பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

June 30, 2007

தசாவதாரம் - ஒரு டிரைலர்!!!

சிவாஜி படம் பல இடங்களில் சக்கை போடு போட்டாலும் பல இடங்களில் மொக்கை போட்டு கொண்டிருக்கிறது. காரணம் எத்தனை தியேட்டர் எத்தனை தியேட்டர். இந்த படத்தை பொறுத்தவரை எத்தனை நாள் ஓடுகிறதுன்னு பார்ப்பது முக்கியமில்லை. கலக்ஷன் என்ன என்பது மட்டுமே முக்கியம். ஆக படம் ஜெயித்துவிட்டது. அது போகட்டும். தசாவதாரம் என்னா ஆச்சுன்னு இனிமே நம்ம வலைப்பதிவர்கள் ஆராய கிளம்பிடுவாங்க. அதுக்கு வடம் புடிச்சு குடுத்துட்டேன் இந்த தலைப்பின் மூலமாக. ரெடி ஸ்டார்ட் மீசிக். என் தொழில் இதுவல்ல. ஏதாவது காமடின்கிற பேர்ல குப்பைய கொட்டிகிட்டு இருப்பது மாத்திரமே. மக்களே தலைப்பை பார்த்து வந்தாச்சா அபிஅப்பா பதிவுக்கு! இப்ப நம்ம கச்சேரி!

"மக(ள்)ராசனா போயிட்டு வாய்யா"ன்னு "தம்பி" ஒரு பதிவு போட்டு அனுப்பி வச்சாரு மயிலாடுதுறைக்கு. அந்த வாழ்த்து ஆண்டவன் காதிலே போய் சேர்ரத்துக்குள்ள மறுவி போய் "மவ(ன்)ராசனா போயிட்டு வாய்யா"ன்னு விழுந்து அவரும் "ஆமின்" போட்டுட்டாரு. நான் அங்க போன 3 நாள் பின்ன பையன் பொறந்துட்டான்.

அந்த முதல் 3 நாளும் நான் தங்கமணிக்கு செஞ்ச பணிவிடைகளை நம்ம டெல்லி சகோதரி நேரிடையா பார்த்து கண்கலங்கிட்டாங்க.(முத்துலெஷ்மியக்காவ், பாலிஷா விட்டுடுவோம் எதா இருந்தாலும் பேசி தீர்த்துப்போம்).

சரி! 23ம் தேதி நம்ம பாசக்கார குடும்பம் வரும் முன்னமே டெல்லி சிங்கம் சென்ஷி அவர் அம்மா சகோதரியோடு வந்து பார்த்துட்டுட்டாங்க. சரி 23ம் தேதி நம்ம பாசகார குடும்பத்தின் சந்திப்பின் விஷயங்களை எழுதுவோம்ன்னு பார்த்தா முதல்ல கண்மணி டீச்சர் கலக்கி எடுத்து ஒரு பதிவு, பின்னாலேயே தங்கச்சி காயத்ரி ஒரு பதிவு, நம்ம சென்ஷி ஒரு பதிவு, அதோட இல்லாம நம்ம முத்துலெஷ்மி ஒரு பதிவுன்னு தூள் கிளப்ப அமைதியான நம்ம "ஜி" ஒரு பின்னூட்டம் ரெடி பண்ணி எல்லா பதிவிலும் காபி பேஸ்ட் பண்ணிகிட்டு இருக்கார். அனேகமா இந்த பதிவிலும் அதை அவர் செய்வார் என்று நம்ப தகுந்த வட்டாரம் சொல்வதால் இந்த பதிவிலே நான் அந்த வேலையை செய்து அவரின் பாரத்தை நானே சுமக்கிறேன்.

சரி நீ என்னத்த கிழிச்சன்னு கேட்பவர்களுக்கு - இலங்கையில் இப்போது நடக்கும் நிகழ்வுகளுக்கு நீங்கள் என்ன கொள்கை ரீதியான முடிவு எடுத்திருக்கிறீர்கள்? என 1947 ஆகஸ்ட் 15 முதல் ஒரு ரெடிமேட் கேள்வி எல்லா நிருபரும் நேரு முதல் மன்மோகன்சிங் வரை கேட்கும் போது ஒரே பதில் வரும் "மத்திய அரசு நிலமையை உண்ணிப்பாக கவனித்து வருகிறது"ன்னு. (இத்தினி வருஷம் இவ்வள்வு உண்ணிப்பாக கவனிச்சா கண்ணு அவுஞ்சி போயிடாது!!)...நானும் அந்த சந்திப்பில் அப்படித்தான்"நிலமையை உண்ணிப்பாக கவனித்து வந்தேன்". சரி கவனிச்சதையாவது சொல்லித்தொலை என்றால் அதுவும் முடியாது. காரணம் "என் பதிவை மீள் பதிவு செய்ய நீ யார்"ன்னு யாரும் நாக்கு மேல பல்லு போட்டு ஒரு கேள்வி கேட்க்கப்படாது. அதான்.

சரி இந்த பதிவிலே என்ன சொல்லப்போறேன்னு கதறும் கண்மணிகளுக்கு ...அதான் சொல்லிட்டேனே தலைப்பிலேயே 'ஒரு டிரைலர்". ஆம் அபி அப்பா ரொம்ப நாளா காணுமேன்னு (சந்தோஷமா) இருப்பவர்களுக்கு இது ஒரு டிரைலர் பதிவு! அவ்வளவே!

சரி ரொம்ப பீலா உட்டது போதும் என்னதான் எழுதி கிழிக்க போற அடுத்த பதிவிலேன்னு கேட்டா ஒரே நாள் இரவிலே மயிலாடுதுறையின் அத்தனை தாவணிகளும் திருட்டுபோய் அதுக்கு பதில் சுடிதாரை கொண்டு வந்து கொட்டிய குஜராத்தி/ராஜஸ்தானிய பாசிசம் பத்தி எழுதுவதா அல்லது கொஞ்சம் கூட குறையாத மயிலாடுதுறையின் குசும்பு பத்தி எழுதுவதா அல்லது எங்க ஊர் ரோடு அழகு பத்தி எழுதுவதா(மயிலாடுதுறை நகராட்சியே ரோட்டில் உள்ள குழிகளை மூடு அல்லது அரசாங்கமே டாஸ்மாக்கை மூடு) நெறைய விஷயம் இருக்கு மக்கா! பின்னி பெடல் எடுக்க! கொஞ்சம் பின்ன வர்ரேன்.


அதுக்கு முன்ன பாசக்கார குடும்ம சந்திப்பு பத்தி முத்துலெஷ்மி பதிவிலே எழுதியிருந்தாங்களே "கல்யாணம் முடிஞ்ச பின்ன சுத்தி சேர் போட்டு ரவுண்டு கட்டி உக்காந்து ரகளை அடிப்போமே"ன்னு அது சத்தியம். எல்லாரும் அன்று ஊருக்கு போன பின் என் பாடு ரொம்ப கஷ்டமா இருந்துச்சி! நெகிழ்வான சந்திப்பு! இந்த அண்ணாச்சிக்காக வந்த அத்தனை என் சொந்தங்களுக்கு கண்மணி டீச்சர்/கோபி/ஜெயந்தி/முத்துலெஷ்மி&மாதினி/சபரி/ராம்/ஜி/காயத்3/அவங்க அம்மா/எங்க அக்காகோதை/அபிபாப்பா எல்லாருக்கும் எப்படி நன்றி சொல்வேன்!

அதுபோல் ரகளை நடந்து கொண்டிருக்கும் போதே போனில் கலந்து கொண்ட மங்கை/அவங்க சரிபாதி/அவந்திகா/நம்ம புலி மற்றும் அனைவருக்கும் மிக்க நன்றி!!!

64 comments:

 1. ஜி said...
  பாசக்கார குடும்பம் சந்திப்பில் வெளிவராத சில உண்மைகள்...

  * வலைப்பதிவில் எப்போதுமே அடிவாங்கும் மூத்தப் பதிவர் (வயசுல இல்லீங்க), இளந்தலை ராயல் ராமை யாருமே டார்கட் செய்யவில்லை என்பதில் அனைவருக்குமே வருத்தம். அப்பப்ப செல்பேசியில் ரஞ்சனி காலிங், மஹா காலிங்னு மட்டும் வந்துக் கொண்டே இருந்தது.

  * இம்சை அரசி தன்னை கண்மணி அக்கா டீச்சர் ஆக்கியதைக் குறித்து பயங்கற குற்றச்சாற்றை எழுப்பினார். தான் இன்னும் LKG தான் படித்துக் கொண்டிருப்பதாகவும், அதனால் தன்னை மாணவியாக அறிவிக்க வேண்டுமென்றும் அடம்பிடித்தார். ஒரே இடத்திலேயே உக்காந்து உக்காந்து படித்திருப்பார் என்று நினைக்கிறேன். அதனால்தான் இத்தனை வருசமாக ஒரே வகுப்பில் படித்துக் கொண்டிருக்கிறார்.

  * சென்ஷி வந்த பிறகுதான் தெரிந்தது அவர் ஒரு கஜினி சூர்யா கேஸ் என்று. சந்திப்பு முடியும் வரை யார் நீங்க? நான் எங்க இருக்கேன்? போன்ற கேள்விகளைக் கேட்டுக் கொண்டே இருந்தார். சந்திப்பு முடிந்து அனைவரும் கிளம்பும் நேரத்தில் "இன்று சந்திப்பு நன்றாக நடந்தது ராம்" என்று என் கையைப் பிடித்து என்னிடம் கூறியதுதான் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படித்தியது.

  * நண்டை எடுத்துக் கொண்டு இந்த கோழிக்கு நாலு காலுதான் இருக்குன்னு காயத்ரி தரையில உருண்டு அழ, அது நொண்டி கோழி அதான் இன்னொரு கால் இல்லைனு அபிஅப்பா சமாளிச்சதுக்கப்புறம்தான் காயத்ரி தன் அழுகையையே நிறுத்தினார். அடுத்த முறை எட்டுக்கால் பூச்சி பிரியானி ஆர்டர் செய்வதாக அபிஅப்பா கூறியதும், 'பூரான் பிரியானி செஞ்சிடுங்க. அதுலதான் எக்கச்சக்க கால் இருக்கும்'னு காயத்ரி அறிவுறை கூறினார்.

  * கண்மணி அக்கா உள்ளே வந்தவுடனே, வலைப்பதிவிலுள்ள அதே கலகலப்பில் அனைவரையும் ஓட்டிக் கொண்டிருந்தார். அவர்கள் பேசியதைப் பார்த்து முத்துலட்சுமி அக்காவே வாயடைத்துப் போனார் என்றாள் பார்த்துக் கொள்ளுங்கள்.

  கோழி பிரியானி, நண்டு வறுவல், மீன் பொறியல், சந்திப்பில் பேசிய பல விசயங்களை மறக்கடிக்க செய்துவிட்டது என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

  ReplyDelete
 2. இப்பவேவா ? இதெல்லாம் ஓவர் ஆமா

  ReplyDelete
 3. யாருங்க அது "சதா"அவதா"ரம்":-))

  ReplyDelete
 4. நான் உங்க கூட போன்ல பேசினதைப் பத்தி சொல்லாம விட்டுட்டீங்களே அபி அப்பா!

  ReplyDelete
 5. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 6. தொல்ஸ், முதலில் புது வரவுக்கு வாழ்த்துக்களை கூறி கொள்கிறேன்...

  பாசக்கார குடும்பம், பாசக்கார குடும்பம என்று சொல்லிட்டு நம்ம பெயர கடைசில போட்டதை பற்றிக் கூட எனக்கு கவலை இல்லை... ஆனா நம்ம தலைவலி கீதா பெயர எனக்கு அப்புறம் ஆச்சும் போட்டு இருக்கலாம்... அவங்க மனசு என்ன பாடுபடும் என்பதை கொஞ்சம் ஆச்சும் நினைச்சு பாத்தீங்க....

  அவங்க அழ ஆரம்பிச்சா நிறுத்த மாட்டேங்களே...

  ReplyDelete
 7. "தசாவதாரம் - ஒரு டிரைலர்!!!"

  ///
  நன்றி
  வணக்கம் !!!!!

  ReplyDelete
 8. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 9. என்னை வெச்சி ஏதும் காமெடி கீமெடி பண்ணலையே!

  :(

  ReplyDelete
 10. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 11. //கோவி.கண்ணன் said...
  நான் உங்க கூட போன்ல பேசினதைப் பத்தி சொல்லாம விட்டுட்டீங்களே அபி அப்பா! //

  சிபி! அது நீங்கன்னு தெரியாம கோவி.கMMஅன் பதிவெல்லாம் பத்தி விலா வாரியா பேசினேனே! என்ன கொடுமை சரவணா!

  ReplyDelete
 12. நாகை சிவா said...
  தொல்ஸ், முதலில் புது வரவுக்கு வாழ்த்துக்களை கூறி கொள்கிறேன்...

  ///


  ரிப்பிட்டேய்


  சென்ஷி

  ReplyDelete
 13. //சிபி! அது நீங்கன்னு தெரியாம கோவி.கMMஅன் பதிவெல்லாம் பத்தி விலா வாரியா பேசினேனே! என்ன கொடுமை சரவணா!
  //

  உங்க பாராட்டுக்கள்(!?) எல்லாத்தையும் அவரிடம் தெரியப் படுத்திட்டேன்.

  ReplyDelete
 14. This comment has been removed by the author.

  ReplyDelete
 15. அபிஅப்பா,
  Back to aani station?

  வாங்க வாங்க. மீண்டும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 16. சதாவதாரம் said...
  இப்பவேவா ? இதெல்லாம் ஓவர் ஆமா
  //

  இதை நான் ஒத்துக்க மாட்டேன்
  என் உழைப்பை நக்கலடிக்குறாங்க
  நீங்க மாடு'ரேஷன் பண்ணாம வெளியிடுரீங்க... :(

  ReplyDelete
 17. கமல்,

  ஜாக்கிரதையா இருந்துக்குங்க!

  இப்படித்தான் 4 வருஷமா என்னை இந்த பதிவுலக போட்டு குமுறி எடுத்துகிட்டிருக்காங்க!

  ஐயாம் யொஉவர் பெஸ்ட் ஃபிரண்ட்!

  அப்புறம் வொய் பிளட் சேம் பிளட் கதை ஆயிடப் போகுது!

  ReplyDelete
 18. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 19. பயணம் நல்ல படியா அமைந்து மீண்டும்.. ஆட்டத்தில் இறங்கியமைக்கு வாழ்த்துக்கள்.

  :)

  ReplyDelete
 20. உங்க பாராட்டுக்கள்(!?) எல்லாத்தையும் அவரிடம் தெரியப் படுத்திட்டேன்.
  //
  ஒரு பச்ச மண்ண போயி கலாய்ச்சிட்டீங்க தள... :)

  ReplyDelete
 21. //உள்குத்து எதுவும் இல்லையே? :)))//

  ஆஹா எங்க ஸ்பெல்லிங் ஸ்லிப்ன்னாலும் நம்ம கொதஸின் கழுகு பார்வைக்கு தப்பாது:-))

  ReplyDelete
 22. அந்த முதல் 3 நாளும் நான் தங்கமணிக்கு செஞ்ச பணிவிடைகளை நம்ம டெல்லி சகோதரி நேரிடையா பார்த்து கண்கலங்கிட்டாங்க.
  //

  எனக்கும் தான் வந்து வாச்சிருக்கே
  துணி துவக்கிறது, சோறு பொங்குறது, கறி வைக்கிறது,பசங்கள ஸ்கூலுக்கு அனுப்புறது, தவிர வேற ஒண்ணும் பணிவிடை செய்வது இல்லை

  ReplyDelete
 23. //யாரும் நாக்கு மேல பல்லு போட்டு ஒரு கேள்வி கேட்க்கப்படாது. அதான்.
  //

  யாரும் கேட்க மாட்டாங்க.. ஏன்னா, நாக்கு மேல பல் போட்டு பேசவே முடியல அப்புறம் ஏப்படி கேள்வீ கேட்க முடியும்

  ReplyDelete
 24. // நாகை சிவா said...
  தொல்ஸ், முதலில் புது வரவுக்கு வாழ்த்துக்களை கூறி கொள்கிறேன்...

  பாசக்கார குடும்பம், பாசக்கார குடும்பம என்று சொல்லிட்டு நம்ம பெயர கடைசில போட்டதை பற்றிக் கூட எனக்கு கவலை இல்லை... ஆனா நம்ம தலைவலி கீதா பெயர எனக்கு அப்புறம் ஆச்சும் போட்டு இருக்கலாம்... அவங்க மனசு என்ன பாடுபடும் என்பதை கொஞ்சம் ஆச்சும் நினைச்சு பாத்தீங்க....

  அவங்க அழ ஆரம்பிச்சா நிறுத்த மாட்டேங்களே... //

  சிவா! வாழ்த்துக்கு நன்றிய்யா! சிண்டு முடியலைன்னா நம்ம தஞ்சாவூர் மண்ணுக்கு ஏது பெருமை! நடத்தும் நடத்தும்!!!

  ReplyDelete
 25. //ஒரு பச்ச மண்ண போயி கலாய்ச்சிட்டீங்க தள//

  இதை நாங்கள் வன்மையாகக் கண்ணடிக்கிறோம்!

  ReplyDelete
 26. கமல்! உங்கள போய் காமநெடி செய்ய முடியுமா நீங்க பெரிய்ய ஆளாச்சே!:-))

  ReplyDelete
 27. கோவி.கண்ணன் said...
  நான் உங்க கூட போன்ல பேசினதைப் பத்தி சொல்லாம விட்டுட்டீங்களே அபி அப்பா!
  ///


  கோழி பிரியானி, நண்டு வறுவல், மீன் பொறியல், சந்திப்பில் பேசிய பல விசயங்களை மறக்கடிக்க செய்துவிட்டது என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

  ReplyDelete
 28. //பயணம் நல்ல படியா அமைந்து மீண்டும்.. ஆட்டத்தில் இறங்கியமைக்கு வாழ்த்துக்கள்.
  //

  முதல்ல பாலபாரதிதான் பேசினாராம். ஆனாலும் அபி அப்பா நம்பலை!

  பாலபாரதி இவ்வளவு விவரமா ஆள்மாறாட்டமெல்லாம் செய்ய மாட்டாருனு பெசிக் கான்ஸெப்ட்லயே அடிச்சிட்டாராம்!

  ReplyDelete
 29. இங்க பச்சை மண்ணு யாரு?

  நானா? அபி அப்பாவா?

  ReplyDelete
 30. சிவா! வாழ்த்துக்கு நன்றிய்யா! சிண்டு முடியலைன்னா நம்ம தஞ்சாவூர் மண்ணுக்கு ஏது பெருமை! நடத்தும் நடத்தும்!!!
  //

  நாங்க நாகை மண்ணாக்கும்

  ReplyDelete
 31. யாருப்பா கமல்! ஒரு முடிவோட கிளம்பியாச்சா! நடத்துய்யா நடத்துய்யா!!

  ReplyDelete
 32. நன்றி சிபி! கோவி கிட்ட என் பாராட்டை சொன்னதுக்கு!

  ReplyDelete
 33. வாங்க பாலா! உங்களை பார்க்காம இயற்க்கை சதி செஞ்சுடுச்சு! அனேகமா அதிமுக (அமுக இல்லை)னிம் சதின்னு நெனக்கிறேன்!:-))

  ReplyDelete
 34. அபி அப்பா said...
  யாருப்பா கமல்! ஒரு முடிவோட கிளம்பியாச்சா! நடத்துய்யா நடத்துய்யா!!
  //

  எல்லாம் தசாவதார விளம்பரம்தான் ஹி ஹி

  ReplyDelete
 35. அபி அப்பா said...
  கமல்! உங்கள போய் காமநெடி செய்ய முடியுமா நீங்க பெரிய்ய ஆளாச்சே!:-))
  //

  எதோ தெரியாம ரெண்டு படத்தில மத்தம் குடுத்துட்டேன் அதுக்காக இப்படி என்னைய விமர்சிப்பது நல்லதா இதற்கு கிடேஷன் பார்கில் முடிவெடுக்க படும்... :)

  ReplyDelete
 36. //எல்லாம் தசாவதார விளம்பரம்தான் ஹி ஹி//

  ஆமா!

  (இந்தப் படத்துல நான் இன்னொரு கெடப்பு)

  ReplyDelete
 37. கோவி.கண்ணன் said...
  இங்க பச்சை மண்ணு யாரு?

  நானா? அபி அப்பாவா?
  //

  இதிலென்ன சந்தேகம் எங்க அபிஅப்பாதான்

  ReplyDelete
 38. அபி அப்பா said...
  யாருங்க அது "சதா"அவதா"ரம்":-))
  //

  இங்க வந்ததும் ஆ'ரம்'பிச்சாச்சா

  ReplyDelete
 39. நான் அபி அப்பாவோட விசிறியாக்கும்!

  ReplyDelete
 40. ஏய்! நான் கூடத்தான்!

  ReplyDelete
 41. சிநேகா said...
  நான் அபி அப்பாவோட விசிறியாக்கும்!
  //

  ஆமா நீங்க சார்ஜாவுல இருக்கும் போது ரெண்டு பேரும் ரகசியமா சந்திப்பிங்கலாமே


  பத்த வைச்ச பரட்டை

  ReplyDelete
 42. லைலா said...
  ஏய்! நான் கூடத்தான்!
  //
  போங்கடி அந்தபக்கம்
  அலைய்யுராளுவோ...

  ReplyDelete
 43. என்னைப் பார்த்தா உங்களுக்கெல்லாம் எப்படித் தெரியுதுன்னேன்?

  ReplyDelete
 44. //என்ன கொடுமை சரவணா! //

  இந்த சிபித் தம்பி எப்பவுமே இப்படித்தான்!

  என் பேர்ல நம்ம ஜீகிட்டெ ரெண்டு தடவை போன்லே பேசி இருக்காரு!

  க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..........

  ReplyDelete
 45. ஆஹா ஆரம்பமாச்சா......

  வாழ்த்துக்கள் அபி,அபிதம்பி அப்பா.

  தம்பி பேரென்ன சொல்லலியே.

  ReplyDelete
 46. உலக நாயகன் படத்திற்கு உள்ளூர் நாயகனின் முன்னோட்டம்........ படிச்சுடீங்களா...........

  ReplyDelete
 47. தலைவா...வந்துட்டியா?

  இனி கலக்கல் தான் :)))

  ReplyDelete
 48. உண்மையான விசிறி நாந்தான்யா

  ReplyDelete
 49. எனது படத்துக்கு இத்தனைவிளம்பரம் நானே செஞ்சதில்லே

  எனக்கு அழுகாச்சி அழுகாச்சியா வருது
  ஓஓஓஓஓஓஓ
  ஓஓஓஓஓஓஓஓஓஓஒ
  ஓஓஒ

  ReplyDelete
 50. //யாருங்க அது "சதா"அவதா"ரம்":-)) //

  நாந்தான்யா அது
  இன்னுமா என்னை தெரியலை

  ReplyDelete
 51. போன் என்னையா ஆச்சி அரபிகாரி பேசிகிட்டே இருக்கா...?

  ReplyDelete
 52. மொபைல் என்ன ஆச்சி என்னை மறந்துட்டீங்களா...

  ReplyDelete
 53. மக்கா! நான் தான் சொன்னனே முன்னமே, காலை 7.00 முதல் மாலை 5.00 வரை நான் பூமிக்கு 200 அடிக்கு கீழே இருப்பேன். மொபைல் ரேஞ்ஜ் கிடைக்காது. லேந்த் லைன்ல ட்ரை பண்ணுங்கப்பா!

  ReplyDelete
 54. அபி அப்பா said...
  மக்கா! நான் தான் சொன்னனே முன்னமே, காலை 7.00 முதல் மாலை 5.00 வரை நான் பூமிக்கு 200 அடிக்கு கீழே இருப்பேன். மொபைல் ரேஞ்ஜ் கிடைக்காது. லேந்த் லைன்ல ட்ரை பண்ணுங்கப்பா!
  ///

  200 அடிக்கு கீழேயிருந்து சொன்னா எனக்கு எப்படி கேக்கும் மேல வாங்க தல.... :)

  ReplyDelete
 55. சந்திப்பு எப்படி இருந்துச்சுன்னு சத்தத்துலேயே தெரிஞ்சது...:-))

  (இருந்தாலும் ஒரு விஷயத்த ஒத்துக்கிட்டதுக்கு.. நன்னி நன்னி...)

  ReplyDelete
 56. வாங்க அபி அப்பா! என்ன இன்னும் பாதாள சாக்கடைக்கு தோண்டிய குழிகள்
  மூடவில்லையா???

  ReplyDelete
 57. ஒரு வழியா வந்தாச்சா போய் ஒழுங்க ஆணி புடுங்கற வேலையைப் பாரும்.நெறய தேங்கிக் கெடக்கும்.

  ReplyDelete
 58. //மயிலாடுதுறை நகராட்சியே ரோட்டில் உள்ள குழிகளை மூடு அல்லது அரசாங்கமே டாஸ்மாக்கை மூடு) நெறைய விஷயம் இருக்கு மக்கா!//

  ஹேய்! நானு சொல்றேன்.. நானு சொல்றேன்! பாசக்கார அண்ணாச்சி நம்ம குடும்பம் நல்லாயிருக்கனுமின்னு நடுராத்திரில நடு ரோட்டுல அங்கப்பிரதட்சணம் பண்ணினார்... அவ்வ்வ்வ் :((

  ReplyDelete
 59. பாவி சென்ஷி இங்கயும் ரிப்பீட்ட்டா? ஓய்.. நீங்க திருந்தவே மாட்டீரா?

  ReplyDelete
 60. நீங்க திரும்பி வந்ததுக்கு ஒரு ட்ரைலரா அண்ணா? அப்ப "அவதாரம்-ஒரு டிரைலர்"னு தானே போடனும்?

  ReplyDelete
 61. நல்வரவு, நல்வரவு, சந்தடி இல்லாமல் வந்திருக்கீங்க போலிருக்கு! பையனுக்குப் பேர் சூட்டும் விழா எல்லாம் நல்லா நடந்தது பத்திப் பதிவுகளில் பார்த்துத் தெரினுச்சுட்டேன். புலி வந்து சந்தடி சாக்கிலே நாரதர் வேலை செய்திருக்கிறதும் பார்த்தேன். அது அப்படித்தான் செய்யும். பையன் பேரு என்ன வச்சிருக்கீங்க? அது சொல்லவே இல்லையே! :D

  ReplyDelete
 62. வாங்க அபி அப்பா. அபிதம்பிய நல்லா கவனிச்சீங்களா? சந்திப்புல நானும் இல்லியேன்னு வருத்தமா இருந்துது. அடுத்தமுறையாவது கலந்துக்கமுடியுமானு பாப்போம்.

  ReplyDelete
 63. Dear Abi Appa, Wishes and your second achievement. Please change your blogger name. You are no more only Abi Appa now you are Abi thambi Appa also.

  ReplyDelete
 64. அபி அப்பா, எப்படி இருக்கீங்க? எங்க இருக்கீங்க. உங்களுக்கும், உங்க மனைவிக்கும், புதிதாக உலகை பார்க்கும் மகனுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். என்ன பெயர் வச்சிருக்கீங்க குழந்தைக்கு? உங்களுக்கு தனி மடல் எழுத மின்னஞ்சல் தாங்க வாழ்த்த வேண்டுமென்று கேட்டிருந்தேன், ம்ஹும் ஒருவரும் உதவவில்லை ;-( பாசக்கார குடும்பமிருந்து என்ன பயன் ? ;-) (ஹப்பா உள்குத்து சரியா வேலை செய்யும்). இப்படிலாம் தலைப்பு வச்சி ஆவலோடு வந்த என்னை போன்றவர்களுக்காவது ஏதாச்சும் கொசுறு செய்தி வச்சிருக்கலாம்ல ;-)

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))