பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

October 8, 2007

தென்னவன் புகழ் காமடி நடிகர் விஜய்காந்துக்கு பிடிக்காத வார்த்தை எனக்கு வேண்டும்!!!

நம்ம குசும்பர் கொஞ்சநாள் முன்ன கதிர் தம்பியை ரொம்பவே கலாய்ச்சி எடுத்து தம்பி கோவிச்சுகிட்டு மாடில இருந்து குதிக்க போறேன்னு என் கிட்ட மிரட்டல் விடுத்து அதுக்கு நான் "கொஞ்சம் இருப்பா, அவனை கண்டிக்கிறேன்"னு சொல்லிட்டு பின்ன ஒரு நாள் குசும்பனை கூப்பிட்டு நாங்க 5 பேர் அவர் கூட ஹோட்டலுக்கு போய் "6 கல்கண்டு பால் அதிலே 5 நல்லா ஆத்தி தாங்க 1 பால் கொதிக்க கொதிக்க தாங்க"ன்னு சொல்லி வாங்கி சூடு பாலை குசும்பரிடம் குடுத்து விட்டு நாங்கள் அவசர அவசரமாக குடித்து விட்டு வெளியே வந்து குசும்பர் பர்ஸை பழுக்க வச்சி பின்ன தன் ஸ்டேட்டஸ் மெஸேஜ்ல் "நான் இனி நல்ல பிள்ளையாக இருப்பேன், தம்பியை கலாய்க்க மாட்டேன்"ன்னு போடும் படி ஆகியது. அது போல நானும் ஸ்டேட்டஸ் மெஸேஜ்ல் போடாமல் பதிவு போட்டு சொல்லப்படும் அளவு ஒரு விஷயம் நடந்து போச்சுங்க. நான் இந்த பதிவின் மூலமாக சொல்லிக்க போவது இது தாங்க. "நான் போனில் இனி யாரையும் கலாய்க்க மாட்டேன், நல்ல பிள்ளையாக இருப்பேன் எனவே பொது மன்னிப்பு தாங்க".

நடந்த விஷயம் இது தாங்க, மங்களூர் சிவா தான் எல்லாத்துக்கும் காரணம். நான் பாட்டுக்கு பேசாம சேட்டி கிட்டு தாங்க இருந்தேன். அப்ப அவரு தான் "என் பிரண்ட் ஒருத்தன் துபாய்ல இருக்கான் பேர் சங்கர், ரொம்ப நல்ல பையன்"ன்னு சொன்னார். அப்படியான்னு கேட்டுட்டு போயிருந்தா இந்நேரம் இந்த பதிவு போட வேண்டி வந்திருக்காது. நானும் ஆர்வமா "நம்பர் குடுங்க கலாய்ப்போம்"ன்னு வாங்கினேன். விதி வலியது. இழுத்து கொண்டு விட்டுடுச்சு!

ட்ரிங் ட்ரிங் ட்ரிங்

அபி அப்பா: "ஹலோ வணக்கம் சங்கர்"

சங்கர்: "வணக்கம் நீங்க யாரு"

அ.அ:"எல்லாம் தெரிஞ்சவங்க தான் இப்பதான் துபாய் வந்தேன், ராமு உங்க நம்பர் குடுத்தாரு, சரி எப்படி இருக்கீங்க"

சங்கு: "எந்த ராமு, சரி நீங்க யாரு"

அ.அ: "கண்டுபிடிங்க பார்ப்போம்"

சங்கு: முடியலைங்க ப்ளீஸ் சொல்லுங்க

அ.அ: அதல்லாம் சொல்ல மாட்டேன், சரி அந்த ஓட்டு வீட்டு விஷயம் என்னா ஆச்சு?

எல்லா ஊர்லயும் நிச்சயமா ஓட்டுவீடு இருக்கும், அதிலே ஏதாவது ஓட்டு வீட்டிலே கண்டிப்பா தாவணி பொண்ணுங்க இருக்கும், நிச்சயம் எல்லா பசங்களும் ஜொல்லு விட்டிருப்பானுங்க, இப்படி சும்மா கேட்டு போட்டு வாங்குவோம் பதிவு போட வசதியா இருக்கும்ன்னு நெனச்சு கேட்டேன். அதுக்கு பதில் வந்துச்சு!

சங்கு: ஓ அதுவா 3000 குடுத்து முடிச்சுட்டேன்.

ஹையோ குழப்புராரே! என்னாத்த 3000 குடுத்து முடிச்சார், நான் கேட்டது என்ன அவர் சொல்றது என்ன...

சங்கு: ரொம்ப நாளா விலை படியாம இருந்துச்சா 3000 ரூவாய்ல பிசிறிகிட்டு இருக்க கூடாதுன்னு இந்த தடவை போனப்போ அந்த ஓட்டு வீட்டை ரிஜிஸ்டர் பண்ணிட்டேன், ஆங் இப்ப கண்டுபிடிச்சிட்டேன் நீங்க யாருன்னு!!

அட ஆண்டவா கலாய்த்தல் இன்னிக்கு ஒர்கவுட் ஆகாது போல இருக்குன்னு நெனச்சுகிட்டே மேல பேசினேன்

அ.அ: "சொல்லுங்க நான் யாரு"

சங்கு: "அதை என் வாயால சொல்ல மாட்டேன்"

ஆகா முதல் தடவையா அபிஅப்பாவுக்கு சறுக்கிடுச்சே, பார்ட்டி ஏடாகூடமான ஆள் மாதிரி இருக்கே, மங்களுர் சிவா "பையன் பசு மாதிரி"ன்னு சொன்னாரே ஆனா அப்படி தெரியலையேன்னு நெனச்சுகிட்டு ஒரு வேளை நான் யாருன்னு தெரிஞ்சிருக்குமோன்னு ஒரு க்யூரியாசிட்டில தொடர்ந்தேன்.

அ.அ: நெசமாவே கண்டுபிடிச்சீங்களா ப்ளீஸ் சொல்லுங்க நான் யாரு?

சங்கு: நான் தான் சொல்லமாட்டேன்னு சொல்றனே பின்ன என்ன நொய்யி நொய்யின்னு சரி எப்ப கொண்டு வந்து தாரீங்க"

அ.அ: என்னாத்த்த்த்த

சங்கு: என்னாது என்னாத்தயா, பணம் தலைவா பணம் பத்தாயிரம்ன்னா சும்மாவா?

அ.அ: ஹல்லோ பத்தாயிரமா பணமா ராங் நம்பருங்க, நான் யாருன்னு நெனச்சுகிட்டீங்க, யாருக்கு நான் பத்தாயிரம் தரனும் எனக்கு ஒன்னுமே புரியலைங்க

சங்கு: ஹலோ பண விஷயத்துல விளையாடாதீங்க, என் நம்பரை உங்களுக்கு குடுத்தாரே ராமு அவர்கிட்ட விசாவுக்கு பத்தாயிரம் வாங்கிட்டு வந்தீங்ளாம் அதனால தான் என் நம்பரை குடுத்தாராம், என்னய வாங்கி அனுப்ப சொன்னாரு, சரி முதல் மாச சம்பளம் வாங்கியாச்சா?

அ.அ:ஹலோ நான் 15 வருஷமா இங்க இருக்கேன், நீங்க யாருன்னு நெனச்சுகிட்டு பேசறீங்க,

இப்படியாக நான் என் பற்றிய முழு விபரமும் சொல்லியும்,அங்க அடையாளம், குலம் கோத்திரம், பக்கத்து வூட்டுகாரன், பால்காரன் பத்தி எல்லாம் சொல்லியும் ச்சும்மா கலாய்க்க இப்படி போன் செஞ்சேன் என கெஞ்சியும் சங்கு விடாபுடியாக பத்தாயிரத்திலேயே இருந்தது. இப்படியாக தினமும் 15 நாட்களாக போன் பண்ணி பத்தாயிரம் கேட்க ஆரம்பிச்ச சங்கு நேத்திக்கு ராத்திரி ஒரு மணிக்கு நான் சொர்க்கத்தில் சைக்கிள் ஓட்டி கொண்டிருந்த போது எழுப்பி பத்தாயிரம் எங்கேன்னு கேட்டுச்சு. "என்னப்பா அர்த்த ராத்திரிலன்னு கேட்டதுக்கு அதுக்கு நேத்து முதல் நைட்டூட்டியாம், இனிமே அந்த டைம் தான் வசதி படுதாம் போன் பண்ண, ஆண்டவா காப்பாத்துப்பா!

பின்ன யோசிச்சு பார்த்தேன், நான் போனில் யாரையோ கலாய்ச்சி அந்த பாவம் தான் திருப்பிகிட்டு போட்டு தாக்குதுன்னு குரங்கு ராதாவை போன்ல எழுப்பி மன்னிப்பு கேட்டுடலாம்ன்னு எழுப்பினா "மாப்ள நான் மீட்டிங்க இருக்கேன்"ன்னு சொல்றான். இது ஒரு ஃபேஷனா போச்சுப்பா, மீட்டிங்ல இருக்கேன்னு சொல்றது. சைக்கிள்ல வெங்காய மூட்டை விக்கிறவன்ல இருந்து பஸ்டாண்டு கக்கூஸ் காண்டிராக்டர் வரைக்கும் "மீட்டிங்"ல இருப்பானுங்க. ராதாவுக்கு ரொம்ப நாள் ஆசை போலருக்கு யாராவது போன் பண்ணினா "மீட்டிங்ல இருக்கேன்"ன்னு சொல்ல. அதுக்கு நான் தான் கிடச்சனா? அதுவும் அர்த்த ராத்திரில என்னடா மீட்டிங்! (குசும்பா நான் உன்னை ஏதும் சொல்லலை)

சரி விஷயத்துக்கு வாரேன், தனி தனியா மன்னிப்பு கேட்டு போன்ல காசு போவதை விட ஒரு பதிவே போட்டு பொதுமன்னிப்பு கேட்டுவோமேன்னு தான் இந்த பதிவு, மத்தபடி அபிஅப்பாவுக்கு பதிவு போட ஒன்னும் மேட்டர் கிடைக்கலை அதனால தான் தம்பி கதிர் மாதிரி பஸ்ல பேசிக்கிறதை பதிவா போடுறது, போன்ல பேசறதை பதிவா போடுறதுன்னு ஆரம்பிச்சுட்டார்ன்னு யாரும் சொல்ல பிடாது ஆமாம்!!! கதிர் சாரே உடனே சர்ன்னு கோவிச்சுகிட்டு வந்துடாதே "மாசாமாசம் 1ம் தேதி சம்பளம் வாங்கிட்ட உடனே ஸ்வீட் வாங்கிட்டு வரும் அப்பாக்கள் போல கோபி ஒரு பதிவு போடுவானே மாச பதிவு, அதும் இந்த மாசம் அதையும் போடல அவனை கலாய்க்காம எங்கிட்ட ஏன் வர்ரீங்க"ன்னு கேட்டுகிட்டு!!!

33 comments:

 1. தயவு செய்து இந்த கொஸ்டின் கேட்பதற்கு என்னை மன்னிக்கவும்

  //தென்னவன் புகழ் காமடி நடிகர் விஜய்காந்துக்கு பிடிக்காத வார்த்தை...//

  என்ன அந்த பொல்லாத வார்த்தை?

  ReplyDelete
 2. வினை விதைத்தவன் வினை அறுப்பான்....

  என்ன போல நல்லவனா இருக்க பாருங்க...

  அது உங்களால முடியாது...

  இருக்க முயற்சியாவது செய்து பாருங்க...

  ReplyDelete
 3. "தென்னவன் புகழ் காமடி நடிகர் விஜய்காந்துக்கு //


  ஏய் என்னைய வைச்சி கமெடி பண்ணுவதை இத்தோட நித்திக...

  தமிழில எனக்கு புடிக்காத வார்த்த மன்னிப்பு தெரியுதா.

  ReplyDelete
 4. இதுக்கெல்லாம் கலங்கலாமா

  இன்னும் அடியே வாங்கலை

  ReplyDelete
 5. எங்க அப்பாவோட குளோஸ் பிரண்ட் ஒருத்தர் கூட துபாயிலதான் இருகாராமா அபி அப்பா. அவர் போன் நம்பர்லாம் வேணாம். நேர்லயே கொஞ்சம் போய் பாத்துட்டு வந்துடுங்களேன்.

  ReplyDelete
 6. பதிவுக்கு சம்பந்தமேயில்லாத பின்னுட்டம் வெளியிட தடாவா..?

  ReplyDelete
 7. நிலா said...
  எங்க அப்பாவோட குளோஸ் பிரண்ட் ஒருத்தர் கூட துபாயிலதான் இருகாராமா அபி அப்பா.
  //


  எதுக்கு அபி அப்பாவை குளோஸ் பண்ணவா.. :)

  அதுக்கு எதுக்கு இபுட்டு கஷ்டம்

  அங்க இருந்தே ஊதுங்க :)

  ReplyDelete
 8. என்ன அந்த பொல்லாத வார்த்தை?
  //

  அத நாங்க அபி அப்பா தலையே போனாலும் சொல்ல மாட்டோம்

  :)

  ReplyDelete
 9. வாங்க பு பட்டியான், அந்த வார்த்தை தெரியாதா உங்களுக்கு மன்னிப்பே இல்லை போங்க:-))

  ReplyDelete
 10. புலியாரே! தேவ் நட்சத்திர வாரத்துல நான் சொல்லியிருந்தேன் "பின்னூட்டத்தில் கூட நகைச்சுவையில் பின்னி எடுக்கும் புலியார்"ன்னு! என்னோட அந்த வார்த்தையை காப்பாத்திட்டய்யா, எனக்கு அழுவ அழுவலா வருது!!:-))

  ReplyDelete
 11. "மாசாமாசம் 1ம் தேதி சம்பளம் வாங்கிட்ட உடனே ஸ்வீட் வாங்கிட்டு வரும் அப்பாக்கள் போல கோபி ஒரு பதிவு போடுவானே மாச பதிவு, அதும் இந்த மாசம் அதையும் போடல //
  சூப்பரு இதுதான் அபிஅபா
  என்ன பழைய ஃபார்ம் க்கு திரும்பறீங்க போல

  ReplyDelete
 12. ரமணா புகழ் விஜயகாந்து ன்னு இல்ல தலைப்பு வச்சிருக்கனும்.ஏன் நேத்து தென்னவன் சன் னில் பாத்தீங்களா

  ReplyDelete
 13. //
  ஓ அதுவா 3000 குடுத்து முடிச்சுட்டேன்.
  //
  எனக்கு அவன் மேல அப்ப இருந்தே ஒரு டவுட் இருந்துச்சு.

  //
  ஓட்டு வீட்டிலே கண்டிப்பா தாவணி பொண்ணுங்க இருக்கும்
  //
  தாவணியெல்லாம் காணாம பூடுச்சி சுடிதார்ன்னு மாத்திடுங்க

  இருந்திச்சி

  //
  ஆண்டவா காப்பாத்துப்பா!
  //
  உங்களையா இல்ல துபாயையா??

  ReplyDelete
 14. //நேத்திக்கு ராத்திரி ஒரு மணிக்கு நான் சொர்க்கத்தில் சைக்கிள் ஓட்டி கொண்டிருந்த போது எழுப்பி பத்தாயிரம் எங்கேன்னு கேட்டுச்சு//
  அண்ணாத்தே உண்மையிலேயே உங்களுக்கு சைக்கிள் ஒட்ட தெரியாதா? கனவுலதான் ஒட்டி கத்துக்கிறீங்களா?
  அய்யோ..!
  அய்யோ..!

  ReplyDelete
 15. ஹாஹா..... டிபிகல் அபிஅப்பா பதிவு.... :))

  ReplyDelete
 16. அதென்னமோ தெரியல கைப்புள்ளைக்கு அப்புறமா நீங்கதான் இப்படி கலாய்க்கப்படுறீங்க. பெரிய தலைவர் ஆக தகுதி இருக்கு ஜமாய்ங்க.
  நானே தென்னவனைப் பார்த்து கடுப்புல இருக்கேன். அதுல அவருக்கு என்ன புடிச்ச என்ன புடிக்காட்டி என்ன?

  ReplyDelete
 17. சிரிப்பு.
  இந்தச் சிரிப்பைச் சீர் தூக்கிப் பார்ப்பதே நமது பொறுப்பு.
  வந்திட்டாரு.
  பழைய அபி அப்பா வந்திட்டாரு.:))))))))))))))))))))))

  ReplyDelete
 18. அதுக்குதான் என்கிட்ட முன்னாடியே டிரைனிங் எடுத்டுக்கனும் என்பது!!!

  சென்ஷிகிட்ட கேட்டு பாருங்க!!!

  ReplyDelete
 19. ஒத்துக்குறேன் நான் மீட்டிங் என்று இரவில் சொன்னேன் ஆனா ஆபிஸியலாவாக அல்லது பர்சனலாகவா என்று என்னிடம் கேட்டிங்களா?

  ReplyDelete
 20. ஆப்பு ஆப்பு ஆப்பேய்ய்ய்ய்......... ஆப்பு வாங்கலையோ ஆப்பு ஆப்பேய்ய்ய்ய். இந்த வாரத்தின் மொத்த ஆப்பையும் அபிஅப்பா வாங்கியிருப்பதால், ஸ்டாக் இல்லை........ ஆப்பு தேவைப்படுபவர்கள் அவரிடம் கேட்டு வாங்கவும். மிகச்சிறந்த ஆப்பு வாங்கியதற்காக வாழ்த்துக்கள் :-)

  ReplyDelete
 21. //
  சிவா "பையன் பசு மாதிரி"ன்னு சொன்னாரே
  //
  'நரி'த் தோல் போர்த்திய பசுன்னு சொன்னேனே மறந்திட்டிங்களா

  //
  "மாப்ள நான் மீட்டிங்க இருக்கேன்"ன்னு சொல்றான். இது ஒரு ஃபேஷனா போச்சுப்பா, மீட்டிங்ல இருக்கேன்னு சொல்றது. சைக்கிள்ல வெங்காய மூட்டை விக்கிறவன்ல இருந்து பஸ்டாண்டு கக்கூஸ் காண்டிராக்டர் வரைக்கும் "மீட்டிங்"ல இருப்பானுங்க.
  //
  //
  அதுவும் அர்த்த ராத்திரில என்னடா மீட்டிங்! (குசும்பா நான் உன்னை ஏதும் சொல்லலை)
  //
  இது செம தமாசு.

  "குசும்பனின் அர்த்தராத்திரி மீட்டிங்குகள்"னு ஒரு பதிவு போட்டுடுங்க சீக்கிறம்.

  இல்லைனா ஹிண்ட் குடுங்க நான் போடறேன்

  ReplyDelete
 22. //கோபி ஒரு பதிவு போடுவானே மாச பதிவு, அதும் இந்த மாசம் அதையும் போடல அவனை கலாய்க்காம எங்கிட்ட ஏன் வர்ரீங்க"ன்னு கேட்டுகிட்டு//
  அப்ப அடுத்த கலாய்ப்பு கோபிக்கா??

  ReplyDelete
 23. கேப்டன், தீவாவெங்கட் இதல்லாம் யாருப்பா??????

  ReplyDelete
 24. நிலா குட்டி! வாடிதங்கம், அப்பா கெடக்காரு அந்த போன் நம்பரை தாங்க நான்ன் போய் பார்க்கிறேன்:-))

  ReplyDelete
 25. யோவ் பின்னுது மின்னல் அதென்ன அவிஅப்பவின் தலைக்கு உலை, விட்டா நாக்குக்கும் ஆப்பு வச்சிட போறப்பா! :-))

  ReplyDelete
 26. கலக்கல் காமெடி.

  //நாகை சிவா said...

  வினை விதைத்தவன் வினை அறுப்பான்....

  என்ன போல நல்லவனா இருக்க பாருங்க...//

  ரிப்பீட்டேய்
  :)

  ReplyDelete
 27. \\"மாசாமாசம் 1ம் தேதி சம்பளம் வாங்கிட்ட உடனே ஸ்வீட் வாங்கிட்டு வரும் அப்பாக்கள் போல கோபி ஒரு பதிவு போடுவானே மாச பதிவு, அதும் இந்த மாசம் அதையும் போடல //


  வேண்டாம் என்னை விட்டுடுங்க இல்லைன்னா அப்புறம் நான் பதிவு போட்டுவேன் :))

  ReplyDelete
 28. \\கண்மணி said...
  "மாசாமாசம் 1ம் தேதி சம்பளம் வாங்கிட்ட உடனே ஸ்வீட் வாங்கிட்டு வரும் அப்பாக்கள் போல கோபி ஒரு பதிவு போடுவானே மாச பதிவு, அதும் இந்த மாசம் அதையும் போடல //
  சூப்பரு இதுதான் அபிஅபா
  என்ன பழைய ஃபார்ம் க்கு திரும்பறீங்க போல\\

  கண்மணி அக்கா என் இம்புட்டு கொலைவெறி ;(

  ReplyDelete
 29. \\சின்ன அம்மிணி said...
  //கோபி ஒரு பதிவு போடுவானே மாச பதிவு, அதும் இந்த மாசம் அதையும் போடல அவனை கலாய்க்காம எங்கிட்ட ஏன் வர்ரீங்க"ன்னு கேட்டுகிட்டு//
  அப்ப அடுத்த கலாய்ப்பு கோபிக்கா??\\

  யக்கோவ்...உங்க பாசத்தை நினைச்சா!! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :)

  ReplyDelete
 30. //என் பற்றிய முழு விபரமும் சொல்லியும்,அங்க அடையாளம், குலம் கோத்திரம், பக்கத்து வூட்டுகாரன், பால்காரன் பத்தி எல்லாம் சொல்லியும் ச்சும்மா கலாய்க்க இப்படி போன் செஞ்சேன் என கெஞ்சியும் சங்கு விடாபுடியாக பத்தாயிரத்திலேயே இருந்தது//

  :))!

  இனியாச்சும் கர்ணன் கவச குண்டலம் மாதிரி போனை காதுல மாட்டி வைக்கிற பழக்கத்தை மாத்துங்க அண்ணா!!

  ReplyDelete
 31. ஹா ஹா .... நல்ல நகைச்சுவை

  என் வீட்டுக்கும் வந்துட்டு போங்க.... முகவரி :http://rasigan111.blogspot.com/

  ReplyDelete
 32. அது சரி - எல்லோரேயும் கலாச்சா இப்படித்தான் வாங்கிக் கட்டிக்கணும்

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))