பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

February 23, 2009

அபியும் நானும் திரை விமர்சனம்!!!

நான் 2 நாள் முன்ன அபியும் நானும் படம் பார்த்துட்டேன். 2008 டிசம்பர் 22 க்கு டிக்கெட் எல்லாம் ஒத்தி போட்டு ஒத்தி போட்டு (அந்த படம் 21ம் தேதி ரிலீஸ் என சொன்னதால்) எங்க ஊர்ல அது ரிலீஸ் ஆகாததால் பார்க்க முடியாமையே ஆகிவிட்டது.

அதன் பின்னே லக்கி விமர்சனத்துக்கு வெயிட் பண்ணினேன். அவர் தானே எலி நமக்கெல்லாம். மனுஷன் எல்லா படத்தையும் எப்படித்தான் பார்த்து நம்மை காப்பத்துறாரோ! அதை விடுங்க! நான் பார்த்த “அபியும் நானும்” விமர்சனம் கீழே!


பிரகாஷ்ராஜ் – ஐஸ்வர்யா தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை பிறக்குது. அதன் பேர் அபி. ஒரே குழந்தை. அதான் பிரச்சனையே. அதே தம்பதிகள் நமது ஜெனரேஷனுக்கு முன்னே ஜெனரேஷன்ல இருந்திருந்தா இப்படி ஒரு படம் வந்திருக்க வாய்ப்பே இல்லை. ஏன்னா இப்ப எல்லா தம்பதிக்கும் ஒரு குழந்தை அதிக பட்சமா போனா ரெண்டு. அந்த காரணத்தால் குழந்தைகளுக்கு அத்தை, மாமா, சித்தி, சித்தப்பா போன்ற உறவு மண்ணாங்கட்டிகள் கிடையாது. வேற வழியே இல்லாம அப்பா, அம்மா தான் குழைந்தை கூட விளையாடி தொலைக்கனும்.

இதே அந்த காலமாக இருந்தா குழந்தைகளை பெரியவங்க கிட்ட படுக்க போட்டுட்டுட்டு அடுத்த வேலையை பார்க்க ஆரம்பிக்கலாம். (இதான் உண்மை). ஆக இப்படியாக பிறக்கும் அந்த ஒரு குழந்தை மேல அப்பா பிரகாஷ்ராஜ்க்கு உயிரோ உயிர். ஆனா அம்மா ஐஸ்வர்யாவுக்கு அப்படி இல்லைன்னு சொல்ல முடியாது. ஆனா பிராக்டிகலா நல்ல சிந்தனை உள்ளவங்க. அப்படி வளரும் அந்த பொண்ணு ஒரு சர்தார்ஜிய லவ்ஸ் பண்ணுது.

வந்து அப்பாகிட்டே சொல்லும் போது அப்பாவுக்கு பிடிக்கலை. ஆனா அம்மாவுக்கு ஓக்கே. அதன் பிறகு அப்பா திடீர்ன்னு இல்லை கொஞ்சம் கொஞ்சமா ஓக்கேவாகி கல்யாணம்.

கதை என்னமோ சிம்பிள் தான். ஆனா அதை அழகா சொன்ன விதம் அருமை.
எடுத்த விதமும் அருமை. சரளமான அந்த காமடி வசனமும் அருமை. எல்லாரும் படம் பத்தி பிரிச்சு மேஞ்சாச்சு. ஆனா என் பார்வை கொஞ்சம் வித்யாசமா இருக்குதே என்ன பண்ண?

பிரகாஷ்ராஜ் நடிப்பில் குறையொன்றும் இல்லை கண்ணான்னு பாட வைத்தாலும் அம்மாவாக ஐஸ்வர்யா நடிப்பு அருமை.அம்மாவா வாழ்ந்துட்டாங்க! ஒரு சின்ன குழந்தை தான் பாவப்பட்ட காரணத்துக்காக ஒரு பிச்சைகாரனை வீட்டுக்கு கூப்பிட்டு கொண்டு வரும் போது காட்டும் எரிச்சல் அற்புதம்.

* அதே நேரம் அங்கே வரும் அப்பா தன் குழந்தைக்காக அந்த பிச்சைக்காரனை வீட்டில் சேர்த்து கொள்வது கொஞ்சம் அதிகம்.

*அப்படி ஒன்னும் அந்த பிச்சைகாரன் பாவப்பட்ட ஆள் இல்லை. வசந்த் அன் கோ வாசலில் 6 பந்துகளையும் 6 டிவியில் பார்க்கும் ஒரு ஷோக்காளி தான். தனக்கு சென்னை வெய்யில் தாங்க வில்லை என ஊட்டிக்கு வந்த ஒரு புண்ணியவான். அவன் பேரில் அந்த குழந்தைக்கு பாவம் ஏற்ப்பட்டது அந்த குழந்தையின் அறிவின்மையா அல்லது அதை தடுக்காதது அப்பாவின் அறிவின்மையா என தெரியவில்லை.

* எப்போ பார்த்தாலும் அந்த பிச்சைகாரர் “என் அம்மா என் அம்மா “ன்னு அபியை பார்த்து சொல்வது ஓக்கே. ஆனா அப்படி சொல்லும் போதெல்லாம் அந்த திரிஷாவின் முகபாவம் அய்யோ பாவம்.

* அபியை எல்லாருக்கும் படத்திலே பிடிக்குது. அதாவது தலைவாசல் விஜய் முதல் படம் பார்க்கும் பாமரன் வரை. என்ன காரணம்? அவ அழகா இருப்பது மட்டும் தான் அந்த படத்தில் அந்த அபியின் ஒரே சாதனை. ஆனா ஸ்கூல் முதல் மாணவியா? இல்லை ஸ்போர்ட்ஸில் பெரிய ஆளா? அது போன்ற எந்த காரணமும் இல்லாம அபியை ஏன் எல்லோருக்கும் பிடிக்குது! அபத்தத்தின் உச்சம்.

* அது போல அந்த சர்தார்ஜியை காதலிப்பது ஓக்கே. அந்த சர்தார்ஜி பிரதமருடன் ஜஸ்ட் லைக் தட் போன்ல பேசறார். அதுக்கு அப்பா அரண்டு போறார். அப்போது பிரகாஷ்ராஜ் நடிப்பு நல்ல காமடியா இருக்கு. அதை விடுங்க அதை அபிகிட்ட கேக்கும் போது”ஆமாப்பா அடிக்கடி பேசுவார்”ன்னு சாதாரணமா சொல்லும் போது “அய்யோ பாவம் இந்த பொண்ணு பிரதமர் மதிப்பு என்னன்னு கூட தெரியாம அப்பா வளர்துட்டாரே”ன்னு அபி மேலயும் அந்த லூசு அப்பா மேலயும் பரிதாபம் வருது.

* அபி அடிக்கடி “I know what iam doing daddy” ன்னு சொல்லும் போது எரிச்சல் அதிகமா வருது.

பிரகாஷ்ராஜ் கிட்டதட்ட ஒரு சைக்கோ கேரக்டர் இந்த படத்திலே. ஆமா அம்மா மேல கொட்டின வென்னீருக்காக அபியை தூக்கிகிட்டு ஆஸ்பத்திரி போக நினைப்பது முதல் அவ சைக்கிள் ஓட்ட ஆரம்பிக்கும் போது கூட …அவர் ஒரு சைக்கோவா தான் சித்தரிக்கப்பட்டிருக்கார். எத்தனை அப்பன் இது போல சைக்கோவா இருக்கானுங்களோ!

ஆனா அந்த அம்மா கேரக்டர்ல ஐஸ்வர்யா சூப்பரோ சூப்பர். அபி கல்யாணம் ஆகி போகும் போது ஏர்போர்ட்டிலே கலங்குவது அருமை. ஆனா அப்ப கூட லூசு அப்பா தன் நடிப்பை காமிக்க முயற்சிப்பது எல்லாம் ஐஸ்வர்யா நடிப்பிலே அடிபட்டு போகுது.

* ஆனா இதை எல்லாம் தாண்டி படம் அருமையா இருக்கு!

46 comments:

  1. //அபியை எல்லாருக்கும் படத்திலே பிடிக்குது.//
    காரணம் இல்லாமதான் குழந்தைய பிடிக்கும். காரணம் தெரிஞ்சா அது 3 வது மனுசன் . யோசனை பண்ணிப்பாருங்க புரியும்

    ReplyDelete
  2. பிரகாஷ் ராஜை.. சைக்கோ கேரக்டர் என சொல்வது.. ஓரளவுக்கு சரியாக பொருந்துகிறது..
    அந்த ஸ்கூல் இண்டர்வியூ காட்சியை மறந்துடீங்க...
    என்ன இருந்தாலும் விமர்சனம் அருமை..

    ReplyDelete
  3. அபி குழந்தையா இருக்கும் போது எல்லாருக்கும் பிடிச்சா அது ஓக்கே, அது குமரியா ஆன பின்னயும் எந்த காரணமும் இல்லாம பிடிப்பது தான் நான் சொல்றேன்.

    ReplyDelete
  4. என்னது காந்தி செத்துட்டாரா !?!?!...


    :)))

    ReplyDelete
  5. ஆமாம் ரங்கா! அந்த ஸ்கூல் காட்சியை கூட படத்தின் காமடியாத்தான் எடுத்துக்கனும்!

    ReplyDelete
  6. அனானி அய்யா! காந்தி சாகலை! இருக்காரு!

    அப்பாடா இப்பவே கண்ண கட்டுதே! அதெப்படி நான் பதிவு போடும் போது மட்டும் நீங்க தூங்கவே மாட்டன்னு அடம் பண்றீங்க!

    ReplyDelete
  7. படம் எனக்குப் பிடிக்கல. பிரகாஷ்ராஜ் ஒன்னு மெச்சூர்டா இருக்கார் (உனக்குன்னு ஒரு வாழ்க்கையை நீதான் அமைச்சுக்கனும்) இல்ல கோமாளியா இருக்கார்(இண்டெர் வ்யூ ரெம்பக் கொடுமை)

    அதெப்படி சர்தார்ஜியத் தேடி பிரதமரே அழைக்கிறார்ன உடனே அவங்க காதல் ஓக்கே ஆகுது.

    கேப்டன்கூட ரமணால இந்த் மாதிரிப் பாதிக்கப் பட்ட குழந்தைகளை வளர்ப்பாரு அப்ப அபியக் கேப்டனுக்குக் கட்டிக் கொடுப்பாரா?

    பொசசிவா இருக்காருங்கிறத ரெம்பக் கோமாளித்தனமா ஆக்கீட்டாங்க.

    ஒரே ஆறுதல் ஐஸ்தான். நல்ல நடிகை அநியாயமாக வீனடிக்கப் பட்டவர்.

    பிச்சைக்காரர் காட்சிகள் எல்லாம் ஓவர் செண்டிமெண்ட்.

    ReplyDelete
  8. அபி அப்பா, அப்போ த்ரிஷாவுக்கு இந்தப் படத்துக்காக தேசிய விருது கிடைக்காதா? விருதை எதிர்பார்த்திட்டிருக்கேன்னு ஒரு பேட்டியில சொல்லியிருந்தாரே !

    ReplyDelete
  9. ரிஷான் நீங்க "ங்" விட்டுட்டீங்கன்னு நினைக்கிரேன்!:-))

    ReplyDelete
  10. *****\அபி அடிக்கடி “I know what iam doing daddy” ன்னு சொல்லும் போது எரிச்சல் அதிகமா வருது./****

    ஏன் உங்க அப்யும் சொல்லிடுவான்னு பயமா ? :o)

    ReplyDelete
  11. \\ Nilavum Ammavum said...
    *****\அபி அடிக்கடி “I know what iam doing daddy” ன்னு சொல்லும் போது எரிச்சல் அதிகமா வருது./****

    ஏன் உங்க அப்யும் சொல்லிடுவான்னு பயமா ? :o)
    \\

    வாங்க பொன்னாத்தா!

    நான் அப்படி ஒரு லூசு இல்லை பிரகாஷ்ராஜ் மாதிரி! அபியும் அப்படி இல்லைன்னு நினைக்கிறேன்! அப்படி சொல்ல மாட்டான்னு! ஆனா இப்பவே ஸ்கூட்டி கேக்கும் போது ஒரு வித பயம் வரும் தானே!ஓட்ட சொல்லிட்டு கூடவே போகும் போது "அப்பா பயமா இருக்கு கூட வாங்க"ன்னு சொல்லும் என் அபிதான் நேச்சுரல். அந்த படத்து அபி இல்லை!

    ReplyDelete
  12. படம் ரிலிஸு ஆயிட்டா துபாயில..???

    ReplyDelete
  13. எனக்கு படத்துல காமெடி புடிச்சிருந்தது..
    சில வசனங்களும்..

    திரிஷாவை வம்பிழுக்கலைன்னா விடியமாட்டிங்குது பாவம் மாமி...:)

    ReplyDelete
  14. காரணம் இல்லாமதான் குழந்தைய பிடிக்கும். காரணம் தெரிஞ்சா அது 3 வது மனுசன் . யோசனை பண்ணிப்பாருங்க புரியும்
    //


    ரொசனை பண்ணிட்டிங்களா..? சார்

    ReplyDelete
  15. Anonymous said...

    என்னது காந்தி செத்துட்டாரா !?!?!...


    :)))
    //

    ங்கொய்யால கொண்ணுட்டாங்க

    ReplyDelete
  16. \\ தமிழன்-கறுப்பி... said...
    எனக்கு படத்துல காமெடி புடிச்சிருந்தது..
    சில வசனங்களும்..

    திரிஷாவை வம்பிழுக்கலைன்னா விடியமாட்டிங்குது பாவம் மாமி...:)\\

    வாங்க தமிழன் கருப்பி! ஹி ஹி ஹி:-))

    ReplyDelete
  17. அபியும் நானும் படம் பார்த்திட்டீங்களா..... ஆஆஆஆஆஆஆ

    இங்க வந்து இருந்து பாருங்க எதாவது ஒரு தமிழ் படம் பார்க்க மாட்டோமா, தமிழ் பேச ஆள் கிடைப்பாங்களான்னு இருக்குங்க..

    அதுக்கு எவ்வளவு மொக்கையா இருந்தாலும் தமிழ் படம் பார்க்கலாமுங்க...

    ReplyDelete
  18. இராகவன்!நான் கூட சொல்ல வெட்கமா இருக்கு டவுன்லோட் செஞ்சுதான் பார்த்தேன்! வேற வழி இல்லைன்னா அதை செய்யுங்க!:-))

    ReplyDelete
  19. அபி அப்பா said...

    இராகவன்!நான் கூட சொல்ல வெட்கமா இருக்கு டவுன்லோட் செஞ்சுதான் பார்த்தேன்! வேற வழி இல்லைன்னா அதை செய்யுங்க!:-))
    //


    ங்கொய்யால

    http://www.ultimatetamil.com/

    http://stagevu.com/videos/Films_and_Movies

    ReplyDelete
  20. //அபியை எல்லாருக்கும் படத்திலே பிடிக்குது. அதாவது தலைவாசல் விஜய் முதல் படம் பார்க்கும் பாமரன் வரை. என்ன காரணம்? அவ அழகா இருப்பது மட்டும் தான் அந்த படத்தில் அந்த அபியின் ஒரே சாதனை.//

    அபி வேடத்தில் தீபா வெங்கட் நடித்து இருந்தால் அபிஅப்பா இதே கேள்வியை எழுப்பி இருப்பாரா என்று பதிவுலகம் கேட்கிறது. அதற்கு பதில் சொல்லும் வரை உண்ணாவிரதம் இருக்கலாம் என்று இருக்கிறேன். நாளை மதியம் வரை தான் உங்களுக்கு கேடு. பதில் சொல்லாட்டி நான் சாப்பிட்டு விடுவேன்.

    ReplyDelete
  21. என்னடா இது கெடு னு சொல்லாமால் கேடு னு சொல்லி இருக்கானேனு யோசிக்குறீங்களா தொல்ஸ். கேடு விளைந்ததாலே கெடு விதிக்க நேர்ந்தது. இது போன்ற கெடுவும் ஒரு வித கேடு தானே!

    ;)))

    ReplyDelete
  22. //அபி அப்பா said...
    இராகவன்!நான் கூட சொல்ல வெட்கமா இருக்கு டவுன்லோட் செஞ்சுதான் பார்த்தேன்! வேற வழி இல்லைன்னா அதை செய்யுங்க!:-))//

    தப்பா நினைச்சுகாதீங்க...

    அது மாதிரி செய்ய மனசு ஒப்பவில்லைங்க..

    ReplyDelete
  23. \\ நாகை சிவா said...
    //அபியை எல்லாருக்கும் படத்திலே பிடிக்குது. அதாவது தலைவாசல் விஜய் முதல் படம் பார்க்கும் பாமரன் வரை. என்ன காரணம்? அவ அழகா இருப்பது மட்டும் தான் அந்த படத்தில் அந்த அபியின் ஒரே சாதனை.//

    அபி வேடத்தில் தீபா வெங்கட் நடித்து இருந்தால் அபிஅப்பா இதே கேள்வியை எழுப்பி இருப்பாரா என்று பதிவுலகம் கேட்கிறது. அதற்கு பதில் சொல்லும் வரை உண்ணாவிரதம் இருக்கலாம் என்று இருக்கிறேன். நாளை மதியம் வரை தான் உங்களுக்கு கேடு. பதில் சொல்லாட்டி நான் சாப்பிட்டு விடுவேன்\\

    வாங்க புலி சாரே!

    அந்த ரோல்ல தீபாவெங்கட் நடிச்சா என்னா மேதாபட்கர் நடிச்சா என்ன? நான் அதை ஒரு படமாத்தான் பார்த்தேன்!(அப்பாடா எதுகை மோனையா பதில் செப்பியாச்சு)

    நீங்க இப்ப டீ குடிக்கலாம். :-))

    ReplyDelete
  24. படம் பாக்குறதுக்கு முன்னாடியே, இந்த படத்து மேல ஒரு எதிர்பார்ப்பு இல்லைங்றதுனால சரியா கவனிக்கவே இல்ல... கூடுதலா, சமைச்சிக்கிட்டே பாத்துட்டு இருந்தேன்...

    //அபி குழந்தையா இருக்கும் போது எல்லாருக்கும் பிடிச்சா அது ஓக்கே, அது குமரியா ஆன பின்னயும் எந்த காரணமும் இல்லாம பிடிப்பது தான் நான் சொல்றேன்.//

    குழந்தையா இருக்கும்போது புடிக்க ஆரம்பிச்சது குமரி ஆனதுக்கப்புறம் வரைக்கும் கண்டினிவ் ஆகுது :))

    சரி... நானும் விமர்சனம் சூப்பர்னு ஒரு டெம்ப்ளேட் பின்னூட்டம் போட்டுடுறேன் :))

    ReplyDelete
  25. //பிரகாஷ்ராஜ் கிட்டதட்ட ஒரு சைக்கோ கேரக்டர் இந்த படத்திலே. ஆமா அம்மா மேல கொட்டின வென்னீருக்காக அபியை தூக்கிகிட்டு ஆஸ்பத்திரி போக நினைப்பது முதல் அவ சைக்கிள் ஓட்ட ஆரம்பிக்கும் போது கூட …அவர் ஒரு சைக்கோவா தான் சித்தரிக்கப்பட்டிருக்கார். எத்தனை அப்பன் இது போல சைக்கோவா இருக்கானுங்களோ!//

    அந்த மாதிரி இருக்கக் கூடாதுன்னு சொல்றீங்க...சரி விடுங்க...நான் இன்னியோட உங்க போஸ்டைப் படிச்சித் திருந்திட்டேன்.

    ReplyDelete
  26. //அம்மாவாக ஐஸ்வர்யா நடிப்பு அருமை.அம்மாவா வாழ்ந்துட்டாங்க! ஒரு சின்ன குழந்தை தான் பாவப்பட்ட காரணத்துக்காக ஒரு பிச்சைகாரனை வீட்டுக்கு கூப்பிட்டு கொண்டு வரும் போது காட்டும் எரிச்சல் அற்புதம்.//

    படம் இன்னும் நான் பார்க்கவில்லை. ஆனால் சேனல்கள் புண்ணியத்தில் க்ளிப்பிங்ஸ்தான் மாற்றி மாற்றிக் காட்டுகிறார்களே:)! இந்த சீனில் அவங்க நடிப்பு நன்றாகத்தான் இருந்தது. நல்ல நடிகை. என்ன.. குரல்தான் கொஞ்சம் இடிக்கும்:)! ஆனால் நல்ல நடிப்பு சொந்தக் குரலில்தான் இன்னும் மிளிரும் என்பதையும் மறுக்க முடியாது!

    ReplyDelete
  27. படம் இன்னும் பார்க்கலை. விமர்சனம் படிக்க நல்லாருக்கு!

    //அப்படி சொல்ல மாட்டான்னு! ஆனா இப்பவே ஸ்கூட்டி கேக்கும் போது ஒரு வித பயம் வரும் தானே!ஓட்ட சொல்லிட்டு கூடவே போகும் போது "அப்பா பயமா இருக்கு கூட வாங்க"ன்னு சொல்லும் என் அபிதான் நேச்சுரல். அந்த படத்து அபி இல்லை!//

    :-)

    ReplyDelete
  28. நான் இன்னும் படம் பார்க்கலை!

    பார்த்துட்டு பின்ன வரேன்!

    ReplyDelete
  29. ஏன்னா இப்ப எல்லா தம்பதிக்கும் ஒரு குழந்தை அதிக பட்சமா போனா ரெண்டு. அந்த காரணத்தால் குழந்தைகளுக்கு அத்தை, மாமா, சித்தி, சித்தப்பா போன்ற உறவு மண்ணாங்கட்டிகள் கிடையாது. வேற வழியே இல்லாம அப்பா, அம்மா தான் குழைந்தை கூட விளையாடி தொலைக்கனும்.//

    எங்க வீட்டில் இப்பவே அப்படித்தான் நடக்குது.. பிடிக்குதோ பிடிக்கலையோ கொஞ்சி/விளையாடி தொலைக்க வேண்டியதாக இருக்கு :)

    ReplyDelete
  30. நான் இன்னும் படம் பார்க்கலை!

    பார்த்துட்டு பின்ன வரேன்!//

    ரீப்பீட்டு..!

    ReplyDelete
  31. அவர்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை அப்படியே பிரதிபலிக்கும் தன்மை குழந்தைகளிடம் இப்போதெல்லாம் குறைந்து வருகிறதென்றே நினைக்கிறேன் .காரணம் விளம்பரங்களும் ...திரைப்படங்களுமே! குழந்தைகளை குழந்தைத் தன்மையுடன் காண்பிப்பதை ஏனோ பல ஊடகங்களும் தவிர்த்தே வருகின்றன.இயல்பாக ஒரு குழந்தை என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை மட்டுமே அக்குழந்தை திரையிலும் செய்ய வேண்டும்."குட்டி" என்று ஒரு குறும்படம் சில நாட்களுக்கு முன் பார்த்தேன்.வேலைக்காரச் சிறுமியும் சரி கொஞ்சம் வசதியான முதலாளி வீட்டுப் பையனும் சரி அவர்களது எல்லைக்குள் நிற்க வைக்கப் பட்டே பாத்திரப் படைப்பு ஆக்கப் பட்டிருந்தது. அந்தந்த வயதிற்கு மீறி எந்தக் குழந்தை எதை செய்தாலும் பெற்றோர்கள் கண்டிப்பாக கவனமாக அவர்களைக் கண்காணித்தல் அவஷியம் .
    நோட்:
    நான் இன்னும் படம் பார்க்கலை. இவ்ளோ தான் இப்போதைக்கு விமர்சனம் படிச்சதுல தோணின கருத்துக்கள். ஐச்வர்யா மட்டும் இல்லை முக்கால்வாசி அம்மாக்களும் இயல்பான உணர்வுகளுடன் தான் வாழ்கிறார்கள்.அப்பாக்கள் தான் சில நேரங்களில் பிரகாஷ் ராஜ் மாதிரி ஓவர் ஆக்சன் பண்ணி விடுகிறார்கள்???!!!

    ReplyDelete
  32. பிரகாஷ்ராஜ் கிட்டதட்ட ஒரு சைக்கோ கேரக்டர் இந்த படத்திலே. ஆமா அம்மா மேல கொட்டின வென்னீருக்காக அபியை தூக்கிகிட்டு ஆஸ்பத்திரி போக நினைப்பது முதல் அவ சைக்கிள் ஓட்ட ஆரம்பிக்கும் போது கூட …அவர் ஒரு சைக்கோவா தான் சித்தரிக்கப்பட்டிருக்கார். எத்தனை அப்பன் இது போல சைக்கோவா இருக்கானுங்களோ?
    //
    பலர் இதை அதீத பாசம் என்கிறhர்கள். உங்கள் பார்வையில் இப்படி தோன்றுகிறது இல்லீயா?

    நம்முடைய கைவிரல்களே ஒரே மாதிரி இல்லாத போது பார்வைகளும், எண்ணங்களும், வேறு வேறhக தாக இருக்கும்.

    குழந்தைகளை கூட கவனிக்காமல் வேலை வேலை என்று சொல்கின்ற பெற்றேhர்கள் மத்தியில், இது போன்ற தந்தையும் இருக்கிறhர் என்பதை எடுத்துக்காட்டவே இந்த படம் என்று எனக்கு தோன்றுகிறது. இந்த படத்தை ஆழமாக ரசித்து பாருங்கள் சில உண்மைகள் தெரியும்,

    ReplyDelete
  33. \\ கடையம் ஆனந்த் said...
    பிரகாஷ்ராஜ் கிட்டதட்ட ஒரு சைக்கோ கேரக்டர் இந்த படத்திலே. ஆமா அம்மா மேல கொட்டின வென்னீருக்காக அபியை தூக்கிகிட்டு ஆஸ்பத்திரி போக நினைப்பது முதல் அவ சைக்கிள் ஓட்ட ஆரம்பிக்கும் போது கூட …அவர் ஒரு சைக்கோவா தான் சித்தரிக்கப்பட்டிருக்கார். எத்தனை அப்பன் இது போல சைக்கோவா இருக்கானுங்களோ?
    //
    பலர் இதை அதீத பாசம் என்கிறhர்கள். உங்கள் பார்வையில் இப்படி தோன்றுகிறது இல்லீயா?

    நம்முடைய கைவிரல்களே ஒரே மாதிரி இல்லாத போது பார்வைகளும், எண்ணங்களும், வேறு வேறhக தாக இருக்கும்.

    குழந்தைகளை கூட கவனிக்காமல் வேலை வேலை என்று சொல்கின்ற பெற்றேhர்கள் மத்தியில், இது போன்ற தந்தையும் இருக்கிறhர் என்பதை எடுத்துக்காட்டவே இந்த படம் என்று எனக்கு தோன்றுகிறது. இந்த படத்தை ஆழமாக ரசித்து பாருங்கள் சில உண்மைகள் தெரியும்,

    \\ வாங்க ஆனந்!

    நான் சொல்ல வந்ததும் அதான். ஏன்னா நானும் அந்த மாதிரி ஒரு சைக்கோ தான். நான் என் பார்வையில் இருந்து அந்த படத்தை பார்த்து ஒரு விமர்சனம் எழுதின்னேன்.

    என்னை விட்டு தள்ளி போய் ஒரு சராசரி ஆளா நின்னு எழுதினதுதான் இந்த பதிவு.

    உங்களுக்கு தேவையானா மெயில் பண்ணுங்க அந்த பதிவை அனுப்பறேன்!

    ReplyDelete
  34. /*ஆனா ஸ்கூல் முதல் மாணவியா? இல்லை ஸ்போர்ட்ஸில் பெரிய ஆளா? அது போன்ற எந்த காரணமும் இல்லாம அபியை ஏன் எல்லோருக்கும் பிடிக்குது!*/
    ஒருத்தரைப் பிடிக்க இவைமட்டும் காரணம்னா யாருக்குமே யாரையும் பிடிக்காது.

    /*எத்தனை அப்பன் இது போல சைக்கோவா இருக்கானுங்களோ!*
    கண்டிப்பா ஒண்ணு ரெண்டு பேரு இருப்பாங்க. பொண்ணுக்கு உடம்பு சரியில்லைனு அம்மாவைத் திட்டற அப்பாக்கள் இருக்கும் பொழுது இப்படி இருக்க மாட்டாங்களா என்ன?

    /*முதல் அவ சைக்கிள் ஓட்ட ஆரம்பிக்கும் போது கூட ...*/
    இவர் கார்ல போனாரு...பஸ் ஏத்திவிட்டுட்டு பத்திரமா போய்ட்டாளானு பார்க்க சைக்கிள்லயே பின்னாடி வந்த அப்பாவைப் பார்த்திருக்கிறேன்.

    /*ஓட்ட சொல்லிட்டு கூடவே போகும் போது "அப்பா பயமா இருக்கு கூட வாங்க"ன்னு சொல்லும் என் அபிதான் நேச்சுரல். அந்த படத்து அபி இல்லை!*/
    இந்த அபி இன்னொரு வீடா இருக்கலாம்... :-))

    இந்த படத்தில் அதீத பாசம் கொஞ்சம் மிகைப்படுத்தியே காட்டப்பட்டிருக்கு. ஆனால் மொழிக்கப்புறம் கொஞ்சம் கூட சங்கடம் இல்லாமல் என் குழந்தைகளோட மிகவும் இரசித்துப் பார்த்த படம் இது...அதுக்காக கண்டிப்பா படத்தை பாராட்டணும்

    ReplyDelete
  35. ளுக்கு தேவையானா மெயில் பண்ணுங்க அந்த பதிவை அனுப்பறேன்ஸ
    //
    நன்றி.

    ஒரு தகப்பனின் மற்றெhரு பரிமாணத்தை இந்த படத்தில் அவர் வெளிப்படுத்தியிருப்பார். ஒரு பெண் குழந்தை பிறந்து, வளர்ந்து, திருமணம் ஆகி செல்கின்ற வரை ஒரு தகப்பனின் கடமை எப்படியிருக்கும் என்பதையும், குழந்தைகள் தான் சில நேரங்களில் நமக்கு வாழ்க்கையை கற்றுக்கொடுக்கிறhர்கள் என்று சொல்கின்ற போதும் யாதர்த்தாமாக இருக்கிறது.
    அதீத பாசத்தின் வெளிப்பாடாக இந்த படம் அமைந்திருக்கிறது.

    ReplyDelete
  36. அமுதா said...
    மொழிக்கப்புறம் கொஞ்சம் கூட சங்கடம் இல்லாமல் என் குழந்தைகளோட மிகவும் ரசித்துப் பார்த்த படம்
    //
    குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படங்களில் இதுவும் ஒன்று.

    ReplyDelete
  37. \\ அமுதா said...
    /*ஆனா ஸ்கூல் முதல் மாணவியா? இல்லை ஸ்போர்ட்ஸில் பெரிய ஆளா? அது போன்ற எந்த காரணமும் இல்லாம அபியை ஏன் எல்லோருக்கும் பிடிக்குது!*/
    ஒருத்தரைப் பிடிக்க இவைமட்டும் காரணம்னா யாருக்குமே யாரையும் பிடிக்காது.

    அமுதா! அப்படி நான் சொல்லவில்லை!ஒரு பைத்தியகார பெண்ணுக்கு மானம் காக்கிரார் திரிஷா! ஓக்கே ஓக்கே ஆனா அதுக்கு அவ அப்பா சட்டைதானா கிடைச்சுது? சரி போகட்டும் என்னை வீட்டிலே விட்டுடும்மான்னு ஆட்டோவிலே ஏறும் அப்பாவை இபடியா அலட்சியம் செய்வது??

    /*எத்தனை அப்பன் இது போல சைக்கோவா இருக்கானுங்களோ!*
    கண்டிப்பா ஒண்ணு ரெண்டு பேரு இருப்பாங்க. பொண்ணுக்கு உடம்பு சரியில்லைனு அம்மாவைத் திட்டற அப்பாக்கள் இருக்கும் பொழுது இப்படி இருக்க மாட்டாங்களா என்ன?

    இருக்காங்க ஆனா கடையம் ஆனந்த்க்கு சொன்ன பதில் தான் உங்களுக்கும். நான் அபிஅப்பாவா எழுதின பதிவு வேற!


    /*முதல் அவ சைக்கிள் ஓட்ட ஆரம்பிக்கும் போது கூட ...*/
    இவர் கார்ல போனாரு...பஸ் ஏத்திவிட்டுட்டு பத்திரமா போய்ட்டாளானு பார்க்க சைக்கிள்லயே பின்னாடி வந்த அப்பாவைப் பார்த்திருக்கிறேன்.

    /*ஓட்ட சொல்லிட்டு கூடவே போகும் போது "அப்பா பயமா இருக்கு கூட வாங்க"ன்னு சொல்லும் என் அபிதான் நேச்சுரல். அந்த படத்து அபி இல்லை!*/
    இந்த அபி இன்னொரு வீடா இருக்கலாம்... :-))

    ஆஹா! என் வீடு ஒரே வீடு ஒரே மகள் ஒரே மகன் ஹஹ்ஹஹ்ஹா

    இந்த படத்தில் அதீத பாசம் கொஞ்சம் மிகைப்படுத்தியே காட்டப்பட்டிருக்கு. ஆனால் மொழிக்கப்புறம் கொஞ்சம் கூட சங்கடம் இல்லாமல் என் குழந்தைகளோட மிகவும் இரசித்துப் பார்த்த படம் இது...அதுக்காக கண்டிப்பா படத்தை பாராட்டணும்\\

    ReplyDelete
  38. ஏன்னா இப்ப எல்லா தம்பதிக்கும் ஒரு குழந்தை அதிக பட்சமா போனா ரெண்டு. அந்த காரணத்தால் குழந்தைகளுக்கு அத்தை, மாமா, சித்தி, சித்தப்பா போன்ற உறவு மண்ணாங்கட்டிகள் கிடையாது.

    நல்ல ஆராய்ச்சி

    அவ அழகா இருப்பது மட்டும் தான் அந்த படத்தில் அந்த அபியின் ஒரே சாதனை. ஆனா ஸ்கூல் முதல் மாணவியா? இல்லை ஸ்போர்ட்ஸில் பெரிய ஆளா? அது போன்ற எந்த காரணமும் இல்லாம அபியை ஏன் எல்லோருக்கும் பிடிக்குது! அபத்தத்தின் உச்சம்.
    :)-

    அபி அடிக்கடி “I know what iam doing daddy” ன்னு சொல்லும் போது எரிச்சல் அதிகமா வருது.
    :))))))

    ReplyDelete
  39. டாக்டர் விஜய், பத்மஸ்ரீ விவேக் வரிசையில் நீங்களும்....

    http://tsivaram.blogspot.com/2009/02/blog-post_24.html

    ReplyDelete
  40. அம்மா மேல கொட்டின வென்னீருக்காக அபியை தூக்கிகிட்டு ஆஸ்பத்திரி போக நினைப்பது//


    nejamavay loosudhan...

    ReplyDelete
  41. எனக்குப் படம் பிடிக்கலை.. பிடிக்கலை.. பிடிக்கலை..

    ஆனா த்ரீஷாவைவிட ஐஸ்வர்யாவுக்காக படம் பார்க்கலாம்..

    ஓகேவா அபிப்பா..

    ReplyDelete
  42. அதீதமாய் பாசம் வைப்பது என்னிக்குமே ஆபத்து தான், இல்லையா அபி அப்பா?

    அர்ச்சனா அப்பா திருந்திடறதா சொல்லி இருக்கார். சூர்யா அப்பாவும் திருந்திடுவார். :))

    ஆக அபி அப்பாவின் இன்னொரு டாவு ஐஸ்வர்யான்னு தெரிஞ்சு போச்சு. :))

    ReplyDelete
  43. அபி அப்பா..படம் பாத்து பயந்திருக்கீங்கன்னு நினைக்கிறேன்..

    அழகா ..த்ரிஷாவா..மேக்கப்பே இல்லையே.. அதுக்காகவா அவளை நேசிக்கிறாங்க.. நண்பருக்கு குழந்தை இல்லை.. அவருக்கும் அவ குழந்தை.. அதைதவிர அவ சின்ன வயசிலிருந்தே கருணையா இருக்கான்னு காட்டிட்டாங்க.. சின்னதா இருக்கும் போது தெளிவில்லாம வீட்டுல் வச்சிக்க சொன்னா..பெரிசானதுக்கபறம் தான் பிச்சைக்கார பையித்தியாகாரிய கொண்டுபோய் ஹ்ஹோம் ல சேக்கறாளே.. தன்னைப்போலவே கருணை உள்ளங்கொண்டவனை தேடிக்கண்டுபிடிச்சிருக்காளே..அப்படி ப்பட்ட ஒரு பெண்ணை எல்லாரும் நேசிப்பதில் என்ன சந்தேகம் உங்களுக்குன்னே புரியல..

    ReplyDelete
  44. //அபியை எல்லாருக்கும் படத்திலே பிடிக்குது. அதாவது தலைவாசல் விஜய் முதல் படம் பார்க்கும் பாமரன் வரை. என்ன காரணம்? அவ அழகா இருப்பது மட்டும் தான் அந்த படத்தில் அந்த அபியின் ஒரே சாதனை.//

    அழகா இருந்தாதான் ஒருத்தர பிடிக்கனுமா????இல்ல ஸ்கூல் முதல் மாணவியாவோ விளையாட்டு வீராங்கனையாவோ இருந்தாதான் முடியுமா????அவளோட குணத்த அழகா காட்டியிருக்காங்களோ.அது போதாதா????

    ReplyDelete
  45. \\பிரகாஷ்ராஜ் கிட்டதட்ட ஒரு சைக்கோ கேரக்டர் இந்த படத்திலே. ஆமா அம்மா மேல கொட்டின வென்னீருக்காக அபியை தூக்கிகிட்டு ஆஸ்பத்திரி போக நினைப்பது முதல் அவ சைக்கிள் ஓட்ட ஆரம்பிக்கும் போது கூட …அவர் ஒரு சைக்கோவா தான் சித்தரிக்கப்பட்டிருக்கார். எத்தனை அப்பன் இது போல சைக்கோவா இருக்கானுங்களோ!//

    அபி அப்பா..நீங்க கொஞ்ச நாளைக்கு முன்னாடி நீங்க ஒரு அடுக்குமாடி குடியிருப்புல தங்கியிருந்ததாகவும் இது மாதிரி ஒரு வென்னீர் அனுபவம் உங்களுக்கு நடந்ததாகவும் நீங்கள் அபியைத் தூக்கிக்கொண்டு அருகில் இருந்த மருத்துவரிடம் ஓடியதாகவும் எழுதியிருந்தீர்களே????
    அப்ப நீங்க சைக்கோவா????

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))