இத்தனைக்கும் பின்னர் சீமானை பற்றி எழுதாவிட்டால் ஜென்ம சாபல்யம் கிடைக்காது. ஈழத்தமிழர்கள், இந்திய மீனவர்கள் பற்றி எல்லாம் கேள்வி கேட்க எங்கோ ஒரு மூலையில் இருந்து ஒரு குரல் கேட்கின்றதே என ஆர்வமாய் திரும்பிப்பார்த்த ஏராளமானவர்கள் இப்போது தேவையில்லாமல் ஒரு திருப்பலை வேஸ்ட் பண்ணிட்டோமேன்னு ஏமாந்து போய்விட்டனர். மீனவர்களை அடித்தால் மாணவர்களை அடிப்போம் என ரைமிங் டயலாக் எல்லாம் பின்னர், தான் எடுக்கப்போகும் படங்களுக்கு வசனம் எழுதிப்பழகவே எழுதிப்பார்த்தவை என்பது இப்போது புரிந்து போய்விட்டது. பேரன்பும் பெரும்கோபமும் கொண்டவன் "தம்பி" சீமான் என நினைத்திருந்தவர்கள் ஆசையில் மண். கொள்கை என்று பார்த்தால் தமிழ்நாட்டுக்கு நன்மை பயக்கும் கொள்கைகள் எதாவது இருக்கும் என நினைத்தவர்கள் இனி தன் கண்களுக்கு நிழலாக நெற்றியில் கைவைத்து வேறு திசையை பார்க்க தொடங்கும் அளவு சீமானின் கொள்கை கொடிகட்டி பறக்க தொடங்கிவிட்டது. ஏதோ புதிதாக சொல்ல வருகின்றார் என நினைத்தவர்கள் "சீ சீ இந்த பழம் அத்திப்பழம். புட்டு பார்த்தால் சொத்தை பழம்" என நினைக்கும் அளவுக்கு ஆன காரணம் என பார்த்தால் பெரும்கோபம் கொண்டவன் ஜெயாடிவியில் தன்னை அர்ப்பணித்து கொண்ட போது பெருங்காய டப்பா என ஆகிவிட்டது தெள்ளத்தெளிவாக தெரிந்து போனது.
1993ல் வைகோ திமுகவை விட்டு பிரிந்து போன போது, எட்டு மாவட்ட செயலாளர்கள் மற்றும் ஒட்டு மொத்த திமுகவே அவர் பின்னால் அணி திரண்டது. எப்போதும் போல இது போல எதாவது நடந்து திமுகவை அழித்து விடலாம் என கனவு கண்டு கொண்டிருந்த பத்திரிக்கைகள வைகோவை இதற்காக தன் அட்டைப்படங்களின் கதாநாயகனாக வரிந்து கட்டி போட்டு மதிமுக உதயமாவதற்கு ஆசி புரிந்தன. திமுகவில் ஒரு வார்டு செயயலர் ஆவது என்பதே குதிரைக்கொம்பான விஷயம். பின்னர் மாவட்ட பிரதிநிதி, நகர\ஒன்றிய கழக பொறுப்புகள், பின்னர் மாவட்ட கழக பொறுப்புகள் பின்னர் மாவட்ட செயலர், தலமைக்கழக பொதுக்குழு, செயற்குழு, உயர்மட்ட செயற்குழு என போவதுற்குள் வாய்லே நுரை தள்ளி விடும். இப்படிப்பட்ட எட்டு மாவட்ட செயலர்கள், பல நகர\ஒன்றிய செயலர்கள், பல பொதுக்குழு உறுப்பினர்கள் எல்லாவற்றுக்கும் மேலாக தொண்டர்கள் இப்படி வைக்கோ கூட்டிய முதல் மேடை குடவாசலுக்கு வந்து திரண்ட போது வைகோவுக்கு மதிமுக எனும் கட்சிக்கு திமுக போலவே அடிப்படை கட்டமைப்புடன் கூடிய ஒரு கட்சியை தோற்றுவிக்க மிகவும் சுலபமாக இருந்தது. கூட்டப்பட்ட கூட்டம் இல்லாமல் ஒரு வித எழுச்சியோடு தொண்டர்கள் கூட்டம் கூடியது. அப்படிப்பட்ட வைக்கோவை திமுகமற்றும் அதிமுகவுக்கு ஒரு மாற்று சக்தியாக மக்கள் நினைக்க தொடங்கிய காரணத்தால் தான் சந்தித்த முதல் தேர்தலில் மாக்சிஸ்டு கம்யூனிஸ்ட் தோழர்களோடு சேர்ந்து 13 சதம் வாக்குகள் அள்ளியது. அதே போலவே தொடர்ந்து அதிமுக, திமுகவுடன் கூட்டனி சேராமல் தனித்தன்மை காத்திருந்தால் அதன் வாக்கு விகிதம் தேர்தலுக்கு தேர்தல் அதிகரித்து ஒரு 18 சதம் நிரந்தர வாக்குகள் என்றாகி ஒரு 4 எம்பி, 15 எம் எல் ஏ என் தன் சொந்த காலில் தன் செல்வாக்குடன் இருந்து இன்றைக்கு மதிமுக ஒரு மாபெரும் சக்தியாக கூட இருந்து தொலைத்திருக்கும். ஆனால் அடுத்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டு சேர்ந்து தன் கட்சியை ஒன்பது சத வாக்குகளுக்கான கட்சியாக தேய்த்து கரைத்து பின்னர் எந்த கட்சியுடன் சண்டை இட்டு பிரிந்தாரோ அதே கட்சி கூட கூட்டு சேர்ந்து ஆறு சதமாக குறைந்து பின்னர் அதிமுகவுடன் சேர்ந்து இன்று மூன்று சதத்துக்கும் குறைந்து தன் கட்சி அங்கீகாரம் இழந்து இன்று பரிதாப வைக்கோவாகிப்போனார்.
இதே நிலை தான் இன்று விசயகாந்துக்கும். வைக்கோவிடம் என்ன எதிர்பார்த்து மக்கள் முதலில் சென்றனரோ அதே போலத்தான் விசயகாந்திடமும் சென்றனர். நேற்று வரை மக்களோடும் ஆண்டவனோடும் கூட்டு என முழங்கி இப்போது ஒரு ஒன்பது சதம் வாக்குகள் பரவலாக வைத்திருக்கும் அவர் தன் கொள்கை முடிவிலிருந்து மாறி இப்போது கூட்டனி குட்டைக்குள் வந்து விழுந்தாகிவிட்டது. இனி அதன் வளர்ச்சி என்பது ரிவர்ஸ் கீர் போட்டு வளர்ந்த வேகத்துக்கு சரியப்போகும் காட்சி கண் எதிரே தெரிகின்றது. விசயகாந்து தனித்து நின்றால் அந்த ஒன்பது சதம் என்பது 13 ஆகும். அடுத்த தேர்தல் வரை தாக்குபிடித்து நின்றால் அது இன்னும் ஒரு ஐந்து சதம் கூடும். ஆனால் கட்சியில் சேர்ந்து பலன் அறுவடை செய்ய துடிக்கும் அங்கிருக்கும் பழம்பெருச்சாளிகள் அவரை அந்த அளவு வைத்திருக்க மாட்டனர். அதனால் அந்த குடிவெள்ளியும் சாரி விடிவெள்ளியும் அம்பேல் தான்.
அந்த நேரத்தில் தான் "தம்பி" சீமான் வானத்தில் இருந்து குதித்து "நானே உங்களுக்காக ஆசீர்வாதிக்கப்பட்டு இறக்கிவிடப்பட்டிருக்கும் தேவ தூதுவன்" என குதித்த போது அனைவரும் ஒரு வித ஆர்வமுடன் அந்த பக்கம் பார்க்க தொடங்கினர். காங்கிரஸ் என்னும் கம்சனை ஒழிக்க வந்த கிருஷ்ண பரமாத்மா என அவரும் மேடை மீது உருமி அடிக்க அடிக்க வழக்கம் போல நம் வலைப்பதிவர்கள் தான் முதலில் அந்த உருமிக்கு ஆட ஆரம்பித்தனர். நம் சக வலைப்பதிவர்கள் ஏன் காங்கிரசை எதிர்க்க வேண்டும் என எதிர்கேள்வி எல்லாம் கேட்க மாட்டார்கள். ஏன் கருணாநிதியை எதிர்க்க வேண்டும் என கேள்வி கேட்க மாட்டார்கள். உன் கொள்கை என்ன என கேட்க மாட்டார்கள். "மாத்தி யோசி" என்கிற பார்முலாவுக்குள் தொபக்கடீர்ன்னு குதிப்பார்கள். மீனவ்ன் மாணவன் என வசனம் பேசிய சீமான் சிறைக்கு போகும் போது போது உருமியை வலைப்பதிவர்கள் கிட்டே கொடுத்து விட்டு போக சிறையில் இருந்து திரும்பிய சீமான் நேரே வீட்டுக்கு கூட போகாமல் ஜெயா டிவியில் போய் உட்கார அழுக்குப்படாத சட்டைக்கு சொந்தக்காரர் ரவிபெர்னார்டு "ஈழம் பற்றியது மட்டுமே தான் உங்கள் அரசியல் நிலைப்பாடு இருக்குமா அல்லது தமிழ்நாடு பற்றியும் யோசிப்பீர்களா" என கேட்டதற்கு "ஒரு ரூபாய் அரிசி நல்லா இல்ல. காங்கிரீட் வீடு எதற்கு இப்போது" என கூவ அதுவரை சீமான் கமான் கமான் என குதிரையை கூப்பிடுவது போல கூச்சலிட்டவர்கள் "ஆகா நாம் இது வரை கூப்பிட்டது குதிரையை அல்ல அது முகத்தில் இருக்கும் வெள்ளையை முகப்படாம் போட்டு மறைத்த கழுதை" என புரிந்து கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பிக்க அதுவரை "ஈழத்தமிழர் மேல் கருணையோடு பேசுகின்றார். பேசட்டும் இதும் இளங்கோவன் என்னும் அலப்பரை கொடுக்கும் குழந்தைக்கு பயம் காட்டும் பூச்சாண்டியாக பயன்படும்" என நினைத்தவர்கள் அவர் போய் சரணாகதி அடைந்த இடம் பார்த்து செய்வதறியாது போயினர். அதுவரை பூச்சாண்டியாக இருந்த சீமான் இளங்கோவன் போன்றவர்களுக்கு கிலுகிலுப்பையாகிப்போனார்.
ஒரு வடிவேலு நகைச்சுவை காட்சியில் ஒரு டீக்கடை வாசலில் பெரிய மீசை வைத்த வெள்ளை வேட்டி சட்டை நபரை ஒரு சின்ன பையன் மரியாதை இல்லாமல் பேசுவான். அங்கே இருக்கும் வடிவேலு அவனை துரத்தி போக காத்திருந்த ஆம்புலன்சில் வைத்து வடிவேலுவின் கிட்னி எடுக்கப்படும். திரும்ப வந்த வடிவேலு அந்த மீசை வைத்த பெரிய மனிதனுக்கும் அந்த கும்பல் ஏற்கனவே கிட்னி எடுத்த விஷயம் அறிந்து "ஏன்யா அதை அப்பவே சொல்ல கூடாதா" என கேட்க அவரோ "அவன் தான் என்னை கண்டபடி திட்டும் போதும் நானே பேசாம இருக்கன்ல. உனக்கு மட்டும் என்ன ரோசம் வேண்டி கிடக்கு. பேசாம இருக்க வேண்டியது தானே" என சொல்லுவார். ஆக சீமான் இப்போது மீசை வைத்த வைக்கோவுக்கு மானம் என்னும் கிட்னியை அதிமுக எடுத்து விட்ட நிலையில் அது தெரியாத வடிவேலு மாதிரி இப்போது அதிமுக ஆம்புலன்சில் கிட்னி ஆபரேஷனுக்காக மாட்டி இருக்கார் என்றே அனைவரும் அறிந்து கொண்டுள்ளனர். இங்கே உறுமி அடிக்கும் ஆட்கள் நாளை வேறு மாதிரி பேசுவாங்க என்பது சீமானுக்கு தெரியவில்லை. பாவம் தன் பலம் என்னவென்று தெரியாமல் ஆடிக்கொண்டு இருக்கின்றார். இதுதான் இந்த சினிமாகாரர்கள் பலரின் வீக் பாயிண்ட். தன்னை சுற்றி இருக்கும் ஜால்ரா கூட்டத்தினர் சொல்வது மாத்திரம் கேட்டு கேட்டு யதார்த்தத்தை அப்டேட் செய்து கொள்ளாமை. சீமானும் விதிவிலக்கு இல்லை இந்த விஷயத்தில். பேராவூரணியில் ஒரு கூட்டத்தில் "என்னை ஒரு நாள் முதல்வர் போல ஆக்கி காட்டுங்கள். நான் தமிழீழம் வாங்கி தருகின்றேன்" என முழங்குகின்றார். பாவம் அதன் பின்னர் தான் அதிமுகவை ஆதரிப்பதாக சொன்னார். இதுவே இப்போது சொல்லட்டும் அந்த வார்த்தையை... முடியாது. சொன்னால் அதிமுகவினர் காதை அறுத்து காக்காய்க்கு காலை டிபனாக போட்டுவிடுவர் என்பது சீமானுக்கு தெரியும்.
சீமானுக்கு 25000 பேர் சென்னை எம்ஜிஆர் நகரில் கூடினர் என்றெல்லாம் ஒரே பேச்சு. யாருக்கு கூட்டம் கூடாது? சீரணி அரங்கில் இதோ இன்று மாலை ஏசு வருகின்றார் என சொல்லும் அல்லேலுயா கும்பல் முதல் நித்யானந்தா வரை கூட்டம் தான் கூடும். அந்த புகழ் போதையில் மயங்கி முதல்வர் கனவு தேவையா? அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட எவனாவது சீமான் கட்சி ஆரம்பித்தால் பூத் கமிட்டிக்கு வருவானா? பிரச்சாரத்துக்கு போவானா? தன் கட்சியின் கொள்கை(?)யை விளக்கி தெருமுனை பிரச்சாரம் செய்வானா?
மொத்தம் 234 தொகுதி இருக்கின்றது. ஒரு தொகுதிக்கு 150 முதல் 175 பூத் வரை உண்டு. ஒரு ஒரு பூத்திலும் ஆண்கள் , பெண்கள் இருவருக்கும் தனி பூத் உண்டு. பூத்துக்கு வலது பக்கம் இடது பக்கம் என இரு இடங்கள் உண்டு. தன் கட்சியின் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் போட வைப்பது மட்டும் அல்ல எதிர்கட்சி கள்ள ஓட்டு போடாமல் இருக்கவும் அந்த ஏரியா ஆட்கள் பூத் கமிட்டியாக இருந்து செயல்பட வேண்டும். சும்மா நான் பாட்டுக்கு போய் ஓட்டு போடுவது அத்தனை சுலபம் இல்லை. என் வீட்டு விலாசம், அப்பா பெயர், என் வார்டு, என் வார்டுக்கு எந்த பூத், என் ஓட்டு வரிசை எண் என்ன இன்ன பிற செய்திகளை அடக்கிய ஒரு துண்டு பேப்பரை முதல் நாள் மாலை அந்த பகுதி பூத்கமிட்டி ஆட்கள் போய் வாக்காளரிடம் கொடுக்க வேண்டும். அந்த துண்டு சீட்டை பார்த்து தான் அந்த போலிங் ஆபீசர் உடனே வரிசை எண் பார்த்து "இதோ இவர் பெயர் ராமசாமி, அப்பா பெயர் குப்புசாமி, இவர் வீட்டு எண் 12, தெரு வாத்துகார தெரு, வார்டு எண் 32.. இதிலே ஆட்சேபனை இல்லை தானே" என அங்கு வரிசையாக இருக்கும் கட்சிகார பூத் கமிட்டி ஆட்களிடம் கேட்க இதிலே ஒரு கட்சிக்காரருக்கு சந்தேகம் வந்தாலும் "இல்லை இது ராமசாமி இல்லை. அவன் துபாய் போய் இருக்கான். அவன் வச்சிருக்கும் ஆவணம் பொய்" என ஆட்சேபனை செய்தால் பின்னர் அவனிடம் ஆபீசர் அவன் பக்கத்து வீட்டு பெயர் எல்லாம் கேட்பார். விசாரனை நடக்கும். ஆக கள்ள ஓட்டு தவிர்க்கப்படும். அந்த இடத்தில் உட்காந்து இருக்கும் பூத் கமிட்டிக்கு அந்த ஏரியா கட்சிகரர் ஆண், பெண் பூத்துக்கு இருவர், அந்த பூத்துக்கு வெளியே அதை ஒருங்கினைத்து உள்ளே அனுப்ப இருபக்கமும் குறைந்தது எட்டு பேர் ஆக ஒரு பூத்துக்கு பத்து முதல் பதினைந்து பேர். இதிலே உள்ளே இருப்பவன் டீ குடிக்க தம் அடிக்க வெளியே வரும் போது மாற்று ஆட்கள் இருவர் இதல்லாம் 200 பூத்துக்கும் சேர்த்து ஒரு தொகுதிக்கு 3000 பேர் வேண்டும். அதும் காசுக்கு விலை போகாத ஆட்கள். சம்பளத்துக்கு இதுக்கு எல்லாம் ஆள் வைக்க முடியாது. சீமானே, இதல்லாம் இருந்த வைக்கோவால் மூட எதும் முடியலை. அவர் கூட "நான் தான் அடுத்த முதல்வர்" என சொன்னதில்லை. சொல்லும் போதே அவருக்கு கூட சிரிப்பு வரும். ஆனால் இதை எல்லாம் கூச்சமில்லாமல் சொல்லும் விசயகாந்துக்கும் உங்களுக்கும் சினிமா என்கிற மோகத்தால் யதார்த்தம் கண்ணை மறைக்கின்றது என்பதை தவிர வேறு என்ன சொல்ல முடியும்?
பொதுவாகவே மார்கழி மாதம் டல் பிஸினஸ்.அதை நன்றாக பயன்படுத்திக்கொண்டது சீமானை வைத்து நம் ஜுனியர் விகடனும் இன்ன பிறவும். இதோ அடுத்த அடுத்த மாதம் தமிழக தேர்தல் வரப்போகின்றது. இனி சீமான் "திருப்பி அடிப்பேன்" கட்டுரைக்கு பின்னர் காலை உடைப்பேன் என கட்டுரை எழுதிக்கொண்டு எந்த பத்திரிக்கை வாசலுக்கு போனாலும் தேவர்மகன் சிவாஜி நாசரைசொன்னது போல "நீ சின்ன பய.. பேயாம இருக்கனும். பெரியவங்க பேசிகிட்டு இருக்கோம்ல" என தேர்தல் கட்டுரை எழுத போய்விடுவார்கள்.1993ல் வைக்கோவை தூக்காத தூக்கா இந்த ஜூவி எல்லாம்? ஆகவே சீமான் அவர்களே இனியாவது உங்க திரையுலக பணி பார்க்க போங்க. எதாவது சிங்கள நடிகைக்கு சான்ஸ் கொடுத்து கிட்டு இருங்க. நீங்க எதிர்க்கும் காங்கிரஸ்ல சேர வேண்டி ராகுல் கிட்டே போன விஜயை வைத்து படம் எடுத்து பிழைக்கும் வழியை பாருங்க. இதோ நீங்க அதிமுக பக்கம் நீங்க போகாத வரை உங்கள் குரலை வெறுத்து ஒதுக்காத மக்கள் இப்போது உங்களை காமடியன் ஆக்கிவிட்டதை உணருங்கள். பெஸ்ட் ஆஃப் லக்!!!
சீமான் ஒரு நடமாடும் பலகலைகழகம் என நினைத்தவர்கள் "சீமான் தோல்வியுற்றவர்கள் கூடும் ஒரு டுட்டோரியல் காலேஜ்" என்பதை புரிந்து கொண்டனர். சீமான் நூற்றுக்கு பூஜ்ஜியம் டுட்டோரியல் காலேஜ்!!!
கருத்து எதுவும் சொல்லமுடியாது. கலைஞரை எதிர்த்து எவ்ளோ ஓட்டு வாங்குகிறார் என்று பார்த்துவிட்டு சொல்றேன்
ReplyDeleteArasiyal vazhkaila idhellam sadharanampa...
ReplyDeleteஅபி அப்பா,
ReplyDeleteஉங்கள் தி.மு.க. கட்சி கரை வேட்டிக்காக சற்று அதிகமாகவே கூவுகிறீர்களோ என்றே கருதுகிறேன்.
தி.மு.க.வின் எதிர் கட்சிகள் ஒன்று சேர்ந்தால் உங்கள் கட்சிக்கு ஆபத்து என்ற உணர்வின் உந்துதலே இந்த கட்டுரைக்கு நோக்கமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
இனிய தைத்திருநாள் நாள் வாழ்த்துக்கள்.
padichchuten, evening delli poren, pmkitta ithapaththi kandippa pesaren...
ReplyDeleteநச் !
ReplyDeleteபலர் இன்னும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற ரீதியில் சீமானுக்கு சப்பைக்கட்டு கட்டுகிறார்கள்
ReplyDeleteஆமா...சீமான் யாரு?
ReplyDeleteகனிமொழிநாடாருக்குப் புது உறவா?
சாமர்த்தியமான ஆய்வு,
ReplyDeleteகீழிருந்து ஒரு கட்சியை கட்டுவதன் சிரமம், யதார்த்தம் குறித்த பார்வையில் அது பூத் கமிட்டிகளாக மட்டும் வெளிப்படுகிறது என்றால் ....
இப்போது கட்சி நிகழ்வுகள் கார்ப்பரேட் ஈவன்ட் மேனேஜ்மெண் போல மாறிவிட்டன. கொடி கட்டுவது, போஸ்டர் ஒட்டுவது, ஆள் சேகரிப்பது எல்லாம் காசு கொடுத்தால் பெறும் சேவைகளாக மாறிவிட்டன.
அதன்படி இதற்கு ஒரு பெரிய ஸ்பான்சர் கிடைத்தால் சீமானாலும் முடியும், இல்லை அபி அப்பா திமுகவிலிருந்து பிரிந்து சென்று ஆரம்பித்தாலும் முடியும்.
அடுத்து பூத் கமிட்டிக்கு 3000 ஆட்களை திரட்டுவதெல்லாம் பெரிய கட்சிகளுக்கே சாத்தியம் என்பதெல்லாம் தற்கால வணிக மேலாண்மையில் பெரிய விசயமே இல்லை. மேலதிகமாக பூத் கமிட்டியில் விலை போகாதவர் எவரும் இல்லை, இந்த சீரழிந்த நிலை தமிழக அரசியலில் நிலை கொண்டு நாளாகிறது. விலை அதிகம் கொடுப்பவனே அங்கு ராஜா. தி.மு.கவைக் கண்டு அம்மா அச்சப்படுவது இந்த விசயத்தில்தான்.
எனவே உங்கள் 'யதார்த்தமான' அரசியல் குறித்த ஆய்வு சில தொழில் நுட்பங்கள் பற்றிய அனுபவப் பார்வையாக இருக்கிறது. அரசியல் என்பது தொழில்நுட்பம் மட்டுமல்ல, அது மக்களுடன் இரத்தமும், சதையுமான கருத்துப்போராட்டம். அது குறித்த யதார்த்தத்தை அறிவதற்கு தி.மு.க அனுபவம் போதாது. ஏனெனில் தி.மு.க என்பது வசதி படைத்த தமிழர்கள் தமது சொத்துக்களை பெருக்குவதற்கும், காப்பாற்றுவதற்குமான செக்யூரிட்டி நிறுவனம்.
அரசியல் என்றாலே தேர்தல், தேர்தல் வெற்றிகளின் கணக்குகள், என்று பார்ப்பது கூட அந்த செக்யூரிட்டி பிசினஸ் மனநிலைதான் என்று தோன்றுகிறது. தேர்தல் வரும் போது இதை விரிவாக வினவில் எழுதுகிறோம்.
அந்த வகையில் எமது அரசியலுக்கு உங்களது ஆய்வுகள் நிச்சியம் பயன்படும். நன்றி.
சூப்பர். உபி அப்பா சாரி.. அபி அப்பா
ReplyDeleteநல்ல ஜால்ரா பதிவு. சீமான் போன தேர்தலில் கூட அதிமுக-வுக்கு ஆதரவாகதான் பேசினார்னு உமக்கு தெரியாதோ பாவம்.
http://www.youtube.com/watch?v=8EV85cY95zQ&feature=related
அப்போ எங்கே போனீங்க! ஈழ மக்களோட பிணவாடையில மயக்கம் வந்திருச்சோ!!??
http://www.anburaja.in/2011/01/blog-post_6363.html?spref=tw
ReplyDeletehello
ReplyDeletecan u add our link in your blog ?
www.thaynilam.com
Thanks for ur support
dont make our living as your politics, Promote Seeman & Vaiko, throw out the corrupted
ReplyDeleteசொரன கெட்ட ஜென்மங்களுக்கு காரணம் ஒன்னு கிடைச்சிருச்சி. சீமான் குரல் கொடுத்தப்ப ஒரு நாய் சேர்ந்து குரல் கொடுக்கல இப்ப கூட்டம் கூட்டமா குரைக்க ஆரம்பிச்சிடுச்சி. எல்லா தமிழ் நாயும் சீமானோடு சேர்ந்து குரல் கொடுத்து இருந்தால் சீமானுக்கு அ தி மு க வின் பலம் தேவை இருக்காது. இது தமிழ் நாய்களுக்கு புரிந்து இருந்தால் தமிழனுக்கு கருணாநிதி குடும்ப கோவணத்த துவைக்க வேண்டிய அவசியம் இருந்து இருக்காது.
ReplyDeleteWell said.
ReplyDeleteசூப்பர், சீமானிடம் ஜீரோ என்பதை இன்னொரு கோணத்தில் இருந்து அருமையா விளக்கி இருக்கீங்க.
ReplyDeleteஇன்னும் சீமானை பற்றி புரிந்து கொள்ளாமல் எதிர் பின்னூட்டம் போடுபவர்களை என்ன சொல்ல.
நான் வினவை வழிமொழிகிறேன்...(இதில் மட்டும்தான்)
ReplyDeleteநான் வினவை வழிமொழிகிறேன்...(இதில் மட்டும்தான்)
ReplyDeleteசீமானை திமுக உக்கு ஆதரவ பேச சொல்லலாம்
ReplyDeleteஆக பணம் இருந்தால் தான் இங்கே அரசியல் என்று சொல்ல வரிங்க! திமுக ஜெயிக்கும், காரணம் அவர்களிடம் பணபலம் இருக்கு என்று சொல்லுரிங்க.அது சரி இதில மக்களை பற்றி சிந்திச்சிங்களா? மக்களுக்காக அரசியலா இல்லை அரசியலுக்காக மக்களா? உங்களை பொறுத்தவரை சீமான் எதை செய்தாலும் தப்பாக தான் தெரியும். ஏன் அதிமுக வுடன் இணையாது தனித்து நின்றால் ஆதரவு கொடுப்பீர்களா? அப்படி தனித்து நின்றால் இன்னொரு விதமாக எழுதுவீர்கள்.ஏனென்றால் நீகள் ஒரு திமுக ஆதரவாளர் என்ற நிலையில் இருந்து எழுதுகிறீர்கள்.மக்களை பற்றி சிந்தியுங்கள்.திமுக காங்கிரசால் இன்னும் எத்தனை தமிழன் நாசமாவான் என்று சிந்தித்து எழுதுங்கள்,எத்தனை கோடிகள் சுருட்டலாம் என்று கேட்டு எழுதுங்கள்.காங்கிரஸ் என்ற தமிழின துரோகியை அளிபதர்க்கு சீமான் எடுத்த முடிவு ஏற்றுக்கொள்ளலாம்.ஏனெனில் வேறு வழி இல்லை.
ReplyDeleteநியாயமான பேச்சு அபிஅப்பா.வடிவேலு நகைச்சுவை சிரித்து மாளமுடியவில்லை. வடிவேலை விஞ்சும் வகையில் பலரும் வலையுலகில் இருக்கிறார்கள். மாட்டு ஐட்டத்தையும்,மனுசன் ஐட்டத்தையும் கலந்து கட்டி அடிவாங்கிக் கொடுக்காமல் ஓயமாட்டார்கள் போலிருக்கிறது.
ReplyDeleteவைகோ,சீமான் இருவரும் ஒப்பிடப்படுவதில் இந்த சுள்ளானுடனும் நம்மை ஒப்பிடுகிறார்களே என்று வைகோவும்,கோமாளி ராசாவுடன் ஒப்பிடுகி்றார்களே என்று சீமானும் அறை எடுத்து அழுவது வலைப்பதிவர்களுக்கு தெரியுமா என்பது தெரியவில்லை.
பதிவுக்கு நன்றி.
hmmm, una marree akaal irukum madum tamilan urupada mare than ,
ReplyDeleteyenthan epede arevu ilatha paratheseya irukangalo
neenga thaniya nilunga.....evvlo ottupoduvaanga nu paapom??????? jaldra yaaruku adikreenganu nallavae theriyuthu!!!!!!!
ReplyDeleteசீமான் நூத்துக்கு பூஜ்ஜியம் டுடோரியல் காலேஜ் இல்ல வெண்ணைகளா .... 124க்கு 23 ந்னு செவுள்ள அறையுற காலேஜ் .... வுழுந்துச்சா ஆப்பு ..... அண்னா ஆரம்பித்ததை தம்பி முடித்து வைப்பார்னு அன்னைக்கே சொன்னாரு. இப்போ மஞ்சள் துண்டு பகுத்தறிவாளர் மூடுவிழா செய்கிறார் ...திஹாரில் முடங்கிய கழகம் அண்ணன், தம்பி,மாமன், மச்சான், வைப்பு, துடுப்பால் உடைக்கப்படும் .... .. அழிக்கப்படும் .... ..... பாத்துரலாம்
ReplyDelete