பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

May 21, 2007

நாங்கல்லாம் பெரிய இலக்கிய ஆர்வலர்களாக்கும்!!!

எங்க ஸ்கூல்ல "அது" மாத மாதம் நடக்கும். தமிழ் வாத்தியார் ஹெச்செம் ரூம் பக்கம் வந்துட்டு போனார்னாவே எங்களுக்கு நியூஸ் வந்திடும். ஆஹா நாளைக்கு "அது" நடக்க போவுதுடான்னு நாங்க பிளான் பண்ன ஆரம்பிச்சுடுவோம். அதிலும் நான் சொதப்பல் ஐடியா மன்னன் வேற. ஒவ்வொரு தடவையும் போன தடவ நடந்த தப்பு நடக்காம வேற வேற ஐடியா குடுப்பேன்.

அன்னிக்கும் அது போலத்தான் தமிழ்சார் ஹெச்செம் ரூம்க்கு போயிட்டு நேரா அடியாள் சார் குரூப் இருக்காங்க 4 பேர் அவங்க கிட்ட போய் "அது" நாளைக்கு நடக்கும் விஷயத்தை சொல்லிட்டு ஆட்டைய ஸ்டார்ட் பண்ணிட்டார். அந்த 4 சாரும் அவங்க துணை ராணுவப்படை எல்லாம் தயார் பண்ணிட்டு (அதாங்க 10 தடி தாண்டவராயன்ஸ் )வியூகம் வகுக்க ஆரம்பிச்சுட்டாங்க.

இப்பவாவது நான் அந்த பாழாப்போன "அது" என்னன்னு சொல்லியே ஆகனும். "தமிழ் இலக்கிய மன்றம்" .இந்த தமிழ் இலக்கிய மன்ற கூட்டம் மாசம் ஒரு தடவை நடத்துலன்னா தமிழுக்கு தலைகுனிவுங்குற மாதிரி அந்த தமிழ் சாருக்கு வேர்த்து கொட்டும். சரி அவர் தான் ஆசை படுறாரே நாமும் கலந்துகிட்டு கேட்டு வைப்போம்ன்னு நாங்க விட்டு குடுத்து போகாம முரண்டு தான் போங்க. அக்கம் பக்கத்துல உள்ள ஸ்கூல்ல இருக்கும் தமிழ் வாத்தியார் யாராவது சீஃப் கெஸ்ட்ன்னு பேர்ல வந்து ஏதாவது பேசுவாங்க, அதுல சில சார் சோக்கு வேற அடிப்பாங்க. அந்த நேரத்துல கூட்டத்துல குத்த வச்சி உக்காந்து இருக்க நாங்க கை தட்டனும். அது சோக்குன்னு எங்களுக்கு புரிஞ்சி கைதட்டங்காட்டிலும் விடிஞ்சுடும். அவன்க தான் கை தட்டலையே தொடர்ந்து பேசுவோமின்னு இல்லாம அவரும் வெயிட் பண்ணுவார்.

இந்த மாதிரி எக்குதப்பா ஆயிட கூடாதுன்னு தமிழ் சார் கிராஃப்ட் சாரை நியமிச்சார். அதாவது எங்களுக்கு குடுத்த இன்ஸ்ட்ரக்ஷன் படி நாங்க அவரையே பாத்துகிட்டு இருக்கணும். அவர் கை தட்டினா நாங்க தட்டனும். அவர் சிரிச்சுகிட்டே வேகமா தட்டினா நாங்களும் சிரிச்சுகிட்டே வேகமா தட்டனும். அவர் ஜெண்டிலா தட்டினா நாங்களும் அது போல தட்டனும். இதிலயும் ஒரு பிரச்சனை வந்துச்சு. கிராஃட் நிற்கும் திசையே நாங்க பார்த்துகிட்டு அவர் பக்கமே விழுந்து விழுந்து போலியா சிரிச்சு அதிலும் குரங்கு ராதா ஓவர் ஆக்டிங்ல மண்னை அள்ளி தலையில போட்டுகிட்டு வுழுந்து வுழுந்து சிரிப்பான், அந்த கொடுமை பெரிய கொடுமை. பேசும் சீஃப் கெஸ்ட்டுக்கு சந்தேகம் வந்திடுச்சு ஒரு தடவை. அதனால எங்க தமிழ் சார் அடுத்த கூட்டத்துல கிராஃப்டை சீஃப் கெஸ்ட்க்கு பின்னால நிக்க வச்சு சரி பண்ணினார்.

இந்த மாதிரி தொல்லையெல்லாம் தங்காமத்தான் என்னய மாதிரி பாதிக்கப்பட்டவங்க எல்லாம் வீட்டுக்கு ஓடி போயிடுவோம். பின்ன சுத்தமா கூட்டமே இல்லாம போய் வரும் சீஃப் கெஸ்ட்டுகிட்ட அவமானபடாம இருக்கனும்ன்னு தான் தமிழ்சார் கிராஃட் தலைமைல பாதுகாப்பு வளையம் போட்டுடுவார் நாங்க தப்பிக்காம இருக்க. அதையும் மீறி எங்க தெறமை எல்லாத்தையும் காட்டி நாங்க தப்பிச்சு வீர சாகசம் செஞ்சிடுவோம்.

இப்போ 2 வது பாராவுக்கு போகலாம் வாங்க.மருநாள் காலை ஸ்கூல் மதியம் வரை பின்ன லன்ச் முடிஞ்சவுடன் ஸ்கூலின் இரண்டு வாசல் பக்கமும் பூட்டிட்டாங்க, பூட்டி காவலுக்கு 10,11,12ம் கிளாஸ் கடேசி பென்ச் வீரர்கள் போட்டாச்சு.


இப்போ தப்பிக்க என்னென்ன வழி இருக்குன்னு பார்ப்போம். மெயின் வாசல் இரண்டு, அது வழியா முடியாது. அடுத்து கேர்ல்ஸ் டாய்லெட் பக்கமா போய் குடிதண்ணி பைப் மேல ஏறி பக்கத்து ஆரம்ப பள்ளில குதிச்சு அந்த ஸ்கூல் மெயின் வாசல் வழியா வெளியே போயிடலாம். அடுத்து பாய்ஸ் டாய்லெட்ல வழியா ஏறி ஸ்கூலுக்கு பின்னால உள்ள மூத்திர சந்து வழியா ஸ்ரெயிட்டா ஓடினா சின்ன கடை தெரு வந்திடும். ஆனா இது கொஞ்சம் ரிஸ்க்.

ஆனா நாங்க அன்னிக்கு பார்த்த விதத்திலே 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தி இருப்பது நல்லாவே தெரிஞ்சது. சீஃப் கெஸ்டும் வந்துட்டார். எங்க ஸ்கூலுக்கு வரும் சீஃப் கெஸ்ட்க்கு தரப்படும் மரியாதையே அலாதியானது. காளியாகுடி போண்டா வித் கெட்டி சட்னி 1 செட்+1துண்டு அல்வா மற்றும் 1காபி கண்டிப்பா உண்டு. அவரையும் இந்த காளியாகுடி வகையராக்களையும் ஒரு ரூமில் போட்டு வெளிபக்கமா சாத்திட்டு காவலுக்கு ஒரு NCC பையனையும் போட்டு ஏதோ வெளிநாட்டு விருந்தினரை கலாம் கவனிச்சுப்பது போல பெருமையா வளம் வருவார் தமிழ் சார்.

3.00 மணிக்கு கூட்டம் ஆரம்பம். அதுக்கு முன்ன 2.30க்கே நாங்க எல்லாம் ஸ்கூல் நடுவே இருக்கும் கிரவுண்ட்க்கு வந்திடனும். 2.30க்கு பெல் அடிச்ச உடனே ஓன்னு கத்திகிட்டே கிரவுண்ட் நடுவே எல்லா கிலாஸ் பசங்களும் ஓட எங்க குரூப்பும் ஓடி போய் முன் வரிசைல உக்காந்திட்டோம். நாங்க தான் ஐடியா பண்ணிட்டோமே முன்னாடியே. தமிழ் சாருக்கு ஏக சந்தோஷம். பசங்கன்னா இப்டீல்ல இருக்கனும்ன்னு.

எங்க குரூப் 6 பேரும் மதியம் 2.00 மணிக்கே புஸ்தக மூட்டை எல்லாம் கொண்டு போய் பாய்ஸ் டாய்லெட் பக்கமா வச்சிட்டு வந்துட்டோம். அப்ப தான் சேதி வந்துச்சு மெயின் கேட்டுல சில வீரர்கள் பிடிபட்டனர்ன்னு. மெதுவா ராதா எழுந்து தமிழ்சாரை பார்த்து ஒரு விரலை காட்டினான். சாரும் "ஆசைப்பட்டு முன் வரிசைல வந்து உக்காந்த பய ஓடமாட்டான்ன்னு "சரி போ"ன்னு சொல்ல நான் அடுத்து எழுந்து அவரை பார்த்து ஒரு விரலை காட்டினேன்."ஒருத்தனுக்கு வந்தா உங்க குரூப்புக்கே வந்துடுமே சரி சரி போயிட்டு வாங்க"ன்னு சொல்ல நாங்க டாய்லெட் பக்கமா வந்தோம்.

ராதாதான் முதல்ல ஏறினான். ஏறி குதிச்ச பின்ன நான் அவன் புஸ்தக மூட்டையை தூக்கி போட்டுவிட்டு நான் ஏறினேன். அப்ப தான் ஒரு தடியன் பார்த்துட்டு ஒடி வந்தான். அதுக்குள்ள நான் மூத்திர சந்திலே குதிச்சுட்டேன். எங்க குரூப் மீதி 4 பேரும் மாட்டிகிட்டானுங்கன்னு எனக்கு அவிங்க போட்ட சத்தத்துல தெரிஞ்சுது. நான் என் புஸ்தக மூட்டைக்காக வெயிட் பண்ணிகிட்டு இருந்த அந்த நேரத்துல ராதா கண்ணு மண்ணு தெரியாம ஓடுறான். புடிபட்டாலும் கடமை தவராத நாலில் ஒருவன் என் புஸ்தக மூட்டையை தூக்கி போட்டதுல என் கண்ணே கலங்கிடுச்சு. ஆமா அது என் மூஞ்சில விழுந்துச்சு.

ராதாவையும் என்னையும் பிடிக்க அந்த தடியன்ஸ் சைக்கிள்ல மூத்திர சந்தின் மறு முனையான சின்ன கடை தெரு பக்கம் வர்ரானுங்கன்னு அவங்க பேசிகிட்டதுல தெரிஞ்சுது.

நான் மெதுவா புஸ்தக மூட்டைல இருந்த வேற டிராயர் சட்டை எடுத்து போட்டுகிட்டு என் யூனிஃபார்ம்+புஸ்தக மூட்டை இரண்டையும் வேற பெரிய பைல போட்டுகிட்டு தலைய கலச்சிகிட்டு பேப்பர் பொறுக்கிரவனாட்டம் மெதுவா நடந்து வந்தேன். அதுக்குள்ள ஸ்கூல் யூனிபாஃர்ம்ல ஓடி வந்த ராதாவை தடியன்ஸ் 3 பேர் கோழிகுஞ்சு மாதிரி அமுக்க நான் எதுமே எனக்கு சம்மந்தமில்லாது மாதிரி சம்பவ இடத்தை கிராஸ் செஞ்சு போனேன். ராதாவின் இரண்டு கைகளையும் இரண்டு பேர் தூக்கிகிட்டு போகும் போது ராதா அலறிகிட்டே கால்களை வதக்கு வதக்குன்னு உதச்சிகிட்டே போனது இன்னிக்கும் கண்ணுக்குள்ளயே இருக்கு.

இப்போ 1 வருஷம் முன்ன இப்போ இருக்கும் எங்க ஸ்கூல் ஹெட்மிஸஸ் என்னய கூப்பிட்டு "டேய் இலக்கிய மன்றத்துல சீஃப் கெஸ்ட்டா வந்து பசங்களுக்கு சொல்லிட்டு போடா"ன்னாங்க. சரி போண்டா, கெட்டிசட்னி,அல்வாவுக்கு ஆசைப்பட்டு ஒத்துகிட்டு டீச்சரை பார்த்து கேட்டேன்"டீச்சர் இப்பவும் பசங்க இலக்கிய மன்றத்துக்கு பயந்து ஓடுறாங்களா?".

அதுக்கு டீச்சர்"ம்...பயங்கர ஸ்ட்ரிக்டா இருந்தும் சந்து முனைல ஆள் போட்டும் ஒன்னு ரெண்டு மிஸ் ஆகுது"ன்னு சொன்னாங்க.அதுக்கு நான்"சட்டைய மாத்தி போட்டு ஏமாத்துவாங்க டீச்சர்"ன்னு சொன்னேன்.

அதுக்கு டீச்சர்"மகாபாவிகளா இப்புடி கூடவா செய்வானுங்க"ன்னு ஆச்சர்ய பட்டாங்க. அதுக்கு நான்"ஆமா டீச்சர் செய்வானுங்க. பின்னால அவிங்களே சீஃப் கெஸ்டா வந்தாலும் ஆச்சர்ய பட முடியாது"ன்னு சொல்லிவச்சேன்.

56 comments:

 1. மக்கா! நான் பதிவு போட்டு ரொம்ப நாளாச்சு! ஏகப்பட்ட ஆணி. அதுக்குள்ள சில பேர் "என்ன பதிவு எழுதுவதி நிறுத்திட்டீங்களாமே?"ன்னு சந்தோஷமா கேக்க ஆரம்பிச்சுட்டாங்க. வுட்டுடுவனா அவங்க சந்தோஷமா இருக்க..அதான் இந்த பதிவு. வழக்கம் போல ஆதரவு தாங்க மக்கா!

  ReplyDelete
 2. நாங்க பதிவு படிக்க மாட்டோம்
  ஆனா பின்னூட்டம் போடுவோம்

  என்ன அபிஅப்பா கலப்பை நிறுவிட்டீங்களா இருங்க உங்க டேமேஜருக்கு போன் பண்ணி சொல்றேன்
  :))

  ReplyDelete
 3. இங்கே கும்மி உண்டா...??
  :)


  M

  ReplyDelete
 4. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்!! நீங்களே சீப் (cheap இல்லை chief) கெஸ்டா வந்தா உங்களால டிமிக்கி குடுக்க முடியாதே. இப்போ என்ன செய்வீங்க, இப்போ என்ன செய்வீங்க?

  ReplyDelete
 5. //அய்யனார் said...
  நாங்க பதிவு படிக்க மாட்டோம்
  ஆனா பின்னூட்டம் போடுவோம்

  என்ன அபிஅப்பா கலப்பை நிறுவிட்டீங்களா இருங்க உங்க டேமேஜருக்கு போன் பண்ணி சொல்றேன்
  :)) //

  வாய்யா அய்ஸ்! ப்ளீஸ் பதிவ படிய்யா அடம் புடிக்க கூடாது! ஆமா கலப்பையை போட்டுட்டேன். கை நடுக்கம் ஜாஸ்தியா போச்சு பின்னூட்டம் வராம அதான்!

  ReplyDelete
 6. மின்னல்! உண்டுய்யா உண்டு:-))

  ReplyDelete
 7. //இலவசக்கொத்தனார் said...
  முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்!! நீங்களே சீப் (cheap இல்லை chief) கெஸ்டா வந்தா உங்களால டிமிக்கி குடுக்க முடியாதே. இப்போ என்ன செய்வீங்க, இப்போ என்ன செய்வீங்க? //

  வாங்க கொத்ஸ்! இதில ஒரு கூத்து அங்க படிக்கிற என் அண்ணன் பையன் ஒருத்த்ன்"எனக்கு வயத்து வலி நான் ஊட்டுக்கு போறேன்"ன்னு பர்மிஷன் கேட்டான். ரெண்டு போட்டு அவனை உக்காரவச்சேன்!

  ReplyDelete
 8. அய்யனார் said...
  நாங்க பதிவு படிக்க மாட்டோம்
  ஆனா பின்னூட்டம் போடுவோம்
  //

  அதையாவது போடு ராசா

  M

  ReplyDelete
 9. என்ன பதிவு எழுதுவதி நிறுத்திட்டீங்களாமே?"
  //

  அப்படியா..
  ரொம்ப நல்லது

  ReplyDelete
 10. குப்பியில் குதிக்க ஏகபட்ட ஆசை இருந்தும் ஆணி புடுங்க திடீரெண்ரு ஆப்பர் வந்துவிட்டதால் நான் சிறிது நேரம் ஆணி புடுங்குவது போல் ஆக்ட் குடுத்துவிட்டு விரைவில் திரும்புவேனா....

  அல்லது

  ReplyDelete
 11. உங்களுக்கு தமிழ் இலக்கிய மன்றம் மாதிரி எங்களுக்கு ட்ரில் க்ளாஸ்னு ஒண்ணு இருக்கும்.மதியம் 2 மணிக்கு ஒரு 150,200 பசங்க கூட்டிட்டு போய் மொட்டை வெயில்ல உடற்பயிற்சி சொல்லி குடுப்பாங்க. வேகமா,மறைவா தப்பிச்சு ஓடுறது கூட ஒரு உடற்பயிற்ச்சிதான் அப்படீனு அவங்களுக்கு நாங்க சொல்லி குடுப்போம்.:-)

  ReplyDelete
 12. நீங்க தப்பிச்ச படுகுழில இப்போதைய மாணவர்களை தள்ளி வேடிக்கை பார்த்த எட்டப்பன்தனத்தை வன்மையாக கண்டிக்கிறேன். என்ன கெட்ட எண்ணம்???

  ReplyDelete
 13. //அபி அப்பா said...
  மக்கா! நான் பதிவு போட்டு ரொம்ப நாளாச்சு! ஏகப்பட்ட ஆணி. அதுக்குள்ள சில பேர் "என்ன பதிவு எழுதுவதி நிறுத்திட்டீங்களாமே?"ன்னு //

  அப்படியா கேட்டாய்ங்க? ரொம்ப நல்லவய்ங்க போலிருக்கு... நாங்க ஆசைப்பட்டதை ஓப்பனா கேட்டுருக்கான்யா... :) பாத்து செய்ங்க...

  ReplyDelete
 14. அபிஅப்பா,

  இங்கே கும்மிகளை அனுமதிக்காதீர்கள்!!

  ReplyDelete
 15. ஆயிரம் இருந்தாலும் அடுத்தவங்க பதிவுல கும்மி அடிக்கிற சுகமே தனி சுகம்!!

  என்ன கும்மி குறைவா இருக்கு?? எல்லாரும் அப்பிட்டா??
  வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 16. எக்ஸ்க்யூஸ்மி... எனக்கு ஒரு டவுட்.

  காந்தி மறுபடியும் செத்துட்டாரா..?

  ReplyDelete
 17. //வருத்தப்படாத வாலிபன். said...
  உங்களுக்கு தமிழ் இலக்கிய மன்றம் மாதிரி எங்களுக்கு ட்ரில் க்ளாஸ்னு ஒண்ணு இருக்கும்.மதியம் 2 மணிக்கு ஒரு 150,200 பசங்க கூட்டிட்டு போய் மொட்டை வெயில்ல உடற்பயிற்சி சொல்லி குடுப்பாங்க. வேகமா,மறைவா தப்பிச்சு ஓடுறது கூட ஒரு உடற்பயிற்ச்சிதான் அப்படீனு அவங்களுக்கு நாங்க சொல்லி குடுப்போம்.:-)
  //

  அப்படியா வ.வா, எல்லாருக்கும் இப்படியான அனுபவங்கல கண்டிப்பா இருக்கும், கொசுவத்தி சுத்தி பாருங்க நெறைய காமடி பதிவு கிடைக்கும்!

  ReplyDelete
 18. //காந்தி மறுபடியும் செத்துட்டாரா..? //

  இல்லன்னாலும் இந்த மாதிரி பதிவை படிச்சதுக்கப்புறமும் உயிரோடா இருக்க முடியும்?

  ReplyDelete
 19. //இலவசக்கொத்தனார் said...
  முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்!!
  //

  என்ன தாடிதானே??

  ReplyDelete
 20. //லக்ஷ்மி said...
  நீங்க தப்பிச்ச படுகுழில இப்போதைய மாணவர்களை தள்ளி வேடிக்கை பார்த்த எட்டப்பன்தனத்தை வன்மையாக கண்டிக்கிறேன். என்ன கெட்ட எண்ணம்??? //

  வாங்க லெஷ்மி! அபிஅப்பனை எட்டப்பனாக்கிட்டீங்களே:-)))

  ReplyDelete
 21. //கொசுவத்தி சுத்தி பாருங்க நெறைய காமடி பதிவு கிடைக்கும்!
  //

  கொசுவத்தி என்ன சுற்றுலாத்தலமா? அதைப் போயி சுத்தி பாக்குறதுக்கு!!

  ReplyDelete
 22. இதே மாரிதான், ஏதோ மாவட்ட நடைபயணம்னு, எல்லா பள்ளியூடத்திலையும் ஒரு க்ளாஸ கூப்டு அஞ்சாறு கிலோ மீட்டர் நடக்கச் சொன்னானுவ. அப்போ, தாமிரபரணி ஆத்துப்பாலம் தாண்டுறதுக்கு முன்னாலையே ஸைடுல இருந்துத் தப்பிச்சுப் போனது ஞாபகத்துக்கு வருது...

  ReplyDelete
 23. //ஆழியூரான். said...
  எக்ஸ்க்யூஸ்மி... எனக்கு ஒரு டவுட்.

  காந்தி மறுபடியும் செத்துட்டாரா..? //

  வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தப் பதிவினை கும்மிப் பக்கம் திசை திருப்ப முயலும் அழியூரானை பாசக்கார குடும்பம் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறோம் :))))

  ReplyDelete
 24. //தாமிரபரணி ஆத்துப்பாலம் தாண்டுறதுக்கு முன்னாலையே ஸைடுல இருந்துத் தப்பிச்சுப் போனது ஞாபகத்துக்கு வருது... //

  எந்த பக்கம்? சயின்ஸ் செண்டர் பக்கமா?

  ReplyDelete
 25. வாழ்த்துக்கள்,

  பள்ளி ஆண்டுவிழா நடந்தா இப்படித்தான் எங்களையும் கூப்பிட்டு இம்சை பண்னுவாங்க! எஸ்ஸகளாம்னு பார்த்தா எவன்னா ஒரு ஸ்பை போட்டுகுடுத்துடுவான்!!

  ReplyDelete
 26. //பேப்பர் பொறுக்கிரவனாட்டம் மெதுவா நடந்து வந்தேன்// நீங்க அதுக்கு தலையெல்லாம் கலைக்க அவசியமே இல்லை. அப்படியே போயிருந்தாலும் அப்படித்தான் நினச்சிருப்பாங்க ;-)

  ReplyDelete
 27. //நீங்க அதுக்கு தலையெல்லாம் கலைக்க அவசியமே இல்லை. அப்படியே போயிருந்தாலும் அப்படித்தான் நினச்சிருப்பாங்க ;-) //

  அபிஅப்பா,
  இதுக்குத்தான் ஃபோட்டோல்லாம் ப்ளாக்ல போடாதீங்கன்னு அடிச்சிகிட்டேன்.

  ReplyDelete
 28. //லொடுக்கு said...
  //அபி அப்பா said...
  மக்கா! நான் பதிவு போட்டு ரொம்ப நாளாச்சு! ஏகப்பட்ட ஆணி. அதுக்குள்ள சில பேர் "என்ன பதிவு எழுதுவதி நிறுத்திட்டீங்களாமே?"ன்னு //

  அப்படியா கேட்டாய்ங்க? ரொம்ப நல்லவய்ங்க போலிருக்கு... நாங்க ஆசைப்பட்டதை ஓப்பனா கேட்டுருக்கான்யா... :) பாத்து செய்ங்க... //

  லொடுக்கரே! அவ்வளவு சீக்கிரம் வடமாட்டேன், இன்னும் என் தமிழ் தாகம் தீரலைய்யா தீரலய்யா:-))

  ReplyDelete
 29. //லொடுக்கு said...
  அபிஅப்பா,

  இங்கே கும்மிகளை அனுமதிக்காதீர்கள்!!//

  இப்படியே சொல்லிட்டு நீர் காந்தி பேர்ல வந்து வம்பு செய்தா கண்டுபிடிக்க முடியாதா சாரே?

  ReplyDelete
 30. // குட்டிபிசாசு said...
  ஆயிரம் இருந்தாலும் அடுத்தவங்க பதிவுல கும்மி அடிக்கிற சுகமே தனி சுகம்!!

  என்ன கும்மி குறைவா இருக்கு?? எல்லாரும் அப்பிட்டா??
  வாழ்த்துக்கள்!! //

  ஆமா குட்டிபிசாசு சார், வாழ்த்துக்கள் எதுக்கு நான் தப்பிச்சு ஓடினதுக்கா:-)))

  ReplyDelete
 31. // குட்டிபிசாசு said...
  ஆயிரம் இருந்தாலும் அடுத்தவங்க பதிவுல கும்மி அடிக்கிற சுகமே தனி சுகம்!!

  என்ன கும்மி குறைவா இருக்கு?? எல்லாரும் அப்பிட்டா??
  வாழ்த்துக்கள்!! //

  ஆமா குட்டிபிசாசு சார், வாழ்த்துக்கள் எதுக்கு நான் தப்பிச்சு ஓடினதுக்கா:-)))

  ReplyDelete
 32. //ஆழியூரான். said...
  எக்ஸ்க்யூஸ்மி... எனக்கு ஒரு டவுட்.

  காந்தி மறுபடியும் செத்துட்டாரா..?//

  ஆமா ஆழியூரான்! நேத்திக்குதான்(நேத்து ராஜீவ் நினைவுதினம்)

  ReplyDelete
 33. // ஜி said...
  இதே மாரிதான், ஏதோ மாவட்ட நடைபயணம்னு, எல்லா பள்ளியூடத்திலையும் ஒரு க்ளாஸ கூப்டு அஞ்சாறு கிலோ மீட்டர் நடக்கச் சொன்னானுவ. அப்போ, தாமிரபரணி ஆத்துப்பாலம் தாண்டுறதுக்கு முன்னாலையே ஸைடுல இருந்துத் தப்பிச்சுப் போனது ஞாபகத்துக்கு வருது//

  நடக்க சொன்னதுக்கு நீங்க ஓடியிருக்கீங்க அதாவது எள்லுன்னா எண்ணெயா இருந்திருக்கீங்க!

  //வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தப் பதிவினை கும்மிப் பக்கம் திசை திருப்ப முயலும் அழியூரானை பாசக்கார குடும்பம் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறோம் :)))) //

  என்ன கொடுமை சரவணா:-)))

  ReplyDelete
 34. //லொடுக்கு said...
  //கொசுவத்தி சுத்தி பாருங்க நெறைய காமடி பதிவு கிடைக்கும்!
  //

  கொசுவத்தி என்ன சுற்றுலாத்தலமா? அதைப் போயி சுத்தி பாக்குறதுக்கு!! //

  ஆஹா! கெளம்பிட்டாய்ங்கய்யா:-))

  ReplyDelete
 35. பதிவா போட்டிருக்கீங்க எங்க ஒன்னுமேயில்லையே.
  சரி போனாப்போவுது ஒரு பின்னூட்டம் போட்டுடுறேன்.சீக்கிரம் பதிவ எழுதுங்கய்யா.[பழிக்குப் பழி]

  ReplyDelete
 36. அண்ணா..
  பாப்பா சொன்னா தான் நம்புவோம்.. அட்லீஸ்ட் டைகர் ஆவது சொல்லனும்
  நீங்க தான் சீப்..சாரி சாரி சீஃப் கஸ்ட்னு

  அப்ப தான் நம்புவோம்
  இல்லண்ணா ஃபோட்டோ போடுங்க..:-))

  ReplyDelete
 37. //லொடுக்கு said...
  //கொசுவத்தி சுத்தி பாருங்க நெறைய காமடி பதிவு கிடைக்கும்!
  கொசுவத்தி என்ன சுற்றுலாத்தலமா? அதைப் போயி சுத்தி பாக்குறதுக்கு!! //

  சூப்பர் அண்ணா..:-)))))))))

  ReplyDelete
 38. // குட்டிபிசாசு said...
  வாழ்த்துக்கள்,

  பள்ளி ஆண்டுவிழா நடந்தா இப்படித்தான் எங்களையும் கூப்பிட்டு இம்சை பண்னுவாங்க! எஸ்ஸகளாம்னு பார்த்தா எவன்னா ஒரு ஸ்பை போட்டுகுடுத்துடுவான்!! //

  போட்டு குடுத்தவன் தலைல துண்டு போட்டு சாத்த வேண்டியதுதானே:-))

  ******

  // ஜெஸிலா said...
  //பேப்பர் பொறுக்கிரவனாட்டம் மெதுவா நடந்து வந்தேன்// நீங்க அதுக்கு தலையெல்லாம் கலைக்க அவசியமே இல்லை. அப்படியே போயிருந்தாலும் அப்படித்தான் நினச்சிருப்பாங்க ;-) //

  போட்டோ போடாதய்யா போட்டோ போடாதய்யான்னு அடிச்சிகிட்டார் பாஸ்ட்பவுலர்.....சொ.செ.சூ:-)))

  ********

  // கண்மணி said...
  பதிவா போட்டிருக்கீங்க எங்க ஒன்னுமேயில்லையே.
  சரி போனாப்போவுது ஒரு பின்னூட்டம் போட்டுடுறேன்.சீக்கிரம் பதிவ எழுதுங்கய்யா.[பழிக்குப் பழி]//

  வாங்க ஸ்டார் டீச்சர்! வாங்க உங்க அடுத்த பதிவிலே பாத்துக்கறேன்:-))

  ******

  // அவந்திகா said...
  அண்ணா..
  பாப்பா சொன்னா தான் நம்புவோம்.. அட்லீஸ்ட் டைகர் ஆவது சொல்லனும்
  நீங்க தான் சீப்..சாரி சாரி சீஃப் கஸ்ட்னு

  அப்ப தான் நம்புவோம்
  இல்லண்ணா ஃபோட்டோ போடுங்க..:-)) //

  என்னப்ப அவந்திகா இப்படி சொல்லிட்டீங்க! உங்க டெல்லி தூவர் கிட்ட போட்டோ தர்ரேன் ஜூன் 15 அன்னிக்கு பாருங்க:-)))

  ReplyDelete
 39. அண்ணே,

  கலக்கல் பதிவு... :)))

  ReplyDelete
 40. //"நாங்கல்லாம் பெரிய இலக்கிய ஆர்வலர்களாக்கும்!!!" //

  சத்திய சோதனை.....

  ReplyDelete
 41. நமக்கு இந்த சட்டை மாத்துறது எல்லாம் கிடையாது, கழுட்டுறது தான். ரவுண்ட் நெக் போட்டுட்டு தானே போவோம். நம்மள இந்த +11, +12 பசங்க காவல் காப்பாதா, நாம் படிக்கும் போது அவனுங்களே நம்ம செட் பாத்தா ஒதுங்கி போவாங்க....

  ReplyDelete
 42. அபி அப்பா :)))))))))))))))))))

  ReplyDelete
 43. அபி அப்பா :)))))))))))))))))))

  ReplyDelete
 44. மின்னுது மின்னல் said...
  இங்கே கும்மி உண்டா...??
  :)


  M\\\

  அட இங்கே போயி என்ன கேள்வி கேட்டுக்கிட்டு ;))

  ReplyDelete
 45. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 46. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 47. அபி அப்பா, எப்பயும் ஸ்கோல்ல நீங்க யாரையாச்சும் மாட்டிவிட்டத மட்டும் பதிவாப்போடறீங்களே. உங்கள குரங்கு ராதா மாதிரி யாரும் மாட்டி விட்டத எப்ப பதிவா போடப்போறீங்க?

  ReplyDelete
 48. //நான் மெதுவா புஸ்தக மூட்டைல இருந்த வேற டிராயர் சட்டை எடுத்து போட்டுகிட்டு என் யூனிஃபார்ம்+புஸ்தக மூட்டை இரண்டையும் வேற பெரிய பைல போட்டுகிட்டு தலைய கலச்சிகிட்டு பேப்பர் பொறுக்கிரவனாட்டம் மெதுவா நடந்து வந்தேன். அதுக்குள்ள ஸ்கூல் யூனிபாஃர்ம்ல ஓடி வந்த ராதாவை தடியன்ஸ் 3 பேர் கோழிகுஞ்சு மாதிரி அமுக்க நான் எதுமே எனக்கு சம்மந்தமில்லாது மாதிரி சம்பவ இடத்தை கிராஸ் செஞ்சு போனேன்.//

  இந்த திட்டமிட்ட சதியை உங்க நண்பர்களுக்கும் சொல்லிக் கொடுத்திருந்தா அவங்களும் தப்பிச்சிருப்பாங்கள்ல...

  "என்ன ஒரு நய வஞ்சகம்? ஒங்களுக்கு தனியா தப்பிக்க"

  ReplyDelete
 49. // இராம் said...
  அண்ணே,

  கலக்கல் பதிவு... :))) //

  தேங்ஸ்பா! கைப்புள்ள போஸ்ட்டுக்கு வந்தாச்சு ஆப்புகள் சாரி வாழ்த்துக்கள்:-))

  ReplyDelete
 50. // நாகை சிவா said...
  //"நாங்கல்லாம் பெரிய இலக்கிய ஆர்வலர்களாக்கும்!!!" //

  சத்திய சோதனை..... //

  என்ன புலிசார் நக்கலா? :-))

  //நமக்கு இந்த சட்டை மாத்துறது எல்லாம் கிடையாது, கழுட்டுறது தான். ரவுண்ட் நெக் போட்டுட்டு தானே போவோம். நம்மள இந்த +11, +12 பசங்க காவல் காப்பாதா, நாம் படிக்கும் போது அவனுங்களே நம்ம செட் பாத்தா ஒதுங்கி போவாங்க....//

  நம்ம ஸ்கூல்ல ஊனிஃபார்ம் போடலைன்னா முதுகு விரிஞ்சுடும்!

  ReplyDelete
 51. //கோபிநாத் said...
  அபி அப்பா :)))))))))))))))))))//

  நல்லா சிரிக்கிற கோபிதம்ம்பி!

  ReplyDelete
 52. கீதாம்மா பின்னூட்டம் நான் ஏதோ கோகு மாக்கா செஞ்சதினால் காக்கா தூக்கிட்டு போச்சு, அதான் வெட்டி ஒட்டி தந்திருக்கேன், தேங்ஸ் கீதாம்மா வருகைக்கு


  //கீதா சாம்பசிவம் has left a new comment on your post "நாங்கல்லாம் பெரிய இலக்கிய ஆர்வலர்களாக்கும்!!!":

  @பரவாயில்லை, கலப்பைக்குக்க்கொஞ்சம் பயம் வந்திருச்சு. தமிழ் தடவலை ஒரு, இரு இடம் தவிர.ஹிஹிஹி, அபி அப்பா, அ.வ.சி. என் ப்ளாக் கமென்டுக்குப் போட்ட பதிலும் ஒட்டிட்டு இருந்திருக்கு, அதுவும் சேர்ந்து வந்திருக்கு. :))))))))))) :P

  ReplyDelete
 53. //Chinna Ammini said...
  அபி அப்பா, எப்பயும் ஸ்கோல்ல நீங்க யாரையாச்சும் மாட்டிவிட்டத மட்டும் பதிவாப்போடறீங்களே. உங்கள குரங்கு ராதா மாதிரி யாரும் மாட்டி விட்டத எப்ப பதிவா போடப்போறீங்க? //

  வாங்க சின்ன அம்மணி! சீக்கிரம் அதையும் சொல்றேன், ஆனா கலாய்சிடுவீங்களேன்னு பயமா இருக்கு அதான்:-))))

  ReplyDelete
 54. //இந்த திட்டமிட்ட சதியை உங்க நண்பர்களுக்கும் சொல்லிக் கொடுத்திருந்தா அவங்களும் தப்பிச்சிருப்பாங்கள்ல...

  "என்ன ஒரு நய வஞ்சகம்? ஒங்களுக்கு தனியா தப்பிக்க" //

  வாங்க செந்தில்! என்ன பண்றது, போர்ன்னு வந்துட்டா இதெல்லாம் ஜகஜமப்பா:-)))

  ReplyDelete
 55. சாரி.. ட்ராபிக் ஜேம் அதிகம். வந்து சேர கொஞ்சம் லேட்டாகிடுச்சு. :-)

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))