பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

January 30, 2007

சாமி தான் காப்பாத்தனும்

அன்புள்ள நண்பர்/நண்பிகளே, நான் அபி அப்பா என்கின்ற குமார் தொல்காப்பியன். மயிலாடுதுறைகாரன். தற்போது வந்தாரை வாழ வைக்கும் துபாய்.

நான் முடிவெடுத்துவிட்டேன் பினாத்துவது என்று..மாப்பு மாப்பு.. பிளாக்குவது என்று. நான் முடிவு செஞ்சுட்டா என் பேச்சை நானே கேட்கமாட்டேன் என்று சொன்னால் 'போக்கிரி'யால் பாதிக்கப்பபட்ட பிளாக்கர்கள் ஆட்டோ அனுப்பக்கூடும் என்பதால் அதை விடுத்து மேலே தொடர்கிறேன்.

முதலில் அதற்க்கு என்னென்ன வேண்டும்? கம்பியூட்டர் பற்றி தெறிதல் அவசியம். எனக்கு அதைப்பற்றி கவலையில்லை. ஏனனில் எனக்கும் அதற்க்கும் 20 வ்ருஷ பழக்கம்.

அப்போது நான் கல்லூரி இறுதியாண்டு. ஒரு நாள் திடீரென எங்கள் வகுப்பை காலி செய்து தருமாறு கோரி பிரின்ஸ் ஓலை விட, சந்தோஷமாய் கிராப் தியரியில் இருந்து பிச்சுகிட்டு வாய்கால் மதகில் வந்து உக்காந்த போது வண்டி வண்டியா டைல்ஸ் உள்ளே போகுது. கூடவே ஏ.சி,இலவச கொத்தனார்,கிளாஸ் கதவுகள் இத்யாதி இத்யாதி எல்லாம் போக....கொத்ஸை பிடித்து என்னான்னு கேக்க அவரோ 'இந்திரா காந்தி அஸ்தி வருதாம் தம்பிகளா. அதுக்காண்டி உங்க கிளாசை ராவோட ராவா ஏ.சி பண்ன போறோம்யா'ன்னு சொல்ல அதுக்கப்புறம் மாயவரமே அல்லோகலப் பட்டுச்சி அந்த ராத்திரி.

காலைல பட்டுன்னு கெளம்பி காலேஜுக்கு போனா, என் கிளாஸ் வாசல்ல என் புரொபசர். முகமெல்லாம் வேர்த்துருக்கு. பெரிய்ய வரிசை. மொதல்ல பி.ஜி பசங்க உள்ள போறாங்க. வெளிய செருப்பை கழட்டி வச்சிட்டு உள்ள போயிட்டு வெளிறி போயி வர்ராங்க. வந்து புரபசர் கைய புடிச்சிகிட்டு ஏதோ சொல்றாங்க.

தட தடன்னு பிரின்ஸ் வர்ரார் காலேஜ் கமிட்டி உருப்பினர்களோடு. இருக்காதா பின்ன! காலேஜுக்கே பெருமைதானே. இதையெல்லாம் விட பெருமை என் கிளாஸ் என்பதால் எனக்கு. பாவி மகன் கடேசி பெஞ்சு பார்ட்டி நானு. நடு பெஞ்சா இருந்தாலாவது என் இடத்தில் அஸ்தி வைத்து வரலாற்றில் வந்திருப்பேன். கொடுப்பின இல்லாம போச்சே. எல்லாம்விதி.

பின்பு ஒருவழியாய் 11 மணிக்கு 3rd Bsc mathematics என சொல்ல பிதுக்கியடிச்சுட்டு மொதல்ல போய் நின்னேன். கிட்ட வந்து புரபசர் மெதுவா சொன்னார் " செருப்பை கழட்டிட்டு போப்பா...அப்புறம் வைரஸ் எதுனா ஆச்சின்னா.... டேக் கேர்". மொரட்டு சங்கதியா இருக்கேன்னு நெனச்சுகிடேன். 10,10பேரா ஒவ்வொரு பேட்சா உள்ள விட்டாங்க.

மூடி வைச்சிறுந்தாங்க. லேப் அட்டென்டர் பய பக்தியோட பக்கத்துல நிக்க, ஒரு லெக்சரர் மெதுவா தொறந்து காண்பிச்சார்.

ஐ....ஐ...கம்பியூட்டர்..

இப்படியாக 20 வருஷத்துக்கு முன்னயே எனக்கும் கம்பியூட்டர்க்கும் பழக்கம் ஆரம்பித்துவிட்டது.

பின்னாள் அந்த பயமெல்லாம் சுத்தமாய் போய் விட்டது. ஆமாம் அதன் முன்பாக ஒவ்வொருத்தராக உக்காந்து போட்டோ எடுத்துகொள்கிற அளவு துளிர் வுட்டு போச்சு. அப்போது சொன்னான் ஸ்ரீதர், "டேய் மாப்ள ஜாக்ரதையா வச்சிகனும்டா இந்த போட்டோவ...பொண்னு பாக்குரப்ப இத கொடுத்துவுடலாம்டா". (அவன் இப்போ TCS ல் project Manager- USல் இருக்கான்)

அவன் சொன்னது எனக்கு வீண் போகல. அந்த போட்டொதான் கொடுத்துவிட்டோம். அபி அம்மா வீட்டிலிருந்து ஒரு போட்டோ வந்தது...ஒலை தொப்பி போட்டுகிட்டு தியோட்லைட் பாக்குற மாதிரி. ஜாடிக்கேத்த மூடின்னு இத சொல்றதா? அல்லது தன் வினை தன்னை சுடும்னு சொல்றதா?? சரி அத விடுங்க.

பின்பு நான் துபாய் வந்த பின்பு அம்மாவுக்கு கடிதம் எழுதினேன்." அம்மா, இங்கு எனக்கு நல்ல வேலை. கம்பியூட்டரில் தான் வேலை"

உடனே அம்மாவுக்கு பாசம் பிச்சிகிட்டு உடனே அனுப்புடா போட்டாவன்னு சொல்ல நா எங்கிட்டு போவேன் கம்பியூட்டருக்கு? ஒரு வழியா ஒரு கீ போர்டு கிடைக்க, அதை 14" டி.விக்கு முன்ன வச்சி அதுக்குமுன்ன நா செத்துபோன பாடி மாதிரி உக்காந்து எடுத்து அனுப்பிவச்சேன்.

4 மாச முன்னாடி அம்மா சொன்னுச்சு " தங்கம், அந்த 2 வது போட்ட மாதிரி இப்ப எடுக்கற போட்டோல்லாம் இல்லைடா" !!!!

ஆக நா அப்போவரை மானிட்டர்தான் மேட்டறுன்னு...போங்க எனக்கு வெக்க வெக்கமா வருது.

ஆக இத்தினி வருஷம் அதுகூட தாயா புள்ளயா பழகிட்டு நா ஏன் பிளாக் எழுதக்கூடது???? போன் போட்டேன்"தம்பி"க்கு.

கம்பியூட்டர கரச்சி குடிச்ச மாதிரி அவர்கிட்ட பேசிக்கிட்டே நைஸா "தம்பி எப்டியாவது ஆரம்பிச்சு குடுங்க. ரொம்ப கஷ்டமா இருக்கு"ன்னேன்.

அதுக்கு தம்பி "இதுல கஷ்டப்படுறத்துக்கு என்னா இருக்கு?" ன்னார்.

"ஒரே கனவா வருது தம்பி. நா கீழே படுத்துகெடக்கேன். என் மேல ஒரே பின்னூட்டமா கெடக்கு. நம்ம கொத்ஸ் ஷவல் வச்சி வாரி வாரி வெளியே போட்டு என்னய காப்பாத்த பாக்குராரு. இந்த இம்சை அரசி புள்ள இன்னும் 4,5 புள்ளங்கள சேத்துகிட்டு ஒரே கும்மாளம் தாங்கல."

வாயடச்சி போயிட்டாரு நம்ம "தம்பி"

உடனே செஞ்சி கொடுத்தார். ரொம்ப நன்றி தம்பி.

ஆனா கேட்டார் பாருங்க ஒரு கேள்வி. " நீங்க எத பத்தி எழுத போறீங்க?"

ஷாக் அடிச்ச மாதிரி போச்சு எனக்கு. பிளாக் எழுத கம்பியூட்டர பத்தி யோசிச்சோமே, என்ன எழுதறதுன்னு யோசிச்சோமா??

சரி. மரம் வச்சவன் தண்ணி ஊத்துவான். பிளாக் உண்டாக்கி தந்தவன் பதிவும் போடுவான்.

சரி மக்களே!! நானும் பிளாக்கர் ஆய்டேனே!!!!!!

இனி உங்களையும் என்னையும் சாமிதான் காப்பாத்தனும். வணக்கம்.

17 comments:

 1. சும்மா சொல்லக்கூடாது கொசுவர்த்தி நல்லாவே சுத்தறிங்க!

  தமிழ்மணத்துல தாராளமா தங்கலாம்!

  வாழ்த்துக்கள், இன்னும் நல்லா சுத்தி எல்லாரையும் கதறடிங்க!

  ReplyDelete
 2. அன்பு அபி அப்பா...

  கலக்குறிங்க...உங்க பதிவ படிச்சிட்டு நான் சிரிக்கிறதை பார்த்துட்டு நம்மபய ஒருத்தன் லூசாடா நீன்னு கேட்டுட்டான்.

  ஓரே சீனா போடுறிங்க...

  நல்ல நகைச்சுவை...

  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. \\ஒரு வழியா ஒரு கீ போர்டு கிடைக்க, அதை 14" டி.விக்கு முன்ன வச்சி அதுக்குமுன்ன நா செத்துபோன பாடி மாதிரி உக்காந்து எடுத்து அனுப்பிவச்சேன்.\\

  :))))))))

  ReplyDelete
 4. \உடனே செஞ்சி கொடுத்தார். ரொம்ப நன்றி தம்பி.\\

  அட உங்களுக்கும் தம்பி தானா
  எனக்கும் பல உதவிகள் செய்து கொடுத்ததும் தம்பி தான்...
  ரொம்ப நல்லவரு, வல்லவரு,
  நம்ம தம்பி...

  ரொம்ப நன்றி தம்பி..

  ReplyDelete
 5. \\சரி மக்களே!! நானும் பிளாக்கர் ஆய்டேனே!!!!!!

  இனி உங்களையும் என்னையும் சாமிதான் காப்பாத்தனும். வணக்கம்.\\

  அட என்னையே சாமி காப்பத்தும் போது உங்களை எல்லாம் நிச்சையமா காப்பத்தும்.

  எழுதுங்கள்..எழுதிக்கிட்டே இருங்கல்

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. //சும்மா சொல்லக்கூடாது கொசுவர்த்தி நல்லாவே சுத்தறிங்க!

  தமிழ்மணத்துல தாராளமா தங்கலாம்!

  வாழ்த்துக்கள், இன்னும் நல்லா சுத்தி எல்லாரையும் கதறடிங்க!//

  நன்றி தம்பி, "பிளாக்கா..அப்டீன்னா??" ன்னு சொல்லி என்னை கழட்டிவுட்டிறுக்கலாம். இப்போ எல்லா பழிபாவத்துக்கும் நீங்க ஆளாயிட்டீங்க. சரி. அன்பளிப்புகள் இங்கே ஏற்றுக்கப்படும். ஆட்டோக்கள் உங்ககிட்டே திருப்பி விடப்படும்.

  ReplyDelete
 7. //கலக்குறிங்க...உங்க பதிவ படிச்சிட்டு நான் சிரிக்கிறதை பார்த்துட்டு நம்மபய ஒருத்தன் லூசாடா நீன்னு கேட்டுட்டான்.//

  வருகைக்கு நன்றி கோபி. "இதெல்லாம் சிரிக்கிர மாதிரியா இருக்கு"ன்னு சொல்லி "லூசாடா நீ" ன்னு கேட்டுட்டாரா. சாரி கோபி. அடுத்தடுத்து நல்லா முயற்ச்சி செய்கிறேன்.

  ReplyDelete
 8. ஆரம்பமே கலக்கல் .... ஜமாய்ங்க ..
  இயல்பான நகைச்சுவையுடன் எழுதுகிறீர்கள்... வாழ்த்துகள்.

  ReplyDelete
 9. //ஆரம்பமே கலக்கல் .... ஜமாய்ங்க ..
  இயல்பான நகைச்சுவையுடன் எழுதுகிறீர்கள்... வாழ்த்துகள்.//

  வாங்க அப்பாவி!! வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

  ReplyDelete
 10. ஆஆஆஆ......

  அபி அப்பா நான் என்ன பாவம் செஞ்சேன்???
  என்னை இப்படி வாரிட்டியளே.....

  இதெல்லாம் நல்லதுக்கு இல்ல.

  //ஒரு வழியா ஒரு கீ போர்டு கிடைக்க, அதை 14" டி.விக்கு முன்ன வச்சி அதுக்குமுன்ன நா செத்துபோன பாடி மாதிரி உக்காந்து எடுத்து அனுப்பிவச்சேன்.
  //

  கலக்கறீங்கப்பு :)))))))))))

  ReplyDelete
 11. //ஆஆஆஆ......

  அபி அப்பா நான் என்ன பாவம் செஞ்சேன்???
  என்னை இப்படி வாரிட்டியளே.....

  இதெல்லாம் நல்லதுக்கு இல்ல.//

  வாங்க வாங்க இம்சை அரசி, வருகைக்கு நன்றி.நன்றி

  //கலக்கறீங்கப்பு :))))))))))) //

  டேங்ஸுங்க

  ReplyDelete
 12. //சாமி தான் காப்பாத்தனும்//

  ஐயோ ஆமாம் :-(

  அப்படியே உங்க பேர்க் காரணத்தையும் கோலங்களாவே நீங்க வாழ்றதையும் ஒரு பதிவு போடுங்க.. வயிறு வலிக்க சிரிக்கலாம் (நாங்கல்லாம் :-))

  ReplyDelete
 13. //அப்படியே உங்க பேர்க் காரணத்தையும் கோலங்களாவே நீங்க வாழ்றதையும் ஒரு பதிவு போடுங்க.. வயிறு வலிக்க சிரிக்கலாம் (நாங்கல்லாம் :-)) //

  என்னய வச்சி ரொம்பதான் காமெடி பன்றீங்க...

  ReplyDelete
 14. //அன்புள்ள நண்பர்/நண்பிகளே, நான் அபி அப்பா என்கின்ற குமார் தொல்காப்பியன்//

  குழப்புறீங்களே அபி.அப்பா!

  தொல்காப்பியன் என்பவர் அபியோட நண்பர். அபியோட அப்பா அல்ல!

  :(

  ReplyDelete
 15. //குழப்புறீங்களே அபி.அப்பா!


  முதல்லேர்ந்து வருவுமா. வைத்தியநாதன் என்பவரின் மகன் குமார் தொல்காப்பியன் அதாவது நான். என் மகள் பெயர் அபிராமி அதாவது அபி.ஒக்கே.

  //தொல்காப்பியன் என்பவர் அபியோட நண்பர். அபியோட அப்பா அல்ல!//

  இந்த கதை'கோலங்கள்' சீரியல். எனக்கும் அந்த சீரியலுக்கும் ஒரே ஒரு சம்பந்தம் மட்டுமே உண்டு. நான் அதை பார்க்கிறேன் அவ்வளவே.

  ReplyDelete
 16. அபி அப்பா,

  இப்பதான் உங்க ப்ளாக்கை படிச்சேன். ஆரம்பமே அசத்தலாக இருக்கு.

  பாராட்டுக்கள் !

  ReplyDelete
 17. //இப்பதான் உங்க ப்ளாக்கை படிச்சேன். ஆரம்பமே அசத்தலாக இருக்கு.

  பாராட்டுக்கள் ! //

  முதல் வருகைக்கு நன்றி. அடிக்கடி வாங்க கோவி.கண்ணன்

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))