பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

February 4, 2010

ஒரு பக்கா கதை!!!

எங்க நகரிலே இருக்கும் அந்த பெண் தான் இப்ப டாக் ஆஃப் தி நகர். பெரிசா ஒரு தப்பும் செய்திடலை. படித்து முடித்து விட்டு ஏதோ ஒரு கடையில் வேலை செய்யுது. காலை ஒன்பது மணிக்கு போய் மாலை ஆறு மணிக்கு வந்துடும். அதல்லாம் விஷயமில்லை. காலை ஆறு மணிக்கு குளித்து முடித்து தலையில் ஒரு துண்டு, நைட்டி சகிதமாக என் வீட்டு எதிரே இருக்கும் கிரவுண்டில் ஆஜராகிவிடும். ஆறு மணின்னா ஷார்ப்பா ஆறு மணி. மிக சரியாக 8.30 மணி வரை இடைவிடாம பேசும். பின்னே ஓடி போய் கிளம்பி வேலைக்கு போயிடும். மாலை ஆறு மணிக்கு வந்து கொஞ்சம் ரெஸ்ட். பின்னே ஏழு மணிக்கு நைட்டி, தோளில் துண்டு போட்டு கிட்டு செல் போன் சகிதம் வந்துடும். நகரில் யாரும் சமீபமாக விவித பாரதியை நாடுவதில்லை கடிகாரம் திருப்பி வைக்க. எல்லாம் அந்த பெண் உபயம்.

நகரின் அத்தனை குடும்பஇஸ்திரிகள் காதிலும் புகை. "இந்த அக்கிரமம் நடக்குமா?" "இது ஆண்டவனுக்கே அடுக்குமா?" "கலி முத்தி போச்சு" இப்படியாக அரத பழசான தமிழ் பட 'கும்பல்' வசனத்தையும் பேசி விட்டார்கள். அந்த பெண் 3 மணி நேரம் தான் பேசுது. ஆனா குடும்ப தலைவிகளும் இது பத்தி இருபத்தி நாளு மணி பத்தாம பேஜார் ஆகியிருக்காங்க. "என்னங்க இன்னிக்கு செகண்ட் ஷிப்ட்ல அது மூணு தடவை கண்ணை கசக்குச்சே...எதுனா பெரிய சண்டையா இருக்குமோ" என அசந்து படுத்திருக்கும் புருஷனை இரவு 3 மணிக்கு புரட்டி கேட்டார்கள்.

"நீங்க வேணா பாருங்க, இன்னிக்கு அந்த சிறுக்கி மஞ்சள் கலர் சுடிதார் தான் போட்டுட்டு போவா. பந்தயம் வச்சிப்போமா நீங்க தோத்துட்டா ஆயிரத்தில் ஒருவன் அழைச்சிட்டு போகனும் சரியா?" என ஆம்படயான்களுக்கு ஆப்பு வைத்தார்கள்.

கீரைக்காரம்மா வந்தா அதை நடுவே உட்காரவச்சு எல்லா வீட்டு அம்மனிகளும் "யக்கா அப்படி என்னதான் பேசிப்பாங்க இத்தனை நேரம். எனக்கும் தான் கல்யாணம் ஆச்சு. இந்த அநியாயம் நான் எங்கயும் பார்க்கலை. என் வலைகாப்பு அன்னிக்கு தான் என் மூஞ்சியையே அவரு முழுசா பார்த்தாரு" என சொல்ல அதுக்கு ரெண்டு கல்யாணம் செஞ்சு நாலு பிள்ளை பெத்த கண்ணாம்பாக்கா டைப்ப முடியாத அடல்ஸ் ஒன்லி பேச்சு பேச எதேர்ச்சையா அங்க வந்த என்னை பார்த்து எல்லாரும் வாரி சுருட்டி எழுந்திருக்க அதிலே ஒரு வாயாடி அக்கா என்னை பார்த்து "தம்பி, இந்த அநியாயத்தை தெரு ஆம்பளை யாரும் என்னன்னு கேட்க கூடாதா, நீங்களும் துபாய் கிபாய்ன்னு போயிட்டு போயிட்டு தான் வரீங்க" என்று உசுப்பேத்திவிட " அக்கா சத்தமா பேசினா நான் மட்டுமில்ல தெருவே கேட்கலாம். அது குசுகுசுன்னு தானே பேசுது"ன்னு சொன்னேன்.

தெருவிலே வீரனா இருந்தாலே இப்படிப்பட்ட கஷ்டம் வரத்தான் செய்யும் போலிருக்கு. "சரி சரி எல்லாரும் போயிட்டு வாங்க. ரேஷன்ல ஃப்ரீயா வாஷிங் மெஷின் கொடுக்குறாங்க. அதை போய் என்னான்னு பாருங்க"ன்னு சொல்லிட்டு அந்த பெண்ணை கேட்டுடலாம்ன்னு முடிவுக்கு வந்தேன்.

பெண்ணை பார்த்தா பீட்டர்ஹெயினுக்கு ஒன்னு விட்ட தங்கச்சி மாதிரி இருக்குது. எக்கு தப்பா எதும் கேட்டா நைட்டிய மடிச்சி கட்டி விசயகாந்து மாதிரி ரைட்டு காலை காத்திலே உந்திகிட்டு லெஃப்ட் காலால் என்... வேண்டாம். பயத்தை முகத்தில் காட்டிகிட்டா வீரனுக்கு அழகில்லை. ஒரு மூணு நாள் அந்த பொண்ணை வாட்ச் பண்ணிட்டு பின்ன கேட்போம்ன்னு வாட்ச் பண்ண ஆரம்பிச்சேன்.

பாவம் அந்த புள்ள சண்டேன்னா மூணு ஷிப்ட்ன்னு ரொம்ப பிஸியா இருக்குது. ஆமாம் சண்டேயிலே மதியம் 2-3.30 எக்ஸ்ட்ரா.சர்வதேச விதி போலிருக்கு. எனக்கு ஆச்சர்யம் தாங்க முடியலை. மனசிலே தைரியத்தை வரவழைச்சுகிட்டு நறுக்குன்னு மூணு கேள்வி கேட்க முடிவெடுத்து திங்கள் காலை அது பேசி முடிச்ச பின்னே "இந்தாம்மா இங்க வா"ன்னு கூப்பிட்டேன். கிட்ட தட்ட எல்லார் வீட்டு ஜன்னலும் எங்களையே பார்த்தது. கேட்க முயன்றது.

1. உன் சிம்கார்டு எந்த கம்பனி கார்டு?

2.எந்த 'பிளான்'ல வாங்கியிருக்க?

3. செல் பேட்டரி ஒரிஜினல் ஃபின்லேண்டா?


நீதி: அவரவர் பிரச்சனை அவரவர்களுக்கு.

அநீதி: 14 வருஷம் முன்ன செல் போனெல்லாம் இல்லாம போயிடுச்சே!

21 comments:

 1. கேட்குறதுதான் கேட்குறீங்க..இதையா கேப்பீங்க அப்பா? மொபைல் சார்ஜ் பண்ண எங்கிருந்து உனக்கு நேரம் கிடைக்குதுன்னு கேட்டிருக்க வேணாம்? :)

  ReplyDelete
 2. இரசிச்சு சிரிச்சம்ல?

  ReplyDelete
 3. காலையிலே ஆபீஸ்ல இருந்தப்போ பழமைபேசி போன் பண்ணி விழுந்து விழுந்து சிரிச்சிக்கிட்டே இருந்தாரு.. “என்னங்க ஐயா.. இப்படி சிரிக்கிறீங்க..சொல்லிட்டுச் சிரிங்க..” அப்படீன்னதுக்கு “அபி அப்பா ஒரு பதிவு போட்டிருக்காரு.. படிச்சிட்டு.. சிரிச்சி முடிச்சிட்டுப் போன் பண்ணுங்கன்னு” சிரிப்புக்கு நடுவே சொல்லிட்டு வெச்சிட்டாரு..

  அவ்வளவு அருமை போங்க...

  ReplyDelete
 4. வீட்டுக்கு வந்து தங்கமணியும் படிச்சிட்டுச் சிரிச்சிக்கிட்டிருக்காங்க...

  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. ஒரு மாதிரி காமெடி கதை மாதிரி இருக்கு..ஆனா இல்லை...எதுக்கும் அண்ணிக்கிட்ட கேட்ட தெரியும் போல! ;))

  ReplyDelete
 6. anna nan vazhuvoor-na. enna anna nambala kandukavey mattankura pathiya.daily-um vandhu un blog patikiran.nambala konjam kantuganna.apram veetula yedhavadhu sillara vela irutha sollu.

  ReplyDelete
 7. ரொம்பவும் துணிச்சலான ஆளுதான் நீங்க... :))

  ReplyDelete
 8. நீண்ண்ண்ண்ண்ண்ட நாட்களுக்குப் பின் அபி அப்பா பதிவு போல இருக்கு:))))))))))))

  ReplyDelete
 9. Idhellam, enna periya vizhayam... En office la CUG vachukitu, daily 10 hrs continuous pesuravangellam irukanga... Namma ooru makkal therinjuka vendiyadhu iruku... Kadhaiku nalla needhi, lol... BTW, new layout is nice...

  ReplyDelete
 10. உங்க கேள்விகளுக்கு விடை கிடைச்சிதா இல்லியா? அதச் சொல்லுங்க.

  ReplyDelete
 11. இப்ப இந்த யாவாரந்தான் ஓடிக்கிட்டிருக்கா?

  அதான் செல் ஆஃப்லேயே இருக்கு! இல்லைன்னா நாட் ரீச்சபுள்..

  நாளைக்கு உங்க ஊருக்கு வரேன் அண்ணாத்த!
  அபிக்கிட்ட சொல்லிரலாம்னு காலைலேருந்து அடிக்கிறேன்.

  இப்பயும் பாப்பீங்களான்னு தெரியலையே!

  நாளை 9.02.2010 காலை மாயவரம் வழியே வைத்தீஸ்வரன் கோவில்....
  ரிட்டன் 1 மணிக்கு இருக்கலாம்..
  படித்துவிட்டு அழைக்கவும்

  9789497531

  ReplyDelete
 12. அருமை அபி அப்பா, குறிப்பா கேட்ட கேள்விகளும் அநீதியும்..:)))!!!

  ReplyDelete
 13. ரசிச்சு சிரிச்சேன்

  ReplyDelete
 14. yoo kathaya surukkama sollungaya,onnum puriyala

  ReplyDelete
 15. very nice commedy abi dad...

  ReplyDelete
 16. hallo en paeru kandasaminnu umakku eppudiyya theriyum---hee.hee..hee.. by kaana.saana

  ReplyDelete
 17. கேட்கறதுதான் கேடிங்க. செல் போனுக்கு யாரு பில்லு கட்றாங்கனு கேட்டிருக்கலாம்

  ReplyDelete
 18. நல்ல நகைச்சுவை உங்களக்கு இருக்கு...... மிகவும் எதிர்ப்பார்த்து இருந்தேன் நீங்க என்ன கேட்க்கபோரிங்க அப்படின்னு.....

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))