பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

December 26, 2008

அப்ப நானும் மூத்த பதிவரா? சொல்லுங்க!

தமிழ்மணத்துல ஒரே சண்டையா இருக்குதுப்பா. யாரு மூத்த பதிவர்? யாரு பிரபல பதிவர்? யாரு இளைய பதிவர்? யாரு குழந்தை பதிவர்? இதிலே நான் எந்த வகைன்னு சொல்லுங்கப்பா.

டிசம்பர் 26 - 2006 லே ச்சும்மா விளையாட்டுக்கு "அபிஅப்பா"ன்னு எழுத ஆரம்பிச்சது. இதோ இப்ப "அபிஅப்பா"ன்னா ஒரு நாலு பேருக்கு தெரியும் அளவுக்கு வந்தாச்சு. மூணாவது வருஷத்துக்கு வந்தாச்சு.

இப்ப சொல்லுங்க நான் எந்த வகை பதிவர். சட்டுன்னு சொன்னீங்கன்னா நான் ராத்திரி சாப்பாடு சாப்பிடுவேன். (இல்லாட்டியும் சாப்பிடுவேன்)

இப்படிக்கு

அன்பு அபிஅப்பா

54 comments:

 1. நீங்க மூத்த பிரபல பதிவர்

  ReplyDelete
 2. ச்சும்மா வெளையாட்டுக்கெல்லாம் சொல்ல மாட்டோம்!

  செம டெரரா இருந்தாத்தான் சொல்லுவோம்!

  ReplyDelete
 3. இன்னும் மூணு பேரு யாருன்னு இப்பவே தெரிஞ்சாகனும்..:)

  ReplyDelete
 4. மொக்கை பதிவர்ங்கற வகையை காணோமே!

  ReplyDelete
 5. //Jeeves said...
  நீங்க மூத்த பிரபல பதிவர்
  ///


  அப்ப ஜீவ்ஸ் அண்ணாச்சி மூத்த பதிவர் - கன்பார்ம் ஆகியிருச்சு :)))) (பின்னே நாட்டாமை தீர்ப்பெல்லாம் சொல்லிட்டாரே!)

  ReplyDelete
 6. சில குசும்பு காரர்கள் உங்களை முத்தபதிவர்ன்னு சொல்றாங்களே

  ReplyDelete
 7. ஜீவ்ஸ் அண்ணாச்சி.....அபி அப்பா பிரபல மூத்த பதிவர்.....இது தான் சரி!

  ReplyDelete
 8. /ஆயில்யன் said...

  ச்சும்மா வெளையாட்டுக்கெல்லாம் சொல்ல மாட்டோம்!

  செம டெரரா இருந்தாத்தான் சொல்லுவோம்!/

  ஆயில்ஸ் அண்ணே....நீங்க தான் எப்பவுமே டெரரா இருக்கீங்க....அப்பா நீங்களும் மூத்த பதிவர் தானா???

  ReplyDelete
 9. //நிஜமா நல்லவன் said...
  :)
  //


  சிங்கிள் ஸ்மைலி போடறவங்களும் கூட மூத்த பதிவர்தானாமாம்!

  ReplyDelete
 10. /வால்பையன் said...

  மொக்கை பதிவர்ங்கற வகையை காணோமே!/

  பிரபல மூத்த மொக்கை பதிவர் அபி அப்பா.. ..நீங்க சொல்லி கொடுத்தபடி சொல்லிட்டேனா வால் அண்ணே?

  ReplyDelete
 11. / ஆயில்யன் said...

  //நிஜமா நல்லவன் said...
  :)
  //


  சிங்கிள் ஸ்மைலி போடறவங்களும் கூட மூத்த பதிவர்தானாமாம்!/

  அடங்கொய்யால ....!

  ReplyDelete
 12. ஜீவ்ஸ், நிசமா நல்லவர், ஆயில்யன்,குதிரை அழகன் வால்பையன் ஆகியோர்களுக்கு :-)

  ReplyDelete
 13. பின்ன என்ன சின்னபுள்ள தனம், சிங்கிள் ஸ்மைலி போட்டா மூத்த பதிவராமே! அடங்கொய்யால, எப்புடி எல்லாம் கண்டுபுடிக்கிறாய்ங்கய்யா:-)

  ReplyDelete
 14. /இதோ இப்ப "அபிஅப்பா"ன்னா ஒரு நாலு பேருக்கு தெரியும் அளவுக்கு வந்தாச்சு./

  அட ஆமா...நீங்க சொல்லுறது சரி தான்....ஜீவ்ஸ்...நான்....ஆயில்யன்...வால் பையன்.....நாலு பேருக்கு தான் தெரிஞ்சி இருக்கு...:))

  ReplyDelete
 15. இப்படித்தான் மாயவரத்துக்கு இப்ப போனப்ப நான் எத்தனை கஷ்ட்டப்பட்டு துபாய் காரன் இல்லை என ஒரிஜினல் மாயவரத்தான் வேஷம் போட்டு கிட்டு போன பின்னும் என்னை ஒரு டிராபிக் போலீஸ்காரர் "தம்பி நீங்க துபாய்ல இருந்து வந்திருக்கீங்களா?"ன்னு கேட்டாரு? அது எப்படி கண்டு பிடிச்சார்ன்னு பின்னூட்டத்திலே சொல்ரவங்களுக்கு ஒரு நல்ல பரிசு இருக்கு. அவர் எதை வச்சு கண்டுபிடிச்சார்ன்னு சொல்லுங்க பார்ப்போம்!

  ReplyDelete
 16. //குதிரை அழகன் வால்பையன் //

  என்ன கொடுமை சார் இது!
  ரயிலு முன்னாடி கூடத் தான் போட்டோ எடுத்துருக்கேன்

  ReplyDelete
 17. //அபி அப்பா said...

  இப்படித்தான் மாயவரத்துக்கு இப்ப போனப்ப நான் எத்தனை கஷ்ட்டப்பட்டு துபாய் காரன் இல்லை என ஒரிஜினல் மாயவரத்தான் வேஷம் போட்டு கிட்டு போன பின்னும் என்னை ஒரு டிராபிக் போலீஸ்காரர் "தம்பி நீங்க துபாய்ல இருந்து வந்திருக்கீங்களா?"ன்னு கேட்டாரு? அது எப்படி கண்டு பிடிச்சார்ன்னு பின்னூட்டத்திலே சொல்ரவங்களுக்கு ஒரு நல்ல பரிசு இருக்கு. அவர் எதை வச்சு கண்டுபிடிச்சார்ன்னு சொல்லுங்க பார்ப்போம்!//

  ஷேக் ட்ரஸ் எல்லாம் மாயவரத்துல போட்டிருந்தா சின்னப் புள்ளைக் கூட கண்டுபிடிச்சுடுவாங்க

  ReplyDelete
 18. உங்க பக்கத்தில் ஒரு பொடியன்( சாமி சத்தியமா சஞ்சய் இல்ல)உங்களுக்கு
  குடை பிடிச்சிகிட்டு கைல பாடி ஸ்ப்ரே வச்சிக்கிட்டு இருந்திருப்பான்....:)

  ReplyDelete
 19. //அபி அப்பா said...
  இப்படித்தான் மாயவரத்துக்கு இப்ப போனப்ப நான் எத்தனை கஷ்ட்டப்பட்டு துபாய் காரன் இல்லை என ஒரிஜினல் மாயவரத்தான் வேஷம் போட்டு கிட்டு போன பின்னும் என்னை ஒரு டிராபிக் போலீஸ்காரர் "தம்பி நீங்க துபாய்ல இருந்து வந்திருக்கீங்களா?"ன்னு கேட்டாரு? அது எப்படி கண்டு பிடிச்சார்ன்னு பின்னூட்டத்திலே சொல்ரவங்களுக்கு ஒரு நல்ல பரிசு இருக்கு. அவர் எதை வச்சு கண்டுபிடிச்சார்ன்னு சொல்லுங்க பார்ப்போம்!
  //

  வடிவேலு கணக்கா எந்த கொண்டையை மறைக்காம போயி மாட்டுனீங்க...????

  ReplyDelete
 20. ஒட்டகத்து பால்லே சூடா ஒரு டீ - அப்படின்னு ஆர்டர் பண்ணீங்களா!!!!

  ReplyDelete
 21. போலீஸ்காரர்கிட்டே போய் - நம்பர் 6 விவேகானந்தர் தெரு எங்கேயிருக்குன்னு கேட்டீங்களா????

  ReplyDelete
 22. பளபளான்னு இருக்கற ரோட்டை பாத்து - முகம் கழுவி, பவுடர் போட்டு, தலை வாருனீங்களா????

  ReplyDelete
 23. அப்பப்பா.. என்ன வெய்யில் என்ன வெய்யில்... இப்படித்தான் துபாய்லே.... - அப்படின்னு பேச ஆரம்பிச்சீங்களா????

  ReplyDelete
 24. ஜீவ்ஸ், நிஜமாநல்லவன், ஆயில்யன், சின்ன பையன்,வால்பையன் தப்பு தப்பு தப்பு... நல்லா ரோசனை பண்ணுங்க, எங்க ஊர் பாசக்கார பய புள்ளைங்க வெவகாரமானவங்கப்பூ!

  ReplyDelete
 25. வண்டிய ஒதுக்கி லைசன்ஸ் கேட்டவர்கிட்டே - துபாய் ரூபா நோட்ட எடுத்து நீட்டினீங்களா???

  ReplyDelete
 26. பதிவின் நோக்கத்தையே பின்னூட்டத்தில் ஒரு புதிர் போட்டு திசை திருப்பிவிட்ட அபி அப்பாவுக்கு கண்டனங்கள்...!

  ReplyDelete
 27. என் துருப்புடிச்ச மூளைக்கு ஒண்ணும் புரியலையே

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 28. //பதிவின் நோக்கத்தையே பின்னூட்டத்தில் ஒரு புதிர் போட்டு திசை திருப்பிவிட்ட அபி அப்பாவுக்கு கண்டனங்கள்...!

  //

  மூத்த பதிவர்னா அப்படித்தாம்பா... ஹிஹி

  ReplyDelete
 29. // வால்பையன் said...
  என் துருப்புடிச்ச மூளைக்கு ஒண்ணும் புரியலையே


  //

  இதுக்குத்தான் அடிக்கடி பெயிண்ட் அடிக்கணும்றது.... துரு பிடிக்காதில்லே...

  ReplyDelete
 30. ஏர்போட்டில இருந்தே நம்ம காஸ்ட்டியூம் வேஷ்டி, சாதா சட்டை, சாதா ஸ்லிப்பர், அது தவிர பூச்சிமருந்து கிடையாது, பாரின் சிகரட் கிடையாது, இந்தியா ரூபாயே வச்சிகிரது இல்ல, இதுல துபாய் பணமா, ஒட்டகபாலா அத நான் துபாய்லயே குடிச்சது இல்லை, பின்ன எப்படி கண்டுபிடிச்சாரு போலீஸ்காரரு....கண்டுபிடிங்க பார்ப்போம்....என்ன ஆயில்ஸ் ஆஃப் ஆகிட்டாரு?

  ReplyDelete
 31. //Jeeves said...

  நீங்க மூத்த பிரபல பதிவர்//

  அதே எதுக்கு இந்த பழம் பெருச்சாளி)பதிவர் வந்து சொல்லியிருக்காரு??? ;)

  ReplyDelete
 32. தொல்ஸ்'ண்ணே,

  சூரியன் த பாஸ்'னு ஒரு ப்ளாக் இருந்துச்சுண்ணே, அதை எழுதுறது நானில்ல நானில்ல'னு ஒருத்தர் வாலெண்டியரா வந்து எல்லார்க்கிட்டேயும் சொல்லிக்கிட்டு இருந்தாரு... :) அப்போ அவரும் ஒரு பதிவருன்னா நீங்க மூத்தபதிவர்தான்... :)

  ReplyDelete
 33. //தமிழ்மணத்துல ஒரே சண்டையா இருக்குதுப்பா. யாரு மூத்த பதிவர்? யாரு பிரபல பதிவர்? யாரு இளைய பதிவர்? யாரு குழந்தை பதிவர்? இதிலே நான் எந்த வகைன்னு சொல்லுங்கப்பா.//

  அட கருமத்தை.. இப்போதான் இதேயே படிச்சி தொலைச்சேன்... ஒங்கக்கூட சேர்ந்து பதிவையே படிக்காமே தலைப்பை படிச்சி பின்னூட்டம் போடுற வியாதி எப்போதான் தீருமின்னு தெரியல..

  எதுக்கு நீங்களா வாலெண்டியரா நானும் ரவுடி நானும் ரவுடி'கிற மாதிரி கேள்விகேட்டுக்கிட்டு இருக்கீங்க???

  இந்த பதிவு சூடான இடுகையிலே வந்தா மூத்த பதிவர் இல்லையா? ஆறிப்போன ஊசி வடை பதிவர்.. :)

  அவ்வளவுதான்... :))

  ReplyDelete
 34. தம்பி இராம்! ஏன் இந்த கொலவெறி! எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துப்போம்!அடங்கு தம்பி அடங்கு, இதிலே பின்னூட்டத்தை வெளியிடவும்ன்னு அருவா போட்டோ வேற அனுப்புறியே தம்பி இது நல்லதுக்கு இல்ல அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்;-((

  ReplyDelete
 35. / அபி அப்பா said...

  இப்படித்தான் மாயவரத்துக்கு இப்ப போனப்ப நான் எத்தனை கஷ்ட்டப்பட்டு துபாய் காரன் இல்லை என ஒரிஜினல் மாயவரத்தான் வேஷம் போட்டு கிட்டு போன பின்னும் என்னை ஒரு டிராபிக் போலீஸ்காரர் "தம்பி நீங்க துபாய்ல இருந்து வந்திருக்கீங்களா?"ன்னு கேட்டாரு? அது எப்படி கண்டு பிடிச்சார்ன்னு பின்னூட்டத்திலே சொல்ரவங்களுக்கு ஒரு நல்ல பரிசு இருக்கு. அவர் எதை வச்சு கண்டுபிடிச்சார்ன்னு சொல்லுங்க பார்ப்போம்!/

  dubai driving license

  ReplyDelete
 36. சத்தியமா மூத்த பதிவர்தாங்க நீங்க.. இதுல என்ன சந்தேகம் உங்களுக்கு..?

  ReplyDelete
 37. //இராம்/Raam said...

  //Jeeves said...

  நீங்க மூத்த பிரபல பதிவர்//

  அதே எதுக்கு இந்த பழம் பெருச்சாளி)பதிவர் வந்து சொல்லியிருக்காரு???
  ///


  ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்!

  (ராசா...! கலக்கல் கமெண்ட் வார்த்தை கிடைக்காம தவிச்சேன் )

  ReplyDelete
 38. // இராம்/Raam said...

  தொல்ஸ்'ண்ணே,

  சூரியன் த பாஸ்'னு ஒரு ப்ளாக் இருந்துச்சுண்ணே, அதை எழுதுறது நானில்ல நானில்ல'னு ஒருத்தர் வாலெண்டியரா வந்து எல்லார்க்கிட்டேயும் சொல்லிக்கிட்டு இருந்தாரு... :) அப்போ அவரும் ஒரு பதிவருன்னா நீங்க மூத்தபதிவர்தான்... :)//


  மக்களே, கீழேயிருக்கும் chat log'க்கும் இந்த கமெண்ட்'க்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு சொல்லிக்க கடமைப்பட்டு இருக்கிறேன்.. :)


  // Raam: Grr... antha comment enga? athu varalainna ippo thani pathive poduven..avvlo thaan sollitten..

  Kummar: போட்டாச்சு போட்டாச்சு,எங்க இருந்து தான் கிளம்புறீங்களோ
  //

  ReplyDelete
 39. ஜீவ்ஸ்! பதில் தப்புன்னு நான் சொன்னதுக்காக ச்சேட்ல "வீட்டுக்கு போன் பண்னி அண்ணிகிட்டே போட்டுகுடுத்துடுவேன்"ன்னு மிரட்டினா நான் இணைய போலீஸ் கிட்டே சொல்ல வேண்டி வரும் ஆமா:-))

  ReplyDelete
 40. உண்மை தமிழன் அய்யா! நீங்க சத்தியமா அப்படீன்னு சொல்லுவதை பார்த்தா என் வயசை வச்சி சொல்ரீங்களோன்னு மைல்டா ஒரு டவுட் வருதே:-)

  ReplyDelete
 41. //அபி அப்பா said...

  தம்பி இராம்! ஏன் இந்த கொலவெறி! எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துப்போம்!அடங்கு தம்பி அடங்கு, இதிலே பின்னூட்டத்தை வெளியிடவும்ன்னு அருவா போட்டோ வேற அனுப்புறியே தம்பி இது நல்லதுக்கு இல்ல அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்;-((//


  நல்லா பேசி கிழிச்சீங்க... புது கடை ஆரம்பிக்க பெரிய தகடுதகிடுத்தமெல்லாம் பண்ணி,கல்லா கட்டிக்கிட்டு அப்புறமா அதிலே எல்லாமும் முடிச்சிட்டு பழைய கடையே புது கடையோட இணைக்க புது பதிவெல்லாம் போட்டு நானும் மூத்த பதிவர்தானே'னு கேள்விக்கேட்கிறது.. :)

  பொது மனுசன் வந்து உங்கக்கிட்டே என்னாதிது'னு கேள்விகேட்டா, கேட்டவனை கிறுக்கு பிடிக்க வைக்கிறமாதிரி "கண்கள் சிவக்கிறது, இதயம் கொதிக்கிறது'னு" டெர்ரர் டயலாக் விடுறது... :)

  ReplyDelete
 42. இராம் தம்பி! ஏதோ அரசியல் பேசற மாதிரி தெரியுதே! எனக்கும் அரசியலுக்கும் ரொம்ப தூரம்ப்பா:-))

  ReplyDelete
 43. //இராம் தம்பி! ஏதோ அரசியல் பேசற மாதிரி தெரியுதே! எனக்கும் அரசியலுக்கும் ரொம்ப தூரம்ப்பா:-))//

  :-)) இப்பிடி கமெண்ட்'லே போட்டா யாகூ ஸ்மைலி வராது... "-" இல்லாமே போடுங்க... :)

  அப்போதான் உங்களை நீங்களை நினைச்சி சிரிச்சிக்கீறிங்கன்னு தெரியும்...:)

  BTW... ரெண்டாவது வருட நிறைவிற்கு வாழ்த்துக்கள்.. ஒங்களுக்கு மொத கமெண்ட் போட்ட அந்த இம்சை'க்கு என்னத்த சொல்லுறது..... :)

  ReplyDelete
 44. கொலைவெறி மொக்கைப்பதிவர் என்ற டைட்டில் பொருத்தமா இருக்கும்...

  தலை நரைச்சிருக்கறதால மூத்த பதிவர்னு சொல்றதுல எனக்கு ஆட்சேபனை இல்ல

  ReplyDelete
 45. மூன்றாம் வருடத்தில் அடியெடுத்து வைத்து பதிவும் போட்டதற்கான வாழ்த்துக்கள் ;-)

  ReplyDelete
 46. //ஒரு டிராபிக் போலீஸ்காரர் "தம்பி நீங்க துபாய்ல இருந்து வந்திருக்கீங்களா?"ன்னு கேட்டாரு? //

  என்ன அபி அப்பா.. நீங்க என் முன்னாடி அன்னிக்கு மாயுரத்துல செஞ்ச அராத்து அராஜகத்தனமெல்லாம் மறந்துபோச்சா.. எந்த போலிஸ்காரன் உங்களை மறப்பான்.

  இந்த லட்சனத்துல என்னைய வேற தைரியமா வாடா தம்பின்னு என் தோள்ல கைய போட்டுல்ல "அங்க" கூட்டிட்டு போனீங்க..

  அது எந்த இடம்ன்னு சரியா தொல்ஸை தவிர வேற யாராச்சும் கண்டுபிடிக்கறவங்களுக்கு அபி அப்பா ஏதாவது பரிசு தருவாரு...

  ஆனாலும் அங்க வுட்டீங்களே ஒரு சவுண்டு.. என்னிய யாருன்னு தெரியுமாடான்னு கேட்டுட்டு திரும்பி பார்த்து என்னைய லுக்கு விட்டப்பத்தான் உங்க உண்மையான பலத்த நான் தெரிஞ்சுக்கிட்டேன்.. அன்னிக்கு மாத்திரம் உங்களையும் கூட்டிட்டு உடனே எஸ்கேப் ஆகலைன்னா இன்னிக்கு பதிவுல அந்த அனுபவத்தை எழுதியிருக்கலாம்.

  ReplyDelete
 47. வாழ்த்துக்கள் ;))

  உங்களுக்கு பதிவை ஆரம்பிச்சி வச்சவன் எங்க இருந்தாலும் நல்லாயிருக்கனும் சாமி ;)))))

  ReplyDelete
 48. நானெல்லாம் சந்தேகமே இல்லாமல் குழந்தைப் பதிவர் தான்னு சொல்லிக்கிறேன்.

  இதுக்கு அப்புறம் வர பின்னூட்டத்துக்கெல்லாம் பதிலே கொடுக்க மாட்டீங்களே? வழக்கம்போல?? :P:P:P:P
  வீரசேகரவிலாஸை இன்னும் படிக்கலை, கொஞ்சம் வேலை அதிகம்! படிச்சுட்டு வரேன்.

  ReplyDelete
 49. அன்னைக்கு நைட் சாப்டீங்களா இல்லையா பிரபல மனிதரே.

  ReplyDelete
 50. 2006 நவம்பர் மாதம் அமீரகத்தில் என்னிடம் போனில் உரையாடின அந்த நேரத்தில் பதிவுலகம் பக்கம் வெறும் பார்வையாளனாக தான் உள்ளேன் என்று சொன்னதை நம்பி பேசாமல் இருந்தது எவ்வளவு பெரிய தவறு என்பது இப்பொழுது தான் தெரிகிறது. அன்றே இப்படி தான் ஆரம்பிக்கும் என்று எடுத்து கூறி தடுத்து இருக்கனும்...

  விதி யாரை விடுது சொல்லுங்க...

  ReplyDelete
 51. சென்ஷி சொன்ன இடம் போலீஸ் ஸ்டேஷன் .பரிசு உண்டா.?:)

  ReplyDelete
 52. அபி அப்பா, கறுப்புக் கண்ணாடி போட்டபச்சப் பிள்ளையோட அப்பா நீங்க. அதனால மூத்த பதிவர்னு சொல்லலாம்.
  இல்லாட்டா ரெண்டு வருஷமா எங்களைச் சிரிக்க சிந்திக்க வச்சிருக்கீங்க. அதுக்காகவும் சொல்லலாம்.

  ஆகக் கூடி மூத்த பதிவர்னு சொன்னா உங்களுகு நஷடமில்லையே. எங்களை மாதிரி சின்னப் பதிவர்லாம் உங்களை வாழ்த்தறோம். இன்னும் நல்ல பிரபலம்ம் ஆகணும்னு.

  @முத்து!!!! என்னப்பா, போலீஸ் ஸ்டேஷன்னு சொல்றீங்க. நிசமா:))))))

  ReplyDelete
 53. நீங்க மூத்த பதிவரா இல்லையான்னு எங்கள மாதிரி இளைய பதிவர்கள் சொல்ல முடியுமா?

  பி.டி.டபள்யூ, இரண்டாண்டு நிறைவுக்கு வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))