பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

June 24, 2010

ராமனாதனுக்கு விரல் வலிக்குதாம்!!!!

நேற்றைய ஜுரம் கொஞ்சம் குறைந்து இரவு தூக்கமும் இல்லாமல் காலை ஆறு மணிக்கு எழுந்து வீட்டின் வாசல் மதில் சுவற்றில் கைவைத்து என்னை ஆசுவாசப்படுத்திக்கும் போது எதிர் வீட்டு ராமனாதன் ஹிண்டு பேப்பரை வச்சுகிட்டு அவர் வீட்டு வாசல்ல இருந்து "என்ன ஓய் உம்ம கட்சி மாநாடு பிரமாதம் போலிருக்கே, இன்னும் போகலையா?"ன்னு கேட்ட போது செம எரிச்சலா வந்துச்சு.

இது என்ன கட்சி மாநாடான்னு கோவம் கூட வந்தது. அந்த கோவம் போகும் முன்னமே அடுத்து ஒரு மெசேஜ். திறந்து பார்த்தவுடன் "ஜூன் 23 முதல் கேவையில் செம்மொழி மாநாடு நடைபெறுகின்றது. இந்த செய்தியை 15 பேருக்கு, என்னையும் உட்பட அனுப்பினால் அடுத்த ஐந்து நிமிடத்தில் உங்க கிரடிட்டில் 99 ரூபாய் ஏறிவிடும்". வாய்யா ராமனாதா உமக்காகத்தான் எந்த புண்ணியவானோ இதை எனக்கு அனுப்பியிருக்கான் என நினைத்து கொண்டே "ராமனாதா சேதி தெரியுமா, இங்க வாய்யா. இந்த சேதிய பாரு. எனக்கு ராத்திரி வந்துச்சு இந்த மெசேஜ். பதினைஞ்சு பேருக்கு அனுப்பினேன். பின்ன மறந்தே போயிட்டேன். இப்ப பார்த்தா 99 ரூபாய் கிரடிட் ஆகியிருக்கு"ன்னு சொன்னதை ராமனாதன் கொஞ்சமும் நம்பாம "எங்க உன் பேலன்ஸ் காமி"ன்னு சொன்ன போது அதில் சரியா 111 ரூபாய் இருந்துச்சு. அப்பவே சிம்பாலிக்கா ராமனாதன் புரிஞ்சு கிட்டு என் கூட விளையாடாம இருந்திருக்கனும். ஏன்னா நான் ராத்திரி தான் 100 ரூபாய் போட்டு இருந்தேன். ஃபுல் டாக் டைம் ஆஃப்பர்ல.

அப்பவும் ராமனாதனுக்கு சந்தேகம். "சரிய்யா நீ எனக்கு அதை அனுப்பு. நான் பதினைச்சு பேருக்கு அனுப்பறேன். ஆனா எனக்கு 99 ரூபாய் கிரடிட் ஆகலைன்னா நீ தான் எனக்கு 99 ரூபாய் தரனும் சரியா?ன்னு கேட்க நான் கொஞ்சம் ஜெர்க் ஆகி பின்னே சுதாரிச்சுகிட்டு ஓக்கே சொல்லிட்டேன். பின்னே அதை அனுப்பி விட்டேன்.

பின்னே தெரு முனை கடைக்கு பேப்பர் வாங்க போன போது எனக்கு மெசேஜ் வந்தது. அதாவது ராமனாதனுக்கு நான் அனுப்பிய அதே மெசேஜ். அதாவது விளையாட்டு விதிப்படி மெசேஜ் அனுப்பினவங்களுக்கும் அனுப்பிட்டாராமாம்.

கொஞ்ச நேரம் யோசிச்சு பார்த்தேன். ராமனாதன் இப்படி திடீர்ன்னு ஏமாறும் பேர்வழி இல்லைன்னு எனக்கு நல்லா தெரியும். நிச்சயமா அது எவனோ செய்யும் விளையாட்டுன்னு அவருக்கு நல்லா தெரிஞ்சு இருக்கும். அவரா இப்படி பதினைஞ்சு பேருக்கு மெசேஜ் அனுப்புவாரு? எங்கயோ இடிக்குதேன்னு யோசிச்சுகிட்டு இருக்கும் போது தான் அவர் என் கிட்ட போட்ட டீல் நியாபகம் வந்துச்சு. அதாவது நான் இப்ப போகும் போது "யோவ் நீ சொன்ன மாதிரி அனுப்பிட்டேன். இது வரை 99 ரூபாய் கிரடிட் ஆகலை அதனால நீ கொடு"ன்னு கேட்க போகின்றார் என்பது நிச்சயமாக தெரிந்தது. அதாவது எனக்கு மட்டும் அனுப்பிட்டு இந்த தில்லாலங்கடி செய்ய போகிறார்.

உடனே நான் அதே கடையில் ராமனாதன் நம்பரை சொல்லி ஒரு பத்து ரூபாய்க்கு ஈ.சி பண்ணி விட சொன்னேன் ராமனாதனின் கடை அக்கவுண்டில் இருந்து.ராமனாதன் என் கிட்ட போன் கார்டு வாங்க மாட்டாரேன்னு கடைகாரரும் அனுப்பினார். அது ஆறு ரூபாய் அவர் போனில் கிரடிட் ஏறிடுச்சு. பின்னே அதே பெட்டிகடைகாரர் நம்பர் வாங்கி "அய்யா நீங்க பதினைந்து பேருக்கு முழுமையாக அனுப்பாமல் சிலருக்கு மாத்திரமே இந்த அரைமணி நேரத்தில் அனுப்பியுள்ளதாக எங்கள் கணினி தெரிவிப்பதால் ஆறுதல் பணமாக பத்து ரூபாய்க்கான டாக் டைம்க்கு மட்டும் கிரடிட் செய்துள்ளோம். தங்கள் ஆதரவுக்கு நன்றி"ன்னு ஒரெ மெசேஜும் தட்டி விட்டுட்டு வந்துட்டேன்.

நான் வீடு வரும் போது ராமனாதன் " ஓய் சேதி தெரியுமா? நீர் சொன்னது உண்மை தான் போலருக்கு. எனக்கு 99 ரூபாய் வந்துடுச்சு. நான் கூட உனக்கு மெசேஜ் அனுப்பி இருந்தேனே. அதன் அஞ்சு நிமிஷத்துல எனக்கு 99 ரூபாய் கிரடிட் ஆகிடுச்சு"ன்னு சொன்னாரு. எனக்கு அதிர்ச்சியும் ஆச்சர்யமும் ஒரெ நேரத்திலே வந்தாலும் கொஞ்சமும் என் முகத்திலே காமிச்சுக்கலை. நான் அனுப்பினதோ பத்து ரூபாய். இவர் சொல்வதோ 99 ரூபாய். சரி இவரும் விளையாட ஆரம்பிச்சுட்டார். சரி இன்னிக்கு பொழுது நமக்கு ராமனாதன் கூடத்தான் என நினைத்து கொண்டே வீட்டுக்கு வந்து குளித்துவிட்டு மொட்டை மாடிக்கு வந்த போது அவர் அவருடைய வீட்டின் மாடியிலே இருந்து இரண்டு கட்டை விரலாலும் சர சரன்னு மெசேஜ் அனுப்புவது தெரிந்தது.

பின்னே காலை டிபன் முடிக்கும் போது ராதா வந்தான். விஷயத்தை சொன்னேன். ராதாவுக்கோ ராமனாதனை பார்த்தாலே காரணம் இல்லாம பத்திக்கும். இதை வேற சொல்லிட்டனா? விடுவானா அவன். "டேய் மாப்ள வாடா அந்த பெட்டிகடைக்கு"ன்னு கூட்டிகிட்டு போனான்.

"டேய் அவரு உன்னை போட்டு வாங்குறார். நிச்சயமா மீதி 14 பேருக்கு அனுப்பியிருப்பார். ஆனா உனக்கு அனுப்பியிருக்க மாட்டார். அதனால இன்னும் ஒரு பத்து ரூபாய் ஈ.சி பண்ணுவோம்டா. அதன் பின்னே நான் கடைகாரர் போன்ல இருந்து மெசேஜ் பண்றேன்"ன்னு சொன்னான்.

அந்த பத்து ரூபாயை ராமனாதனுக்கு ஏத்தி விட்டுட்டு "அய்யா, எங்கள் கணினி பதிவின் படி உங்களுக்கு மெசேஜ் அனுப்பின நபருக்கு நீங்கள் அனுப்பவில்லை என தெரிகின்றது. அதனால் 99 ரூபாய் அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். ஆனால் ஆறுதலாக பத்து ரூபாய் அனுப்பியுள்ளோம்" என மெசேஜ் அனுப்பினான்.

திரும்பவும் எனக்கு ராமனாதனிடம் இருந்து எனக்கு அதே மெசேஜ் வந்தது. எத்தனை பேருக்கு அனுப்பினார்ன்னு தெரியலை. திரும்ப வீட்டுக்கு வரும் போதும் அவர் மொட்டை மாடியிலே நின்னு கட்டைவிரல் தேய தேய அனுப்பிகிட்டு இருந்தார்.

மாலை என்னை பார்க்கும் போது கோவமா முகத்தை திருப்பிகிட்டு போனார்.ஏன்னு தெரியலை.வாழ்க செம்மொழி மாநாடு!

16 comments:

 1. இது யார் கண்டுபிடிச்ச விளையாட்டோ
  தெரியல; ஆனால், அதை வச்சி நீங்க
  விளையாடுற விளையாட்டு இருக்கே,
  அடேங்க(அபிஅ)ப்பா!

  ReplyDelete
 2. ஒரு அப்பாவிய உசுபேத்தி விட்டததுல என்னா சந்தோசம்.....

  ReplyDelete
 3. ஒரு அப்பாவிய உசுபேத்தி விட்டததுல என்னா சந்தோசம்.....

  ReplyDelete
 4. ஒரு அப்பாவிய உசுபேத்தி விட்டததுல என்னா சந்தோசம்.....

  ReplyDelete
 5. Manuzhan bayangara confuse aayiruparu.... Idha padikum bothu, dubai la public place ph no ezhudhi vachutu unga kita orutharu kazhta pattare avaruthan niyabagathu vararu....

  ReplyDelete
 6. மைக் டெஸ்டிங்!!! 1 2 3

  ReplyDelete
 7. எனகென்னவோ இது உங்க தலைவர் விளையாடுற வெள்ளாட்டு மாதிரியே இருக்கு!!

  ReplyDelete
 8. அட ராமா......

  நான் என்னவோ நட்டுவின் ஃப்ரெண்ட் ராமநாதனுக்கு ஸ்லேட்டுலே எழுதி எழுதிக் கைவிரல் வலிக்குதுன்னு இருந்தேன்!!!

  ReplyDelete
 9. //"சரிய்யா நீ எனக்கு அதை அனுப்பு. நான் பதினைச்சு பேருக்கு அனுப்பறேன். ஆனா எனக்கு 99 ரூபாய் கிரடிட் ஆகலைன்னா நீ தான் எனக்கு 99 ரூபாய் தரனும் சரியா?ன்னு கேட்க //

  ஹா ஹா ஹா... இதான் சார் எங்க ஊர்ல சொந்த செலவுல சூனியம் வெசுக்கறதுன்னு சொல்லுவாங்க... ஹையோ ஹையோ...

  ReplyDelete
 10. //ஆறுதல் பணமாக பத்து ரூபாய்க்கான டாக் டைம்க்கு மட்டும் கிரடிட் செய்துள்ளோம். தங்கள் ஆதரவுக்கு நன்றி"ன்னு ஒரெ மெசேஜும் தட்டி விட்டுட்டு வந்துட்டேன்.//

  ஆஹா... நீங்க பயங்கரமான ஆளு தாங்க... என்னை மாதிரி அப்பாவி எல்லாம் இல்ல... ஆனாலும் சூப்பர் ஐடியா தான்

  ReplyDelete
 11. //எனக்கு அதிர்ச்சியும் ஆச்சர்யமும் ஒரெ நேரத்திலே வந்தாலும் கொஞ்சமும் என் முகத்திலே காமிச்சுக்கலை//

  "......... தேள் கொட்டினாப்"ல சொன்னா சரியா இருக்குமோ... ஹி ஹி ஹி .... ஆனாலும் அந்த ராமநாதன் சார் பாவம் தான்... நல்ல வேளை நான் உங்க பக்கத்துக்கு வீட்டுல இல்லை...

  ReplyDelete
 12. <a href="http://vivasaayi.blogspot.com/2010/06/june-28-2010.html>போன வாரம் சிறந்த பதிவு என்பார்வையில்(சிபஎபா)</a>, இந்த இடுகைய சேர்த்திருக்கேன்.

  ReplyDelete
 13. கலக்குறேள் போங்கோ

  ReplyDelete
 14. // கோவமா முகத்தை திருப்பிகிட்டு போனார்.ஏன்னு தெரியலை.//

  இது வேறயா:)?

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))