பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

February 14, 2009

"காதல் ஜீப்பில் நானும் தொத்திக்கவா?"- காதலர் தின ஸ்பெஷல் மீள் பதிவு!!!

காதலர் தினம் வந்துட்டா போதும் தமிழ்மணம் முழுக்க காதல்வயப்பட்டு போய்விடுகின்றது. நல்ல கவிதைகள் பிரசவமாகின்றன. நிறைய புலம்பல்கள், கொஞ்சம் சந்தோஷங்கள், கொஞ்சம் பெருமூச்சு, கொஞ்சம் பொறாமைகள், கொஞ்சம் கர்வம் இப்படி கலந்துகட்டியான பிரயாணிகளுடன் காதல் ஜீப் போய் கொண்டு இருக்குது தமிழ்மனத்திலே. அடியேனும் ஒரு சின்ன சைஸ் ரவுடிதான், ஸோ எச்சூச்மீ எனக்கும் கொஞ்சம் இடம் கொடுங்க, நானும் தொத்திகறேன்! ஆனா இது ஒரு மீள் பதிவு தான்! என்ன செய்ய காதலை பத்தின சரக்கு அத்தனையே என் கிட்ட:-))


**********************************************


அந்த தாவணி தேவதையின் பெயர் சூடிக்கொடுத்த சுடர் கொடி. அவளின் வசீகரமே அவள் தலைமுடிதான். மற்ற பெண்களின் சடையின் அடர்த்தி இவள் சடையின் ஒரு பிரிக்கு சமமாக இருக்கும். அத்தனை மொத்தமான சடை அவள் முட்டிகால வரை பிரண்டு ஆட்டம் போடும். அவள் கொஞ்சம் குள்ளமான உருவம். நிறம் என்று பார்த்தால் மாநிறம் தான். அவள் சிகப்பாக இருந்திருந்தால் கூட அத்தனை நன்றாக இருந்திருக்காது. நல்ல திருத்திய முகம். ஆனால் எப்போதுமே ஒரு மெல்லிய சோகம் இழந்து ஓடும் உதடுகள். கண்கள், அதன் உள்ளே ஓடி விளையாடும் அந்த கருப்பு திராட்சகள் கிட்ட தட்ட ஆண்கள் அத்தனை பேரையுமே "அட" போட வைக்கும்.


என் வீட்டுக்கு எதிர் வீடு அவளின் உறவினர் வீடு. அவள் வீடு எங்கள் ஊரிலிருந்து 20 கி.மீ தள்ளி இருந்தது. +2 வரை அங்கே படித்துவிட்டு கல்லூரிக்காக உறவினர் வீட்டுக்கு வந்து விட்டாள். ஒரு காலை நேரத்தில் அவளின் உடமைகள் அடங்கிய ஒரு ஒயர் கூடையோடு அவளின் அப்பா அழைத்து வந்த போது தான் நான் முதன் முதலாக பார்த்தேன். அந்த வினாடியை இந்த நிமிடம் வரை என்னால் மறக்க முடியவில்லை. அவளுக்காகவே நான் தட்டச்சு பயிற்சிக்கு சென்றேன். அவளை கவர எத்தனை முயற்சிகள்.


ஆனால் அவள் எதற்கும் அசைந்து கொடுக்காதமையால் ஒரு நாள் தட்டச்சு பயிற்சி பள்ளியின் வாசலில் இருந்த அவள் சைக்கிளோடு என் சைக்கிளையும் இணைத்து பூட்டிவிட்டு காத்திருந்தேன். வந்து பார்த்த அவள் கொஞ்சமும் கோபிக்கவில்லை. "என்னங்க நம்ம சைக்கிளுக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டீங்க" என சொல்லிவிட்டு மெல்லியதாக சிரித்தாள். எனக்கு ஆயிரம் வண்ணத்து பூச்சிகள் மனதில் பறக்க தொடங்கி விட்டது. என்னை இந்த உலகமே கவனிக்க தொடங்கியது போல ஒரு நினைவு. என்னை சுற்றி ஒரு கூட்டம் எப்போதுமே இருக்கும். என் வேடிக்கை பேச்சுகளால் நான் இருக்கும் இடமே கலகலப்பாக இருக்கும். என்னுடைய அந்த குணம் தான் அவளுக்கு பிடித்ததாம். குசூலோடித்கொதுடுங்த்கதன்.சுடர்கொடி என எல்லாம் கிருக்க தொடங்கினேன். எந்த மரத்தை பார்த்தாலும் இதயம் வரைய ஆரம்பித்தேன். ஒரு சீப்பும் கொஞ்சம் முக பவுடரும் நிரந்தரமாக என் சட்டை பையில் வந்து குடியிருக்க தொடங்கியது. எந்த காரை பார்த்தாலும் அந்த கார் கதவின் கண்ணாடியில் என்னை பார்க்க தொடங்கினேன். ஏனனில் அதில் மட்டுமே கொஞ்சம் குண்டாக தெரிந்தேன்.


அவள் கூந்தலுக்கு பூ வைக்க ஆசைப்பட்டேன். அவள் என் கூடவே இருக்க ஆசைப்பட்டேன். நண்பர்களை விட்டு தனியே வந்து சிந்திக்க தொடங்கினேன். அபத்த கவிதைகள் பொங்கி பொங்கி வந்தன. பொங்கியதை எல்லாம் பேப்பரில் வாந்தியாக எடுத்தேன். நானே படித்து மகிழ்ந்தேன். என்னை நம்பாமல் சலூன் கடைகாரரை நம்பினேன் மீசை திருத்த!அம்மாவின் சமையல் பிடிக்காமல் போனது. அப்பாவின் பேச்சுகள் அலுப்பாக இருந்தன. நான் என்ன வண்ணத்தில் உடை உடுத்த வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக ஆளாள் அவள். வித விதமாக என்னை போட்டோ எடுத்து கொள்ள ஆசையாக இருந்தது. அதை அவள் பார்க்க வேண்டும் என்பதில் அதீத ஆசையாக இருந்தது. அவள் போட்டோவை என் இதயத்துக்கு இணைப்பாக ஒட்டி கொள்ள ஆசையாக இருந்தது. ஒரு குச்சியில் அந்த போட்டோவை கட்டி எனக்கு 1 முழத்துக்கு முன்பாக ஆடிக்கொண்டிருக்க அபத்த யோசனை வந்து தனியே வீட்டின் அறையிலே செய்து பார்க்க தூண்டியது. "தென்றலே என்னை தொடு" படமும் "வருஷம் 16" படமும் எனக்கு ராமாயண மகாபாரதமாக ஆகியது.


அவள் சடையை பிடித்து இழுக்க ஆசை வந்தது. எங்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என எழுதி பார்க்க வைத்தது. யாருடைய கல்யாண பத்திரிக்கையிலோ அந்த மணமக்களுக்கு பதிலாக எங்கள் பெயரை எழுத வைத்தது மனது. அவள் சாதாரண ஜுரத்துக்கு அவள் உறவினர் சைக்கிளில் டாக்டர் வீட்டுக்கு போய் திரும்பியவுடன் நான் போய் டாக்டரிடம் "டாக்டர் அபாய கட்டத்தில் இருந்து தாண்டிவிட்டாளா இல்லையெனில் அப்போலோ கொண்டு போகலாமா" என கேட்டு டாக்டரை மயக்கமடைய வைத்தேன். முப்பத்தி இரண்டு பக்கத்துக்கு எல்லாம் கடிதம் எழுதி அவளிடம் கொடுக்க வைத்தது மனது. பின் அவளிடமிருந்து 37 பக்க பதில் கடிதத்தை உடனே படிக்காமல் நடு மைதானத்துக்கு கொண்டு போய் உரக்க படிப்பது, பின்னே "சூடிகொடுத்த சுடர் கொடி குலோத்துங்கன்" என்கிற அவள் கையெழுத்தை மட்டும் கிழித்து வாயில் போட்டு விழுங்குவது, (அது போயிருக்கும் ஒரு 500 கையெழுத்து வயித்து குள்ளே)பிரசவத்துக்கு அவளை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி விட்டு வாசலில் நான் கையை பிசைந்து கொண்டிருப்பதாக நினைத்து கொண்ட்தெல்லாம் கொஞ்சம் அதிகபட்சம் தான்.


நான் அப்போது கல்லூரி மூன்றாம் ஆண்டு. அவளோ பெண்கள் கல்லூரியில் முதல் ஆண்டு. நான் இளமறிவியல் முடித்து அடுத்த கட்டத்துக்கு போகும் போது அவள் இன்னும் அதிகமாகவே என்னை விழுங்கிவிட்டிருந்தாள். காதலி உடையவன் என்கிற கர்வம் எனக்கு தனி அந்தஸ்தை கொடுத்திருந்தது. ஆனால் அந்த நேரத்தில் தான் அவள் வீட்டுக்கு விஷயம் தெரிய வர அவள் படிப்புக்கு பாடை கட்டப்பட்டு அவளின் சொந்த ஊருக்கும் அழைத்து போக பட்டாள். நானும் அவளை தொடர்பு கொள்ள முடியவில்லை. காதலிப்பது என்பது கற்பு இழப்புக்கு சமமாக அவள் வீட்டார் நினைத்தார்கள்.அவசர அவசரமாக அவளுக்கு மாப்பிள்ளை பார்க்க நாலு திக்கும் ஆட்கள் பறந்தார்கள்.(ஆறு மாதங்களுக்கு பின்…………………)



அந்த சுடிதார் தேவதையின் பெயர் பிந்தியா. அவள் சேர நன்னாடு. விரித்து விட்ட ஈர தலைமுடியும், நெற்றி சந்தனமும், மயக்கும் கீரி விட்டது மாதிரியான கண்களும்,அவளின் நெடிய உருவமும், எலுமிச்சம் பழ வண்ணமும் ஆண்கள் அத்தனை பேரையும் நின்று பார்க்க வைக்கும். அந்த வண்ணமே அவளின் சிறப்பம்சம், அவள் கொஞ்சம் மாநிறமாக இருந்தால் கூட அத்தனை நன்றாக இருந்திருக்க மாட்டாள். எப்போதுமே அவள் உதடுகளில் ஒரு வித மின்னல் கீற்று மாதிரியான குறும்பு ஓடிக்கொண்டே இருக்கும்.………………… போங்கப்பா பதிவு ஆரம்பித்த இடத்துக்கே வந்துவிட்டது …மாற்றம் என்பது மட்டுமே மாறாதது இவ்வுலகில்!!!!!


********************************


குறிப்பு: 1. எதுனா படம் கலர்ஃபுல்லா கேட்டேன் ஜீவ்ஸ் கிட்டே! 5 நிமிடம் ஆகும் பர்வால்யான்னு கேட்டார், அதுக்குள்ள இந்த பதிவை போட்டுடறேன்.


2. இதிலே வர்ர கதாவெசல்ஸ் எல்லாம் அக்மார்க் கற்பனை தான்!


3. ஜீவ்ஸ் எடுத்த போட்டோ வந்தாச்சு! என் கழுத்தில் கத்தி வைத்து அன்பாக "இந்த போட்டோ வரலைன்னா" என கேட்டு கொண்டதன் பேரிலும் படம் மிக அருமையாக இருப்பதன் பேரிலும் பதிவை காறி துப்ப நினைப்பவர்கள் இந்த போட்டோவை பார்த்து விட்டு விட்டு விடுவார்கள் என்கிற தடுப்பாட்ட பாலிசியின் படியும் படம் வெளியிடப்படுகின்றது.

4. ஜீவ்ஸ்ன் படத்தில் இருக்கும் கடலை விவசாயி நான் இல்லை:-))

30 comments:

  1. நல்ல பதிவு! மலரும் நினைவுகள்!

    ReplyDelete
  2. //மற்ற பெண்களின் சடையின் அடர்த்தி இவள் சடையின் ஒரு பிரிக்கு சமமாக இருக்கும். அத்தனை மொத்தமான சடை அவள் முட்டிகால வரை பிரண்டு ஆட்டம் போடும். //

    அட இன்னிக்காச்சும் மீ த ஃபஸ்ட் போடாலாம்னா ...விட மாட்டீங்களே !

    சரி ...சரி .இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லா இல்லை .இப்படியா பொறாமையை தூண்டறது. நீளப் பின்னலாம் ...நீளப் பின்னல் !!!

    ReplyDelete
  3. //4. ஜீவ்ஸ்ன் படத்தில் இருக்கும் கடலை விவசாயி நான் இல்லை:-))//

    அபியப்பா அந்தக் குதிருக்குள் இல்லை ;)

    ReplyDelete
  4. எல்லாம் சொல்லீட்டு கடைசில கற்பனையாம். நம்பீட்டம்.

    ReplyDelete
  5. இது....
    கற்பன....
    ம்ம்ம்ம்.....
    நாங்க அத நம்பணும்...
    ஆல்ரெடி குத்தியாச்சு....
    வரட்டுமா...
    ஹிஹி..

    ReplyDelete
  6. உங்களுக்கெல்லாம் சிரிச்சிட்டே படிக்கிறது அவ்வளவு ஈசின்னு நெனப்பா? எப்படி இதெல்லாம்?
    வரிவிடாமா சிரிக்க முடியல சாமி.இதென்ன சிரிப்பு வாரமா? ஆளாலாளுக்கு கிச்சு கிச்சு மூட்டினா நாங்க என்ன செய்றது?

    செந்தழல் ரவிகிட்ட போனா அடக்கமுடியில, சரி அபிஅப்பாவ பாப்போன்னா இங்க வந்தா சேர்லிருந்து டேபில் மேல மொசப்பிடிக்கிறாமாதி உக்கார வெச்சிட்டீங்க....,

    ReplyDelete
  7. நல்ல பதிவு... இதை அபி பாப்பா படிக்காமல் பார்த்துக்கொள்ளவும்.. அப்புறம் ஊருக்கு வரும்போது மாவு கட்டு செலவு இருக்கும்..

    ReplyDelete
  8. அப்பா டி. நல்ல கற்பனை:)
    இப்படியெல்லாம் காதலிப்பாங்களா....அட!!!!!

    ReplyDelete
  9. பாயிண்ட் நம்பர் இரண்டு என் கண்ணிலேயே படவில்லை:)!

    ReplyDelete
  10. ம்ம்ம்ம்...** ம்..ம்..?? ம்கூம்ம்ம்!!!!...ம்.ம்.ம்.ம்.

    ReplyDelete
  11. ஃப்ரெண்ட் அந்தக் கடலை விவசாயி நீங்கள் அல்ல என்பதற்கு நானும் சாட்சி. ஜீவ்ஸ் சும்மா உங்களை மாட்டி விடப் பார்க்கிறார். இதோ வந்தேன் காப்பாற்ற:)))! இப்படம் கடந்த நவம்பர் 16 பெங்களூர் கப்பன் பார்க் பதிவர் சந்திப்பில் நாங்களெல்லாம் அரட்டை அடித்துக் கொண்டிருக்க திடீரெனக் காணமல் போய் திரும்பி வந்த ஜீவ்ஸ் தன் காமிராவில் எங்களுக்கெல்லாம் காட்டிய படமாக்கும் இது:))!

    ReplyDelete
  12. உண்மையில் நீங்கள் எல்லாம் மனிதர்கள் தானா?
    ஈழத்தில் தமிழ்மக்களை பூச்சிகளை நசுக்குவது போன்று நம் கண் முன்னாலேயே கூட்டம் கூட்டமாக நசுக்கி இரத்தக்களரியான ஒரு படுகொலையை செய்துவருகிறது சிங்கள பாசிச அரசு.
    ஈழத்தமிழர்களை நீங்கள் உங்களுடைய‌ இனம் என்று கூட பார்க்க வேண்டாம், உலகில் நம்முடன் வாழும் சக மனிதர்களாக கூட பார்க்க மறுக்கிறதே அன்பும் கருணையும் பொங்கும் உங்கள் காதல் இத‌யம்!
    அடேயப்பா உங்கள் காதல் மிகவும் புனிதமானது தான்.
    நீங்கள் எல்லாம் உங்களை படித்த நாகரீக மனிதர்கள் என்று வேறு பீத்திக்கொள்கிறீர்கள், ச்சீ ச்சீ வெட்கமாக இல்லை உங்களுக்கெல்லாம் ?

    ReplyDelete
  13. மாநக்கல் சிபி! நன்றி! ஆனா ஏன் ஏன் ஏன்! அதான் தெளிவா சொன்னனே இது கதைன்னு! பின்ன ஏன்? பேசி தீர்த்துப்போம்:-))

    ReplyDelete
  14. வாங்க டவுட் அக்கா! நான் என்ன பண்ணட்டும் நீங்க கொடுத்து வச்சது அவ்வளவே!:-))

    அதை விடுப்பா பாழாய் போன முடி போனா என்ன இருந்தா என்ன? அன்புதான் முக்கியம்!

    ReplyDelete
  15. \\ Jeeves said...
    //4. ஜீவ்ஸ்ன் படத்தில் இருக்கும் கடலை விவசாயி நான் இல்லை:-))//

    அபியப்பா அந்தக் குதிருக்குள் இல்லை ;)

    \\

    ஜீவ்ஸ்! இத இத இதத்தான் எதிர்பார்த்தேன்! ஆனா நான் ஃபிரண்ட் வருவாங்கன்னு பார்த்துகிட்டே இருந்தேன் வந்த பிறகு தான் பதில் இதுக்கு சொல்லனும் என நினைத்தேன்! வந்துட்டாங்க சொல்லியாச்சு! இப்ப ஜெயஸ்ரீ கிட்ட கடி வாங்குப்பா!:-))

    ReplyDelete
  16. \\ வடகரை வேலன் said...
    எல்லாம் சொல்லீட்டு கடைசில கற்பனையாம். நம்பீட்டம்.

    February 14, 2009 2:42 PM

    \\

    அண்ணாச்சி என்னாச்சி! நீங்க கூடவா? நான் ஒரு நல்லவன்ன்னு தெரியாதா?

    ReplyDelete
  17. \\ ரங்கன் said...
    இது....
    கற்பன....
    ம்ம்ம்ம்.....
    நாங்க அத நம்பணும்...
    ஆல்ரெடி குத்தியாச்சு....
    வரட்டுமா...
    ஹிஹி..

    \\

    அடங்கொய்யால! நீ அடி வாங்க நேரம் வந்துடுச்சுடீ!

    ReplyDelete
  18. \\ தேனியார் said...
    உங்களுக்கெல்லாம் சிரிச்சிட்டே படிக்கிறது அவ்வளவு ஈசின்னு நெனப்பா? எப்படி இதெல்லாம்?
    வரிவிடாமா சிரிக்க முடியல சாமி.இதென்ன சிரிப்பு வாரமா? ஆளாலாளுக்கு கிச்சு கிச்சு மூட்டினா நாங்க என்ன செய்றது?

    செந்தழல் ரவிகிட்ட போனா அடக்கமுடியில, சரி அபிஅப்பாவ பாப்போன்னா இங்க வந்தா சேர்லிருந்து டேபில் மேல மொசப்பிடிக்கிறாமாதி உக்கார வெச்சிட்டீங்க....,\\

    என்ன பண்ணுவது தேனியாரே! அப்ப அப்ப டென்ஷன்!என் தலைவன் ஆஸ்பத்திரியிலே! நான் இங்க ஜோக் அடிச்சுகிட்டு என்ன பண்றது!

    என்ன பண்ணுறது சொல்லுங்க இப்ப கூட அக்னிபுத்திரன் பொங்கினதுக்கு ஆசையா பதில் சொல்ல ஆசை சொல்லிட்டேன்! இருங்க பதிவே போடறேன்!

    ReplyDelete
  19. \\ வெண்பூ said...
    நல்ல பதிவு... இதை அபி பாப்பா படிக்காமல் பார்த்துக்கொள்ளவும்.. அப்புறம் ஊருக்கு வரும்போது மாவு கட்டு செலவு இருக்கும்..

    \\

    வம்பூ அய்யா! நீர் முன்னமே இந்த பதிவை படிச்ச பின்னும் இப்பவும் வந்து மொய் வச்சிருக்கீர்! பதிலுக்கு நான் எதுனா செய்யனுமே???:-))

    ReplyDelete
  20. \\ வல்லிசிம்ஹன் said...
    அப்பா டி. நல்ல கற்பனை:)
    இப்படியெல்லாம் காதலிப்பாங்களா....அட!!!!!\\

    அட அட அட வல்லிம்மா எனக்கு என்ன தெரியும் இதல்லாம் சொல்ல கேள்விபட்டதுதான் எல்லாம்:-))

    ரொம்ப சந்தோஷம்!

    ReplyDelete
  21. \\ வல்லிசிம்ஹன் said...
    அப்பா டி. நல்ல கற்பனை:)
    இப்படியெல்லாம் காதலிப்பாங்களா....அட!!!!!

    \\

    செந்தழலாரே! ஏன் இப்படி! உனக்கு தெரியாதா! நான் காதலுக்கு எதிரின்னு நானா இப்படி செஞ்சிருப்பேன்? ரொம்ப கொல வெறியோட இருக்கப்பா நீனு அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

    ReplyDelete
  22. \\ ராமலக்ஷ்மி said...
    பாயிண்ட் நம்பர் இரண்டு என் கண்ணிலேயே படவில்லை:)!

    February 14, 2009 5:29 PM\\

    இது இது என் ஃபிரண்ட்! இதுக்கு மேல என்ன சொல்ல!

    ReplyDelete
  23. \\ Vijay said...
    ம்ம்ம்ம்...** ம்..ம்..?? ம்கூம்ம்ம்!!!!...ம்.ம்.ம்.ம்.

    February 14, 2009 6:32 PM
    \\

    வாங்க விஜய் என்ன சொல்ல வரீங்கன்னு தெரியலையே?

    ReplyDelete
  24. \\ superlinks said...
    உண்மையில் நீங்கள் எல்லாம் மனிதர்கள் தானா?
    ஈழத்தில் தமிழ்மக்களை பூச்சிகளை நசுக்குவது போன்று நம் கண் முன்னாலேயே கூட்டம் கூட்டமாக நசுக்கி இரத்தக்களரியான ஒரு படுகொலையை செய்துவருகிறது சிங்கள பாசிச அரசு.
    ஈழத்தமிழர்களை நீங்கள் உங்களுடைய‌ இனம் என்று கூட பார்க்க வேண்டாம், உலகில் நம்முடன் வாழும் சக மனிதர்களாக கூட பார்க்க மறுக்கிறதே அன்பும் கருணையும் பொங்கும் உங்கள் காதல் இத‌யம்!
    அடேயப்பா உங்கள் காதல் மிகவும் புனிதமானது தான்.
    நீங்கள் எல்லாம் உங்களை படித்த நாகரீக மனிதர்கள் என்று வேறு பீத்திக்கொள்கிறீர்கள், ச்சீ ச்சீ வெட்கமாக இல்லை உங்களுக்கெல்லாம் ?\\

    டேய் லூசு! ஏண்டா எல்லா இடத்திலும் வாந்தி எடுக்கறே! நான் உனக்கு பதில் சொல்லி பதிவா போடுறேன்!

    வாயை பொத்திகிட்டு இரு!

    ReplyDelete
  25. Hi

    உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் தொடுத்துள்ளோம்.

    உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இப்பூக்களில் சரி பார்த்து கொள்ளவும்.

    இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

    நட்புடன்
    வலைபூக்கள் குழுவிநர்

    ReplyDelete
  26. \\ராமலக்ஷ்மி said...

    ஃப்ரெண்ட் அந்தக் கடலை விவசாயி நீங்கள் அல்ல என்பதற்கு நானும் சாட்சி. ஜீவ்ஸ் சும்மா உங்களை மாட்டி விடப் பார்க்கிறார். இதோ வந்தேன் காப்பாற்ற)! இப்படம் கடந்த நவம்பர் 16 பெங்களூர் கப்பன் பார்க் பதிவர் சந்திப்பில் நாங்களெல்லாம் அரட்டை அடித்துக் கொண்டிருக்க திடீரெனக் காணமல் போய் திரும்பி வந்த ஜீவ்ஸ் தன் காமிராவில் எங்களுக்கெல்லாம் காட்டிய படமாக்கும் இது\\

    வாங்க பிரண்ட்! நான் அப்பவே சொன்னேன் ஜீவ்ஸ் கிட்ட்! வேற வழியே இல்ல ஜெயஸ்ரீ கிட்ட சொல்லி என் வேலைய காமிக்க வேண்டியதுதான் ஒரே வழி:-))

    ReplyDelete
  27. நல்ல மலரும் நினைவுகள். Very interesting. கதாவெசல்ஸ் பத்தி நீங்க ஒண்ணும் சொல்லாம இருந்தா, ஒரு வேலை நம்பியிருப்போம் :)

    அனுஜன்யா

    ReplyDelete
  28. // அனுஜன்யா said...
    நல்ல மலரும் நினைவுகள். Very interesting. கதாவெசல்ஸ் பத்தி நீங்க ஒண்ணும் சொல்லாம இருந்தா, ஒரு வேலை நம்பியிருப்போம் :)

    அனுஜன்யா//

    வாங்க யூத் அங்கிள்! உங்க காதலர்தின பதிவும் பிங்கா இருந்துச்சு! நல்லா இருந்துச்சு:-))

    ReplyDelete
  29. அமர்க்களம்.. தூள் கிளப்புங்க

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))