பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

April 6, 2010

என் உச்சி மண்டையிலே சுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ங்குது!!!!

இன்று மதியம் எதேற்சையாக ரிமோட் மேலே உட்காந்து விடவே நடிகை லட்சுமியின் கதை அல்ல நிஜம் பார்த்து தொலைய நேரிட்டது. வழக்கம் போல அந்த அம்மா ஒரு பெரிய சோபாவில் உட்காந்து கட்ட பஞ்சாயத்து பண்ணிகிட்டு இருந்துச்சு. எதிரே ஒரு புருஷன் பொண்டாட்டி உட்காந்து இருந்தாங்க. அந்த பொண்டாட்டி சொல்லுச்சு. " மூணாவதா என்னை முருகன் கல்யாணம் பண்ணிகிட்டாருங்க" எனக்கு பக்குன்னு ஆச்சு. என்னடா இது இந்த லட்சுமிக்கு வந்த சோதனை. இந்தம்மா என்ன தீர்ப்பு சொல்ல போவுதுன்னு ஆர்வமா பார்த்தேன்.

லட்சுமி: முதல் இரண்டு மனவி யாரும்ம்மா?

பெண்மணி: முதல் மனைவி தெய்வானை, இரண்டாவது மனைவி வள்ளிங்க!

கேட்டுகிட்டு இருந்த என் உச்சி மண்டையிலே சுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ங்குது.

லட்சுமி: என்னம்மா நீங்க சொல்றது எந்த முருகன்மா?

பெண்மணி: அதாங்க தமிழ் கடவுள் முருகன். நான் கோவையை சேர்ந்தவள். பக்கத்துல ஒரு மலை மேலத்தான் எங்க கல்யாணம் நடந்துச்சுங்க. கல்யாணத்துக்கு எங்க மானனார் மாமியார் எல்லாம் கூட வந்திருந்தாங்க.

லட்சுமி: யூ மீன்????

பெண்மணி: ஆமாங்க சிவனும், பார்வதியும் தான்.

லட்சுமி: உங்க பக்கத்துல இருப்பது யாருங்க?

பெண்மணி: என் முதல் புருஷன்ங்க. எங்களுக்கு இரண்டு பையன் கூட இருக்காங்க.

அந்த கணவனும் ஆமாம்ன்னு ஒத்துகறார். அவர் இரண்டாவது புருஷனாம்.

லட்சுமி: சரி முருகனே உங்களை வச்சிருக்காரு. அப்படின்னா வர்ர தேர்தல்ல மாநிலத்தில், மத்தியில் யார் ஜெயிப்பாங்க சொல்லுங்க.

பெண்மணி: இப்ப இருக்குற ஆட்சி நல்லா இருக்கு. அதனால கீழ இவங்க தான். மேல சோனியா தான்.

என்னால முடியலை. அதுக்குள்ள இரண்டு மூன்று போன் கால். உடனே "விஜய் டிவி பாருங்க சித்தப்பான்னு கிருஷ்ணாவின் அக்கா பொண்ணு, என் அக்கா எல்லாரும்."செம காமடியா இருக்கு பாருங்கன்னு கமெண்ட் வேற. என்ன கொடுமைடா. அந்த பெண்மணி என்ன அழகா அழுத்தம் திருத்தமா பேசிகிட்டு இருக்காங்க. பாவம் நடிகை தான் முகம் பேஸ்த் அடிச்ச மாதிரி ஆகிட்டாங்க. இது நடுவே தம்பிக்கு மதியம் சாதம் ஊட்டுவதற்காக அபிஅம்மா சுட்டி டிவி மாத்தி பூம்பா பார்க்க நான் ஓடி போய் மாடியில் விஜய் டிவியில் ஐக்கியமானேன். அதுக்குள்ள வேற ஒரு அம்மணி நல்ல கைரேகை பார்க்கும் அம்மணி மாதிரி பெரிய பொட்டு, பட்டு புடவைன்னு ஜகஜோதியா இருந்தாங்க.அவங்க ஊர் கரூர்ன்னு சொன்னாங்க.

லட்சுமி: உங்க பேர் என்னம்மா?

பெண்மணி: என் பேரும் லட்சுமி தான். நான் போகர்ன்னு ஒரு சித்தரோட வாரிசு.

லட்சுமி: அப்படியா? போகர்ன்னா அந்த பழனி கோவில் போகரா?

பெண்மணி: ஆமாம். நான் இப்போ போகர் தான் பேசுறேன். ஒன்பது நவபாஷானத்தால அந்த சிலை செஞ்சேன்.

லட்சுமி: நவ பாஷானம்ன்னாவே ஒன்பது பாஷானம் தான். அது என்ன ஒன்பது நவபாஷானம்?

பெண்மணி: நான் சீனாவெல்லாம் போயிருக்கேன்.

லட்சுமி: அப்படியா? அங்க உங்க பேர் என்ன?

பெண்மணி: அங்க என்னை போப் ஆண்டவர்ன்னு சொல்லுவாங்க. அங்க தான் நான் அக்குபஞ்சர் கண்டுபிடிச்சேன்.

கேட்டுகிட்டு இருந்த எனக்கு பஞ்சர் ஆகிடுச்சு.

தொடர்ந்து லட்சுமி நவபாஷானம் பெயர் எல்லாம் கேட்டு பரிட்சை வைக்க அந்த அம்மா(அதான் போகர்) செம கடுப்பாகி ஜாக்கெட் உள்ளே இருந்த மைக்கை கழட்டி வீசிட்டு செட்டை விட்டு வெளியே போய் லெட்சுமியை வண்டை வண்டையா திட்டிகிட்டு போய் காரில் ஏறி உட்காந்துகிட்டுச்சு. பின்னாலயே அந்த அம்மாவின் பக்த கம்மனாட்டிகள் ஸாரி பக்தகோடிகள். பாவம் சிவசந்திரன் கூட இப்படியெல்லாம் திட்டியிருக்க மாட்டாங்க லட்சுமியை. அத்தனை திட்டு.

ஹாட்ஸ் ஆஃப் டி விஜய் டிவி! அடிக்கடி இந்த மாதிரி ஒரு காமடி நிகழ்ச்சி காட்டியமைக்காக!

அதல்லாம் விடுங்க. இனி நம்ம விஷயத்துக்கு வாங்க. இன்னிக்கு டாக் ஆஃப் தமிழ்நாடு இந்த செய்தி தான்.அரசியல் வாதிங்க சும்மா இருப்பாங்களா? அறிக்கை இல்லாத அரசியல் ஒரு அரசியலா?

*********************

கலைஞரின் கேள்வி பதில் அறிக்கை:

நிருபர்: கோவையை சேர்ந்த ஒரு அம்மா முருகன் மூணாம் தாரமா ஒரு பெண்னை கல்யாணம் பண்ணிகிட்டதா சொல்றாங்களே?

கலைஞர்: முருகன் தமிழ்கடவுள் என்பதால் இப்படி எல்லாம் அவப்பெயர் உண்டாக்குகின்றனர். இதே சிவ பெருமான் இரண்டு கல்யாணம் செய்து கொண்ட போது இராமகோபாலன்கள் வாய் மூடி மௌனியாக இருந்துவிட்டு முருகன் தமிழன் என்பதால் விஷயத்தை ஊதி பெரிதாக்குகின்றனர்.

நிருபர்: ஜெயலலிதா கூட இது பற்றி கண்டனம் தெரிவித்து இருக்கின்றாரே?

கலைஞர்: இதோ கோவையில் உலக செம்மொழி மாநாடு நடக்க இருக்கின்றது. தம்பி வைரமுத்து போன்ற உலக தமிழரிஞர் எல்லாம் கூட இருக்கின்றனர். அதை பொறுத்து கொள்ள முடியாத அந்த அம்மையார் இந்த கோவை பெண்மனியின் விஷயத்தை பெரிதாக்கி மாநாட்டுக்கு வரும் கூட்டத்தை தடுக்க செய்யும் சதியோ என நினைக்க தோன்றுகிறது.

நிருபர்: முடிவாக என்ன சொல்ல வருகின்றீர்கள்?

கலைஞர்: முடி இருக்கும் மகராசன் முருகன் வாரி முடிக்கின்றான். இவர்களுக்கு என்ன இது பற்றி!

**************************

ஜெயா டிவி மாலை செய்தி:

கோவையை சேர்ந்த ஒரு அபலை பெண்ணை மூண்றாம் முறையாக முருகன் திருமணம் செய்து கொண்டிருப்பதாகவும், அதற்கு மைனாரிட்டி திமுக அரசு பக்க பலமாக இருப்பதாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டின் கலாச்சாரம் இந்த மைனாரிட்டி திமுக அரசில் இப்படி காற்றில் பறந்து கொண்டிருக்கின்றது. கூறை ஏறி கோழி பிடிக்க முடியாத மைனாரிட்டி மைனர் கருனாநிதி வானம் ஏறி வைகுண்டம் போக போகிறாரா? (ஏதாவது ஒரு பழமொழி சொல்லியே ஆக வேண்டும்) இதே தானை தலைவி என்னுடைய ஆட்சியில் எந்த ஒரு பெண்ணுக்காவது திருமணம் ஆனதுண்டா? அந்த அளவு கட்டு பாட்டுடன் நாங்கள் கண்ணியத்துடன் நடந்து கொண்டோம். இன்னும் சொல்ல போனால் கல்யாணம் ஆன பெண்களை கூட புருஷனிடம் அனுப்பாமல் தோழி போல் காப்பாற்றும் பொற்கால ஆட்சியல்லவா நடத்தினோம்.


*****************

சிவசங்கர் மேனன் அறிக்கை:

எண்டே குருவாயூரப்பா! இதனால் நாட்டின் பாதுகாப்புக்கு எந்த வித அச்சுருத்தலும் இல்லை. முருகனின் ஹெல்த் பாதுகாப்புக்கு உள்துறை அமைச்சகமே பொறுப்பு.

*************

மத்திய அரசின் நிருபமா ராவ்:

நிலைமையை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகின்றது.

*****************

மதிமுக வைக்கோ:

தேம்ஸ் நதிக்கரையில் டும்பாக்கோ டுபாக்கோ என்னும் கிரெக்க கடவுள் 36000 திருமணம் செய்து கொண்டதாக சிந்து சமவெளி நாகரீக வரலாற்று பதிவே மெஸபடோமியா கல்வெட்டில் இருக்கின்றது . இனி ஒரு மலையாளியும் பழனிக்கு வரக்கூடாது. வந்தால் பழனி எல்லையில் தடுப்போம். கொக்கரகோ கும்மாங்கோ.

***************

டாக்டர் அன்புமணி:

அவர் எத்தனை திருமணம் செய்து கிட்டாலும் கவலை இல்லை. ஆனால் அவர் கோவில்களில் அவர் மது அருந்துவதோ அல்லது தம் அடிப்பது போல சிலை வைத்தால் நாங்க கடுமையா எதிர்ப்போம். ஏன்னா அது உடல் நலத்துக்கு தீங்கு. தவிர முருகன் பிரபலமானவர். அவரை பார்த்து அவர் பக்தர்களும் தம் அடிப்பாங்க. அதுக்கு பதிலா அபினோ, கொக்கய்னோ வாயிலே சிக்லெட் மாதிரி போட்டு அடக்கி கிட்டா ஒன்னும் சொல்ல மாட்டோம். அதை மீறி நடந்தா நான் ஒன்னும் செய்ய மாட்டேன். எங்க தொண்டர்கள் முருகன் கோவில்ல நுழைந்து உண்டியல் பெட்டிய தூக்கிகிட்டு ஓடும் போராட்டம் நடத்துவாங்க!

பொதுமக்கள்:

நல்லவேளை அந்த பெண்மனி இப்படி சொன்னது முருகனுக்கு தெரியாது. அடுத்து கலைஞருக்கும் எனக்கும் கல்யாணம் நடந்துச்சுன்னு சொல்லாம இருந்துச்சே. சொல்லியிருந்தா என்ன ஆயிருக்கும். அந்த பெண்மனிக்கு வேற இரண்டு பையன் இருக்காங்கலாம்! தமிழகத்தை கடவுள் தான் காப்பாத்தினாரு!

குறிப்பு: மக்கா! இன்னும் கனிமொழி, திருமா, ராம் சேனா தலைவர், வீரமணி கருத்துகள் எல்லாம் இருக்கு. அதை எல்லாம் நீங்க பின்னூட்டத்திலே சொல்லிடுங்க எனக்கு நேரமில்லை!

13 comments:

 1. //இன்று மதியம் எதேற்சையாக ரிமோட் மேலே உட்காந்து விடவே நடிகை லட்சுமியின் கதை அல்ல நிஜம் பார்த்து தொலைய நேரிட்டது.//
  அவ்வை சண்முகி ஜானகியை ரிமோட்டின் மேல் வைத்து பாண்டியின் நேர்காணல் கிரேசி மோகனுடன் வந்தது போல ஒரு ஃபீலிங்.

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

  ReplyDelete
 2. முருகா..

  இப்படியெல்லாமா அரை லூஸுக நாட்டுல இருக்குதுக..!

  ReplyDelete
 3. Idhoda re-telecast paakanume.... kalaka povadhu yaaru pakaradhoda idhu than comedy ah irukum pola...

  ReplyDelete
 4. //தமிழகத்தை கடவுள் தான் காப்பாத்தினாரு!//

  படிக்கிறவங்களையும்தான்... இந்தகொடுமையெல்லாம் வேற நடக்குதுங்களா?

  அப்பறம் ரிமோட் என்னாச்சுன்னு சொல்லவேயில்லைங்களே....

  ReplyDelete
 5. http://tamil.techsatish.net/file/kathai-alla-nijam-apr-06/

  இந்த உரலில் அந்த நிகழ்ச்சியை பார்க்கலாம். பயங்கர காமெடி பீஸ்.

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

  ReplyDelete
 6. //கொக்கரகோ கும்மாங்கோ.//
  அபி அப்பா சேனலில் 'என் உச்சி மண்டையில்...'
  என்ற காமெடி நிகழ்ச்சி படித்து, தமிழக மக்கள்
  மண்டையில் 'சுர்ர்ர்ர்ர்ர்'ருனு ஏறிப் போய்
  கிடப்பதால், தமிழகமே பதட்டமாயிருக்கிறது.
  (காமெடின்னா காமெடிதான்.)

  ReplyDelete
 7. இதெல்லாம் பாக்றதே இல்ல. யாரு time அ waste பண்ணுவ. மொத்ததில ஒரு காமெடி ஷோ பாத்து இருக்கீங்க. என்ஜாய், அடுத்து பாட்டு " உன் குத்தமா என் குத்தமா தானே ? " hahahahaha

  ReplyDelete
 8. அபி அப்பா இதை எதேச்சையா எனக்கும் பார்க்கும் அதிர்ஷ்டம் (!) கிடைத்தது.
  எந்த உலகத்துல தான் நாம் இருக்கோம்னு தெரியவில்லை!

  ReplyDelete
 9. Nandri Ragavan... Jus nw ckd the videos... Sema comedy...

  ReplyDelete
 10. ஹா ஹா
  இம்புட்டு நடந்திருக்கா!
  :)))))))))))

  ReplyDelete
 11. இதன் ரெண்டாம் பாகம்தான் பார்க்க நேரிட்டது.
  “அதென்ன ஒன்பது நவபாஷாணம்?” நல்லா சிரிச்சேன்.
  போகிற போக்கைப் பார்த்தால் தமிழக மக்களை கொதிக்கிற பாயசத்தை ஊத்தி குளிப்பாட்டிவிடுவார்கள் போல. அப்போதும் நம் மக்களுக்கு சொரணையே இருக்காது.

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))