பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

October 13, 2013

மின் கட்டண உயர்வும், அதிமுக ஆட்சி அகற்றப்பட வேண்டிய அவசியமும்!!! (அல்லது) ஏற்காடு இடைத்தேர்தலில் உதயசூரியனுக்கு ஓட்டு போடுங்கள்!!!

மின்கட்டணம் கணக்கிடும் முறை (இப்போது அதிமுக ஆட்சியில்)

நடுநிலையாளர்கள் இந்த பதிவை தயவு செய்து உதாசீனம் செய்யாமல்  படிக்கவும்.


திமுக ஆட்சியில் மின்வெட்டு என்பது இரண்டு மணிநேரம். ஒரு சில மாதங்கள் மட்டும்  ஐந்து மணி நேரம் இருந்தது. அது போல மின் கட்டணம் என்பதும் வீடுகளுக்கு 1.50 ரூபாய் மட்டும் இருந்தது ஒரு யூனிட்டுக்கு. இதற்கே  அப்போது மின் துறை அமைச்சராக இருந்த ஆற்காட்டார் அவர்கள் ஆட்சி மாற்றம் ஏற்ப்பட்டால் அது நான் வகிக்கும் மின் துறை தான் பொறுப்பாக வேண்டும் போலிருக்கு. என்னால் இரவில் இதை நினைத்து நிம்மதியாய் தூங்கக்கூட முடியவில்லை" என சொன்னார். அது நேர்மை.

ஆனால் தேர்தல் நேரத்தில் "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மூன்றே மாதத்தில் மின்சாரம் கொட்டோ கொட்டு என்று கொட்டும்" என வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்தது அதிமுக. அப்போது கூட திமுகவினர் "நாங்கள் கொண்டு வந்துள்ள மின் திட்டங்கள் இன்னும் 6 மாதத்தில் செயல்பாட்டுக்கு வந்துவிடும். அந்த தைரியத்தில் அதிமுக இப்படி சொல்கின்றது என கூறினர். ஆனால் ஆட்சிக்கு வந்த அதிமுக அதைக்கூட  செய்யவில்லை. திமுக ஆட்சியில் கொண்டு வந்த மின் திட்டங்களை கூட  இன்னும் செயல்பாட்டுக்கு முழுமையாக கொண்டு வரவில்லை.

அதனால் தமிழகம் இருளிள் மூழ்கியது. "குஜராத்தில் இருந்து குதித்து வரும் மின்சாரம்" என தலைப்பிட்டு ஜூனியர் விகடன் புகழ்ந்து தள்ளியது. இன்று அதே ஜூவியிடம் போய் கேட்டுப்பாருங்கள் நடுநிலையாளர்களே. குஜராத்தில் இருந்து மின்சாரம் குதித்து வந்ததா இல்லையா என! அவர்கள் இதோ ஏற்காடு இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு சாமரம் வீசி காசு பார்க்க கிளம்பி இருப்பார்கள் இன்னேரம்.

இப்படியாக இருளிள் கிடந்த தமிழகத்துக்கு கடந்த மூன்று மாதங்களாக "காற்றாலை" வழியே கிடைத்த மின்சாரத்தினால் மின்வெட்டு இல்லாமல் போனது. (இப்போது காற்றாலை மின்சாரத்தையும் தமிழக அரசு வாங்காமல் விட்டு விட்டது. தமிழக அரசு மின்சாரம் வாங்கும் என  நம்பி காற்றாலை அமைத்த கம்பனிகள் இன்று வங்கி கடனை கட்ட இயலாமல் நீதிமன்றம் சென்று விட்டன) காற்றாலை வழியே கிடைத்த மின்சாரத்தை கூட அதிமுகவினர் "அம்மா வாயால் ஊதி ஊதி மின்சாரம் கொண்டு வந்தாங்க" என கூறிய கேடுகெட்ட செயலும் நடந்தது. எல்லாம் தமிழன் தலையெழுத்து.

போகட்டும்! இந்த கட்டுரையின் சாராம்சம் என்பது வேறு. மின்வெட்டு என்பது இல்லை. அதை மக்கள் நேரிடையாக உணர்ந்து கொண்டு விட்டமையால் நான் இங்கே சொல்லப்போவது "மின் கட்டண உயர்வு" பற்றியது. தமிழக அரசு 2011 மே மாதம் 13ல் ஆட்சிக்கு வந்தது முதல்  பால் விலை உயர்வு, பேருந்து கட்டண உயர்வு, அத்யாவசிய பொருட்கள் உயர்வு என எத்தனையோ உயர்வுகள் மக்கள் தலையில் விடிந்தாலும் மிக மிக முக்கியமான உயர்வு மின்கட்டண உயர்வு என்பதே.

ஒவ்வொறு விலை உயர்வும் உடனடியாக மக்களை பாதித்தது. ஒரு ஊருக்கு  பேருந்தில் போனவன் திரும்பி வரும் போது பேருந்து கட்டணம் இரவோடு இரவாக உயர்த்தப்பட்டதால் இரட்டிப்பாக உயர்ந்து விட்ட போது பாதி தூரம் நடந்து வந்து ஊர் சேர்ந்தான். அப்போது அவன் பேருந்து கட்டண உயர்வை முழுமையாக உணர்ந்தான். அது போல இரவில் பால் லிட்டருக்கு 6 ரூபாய்க்கு வாங்கின அம்மா அடுத்த நாள் காலை குழந்தைக்கு கொடுக்க லிட்டருக்கு 20 ரூபாய் செலவழித்த போது மும்மடங்குக்கும் மேலான விலை  உயர்வால் கலங்கி போனாள்.

ஆனால் மின்கட்டண உயர்வு என்பது ஜெயா ஆட்சியில் தினம் தோறும் 18 முதல் 20 மணி நேரம் தமிழகம் இருளில் கிடந்த போது உயர்த்தப்பட்டது. அதனால் திமுக ஆட்சியில் செலுத்திய மின் கட்டணமே அப்போதும் அவன் செலுத்தி வந்தமையால் (அதாவது 18 மணி நேர மின் வெட்டு அமலில் இருந்தமையால்) அவனால் முழுமையாக மின் கட்டண உயர்வை புரிந்து கொள்ள முடியவில்லை.

ஆனால் காற்றாலை வழியே இப்போது மின்வெட்டு இல்லாமல் போனதால்.... அவன் கட்டும் மின் கட்டணம் என்பது இப்போது அவன் நினைத்துப்பார்க்க இயலாத ஒரு நிலைக்கு சென்றுவிட்டது. அதிலும் குறிப்பாக அந்த மின் கட்டண உயர்வை "தயாரித்து" கொடுத்தவர் ஒரு மனசாட்சி கொண்ட ஐ ஏ எஸ் அதிகாரியாக இருக்க முடியாது. ஒரு மனிதாபிமானம் கொண்ட நிதி அதிகாரியாக இருக்க முடியாது. ஒரு கைதேர்ந்த மீட்டர் வட்டிக்காரன் தயாரித்த ஒரு  கட்டண உயர்வு என்றே சொல்ல வேண்டும்.

அந்த மின் கட்டணம் உயர்வு வந்த போது எல்லா பத்திரிக்கைகளும் கூட குழம்பிப்போயின. இது எத்தனை சதம் உயர்வு என ஒவ்வொறு பத்திரிக்கையும் வேறு வேறு செய்தியை வெளியிட்டன. ஆனால்  மக்கள் அப்போது அதைப்பற்றி கவலை கொள்ளவில்லை. காரணம் "செத்த கிளிக்கு சிங்காரம் எதுக்கு" என விட்டு விட்டனர். ஆனால் இப்போது காற்று அடிக்க அடிக்க செத்த கிளி உயிருடன் எழுந்து நிற்கும் போது தான் இந்த மின்கட்டண உயர்வு என்பது சாமானியன் கழுத்தை நெரித்துக்கொண்டு இருப்பது எல்லோருக்கும் புரிகின்றது.

இதோ அந்த கட்டண உயர்வு எப்படி என்று பார்ப்போம். தயவு செய்து கொஞ்சம் கூர்ந்து படியுங்கள்.

============================================
முதல் நிலை:-

1-100 யூனிட் வரை ரூபாய் 1.00
நிலைக்கட்டணம் இல்லை.
(நீங்கள் 100 யூனிட்டுக்குள் எவ்வளவு உபயோகித்தாலும்
ஒரு யூனிட்டுக்கு ஒரு ரூபாய் மட்டும் தான். கூடுதலாக
எந்த கட்டணமும் இல்லை.)
===============================================

இரண்டாம் நிலை:-

1-200 யூனிட் வரை ரூபாய் 1.50.
நிலைக்கட்டணம் ரூபாய் 20.00.
(நீங்கள் 100 யூனிட்டுக்கு மேல் உபயோகிக்கும்
சமயம் இந்த இரண்டாம் நிலைக்கு வந்துவிடுவீர்கள்.
நீங்கள் 110 யூனிட் உபயோகித்தால் உங்களுக்கான
தொகை 165.00 + நிலைக்கட்டணம் ரூ.20.00 ஆகமொத்தம்
ரூபாய் 185.00 செலுத்தவேண்டும்.)
=============================================


மூன்றாம் நிலை:-

1-200 யூனிட் வரை ரூபாய் 2.00.
201-500 யூனிட் வரை ரூபாய் 3.00.

நிலைக்கட்டணம் ரூபாய் 30.00.
(நீங்கள் 200 யூனிட்டுக்கு மேல் உபயோகிக்கும்
சமயம் இந்த மூன்றாம் நிலைக்கு வந்துவிடுவீர்கள்.
நீங்கள் 210 யூனிட் உபயோகித்தால் உங்களுக்கான
தொகை 200 யூனிட் வரை 400.00+ 10 யூனிட்டுக்கு
3.00 வீதம் 30.00+ கூடுதல் கட்டணம் ரூ,30.00
ஆகமொத்தம் ரூபாய் 460.00
செலுத்தவேண்டும்.)
=============================================


நான்காம் நிலை:-

1-200 யூனிட் வரை ரூபாய் 3.00.
201-500 யூனிட் வரை ரூபாய் 4.00.
500 க்கு மேல் ரூபாய் 5.75
நிலைக்கட்டணம் ரூபாய் 40.00

(நீங்கள் 500 யூனிட்டுக்கு மேல் உபயோகிக்கும் சமயம்
இந்த நான்காம் நிலைக்கு வந்துவிடுவீர்கள்.
நீங்கள் 510 யூனிட் உபயோகித்தால்

முதல் 200 யூனிட்டுக்கு 600.00+ அடுத்த 300
யூனிட்டுக்கு 4 ரூபாய் வீதம் 1200.00+ 10
யூனிட்டுக்கு 5.75 வீதம் ரூபாய்
57.50+கூடுதல் கட்டணம் ரூபாய் 40.00
ஆகமொத்தம் ரூ.1898.00 நீங்கள்
செலுத்தவேண்டும்)
==================================================


நன்றாக கவனிக்கவும் முதல் நிலை என்பது 1 முதல் 100 யூனிட் வரை பயன்படுத்தும்  குடும்பம். ஒரு குடும்பத்தில் ஒரே ஒரு லைட் இரவில் மட்டும் அதும் மாலை ஆறு முதல் பத்து மணி வரை என வைத்துக்கொண்டால் கூட 100 யூனிட்டை தாண்டும். அப்படி 101 யூனிட்  வந்தால் கூட அவன் செத்தான். 100 யூனிட் வரை அவன் செலுத்த  வேண்டிய கட்டணம் 100 ரூபாய் தான். அதே 101 யூனிட் ஆனால் அவன் 185 ரூபாய் கட்ட வேண்டும். தமிழகத்தில் 100 யூனிட் மட்டும் செலவழிக்கும் ஆள் யாரும் இல்லை. ஏனனில் மின் கட்டணம் என்பது இரண்டு மாதத்துக்கு ஒரு முறை தான் கணக்கிடப்படும் என்பதை மனதில் கொள்க!

அது போல நிலைக்கட்டண வசூல் என்னும் புதிய முறை கூட இப்போது ஜெயா அரசால் கொண்டு வரப்பட்டுள்ளது. தவிர எந்த ஒரு சின்ன குடும்பமும் 500 யூனிட்டுக்கு குறையாமல் தான் பயன் படுத்துகின்றன தமிழகத்தில். ஆக கலைஞர் ஆட்சியில் 500 முதல் 700 வரை மின் கட்டணம் கட்டிய குடும்பம் இன்று 2500 முதல் 3000 வரை கட்ட வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இது தான் உண்மை. தமிழகத்தில் எல்லோருமே நான்காம் நிலையில் (மேற் கூறிய கட்டணப்படி) தான் உள்ளனர். ஏனனில் அதுதான் எல்லோர் வீட்டிலும் மிக்சி, கிரைண்டர், பேன், அயர்ன் பாக்ஸ், லைட்டுகள் , ப்ஃரிட்ஜ் என எல்லாம் உள்ளதே! தவிர காற்று புக முடியா ஜன்னல் வசதி இல்லா புறாக்கூண்டுகள் சென்னை போன்ற இடங்களில். அங்கே அதன் காரணமாகவே ஏ.சி வசதி செய்து கொள்கிறான். அப்பாடி ஏ சி வசதி கொண்டவன் கட்டும் மின் கட்டணம் 6000 முதல 8000 வரை வருகின்றது.முன்பெல்லாம் அதாவது கலைஞர் ஆட்சியில் வீட்டு வாடகையில் பத்தில் ஒரு பங்கு மின் கட்டணம் என  இருந்த நிலை இன்று வீட்டு வாடகை 3000 எனில் அந்த சின்ன வீட்டுக்கு அவன் கட்டும் மின் கட்டணம் 3500 ரூபாய்.வீட்டுக்கட்டணம் மட்டுமே இந்த லட்சனம். இன்னும் தொழிற்சாலை கட்டணங்கள் பற்றி நான் இந்த கட்டுரையில் சொல்லவே இல்லை.


இதான் இன்றைய உண்மை நிலை! மின்வெட்டு இருந்த போது இந்த சுமை அத்தனை வீரியமாக தெரியவில்லை. ஆனால் "காற்றாலை" மின்சாரம் இப்போது கிடைப்பதால் (கவனிக்க... ஜெயா அரசு இது வரை எந்த மின் திட்டமும் தொடங்கவில்லை... திமுக ஆட்சியில் கொண்டு வந்த மின் திட்டங்களையும் இன்னும் முழுமையாக செயல்பாட்டுக்கு கொண்டு வரவில்லை. காற்று அடிப்பாதால் வரும் மின்சாரம்) நாம் இப்போது கடுமையான மின் கட்டண உயர்வால் பாதிக்கபட்டுள்ளோம் என்பதை உணர்ந்து ஏற்காடு இடைத்தேர்தலில் அதிமுக அரசுக்கு தக்க பாடம் கற்பிப்போம்!
ஏற்காடு இடைத்தேர்தல் வேட்பாளர் வெ.மாறனை வெற்றிமாறன் ஆக்குங்கள்!
ஏற்காடு இடைத்தேர்தலில் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களியுங்கள்!


இத்துடன் இணைக்கப்பட்டுள்ள  அட்டவணையை பார்த்து உங்கள் வீட்டு மின் கட்டணம் எவ்வளவு வருகின்றது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அதே போல திமுக ஆட்சியில் நீங்கள் கட்டிய பணம் என்ன என்று பழைய மின் அட்டையை பார்த்து ஒப்பீடு செய்து கொண்டு வாக்களியுங்கள்!

6 comments:

 1. மின்சார கட்டண உயர்வு தந்த அதிர்ச்சியை மக்கள் மறக்க மாட்டார்கள். தங்கள் வாக்குகளை உதய சூரியனுக்கு அள்ளி வழங்கி ஜெயலலிதாவின் அதிமுக அரசுக்கு அதிர்ச்சி வைத்தியம் செய்வார்கள்.

  ReplyDelete
 2. நல்ல பதிவு. மக்கள் சிந்திக்கட்டும்.

  ReplyDelete
 3. IRANDUM ORE KUTTAYIL OORIYA MATTAIKAL

  ReplyDelete
 4. Good article....but we always we forget one thing... Price hiking is normal thing in every matter..compare the Gold/petrol price or anything with MK/JJ period. Is there any role of JJ/MK. its natural. So we should make price hiking in regular interval. MK & JJ both are same in character wise and playing their role for Vote only. Finally we should compare the price of basic thing like Milk/Electricity/etc other states only not with JJ or MK. If your article is meaningful one then there is no difference between the petrol/diesel price with india to other countries.... its is also like that...........there is no use. Because if MK got the power definitely he will not go to reduce hike made by JJ. its true.

  ReplyDelete
 5. "மின் கட்டண உயர்வும், அதிமுக ஆட்சி அகற்றப்பட வேண்டிய அவசியமும்!!"

  அதோட கருணாநிதி செத்து போய் ஸ்டாலினுக்கு வழி விடுதல் அதை விட அவசியம்

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))