பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

April 14, 2011

ராகுல்காந்தியின் இளைஞர் காங்கிரஸ் பாசறை திரும்பியது!


போர் போர் போர் என எக்காளமிட்ட நேரத்தில் தமிழ்நாட்டில் 15 லட்சம் பேர் இருக்கும் இளைஞர் காங்கிரசில் ராகுல் அவர்களுது கோஷ்டியில் இருந்த 15 லட்சம் பேரும் மெடிக்கல் லீவ் எடுத்துக்கொண்டு "காசாவது டேஷாவது" என வீர முழக்கம் இட்டு தன் தனது கட்சிக்கு சென்ற பின்னர்.... பின்னர்... பின்னர்... எனது மயிலாடுதுறை தம்பிக்கு நல்லான் பட்டினம் வாக்கு சாவடியில் ஒரு ஒரே ஒரு பூத் ஏஜண்ட் கூட இல்லைங்கோஓஓஓஓஒ....

இத்தனைக்கும் அந்த தொகுதி கடந்த 1947 முதலே பதட்டமான வாக்குச்சாவடின்னு பிரகடனப்படுத்தப்பட்டது. இப்பவும் தான். பூத்தின் இரண்டு பக்கமும் 200 அடி தூரத்துக்கு யாரும் வாக்கு சேகரிக்க கூடாது. சரி. ஆனா அதுக்காக 400, 800 அடி வரை எவனுமே இல்லை. ஏன்னா அங்க காங்கிரஸ் போட்டியிடுது.சரி அதுக்காக ஒரு பூத் ஏஜண்ட் கூடவா இருக்க மாட்டான்? சம்பத் முதல் அத்தனை திமுக காரனும் இருந்தான். அந்த பக்கம் பார்த்தால் தேமுதிக இல்லை. எவனுமே இல்லை. ஒன்லி பூத் ஏஜண்டாக தீவாளி என்கிற அதிமுக காரன் மட்டுமே. என்னடா தேர்தல் இது.

இதோ குடந்தை வேட்பாளர் இரண்டு பேருமே "குடந்தையை தலைநகராக்குவோம்" என சூளுரைத்து ஓட்டு வேட்டை ஆடும் நேரத்தில் இவன் எங்க வேட்பாளர் அழகா தேமுதிகவை விலைக்கு வாங்கி ஜெயிக்க போவதா ஒரே பேச்சு.

ஆனா மாயவரம் தலைநகரா ஆகாதா? பஸ்டாண்டு வராதா? பாதாள சாக்கடை அவுட்டு தானா? போங்கடா நீங்களும் உங்க அரசியலும்... மாயவரத்தில் நிற்கும் கோவி சேதுராமன் என்னும் பாஜக கட்சி வேட்பாளர் சொன்னாரு. மாயவரத்தை மாவட்ட தலைநகராக்குவேன் என. நான் ஓட்டு போட கிளம்பும் முன் ஸ்பீடா போன ஒரு குலாம் (காங்) சொன்னான். "அண்ணே தைரியமா போங்க, நம்ம ஆட்சி தான். ராஜ்குமாரு காசை அடிச்சு மினிஸ்டர் ஆகிடுவாரு" ... நான் போய் அதே கடுப்புடன் ஓட்டு போட்டேன்....யாருக்கு???????????

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

275x 234 = இப்புடீன்னு எல்லாம் கணக்கு போட்டா கூட 51000 பேர் தான் ஆகும் பூத் ஏஜண்ட்க்கு. ஆனாலும் ராகுலின் இளைஞர் காங்கிரசால் அதை கூட செய்ய முடியாட்டி அது இருந்தா என்ன அதை பெத்த ராகுல் வயித்துல பிரண்டை வச்சு கட்டினா என்ன?

*********************************

கரூர் ஜோதிமணின்னு ஒரு பொண்ணு. பாவமா இருக்கு அதை பார்த்தா. அதுக்கு விலாசமே ராகுல் தான். ராகுல் இல்லாட்டி அதுக்கு சீட் கிடைச்சிருக்காது. போவட்டும். அதல்லாம் தப்பே இல்லை. ஏதோ புத்திசாலித்தனம் டெஸ்ட்டுல தமிழ்நாட்டு லெவல்ல முதல் ரேங்கா வந்துச்சாம். போவட்டும் அதும் தப்பே இல்லை. அது ஒரு கடுதாசி போடுது. யாருக்கு? சீமானுக்கு. வக்காலி அவன் விடுவானா? இதாண்டா சாக்குன்னு வச்சு அதை தாளிச்சு தள்ளிட்டான். அதாவது அது லெட்டரு லொட்டரு போட்டிருக்காம். " அண்ணே அண்னே சிப்பாய் அண்ணே, எங்க ஊரு நல்ல ஊரு ... நீங்க வந்து பிரச்சாரம் பண்ணதீங்க அண்ணே"

ச்சே... சே சே அந்த சீமான் வறுத்து எடுப்பதே ராகுலையும் அவனை பெற்றெடுத்த தாயையும் தான். அந்த ராகுலின் நேரிடை சிஷ்யை ஜோதிமணி விடுத்த கடிதம் பாருங்க இப்படியாக. அந்த கடிதத்தை படிச்சு படிச்சு அவன் கிழிக்கிறான். தான் ஒரு இயக்கத்தில் இருக்கிறோம். அதன் தலைவரை முழுமையாக நம்புகிறோம் என்கிற பட்சத்தில் " வாடா வா மொவனே சீமானே, உன்னை முறத்தால் அடித்து துரத்துகிறேன்" என நீ சொல்லியிருந்தா நீ தமிழச்சி. அதை விடுத்து கடிதம் அனுப்பினா அவன் வந்து சொல்றான்.. "தங்கச்சி, நீ இருக்கும் இடம் சரியில்லை. இப்பவே வெளியே வா.. நான் உன்னை ஜெயிக்க வைக்கிறேன்" ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ தூஊஊஊஊஊஊஊஊ.. இதுக்கு தாராளமா சந்தோஷமா தோத்துட்டு போலாமே தங்கச்சி ஜோதிமணி!

இன்னும் கேவலமாக வாயில் வருது. வேண்டாம் விட்டு விடுகிறேன். போகட்டும். தலைப்புக்கு வந்து தொலைகிறேன். ராகுலின் இளைஞர் பாசறை எல்லாம் தன் தனது பாசறைக்கு அதாவது இளைஞர் காங்கிரசுக்கு திரும்புகிறது எங்கள் பகுதியில். கேட்டேன். நாங்க தான் ராஜகுமாரை ஜெயிக்க வச்சோம்னு கல்லா கட்டுவோம் பாருங்க அண்ணே என குதூகலமாக சொன்னாங்க. இனி ஆறு மாதம் கழித்து தான் தாய்வீடு திரும்புவாங்க. ஏன்னா உள்ளாட்சி தேர்தல் இருக்குதே:-))

7 comments:

  1. evvalavu saappittel

    ReplyDelete
  2. இருந்தாலும் உள்நாட்டு கதையை இந்த வாறு வாரி இருக்கூடாது. பாவம் ,அவுங்களும்தான் என்ன பண்ணுவாங்க? வெச்சிக்கிட்டே வஞ்சனையா?

    ReplyDelete
  3. குனிந்த முதுகுகள் இருப்பது வரை சவாரி செய்பவன் செய்து கொண்டுதான் இருப்பான். உங்க கட்சியை நிமிர்ந்து நிக்கச் சொல்லுங்க அபி அப்பா.

    ReplyDelete
  4. DMK and Congress will loss heavily. COngress will be 000000000000000

    ReplyDelete
  5. நன்றி அனானி, டாக்டர் ரோ,கக்கு மாணிக்கம், மற்றும் மாசி, பார்த்தி...... @ மாசி! என்ன செய்வது, என் அரிப்பை நான் இங்க தீர்துக்கலாம். ஆனால் நான் மாத்திரம் முடிவெடுக்கும் இடத்திலோ அல்லது அருகாமையிலோ இருந்தால் "மிளகாய் வைக்கும் இடங்கள்" தேர்ந்தெடுக்கும் துறைக்கு நல்ல பல ஐடியாக்கள் குடுத்து இருப்பேன்:-))

    ReplyDelete
  6. போர்க்குற்றவாளி ராஜபட்சே - எனது அனுபவம்.

    http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_2462.html

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))