பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

February 10, 2009

ஆண்டவன் வச்ச ஆப்பு!!!(இனிமே கவிதையை கிண்டல் பண்ணாதடா அபிஅப்பா)



நான் எத்தனை கவிதையிலே போய் 'ஹச், ஹச்"ன்னு தும்மி கிட்டு வந்தேன்! ஆண்டவன் வச்சுட்டாண்டா ஆப்பு!
***********************************

நான் கடந்த நவம்பர் 10ம் தேதி இந்தியா போன உடனேயே கும்பகோணத்தில் டெஸ்ட் அது இதுன்னு ஆகி போச்சு.12ம் தேதி அபிபாப்பா திரும்ப திரும்ப போன் பண்ணி மாயவரம் வர சொன்னாள். சரின்னு 12ம் தேதி இரவு 11 மணிக்கு கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை போனேன். அப்போ அதிசயமா பாப்பாவும் தம்பியும் முழிச்சுகிட்டு இருந்தாங்க. ரெண்டு பேருமே புதுசா சட்டை போட்டிருந்தாங்க. எனக்கோ ரொம்ப டயர்டு. பாப்பா ஏதோ ஒரு வித ஜாலி படபடபோடும் தம்பி என்னன்னு தெரியாமையே புது சட்டை போட்டு கொண்டும் என்னை பார்த்ததும் ரொம்ப குஷியாகிட்டாங்க.


தம்பி தான் நான் எப்போ வெளியே போனாலும் கீழே விழுந்து புரண்டு அழுவதும் திரும்பி வரும் போதும் அதே மாதிரி சந்தோஷத்திலே புரண்டு சிரிப்பதும் வாடிக்கைதான். நான் வந்த அசதியிலே அப்படியே தூங்கிட்டேன். 12 மணி ஆகும் போது பசங்க 2 பேரும் என் மேலே ஏறி குதித்த போது எனக்கு ஒரு வித எரிச்சலாகவும்(நெசமாவே அப்படி இருந்தது) "கிருஷ்ணா பசங்களை பிடிக்க கூடாதா ராத்திரி 12 க்கு என்ன விளையாட்டு" என கத்திய போது தம்பி தன் சந்தோஷத்தை மறந்து அப்படியே விக்கித்து நிற்க கிருஷ்ணா "ஹேப்பி பர்த்த் டே"ன்னு சொல்ல என் கோவம் முழுவது போய் விட்டது.

நான் அப்படியே சமாளித்து தம்பியை சமாதானமாக்க அவன் "சரி இது அப்பா ச்சும்மா ஊலுலூவாக்கும்''ன்னு கத்தினாங்க போல இருக்குன்னு நெனச்சு கிட்டு பாப்பா சொல்வது மாதிரியே அவன் பாஷையில் ஹேப்பி பர்த் டே சொல்ல பாப்பா ஓடி போய் மறைத்து வைத்த எனக்கான கிஃப்ட்டை எடுத்து வந்து ரெண்டு பேரும் சேர்ந்து கொடுக்க பிரித்து பார்த்தால் ஒரு அழகிய செடி!

நான் நிஜமாகவே சொர்கத்தை உணர்ந்த தருணம் அது என கூட சொல்லலாம். பின்பு பாப்பா ஏதோ கவிதை ஒன்றை எழுதி அதை வரி வரியாக பிய்த்து என் தலையில் போட தம்பியும் அது ஏதோ சடங்கு மாதிரி நினைத்து அவனும் போட அது தீர்ந்து போனதும் ஓடி போய் ஒரு ஆனந்த விகடனை அவசர அவசரமாக பிய்த்து என் தலைவில் போட அது அவனுக்கு திருப்தியளிக்காத காரணத்தால் பக்கத்தில் இருந்த டம்ளரில் இருந்து தண்ணீரையும் எடுத்து கொட்ட அந்த கவிதையோடு சேர்ந்து என் தலையும் நனைந்தது.

நான் ஊருக்கு வரும் போது பாப்பா அவசர அவசர மாக அதே கவிதையை ஏதோ ஒரு நோட்டு பேப்பரில் எழுதி கிழித்து அதை என் பாக்கெட்டில் வைக்க நான் அத்தோடு அதை மறந்து விட்டேன். ஆனால் இன்று அந்த சட்டையை எடுக்கும் போது அந்த கவிதை கிடைத்தது, அந்த கவிதையை நான் அங்கே ரசித்ததை விட இங்கு ஆயிரம் மடங்கு இங்கே ரசிக்கிறேன். ஸ்பெல்லிங் மிஸ்டேக்(என்னை விடவா) என்பதை எல்லாம் தாண்டி அந்த பாசம் மனதை நிறைத்து விடுகின்றது.ஐந்து நட்சத்திர மங்கிய விளக்கில், முகம் தெரியாமல், ஏதோ தின்று கொண்டாடுவதை விட இது தான் மிக அழியா நினைவாக இருக்கும் என்பதில் உங்களுக்கு எதுனா சந்தேகமிருக்கா?

60 comments:

  1. புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?.
    இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.
    WHERE IS THE PARTY?
    அபி அப்பா வூட்ல PARTY

    ReplyDelete
  2. //ஐந்து நட்சத்திர மங்கிய விளக்கில், முகம் தெரியாமல், ஏதோ தின்று கொண்டாடுவதை விட இது தான் மிக அழியா நினைவாக இருக்கும் என்பதில் உங்களுக்கு எதுனா சந்தேகமிருக்கா?//

    சந்தேகமேயில்லை!

    ஒரு இரவு என் மகள் சாப்பிடிங்களாப்பா
    என்று கேட்டதற்க்காக ஒரு மணி நேரம் விக்கி விக்கி அழுதிருக்கிறேன்

    ReplyDelete
  3. நெகிழ்வான உணர்வுகளை பகிர்ந்து கொண்டமைக்கு ந்னறி!

    என் மகளுக்கும் கவிதை எழுத கற்று கொடுக்கவேண்டும்.

    5 வயசுல கத்து தரலாம்ல?

    ReplyDelete
  4. இப்படி சந்தோஷத்தில் திக்குமுக்காடவைக்கவும், நினைத்து நினைத்து மகிழ்ச்சியில் கண்ணீர் துளிர்க்கவைக்கவும் குழந்தைகளால் மட்டுமே முடியும்.

    இளம் கவிதாயினிக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. super:):):)கவுஜப் பாடுறதுல அப்டியே அவங்க அத்தையக் கொண்டிருக்கா அபி, சரியா:):):)

    ReplyDelete
  6. // தம்பியும் அது ஏதோ சடங்கு மாதிரி நினைத்து அவனும் போட அது தீர்ந்து போனதும் ஓடி போய் ஒரு ஆனந்த விகடனை அவசர அவசரமாக பிய்த்து என் தலைவில் போட அது அவனுக்கு திருப்தியளிக்காத காரணத்தால் பக்கத்தில் இருந்த டம்ளரில் இருந்து தண்ணீரையும் எடுத்து கொட்ட அந்த கவிதையோடு சேர்ந்து என் தலையும் நனைந்தது.//

    இதைவிட ஒரு கொண்டாட்டம் தேவையா? குழந்தையின் செயலை கற்பனையிலேயே ரசிக்க முடிகிறது. நேரிலே அனுபவித்த உங்களுக்கு?

    ReplyDelete
  7. குழந்தைகள் வெச்ச ஆப்பு! இப்ப
    என்னா சொல்றீங்க அபி அப்பு?

    ReplyDelete
  8. கவிதை எழுதப்பட்ட காகிதத்தை பத்திரமாக சட்டமிட்டு வையுங்கள்.
    காலத்துக்கும் அழியாத காவியம் அது!!!

    ReplyDelete
  9. வயசு ஆவுதுன்னே கவலை இல்லாம என்னா செண்டிமெண்ட் வேண்டிக்கிடக்கு சித்தப்பு!

    வாழ்த்துக்கள், இன்னும் பல நூறு வருசம் வாழனும்.

    ReplyDelete
  10. நெகிழ்வான உணர்வுகளை பகிர்ந்து கொண்டமைக்கு ந்னறி!

    ReplyDelete
  11. நெகிழ்வான ஸ்பெஷல் கிஃப்ட் அது!

    லேமினேட் பண்ணி பத்திரமா வெச்சிக்கோங்க!

    ReplyDelete
  12. // SPIDEY said...

    புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?.
    இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.//

    தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்களுனு சொல்லுங்க...

    அதோட மாத்தி சொல்லனும்.. பூனைக்கு பிறந்தது புலியாகி உள்ளது :)))(புலியும் பூனை குடும்பம் தானே)

    ReplyDelete
  13. கவிதை அழகானதுன்னு இப்பவாச்சும் புரிஞ்சா சரி!

    பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  14. //. பூனைக்கு பிறந்தது புலியாகி உள்ளது//

    ரிப்பீட்டேய்!

    ReplyDelete
  15. //(இனிமே கவிதையை கிண்டல் பண்ணாதடா அபிஅப்பா)"//

    நியாயமா.. இது போல தன் குடும்பம் தன் மகள் னு நீங்களே தடுமாறலாம தொல்ஸ்... அபி கவுஜு வடிச்சனை நினைச்சு எனக்கு சந்தோஷம் தான். இருந்தாலும் அந்த பிஞ்சு மனசில் கவுஜு என்ற நஞ்சை கலந்த கயவர்கள் கூட்டம் ஒன்றா இரண்டா.. காயத்ரி, இம்சையில் ஆரம்பிச்சு சென்ஷி, கோபி வரை நீளுகிறது...

    இருந்த போதிலும் தர்மத்தின் மணிக்கொடி என்றும் தாங்கி பிடித்து சபையில் நீதி தோற்று விட கூடாது என்ற ஒற்ற காரணத்தின் மீது வலுவான எண்ணம் கொண்டு தொடந்து கவுஜுகளை நீங்கள் கிண்டல் பண்ண வேண்டும் என்பது தான் என் ஆவா...

    அதை நீங்கள் நிறைவேற்றுவீர்களா அய்யா?

    ReplyDelete
  16. நெகிழ்ச்சியாயும், மகிழ்ச்சியாயும் உள்ளது.

    கவிதையின் கடைசி வரியிலிருந்த க்ரியேடிவிட்டிக்கு என் அன்பு முத்தங்களைப் பரிசாய்க் கொடுங்கள்.

    நாளை அபி ஒரு பெயர் பெற்ற எழுத்தாளராகலாம்,

    இந்தக் கவிதை மிக மிக ஸ்பெஷலானது.

    'அடப்போங்க சார்.. இந்த மாதிரி பொண்ணுகளைப் பெத்துட்டோம்.. இனி என்னடா வேணும் லைஃப்ல'ன்னு ஒரு சந்தோஷம் வருதா?

    எனக்கு தோணுதுங்க!

    I'm moved!

    ReplyDelete
  17. //(இனிமே கவிதையை கிண்டல் பண்ணாதடா அபிஅப்பா)"//

    நியாயமா.. இது போல தன் குடும்பம் தன் மகள் னு நீங்களே தடுமாறலாம தொல்ஸ்... அபி கவுஜு வடிச்சனை நினைச்சு எனக்கு சந்தோஷம் தான். இருந்தாலும் அந்த பிஞ்சு மனசில் கவுஜு என்ற நஞ்சை கலந்த கயவர்கள் கூட்டம் ஒன்றா இரண்டா.. காயத்ரி, இம்சையில் ஆரம்பிச்சு சென்ஷி, கோபி வரை நீளுகிறது...

    இருந்த போதிலும் தர்மத்தின் மணிக்கொடி என்றும் தாங்கி பிடித்து சபையில் நீதி தோற்று விட கூடாது என்ற ஒற்ற காரணத்தின் மீது வலுவான எண்ணம் கொண்டு தொடந்து கவுஜுகளை நீங்கள் கிண்டல் பண்ண வேண்டும் என்பது தான் என் ஆவா...

    அதை நீங்கள் நிறைவேற்றுவீர்களா அய்யா?

    ReplyDelete
  18. This comment has been removed by the author.

    ReplyDelete
  19. ரொம்ப அழகா இருந்தது அபி அப்பா.

    அதுவும் கடைசியா தம்பியோட பேரும் சேத்து போட்டாங்க பாருங்க அது இன்னும் அழகு. இன்று போல் என்றும் வாழ்க வாழ்த்துக்கள்..

    (மன்னிச்சிடுங்க போன பதில்'ல எழுத்து பிழை அதிகம் )

    ReplyDelete
  20. இனிமேலிருந்து அபி அப்பாவிடமிருந்து சகல கவிஞர்களுக்கும் மானியம் கிடைக்கும் என்று அறிவிக்கப்படுகிறது. பார்ப்போம், வருகிறாரா என்று :))

    புதுக் கவிதாயினிக்கு வாழ்த்துகள்.

    அனுஜன்யா

    ReplyDelete
  21. அபிப்பா..

    நம்ம அபி கண்ணுவுக்கு நல்ல எழுத்துத் திறமையிருக்கு.. இப்பவே நல்ல ஊக்கமும், உற்சாகமும் கொடுத்தீங்கன்னா உங்களுடைய பேர் சொல்லும் பிள்ளையாக உருவெடு்ப்பாள்.

    கவிதைக்கு பொய் அழகு என்பார்கள். இங்கே நம்ம அபியின் கவிதைக்கு எழுத்துப் பிழைதான் அழகு..

    சொக்குது போங்க.. பெத்தவரு நீங்க.. எப்படி இருக்கும்னு எங்களால யூகிக்க முடியுது..

    உங்களது சந்தோஷங்கள் என்றென்றைக்கும் நிலைத்து நீடித்திருக்கட்டும்..

    ReplyDelete
  22. அபி கவிதை செம.... அத இந்த பதிவுல போட்டு பகிர்ந்தது இன்னும் அட்டகாசம்... அபிக்கு வாழ்த்துக்கள்... உங்களுக்கு லேட்டா பிறந்தநாள் வாழ்த்துக்கள்... :))

    ReplyDelete
  23. அப்பாவுக்கு மகள் தரும் கவிதை. சந்தேகமேயில்லாமல் நினைத்து நினைத்து மகிழத்தக்க தருணம்தான்.
    அதைப் பகிர்ந்து எம்மையும் மகிழ வைத்து விட்டீர். நன்றி

    ReplyDelete
  24. கவிதை அழகானதுன்னு இப்பவாச்சும் புரிஞ்சா சரி!

    பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  25. கவிதைக்குப் பொருத்தமாய்
    கவிதையாய் இருக்கிறது படமும்.

    சந்தையையே தனக்குத் தந்த தந்தையை விந்தையாய் பார்ப்பதாய் ஆரம்பிக்கும் அபி கூறுகிறாள்:

    //"பேதையாய் நானிருந்தாலும்
    மேதையென்று கூறுகிறாய்//

    அற்புதம்.

    //கவிதை படிக்க மட்டுமே தெரிந்த என்னை
    கவிதை எழுதுகிறாள் எனக் கதை விட்டாய்”//

    தேர்ந்த கவிஞர்களுக்குக் கூட இததகைய வரிகள் சிக்குமா தெரியவில்லை. தெரிகிறது ஒரு தேர்ச்சி எழுத்தில்.

    //”அதை உண்மையாக்கி விட்டேன் பத்தாவது வரியில்”//

    என்ன ஒரு பன்ச்சுடன் முடித்திருக்கிறாள் குழந்தை.

    அந்த //‘பிறந்தநாள் வாழ்த்துக்கள்’// தான் கவிதை எனக் கூறி.

    அடங்கவில்லை இன்னும் என் வியப்பு.

    அபிக்கு என் அன்பான வாழ்த்துக்களும் ஆசிகளும்.

    ReplyDelete
  26. வரிகளின் வனப்பைத் தாண்டி அதனுள் பொதிந்திருக்கும் களங்கமற்ற பாசம் எவர் கண்ணிலும் நீர் துளிர்க்கச் செய்யும். பெற்றவர் உங்களுக்கு இருக்காதா பின்னே?

    ReplyDelete
  27. அபிக்கு பாராட்டுக்கள், இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  28. அட்ரா..அட்ரா..அட்ரா சக்கை.. ;))))

    ReplyDelete
  29. கவிதை அழகானதுன்னு இப்பவாச்சும் புரிஞ்சா சரி!

    பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  30. அடடா...நீரும் ஒரு அழகுத்தந்தை அய்யா!

    ஆனாலும் நீர் ஒரு விந்தையே!

    அபிப்பாப்பா...நீ நல்லா இருக்கணும்!
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  31. சான்சே இல்லை.... இல்லை இல்லை நிறைய சான்ஸ் இருக்கு ! அபி மிக பெரிய
    ஆளாகும் போது நாங்களும் சொல்வோம் - விளையும் பயிர் முளையிலே தெரிஞ்சதுனு !!

    நால்வர்க்கும் வாழ்த்துக்கள்.

    அன்புடன்
    மாசற்ற கொடி

    ReplyDelete
  32. \\காயத்ரி, இம்சையில் ஆரம்பிச்சு சென்ஷி, கோபி வரை நீளுகிறது...\\

    அடப்பாவி சகா..இது உனக்கே நியாமா!!!...என்னை என்டா இதுல இழுக்குற சென்ஷியோட நிருத்திக்கோ நான் இல்லை...நான் அவன் இல்லை..;))

    ReplyDelete
  33. எதிர்பாரா தருணங்களில் கிடைக்கும் இம்மாதிரியான நெகிழ்ச்சியான அன்புக்கும் பாசத்துக்கும் ஏதுமில்லை ஈடு.

    ReplyDelete
  34. நெகிழ்வும், மகிழ்வுமாயிருந்த தருணங்களை பகிர்ந்ததற்கு நன்றி அபிஅப்பா! வாழ்த்துக்களும்.

    ReplyDelete
  35. ஹைய்ய்ய்ய் இது நான் முன்னாடியே படிச்சுட்டேனே :)))

    ReplyDelete
  36. //Namakkal Shibi said...
    //. பூனைக்கு பிறந்தது புலியாகி உள்ளது//

    ரிப்பீட்டேய்!
    //

    ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்

    ReplyDelete
  37. அபியால் அப்பாக்கு பெருமை
    அப்பாவால் அபிக்கு பெருமை
    அசத்துங்க

    என்ன கவிதைக்கு மான்யமா
    நான் எழுதிட்டிருந்தப்பல்லாம் புள்ளியைத்தான்யா வச்சீங்க.. பின்னூட்டத்துல இப்ப மான்யமெல்லாம் தரீங்களே.. :(
    (கவுண்டமணி லஞ்சம் வாங்கமாட்டேன்ன காமெடியாட்டம் ஆகிடுச்சே )

    ReplyDelete
  38. //சுரேகா.. said...

    அடடா...நீரும் ஒரு அழகுத்தந்தை அய்யா!

    ஆனாலும் நீர் ஒரு விந்தையே!

    அபிப்பாப்பா...நீ நல்லா இருக்கணும்!
    வாழ்த்துக்கள்!
    //

    ரிப்பீட்டு!

    ReplyDelete
  39. இது போல் ஒரு கிஃப்ட் உங்கள் வாழ்நாளில் எத்தனை நெருங்கிய உறவுகளை சம்பாதித்தாலும் கிடைக்கப் போவதில்லை.

    பிறந்த பயனை நீங்கள் அடைந்திருப்பீர்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை

    பிறந்தநாள் & மற்றுமோர் கவிதாயினைப் பெற்றதற்காகவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  40. ரொம்ப நெகிழ்வான நிகழ்வு.. கண்ணுபட போகுது அபி அப்பா..

    ReplyDelete
  41. என்னது தம்பி போதையாக இருக்கிறாரா?

    என்ன கொடுமை அபி அப்பா?

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  42. ////பரிசல்காரன் said...

    நெகிழ்ச்சியாயும், மகிழ்ச்சியாயும் உள்ளது.

    கவிதையின் கடைசி வரியிலிருந்த க்ரியேடிவிட்டிக்கு என் அன்பு முத்தங்களைப் பரிசாய்க் கொடுங்கள்.

    நாளை அபி ஒரு பெயர் பெற்ற எழுத்தாளராகலாம்,

    இந்தக் கவிதை மிக மிக ஸ்பெஷலானது.

    'அடப்போங்க சார்.. இந்த மாதிரி பொண்ணுகளைப் பெத்துட்டோம்.. இனி என்னடா வேணும் லைஃப்ல'ன்னு ஒரு சந்தோஷம் வருதா?

    எனக்கு தோணுதுங்க!

    I'm moved!////

    ரிப்பீட்டேய்!

    ReplyDelete
  43. அபி அப்பா,
    குழந்தைகளுக்கும் உங்களுக்கும் நூறாண்டு பாக்கியத்தோடு வாழ வாழ்த்துகள்.
    அபிப்பாப்பாவின் மேதைக்கு தகுந்த கவிதை கொடுத்திருக்கிறாள்.
    அநேக ஆசிகள்.

    ReplyDelete
  44. வாவ் சூப்பர் அபி பாப்பா.. :)) இனிமேலாவது இந்த அத்தை பக்கம் வர சொல்லு உங்க அப்பாவ.. :P

    ReplyDelete
  45. //இப்படி சந்தோஷத்தில் திக்குமுக்காடவைக்கவும், நினைத்து நினைத்து மகிழ்ச்சியில் கண்ணீர் துளிர்க்கவைக்கவும் குழந்தைகளால் மட்டுமே முடியும்//

    இது முற்றிலும் உண்மையே.
    வாழ்த்துக்கள் அபி அப்பா.

    ReplyDelete
  46. அபிக்கு பாராட்டுக்கள், இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  47. //சந்தேகமேயில்லை!

    ஒரு இரவு என் மகள் சாப்பிடிங்களாப்பா
    என்று கேட்டதற்க்காக ஒரு மணி நேரம் விக்கி விக்கி அழுதிருக்கிறேன்
    //

    அண்ணாத்த! மப்புல அது மட்டும் கரெக்டா தெரிஞ்சுருக்கு பாருங்க உங்களுக்கு. அதுதாய்யா பாசம்

    :))

    ReplyDelete
  48. ஹா ஹா

    ஹேப்பி பர்த்டே தொல்ஸ்ணா!!

    கவித சூப்பர். அபி எழுதினதாச்சே இப்பிடி சொல்லலைனா அடுத்த தரம் வரப்ப கோச்சுக்குமே!!

    :))))

    ReplyDelete
  49. /
    வால்பையன் said...

    ஒரு இரவு என் மகள் சாப்பிடிங்களாப்பா
    என்று கேட்டதற்க்காக ஒரு மணி நேரம் விக்கி விக்கி அழுதிருக்கிறேன்
    /
    அவ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  50. //
    தன் மகள் னு நீங்களே தடுமாறலாம தொல்ஸ்... அபி கவுஜு வடிச்சனை நினைச்சு எனக்கு சந்தோஷம் தான். இருந்தாலும் அந்த பிஞ்சு மனசில் கவுஜு என்ற நஞ்சை கலந்த கயவர்கள் கூட்டம் ஒன்றா இரண்டா.. காயத்ரி, இம்சையில் ஆரம்பிச்சு சென்ஷி, கோபி வரை நீளுகிறது...
    //

    ஹா ஹா
    விழுந்து விழுந்து சிரித்தேன்

    ReplyDelete
  51. வாழ்வின் மிக விசேடமான தருணங்கள் சில பரிசுகளாகவும் இருக்கின்றன பத்திரமா வச்சுக்குங்க ...

    ReplyDelete
  52. கொஞ்சம் என்ன நிறைவே லேட்டாயிடுத்து மன்னிச்சுக்கோங்க பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  53. நெகிழ்ச்சியான பதிவு.

    அபிக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  54. அதிஷ்ட்டக்கார அப்பா:))
    வாழ்துக்கள்:)))

    ReplyDelete
  55. வாவ்! வாழ்த்துக்கள் அபி அப்பா! இப்படி ஒரு நல்ல கிப்ட் கிடைக்க கொடுத்து வைத்து இருக்கனும்.

    ReplyDelete
  56. நிச்சயமா சந்தேகமே இல்லை அபி அப்பா...மீன் குஞ்சிற்கு நீந்த கற்றுக்கொடுக்க வேண்டியதில்லை...நீங்களும் இனி (?) கவிதை எழுத ஆரம்பிங்க....

    இன்னொரு ஆப்பு இந்த லிங்குலே இருக்கு வாங்க வந்து உங்க கமெண்டை குமுறுங்க

    http://sarukesi.blogspot.com/2009/03/blog-post_17.html

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))