பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

December 26, 2010

முக்கி முக்கி முன்னூறு பதிவும், ஐந்தாம் ஆண்டு ஆரம்ப விழாவும்!!!

இதோ இப்போ ஆரம்பிச்ச மாதிரி இருக்கு. என் வலைப்பூவுக்கு ஐந்தாம் ஆண்டு ஆரம்பம் இன்று. மிக்க சந்தோஷம். ஏதோ முக்கி முக்கி முன்னூறு பதிவிட்டாகி விட்டது. இதோ நீங்கள் படித்து கொண்டிருப்பது முன்னூறாவது பதிவு. ஐந்தாம் ஆண்டு விழா என்பதால் கூட்டிப்பார்த்தேன். அட! ஆச்சரியம் சரியாக 300! உங்கள் அனைவருக்கும் என் அன்பான நன்றிகள்!

*************

இன்று நான் ஈரோடு சங்கமம் நிகழ்சிக்கு போயிருக்க வேண்டியவன். வேறு ஒரு அவசர வேலை வந்துவிட்டமையால் போக முடியவில்லை. என் நினைப்பு முழுவதும் அங்கயே இருந்தது. இருபது நாட்கள் முன்னதாகவே அபிஅம்மாவிடம் நான் ஈரோடு போக வேண்டி பர்மிஷன் கேட்டபோது "ஏன்?, என்றைக்கு?"ன்னு கேட்டாங்க. டிசம்பர் 26ம் தேதி என சொன்ன போது "அடடே அன்னைக்கு தானே உங்க பிளாக் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள்"ன்னு சொன்னாங்க. எனக்கு எதிரிகள் வெளியில் இல்லை. ஐந்தாம் ஆண்டு ஆரம்பநாள் கொண்டாட்டம்னு அழகா சொன்னா என்னா குறைந்தா போயிடும். விட்டா என் பிளாக்குக்கு காரியம் செஞ்சிடுவாங்க போலிருக்கு.

"இப்போ எதுக்கு அதுக்கு எல்லாம் போகனும்?"ன்னு சொன்ன போது வழக்கம் போல பொய் வரிசையா சொல்லிகிட்டே இருந்தேன். யோசிச்சு சொன்னா தான் எனக்கு பொய் உடான்ஸ் ஆகிடும். யோசிக்காம சொன்னா சும்மா டான்ஸ் ஆடும்.

"அதாவது நான் ஒரு மூத்த பதிவர் இல்லியா, எனக்கு பாராட்டு விழா நடத்த தான் எல்லா பதிவர்களும் வர்ராங்க. அதான் கதிர் என்னை அங்க ஒரு உதாரணபுருஷனா.. சாரி உதாரண பதிவரா நிக்க வச்சு புது பதிவர்களுக்கு பாடம் எடுக்க போராரு"

எனக்கு தானே தெரியும். நிக்க வச்சு "இந்த பாருங்க மக்கா, அஞ்சு வருஷம் ஆகியும் பெரிசா எதும் முன்னேற்றம் இல்லை. இவரு போல இல்லாம நல்லா எழுதனும்"ன்னு உதாரணம் காமிச்சு பேசுவார்ன்னு:-(

"சரி உங்களை கூப்பிட்டு பாராட்டு விழா நடத்தினா என்ன குடுப்பாங்க?"

கொஞ்சம் கூட யோசிக்காமல் சொன்னேன். "பொற் கிழிதான்", வர்ரேன்னு சொல்லிட்டு வராம போனா கிழி கிழின்னு கிழிப்பாருன்னு உங்களுக்கே தெரியும். கல்யாண பரிசு பைரவன் மாதிரி ஈரோட்டில் இருந்து வரும் போது ஒரு மாலை வாங்கிகிட்டு வரவேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டேன்.

இயற்கை ராஜிகிட்டே கேட்டுகிட்டேன். வந்தா சோறு போடுவீங்களா?ன்னு. முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமைன்னு பதில் வந்தது. ச்சே மத்திய அரசு ரொம்ப கெடுத்து வச்சிருக்கு எல்லாரையும்.

இத்தனை முஸ்தீபுகள் நான் செஞ்சாலே அதுக்கு போக முடியாம போயிடும் என்பதுக்கு இதும் ஒரு உதாரணம். ஒரு நல்ல நிகழ்சியை மிஸ் பண்ணிட்டேன்.அடுத்த தடவை.. ம் சொல்ல மாட்டேன்.

****************

வழக்கம் போல மயிலாடுதுறையில் அரசாங்க பொது மருத்துவமனை இரண்டாம் முறையாக , "முறையாக" அமைச்சர் பெருமக்களால் திறந்து வைக்கப்பட்டது.அமைச்சர்களே உங்களுக்கு தான் தெரியுமே எங்களை பற்றி, இனிமேலாவது அடிக்கல் நாட்டும் போதே திறப்புவிழா கல்வெட்டையும் திறந்து விடுங்கள். மயிலாடுதுறை ரயிலாக இருந்தாலும் சரி, பாலமாக இருந்தாலும் சரி, மருத்துவமனையாக இருந்தாலும் சரி, கட்டி முடித்த பின் உடனே திறக்காமல் அமைச்சருக்காக வெயிட்டிங் என்கிற சாக்கு போக்கு எல்லாம் எங்க கிட்டே வேண்டாம். அப்படி இல்லாவிட்டால் 29.12.2010 ஜூவியில் 29ம் பக்கத்தில் வந்த மாதிரி செய்தி போடுவாங்க.ஜாக்கிரதை ஆமாம்.

****************


எங்கள் பள்ளி தி.ப.தி.அர. தேசிய மேல்நிலைப்பள்ளி 55000 சதுர அடியில் சுமார் ஆறு கோடி மதிப்பீட்டில் இப்போது இருப்பதை இடித்துவிட்டு புதிதாக கட்டப்பட இருக்கின்றது. அது பற்றிய மேலதிக விபரங்கள் எங்க பள்ளியின் "தாயின் புன்னகை" வலைப்பூவில் பார்க்கவும். அதன் முன்னர் அபிஅப்பாவின் வலைப்பூவில் கட்டி முடிக்க இருக்கும் பள்ளிக்கூடத்தின் படம் வெளியிடுவதில் எல்லையில்லா மகிழ்சி!

***************

கடந்த ஒரு வாரமாக எனக்கு தமிழ்மணம் திறக்கவேயில்லை. இது நல்லதுக்கா கெட்டதுக்கான்னு தெரியலை. ஆனாலும் தமிழ்மணம் இல்லைன்னா கைநடுக்கம் அதிகம் ஆகுது என்பதும் உண்மை தான்.

************

வலைப்பூ ஆரம்பித்ததில் இருந்து இந்த வருசம் மிகக்குறைந்த அளவிலேயே பதிவுகள் இட்டுள்ளேன். என் அலுவலகத்தில் என் மேசையில் என் நாற்காலியில் அடக்கமா உட்காந்துகிட்டு வஞ்சனையில்லாம பதிவு போடும் சுகம் ஆஹா ஓஹோ தான். "என்னங்க பசங்க ஸ்கூல் பீஸ் கட்டிட்டு வாங்க, என்னங்க ஈ பி பணம் கட்டிட்டு வாங்க, என்னங்க பாலு வீட்டு கல்யாணம் விசாரிச்சுட்டு வாங்க தொல்லைகளுக்கு நடுவே என் எழுத்துப்பணி(????) தடை பட்டுப்போவது உண்மையோ உண்மை. எதிர்வரும் 2011 (கூட்டு எண் 4, என் பிறந்த தேதி கூட்டு எண் 4 ஆகா சூப்பர்.. பகுத்து அறிந்த விசயம் ) எனக்கு பிரைட்டா இருக்கும் என நாழியூர் காராயணன் மீது சத்தியமாக நம்புகிறேன்.அடிக்கடி இனிமேல் எழுத முயற்சிப்பேன். இது எச்சரிக்கை:-)


****************

27 comments:

 1. வாழ்த்துக்கள்... எல்லாத்துக்கும்..

  சீமாச்சு...

  ReplyDelete
 2. வாழ்த்துக்கள் அண்ணா

  ReplyDelete
 3. ஐந்தின் ஆரம்பத்துக்கும் முன்னூறின் நிறைவுக்கும் வாழ்த்துக்கள்:)!

  ReplyDelete
 4. புது வருட வாழ்த்துகள்..!!

  ReplyDelete
 5. ஐந்தாம் வருடத் துவக்கத்திற்கும் 300 இடுகைகள் இட்டதிற்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. Vaaazhththukkal! Postin last line konjam bayamaave irukku.
  Shobha

  ReplyDelete
 7. வாழ்த்துக்கள் தல

  ReplyDelete
 8. வாழ்த்துக்கள் முன்னூறுக்கும்... ஐந்துக்கும்...
  தொடருங்கள்... தொடரட்டும்.

  ReplyDelete
 9. வாழ்த்துகள் அண்ணா..! அஞ்சு வருஷத்துல 300 பதிவுன்றது ரொம்பக் கம்மி..! 1500 பதிவுகள்ன்னு இருந்திருக்கணும்..! இனியாவது சுறுசுறுப்பா செயல்படுங்க..!

  ReplyDelete
 10. ஐந்தாவது ஆண்டிற்கும் 300-வது பதிவிற்கும் வாழ்த்துக்கள் நண்பரே

  ReplyDelete
 11. Vazhthukal Anna!!! Pona varushathula Anga anga thodarum potu, thodaramaley irukura post ah ellam intha varushamavathu thodarntha konjam nalla irukum...

  ReplyDelete
 12. முக்காமலே இன்னும் பல்லாண்டு, பல நூறு பதிவுகள் எழுத எனது மனமார்ந்த வாழ்த்துகள்!

  ReplyDelete
 13. வாழ்த்துக்கள் ஈரோடு வந்து இருந்தால் நிச்சயம் சந்தித்து இருக்கலாம்..300க்கு வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 14. மனமார்ந்த வாழ்த்துகள்! தொடரட்டும்
  இதையும் படிச்சி பாருங்க

  ஈழத்தமிழர்களின் துயர் நீக்கும் தூயவர்

  ReplyDelete
 15. வாழ்த்துக்கள்.
  புதிய டெம்ப்ளேட் (இன்னைகித்தான் பாக்கறேன்) நன்றாக இருக்கு. நடத்துங்க.

  ReplyDelete
 16. //முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமைன்னு பதில் வந்தது. ச்சே மத்திய அரசு ரொம்ப கெடுத்து வச்சிருக்கு எல்லாரையும்//


  நகைச்சுவை பதிவிலும் அரசியலா?

  ReplyDelete
 17. வாழ்த்துக்கள் (ஐந்தாமாண்டு ஆரம்பம்)!
  வாழ்த்துக்கள் (முன்னூறாவது பதிவு)!
  ரெண்டுலயும் வாக்கு குத்தியாச்சு!

  ReplyDelete
 18. //வழக்கம் போல மயிலாடுதுறையில் அரசாங்க பொது மருத்துவமனை இரண்டாம் முறையாக , "முறையாக" அமைச்சர் பெருமக்களால் திறந்து வைக்கப்பட்டது//

  கின்னஸுக்கு அனுப்பினால் நிச்சயம் நம்ம
  ஊரு பெயரும் கின்னஸ் புக்ல வரும்!

  ReplyDelete
 19. வாழ்த்துகள் அபி அப்பா!

  ReplyDelete
 20. வாழ்த்துகள்! சித்தப்பு, பதிவு இல்லாட்டாவே பிரிஞ்ச மாதிரிதான் இருக்கு.

  ReplyDelete
 21. சீமாச்சு அண்ணன்,தம்பி அப்து, தம்பி கார்த்தி, ராமலெஷ்மி, சேலம் தேவா, முத்து,வெங்கட் நாகராஜ், ஷோபாக்கா, தம்பி கோபி,சே.குமார், தம்பி உனாதானா,பனித்துளிசங்கர், விஜயராகவன்,சேட்டை, ஜாக்கி,கக்கு மாணிக்கம், நிஜாமுதீன், பாரா, இளா, கேபிள், புவனேஸ்வரி எல்லோருக்கும் என் அன்பான நன்றிகள். தனித்தனியா நன்றி சொல்ல ஆசை தான். நெட் ரொம்ப சொதப்புது. அதனால மன்னிக்கவும். மிக்க நன்றிகள்!

  ReplyDelete
 22. 5ம் ஆண்டு & 300க்கு வாழ்த்துக்கள் ..............
  எழுத்துப்பணிக்கு தடை ஏற்படுத்தும் அபி-அம்மாவை வன்மையாக கண்டிக்கிறேன்......

  (கீழே உள்ள பகுதி அபி-அம்மாவிற்க்கு மட்டும்....... )
  ரொம்ப நல்ல காரியம் பண்ணுறீங்க....... மவராசியா இருக்கணும்........

  ReplyDelete
 23. Valthukal Nanbare,namma schoola patri ulla bloga kaamicaduku nanadri.

  jaffer ali

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))