பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

February 20, 2009

என் பிராஜட் டைரக்டருக்கு 10 கேள்விகள்!!

நான் என்ன பண்ணட்டும் மக்கா! இந்த ஃபீவர்ல நானும் மாட்டிகிட்டேன்:-)) வேற வழியே இல்லை கேள்வி கேக்கனும்ன்னா நான் இவர் கிட்டதான் கேக்கனும்!

1. ஏன் சார் ஏன் சார் நீங்க ஷார்ஜாவிலே இருந்து வரனும் ஆஃபீஸ்க்கு. உங்க டிராபிக் பிரச்சனையால் 8-5 ஆபீஸுக்கு 7.30க்கே வந்துடுடரீங்க, காலை 5 க்கே கிளம்பி! ஆனா நான் 15 நிமிஷத்திலே ஆபீஸ் வந்திடலாம். ஆனா நான் 7.50க்கு வந்தாகூட நீங்க செக்யூரிட்டி பக்கமா நின்னுகிட்டு உங்க கேபினுக்கு போகாம தம் அடிச்சுகிட்டு "ஹாய் மேன் குட் மார்னிங் 7.50 என சொல்கிறீர்களே! ஏன்? கொஞ்சம் லேட்டா தமிழ்மணம் ஓப்பன் பண்ணினா ஓப்பன் ஆகாதா???

2. காலை 9.30க்கு மட்டும் உங்களுக்கு மூக்கிலே வேர்க்கும் ரகசியம் என்ன? என் பிரேக்பாஸ்ட் நேரம் அதுதான் என நீங்க அனுப்பிய மெமோவை மறந்து போன செலக்டிவ் அம்னீஷியா பேஷண்ட்டா நீங்க? (நீங்க செலக்டிவ் அம்னீஷியா என்பது எனக்கு நல்லா தெரியும்!என் அப்ரைசல் மாத்திரம் ஆப்பு வைக்கும் ஆசாமி நீங்க போங்க சார்)

3. நான் முக்கியமான பதிவை படிச்சுகிட்டு இருக்கும் போது என்னை "உடனே கேபினுக்கு வா"ன்னு கூப்பிட்டு விட்டு எவனோ இத்து போன சப்ளையர் கிட்ட "due to financial crises" ன்னு மொக்கை போட்டுகிட்டே என்னை பார்த்து "I will catch you latteron" ன்னு அனுப்புவீங்களே! என்ன கொடுமை சார் இது? ஒரு பதிவை படிச்சா ஆழ்ந்து படிக்க வேண்டாமா?

4. உங்களுக்கு காலை 11 மணிக்கு பொழுது போகலைன்னா என் கேபினுக்கு வந்து "ஹாய் மேன்!" one important issue is going on ... i need your suggession"ன்னு என் தோளில் கை போட்டு கூட்டிகிட்டே போய் "sorry man i foget it, you can go and do your valuable duty" என சொல்லும் போது எனக்கு எந்த அளவு கோவம் வரும் என நினைத்து பார்த்ததுண்டா?

5. சரி அதுதான் போகட்டும் என நினைத்து வந்து சீட்டில் உட்காந்த்து பார்த்தா ச்சேட் பன்ணிய 8 பேரில் 2 பேர் காணாமல் போயும் மீதி 6 பேர் (டிங்) (டிங்)என கதறியும் இருக்கும் கொடுமையை நீங்க என்றைக்காவது உணர்ந்ததுண்டா?

6. மதியம் 1 மணிக்கு மீட்டிங் கால் நீங்க கொடுக்கும் போது நான் ச்சேட்டிய்வர்களிடம் "மீட்டிங் கால்" என சொல்லும் போது யாருமே நம்பாம இளக்காரமாக சிரிக்கின்றனரே அது உங்களுக்கு தெரியுமா?

7. அது தான் போகட்டும் என நினைத்து நான் கொண்டு வரும் சாம்பார் சாதம், மீன் வறுவல் எல்லாம் முழுங்கிய பின்னே "மேன் ஷேர் திஸ் KFC ன்னு சொல்லும் போது என் குருதி அழுத்தம் அதிகமாகுதே அது உங்களுக்கு தெரியுமா தெரியாதா இல்லை தெரியாதது மாதிரி நடிக்கின்றீரா?

8. ஆளே இல்லாத டீ கடையில் டீ ஆத்துவது போல் என் கேபினுக்கு வந்து "ஒரு 80 ஸ்டோரி பில்டிங் நமக்கு கிடைச்சிருக்கு, கன்சல்டண்ட் குப்பன், கிளையண்ட் சுப்பன்ன்னு பீலா விடிறீங்களே ஏன் சார் ஏன் சார் என்னை நம்பி ச்சேட் பண்ணும் புண்ணியவான்களுக்கு நான் என்ன கண்டின்யூட்டி கொடுக்க முடியும்? சொல்லுங்க, இதனால் என்ன என்ன பிரச்சனை வருது தெரியுமா உங்களுக்கு?

9. " மதியம் 3 மணிக்கு எனக்கு இண்டர்காமிலே கூப்பிட்டு " நான் ரொம்ப பிசி என்னை டிஸ்டர்ப் செய்ய வேண்டாம்" என நீங்க சொன்ன போது தான் சார் தெரிஞ்சுது நீங்க கூட பிளாக்கர்ன்னு! அது உண்மையா?

10. ஆனா பாருங்க சாயந்திரம் 4 மணிக்கு வந்து என் கேபின்ல உட்காந்து அமரிக்க பொருளாதார வீழ்ச்சியை நீங்க அதன் ஆணி வேர்ல இருந்து கிண்டி கிழங்கு எடுக்கும் போது நான் எவ்வளவு நேரம் தான் புரிஞ்ச மாதிரியே நடிக்கிறது? சொல்லுங்க சார் சொல்லுங்க! அதை விட கொடுமை என்னன்னா அந்த நேரம் பார்த்து நான் "மொக்கை மெயில்ஸ் குரூப்பிலோ அல்லது பண்புடன்லயோ யார் கிட்டயாவது சண்டை போட்டிருப்பேன். பதில் சொல்ல லேட் ஆச்சுன்னா "ஆஹா அபிஅப்பா தோத்துட்டார்"ன்னு கை கொட்டி சிரிப்பாங்களே, அந்த பாவம் உங்களை சும்மா விடுமா சார்?????????????????

ஒரு பத்தினி பிளாக்கரோட சாபம் உங்களை சும்மா விடாது!

85 comments:

 1. நன்றி இளா! தங்கள் ஆசீர்வாதம் என் பாக்கியம்:-))

  ReplyDelete
 2. //
  சரி அதுதான் போகட்டும் என நினைத்து வந்து சீட்டில் உட்காந்த்து பார்த்தா ச்சேட் பன்ணிய 8 பேரில் 2 பேர் காணாமல் போயும் மீதி 6 பேர் என கதறியும் இருக்கும் கொடுமையை நீங்க என்றைக்காவது உணர்ந்ததுண்டா?
  //

  அப்பா அப்பப்பா....எந்த ஆஃபிஸ் தல இது....ஒரு வேலை வாங்கி குடுத்தீங்ணா புண்ணியமா போகும்....:0))

  ReplyDelete
 3. நான் எவ்வளவு நேரம் தான் புரிஞ்ச மாதிரியே நடிக்கிறது? சொல்லுங்க சார் சொல்லுங்க!

  Super. :)))))

  ReplyDelete
 4. //ஹாய் மேன் குட் மார்னிங் 7.50 என சொல்கிறீர்களே! ஏன்? கொஞ்சம் லேட்டா தமிழ்மணம் ஓப்பன் பண்ணினா ஓப்பன் ஆகாதா???//
  அட அது எப்படி நீங்க மட்டும். :)) :)) :))
  சூப்பர் ஸார்.
  அபி அப்பா ஸ்பெஷல் - பெரிய இடைவெளிக்குப் பிறகு
  இன்னொரு தடவை நிதானமாய் படித்து முழுதாய் சிரிக்கோணுமய்யா.

  ReplyDelete
 5. // (நீங்க செலக்டிவ் அம்னீஷியா என்பது எனக்கு நல்லா தெரியும்!என் அப்ரைசல் மாத்திரம் ஆப்பு வைக்கும் ஆசாமி நீங்க போங்க சார்) //

  எனக்கும் இந்த சந்தேகம் ரொம்ப நாளா உண்டுங்க... அது எப்படி அப்ரைசல் வரும் போது மட்டும் நம்ம மறந்துடுறாங்க என்று புரிவதேயில்லை.

  ReplyDelete
 6. // நான் முக்கியமான பதிவை படிச்சுகிட்டு இருக்கும் போது என்னை "உடனே கேபினுக்கு வா"ன்னு கூப்பிட்டு விட்டு எவனோ இத்து போன சப்ளையர் கிட்ட "due to financial crises" ன்னு மொக்கை போட்டுகிட்டே என்னை பார்த்து "I will catch you latteron" ன்னு அனுப்புவீங்களே! என்ன கொடுமை சார் இது? ஒரு பதிவை படிச்சா ஆழ்ந்து படிக்க வேண்டாமா? //

  உங்களுக்கு அப்படியா... எனக்கு வேற மாதிரிங்க..

  ரொம்ப அட்காசமா கும்மி அடிச்சு, 100 போடலாம் அப்படின்னு போகும் போதுதான், மேனஜர் கூப்பிட்டு, எதாவது ஒரு அக்கௌண்ட் பத்தி பேச ஆரம்பிச்சா, 40 நிமிஷம் போயிடும்.. வந்து பாத்தா, 100, 125, 150 எல்லாம் போயிருக்கும்... ம் நம்ம லக் அவ்வளவுதான் போயிட்டு இருக்கணும்.

  ReplyDelete
 7. நீங்களும் அதே கெரகம் தானா? ம்ம்ம்ம்

  ReplyDelete
 8. ஹாஹா...

  சூப்பரோ சூப்பர்....

  :-))))))))))))))))))

  ReplyDelete
 9. :) நியாயமான கேள்விகள். அவரை சட்டைய பிடிச்சி நல்லா நேருக்குநேர் கேளுங்க.. உங்க சேட் கஷ்டத்தை நினைச்சா எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு..உண்மையிலேயே நீங்க ரொம்ப பாவம்.

  ReplyDelete
 10. யப்பா ... அட்டகாசம்..

  //அது சரி said...
  அப்பா அப்பப்பா....எந்த ஆஃபிஸ் தல இது....ஒரு வேலை வாங்கி குடுத்தீங்ணா புண்ணியமா போகும்....:0))//

  RIPPEETTU..

  ReplyDelete
 11. அருமையான கருத்துக்கள்!
  சிந்திக்க வைக்கும் பதிவு!

  அபாரம்!

  ReplyDelete
 12. //5. சரி அதுதான் போகட்டும் என நினைத்து வந்து சீட்டில் உட்காந்த்து பார்த்தா ச்சேட் பன்ணிய 8 பேரில் 2 பேர் காணாமல் போயும் மீதி 6 பேர் (டிங்) (டிங்)என கதறியும் இருக்கும் கொடுமையை நீங்க என்றைக்காவது உணர்ந்ததுண்டா?//

  எனக்கு ரொம்ப பிடிச்ச கேள்வி இது தான்... ஒரு பத்தினி ப்ளாக்கரோட சாபம் உங்களை சும்மா விடாதுன்னு ஒரு லைன் போட்டு முடிச்சிருந்துருக்கலாம் பதிவை.

  :)

  ReplyDelete
 13. என்ன கொடுமையப்பா இது?
  ரொம்ப கஷ்டம் தான் ! இது ஏதோ தன்னிலை விளக்கம் மாதிரி இருக்கே? முன்னிலை விளக்கம்...படர்க்கை விளக்கம் எல்லாம் இனி பின்னூட்டத்துல வருமோ?!

  ReplyDelete
 14. //ஒரு பதிவை படிச்சா ஆழ்ந்து படிக்க வேண்டாமா?//

  அப்படி கூட யாராவது எழுதுறாங்களா இப்போ?
  உங்க கேசரிய திரும்பவும் ஒருக்கா படிச்சு பாருங்க!

  ReplyDelete
 15. //சீட்டில் உட்காந்த்து பார்த்தா ச்சேட் பன்ணிய 8 பேரில் 2 பேர் காணாமல் போயும் மீதி 6 பேர் (டிங்) (டிங்)என கதறியும் இருக்கும் கொடுமையை நீங்க என்றைக்காவது உணர்ந்ததுண்டா?//

  யாருப்பா அந்த அப்பாவி 6 பேரு?

  ReplyDelete
 16. //மதியம் 1 மணிக்கு மீட்டிங் கால் நீங்க கொடுக்கும் போது நான் ச்சேட்டிய்வர்களிடம் "மீட்டிங் கால்" என சொல்லும் போது யாருமே நம்பாம இளக்காரமாக சிரிக்கின்றனரே அது உங்களுக்கு தெரியுமா?//

  நாங்க சிரிக்கிறது அந்த மீட்டிங்ல என்ன நடக்கும்னு தெரிஞ்சதால

  ReplyDelete
 17. //ஒரு பத்தினி பிளாக்கரோட சாபம் உங்களை சும்மா விடாது!//

  இதுக்கு என்ன அர்த்தம்,
  ரெண்டு ப்ளாக் வச்சிருந்தா அதுக்கு பேரு வேறயா?

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 18. என்ன கொடுமையப்பா இது?
  ரொம்ப கஷ்டம் தான் ! இது ஏதோ தன்னிலை விளக்கம் மாதிரி இருக்கே? முன்னிலை விளக்கம்...படர்க்கை விளக்கம் எல்லாம் இனி பின்னூட்டத்துல வருமோ?!

  ReplyDelete
 19. சிந்திக்கத் தூண்டும் பதிவு

  படிச்சு முடிச்சதும் உங்க நிலையில் நான் இருக்கேனேன்னு நினைச்சு கதறிக் கதறி அழுதேனே அபிஅப்பா அது தெரியுமா உங்களுக்கு ;)

  ReplyDelete
 20. தல,

  உங்க பாஸோட ஈமெயில் அய்டி குடுங்களேன் : இத ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்து அவருக்கு
  அனுப்பி மகிழ்கிறேன். அல்லது அவரும் தமிழர்னா இன்னும் சூப்பரா என்சாய் செய்வார்ல்ல ?

  ReplyDelete
 21. பத்தும் கலக்கல்:))!

  //மீதி 6 பேர் (டிங்) (டிங்)என கதறியும்//

  இதற்குத்தான் இதற்குத்தான் நான் ச்சேட் பக்கமே போவதில்லை:)!

  ReplyDelete
 22. உங்க பிராஜக்ட் டைரக்டருக்கு என்னோட பதினோராவது கேள்வி!!!

  நீங்க இந்த மாதிரி பண்றத வச்சு பதிவு போட்டு கொல்லுறாரே அபிஅப்பா...எங்க சாபத்த எங்க தொலைக்கபோறீங்க

  இப்படிக்கு
  ஒரு பத்தினி வாசகன்

  :)))

  ReplyDelete
 23. வாங்க வெட்டிதம்பி! நன்னி!

  ReplyDelete
 24. அபிஅப்பா, நா ஒண்ணும் சொல்லலை

  ReplyDelete
 25. \\ அது சரி said...
  //
  சரி அதுதான் போகட்டும் என நினைத்து வந்து சீட்டில் உட்காந்த்து பார்த்தா ச்சேட் பன்ணிய 8 பேரில் 2 பேர் காணாமல் போயும் மீதி 6 பேர் என கதறியும் இருக்கும் கொடுமையை நீங்க என்றைக்காவது உணர்ந்ததுண்டா?
  //

  அப்பா அப்பப்பா....எந்த ஆஃபிஸ் தல இது....ஒரு வேலை வாங்கி குடுத்தீங்ணா புண்ணியமா போகும்....:0))\\

  அதுசரி! இங்கவே இப்பவோ எப்பவோன்னு இருக்கு அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 26. idayaraatha panigalukku maththiyilum intha MAGA SINDHANAI thangalukku eppadi thondriyathu mannaaaaaaaaa??

  ReplyDelete
 27. \\ ஸ்ரீதர்கண்ணன் said...
  நான் எவ்வளவு நேரம் தான் புரிஞ்ச மாதிரியே நடிக்கிறது? சொல்லுங்க சார் சொல்லுங்க!

  Super. :)))))\\

  வாங்க ஸ்ரீதர்!நன்னி!

  ReplyDelete
 28. \\ சுல்தான் said...
  //ஹாய் மேன் குட் மார்னிங் 7.50 என சொல்கிறீர்களே! ஏன்? கொஞ்சம் லேட்டா தமிழ்மணம் ஓப்பன் பண்ணினா ஓப்பன் ஆகாதா???//
  அட அது எப்படி நீங்க மட்டும். :)) :)) :))
  சூப்பர் ஸார்.
  அபி அப்பா ஸ்பெஷல் - பெரிய இடைவெளிக்குப் பிறகு
  இன்னொரு தடவை நிதானமாய் படித்து முழுதாய் சிரிக்கோணுமய்யா
  \\

  வாங்க சுல்தான் பாய்! மிக்க நன்றி சுல்தான் பாய்!

  ReplyDelete
 29. \\ சுல்தான் said...
  //ஹாய் மேன் குட் மார்னிங் 7.50 என சொல்கிறீர்களே! ஏன்? கொஞ்சம் லேட்டா தமிழ்மணம் ஓப்பன் பண்ணினா ஓப்பன் ஆகாதா???//
  அட அது எப்படி நீங்க மட்டும். :)) :)) :))
  சூப்பர் ஸார்.
  அபி அப்பா ஸ்பெஷல் - பெரிய இடைவெளிக்குப் பிறகு
  இன்னொரு தடவை நிதானமாய் படித்து முழுதாய் சிரிக்கோணுமய்யா
  \\

  வாங்க சுல்தான் பாய்! மிக்க நன்றி சுல்தான் பாய்!

  ReplyDelete
 30. பிராஜட் டைரக்டர்: அப்ப இவ்வளோ நாள் என்னப்பாத்து ஸ்மைல் பண்ணெதெல்லாம் ஆக்டிங்கா...?

  சார் நீங்க ரொம்ப நல்லவருன்னு சொன்னீயே அதெல்லாம் கப்சாவா?

  சிக்கன குடுத்து சாப்பிடுங்க சாப்பிடுங்கன்னு சொன்னீயே அதெல்லாம் வயித்தெரிச்சலா?

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

  ReplyDelete
 31. :)))

  சீரியஸா சொல்றேன் உடனடியா வவுத்து்வலி மாத்திரையை ஹைதைக்கு அனுப்பி வைங்க.

  தாங்க முடியல அபி அப்பா.

  :)))))))

  ReplyDelete
 32. Chithappu,
  10 questions series la neenga eluthunathu thaan toppu.
  thool kilappitteenga chithappu.

  ReplyDelete
 33. \\\ இராகவன் நைஜிரியா said...
  // (நீங்க செலக்டிவ் அம்னீஷியா என்பது எனக்கு நல்லா தெரியும்!என் அப்ரைசல் மாத்திரம் ஆப்பு வைக்கும் ஆசாமி நீங்க போங்க சார்) //

  எனக்கும் இந்த சந்தேகம் ரொம்ப நாளா உண்டுங்க... அது எப்படி அப்ரைசல் வரும் போது மட்டும் நம்ம மறந்துடுறாங்க என்று புரிவதேயில்லை.

  ரொம்ப அட்காசமா கும்மி அடிச்சு, 100 போடலாம் அப்படின்னு போகும் போதுதான், மேனஜர் கூப்பிட்டு, எதாவது ஒரு அக்கௌண்ட் பத்தி பேச ஆரம்பிச்சா, 40 நிமிஷம் போயிடும்.. வந்து பாத்தா, 100, 125, 150 எல்லாம் போயிருக்கும்... ம் நம்ம லக் அவ்வளவுதான் போயிட்டு இருக்கணும்

  அடடா ராகவன்! நம்ம இனமா நீங்களும்! வாங்க வாங்க வந்து ஜோதியிலே ஐக்கியம் ஆகுங்க:-))

  ReplyDelete
 34. \\ மின்னல் said...
  நீங்களும் அதே கெரகம் தானா? ம்ம்ம்ம்\\

  வாம்மா மின்னலு! எல்லாம் அதே கெரகம் தான்:-))

  ReplyDelete
 35. //நீங்க சொன்ன போது தான் சார் தெரிஞ்சுது நீங்க கூட பிளாக்கர்ன்னு! அது உண்மையா?
  //

  ஹிஹி, சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது அபி அப்பா. :))

  ReplyDelete
 36. \\ T.V.Radhakrishnan said...
  :-)))))))

  February 20, 2009 6:21 \\

  நன்றி ராதா! மிக்க நன்றி வருகைக்கு!

  ReplyDelete
 37. \\ ச்சின்னப் பையன் said...
  ஹாஹா...

  சூப்பரோ சூப்பர்....

  :-))))))))))))))))))
  \\

  நன்றி ச்சின்ன பையன்!

  ReplyDelete
 38. \\ முத்துலெட்சுமி-கயல்விழி said...
  :) நியாயமான கேள்விகள். அவரை சட்டைய பிடிச்சி நல்லா நேருக்குநேர் கேளுங்க.. உங்க சேட் கஷ்டத்தை நினைச்சா எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு..உண்மையிலேயே நீங்க ரொம்ப பாவம்.\\

  ஆமாம் முத்துலெஷ்மி! அப்படித்தான் அவரை கேக்கனும்! என்ன ஒரு வில்லத்தனம்:-))

  ReplyDelete
 39. \\ முத்துலெட்சுமி-கயல்விழி said...
  :) நியாயமான கேள்விகள். அவரை சட்டைய பிடிச்சி நல்லா நேருக்குநேர் கேளுங்க.. உங்க சேட் கஷ்டத்தை நினைச்சா எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு..உண்மையிலேயே நீங்க ரொம்ப பாவம்.\\

  ஆமாம் முத்துலெஷ்மி! அப்படித்தான் அவரை கேக்கனும்! என்ன ஒரு வில்லத்தனம்:-))

  ReplyDelete
 40. \\ Saravana Kumar MSK said...
  யப்பா ... அட்டகாசம்..

  //அது சரி said...
  அப்பா அப்பப்பா....எந்த ஆஃபிஸ் தல இது....ஒரு வேலை வாங்கி குடுத்தீங்ணா புண்ணியமா போகும்....:0))//

  RIPPEETTU..\\

  நன்றி சரவணகுமார்!

  ReplyDelete
 41. \\ Namakkal Shibi said...
  :))

  ஹெஹெ!

  February 20, 2009 9:41 AM


  Namakkal Shibi said...
  அருமையான கருத்துக்கள்!
  சிந்திக்க வைக்கும் பதிவு!

  அபாரம்!

  \\

  வாங்க மாநக்கலாரே! என்னது சிந்திக்க வைக்குதா ஓ காட்:-))

  ReplyDelete
 42. \\ கைப்புள்ள said...
  //5. சரி அதுதான் போகட்டும் என நினைத்து வந்து சீட்டில் உட்காந்த்து பார்த்தா ச்சேட் பன்ணிய 8 பேரில் 2 பேர் காணாமல் போயும் மீதி 6 பேர் (டிங்) (டிங்)என கதறியும் இருக்கும் கொடுமையை நீங்க என்றைக்காவது உணர்ந்ததுண்டா?//

  எனக்கு ரொம்ப பிடிச்ச கேள்வி இது தான்... ஒரு பத்தினி ப்ளாக்கரோட சாபம் உங்களை சும்மா விடாதுன்னு ஒரு லைன் போட்டு முடிச்சிருந்துருக்கலாம் பதிவை.

  :)
  \\

  வாங்க கைப்ஸ்! உங்க சீரிய யோசனை ஏற்று கொள்ளப்பட்டு அதை பதிவிலும் சேர்த்தாகி விட்டு அதுக்கு ரெஸ்பான்சும் கிடைச்சாச்சு. கிரடிட் உங்களுக்கு தான்:-))

  ReplyDelete
 43. \\ அருப்புக்கோட்டை பாஸ்கர் said...
  ஹாஹா.
  சூப்பர்..
  :-)\\

  பாஸ்கர் வணக்கம் வாங்க! நன்றி! ஒரு சின்ன விண்ணப்பம். நீங்க மட்டுமே அழகா எம்ஜிஆர் படத்தை வச்சிருந்தீங்க. அதை எடுத்துட்டு உங்க படத்தை போட்டு இருக்கீங்க. உங்க படம் நல்லா இருக்கு. ஆனா எம்ஜியார் படம் இல்லாதது கொஞ்ச்ம் ஏமாற்றமா இருந்துச்ச்சு!

  ReplyDelete
 44. \\ மிஸஸ்.டவுட் said...
  என்ன கொடுமையப்பா இது?
  ரொம்ப கஷ்டம் தான் ! இது ஏதோ தன்னிலை விளக்கம் மாதிரி இருக்கே? முன்னிலை விளக்கம்...படர்க்கை விளக்கம் எல்லாம் இனி பின்னூட்டத்துல வருமோ?!\\

  அந்த டிங் டிங் ன்னு கதறினது யாருப்பா:-))

  ReplyDelete
 45. \\ வால்பையன் said...
  //ஒரு பத்தினி பிளாக்கரோட சாபம் உங்களை சும்மா விடாது!//

  இதுக்கு என்ன அர்த்தம்,
  ரெண்டு ப்ளாக் வச்சிருந்தா அதுக்கு பேரு வேறயா?

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்\\

  வாலு தம்பி! நல்லவேளை வீரசேகரவிலாஸ் ஞாபகபடுத்தினப்பா உனகாகவே போடனும் அந்த பதிவு!

  என்னது 2 பிளாக் வச்சிருந்தா பத்தினி பிளாக்கர்..........அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் எப்படி இப்படில்லாம் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 46. \\ தமிழ் பிரியன் said...
  :)))

  February 20, 2009 10:54 AM\\

  வாங்க தம்பி! ஊர் எல்லாம் எப்படி இருக்கு. உங்க ஜூனியர் சூப்பர்! நல்லா இருக்கான் பையன்!

  ReplyDelete
 47. \\ கானா பிரபா said...
  சிந்திக்கத் தூண்டும் பதிவு

  படிச்சு முடிச்சதும் உங்க நிலையில் நான் இருக்கேனேன்னு நினைச்சு கதறிக் கதறி அழுதேனே அபிஅப்பா அது தெரியுமா உங்களுக்கு ;)\\

  அழுவாத ராசா அழுவாத மேல ஆண்டவன் இருக்கான்! பார்த்துப்பான்:-))

  ReplyDelete
 48. \\ K.R.அதியமான் said...
  தல,

  உங்க பாஸோட ஈமெயில் அய்டி குடுங்களேன் : இத ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்து அவருக்கு
  அனுப்பி மகிழ்கிறேன். அல்லது அவரும் தமிழர்னா இன்னும் சூப்பரா என்சாய் செய்வார்ல்ல ?\\

  ஏன் தல இத்தன கொலவெறி! உங்களுக்கு குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்க தரமாட்டனா கேட்டா?:-))

  ReplyDelete
 49. \\ ராமலக்ஷ்மி said...
  பத்தும் கலக்கல்:))!

  //மீதி 6 பேர் (டிங்) (டிங்)என கதறியும்//

  இதற்குத்தான் இதற்குத்தான் நான் ச்சேட் பக்கமே போவதில்லை:)!


  வாங்க பிரண்ட்! மிக்க நன்றி!ஹா ஹா ஹா நீங்க ச்சேட் பக்கம் வராம இருப்பது நல்லது தான். அது ஒரு அடிட் விஷயமா போயிடுச்சு!

  ReplyDelete
 50. \\ எம்.எம்.அப்துல்லா said...
  உங்க பிராஜக்ட் டைரக்டருக்கு என்னோட பதினோராவது கேள்வி!!!

  நீங்க இந்த மாதிரி பண்றத வச்சு பதிவு போட்டு கொல்லுறாரே அபிஅப்பா...எங்க சாபத்த எங்க தொலைக்கபோறீங்க

  இப்படிக்கு
  ஒரு பத்தினி வாசகன்

  :)))\\

  அப்து!பத்தினி பிளாக்கர் வார்த்தை உபயம் கைப்ஸ் தான். அதனால இங்க அவருக்கு ஒரு நன்றி!

  ஆமா நீங்க இன்னும் கேள்வி கேக்கலையா?

  ReplyDelete
 51. \\ ramachandranusha(உஷா) said...
  அபிஅப்பா, நா ஒண்ணும் சொல்லலை
  \\

  ஆஹா அண்ணி! இப்படி சொல்றதிலேயே நிறைய அர்த்தம் இருக்கும் போல இருக்கே:-)))))))))

  ReplyDelete
 52. \\ பரிசல்காரன் said...
  idayaraatha panigalukku maththiyilum intha MAGA SINDHANAI thangalukku eppadi thondriyathu mannaaaaaaaaa??

  February 20, 2009 12:58 PM\\

  அய்யா பரிசல்! நீ கொளுத்தி போட்ட தீ தானேப்பா இதல்லாம்:-))

  ReplyDelete
 53. //"ஆஹா அபிஅப்பா தோத்துட்டார்"ன்னு கை கொட்டி சிரிப்பாங்களே, அந்த பாவம் உங்களை சும்மா விடுமா சார்?????????????????//


  அபிஅப்பா...நீங்க எப்பவுமே ஜெயிக்க மாட்டீங்கன்னு உங்களுக்கு தெரியும்..எனக்கு தெரியும் !! எதுக்கு பாவம்...அவர் மேல பழிய போட்டு அவர் பாவத்தை நீங்க கொட்டிகறீங்க?! :)

  ReplyDelete
 54. \\ தேனியார் said...
  பிராஜட் டைரக்டர்: அப்ப இவ்வளோ நாள் என்னப்பாத்து ஸ்மைல் பண்ணெதெல்லாம் ஆக்டிங்கா...?

  சார் நீங்க ரொம்ப நல்லவருன்னு சொன்னீயே அதெல்லாம் கப்சாவா?

  சிக்கன குடுத்து சாப்பிடுங்க சாப்பிடுங்கன்னு சொன்னீயே அதெல்லாம் வயித்தெரிச்சலா?

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  வாங்க தேனியார்!அப்படித்தான் நெனச்சி இருப்பாரோ நம்ம பிராஜட் டைரக்டர்:-)))))))))))

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

  ReplyDelete
 55. \\ ரமேஷ் வைத்யா said...
  ஆஹாஹா ஏஹேஹே ஓஹோஹோ
  \\

  வாங்க ரமேஷ் நன்றி!

  ReplyDelete
 56. \\ புதுகைத் தென்றல் said...
  :)))

  சீரியஸா சொல்றேன் உடனடியா வவுத்து்வலி மாத்திரையை ஹைதைக்கு அனுப்பி வைங்க.

  தாங்க முடியல அபி அப்பா.

  :)))))))\\

  அய்யோ, துபாய்ல இருந்து ஹைதைக்கா? வேண்டுமானா இன்னும் ஒரு காமடி போஸ்ட் போட்டுடரேன்! முள்லை முள்லால் எடுக்கலாம்:-))))))

  ReplyDelete
 57. \\ ஜோசப் பால்ராஜ் said...
  Chithappu,
  10 questions series la neenga eluthunathu thaan toppu.
  thool kilappitteenga chithappu\\

  நன்றி ஜேசப்! மிக்க நன்றி!

  ReplyDelete
 58. \\ ambi said...
  //நீங்க சொன்ன போது தான் சார் தெரிஞ்சுது நீங்க கூட பிளாக்கர்ன்னு! அது உண்மையா?
  //

  ஹிஹி, சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது அபி அப்பா. :))\\

  வாங்க அம்பி!நீங்க மேனேஜர் லெவல்ல இருந்து பார்த்த கோணத்தை நான் இந்த கோணத்டுல பார்த்துட்டனே!

  ஆஹ பதிவு போட மேட்டர் இல்லாம இருந்த பஞ்சத்தை நீக்கிய பரிசல்காரனுக்கு நன்னி!

  ReplyDelete
 59. \\ நிஜமா நல்லவன் said...
  :))\\

  வாங்க நிஜமா நல்லவரே! வர வர மூத்தபதிவரா ஆகிட்டீங்க:-))நன்னி!

  ReplyDelete
 60. \\ கவிதா | Kavitha said...
  //"ஆஹா அபிஅப்பா தோத்துட்டார்"ன்னு கை கொட்டி சிரிப்பாங்களே, அந்த பாவம் உங்களை சும்மா விடுமா சார்?????????????????//


  அபிஅப்பா...நீங்க எப்பவுமே ஜெயிக்க மாட்டீங்கன்னு உங்களுக்கு தெரியும்..எனக்கு தெரியும் !! எதுக்கு பாவம்...அவர் மேல பழிய போட்டு அவர் பாவத்தை நீங்க கொட்டிகறீங்க?! :)\\

  ஹி ஹி! வாங்க கவிதா! நீங்க பிடிச்ச அணிலுக்கு 3 கால்ன்னு சொல்லுவீங்க, இல்லை 4 கால்ன்னு நான் சொல்லுவேன். அந்த விவாதம் போய் கிட்டே இருக்கும். நான் அதுக்கு புரூஃப் வெங்காயம் எல்லாம் காட்டனும். பின்ன கூட நீங்க அணில் காலை உடச்சிட்டு நான் ஜெயிச்சுட்டேன்ன்னு கத்துவீங்க, ஆக நீங்க ஜெயிச்சுட்டீங்க! ஜூப்பர்:-)))

  மத்தபடி அணில் குட்டி எப்படி இருக்கு? நலமா:-)))))))))))

  ReplyDelete
 61. \\ சந்தனமுல்லை said...
  ROTFL!

  February 20, 2009 4:03 PM\\

  வாங்க சந்தனமுல்லை! மிக்க நன்றி!

  ReplyDelete
 62. 8. ஆளே இல்லாத டீ கடையில் டீ ஆத்துவது போல் என் கேபினுக்கு வந்து "ஒரு 80 ஸ்டோரி பில்டிங் நமக்கு கிடைச்சிருக்கு, கன்சல்டண்ட் குப்பன், கிளையண்ட் சுப்பன்ன்னு பீலா விடிறீங்களே ஏன் சார் ஏன் சார் என்னை நம்பி ச்சேட் பண்ணும் புண்ணியவான்களுக்கு நான் என்ன கண்டின்யூட்டி கொடுக்க முடியும்? சொல்லுங்க, இதனால் என்ன என்ன பிரச்சனை வருது தெரியுமா உங்களுக்கு?

  ஆஹாஹா

  ஆஹா அபிஅப்பா தோத்துட்டார்"ன்னு கை கொட்டி சிரிப்பாங்களே, அந்த பாவம் உங்களை சும்மா விடுமா சார்?????????????????
  ஒரு பத்தினி பிளாக்கரோட சாபம் உங்களை சும்மா விடாது!
  ஆஹாஹாஅ

  ReplyDelete
 63. ##அமிர்தவர்ஷினி அம்மா said...

  8. ஆளே இல்லாத டீ கடையில் டீ ஆத்துவது போல் என் கேபினுக்கு வந்து "ஒரு 80 ஸ்டோரி பில்டிங் நமக்கு கிடைச்சிருக்கு, கன்சல்டண்ட் குப்பன், கிளையண்ட் சுப்பன்ன்னு பீலா விடிறீங்களே ஏன் சார் ஏன் சார் என்னை நம்பி ச்சேட் பண்ணும் புண்ணியவான்களுக்கு நான் என்ன கண்டின்யூட்டி கொடுக்க முடியும்? சொல்லுங்க, இதனால் என்ன என்ன பிரச்சனை வருது தெரியுமா உங்களுக்கு?

  ஆஹாஹா##

  வாங்க அமிதம்மா! மிக்க நன்றீ!!

  ReplyDelete
 64. அபி அப்பா,
  ஏன் இந்த கொல வெறி ? நீங்க ஜாலியா வீட்டுல இருந்து கலக்கறீங்க :)-)))))) எங்களைதான் ப்ராஜெக்ட் மேனேஜர்ங்க முறைக்கிராங்க :)-((((
  உங்களை எல்லாம் ஏன் "டாப் டென்ல்" போட்டாங்கன்னு இப்ப புரியுது..........

  அன்புடன்
  மாசற்ற கொடி

  ReplyDelete
 65. \\ Massattra Kodi said...
  அபி அப்பா,
  ஏன் இந்த கொல வெறி ? நீங்க ஜாலியா வீட்டுல இருந்து கலக்கறீங்க :)-)))))) எங்களைதான் ப்ராஜெக்ட் மேனேஜர்ங்க முறைக்கிராங்க :)-((((
  உங்களை எல்லாம் ஏன் "டாப் டென்ல்" போட்டாங்கன்னு இப்ப புரியுது..........

  அன்புடன்
  மாசற்ற கொடி

  \\

  வாங்க லதா! வருகைக்கு நன்னி! ஆமா நான் வீட்டிலே உட்காந்து இருப்பது எப்படி தெரியும்!

  ஆமா எப்ப பதிவு எழுத போறீங்க? 3 பதிவு போட்டு தமிழ்மணத்துல சேர்த்து ஜோதில ஐக்கியமாகுங்க!

  ReplyDelete
 66. //ஹாய் மேன் குட் மார்னிங் 7.50 என சொல்கிறீர்களே! ஏன்? கொஞ்சம் லேட்டா தமிழ்மணம் ஓப்பன் பண்ணினா ஓப்பன் ஆகாதா???//

  ROTFL
  :)))

  ReplyDelete
 67. /
  வால்பையன் said...

  //ஒரு பத்தினி பிளாக்கரோட சாபம் உங்களை சும்மா விடாது!//

  இதுக்கு என்ன அர்த்தம்,
  ரெண்டு ப்ளாக் வச்சிருந்தா அதுக்கு பேரு வேறயா?

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
  /

  ஐயகோ நான் 3 ப்ளாக் வெச்சிருக்கேனே :((((((((((((

  ReplyDelete
 68. இந்த 10 கேள்வி சீரியஸில் முதலிடம் தரலாம்.. நகைச்சுவை ததும்பும் அட்டகாசம்.

  அதுவும் முதல் கேள்வி தினமும் எனக்கு நடக்கும் கோர சம்பவம். நான் தினமும் 10 நிமிட லேட் பார்ட்டி. அதுதான் என் மானேஜரின் முதல் 'தம்' நேரமும்..

  ReplyDelete
 69. தொல்ஸ்,

  கலக்குறே சந்துருக்கு சமமான பதிவு. பரிசலுக்குத்தான் நன்றி சொல்லனும் இதுக்கு.

  ReplyDelete
 70. //ஒரு பத்தினி பிளாக்கரோட சாபம் உங்களை சும்மா விடாது!//

  ஹி ஹி ஹி...

  ReplyDelete
 71. 10 க்கு 10 சீஸன் போல!!1

  ReplyDelete
 72. /********/ஒரு பத்தினி பிளாக்கரோட சாபம் உங்களை சும்மா விடாது! /********/

  விடவே விடாது.....நீங்க உக்காந்திருக்குற இடம் ரொம்ப வசதின்னு நினைக்குறேன்....கம்ப்யுடர்ல ரொம்ப மும்முரமா வேலை பக்குரிங்கன்னு உங்க மேலாளர் நினச்சுகிட்டு இருக்காரோ ?

  ஹ்ம்ம்..நான் ஜன்னல் ஓரமா இல்ல, ஜன்னல் பார்த்து உக்கந்துருக்குரதால.எல்லாருக்கும் தெரியும் நான் எந்த சைட் திறந்து பாக்குறேன்னு... ..பட் நான் எதுக்கும் அசையுரதில்லை........மேலாளர் பார்த்தா... "Ponnaththa ..take your time"..nu சிரிச்சுட்டே சொல்லிட்டு போயிடுவார்.

  ReplyDelete
 73. ஸ்ஸ்ஸ்....... அப்பாப்பாபா .... எத்தன பதிவு இதே மாதிரி ......... இப்பவே கண்ணா கட்டுதே ....... முடியல ........

  ReplyDelete
 74. ஆபீஸுல உங்களுக்கு இதுக்குத்தான் சம்பளம் குடுக்கறாங்களா?? உங்க ஆபிஸ்ல சொல்லி இந்த சைட்ஸையெல்லாம் ப்ளாக் (block) பண்ண சொல்லனுங்க :-))))

  கேள்விகள் எல்லாம் சூப்பருங்க, கடைசி கேள்விதான் டாப்பு.. மாப்பு..

  உங்க வேண்டுகோளின் படி ஒரு கவிதை எழுதிட்டேங்க..

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))