பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

June 17, 2008

கலைஞருக்கு வயசாகி போச்சுங்கோவ்வ்வ்வ்வ்!!!

சுட்டெரிக்கும் பேச்சு, ஒரு விரல் காட்டி எதிரியை அடக்கும் திறன், தன் கனைப்பிலே எதிரியை கைகட்டி நிற்க வைக்கும் ஆற்றல், எத்தனைமுறை நீ புறமுதுகாட்டி ஓடியிருப்பாய் என துரியோதனர்களை புள்ளிவிபரத்தால் பந்தாடும் உன் நக்கல், பதவியை தன் தோள் துண்டாகவும் கட்சியை தன் வேட்டியாகவும் பார்க்கும் உன் பார்வை இதல்லாம் கலைஞரே இத்தனை நாள் எங்கே போனது!

போனது போகட்டும்! மானம் ஒண்றே பெரிது என இப்போதாவது தன் கட்சிகாரர்கள் மனசு கோணாமல் நடந்தாயே இது போதும். உனக்கு வயசாகி போச்சுங்கோவ்வ்வ்வ்ன்னு ஊளையிட்ட ஞானிகளுக்கு இது ஒரு சவுக்கடி!

நீ சீறினால் உன் கோவம் எந்தமட்டும் பாயும் என அவர்கள் புரிந்து கொள்ளட்டும். காடுவெட்டியோ, மரம் வெட்டியோ, ஆகமட்டும் தமிழகத்தின் பசுமை வெட்டிகளை வெட்டி விட்டாயே அது போதும்.

உனக்கு, உன் கட்சிக்கு சரித்திரம் இருக்கிறது. நீ மிசாவிலே வளர்த்தாய். காங்கிரஸ் கூட சுதந்திரம் வாங்கியதாய் சொல்லி கொள்கிறது. கம்யூனிஸ்ட்டுகள் உன் கூட மிசாவில் செத்தார்கள். பாஜக வுக்கு கூட வரலாறு இருக்கின்றது. அத்தனை ஏன் அதிமுகவுக்கு கூட தங்கள் தலைவரின் இதயக்கனி படத்தின் முதல் காட்சியை நடத்த விடாமல் விஷமிகள் கார் டயரை கொளுத்தி கியூவிலே போட்டு நான்கு மணி நேரம் படத்தை தாமதப்படுத்திய வரலாறு(????) இருக்கின்றது.

ஆனால் வரலாறு எந்த சூப்பர் மார்கெட்டில் கிடைக்கும் என விசயகாந்திடம் கேட்டு தெரிந்து கொள்ளும் அளவுக்கான அறிவு படைத்த மேதைகளிடம் இத்தனை நாள் நீ மௌனம் காத்தது ஞானி சொன்னது போல் உனக்கு வயதானதையே காட்டுவதாக கட்சிக்காரன் புலம்புவது என காதில் கேட்கிறது.... என்னத்த செய்ய!!!

இனி நாங்கள் என்ன சொல்வது உனக்கு, உனக்கு தெரியாததா, மதிமுக என்ன ஒரு கட்சியை சல்லி சல்லியாக வெட்டினாயே உரு தெரியாமல் ஆக்கினாயே, அந்த கட்சியை பொருட்காட்சியில் போய் பார்க்க வைத்தாயே, அந்த அஸ்திரத்தை எடு! ஜெயித்துவிட்டு வா! உன் நூற்றாண்டு விழா கொண்டாட்ட வேலை எங்களுக்கு அதிகமாக இருக்கின்றது! புதுப்பொலிவோடு கலந்து கொள் அதிலே!!!

46 comments:

 1. சபாஷ் அபி அப்பா சரியா சொன்னிர்கள், வயசானாலும் சிங்கம் சிங்கம்தான்.இது வாழையடி வழி கட்சி. எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது.

  ReplyDelete
 2. முதல் கமென்ட் போடலாம்னு வந்தா ஏற்கனவே போட்டுட்டாங்களே?
  :(

  ReplyDelete
 3. innaikkaavathu vachchare aappu. idhukkaaga eththana naal naama kaaththirukka vendiyatha pochchu?
  epdiyo andhaala ellarum sernthu oram kattinaathaan sari varum. illaina naalaike anbusagothari veetla poi nippaaru

  ReplyDelete
 4. அபி அப்பா ஏன் இந்த கொலைவெறி :)

  ஏதாவது மொக்கை போட்டிருப்பீங்கன்னு உள்ளாற வந்த இப்படி சீரியஸ் பதிவாகிப்போச்சே...

  ReplyDelete
 5. சூப்பர் அபி அப்பா! இதை... இதைத் தான் உங்களிடம் எதிர்பார்க்கிறோம்.....

  ReplyDelete
 6. வெட்டி சாய்ப்பதற்கு திமுககாரனின் தலை ஒன்றும் மரமல்ல! எப்படியோ இதுவரை பல்லிடுக்கில் மாட்டி நிரடிய பாக்குத்தூளை கலைஞர் எடுத்துவிட்டார்!

  கழகத்தின் பவளவிழா கொண்டாட்டங்களோடு கலைஞரின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களும் சேர்ந்து வரும். இரண்டையும் கொண்டாட தயாராவோம்!!!

  ReplyDelete
 7. 3rd party
  ///நீ சீறினால் உன் கோவம் எந்தமட்டும் பாயும் என அவர்கள் புரிந்து கொள்ளட்டும். காடுவெட்டியோ, மரம் வெட்டியோ, ஆகமட்டும் தமிழகத்தின் பசுமை வெட்டிகளை வெட்டி விட்டாயே அது போதும்.///

  சபாஷ் அபி அப்பா சரியா சொன்னிர்கள்!!!!

  ReplyDelete
 8. எல்லாம் சரிங்க...ஆறு மாசமாச்சு இவ்வளவு கீழ்தரமாகவும் வன்முறையை துண்டும் விதமாகவும் பேசிய காடு வெட்டி குருவைவின் மேல் எந்த சட்டபூர்வமான நடவடிக்கை எடுத்த மாதிரி தெரியலையே.

  ஆட்சியில் இருக்கும் இவர்களே குருவை கண்டு இப்படி பயந்தால் பொது மக்களின் நிலை?

  எந்த ஒரு அரசியல் குறுக்கீட்றிக்கும் இடம் தராமல் காவல் துறைக்கு முழு சுதந்திரம் கொடுத்தால் மட்டுமே நம்மாநிலம் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்.

  ReplyDelete
 9. //அதிமுகவுக்கு கூட தங்கள் தலைவரின் இதயக்கனி படத்தின் முதல் காட்சியை நடத்த விடாமல் விஷமிகள் கார் டயரை கொளுத்தி கியூவிலே போட்டு நான்கு மணி நேரம் படத்தை தாமதப்படுத்திய வரலாறு(????) இருக்கின்றது.//
  super.....

  ReplyDelete
 10. மதவாதம் தமிழகத்தில் வளர கூடாது
  ஆனா கடந்த முறை அவர்களுடன் ஆட்சியில் பங்கு பெற்றபோது இந்த அறிவு எங்கே போனது??

  இளிச்ச வயன் ஓட்டு போடும் வரை எல்லாம் செல்லாம்

  சீக்கரம் ரசாத்தி அம்மாவுக்கு பதவி கொடுங்கப்பா!

  "கலைஞருக்கு வயசாகி போச்சுங்கோவ்வ்வ்வ்வ்!!!"

  புதுவை சிவா.

  ReplyDelete
 11. அந்த வீராதி வீரர் அப்புறம் ஏன் மத்தியில் அன்பு மணியிடம் அன்பு உண்டு என்று சால்ஜாப்பு சொல்ல வேண்டும் ?
  பாவம் அவருக்காக நீங்கள் மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆள்கிறது என்று வக்காலத்து வாங்க வேண்டாம் .
  அன்புடன்
  அருப்புக்கோட்டை பாஸ்கர்

  ReplyDelete
 12. //இனி நாங்கள் என்ன சொல்வது உனக்கு, உனக்கு தெரியாததா, மதிமுக என்ன ஒரு கட்சியை சல்லி சல்லியாக வெட்டினாயே உரு தெரியாமல் ஆக்கினாயே, அந்த கட்சியை பொருட்காட்சியில் போய் பார்க்க வைத்தாயே, அந்த அஸ்திரத்தை எடு! ஜெயித்துவிட்டு வா! உன் நூற்றாண்டு விழா கொண்டாட்ட வேலை எங்களுக்கு அதிகமாக இருக்கின்றது! புதுப்பொலிவோடு கலந்து கொள் அதிலே!!! //

  அட்டகாசம் அபிஅப்பா.

  ReplyDelete
 13. சொல்லவே இல்ல உங்களுக்கும் இப்படி ஒரு அரசியல் வரலாறு?????? இருக்குன்றத...

  ReplyDelete
 14. ஆமாம் "தீ'லீபன்! சிங்கம் சிங்கம் தானே! தூங்குவது போல நடிப்பதால் எலி கிச்சு கிச்சு மூட்ட கூடாதில்லையா!! வருகைக்கு நன்றி!!

  ReplyDelete
 15. வாங்க நி.ந. வருகைக்கு நன்றி!!!

  ReplyDelete
 16. வாங்fக ராப்! ஆப்புக்கும் ஒரு நேரம் இருக்குல்ல! அவருக்கு தெரிஞ்சது நமக்கு தெரியுமா;-)))

  ReplyDelete
 17. ரவி! வாங்க மொக்கை தானே வேண்டும் நாளை போட்டா போச்சு! குட்டி பையன்\பொண்ணு என்ன சொல்றாங்க, ஜாக்கிறதையா பார்த்துகோங்கப்பா!

  ReplyDelete
 18. நன்றி தமிழ்பிரியன்! உங்க எதிபார்ப்பு இனி அடிக்கடி நிறைவேற்றப்படும்!!! நன்றி!!!

  ReplyDelete
 19. >>சபாஷ் அபி அப்பா சரியா சொன்னிர்கள், வயசானாலும் சிங்கம் சிங்கம்தான்.இது வாழையடி வழி கட்சி. எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது.<<

  'சினேகமுள்ள சிங்கம்' நாவலில் ஒரு வரி வரும். (அர்த்தம் அதே, வார்த்தைகள் கொஞ்சம் மாறுபட்டிருக்கலாம்)

  "கிளைத்து படர்ந்த வயசான ஆல மரத்த அதோட வேர்களே சாய்ச்சிடுமாம்"

  தீராதிருக்கும் நாமக்கட்டிகளும் உவந்து முன்வந்து காட்டப்படும் புதிது புதிதான நெற்றிகளும் இருக்கும் வரை வியாபாரிக்கு என்ன கவலை ?

  அன்புடன்
  முத்து

  ReplyDelete
 20. \\ லக்கிலுக் said...
  வெட்டி சாய்ப்பதற்கு திமுககாரனின் தலை ஒன்றும் மரமல்ல! எப்படியோ இதுவரை பல்லிடுக்கில் மாட்டி நிரடிய பாக்குத்தூளை கலைஞர் எடுத்துவிட்டார்!

  கழகத்தின் பவளவிழா கொண்டாட்டங்களோடு கலைஞரின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களும் சேர்ந்து வரும். இரண்டையும் கொண்டாட தயாராவோம்!!!\\

  லக்கி லக்கி தான்!! நானும் உங்களை போலத்தான்! தலைவரின் சில உதாரணங்கள், ஒப்புவமைகள் அது போல அண்ணாவின் ஒப்புவமைகள் காலத்தால் அழியாதவை.பல்லிடுக்கில் சிக்கிய பாக்குத்தூள் உவமை குமுதம் ஆசிரியர் எஸ் ஏ பி மறைவின் போது குமுத்தத்தில் தலைவர் எழுதிய கட்டுரையில் வந்த உவமைதானே! நான் அப்போதே மனதில் குறித்து வைத்தேன்! நான் இன்னும் பய்ன் படுத்தவில்லை அழகான நேரத்தில் நீங்கள் பயன் படுத்திவிட்டீர்கள்!!! நன்றி நன்றி மிக்க நன்றி!!!!

  ReplyDelete
 21. நன்றி தமிழகத்தின் தலைவரே!!!(ஆமா விசயகாந்து கூடத்தான் அப்படி சொல்லிகிட்டு இருக்கார் நீங்க அப்படியில்லையே:-))

  ReplyDelete
 22. \\ Bleachingpowder said...
  எல்லாம் சரிங்க...ஆறு மாசமாச்சு இவ்வளவு கீழ்தரமாகவும் வன்முறையை துண்டும் விதமாகவும் பேசிய காடு வெட்டி குருவைவின் மேல் எந்த சட்டபூர்வமான நடவடிக்கை எடுத்த மாதிரி தெரியலையே.

  ஆட்சியில் இருக்கும் இவர்களே குருவை கண்டு இப்படி பயந்தால் பொது மக்களின் நிலை?

  எந்த ஒரு அரசியல் குறுக்கீட்றிக்கும் இடம் தராமல் காவல் துறைக்கு முழு சுதந்திரம் கொடுத்தால் மட்டுமே நம்மாநிலம் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்\\

  வெயிட் அண்ட் சீ தலைவா!!!!

  ReplyDelete
 23. \\ கோவை சிபி said...
  //அதிமுகவுக்கு கூட தங்கள் தலைவரின் இதயக்கனி படத்தின் முதல் காட்சியை நடத்த விடாமல் விஷமிகள் கார் டயரை கொளுத்தி கியூவிலே போட்டு நான்கு மணி நேரம் படத்தை தாமதப்படுத்திய வரலாறு(????) இருக்கின்றது.//
  super.....
  \\

  நன்றி சிபி!!!!

  ReplyDelete
 24. \\ siva said...
  மதவாதம் தமிழகத்தில் வளர கூடாது
  ஆனா கடந்த முறை அவர்களுடன் ஆட்சியில் பங்கு பெற்றபோது இந்த அறிவு எங்கே போனது??

  இளிச்ச வயன் ஓட்டு போடும் வரை எல்லாம் செல்லாம்

  சீக்கரம் ரசாத்தி அம்மாவுக்கு பதவி கொடுங்கப்பா!

  "கலைஞருக்கு வயசாகி போச்சுங்கோவ்வ்வ்வ்வ்!!!"

  புதுவை சிவா.\\

  வாங்க சிவா கருத்துக்கு நன்றி!!

  திமுகவில் தகுதி இல்லாதவர்களுக்கு ஒரு பதவி தந்து எப்போவாவது பார்த்ததுண்டா! அதாவது அதிமுகவில் எஸ்.எஸ். சந்திரனுக்கும் ராமராஜனுக்கும் எம்பி பதவி கொடுத்தது போல், அவ்வளவு ஏன் காடுவெட்டி குருவுக்கு எம்பி பதவி கேட்டாரே மருத்துவர் அதுபோல..... ராசாத்தியம்மாளுக்கு குடும்ப தலைவி பதவி போதும் என நினைத்து விட்டார் தலைவர். அவருக்கு தெரியும் யார் யாருக்கு எந்த பதவி தரவேண்டும் என!! தங்கள் அறிவுரை எற்புடையாயினின் அதுவும் சிரமெற்கொள்ளப்படும்!!! நன்றி!!

  அது போல் தாங்கள் சொன்ன ஒரு விஷயம் "இளிச்ச வயன் ஓட்டு போடும் வரை எல்லாம் செல்லாம்"

  நல்லா சொன்னீங்க போங்க எங்க வேட்பாளர்கள் எத்தனை பேர் உங்களால தோத்தாங்கன்னு லிஸ்ட் தரட்டுமா, அதுவும் விரிவா?????????????????????

  ReplyDelete
 25. \\ ARUVAI BASKAR said...
  அந்த வீராதி வீரர் அப்புறம் ஏன் மத்தியில் அன்பு மணியிடம் அன்பு உண்டு என்று சால்ஜாப்பு சொல்ல வேண்டும் ?
  பாவம் அவருக்காக நீங்கள் மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆள்கிறது என்று வக்காலத்து வாங்க வேண்டாம் .
  அன்புடன்
  அருப்புக்கோட்டை பாஸ்கர்\\

  அருமை பாஸ்கர்!!! அதான் கலைஞர்! அவருக்கு தெரியும் அங்கே உள்ளே என்ன புகைச்சல் என்று!! காத்திருந்து பார்க்கவும்!! காய் எது பழம் எது என்று:-)))

  ReplyDelete
 26. \\ ஜாலிஜம்பர் said...
  //இனி நாங்கள் என்ன சொல்வது உனக்கு, உனக்கு தெரியாததா, மதிமுக என்ன ஒரு கட்சியை சல்லி சல்லியாக வெட்டினாயே உரு தெரியாமல் ஆக்கினாயே, அந்த கட்சியை பொருட்காட்சியில் போய் பார்க்க வைத்தாயே, அந்த அஸ்திரத்தை எடு! ஜெயித்துவிட்டு வா! உன் நூற்றாண்டு விழா கொண்டாட்ட வேலை எங்களுக்கு அதிகமாக இருக்கின்றது! புதுப்பொலிவோடு கலந்து கொள் அதிலே!!! //

  அட்டகாசம் அபிஅப்பா.\\

  வாங்க ஜாலிஜம்பர்!!!முதல் வருகைக்கு மிக்க நன்றி!!! உங்க கட்டுறையும் உடன்பிறப்பில் படித்தேன். இன்னும் கொஞ்சம் கடலூர் மாநில மாநாட்டை காட்டியிருக்கலாம்:-))

  ReplyDelete
 27. நன்றி தமிழன்!!! உங்க வருகைக்கும் கருத்துக்கும்!!!!

  ReplyDelete
 28. இது ஒரு ஆறு மாசத்துக்கு முன்னால எடுத்திருக்க வேண்டிய முடிவு. இப்பாவது எடுத்து மானம் காத்தாரே. ஆனா அடுத்த முறை திரும்பவும் இவங்களோட கூட்டு வைக்காம இருக்கணும்

  ReplyDelete
 29. //பதவியை தன் தோள் துண்டாகவும் கட்சியை தன் வேட்டியாகவும் பார்க்கும் //

  நல்ல வேளை ரெண்டோட முடிஞ்சு போச்சு!!!

  ReplyDelete
 30. //மானம் ஒண்றே பெரிது//

  பெரிய ஒன்று போல இருக்கு

  ReplyDelete
 31. //நீ சீறினால் உன் கோவம் எந்தமட்டும் பாயும் //

  அப்ப படம் எடுத்தால் எத்தனை நாள் ஓடும்.

  பாம்பு சீறும்

  சிறுத்தை உறுமும்

  ReplyDelete
 32. //மதிமுக என்ன ஒரு கட்சியை சல்லி சல்லியாக வெட்டினாயே உரு தெரியாமல் ஆக்கினாயே, அந்த கட்சியை பொருட்காட்சியில் போய் பார்க்க வைத்தாயே, //

  என்ன அபி அப்பா மதிமுகதான் அவர் கூட இருப்பதாக சொல்கிறார் (எல்.ஜி கட்சி) நீங்க என்னடான்னா இப்படி சொல்றீங்க!!! ரொம்ப குழப்பமா இருக்கே!

  ReplyDelete
 33. //உன் நூற்றாண்டு விழா கொண்டாட்ட வேலை எங்களுக்கு அதிகமாக இருக்கின்றது! //

  ஓஓஓஓ அதான் நேற்று ஆபிஸ் சங்கத்தில் 2 to 4 இருந்தீங்களா?

  ReplyDelete
 34. செந்தழல் ரவி said...
  ஏதாவது மொக்கை போட்டிருப்பீங்கன்னு உள்ளாற வந்த இப்படி சீரியஸ் பதிவாகிப்போச்சே...//

  வர வர நீங்கதான் மாறி போய்டீங்க ரவி இதையே நீங்க ஜாலி பதிவாக கூட எடுத்துக்கிட்டு கும்மி அடிக்கலாம்!

  ReplyDelete
 35. தமிழ் பிரியன் said...
  சூப்பர் அபி அப்பா! இதை... இதைத் தான் உங்களிடம் எதிர்பார்க்கிறோம்.....////

  ஆமாம் தீப்பொறி ஆறுமுகம், வெற்றி கொண்டான் வரிசையில் இனி நீங்களும் இடம் பெற வாழ்த்துக்கள்

  ReplyDelete
 36. திருவொற்றியூர் கவுன்சிலர் தேர்தல் ல அபி அப்பா வ election officer ஆ போட்டா கட்சி பத்தி தெளிவா ஆயிடுவாரு . ஏன்யா உயிரை வாங்கறீங்க

  ReplyDelete
 37. ///கார் டயரை கொளுத்தி கியூவிலே போட்டு நான்கு மணி நேரம் படத்தை தாமதப்படுத்திய வரலாறு(????) இருக்கின்றது.

  ஆனால் வரலாறு எந்த சூப்பர் மார்கெட்டில் கிடைக்கும் என விசயகாந்திடம் கேட்டு தெரிந்து கொள்ளும் அளவுக்கான அறிவு //////


  பொதுச்சேவைக்காக எங்கள் தலைவர் கட்டிய கோயம்பேடு ஆண்டாள்-அழகர் சமுதாயக் கூடத்தை சிறுமதி படைத்தக் கூட்டம் கேவலம் ஒரு பாலம் கட்ட இடையூறு என்று இடித்தார்களே அது இன்னும் வரலாற்றின் பக்கங்களில் அச்சு மை காயாமல்தான் இருக்கிறது.

  பொறம்போக்கு மக்களின் பாதுகாப்பிற்காக அவர்கள் வாழும் பொறம்போக்கு நிலங்களில் எங்கள் தலைவர் அமைத்துத்தந்த வேலிகளை காக்கிச்சட்டை கூலிப்படையினரைக் கொண்டு பிடுங்கி எறிந்தார்களே எத்தர்கள், அந்த சரித்திரம் எளிதில் மறந்து போகுமா?

  வரலாற்றை முழுமையாக தெரிந்து கொண்டு அரசியல் பதிவெழுதுங்கள் அபி அப்பா.

  ReplyDelete
 38. //குசும்பன் said...

  //மானம் ஒண்றே பெரிது//

  பெரிய ஒன்று போல இருக்கு
  //

  குசும்பன்,
  சூப்பர்...

  ReplyDelete
 39. //நீ சீறினால் உன் கோவம் எந்தமட்டும் பாயும் என அவர்கள் புரிந்து கொள்ளட்டும். காடுவெட்டியோ, மரம் வெட்டியோ, ஆகமட்டும் தமிழகத்தின் பசுமை வெட்டிகளை வெட்டி விட்டாயே அது போதும்.//

  அட போங்க அபி அப்பா.. கலைஞருக்கு உண்மையிலேயே வயதாகித் தான் விட்டது. இல்லை என்றால் வெட்ட வெட்ட இன்னும் அதிக கிளைகளுடன் அந்த மரம் வளரும் என்று தெரிந்தும் பல சமயங்களில் வெட்டப் பட்ட அந்த மரத்தை தானும் தண்ணீர் ஊற்றி வளர்த்தியது தெரிந்தும் அதை ஆசிட் ஊற்றி அழிக்காமல் மீண்டும் இன்னும் அதிக கிளைகளுடன் வளரும் வகையில் வளர்க்க ஆளிருப்பது தெரிந்தும் அதை வெட்டுவதுடன் விடுவாரா? ஆக.. கலைஞருக்கு உண்மையில் வயதாகித் தான் விட்டது அபிஅப்பா..

  ...இதற்கெல்லாம் அண்ணன் அஞ்சா நெஞ்சன் தான் சரி.. திமுக இதே பலத்துடன் இருக்க வேண்டுமென்றால் இளகிய மனம் படைத்த ஸ்டாலின் சரியான தேர்வு அல்ல.. அடித்தாடும் அஞ்சா நெஞ்சன் தான் சரியானவர். :) மாறன் குழுமம் அவரிடம் சிக்கித் தவிப்பதை பாருங்கள். பாவமாய் இருக்கிறது.

  ReplyDelete
 40. புதுசு புதுசாக வலைபூக்கள் தொடங்கி உள்ளனர், அபி அப்பா நீங்களும் எங்கள் நம்ம பக்கம் என்று நினைக்கும் பொது ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது. என் குடும்பத்தை எனக்கு கோபித்து கொள்ள உரிமையுள்ளது. ஆனால் கண்டவர்களும் திட்ட விடமாட்டோம்.(எனக்கு கலைஞர் மேல் ஒரே கோபம் ஈழ தமிழர் பிரச்னையில் தமிழர் பக்கம் உள்ள நியாயத்தை வேல்யிட மறுப்பது தான், இந்த ஒரு விடயம் தவிர என் தலைவன் பத்திரை மாற்று தங்கம்.

  ReplyDelete
 41. \\ தீலிபன் said...
  புதுசு புதுசாக வலைபூக்கள் தொடங்கி உள்ளனர், அபி அப்பா நீங்களும் எங்கள் நம்ம பக்கம் என்று நினைக்கும் பொது ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது. என் குடும்பத்தை எனக்கு கோபித்து கொள்ள உரிமையுள்ளது. ஆனால் கண்டவர்களும் திட்ட விடமாட்டோம்.(எனக்கு கலைஞர் மேல் ஒரே கோபம் ஈழ தமிழர் பிரச்னையில் தமிழர் பக்கம் உள்ள நியாயத்தை வேல்யிட மறுப்பது தான், இந்த ஒரு விடயம் தவிர என் தலைவன் பத்திரை மாற்று தங்கம்.\\

  நன்றி திலீபன் நன்றி!! மற்றவர்களுக்கு பதில் சொல்லும் முன்பாக உங்களுக்கு சொல்லிவிடுகிறேன்!! காரணம் எனக்கு கானாபிரபாவை தவிர வேற எந்த இலங்கை தமிழரும் இதுவரை பதில் பின்னூட்டம் போட்டதில்லை.

  அது போகட்டும்!! ஏனோ அப்போதிலிருந்தே சீறிசபாரத்னம் கொலைக்கு பின்னே (முதம் முதலாக விமானத்தை தமிழர் பூமியில் வடிவமைத்து விமானப்படையை உண்டு பண்ணியவர்) திமுகவுக்கும் அதன் பின்னே "சீறிசபாரத்னம் புலி பிரபாகரனால் கோரக்கொலை" என திமுகவினால் அச்சடிக்க போஸ்ட்டர்களும், பின்னே அவரின் நினைவாக பாலைவன ரோஜாக்கள் படத்திலே சத்தியராஜ் நடித்த கதாபாத்திரத்துக்கு சீறிசபாரத்னம் என கலைஞர் பெயர் வைத்த போதும், பின்னே பிரபாகரன் அவர்கள் தலைவர் பிறந்தநாளுக்கு வந்த அன்பளிப்பு பணத்தை ஏற்க மறுத்து ஆனால் எம்ஜியார் கொடுத்த பணத்தை ஏற்றுகொண்டதும், அதே எம்ஜியார் ஒரு தமிழ் போராளி பிரபாகரனின் அத்தனை தகவல் தொடர்பு சாதனத்தையும் மோகந்தாஸ் டிஜிபி மூலமாக கைப்பற்றியதும் அன்றே பனகல் பார்க்கில் பிரபாகரன் உண்ணாவிரதம் இருந்தததும்! ஆனாலும் தம்பி பிரபாகரனுக்கு கலைஞர் மேல் உள்ள பாசத்தை விட எம்ஜியார் மேல் பாசம் அதிகமாக இருந்ததும் இன்னும் திமுகவினருக்கு மறக்கவில்லையே!! அதற்க்கும் மேலாக ஒரு நல்ல வெற்றி வாய்ப்பை நாங்கள் ராஜீவின் கொலையால் தவற விட்டதும் அது கூட போகட்டும், அந்த கொலைப்பழி எங்கள் மீது விழுந்தத்தும் லேசில் மறக்க முடியுமா??

  ஆனால் காலம் என்பத்து சிறந்த மருந்து!!!! தலைவர் உயிரோடு இருக்கும் போதே தமிழீழம் வாங்கி கொடுத்துவிட்டுத்தான் போவார்!!! இன்றைக்கு எழுதி வைத்து கொள்ளவும் நான் சொல்வது சத்தியம்!!! உங்கள் பார்லிமெண்டில் தலைவர் படம் கண்டிப்பாக இடம் பெறும்! வாசலில் சிலை கண்டிப்பாக இடம் பெறும்!!! இதுவும் சத்தியம்!!

  வருகைக்கு நன்றி அடிக்கடி வாருங்கள்!!!!!

  ReplyDelete
 42. அபி அப்பா என்னை தவறாக புரிந்து கொள்ளவேண்டாம், நான் ஈழ தமிழர் தமிழக தமிழர் என்று பிரித்து பார்ப்பது இல்லை. என்னை பொறுத்தவரை அனைவரும் தமிழர் தான். உங்கள் மூலம் சில தகவல் தெரிந்து கொண்டேன். நன்றி ஒரு உண்மை நான் தமிழகத்தில் பிறந்த தமிழன் தான் ஆனால் நம் உடன்பிறப்புகள் ஈழத்தில் படும் வேதனை காண சகிக்க முடியவில்லை. இன்று தலைவர் தேவை தமிழனக்கு அங்கு தனிநாடு என்று ஒருகுரல் ஒலித்தால் போதும் ஈழம் நிச்சயம் இதை உங்களால் மறுக்க முடியுமா? இன்னும் ஒன்று நம் தமிழ் சகோதர்களை கொன்று குவித்துவிட்டு வந்த நம் ராணுவத்தை வரவேற்க செல்லாதவர் நம் கலைஞர் இதை ஏன் குறிப்பிடவில்லை. உங்கள் வாக்கு பலித்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.

  ReplyDelete
 43. அபி அப்பா, நானும் கலைஞரின் ரசிகன் தான் ஆனால் இந்த ஆட்சியில் கலைஞரின் செயல்பாடுகள் எனக்கு பிடிக்கவில்லை. இலவச டிவி என்பது, பசியால் அழும் குழந்தைக்கு இனிப்பு மிட்டாய் கொடுத்து சமாளிப்பது போன்றது. மிட்டாய் பசிக்கு உணவாகாது அல்லவா, அழும் குழந்தை மிட்டாயை பார்த்து சற்றே அழுகையை நிறுத்தி சிரிக்கலாம், ஆனால் அது நிரந்தரம் அல்ல. பசி தீரும் வரை அது அழத்தானே செய்யும். இன்னும் எத்தனை காலம் தான் இப்படி இலவசங்களின் பெயரால் மக்களை ஏமாற்ற முடியும்? 1996 ‍ 2001 ஆட்சியில் செய்த அளவுக்கு கூட இந்த ஆட்சியில் நலத்திட்டங்கள் இல்லையே?
  பா.ம.க வின் நிர்பந்தத்தால் தானே துணை நகரத்திட்டம் மற்றும் விமான நிலைய விரிவாக்கம் போன்றவற்றை அறிவித்துவிட்டு நிறுத்தினார்? அதை இப்போது தீவிரமாக செயல்படுத்தலாமே? சென்னையில் பன்னாட்டு விமான நிலையம் அமைந்த பல வருடங்களுக்கு பிறகு பன்னாட்டு விமான நிலையங்கள் அமையப் பெற்ற பெங்களூர், ஹைதராபாத் போன்ற நகரங்களில் இன்று புதிய நவீன விமான நிலையங்கள் அமைந்துவிட்டன. ஆனால் சென்னை இன்னும் தூங்கி வழிகின்றது.
  இலவச தொலைகாட்சியிலும், அரசு கேபிள் கழகத்திலும் காட்டும் ஆர்வம் ஒகேனக்கல் குடிநீர் திட்டத்திலும், முல்லைப் பெரியார் அணை, பாலாறு, காவிரி பிரச்சனைகளிலும் இல்லை ?
  த‌மிழ்நாட்டில் த‌மிழில் தான் திரைப்ப‌ட‌ங்க‌ளுக்கு பெய‌ர் வைக்க‌ வேண்டும் என்று திரை குடும்ப‌த்தின் மூத்த‌ பிள்ளையாகிய‌ நீங்க‌ள் சொன்னால் உங்க‌ள் சினிமாக்கார‌ர்க‌ள் கேட்க்க‌ மாட்டார்களா ? அத‌ற்காக‌ த‌மிழில் பெய‌ர் வைத்தால் வ‌ரிவில‌க்கு என்று அர‌சாங்க‌த்திற்கு வ‌ரும் வ‌ருமான‌த்தை விட்டுக் கொடுக்க‌த்தான் வேண்டுமா? க‌ட‌லூர் மாநாட்டில் பெண்க‌ளின் ந‌ல‌னுக்காக‌ எரிவாயு விலையில் 30 ரூபாயை அர‌சே ஏற்கும், அத‌னால் அர‌சுக்கு 100 கோடி ந‌ட்ட‌ம் என்று சொன்னீர்க‌ளே? கேளிக்கை வ‌ரி ர‌த்தால் அர‌சுக்கு ஏற்ப‌டும் வ‌ரி இழ‌ப்பு எவ்வ‌ள‌வு ? அதை ஒரு முறை கூட‌ நீங்க‌ள் சொன்ன‌தில்லையே ஏன்? நீங்க‌ள் கேளிக்கை வ‌ரியை ர‌த்து செய்த‌தால் திரைய‌ர‌ங்குக‌ளில் க‌ட்ட‌ண‌ம் குறைந்துள்ள‌தா? அப்ப‌டியே குறைந்தாலும் இதுவும் ப‌சியால் அழும் பிள்ளைக்கு அளிக்க‌ப்ப‌டும் இன்னொரு மிட்டாய் தானே ஒழிய‌ , ப‌சி தீர்க்கும் உண‌வில்லை.
  ஒருவ‌ன் மீனை கேட்டால் அவ‌னுக்கு தூண்டிலை கொடு என்று ஒரு ப‌ழ‌மொழி உண்டு. ஆனால் நீங்க‌ள் தூண்டிலை கேட்ப‌வ‌னுக்கு கூட‌ செத்துப்போன‌ மீனையோ அல்ல‌து மிட்டாயையோ கொடுத்து , உழைக்க‌ நினைப்ப‌வ‌னையும் சோம்பேறி ஆக்குகின்றீர்க‌ள். 2 ரூபாய்கு ஒரு கிலோ அரிசி எனும் ஒரு ம‌க‌த்தான‌ திட்ட‌த்தின் மூல‌ம் ஒரு புற‌ம் சோம்பேறிக‌ளையும், ம‌றுபுற‌ம் அரிசி க‌ட‌த்த‌ல்கார‌ர்க‌ளையும் உருவாக்கிவிட்டீர்க‌ள்.

  ந‌ம் பார‌த‌ நாட்டோரு மூன்று முறை போரிட்ட‌, நேர‌டியாக‌ எதிரியாக‌ ந‌ட‌ந்து கொள்கின்ற‌ பாகிஸ்தான் க‌ட‌ற்ப‌டை கூட‌ எல்லை தாண்டும் ந‌ம் நாட்டு மீன‌வ‌ர்க‌ளை சுட்டுக் கொன்ற‌தில்லை. ஆனால் பார‌த‌த்தின் த‌ய‌வுட‌ன் ந‌ம் தொப்புள் கொடி உற‌வுக‌ளான‌ த‌மிழ‌ர்க‌ளை கொன்று குவிக்கும் இல‌ங்கை நாட்டின் க‌ட‌ற்ப‌டை ந‌ம் மீன‌வ‌ர்க‌ளை சுட்டுக் கொல்லும் போது, உட‌னே பிர‌த‌ம‌ருக்கு ஒரு க‌டித‌ம் ம‌ட்டும் எழுதுவீர்க‌ள். ( ஒரு வேளை நீங்க‌ள் எழுதும் எந்த‌ க‌டித‌மும் பிர‌த‌மருக்கு போய் சேர‌வில்லையோ ? அஞ்ச‌ல் துறை அமைச்ச‌ர் எப்போதும் உங்க‌ளுக்கு தோள் கொடுத்து கொண்டே இருப்ப‌தால் அவ‌ரை கேட்டாலும் தெரியாது).

  2004ல் திமுகா விற்கு கேட்ட‌ இலாக்காக்க‌ளை ஒதுக்க‌வில்லை என‌ போராடி பெற்ற‌ நீங்க‌ள், அது போன்ற‌ ஒரு போராட்ட‌த்தை ம‌க்க‌ளுக்காக‌ ஒரு போதும் செய்த‌தில்லையே ஏன்? த‌மிழ‌க‌ மீன‌வ‌ர்க‌ள் சுட‌ப்ப‌டும் போது ம‌த்திய‌ அர‌சின் க‌வ‌ன‌த்தை ஈர்க்க‌ இப்ப‌டி ஒரு போராட்ட‌ம் ந‌ட‌த்தி இருக்க‌லாம், நெல்லை விட‌ உற்ப‌த்தி செல‌வுகுறைவான‌ கோதுமைக்கு ஆதார‌ விலை குவின்டாலுக்கு 1000 ரூபாய் என்றும் நெல்லுக்கு அதை விட‌ குறைவாக‌வும் நிர்ண‌யித்த‌ போது போராடியிருக்க‌லாம், ஆனால் நீங்க‌ள் அதை செய்ய‌வில்லையே?
  த‌மிழை செம்மொழி என்று சொன்னால் ம‌ட்டும் எல்லாத் த‌மிழ‌ன் வீட்டிலும் அடுப்பு எரிந்துவிடுமா?
  உண்மையிலேயே க‌லைஞ‌ருக்கு வ‌ய‌சு ஆயிடுச்சுங்கோ...

  குறிப்பு :
  மிகப்பெரிய பின்னூட்டமாய் அமைந்துவிட்டதால் இதை நான் என்னுடைய பக்கத்திலும் பதிப்பாக வெளியிடுகின்றேன்.

  ReplyDelete
 44. paul ( maraneri) ku oru nanri to lead me to this blog.

  Inuma arasayal veri thaniyatha KK methu verikondu irkeenga ellaya thallaimurai ? hmmm avarum enna panuvar. pathavi asai.. yara solla ellam oru kutaiyella urina matainga than.. ithula yaru periya allunu oru pati manram ithulla oru advise tea kadiyella arasiyeal pesa kudathunu sonna mathiri blogla arasiyeal pesa kudathnunu oru satam varallam nalla irukumm annalum bore adikum pothu intha mathiri post jilpanseyea than irukku.. inum ezhuthungall.. ennai ponra alluku yaru yara thitinallum jolly than.. thamasa irukumay.. entertainment thanay arasiyeal ippothaiku... athu KKva iruntha enna azhagiriya iruntha enna ella puthu thulir kanimozhiya iruntha enna seithi venum.

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))