால்வையை போர்த்தினோம். "என்னப்பா இது ஃபார்மாலிட்டீஸ் எல்லாம். இதல்லாம் எதுக்கு?" என்றார்.
எனக்கு அங்கே என்ன நடக்குது என்று புரியவே இல்லை. பிரதமர் கூட பேசினவர், பேசிக்கொண்டு இருப்பவர், பேசப்போகின்றவர், என் தலைவர் கூட காரில் போகும் நபர், என் தளபதி கூட இருப்பவர், டாட்டா, அம்பானி போன்றோர்கள் இவரை கண்டு பேதி போய் கொண்டு இருக்கின்றனர்... அவர் அருகே நான். தவிர என் ஆதர்ஷன புருஷர். இன்னும் சொல்லப்போனால் இணையத்தில் ஆ.ராசா என தேடினால் இவரை திட்டாதவன் எவனும் இல்லை.உலகமே இவரது வழக்கை உற்று நோக்குகின்றது, உச்சநீதிமன்ற நீதிபதிகள் தூக்கத்தில் கூட ஆ.ராசா என்றே கனவு வரும் நிலையில் இருப்பவர், இப்போது அவர் அருகில் நான்.... நான் இணையத்தில் 2 ஜி அலைக்கற்றை சம்மந்தமாக எனக்கு எழுந்த சில சந்தேகங்களை கேட்க வேண்டும் என நினைத்து வந்தேன். ஆனால் என் உடம்பு கொஞ்சம் நடுங்குகிறது. ஏன்? ஏன்? அது குளிரூட்டப்பட்ட அறை என்பதாலா? இல்லை. நிச்சயமாக இல்லை... ஒரு பெரிய ஆகிருதி என் முன்னே... தும்பைப்பூ வேட்டியும் முழுக்கை பளீர் வெள்ளை சட்டையும் அணிந்திருந்தார். "எந்த கடையில் அயர்ன் செய்கிறார்" என மனது அல்பமாக நினைத்துக்கொண்டது.
அவர் அறையை நான் நோட்டமிடுகிறேன். அவருக்கு எதிரே அந்த அறையில் வலது மூலையில் ஒரு பெரிய எல் சி டி டிவி. இவர் டேபிள் ரொம்ப பெரிதாக இருக்கு. டேபிளின் வலது பக்கம் ஒரு பத்து புத்தகங்கள். மேலே இருந்த புத்தகம் பெயர் பார்க்கிறேன். அதுவரை நான் அதை கேள்விப்பட்டது கூட இல்லை. தமிழ் புத்தகங்கள் தான். அவர் நாற்காலி கருப்பு கலர். அது போல எதிரே இருந்த எங்கள் நாற்காலிகளும் கருப்பு கலர் தான். இப்போது கேஷுவலாக சாய்ந்து அமர்ந்து கொள்கிறார். எதிரே இரண்டு செல்பேசிகள். ஒன்று ஸ்மார்ட் போன். அடுத்து ஏதோ ஒறு 1100 மாடல் போன்ற சாதாரண போன். இவைகள் தானே இத்தனை களேபரங்களுக்கும் காரணம் என நினைத்துக்கொண்டேன்.
"சொல்லுங்கப்பா.... இணையத்தில் நீங்கள் எல்லாம் எழுதுறீங்க. ம்.. சிவா சொன்னாப்டி. ம்..கேளுங்க"
அப்துல்லா முதலில் "அண்ணே, எப்டின்னே போகுது கேஸ் எல்லாம். இந்த 2ஜி பத்திதான் நிறைய கேட்கனும் அண்ணே"
"கேஸ் தான் தினம் தினம் நடக்குதே. கிட்ட தட்ட 50 சதம் முடிஞ்சுடுச்சு. நல்ல ஃபாஸ்ட். கேள்வி கேளுங்க. ஆனா அதுக்கு முன்னே எடுத்ததும் டாப் கியரில் போகாம, ஆரம்பம் முதல் கேளுங்க. ஒரு டீக்கடை வாசலில் அமர்ந்து டீ குடிக்கும் ஒரு சாமானிய மனிதன் என்னை பார்த்தா கேட்கக்கூடிய கேள்வி என்னவாயிருக்கும்? அப்படி ஆரம்பிங்க"
நான் உடனே "அண்ணே மாத்தூர் இருக்காரே"
அவர் உடனே "ஹூம்.. எந்த சாதாரண ஆளுக்கு மாத்தூர் பத்தில்லாம் தெரியும்? ஒரு ரிக்ஷா தொழிலாளி என்னை பார்த்தா முதலில் எந்த கேள்வியில் ஆரம்பிப்பார்ன்னு உங்களுக்கு படுதோ அதில் இருந்தே ஆரம்பிங்கப்பா... டோண்ட் ஹெசிட்டேட்"
எங்களுக்கும் தெரியும் ஒரு டீக்கடை வாசலில் அமர்ந்து பேசுபவர்கள் எப்படி பேசுவார்கள் என்று. ஆனால் ஒரு சிம்மத்தின் முன்னே அதை எப்படி கேட்க இயலும் என நான் யோசித்து கொண்டு இருக்கும் போதே அப்துல்லா பேசினார்.
"அண்ணே, அந்த ஸ்பெக்ட்ரம் 2ஜி யில் அடிச்ச ஒன்னே முக்கால் கோடி ரூபாயை எங்க கொண்டு வந்து வச்சிருக்கீங்க?"
எனக்கும் சரவணகுமாருக்கும் பகீர் என ஆனது. எப்படி இப்படி ஒரு தைரியம் வந்தது அப்துல்லாவுக்கு? அது தான் திமுக. மனதில் பட்டதை தைரியமாக கேள்வியாக கேட்டு பதில் வாங்கி அதை வெட்டியாய் புறம் பேசும் வீணர்களுக்கு விளக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் தான் நாங்கள் வந்திருக்கிறோம் இன்று அண்ணனை பார்க்க. அப்படி எனில் இப்படித்தான் கேட்க வேண்டும். இந்த தைரியமான கேள்வியை எதிர்கொள்ள ஜெயா போன்றவார்களுக்கு தைரியம் உண்டா? அல்லது ஜெயா முன்பு எந்த அதிமுக தொண்டனாவது கேட்க இயலுமா? முடியாது.. ஏன்.. மடியில் கனமில்லை. அதனால் கேள்வியை எதிர்கொள்ள ராசா அண்ணனுக்கு பயம் இல்லை.
மிக அழகாக பதில் சொன்னார். "சி ஏ ஜி கூட ஊழல் தட் மீன்ஸ் ஸ்கேம் என்னும் பதத்தை பயன் படுத்தவில்லை தன் அறிக்கையில். அரசுக்கு வருவாய் இழப்பு என்றே சொன்னது. இது அடிமட்டு மக்களுக்கு ஒன்னேமுக்கால் லட்சம் கோடி ஊழல் என்ற வகையில் எப்படி போய் ஆதிக்க ஊடகங்களால் பரப்பப்பட்டது என விளக்கினார்.
பின்னர் பேச்சு அந்த பிரச்சனையின் அடி ஆழம் முதல் போனது. பாஜகவின் பிரமோத்மகாஜன், அருண்ஷோரியில் இருந்து ஆரம்பித்து தயாநிதிமாறன் பின்னர் ராசா அண்ணன் வரை தொடர்ந்த்து. இதில் ட்ராய் என்னும் தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆனையம் அது சி ஏ ஜி போன்ற தன்னிச்சையான ஆனால் அரசின் கொள்கை முடிவெடுக்கும் மத்திய கேபினட் அமைச்சரவையின் கீழ் வருவது போன்ற எல்லாம் பேசப்பட்டது.
கிட்ட தட்ட நாங்களும் ரிக்ஷா தொழிலாளி நிலையில் இருந்து கொஞ்சம் மேலெழும்பி இணையத்தில் விவாதிக்கும் நபர்கள் என்னும் நிலைக்கு வந்து கேள்வி கேட்க தொடங்கினோம். அப்போது எனக்கு இருந்த ஒரு சந்தேகத்தையும் நான் கேட்டேன். அந்த கேள்வி....
\\ அண்ணே, கிட்ட தட்ட நீராராடியாவுடன் நீங்கள் பேசியதாக கிட்ட தட்ட ஏப்ரல் 2010ல் செய்திகள் வந்தன... பிரச்சனையே நீங்கள் 2 ஜி யை ஏலம் விடாமல் முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என சொன்னதால் தான் என ஊடகங்களும், அரசியல் கட்சிகளும் வரிந்து கட்டி கொண்டு இருந்தன. அப்போது அதே மே மாதம் 20ம் தேதி 2010ம் வருஷம் நீங்கள் 3 ஜி யை ஏலம் விட்டதால் அரசுக்கு 67,719 கோடி ரூபாய் லாபம். ஆனால் அரசு ப்ரொஜக்ஷன் என்பது 35,000 கோடி எனவும் கிட்ட தட்ட டபுள் ஆக கிடைத்தமை குறித்து நான் அந்த துறையின் அமைச்சர் என்ற வகையில் பெருமை படுகிறேன்" என்றும் சொன்னீங்க. பொருளாதார புலி பிரதமரும், நிதி அமைச்சர் பிரணாப்பும் கூட ரொம்ப பெருமைப்பட்டாங்க. உடனே ஊடகங்கள் "பத்தீங்களா, பத்தீங்களா மக்களே, இதே 2 ஜி யை ஏலம் விட்டிருந்தா நாடு எங்கயோ போயிருக்கும்" என வரிந்து கட்டிக்கொண்டு பிரச்சாரம் செய்தன. என் கேள்வி இப்போ என்னன்னா அந்த 2 ஜி ஏலம் விடாம பிரச்சனை வந்ததால் தான் நீங்க 3 ஜியை ஏலம் விட்டீங்களா? இதனால் தானே ஊடகங்கள் எல்லாம் குதற ஆரம்பிச்சுது?\\ கேள்வியை கேட்டு விட்டு மூச்சு வாங்கினேன்.... என்ன பதில் வருமோ என பயம்....
பதில் தெளிவாக இருந்தது.
அண்ணன் ஆரம்பித்தார்....."முதலில் உன் கேள்வியில் இரண்டாம் பகுதிக்கு வரேன். அதாவது "2ஜியை ஏலம் விடக்கூடாது முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை, அது போல 3ஜியை ஏலத்தில் தான் விட வேண்டும்" இப்படி ஒரு ஆர்டர் போட்டது "ட்ராய்". நான் அல்ல. நான் அதில் எதும் செய்ய முடியாது. ட்ராய் அப்படி செஞ்சது மத்திய கேபினட் அமைச்சரவையின் முடிவுப்படி, அதாவது இது இந்திய அரசின் கொள்கை முடிவு. இந்திய அரசின் கொள்கை முடிவை மாற்ற இந்த ராசா என்னும் தனிப்பட்ட மனிதனாலும் முடியாது. மன்மோகன் சிங் என்னும் தனிப்பட்ட மனிதனாலும் முடியாது. மத்திய கேபினட் அமைச்சரவை கூடி அரசின் கொள்கை முடிவை மாற்ற வேண்டும். அது சின்ன பார்மாலிட்டி இல்லை. அதன் பின்னரும் வால் போல நீண்டு கொண்டு போகும் பிரச்சனை. இன்னும் சொல்லப்போனால் அப்படி ஒரு கொள்கை முடிவு எடுக்கப்படின் எதிர்கட்சியான பாஜகவுக்கு பார்லிமெண்டில் பதில் சொல்ல வேண்டும். ஏனனில் அந்த கொள்கை முடிவு வாஜ்பாய் காலத்தில் எடுக்கப்பட்ட அரசு கொள்கை, இது பாலிசி மேட்டர்.
இதில் இன்னும் ஒரு விஷயம் என்னான்னா அந்த ஜி.ஓ என்பதே ஒரு A4 ஷீட்ல முதல் பாராவில் "2ஜியை முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கொடுக்க வேண்டும்" என்றும் இரண்டாம் பாராவில் "3 ஜியை ஏலம் விட வேண்டும்" என்றும் இருக்கும். அடுத்த அடுத்த ஜி.ஓ கூட இல்லை. அல்லது ஒரே ஜி.ஓ வில் அடுத்த அடுத்த பக்கங்கள் கூட இல்லை. ஒரே A4 ஷீட்ல அடுத்த அடுத்த பாரா தான்". - இது ராசா அண்ணன் பதில்
நான் சொன்னேன்.... "அண்ணே, ஏன் இப்படி இருக்கு அரசு கொள்கை? பாஜக கொண்டு வந்த அரசு கொள்கை சரியில்லை எனில் மாத்த வேண்டியது தானே. அதை தானே இப்போது இணையத்தில் எங்களை கேட்கிறாங்க. "முன்னாடி உள்ளவன் தப்பு செஞ்சா, அதே தப்பை நானும் செய்வேன் எனில் எதுக்கு ஒரு கேபினட் அமைச்சர்? அதுக்கு ஒரு பத்தாம் வகுப்பு படித்த குமாஸ்தா போதுமே"ன்னு கேட்கிறாங்க அண்ணே?" என்றேன்.
அதற்கு ராசா அண்ணன் "நான் மேலே சொன்ன பதிலில் அந்த கொள்கை தவறானதுன்னு சொல்லவில்லையே. இன்னும் என்னை தனிப்பட்ட முறையில் கேட்டா அது மிக மிக சரியான கொள்கை தான். இதை இப்ப உணர மாட்டீங்க. ஒரு வேளை இப்போ இதில் அமைச்சரா இருக்கும் கபில்சிபல் 2ஜி யை ஊடக வாய்களுக்கு பயந்து "முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை" என்பதை எடுத்து விட்டு எடுத்து விட்டுன்னா அமைச்சரவை கூடி ஏலமுறை என அரசு கொள்கையை மாற்றினால் மிகப்பெரிய இழப்பு ஏற்படும். யாரும் ஏலம் எடுக்க முன் வர மாட்டாங்க. இது தான் நடக்கும்". என்றார்.
" உடனே நான் அப்படின்னா அந்த கொள்கை முடிவு எப்படி சரின்னு இந்த குருவி மூளைக்கு புரியும் படி சொல்ல முடியுமா அண்ணே" என்றேன்.
"முடியும்... இப்போ ரேஷன் கடையில் விற்கும் அரிசி என்ன விலை?"
"இப்போ சும்மா குடுக்குறாங்க"
"சரி இப்போ விடு. இதற்கு முன்னர்?" - ராசா அண்ணன்.
"ஒரு ரூபாய் ஒரு கிலோ" - சரவண குமார்
"பாய் பிரியாணி அரிசி எவ்ளோவ்யா?"அப்துவிடம் கேட்டார்.
"அண்ணே அது 45 ரூவாய் முதல் 100 ரூவாய் வரை இருக்குண்ணே" - தம்பியண்ணன் அப்துல்லா.
"இரண்டுமே அரிசி தானே. பின்ன ஏன் மாறுபட்டு இருக்கு விலை?"
"தரம்னு ஒன்னு இருக்குல்ல அண்ணே" - இது நாங்கள்
"சரி, ஒரு ரூவாய் அரிசி வாங்குவது யாரெல்லாம்?"- ராசா அண்ணன்
"ஏழைகள், நடுத்தர வர்க்க மக்கள்" - நாங்கள்
"பிரியாணி அரிசி?"- ராசா அண்ணன்
"அது பணம் இருக்குறவன் வாங்குவான்" - நாங்கள்
"சரி இப்போ இந்த ஏழைகள் வாங்கும் அரிசி ஒரு ரூபாய் அரிசியால் அரசுக்கு எவ்வளவு நஷ்டம் தெரியுமா. இழப்பு தெரியுமா? - அமைச்சர்
எங்களுக்கு புரிந்தது.இவர் எங்கே வருகின்றார் என.
மீண்டும் தொடர்ந்தார்......
"இப்ப தெளிவா கோர்வையா சொல்றேன் பாருங்க, மேலே நாம பேசினதையே அதாவது .2 ஜி என்பது பொது விநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் அரிசி போன்றது. 3ஜி என்பதோ பிரியாணிக்கு பயன்படும் உயர்தர பாசுமதி அரிசி போல! பொது விநியோகத் திட்டத்தில் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்கப்படுகிறது என்பதற்காக, பாசுமதி அரிசியை ஒப்பீடு காட்டி 'ஒரு ரூபாய் அரிசி விநியோகத்தால் அரசுக்கு நஷ்டம்' என்று சொன்னால் ஏற்றுக்கொள்வீர்களா? 2 ஜி சேவை என்பது சாதாரண மனிதனுக்கும் போய்ச் சேரவேண்டிய குரல் (Voice) சேவை. 3 ஜி என்பது வர்த்தக ஆவணங்களை அனுப்புவதற்கும், வீடியோ சினிமா போன்ற உயர்ரக சேவைக்கும் உரியது. 2 ஜி சேவை கல்வி, சுகாதாரம், கிராமிய வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் கடைசி மனிதனுக்கும் பயன்படவேண்டிய ஒன்று. 3ஜி என்பது வர்த்தகம் சார்ந்த மற்றும் வசதி படைத்தவர்களுக்கு சேவை அளிக்கக் கூடியது. ஒழுங்குமுறை ஆணையம் உலக நாடுகளில் உள்ள நடைமுறைகளை எல்லாம் கருத்தில்கொண்டுதான், 3ஜி அலைவரிசையை ஏலம்விட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. இப்போதைய இந்தியாவின் சமூகப் பொருளியல் புள்ளி விவரங்களின் அடிப்படையில், சாதாரண குரல் வழி சேவை வழங்கும் 2ஜி சேவைதான் சாதாரண சாமானிய மக்களுக்கு தேவையே தவிர, 3ஜி அல்ல! இன்னுமொரு 4 அல்லது 5 ஆண்டுகள் கழித்து நிலைமை மாறலாம். 1994-ம் ஆண்டு 2ஜி சேவை வந்தபோது எத்தனை பேர்கள் செல்போனை பயன்படுத்தினார்கள்? இப்போது நிலை என்ன? அதேபோல கல்வி அறிவும், தொழில்நுட்ப தாக்கமும் சாதாரண மக்களிடையே உயருமானால் இன்னும் சில ஆண்டுகளுக்குப் பிறகு 3ஜி சேவைகூட எளிதாக்கப்படலாம்; படவேண்டும்! அப்போது, 4ஜி சேவையும் வந்துவிடும். இதுகுறித்து ஒழுங்குமுறை ஆணையம் உரிய முடிவுகளை சூழலுக்கு ஏற்ப எடுக்கும். இப்போதைய ஒழுங்குமுறை ஆணையத்தின் முடிவின்படி 3ஜி ஏலம் விடப்படுகிறது.'' இது ராசா அண்ணன் பதில்.
எங்களுக்கு மூச்சு முட்டியது.
"அண்ணே, புரியுது. அபிஅப்பா கேட்ட கேள்விக்கு முதல் பகுதிக்கு இன்னும் பதில் சொல்லலையே... அந்த லேடி நீராராடியா.. நீராராடியா" - இது அப்துல்லா.
சிரித்து கொண்டார்....
"அதாவது நீரா ராடியா டாடா கம்பனியின் அஃபீஸியல் பி ஆர் ஓ. இது நான் சொல்லலை. டாடா கம்பனியே தெளிவா நியூஸ் லெட்டர் வெளியிட்டது. எந்தத் தொலைத்தொடர்புத் துறை அமைச்சருக்கும் இருக்கும் முக்கியமான வேலைன்னா - இத்துறையில் உள்ள பி.எஸ்.என்.எல். உள்ளிட்ட தொலைபேசி நிறுவனங்களிடையே அரசோடு நல்லிணக்கத்தை ஏற்படுத்தி, யாவாரத்தை சீராக வைத்திருப்பதுதான். அந்த வகையில் ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல் பலமுறை என்னை சந்திக்கிறார். ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் அனில் அம்பானி என்னை சந்திக்கிறார். அதேபோல வோடஃபோன், ஏர்செல் போன்ற எல்லா நிறுவனங்களின் தலைவர்களோ, தலைமை அதிகாரிகளோ சந்திப்பதும் சாதாரணமானது. அந்த வகையில் 'டாடா டெலிகம்யூனிகேசன்' நிறுவனத்துக்காக நீரா ராடியா ஆபரேட்டர் மீட்டிங்லயும் , வேற பல மீட்டிங்லயும் கலந்து கிட்டாங்க. என்னிடம் பல்வேறு சட்டப்படியான கோரிக்கைகளை கடந்த காலத்தில் வலியுறுத்தியுள்ளார்.
ஒன்னு புரிஞ்சுக்கனும்... ஒரு நிறுவனத்தின் தலைவரோ, அதிகாரியோ என்னை துறை சார்பாக சந்திக்கிறார் என்பதற்காக அவர் துறைக்கு வெளியேயும் மத்த இடத்திலும் பார்க்கும் சினிமா முதல் பேசும் பழகும் நபர்கள் எல்லாத்துக்கும் நான் எப்படி ரெஸ்பான்ஸ் ஆவேன்? என்னோடு இன்னிக்கு நீங்க உட்காந்து பேசிகிட்டு இருக்கீங்க. போட்டோ எடுத்துகுறீங்கன்னு வச்சுப்போம். நீங்க வீட்டுக்கு போகும் போது ட்ராஃபிக் ரூல்ஸ் மீறி போலீஸ் உங்களுக்கு ஃபைன் போட்டுச்சுன்னா அதுக்கு நானா பொறுப்பு? இது போல் ஊடகங்கள் செய்தி வெளியிட முயற்சிப்பது அயோக்கியத்தனம் தவிர்த்து வேறில்லை. " என்றார் அண்ணன் ஆ.ராசா அவர்கள்!
நான் இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் சொன்னதை மீண்டும் படியுங்கள். \\ சின்ன வயதில் யாராவது "நீ என்ன பெரிய டாட்டா, பிர்லாவா?" என கேட்கும் போதெல்லம் என் மனதில் "அவர்கள் என்ன பெரிய ஆள்.. அவர்கள் வந்து என்னை பார்க்க "நேரம்" கேட்க வேண்டும்.அந்த இடத்தில் நாம் இருக்க வேண்டும் என நினைத்துக்கொள்வேன். ஆனால் நான் சாமானியன். மிக மிக சாமானிய ஒரு சின்ன நகரத்தில் வசிக்கும் ஒரு நடுத்தர வர்க்கம். இதல்லாம் சாத்தியமா? \\
இதோ இங்கே இது சாத்தியம் ஆயிற்று பாருங்கள். ஒரு சாமானியனை இந்த அளவு உயர்த்திய திராவிடத்துக்கும், பெரியாருக்கும், அதை சாத்தியம் செய்த அண்ணாவுக்கும் என் தலைவர் கலைஞர் அவர்களுக்கும், எங்கள் தளபதி அவர்களுக்கும் இந்த நேரத்தில் கண்ணீருடன் நன்றி சொல்கிறேன்!
மீண்டும் சரவணகுமார் கேட்டார் ஒரு கேள்வி....
"அண்ணே, நீராராடியா அமைச்சராக யார் வர வேண்டும் என்றெல்லாம் பேசினதாக செய்தி வந்துச்சே? -
"ஓர் அரசு புதிதாக அமையும்போது, எந்தவொரு துறைக்கும் வரப்போகும் புதிய மினிஸ்டர் யார் வருவாங்கன்ன்னு தெரிஞ்சுக்க பல்வேறு நிறுவனங்களும், தொழிலதிபர்களும், ஊடகங்களும் ஆர்வம் காட்டுவார்கள். இது இயற்கை. உதாரணமாக, 'ஆ.இராசாவுக்கு அமைச்சரவையில் மீண்டும் இடமில்லை' என்று பல டி.வி. சேனல்கள் ஒளிபரப்பின. அதற்காக அந்த சேனல்கள், பிரதமரின் அதிகாரத்தில் தலையிட்டன என்று சொல்ல முடியுமா? பிரதமரிடம் கேட்டுக்கொண்டா அப்படி அவர்கள் செய்தி வெளியிட்டார்கள்? இவையெல்லாம் அனுமானங்கள் மட்டுமல்ல... அது அவங்களோட சொந்த விருப்பு வெறுப்பு தான். இதுக்கெல்லாம் எந்த அமைச்சரும் விளக்கமளிக்க முடியாது.
அதே மாதிரி , இந்த முறை அரசு அமைந்தபோது, 'ஆ.இராசாவுக்கு மந்திரிப் பதவி உண்டா?’ உண்டு எனில் எந்த இலாகா என்பதை எனக்கு வேண்டியவங்களும் கூட ஆராய்ந்து இருப்பாங்க. 'இல்லையா' என்பதை அறிய வேண்டாதவர்களும் தெரிஞ்சுக்க முயற்சி செஞ்சிருப்பாங்க . அதே மாதிரி என் கிட்டயும் பல அதிகாரிகள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், பத்திரிக்கை நண்பர்கள் அந்த நேரத்தில் வெவ்வேறு கருத்துகளை கூட சொன்னாங்க. ஆனால், தலைவர் கலைஞரைத் தாண்டி - காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாரதப் பிரதமர் ஒப்புதல் இன்றி இன்னொருவர் எனக்கு அமைச்சர் பதவியையோ குறிப்பிட்ட இலாகாவையோ தர முடியும் என்று நம்புகிற அளவுக்கு நான் அரசியலில் - அட்மினிஸ்ட்ரேஷன்ல முட்டாள் அல்ல. இதல்லாம் மே மத்தியில் 2010ம் வருடத்தில் ஜூனியர் விகடனுக்கு அளித்த பேட்டியின் போது கூட இதையே சொன்னேன்" - இது அண்ணன் ஆ.ராசா!
நாங்கள் அண்ணன் ராசா அவர்கள் அறைக்கு சென்ற போது மதியம் 2.10 .... இப்போது மணி 3.50 ஆகி இருந்தது. அண்ணன் அவர்களுக்கு இரவு 8 மணிக்கு டெல்லி செல்ல விமானம். இதற்கிடையே தலைவரின் நேர்முக உதவியாளர் திரு.சண்முகநாதன் அவர்களிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. 5 மணிக்கு தலைவர் வீட்டில் இருந்து அறிவாலயம் செல்ல கிளம்ப வேண்டும். 4.50க்கு நீங்கள் தலைவர் வீட்டில் இருக்க வேண்டும்" என்று.
நடு நடுவே இரண்டு முறை தேனீர் வந்தது. நான் அறைக்குள் நுழைந்த போது எனக்கு இருந்த குளிரோ அல்லது நடுக்கமோ இப்போது இல்லை. உடம்பே லேசானது போல உணர்ந்தேன். எழுந்தோம்... அவரும் எழுந்தார்.
"இது சம்மந்தமா என்ன சந்தேகம் இருப்பினும் எப்போதும் தயங்காம கேளுங்க. ஏனனில் இணையத்தில் பலதரப்பட்ட மக்கள் இருக்காங்க. அவங்களுக்கு புரிய வைக்கும் படி விவாதம் செய்யனும். எப்போதுமே தவறான தகவல் தந்து விடக்கூடாது" என்றார்.
நால்வரும் பேசிக்கொண்டே அறையை விட்டு வெளியே வந்தோம்... வாசலில் இருந்த மழைமரம் தந்த நிழலில் நாங்கள் பேசியது எல்லாம் கனவா நிஜமா யோசித்து சிரித்து கொண்டோம். தெளிவான மனோநிலையுடன் வண்டியை எடுத்து எதிர்காற்று காதில் சில்லிட பறந்தோம்.
இது நடந்து ஒரு வருடம் ஆகின்றது. இப்போது தான் இதை வெளியிடுகிறேன். காரணம்... கடந்த நான்கு வருடங்களாக அண்ணன் ராசா அவர்கள் இணையத்தில் கற்பழிக்கப்பட்டது போல யாரும் சீரழிந்து இருக்க மாட்டார்கள். அப்போதெல்லாம் மௌனமாக பதில் சொல்லி கொண்டு இருந்தேன். ஆனால் நேற்று அவருக்கு பிறந்த நாள் ( 26.10.2013). இணையத்தில் எங்கு திறப்பினும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லி பதிவுகள். நான் மட்டுமே என்ன எழுதுவது எப்படி எழுதுவது என குழம்பிவிட்டேன். நேற்று தொலைபேசியில் இதை சிவசங்கர் சார் கிட்டே சொன்னபோது "நீங்கள் போய் அண்ணனை பார்த்து விட்டு கேள்வி கேட்டு பெற்ற பதிலையே கூட பதிவாக போடலாமே" என சொன்னார். அதனால் இதை இப்போது வெளியிட்டு விட்டேன்.
இதே சந்திப்பில் நாங்கள் பேசியது இன்னும் பல விஷயங்கள் இருக்கு. புதியதலைமுறை பேட்டி, காங்கிரஸ், உள்கட்சி விவகாரங்கள்,மாவட்ட விவகாரங்கள் என பல இருப்பினும் அதல்லாம் இங்கே தேவை இல்லை என்பதால் விட்டுவிட்டேன்.
இப்போது நினைத்துப்பார்க்கிறேன். இதே 26.10.2011 ல் அண்ணன் ஆ.ராசா அவர்கள் டெல்லி திகார் சிறையில் இருந்த போது இதே இணையத்தில் எத்தனை ஒரு எகத்தாளம், ஏளனம், நய்யாண்டிகள்.... ஆனால் இன்று 26.10.2013 இன்று பிறந்த நாள் காணும் அண்ணன் ஆ.ராசா அவர்களுக்கு பல நடுநிலையாளர்கள் வாழ்த்துகளை அள்ளி குவிக்கின்றனர். ஏன்??? 2 ஜி வழக்கு கிட்ட தட்ட 80 சதம் முடிந்து விட்டது. ஒன்னே முக்கால் லட்சம் கோடி என்னும் மாய பலூன் உடைந்து விட்டது. இது அல்ல உண்மையான கொண்டாட்டம். அடுத்த வருடம் 26.10.2014 தான் உண்மையான கொண்டாட்டங்கள் உள்ளன. ஏனனில் வழக்கில் இருந்து அண்ணன் ஆ.ராசா குற்றமற்றவர் என வெளியே வரும் நாள் வெகு விரைவில் உள்ளது.... தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும்... தர்மம் மீண்டும் வெல்லும்!
Subscribe to:
Post Comments (Atom)
தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும்... தர்மம் மீண்டும் வெல்லும்!
ReplyDeleteidhu nichayamaga Nadakka vendum!!!
//
ReplyDeleteஒன்று ஸ்மார்ட் போன். அடுத்து ஏதோ ஒறு 1100 மாடல் போன்ற சாதாரண போன்.
//
ஒண்ணு 3க் இண்ணொன்ணு 2க்ன்னு சொல்லுங்க...
அப்து அண்ண அந்த கேள்விய கேட்டதும் உங்களுக்கு சப்தநாடியும் (வேலியில போற ஓணான எடுத்து வேட்டிக்குள்ள உட்ட மாதிரி) நடுங்கியிருக்குமே ....
This comment has been removed by the author.
ReplyDeleteதர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும் தர்மம் மீண்டும் வெலலும்
ReplyDeleteஅபி அண்ணா மிக அருமை
இரவு வணக்கம் அண்ணா
அண்ணா மிகஅருமையான பதிவு உடன்பிறப்புகள் அனைவரும் கண்டிப்பாக படிக்க வேண்டும்.
ReplyDeleteஇனிய இரவு வணக்கம் அண்ணா
ReplyDeleteமிக அற்புதமான பதிவு!.
ஒரு தேர்ந்த பத்திரிகையாளனாக கேள்வியை கேட்டு இருக்கிறீர்கள். அதற்கு அவர் மிக அழகா பதில் சொல்லி இருக்கின்றார். திறமை இல்லாதவன் கலைஞரிடம் நெருங்க முடியாது. திறமையும் எதையும் எதிர் கொள்ளும் திறனும் இருப்பவன் மட்டுமே கலைஞர் பாசறையில் வளர முடியும் என்பதற்கு ராசா ஒரு உதாரணம். மற்ற அரசியல்வாதிகள் ஈர மண்ணில் விழுந்த விதை என்றால், ராசா பாறையில் விழுந்த விதை. அந்த கிளைத்து வளர, போராட்டம் கடினமாகத்தான் இருக்கும்.
நாளிதழ்களில் ஒரு முழு பக்கம் கவர் ஸ்டோரியாக வரக் கூடிய தகுதி இப் பதிவுக்கு உண்டு. ஆனால் வெளியிடக் கூடிய துணிச்சல் யாருக்கும் இல்லை. இதை நாம் இணையத்தில்தான் முழுமையாக வெளியிட முடியும். ஒரு வருடம் கழித்தும் அதை நினைவில் வைத்து பதிவிட்டு இருப்பதற்கு ஷொட்டு!.
வாழ்த்துகள் தோழர்களே!.
உங்க எழுத்து எப்போதும் போல் அருமை.
ReplyDeleteம் ம் .. வேற ஒண்ணும் சொல்றதுக்கில்ல
good na....
ReplyDeleteஉங்கள் கட்டுரையை அதிலும் 2ஜி பற்றிய கட்டுரை என்றால் ஒரு வரி கூட விடாமல் படிப்பவன். நீங்கள் இந்த கட்டுiரையில் உள்ள செய்தியை நிறைய பேர்களுக்கு செல்லும் விதமாக பேஸ்புக் போன்றவற்றில் சிறு சிறு தொகுதியாக வெளியிட வேண்டுகிறேன். அப்படியாவது சில மரமண்டைகளுக் உரைக்கட்டும். மிகவும் சிறந்த கட்டுரை வாழ்த்துக்கள்.
ReplyDeleteof all your blogs,this is supreme one
ReplyDeleteyou ought to have published it last year itself
anyhow unlimited thanks
Remarkable blog.
ReplyDeletethanks
இதுவரை பார்க்காமல் விட்டது ஒ
ReplyDeleteதங்களுக்கு பிடித்த பெரிய மனிதரை சந்திப்பது எனபது எல்லோருக்கும் சாத்தியம் அல்ல. அது உங்களுக்கு அமைந்ததற்கு வாழ்த்துக்கள். மகிழ்ச்சி.
ReplyDeleteராசா சொன்னதிலும் இன்னும் தவறு இருக்கின்றது...
//
"இப்ப தெளிவா கோர்வையா சொல்றேன் பாருங்க, மேலே நாம பேசினதையே அதாவது .2 ஜி என்பது பொது விநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் அரிசி போன்றது. 3ஜி என்பதோ பிரியாணிக்கு பயன்படும் உயர்தர பாசுமதி அரிசி போல! பொது விநியோகத் திட்டத்தில் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்கப்படுகிறது என்பதற்காக, பாசுமதி அரிசியை ஒப்பீடு காட்டி 'ஒரு ரூபாய் அரிசி விநியோகத்தால் அரசுக்கு நஷ்டம்' என்று சொன்னால் ஏற்றுக்கொள்வீர்களா? //
ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் ஏன் எனில் 2g இருக்கும் பொழுது 3g இல்லை. அதாவது சாதாரண அரிசி இருக்கும் பொழுது பிரியாணி அரிசி இல்லை. எனவே சாதாரன் அரசிக்கு கிராக்கி அதிகமாகத்தானே இருக்கும்.?
அதுபோலவே 2g இருக்கும் பொழுது 3g இல்லாததால் அது நிச்சயமாக அதிக விலைக்குத்தான் விற்றிருக்கும் ஏலம் விட்டிருந்தால். எனவே ஏலம் விடாததால் வருமான் இழப்பு எனபது முற்றிலும் மறுக்க முடியாத உண்மை. (பொது விநியோக அரிசி ....பாசுமதி அரிசி சரியான ஒப்பீடு அல்ல. )
மாற்றுக் கருத்து இருந்தால் தெரிவிக்கவும்.