திமுக வெற்றி வாய்பை இழந்து விட்டது. அதிமுக ஆட்சிக்கு வந்தாகிவிட்டது. இனி அதிமுக விமர்சன வலையத்துக்குள். கட்சியினர் போட்ட கணக்குகள் தவிடு பொடி ஆகிவிட்டன. பத்திரிக்கையாளர்கள் தாங்கள் போட்ட கணக்குகளை தூசி தட்டி ஆராய்சி செய்து கொண்டிருக்கின்றனர். எனக்கு மிகப்பெரிய ஏமாற்றம் இருந்தது என்பது உண்மை தான் எனினும் கொஞ்சமும் தளர்ந்தோ ஒடிந்தோ விடவில்லை. நேற்றே எங்கள் ஊர் மயிலாடுதுறையில் உள்ள அண்ணா பகுத்தறிவு மன்றம் சென்று பார்த்த போது கட்சி பெரிசுகள் எதுவுமே நடக்காதது போல பேப்பர் படித்து கொண்டிருந்தனர். அதில் ஒரு பழுத்த 78 வயது பெருசு கிட்டே ஒரு பேசிப்பார்ப்போமே என பேசினேன். அவர் பெயர் ரங்கன்.
அபிஅப்பா: என்ன மாமா கட்சி தோத்துடுச்சு. எப்படி இருக்கு உங்க மனசு?
ரங்கன்: ரொம்ப திருப்தியா இருக்கு மாப்ள. இன்னும் சொல்ல போனா தமிழக வாக்காளர்களுக்கு ரொம்ப நன்றிக்கடன் பட்டிருக்கு திமுகன்னு தான் சொல்லனும்.
அபிஅப்பா: என்ன மாமா புது சிந்தனையா இருக்குதே நீங்க பேசுறது?
ரங்கன்: இல்ல மாப்ள! சிந்தனை என்னவோ ஒன்னு தான். ஆனா இதை புது கோணம்ன்னு வேணா சொல்லு. விஜய்காந்து ஒரு பிரச்சாரத்திலே சொன்னாரு. அண்ணா ஆவி அவர் கனவிலே வந்து அதிமுகவுடன் கூட்டு சேர்ன்னு சொன்னதா. எனக்கு ஆவி, சாமில எல்லாம் நம்பிக்கை இல்லாட்டியும் ஒருவேளை அதல்லாம் உண்மையா இருக்கும் பட்சத்தில் அண்ணாவின் ஆவி அப்படி சொன்னாலும் சொல்லியிருக்கும். ஏன்னா விஜய்காந்து தனிச்சி நின்னு இருந்தா இன்றைக்கு கதையே மாறிப்போயிருக்கும். திமுக சென்ற முறை போல 80- 90 சீட் வாங்கியிருக்கும். காங்கிரஸ் தயவிலே ஆட்சி அமைந்திருக்கும். ஆக காங்கிரஸ் அமைச்சரவையில் இடம் வாங்கி இருக்கும். தமிழக இலட்சினை முத்திரை காங்கிரஸ்காரர்கள் பயன்படுத்தும் நிலை வந்திருக்கும். பின்னர் முக்கிய இலாக்கா கேட்டு அங்கே இருந்து மிரட்டல் அதிகரித்து இருக்கும். இவரும் பணிவார். பின்னர் அடுத்த அடுத்த தேர்தலில் 110 -110 என பங்கீடு கேட்பர். பின்னர் அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதன் பின்னர் நீ 80 நான் 140 என்பர். இப்படியாக போனால் அண்ணா அமைத்து தந்த அந்த பேஸ்மெண்ட் போயே போயிருக்கும். ஆனால் இப்போது அண்ணா திமுக தான் பெரும்பான்மை பெற்று ஆட்சிக்கு வந்து இருக்கு. இந்த ஆட்சியை அகற்றுவது திமுகவுக்கு மிகவும் எளிது. அடுத்த முறை திமுக வரும். ஆனால் இப்போதைக்கு காங்கிரஸ் ஆட்சிக்கு வருவது தடுக்கப்பட்டுவிட்டது. இதன் காரணமாகவே அண்ணாவின் ஆவி விஜய்காந்தின் கனவில் வந்து சொல்லியிருக்குமோ என நினைக்கவும் தோன்றுகிறது.
அபிஅப்பா: என்ன மாமா அண்ணாவின் மன்றத்தில் உட்காந்துகிட்டு மூடநம்பிக்கை கருத்து பேசுறீங்களே?
ரங்கன்: இல்ல மாப்ள, நான் மூடநம்பிக்கை பேசவில்லை. அந்த விஜய்காந்து பேச்சில் இருந்த எனக்கு சாதகமான ஒரு விஷயத்தை எடுத்து கொண்டு பேசினேன். அத்தனையே!
அபிஅப்பா: அப்படின்னா காங்கிரஸ்க்கு ஆட்சியில் பங்கு கூடாதுன்னு சொல்லும் நாம எதுக்கு காங்கிரஸ் கூட கூட்டணி வச்சுக்கனும்?
ரங்கன்: காங்கிரஸ் கூட நாம கூட்டணி வச்சுப்பது நமக்கு சாதகமாக அதிக இடங்களில் வெற்றி கிடைக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே என்று தான் இருக்க வேண்டும். தவிர ஆட்சியில் பங்கு என்பதை தமிழக மக்கள் ஒத்துக்கவில்லை என்பதை எண்பதுகளில் கலைஞரும் நாமும் புரிந்து கொண்ட பின்னரும் அதே தவறை 31 ஆண்டுகள் கழித்தும் கலைஞர் செய்வார் என நாம் யாரும் எதிர்பார்க்கவில்லை. வெறும் 119 சீட் தான் நிற்கிறோம் என்ற போதே கண்டிப்பாக இந்த கட்சி ஜெயிச்சா கூட்டணி ஆட்சி வரும் என்பது மக்களுக்கு தெரிந்து விட்டது. அதற்கு மக்கள் ஒத்துக்கவில்லை. அதனால் தான் மிக முக்கியமாக திமுக தோற்றது.
அபிஅப்பா: திமுக தோல்விக்கு அது மட்டும் தான் காரணம் என உங்க மனசாட்சிய தொட்டு சொல்லுங்க?
ரங்கன்: இல்லை அதுவும் ஒரு காரணம்னு தான் சொல்ல வந்தேன். முக்கியமாக இந்த ஒரு காரணத்தை சரி செஞ்சு இருந்தாலே மத்த காரணங்கள் அடிபட்டு கூட போயிருக்கலாம்.
அபிஅப்பா: அப்படின்னா?
ரங்கன்: அப்படின்னா அப்படித்தான்.அதாவது கூட்டணி பேச்சு வார்த்தையின் போதே 35 சீட்டுகள் மட்டுமே. அதுவும் நாங்கள் ஒதுக்கும் சீட்டுகள் மட்டுமே என சொல்லியிருக்க வேண்டும். இன்னும் சொல்ல போனால் பாமகவுக்கு 18 இடமும், விசிக்கு 4 இடமும், காங்கிரசுக்கு 31 இடமும் மட்டும் கொடுத்து மீதி இடங்கள் திமுக நின்றிருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் அட்லீஸ்ட் காங்கிரசுக்கு 35 க்கு மேல் தந்திருக்க கூடாது. குறைந்தது திமுக 150 சீட்ல நின்னு இருக்கனும்.
அபிஅப்பா: காங்கிரஸ் தான் ஒரு 90 தொகுதிகள் இனம் கண்டு வைத்திருப்பதாகவும் அதில் 30 இடங்கள் காங்கிரஸ் தனித்து நின்றால் கூட வெற்றி என்றும் அடுத்த 30 தொகுதிகள் கூட்டணி அமைத்தால் வெற்றி எனவும் மீதி 30 தொகுதிகள் ஒரு 1000 முதல் 2000 ஓட்டு வித்யாசத்திலாவது ஜெயித்து விடும் என கையிலே லிஸ்ட் வச்சுகிட்டு நின்னாங்களே மாமா?
ரங்கன்: ஆமாம். அதிலே வரும் முதல் 30 தொகுதியில் தான் மாயவரமும் வைத்து இருந்தனர். அதாவது தனித்து நின்றால் கூட வெற்றி என்று.ஆனால் எதை வைத்து அந்த லிஸ்ட் எடுக்கப்பட்டது என புரியவில்லை. ஏனனில் இரண்டு வருடம் முன்பு நடந்த பாராளுமன்ற தேர்தலில் கூடமயிலாடுதுறை தொகுதியில் குறிப்பாக மயிலாடுதுறை சட்டமன்ற பகுதியில் மணிசங்கர் 4000 வாக்குகள் குறைவாகத்தானே பெற்றார்? பின்னர் எப்படி யாரால் எப்படி அந்த லிஸ்ட் தயாரிக்கப்பட்டு ராகுல்காந்திக்கு தரப்பட்டது என திமுக தலைமை கேட்டிருக்க வேண்டும்.
அபிஅப்பா: காங்கிரசார் தான் எதற்கும் ஒத்து வரவில்லையே. 63 சீட் வேண்டும் அதும் தான் நினைத்த தொகுதி வேண்டும் என கேட்டு வாங்கினார்களே? பின்பு என்ன செய்வது?
ரங்கன்: அதான் சொன்னேன். அதற்கு இடம் கொடுக்காமல் உனக்கு 35 சீட் மட்டும் தான். ஒத்து கொண்டால் கையெழுத்து போடு. இல்லாட்டி என் குடும்பத்தை ஒட்டு மொத்தமாக தூக்கி முடிஞ்சா உள்ளே போடு என சொல்லியிருக்கனும். திமுக 185 இடங்கள் நின்றிருக்க வேண்டும். தேர்தல் அறிவிப்புக்கு பின்னே தொகுதி பங்கீடு இழுபறியில் திமுக உயர்நிலை செயல்திட்ட கூட்ட முடிவில் அன்றைக்கு காங்கிரஸ் உறவு முறிவு என சொன்ன போது ஒட்டுமொத்த திமுக தொண்டர்களிடம் ஒரு எழுச்சி வந்ததே அதை பயன்படுத்தி கொண்டிருக்க வேண்டும்.
அபிஅப்பா: சரி மாமா அப்படி 185 இடம் நின்று திமுக தோற்றால்?
ரங்கன்: அப்படி 185 இடங்கள் திமுக நின்றால்.... மூன்று விஷயம் தானே நடக்கும். 1.திமுக வாஷவுட். 2. திமுக 50 இடம் பெற்று பிரதான எதிர்கட்சி அல்லது 3. திமுக பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும். இது மூன்று தானே நடந்து இருக்கும். திமுக வாஷ்அவுட் அல்லது 50 சீட் வெற்றி என்னும் நிலை வந்திருந்தால் " எங்களுக்கு மானம் பெரிது என நினைத்து காங்கிரசுடன் கூட்டு சேரவில்லை. அதனாலே தோற்றோம்" என சொல்லிக்கலாம். ஜெயித்தால் இன்னேரம் ரயில்வேயை எங்களுக்கு கொடு என டெல்லியை வற்புறுத்தி கேட்கலாம் (தமிழக நலன் கருதி). இப்போது எதற்குமே வழியில்லாமல் போனது.
அபிஅப்பா: ஆக திமுக தோல்விக்கு காங்கிரஸ் மட்டுமா காரணம்??
ரங்கன்: அப்படி இல்லை.மற்ற பல காரணங்களும் நாம் 185 சீட்டில் நின்றிருந்தால் அடிபட்டு போயிருக்கும் என்றே சொன்னேன்.
அபிஅப்பா: அப்படியென்றால் வேறு என்ன காரணங்கள் திமுகவின் தோல்விக்கு இருந்தன?
ரங்கன்: சினிமா. சினிமா. சினிமா.
அபிஅப்பா: புரியலை மாமா.
ரங்கன்: தமிழன் எப்பாதுமே கலாரசிகன். பொழுதுபோக்கில் ரசனையோடு ஈடுபடுபவன். அதனால் தான் தன்னை ஆள்பவனை கூட அந்த துறையில் இருந்து கூட தேர்ந்தெடுத்தான் எடுத்து கொண்டும் இருக்கின்றான். அந்த சினிமா தொழிலை திமுக தலைமை நசித்து விட்டதாக பரப்புரை செய்யப்பட்டது எதிர்கட்சியினரால். அதற்கு பத்திரிக்கையாளர் சோலை கூட எழுதியிருந்தார். எடுப்பது 3 படம். அதற்கு 300 விளம்பரம் அவர்கள் தொலைக்காட்சியில். அவர்களை தவிர வேறு யாரும் படம் எடுக்க முடியவில்லை என பரப்புரை செய்தது மக்களிடம் சென்று சேர்ந்தது. அப்போது எழுபதுகளில் ரிக்ஷாகாரன் சினிமாவை அலைக்கழித்தது போல இப்போது காவலன் படம் அலைக்கழிக்கப்பட்டதாக பரப்புரை செய்யப்பட்டது. அதை சீண்டாமல் இரூந்திருந்தால் தானாகவே மக்கள் விஜய் படங்களை அதற்கு முன்னர் 6 படங்களை தோற்கடித்தது போல தோற்கடித்து இருப்பர். தேவை இல்லாமல் அதை சீண்டியது தவறு.
இவர் வரிவிலக்கு போன்ற எத்தனையோ செய்திருக்கலாம் சிவிமாவுக்கு. அது பற்றி சந்தோஷம் அந்த படத்தயாரிப்பாளருக்கு மட்டுமே. அது சினிமா ரசிகனை சந்தோஷப்படுட்தவில்லை. இவர் சினிமாவுக்கு செய்த நன்மைகள் விழலுக்கு இறைத்த நீராகி போனது. கலைஞரின் பேரன்கள் உதயநிதியும், துரை தயாநிதியும் சினிமா தொழிலுக்கு வந்திருக்க கூடாது. வேறு எத்தனையோ தொழிகள் இருக்கும் போது அவர்கள் சினிமா தொழிலுக்கு வந்திருக்க கூடாது. ஒரு தொழிற்சாலை அமைத்து பத்தாயிரம் குடும்பத்துக்கு சோறு போட்டிருந்தால் கூட ஜெயித்து இருக்கலாம். எந்த சினிமா ரசிகனும் ஒரு பத்து வருஷம் கழிச்சு "ஆகா "கோ"ன்னு ஒரு படம் எடுத்தான்யா ஒரு தயாரிப்பாளர். அவன் நல்லா இருக்கனும்" என பாராட்ட மாட்டான். அவனுக்கு அன்று இரவோடு அந்த சந்தோஷம் முடிந்துவிடும். ஆனால் அந்த தொழிற்சாலையில் வேலை பார்த்து தன் மகனை மகளை படிக்க வைக்கும் ஒரு தொழிலாளி அந்த சாப்பாட்டை சாப்பிடும் நேரத்திலாவது தன் முதலாளியை நினைத்து பார்ப்பான். நன்றி சொல்லுவான் மனதின் உள்ளேயாவது. இனியாவது ரெட்ஜெயண்ட், க்ளவுட் நைன் எல்லாம் மூடுவிழா நடத்தினால் சந்தோஷம்.
அபிஅப்பா: ஆக சினிமா மட்டும் தான் காரணமா இன்னும் இருக்கின்றதா காரணங்கள் திமுக தோல்விக்கு?
ரங்கன்: அதே குடும்பம் தான். ஆனால் இது வேறு கோணம். கலைஞரும், ஸ்டாலினும், அழகிரியும் முதல்வர், அமைச்சர்கள். அதனால் கிடைக்கும் சம்பளம் இத்யாதி வசதிகள் அவர்களின் வாரிசுகளுக்கு போகும் போது எப்படி ஆசையாக அனுபவிக்கின்றனரோ அது போல இவர்கள் தேர்தலில் நிற்கும் அந்த ஒரு மாதகாலத்துக்கு கூட உதயநிதியோ, துரைதயாநிதியோ பிரச்சாரத்துக்கு வராமல் இருந்தது உழைக்கும் திமுக தொண்டனுக்கு ஒரு வித வருத்தட்தை கொடுத்தது. ஆனால் அதே நேரம் கலைஞரின் மகள் செல்வியும் ஸ்டாலினின் மனைவி துர்காவும், அழகிரியின் பெண்ணும் கூட களத்தில் நின்ற போது அவரது வீட்டு ஆண் வாரிசுகள் சினிமாவை கொண்டாடிக்கொண்டு இருந்தது வருத்தத்தின் உச்சகட்டம்.
அபிஅப்பா: கனிமொழி கூட எல்லா ஊர்களுக்கும் பிரச்சாரத்துக்கு வந்தாரே?
ரங்கன்: ஆனைக்கு அர்ரம் - குதிரைக்கு குர்ரம் ஹாஹ்ஹா! திமுகவின் பெரிய பின்னடைவு ஸ்பெக்ட்ரம் பிரச்சனை. இந்த நேரத்தில் கனிமொழியை பிரச்சாரத்துக்கு கொண்டு வந்திருக்கவே கூடாது. கனிமொழியை அறிவாலயத்தில் அமர்த்தி அங்கிருந்து தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கும் வேலையை கொடுத்து மட்டும் இருக்க வேண்டும். கனிமொழி வராமல் இந்த தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டால் கனிமொழிக்கு ஆட்சிஅதிகாரத்தில் முக்கியத்துவம் இருக்காது என நினைத்த கலைஞர் கனிமொழியை பிரச்சாரத்துக்கு கொண்டு வந்தார். கனிமொழி பிரச்சாரத்துக்கு வரும் முன்னர் அந்த அந்த பகுதி எதிர்கட்சியினர் "இதோ பல்லாயிரக்கணக்கான கோடி ஊழல் செய்த கனிமொழி உங்களிடம் வாக்கு கேட்டு வருகின்றார். அவர்களுக்கா உங்கள் ஓட்டு என எதிர் பிரச்சாரம் செய்தனர். இது தேவை இல்லாத வேலை திமுகவுக்கு. கொளத்தூருக்கு பிரச்சாரத்துக்கு கனிமொழி வர வேண்டாம் என ஸ்டாலினே கூட கேட்டுக்கொண்டதாக பத்திரிக்கைகள் எழுதின. அப்படி எனில் அதன் தாக்கம் ஸ்டாலினுக்கு தெரிந்த அளவுக்கு கலைஞருக்கு தெரியாத அளவு ஆகிவிட்டது.
அபிஅப்பா: மின்சார தட்டுப்பாடு காரணம் இல்லையா தோல்விக்கு?
மின்சார தட்டுப்பாடு என்பதை விட மின்சார விரயம் அதிகம் ஆனது என்பதே உண்மை. விரயம் செய்தது மக்கள். ஆனால் எப்போதும் போல முள் குத்திவிட்டது என்று தானே சொல்கிறோம். நான் சென்று முள்ளை குத்தி கொண்டதை ஏற்றுக்கொள்வதே இல்லை நாம். ஒரு கோடி இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் கொடுக்கப்பட்டுள்ளது. அனேகமாக எல்லோர் வீட்டிலும் இரண்டு டிவிக்கள். மாமியாருக்கு ஒரு டிவி, மருமகளுக்கு ஒரு டிவி. கிரிக்கெட் பார்க்க ஒரு டிவி, சீரியல் பார்க்க ஒரு டிவி என எப்போதுமே இரண்டு டிவியும் ஓடிக்கொண்டு இருக்கும். ஒரு டிவிக்கு ஒரு நாலைக்கு கால் யூனிட் என்றாலும் ஒரு நாளைக்கு 25 லட்சம் யூனிட். ஆக மின்சார பற்றாகுறைக்கு கலைஞர் வழங்கிய இலவச வண்ண தொலைக்காட்சியும் காரணமாக போய்விட்டது. ஆனாலும் சில மானியங்கள் நிப்பாட்டப்பட்டு ஒரு யூனிட் 13 ரூபாய்க்கு தனியாரிடம் இருந்து வாங்கி இங்கே வழங்கி நிலமையை சீர் செய்து இருகலாமோ என கூட நினைக்கிறேன். நான் நினைத்து என்ன ஆக போகின்றது?
அபிஅப்பா: காரணங்கள் அவ்வளவு தானா? இன்னும் இருக்கின்றதா?
ரங்கன்: இன்னும் இருக்கின்றது. நானும் நீயும் இதை எல்லாம் பேசி பயன் இல்லை. பொதுக்குழுவில் பேச வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. மிக முக்கியமான சிலவற்றில் கட்சியின் உள்ளடி வேலைகள் பற்றி ஆராய வேண்டும். தைரியமாக சில மாவட்ட செயலாளர்கள் அதிரடியாக நீக்கப்பட வேண்டும். உதாரணமாக நாகை மாவட்டத்தில் மாவட்ட செயலாளரின் நிலைப்பாடு . இருப்பது மொத்தம் ஆறு தொகுதிகள். 1.நாகை 2. வேதாரண்யம் 3. கீழ்வேளூர் (தனி) 4. மாயவரம் 5. பூம்புகார் 6. சீர்காழி. இதில் கீழ்வேளூர் மட்டுமே திமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. அதுவும் திருவாரூர் மாவட்டம் சேர்ந்த மதிவானனுக்கு ஒதுக்கப்பட்டது. ஒரு வேளை மதிவாணன் வெற்றி பெற்று அமைச்சராக ஆகும் பட்சத்தில் நாகை மாவட்டத்தில் தனிப்பெரும் செல்வாக்கோடு மாவட்ட செயலராக இருக்கும் தனக்கு பாதிப்பு வருமோ என எண்ணி மதிவாணனுக்கு விஜயன் வேலை செய்ய வில்லை என்கிற குற்றச்சாட்டு உள்ளது. 700 ஓட்டுகள் வித்யாசத்தில் அவர் தோல்வி. வேதாரண்யம் தொகுதியை பா.ம.க பெறுகின்றது. அங்கே சிட்டிங் எம் எல் ஏ வேதரத்தினம் எளிமையானவர். இன்று சுயேச்சையாக நின்று இரண்டாமிடம். பத்தாயிரம் ஓட்டு வித்யாசம். தோல்வி. மாயவரம் 3000 ஓட்டில் காங்கிரஸ் தோல்வி. சீர்காழி சிட்டிங் எம் எல் ஏ பன்னீர் செல்வம் சிறந்த வக்கீல். அவருக்கு சீட் இல்லை. வி சி அங்கே தோல்வி. இப்படியாக பல உள்ளடி வேலைகள் திமுகவில். பல மாவட்டங்களில் இப்படியாக. உடனடியாக கட்சி களை எடுப்பு நடக்க வேண்டும். இதை எல்லாம் முரசொலி மாறன் இருந்தால் பொதுக்குழுவில் தைரியமக பேசுவார். அவர் இல்லை. அது போல வீரபாண்டியார் பேசுவார். ஆனால் அவரும் இப்போது பேச இயலாது. என்ன நடக்கின்றது என பார்ப்போம்.
அபிஅப்பா: அப்படின்னா திமுக வின் எதிர்காலம்?
ரங்கன்: திமுக இதை விட பெரிய தோல்வி எல்லாம் பார்த்த கட்சி. இந்த தோல்வி தான் உங்களுக்கான பூஸ்ட். இனியாவது மமதை ஒழிந்து கட்சி வேலை பாருங்க. இந்த தோல்வி கலைஞர் உங்களுக்கு கட்சியை வளர்க்க கொடுத்த பரிசு என நினைத்து கொள்ளுங்கள்.
அபிஅப்பா: ஒ அப்படின்னா தெனாலி மாதிரி "இதுவும் ட்ரீட்மெண்ட்டோ தங்க மச்சான்":-)) சரி காங்கிரசின் நிலை என்ன மாமா?
ரங்கன்: காங்கிரஸ் தமிழக தலைவர் தங்கபாலு தோல்விக்கு பொறுப்பேற்று தன் ராஜினாமாவை சமர்பிப்பார்.
அபிஅப்பா: பின்னே என்ன நடக்கும்?
ரங்கன்: இடது கையால் ராஜினாமா கடிதம் கொடுப்பார். வலது கையால் "எதிர் வரும் தமிழக காங்கிரஸ் தலைவரின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை. தலைமையை மாற்ற வேண்டும்" என புகார் கொடுப்பார்.
(நான் ரங்கன் மாமாவிடம் பேசியது 14.05.2011 காலை 7 மணிக்கு. அதன் பின்னர் தான் தங்கபாலு ராஜினாமா விஷயம் வெளியானது)
அபிஅப்பா: அதிமுக செயல்பாடுகள் தெரிய ஆறு மாதம் பிடிக்குமா?
ரங்கன்: தேவை இல்லை. ஆறுமணி நேரம் போதும். 500 கோடியில் கட்டப்பட்ட புதிய சட்டசபை கட்டிடம் பழைய இடத்துக்கு போகும். அப்படி போனால்...
அபிஅப்பா: போனால்?
ரங்கன்: அடுத்து திமுக ஆட்சி தான் என்பது தெளிவாகும். ஏனனில் ஜெயலலிதா திருந்தவில்லை என பொருள் கொள்ளப்படும். அது தான் தொடரும். அப்படியெனில் திமுக அமைதியாக இருந்து கவனித்து வர வேண்டும். கட்சி பணிகள் மாத்திரம் செய்து வந்தால் போதுமாகும். திமுக வெற்றி தான் அடுத்தடுத்த தேர்தல்களில்.
அபிஅப்பா: அப்படியெனில் புதிய தலைமை செயலகம் என்ன ஆகும்?
ரங்கன்: பொதுக்கழிப்பிடமாக மாறும் (சிரிக்கிறார்) கலைஞர் காப்பீடு திட்டம் அழிக்கப்பட்டு அதற்கு பதிலாக சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஆரம்பிக்கப்படும் என அறிவித்து அந்த இடம் மருத்துவமணை ஆகும். முதல்வர் அறை பிணவறையாக மாற்றம் பெரும்.
அபிஅப்பா: அதிமுக காங்கிரஸ் உறவு எப்படி இருக்கும்?
ரங்கன்: அமோகமாக இருக்கும். அனேகமாக அதிமுக காங்கிரஸ் கூட்டணி கூட உண்டாகலாம் வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு! மாற்றம் ஒன்றே மாறாதது என்பது முதலில் ஆட்சி அரசியலுக்கு தான்.
அபிஅப்பா: பத்திரிக்கைகள் நிலை?
ரங்கன்: நக்கீரன் கூடிய சீக்கிரம் "சேலஞ்ச் " அடுத்த பாகம் எழுத ஒரு வாய்ப்பு. மற்ற பத்திரிக்கைகள் வழக்கம் போல இருக்கும்.வடிவேலு வீட்டில் கல் அடிப்பப்படும். சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவ்து தான் முதல் வேலை என ஜெயலலிதாவின் பேட்டியை எல்லா பத்திரிக்கையும் ஆசையுடன் வெளியிடும்!
=========================================================
குறிப்பு: நான் பேசிக்கொண்டு இருந்த விஷயங்கள் அதிகம் எனினும் சிலவற்றை மட்டுமே இங்கே கொடுத்துள்ளேன். பதிவின் நீளம் காரணமாக மீதியை கொடுக்க முடியவில்லை. திமுக தோற்பதால் என்னவோ எனக்கு தனிப்பட்ட வகையில் எவ்வித முன்னேற்ற தடையும் இல்லை என்பதை பலரும் அறியாமல் அசிங்கமாக போடும் பின்னூட்டம் மனதுக்கு எரிச்சலையே தருகின்றது. எப்போதும் போல இந்த கட்டை சாகும் வரை திமுகதான் என்பதை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொள்வதில் பெருமை அடைகின்றேன். நானோ என் குடும்பதின் எந்த ஒரு நபரோ அரசாங்க உத்யோகத்திலோ, அரசு சார்பு உத்யோகத்திலோ, திமுக சார்பு அல்லது திமுக நிறுவனங்களிலோ உத்யோகத்தில் இல்லை. அது போல அரசாங்க காண்டிராக்ட் போன்ற எதிலும் சம்மந்தப்படவில்லை. நான் 21 வருடங்கலாக அயல்நாட்டில் பணிபுரிந்தவன் என்பதும் பலருக்கும் தெரியும். இதை மீண்டும் ஒருமுறை ஞாபகப்படுத்துகின்றேன்! திமுக தோற்றுவிட்டதே நீ ஏன் இன்னும் தூக்குபோட்டு சாகவில்லை என கேட்ட அனானிகளுக்கு: திமுகவுக்காக நான் உயிர் கொடுக்க தயார். ஆனால் உங்களைப்போல அனானிகள் சொன்னதுக்காக உயிர் கொடுப்பது என்பது முட்டாள் தனம் என்பதால் உங்கள் கோரிக்கை நிராகரிக்கபடுகின்றது.
நல்ல பதிவு..
ReplyDeleteஇந்தப் பதிவின் நோக்கம் புரிகிறது.
ReplyDeleteஆனால் உங்களுக்குப் பிடித்த ஒரே விசயத்தை (காங்கிரஸ் கூட்டணி தவறு, காங்கிரஸ் இல்லாது திமுக அணி போட்டி இட்டு இருக்க வேண்டும் என்பது) முக்கால் பதிவு வரை நீட்டித்து இருப்பது அயர்ச்சியாக இருக்கிறது.
அதே போல தமிழ்நாட்டின் எல்லா மாவட்டங்கள், தொகுதிகள் குறித்து பேசாமல் குறிப்பிட்ட சில தொகுதிகள் மட்டும் எழுதி இருப்பதும் ஒரு குறையே.
ஸ்பெக்ட்ரம், மின்வெட்டிற்கு பிறகு மிக முக்கிய காரணம் ரெட் ஜெயன்ட், கிளௌட் நைன், சண் பிச்சர்ஸ் விளம்பரங்கள். கலைஞர் ஜனவரி மாதமே இம்மூவரையும் தற்காலிகமாக படம் தயாரிப்பதை நிறுத்தச் சொல்லி இருக்க வேண்டும்.
இளைஞர்கள், யுவதிகள், பெண்கள் மத்தியில் இந்த திரைப்பட விளம்பரங்கள் பெரும் எதிர்ப்பு அலையை ஏற்படுத்தி இருந்தது உண்மையே . இந்த விஷத்தை நன்கு எழுதி உள்ளீர்கள்
sariya sonninga ....
ReplyDeletetrafic jaam, thalami saiyalaham maatram, nalai pakal 12.15 mani mudal, tamilnattirkku emagandam.. start..
மிக அருமையாக எழுதி உள்ளீர்கள் அண்ணா .. குறைகளை அருமையாக அலசி உள்ளீர்கள்.. அடுத்த தேர்தலில் ஜெயுக்க வாழ்த்துக்கள்
ReplyDeleteநிறைய இடங்களில் உங்க மாமா ரங்கன் உண்மையை சொல்லி நிறைய ஒத்துப்போகிறார். அந்த கட்சியில் உள்ளவர்கள் ஒரு பத்து நிமிடம் இருந்து இந்த கருத்தினை படித்தால் நல்லது. தி.மு.க. வை ஆதரிக்க "தி.மு.க.காரனாக " மிருக்க வேண்டிய அவசியமில்லை. அனானிகளின் கருத்துக்களுக்கு பதில் சொல்லவேண்டியதில்லை. தூக்கி குப்பையில் போடுவதை விட்டு!
ReplyDeleteசெம மொக்க. கனவு காணும்...
ReplyDeleteஅபி அப்பா உங்க நேர்மை எனக்கு பிடிச்சுருக்கு...
ReplyDeleteநீங்க நல்லா காமெடியா எழுதுறீங்க அப்பா!.....
ReplyDeleteஅரசியலில் வெற்றி தோல்விகள் சகஜமே!!, ஆனால் கட்சியின் பேரால் பதிவுலகில் தனி மனித தாக்குதல்களும் அதை தொடரும் கழுத்தறுப்புகளுமே எரிச்சலைத் தருகிறது.
ReplyDeleteஇனையத்தில் மாற்றுக் கருத்துக்களை சகித்துக் கொள்ளும் மனப் பாங்கு இல்லாமல் போனது துரதிர்ஷ்டமே!!
Arumayana ayvuu
ReplyDeleteகுட் அனாலிஸிஸ்!
ReplyDeleteஹிஹி
ReplyDeletei dont know you r a full or half mental. Number one comedy piece in blogspot, carry on, enjoy. If DMK family will swallow tamil nadu people like u, lucky f..k, viruchikaanth, athisha and so many stupid bloggers will holding the needle of party like third right politician,,,, ffffkkkkk uuuuuuu
ReplyDeleteகருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))
ReplyDeleteசிறப்பான பதிவு.. இதை விட சிறப்பாக திமுக நிலையினை பதிவு செய்ய முடியாது..
ReplyDelete//
ReplyDeleteஇந்த கட்டை சாகும் வரை திமுகதான் என்பதை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொள்வதில் பெருமை அடைகின்றேன்
//
பகுத்தறிவு கன்னா பின்னாவென மிஸ்ஸிங். :))
//
ReplyDeletei dont know you r a full or half mental. Number one comedy piece in blogspot, carry on, enjoy. If DMK family will swallow tamil nadu people like u, lucky f..k, viruchikaanth, athisha and so many stupid bloggers will holding the needle of party like third right politician,,,, ffffkkkkk uuuuuuu
//
அனானி சொன்ன ஒரு விசயத்துல 100% ஒத்துபோறேன்.. கருணா ஆட்சியில நண்டு சிண்டு பண்ற நாட்டாமைத்தனமிருக்கே.. ஐயோ சாமீ.. அவர் முன்னாடி ஒரு பிரபல நடிகரே புலம்புற அளவுக்கு இருந்துச்சு.. இதப்பத்தி உங்க மாமா உங்க கிட்ட சொல்லலியா.. இல்ல. பதிவின் “நீளம்” கருதி ”சுருக்கி”ட்டீங்களா?
திமுக விற்கு அல்லது மு.க.விற்கு எப்போது தன மீதும் தன கட்சி மீதும் நம்பிக்கை இல்லாமல் அஞ்சு பைசாவுக்கு உபயோகமில்லாத கட்சிகளை கூட்டணியில் (அந்த ஓட்டுக்கள் வெற்றிக்கு உதவும் என்ற எண்ணத்தில்)சேர்த்ததோ அப்போதே மக்கள் மத்தியில் மதிப்பு போனது.இலவசம்:கோளாறுகள்.கட்சியில் பல நிலைகளில் உள்ள நபர்களின் அட்டகாசம் போறாதென்று கூட்டணி கட்சிகளின் கட்ட பஞ்சாயித்து போன்ற அட்டகாசங்கள்,கொலை,கொள்ளை,காலையில் வாக்கிங் போகையில் சர்வ சாதாரணமாக பெரிய புள்ளிகள் கூட கொலை,அதற்கு நடவடிக்கை இல்லாதது,இதற்கெல்லாம் அந்த அம்மாவே பரவாயில்லை என்று சில மக்கள் (ஆமாம்)ஒவ்வொரு தொகுதிகளிலும் முடிவெடுத்தது சரியானதே.சாலைகள்,மேம்பாலங்கள்,மலிவு விலையில் அரிசி மளிகை பொருள்கள் இவைகள் இரண்டாம் பட்சமாக நினைத்துவிட்டார்கள்.வயதானவர்கள் கொலை,எல்லா துறையிலும் மு.க.வின் குடும்ப ஆதிக்கம் எல்லோரையும் பாதித்துவிட்டது.இவ்வளவு இருந்தும் ஒவ்வொரு ஊரிலும் சில ஆயிரம்களில்தான் அதிமுக ஜெயித்துள்ளது.கட்சியில்(அடிமட்டத்திலிருந்து) முறையாக தேர்தல் நடத்தி பொறுப்புகளை கொடுத்தால் தி.மு.க.வை வெல்ல முடியாது.
ReplyDelete//
ReplyDeleteஇந்த கட்டை சாகும் வரை திமுகதான் என்பதை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொள்வதில் பெருமை அடைகின்றேன்
//
நீங்க பதில் சொல்வீர்களா என்று தெரியாது.. இருந்தாலும் கேட்டு வைக்கிறேன்.
இதே திமுக’வை ஜெயலலிதா கைப்ப்ற்றினால்,( ச்சும்மா ஒரு பேச்சுக்கு )அப்போதும் அதே பெருமையுடன் திமுகவிற்கு ஓட்டு போடுவீர்களா?
MPD? :)))
ReplyDeleteஅவ்!
ReplyDeleteஅருமையான பதிவு. கழகம் மீண்டும் எழுச்சி பெறும் .
ReplyDeleteதெளிவான அலசல் நன்றி ரங்கன் மாமா.
ReplyDeleteஅபி அப்பா உங்க நேர்மை எனக்கு பிடிச்சுருக்கு...
ReplyDelete//
ரிபீட்டூ ;):)))))
WELL SAID , SIR
ReplyDeleteசெய்த நலத்திட்டங்களை விளம்பரமாக கொடுத்து, அதில் நாடக நடிகர்களை நடிக்க வைத்தது.
ReplyDeleteசெய்த நலத்திட்டங்களை விட வடிவேலுக்கு முக்கியத்துவம் கொடுத்தது(இதில் சிலர் ஜெயலலிதாவின் முகத்தை மறந்தே போனார்கள்).
இன்னும் ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவிக்காதது.
குடும்ப பிரச்சனைகள் வெட்டவெளியில் நடப்பது.
நல்ல கட்டுரை ! நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள் !
ReplyDeleteபாண்டியன்ஜி verhal
மிக மிக அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள் இதை அப்படியே முரசொலியில் பிரசுரிக்கலாம். அல்லது மு.க.ஸ்டாலினின் வலைத்தளத்தில் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். நானும் முன்னாள் திமுக அனுதாபி தான். கருணாநிதி ஈழ விஷயத்தில் காட்டிய அலட்சியம் பற்றியும் எழுதியிருக்கலாம். ஒரு பொழுதும் அவரது தோழன் காங்கிரஸாக இருக்கமுடியாது. முக்கியமாக கலைஞர் உட்பட அவரது குடும்பத்தார் உட்பட சினிமாத்தொழிலுக்கு இனி எட்டிக்கூட பார்க்கக்கூடாது என்பது எனது கட்டளை (முன்னாள் திமுக அனுதாபியாக) என்னை பொருத்தவரை சன் டிவியே ஒரு மைனஸ் தான் அது பொதுமக்களின் பார்வையில் உறுத்திக்கொண்டெ இருக்கும் ஒரு அவலட்சணம் திமுக ஜெயலலிதா காட்டும் பிடிவாதத்தை தன் கட்சியிலும் நிர்வாகத்திலும் காட்டியிருந்தால் திமுகவுக்கு இப்படி ஒரு முன்னாள் தொண்டன் இப்படி பின்னுரை இட்டிருக்கமுடியாது.
ReplyDelete//வெறும் 119 சீட் தான் நிற்கிறோம் என்ற போதே கண்டிப்ப்பாக இந்த கட்சி ஜெயிச்சா கூட்டணி ஆட்சி வரும் என்பது மக்களுக்கு தெரிந்து விட்டது. அதற்கு மக்கள் ஒத்துக்கவில்லை. அதனால் தான் மிக முக்கியமாக திமுக தோற்றது. //
ReplyDeleteபுதுமையான பார்வை!
பெரியவர் பழம் தின்னு கொட்டை போட்ட பலே அரசியல்வாதியா அண்ணே!
இப்படிப்பட்ட தொண்டர்களே கட்சியை தாங்கி பிடிக்கிறார்கள் என்பதை மறந்து விட்டு குடும்ப உறுப்பினர்களை தாங்கி பிடித்ததுதான் இந்நிலைக்கு காரணம்.
ReplyDeleteவித்தியாசமான் பார்வை அய்யா!!!!
நன்றி
இன்னும் நீங்கள் முழுமையான உண்மைகளுடன் இந்த தோல்வியை பார்க்கவில்லை.
ReplyDeleteஎன்னது, அவர் குடும்பத்தினர் தயாரித்த படம் கொஞ்சம்தானா? //எடுப்பது 3 படம். அதற்கு 300 விளம்பரம் அவர்கள் தொலைக்காட்சியில். அவர்களை தவிர வேறு யாரும் படம் எடுக்க முடியவில்லை என பரப்புரை செய்தது மக்களிடம் சென்று சேர்ந்தது// இல்லை. கடந்த 18 மாதங்களில் இவர்கள் குடும்பத்தினர் எடுத்த / விநியோகித்த படங்கள் தவிர மற்றவை மிக குறைவு. எங்கிருந்து வந்தது இவர்களுக்கு இவ்வளவு பணம்? இவர் கொடுத்த வரிவிலக்கு திரையரங்குகளை மிரட்டி மற்றவர் படம் வர விடாமல் செய்ததற்க்கே உதவியது! மக்களாவது மண்ணாவது!
கிட்டதட்ட நீங்கள் சொல்வது ஒரு தி மு க காரரிடம் எதிர்பார்க்க கூடிய அளவு நேர்மையான அலசல். உண்மைக்கு நீங்கள் இன்னும் கொஞ்சம் தூரத்தில் தான்!
இந்த பெரிசு ரங்கன் ஐயா கிட்ட தேர்தல் / பிரசாரம் எல்லாத்துக்கும் முன்னேயே பேசித் தொலைச்சிருக்கணும். விட்டுட்டீங்களே! இந்த அளவு விவரம் கொடுப்பதே ஆச்சரியம், இந்த அளவு நேர்மைக்கு வாழ்த்துகள்!
ReplyDeleteஅருமையான பதிவு. உண்மையான தி மு க தொண்டர்களை மறந்து , பணத்தையும் , சினிமா நட்சத்திரங்களையும் நம்பியதன் விளைவுதான் இது. தலைவருக்கு டெல்லியில் தனது குடும்ப உறுப்பினர்களின் பதவி மிக முக்கியமாக தெரிந்தது, அதனால்தான் தனது கட்சியை காங்கிரசிடம் அடகு வைத்தார். மாறனின் ஆதிக்கம் ஒழிக்கப்பட வேண்டும்.குடும்ப ஆதிக்கம் கட்டுப்பட வேண்டும்.பணத்தை நம்பாமல் தொண்டர்களிடம் நெருக்கத்தை ஏற்படுத்தி , மக்களிடம் நெருங்கி வந்து செயல்பட்டால் திமுக மீண்டும் எழலாம்.
ReplyDeleteசம்பத் , முன்னாள் திமுக அபிமானி.
குடும்ப பிரச்சனைகள் வெட்டவெளியில் நடப்பது.
ReplyDelete//இப்படிப்பட்ட தொண்டர்களே கட்சியை தாங்கி பிடிக்கிறார்கள் என்பதை மறந்து விட்டு குடும்ப உறுப்பினர்களை தாங்கி பிடித்ததுதான் இந்நிலைக்கு காரணம்.//
ReplyDeleteVery good point
விருச்சிககாந்த் மாதிரி ரங்கன் மாமாவும் புது கேரக்டருங்களா?
ReplyDeleteகருணாநிதி எந்த அளவுக்கு இந்தத் தோல்விக்கு தகுதியானவரோ, அதே அளவுக்கு ஜெயலலிதா இந்த வெற்றிக்கு தகுதி அற்றவர்.
ReplyDeleteவரும் காலங்களில் தி.மு.க இருக்குமா? எப்படியும் ஜெயலலிதாவை மக்கள் நிராகரிக்கப் போகிறார்கள். அந்த நிலையில் விஷகாந்து மாற்றாக வரமாட்டார் என்பதற்கு சாத்தியங்கள் இல்லையா?
இனிமேலாவது, என் குடும்பம் உள்ளே போனாலும், தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து 'போர்க் குணத்துடன்' தி.மு.க செயல்பட வாய்ப்பிருக்கிறாதா?
திரவிடத்துவாவும், இந்துத்வாவும் தமிழர்களால் நிராகரிக்கப்பட்டு, 'தமிழர்' அடையாளத்துடன் ஒரு இயக்கம் உருவாக வாய்ப்பிருக்கிறதா?
சுருங்கச் சொன்னால், தி.மு.க.தோன்றியதற்கான இலக்கை முழுமையாக அடையமுடியாவிட்டாலும் ஓரளவுக்கு நிறைவேற்றியிருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் அந்தக் கட்சியின் தேவை நீர்த்துப் போய்விட்டாதா? மாற்றாக புதிய இயக்கத்தை மக்கள் எதிபார்க்கிறார்களா?
-------------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள் - மே '2011)
உதயநிதி, தயாநிதி பற்றி யாரும் சொல்லாத கருத்துகளை சொல்லியிருக்கிறீர்கள். நல்லதொரு கட்டுரை.. வாழ்த்துகள் ! !!
ReplyDeleteபெரிசு,உங்கள் மூலவர் அண்ணா துரையே கூத்தாடி குண்டடிபட்ட poster போட்டு தான் ஆட்சிக்கே வந்தாரு,இப்ப போய் சினிமாவை திட்டறே.
ReplyDeleteஜெயலலிதா திருந்தமாட்டார் சரி.கருணாநிதி திருந்திவிட்டார் என்பதற்கு அடையாளமாய் அவர் சட்டசபைக்கு சென்று சாதாரண உறுப்பினர் கடமை செய்யட்டுமே.
ReplyDeleteமிக அருமையாக எழுதி உள்ளீர்கள் . 3 வருட இடைவெளியில். தி மு க சுயபரிசோதனை செய்து , தவறுகளை மாற்றிக்கொண்டால் , நிச்சயம் 2014 ல் மிண்டும் எழுச்சி பெரும்.. இதை விட பெரிய தோல்வியில் இருந்து மிண்டது தானே திமுக.
ReplyDeleteஆனைக்கு அர்ரம் - குதிரைக்கு குர்ரம் ஹாஹ்ஹா! திமுகவின் பெரிய பின்னடைவு ஸ்பெக்ட்ரம் பிரச்சனை///
ReplyDeleteஇப்படியொரு பிரச்சனை இருந்தும் திமுக வின் அனுதாபியாக இருப்பது பெரிய வேதனைங்க.... உங்க பணத்தை உங்களுக்கே தெரியாம எடுத்திருக்காங்க என்பது முதலில் அறியவேண்டும்.... அறியாமை நன்றன்று!
பிகு: அதிமுக வை இன்னும் மூன்று வருடங்கள் கழித்து விமர்சிக்கலாம் என்பது என் கருத்து!
இந்த பதிவுக்கு இன்னொரு சொம்புதூக்கி பின்னூட்டம் போடலையே! அதன்பா அந்த வென்னபய லக்கிலுக்
ReplyDeleteகலைஞர் இதை படித்தால் இன்னுமா இந்த ஊர் நம்மளை நம்புது..?என்று சந்தோசப்பட்டிருப்பார்..அருமையான வியாக்கியானம்..அவ்வ்வ் கொட்டாவிதான் வருது!
ReplyDelete35 சீட் காங்கிரஸ் க்கு கொடுத்து 150 தொகுதியில நின்றிருந்தா மக்கள் மின்வெட்டு,அராஜக ஆட்சி,ஸ்பெக்ட்ரம் ஊழல் எல்லாம் மறந்துடுவாங்களா அபி அப்பா?
ReplyDeleteஇன்றைக்கு யோசனை செய்கிறார் மத்திய அரசில் இருந்து விலக. அன்றைக்க செய்திருந்தால் நன்றாக இருந்திறிக்கும். குடும்பமே சேர்ந்து அடித்த கும்மாலம் இப்போழுது வெளி வருகிறது. மூன்றாவது அணி என்று ஒன்று பலமாக இருந்திருந்தால் நன்றாக இருந்திறிக்கும்.
ReplyDeleteமிக சரியான பதிவு,முதலில் இந்த தேர்தல் முடிவை ஜெயலலிதாவுக்கு சாதகமாக யாரும் எடுத்துகொள்ளவேண்டம்,இது ஜெயாவுக்கு ஒரு எச்சரிக்கை தான்.தி மு க தோல்விக்கு முதன் முதல் காரணம் ஈழ பிரச்சனை,அதன் உடன் சேர்த்து நம் மீனவர்கள் செத்த பொழுது கடிதம் மட்டும் எழுதிக்கொண்டு இருந்தார் இது மிகவும் எரிச்சல் ஊட்டி இருக்கும் மீனவ சமுதாய மக்களுக்கு
ReplyDelete100% true...
ReplyDelete80% true
ReplyDeleteyov mudalil unn dmk kannadiya kalatitiu paruyya. unmai purium.
ReplyDelete"""எப்போதும் போல இந்த கட்டை சாகும் வரை திமுகதான் என்பதை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொள்வதில் பெருமை அடைகின்றேன்""'
ReplyDeleteiam with you sir!
Tamilan
Qatar
//
ReplyDeleteஇந்த கட்டை சாகும் வரை திமுகதான் என்பதை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொள்வதில் பெருமை அடைகின்றேன்
//
பகுத்தறிவு கன்னா பின்னாவென மிஸ்ஸிங். :))// Ha Ha
////ஜெயித்தால் இன்னேரம் ரயில்வேயை எங்களுக்கு கொடு என டெல்லியை மிரட்டலாம் (தமிழக நலன் கருதி).///
ReplyDeleteதமிழக நலன் கருதி - இது காமடிதான?
தி மு க இந்த முறை வெற்றி வாய்ப்பை இழந்தது குறித்து சுய பரிசோதனை செய்ய யுவ விடம் சொல்லி ஒரு கட்டுரை எழுத சொல்லலாம் என்று நினைத்திருந்தேன்.. ஆனால் உங்கள் இந்த பேட்டி வடிவிலான கட்டுரை அதை கொஞ்சம் நிவர்த்தி செய்கிறது.. இனி வரும் காலங்களில் என்ன செய்யலாம் என்றும் நம் தோழர்கள் யோசனை செய்து அதையும் எழுதலாம்... மிக்க நன்றி... என்றும் என்றென்றும் கலைஞரின் ஆதரவாளன் நான்... இந்த சோதனை காலத்தில் இருந்து கலைஞர் மீண்டு வருவார்.. என்றும் நாமும் அவருக்கு துணை நிற்போம்...
ReplyDeleteதிமுக எனும் தியாக தீபத்தை அணைக்க எந்தக்கொம்பனும் இன்னும் பிறக்கவில்லை இனியும் பிறக்கப்போவதுமில்லை. தலைவரின் சிற்சில தவறுகள் பெரிதாக்கப்பட்டு திமுகவை தற்காலிகமாக வீழ்த்தியிருக்கிறது என்பதே உண்மை. ஊழல்தான் இத்தோல்விக்கு காரணம் என எவனும் கூறினால் அவன் அரசியல் மடையன் என்றே சொல்லுவேன். சுதந்திர இந்தியாவின் நேரு கால முந்த்ரா ஊழல் முதலாக இன்றிருக்கும் ஜெயாவரை ஊழலினால் பாதிக்கப்படாத அரசியல்வாதிகள் யாரும் இல்லை. அப்படியிருக்க இது ஊழலால் ஏர்பட்ட தோல்வியல்ல.. காலச்சூழல் மற்றும் தற்போதைய வேகமான உலகில் மணிக்கொருதரம் மாற்றம் விரும்பும் மக்கள் ஆட்சியை மாற்றிப்பார்த்திருக்கிறார்கள். இதுதான் தமிழகத்தில் 1991-ல் இருந்து தொடர்கிறது. அவ்வளவே.. ஆகையால் மீண்டும் உதயசூரியன் உதிக்கும் என்பது திண்ணம்.
ReplyDeleteதமிழ்த்தம்பி