பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

September 13, 2011

திரும்பிப்பார்!!!




குடியரசுதலைவர் - ஜனாதிபதி தேர்தலுக்கு அனைத்து மாநில சட்டமன்ற உறுப்பினர்களும் கூட ஓட்டு போட வேண்டும் என்பது குப்பனுக்கும் சுப்பனுக்கும் தெரிந்திருக்கும் அளவுக்கு சில அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட அப்பாடக்கர்களுக்கு ஏனோ தெரிவதில்லை, அல்லது தெரியாதது போல இருக்கின்றனர். ஏனனில் கலைஞரின் ஆதிக்கம் என்பது தமிழக மற்றும் இந்திய அரசியலில் தன் கணக்கை துவங்கிய வருடம் 1957. ஆம் 1957 முதலே சட்டமன்ற உறுப்பினர் இந்தியாவின் இந்த மூத்த பழுத்த அரசியல்வாதி. அதை சொன்னால் ஏனோ எட்டிக்காயாய் இருக்கின்றது சிலருக்கு. சமீப காலமாக கலைஞரை பற்றிய வசவுகள் இணைய ஊடகங்கள் மூலமாக திட்டமிட்டு பரப்பப்படும் போது இப்போது கலைஞரின் பெருமைகள் அடங்கிய ஒரு எஸ் எம் எஸ் சுற்றி வருவது கலைஞர் எதிர்ப்பாளர்களுக்கு எரிச்சலை உண்டு செய்துள்ளது. சமகால அரசியல் நிகழ்வுகளையே அரைத்து கொண்டிருப்பவர்களிடம் நான் சொல்கிறேன், அதே கலைஞரின் வார்த்தைகளில் .... திரும்பிப்பார்...

1957ல் கலைஞர் உட்பட 15 பேர் சட்டமன்றத்தில் காலடி எடுத்து வைத்தாகிவிட்டது. குடியரசு தலைவர் தேர்தல் வருகின்றது. எப்போதும் போல வடநாட்டவர் போட்டி. வடக்கு வாழ்கின்றது. தெற்கு தெய்கின்றது என்கிற மனக்கிலேசம் தென்னகத்தில் பரவலாக இருந்த நேரம் அது. அண்ணாவின் தலைமையில் கூடிய சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் ஜனாதிபதி தேர்தலில் ஓட்டு போடுவதில்லை என முடிவெடுக்கின்றது. ஆனால் அப்போதைய மத்திய அரசுக்கு பிராந்திய கட்சிகளின் ஆதரவு ஒரு பொருட்டல்ல. அவர்களை மதிப்பதும் இல்லை. ஆனால் பிற்காலம் எப்படி ஆகும் என்று அவர்களுக்கு அப்போது கணிக்க தெரியவில்லை, கணிக்க வேண்டிய அவசியமும் நேருவுக்கு நேரவில்லை அப்போது.

ஆனால் எழுபதுகளின் ஆரம்பத்தில் குடியரசு தலைவராக இருந்த ஜாகீருசேன் மறைவையொட்டி நடக்க இருந்த குடியரசு தேர்தலில் திமுகவும் , கலைஞரும் அந்த தேர்தலில் குடியரசு தலைவரை தேர்ந்தெடுக்க முக்கிய ஆளுமையாக இருந்தனர் என்பதை தான் சொல்ல வருகின்றேன்.

மத்தியில் ஆளும் கட்சி காங்கிரஸ் கட்சி. அவர்கள் கை காட்டும் வேட்பாளர் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருந்தது. ஆனால் வழக்கம் போல அவர்களுக்குள் சண்டை. பாபுஜெகஜீவன்ராம் அதாவது இப்போதைய நாடாளுமன்ற சபாநாயகர் மீராகுமாரின் தந்தையார் தலித் இனத்தை சேர்ந்தவர் குடியரசு தலைவராக வேண்டும் என்பது இந்திராகாந்தியின் சாய்ஸ். ஆனால் காங்கிரஸ் தலைவர் நிஜலிங்கப்பா தன் தென்னிந்தியாவை சேர்ந்த நீலம் சஞ்சீவரெட்டியை ஜனாதிபதியாக ஆக்க வேண்டும் என பிடிவாதம்.

பிரச்சனை என்று வந்தாகிவிட்டது. கட்சிக்குள் ஓட்டெடுப்பு நடத்தி யார் வேட்பாளர் என முடிவு செய்யலாம் என காங்கிரசின் ஆட்சிமன்ற கூட்டம் நடந்து ஓட்டெடுப்பும் நடந்து நிஜலிங்கப்பாவின் ஆதரவு பெற்ற நீலம்சஞ்சீவரெட்டி தேர்வானார். அது வரை எல்லாம் நல்லா தான் போய்கொண்டு இருந்தது. கலைஞர் ஜனாதிபதியை தேர்ந்தெடுத்த ஆளுமை தெரியாதவர்களே! நன்றாக கேளுங்கள், அந்த நேரத்தில் தான் கலைஞர் மூக்கை நுழைக்கிறார். தென்னிந்தியாவை சேர்ந்த ஒருவர் நீலம் சஞ்சீவரெட்டி ஜனாதிபதி ஆவது ஒரு சந்தோஷம் தான். ஆனாலும் அதிலும் குறிப்பாக தமிழும் தெரிந்த ஒருவர் ஜனாதிபதி ஆனால் என்ன என்கிற ஆர்வம் கலைஞரை ஒரு பிராந்தியகட்சியின் தலைவர், பிராந்திய கட்சியை சேர்ந்த முதல்வர் அங்கே இந்தியா சுதந்திரம் அடைந்து 25 ஆண்டு ஆன பின்னே ஒரு பிராந்திய கட்சி ,மாநில கட்சி முதன் முதலாக ஜனாதிபதி தேர்வில் தன் ஆளுமையை செலுத்த தொடங்கியது. யார் ? கலைஞர்!

அப்போது துணை ஜனாதிபதி மற்றும் ஆக்டிங் ஜனாதிபதியாக இருந்த வி.வி.கிரி தான் போட்டியிட போவதாக அறிவிக்கிறார். ஒரு மனதாக தேர்ந்தெடுக்க வேண்டிய பதவி இப்போது தேர்தல் என்னும் நிலைக்கு தள்ளப்பட்டது. எதிர்கட்சிகள் ஒன்று கூடின. பலரும் பல கருத்துகளை சொல்ல கலைஞர் ஜெயப்ரகாஷ்நாராயணன் நிற்கட்டும் என்கிறார். இப்படியாக எல்லோரும் கூடிக்கூடி பேசுவது காங்கிரஸ் வேட்பாளர் நீலம் சஞ்சீவரெட்டிக்கு சாதகமாக அமையகூடிய சூழல். காலம் கடந்து போய் கொண்டிருந்த நேரத்தில் திடீரென கலைஞர் ஒரு அறிவிப்பு செய்கின்றார். திராவிட முன்னேற்ற கழகம் ஜனாதிபதி தேர்தலில் வி. வி. கிரி அவர்களை ஆதரிக்கும் என்று.

ஆக தேர்தலில் மந்திய ஆளும் கட்சி சார்பில் நீலம் சஞ்சீவரெட்டியும் எதிர்கட்சிகள் சார்பாக வி.வி. கிரியும் வேட்பாளர்கள். அப்போதைய பாஷையில் சொல்லப்போனா அபேட்ஷகர்கள். இந்திரா ஒரு அறிவிப்பு செய்தார் புத்திசாலித்தனமாக. கொறடா உத்தரவு போட மாட்டார். தங்களுக்கு இஷ்டமானவர்களுக்கு ஓட்டு போடலாம் என தன் கட்சிகாரர்களுக்கு உத்தரவு போடப்படுகின்றது. தேர்தல் முடிந்தது. வி.வி.கிரி வெற்றி பெற்று குடியரசுதலைவர் ஆகின்றார். தமிழ் தெரிந்த ஒருவர் ஆகின்றார். முதல் நன்றியே கலைஞருக்கு தான் சொல்கின்றார்.

ஆக அந்த குடியரசு தலைவர் தேர்தலில் கலைஞரின் ஆளுமை இருந்ததா இல்லியா? முதன் முதலாக மாநிலகட்சி ஒரு குடியரசு தலைவர் தேர்தலில் மூக்கை நுழைக்க வைத்தவர் கலைஞரா இல்லியா? ஆளும் மத்திய அரசின் வேட்பாளரை தோற்கடித்து எதிர்கட்சி வேட்பாளர் வி வி கிரி அவர்களை ஜனாதிபதி நாற்காலியில் அமரவைத்தவர் கலைஞரா இல்லியா?

அதன் பின்னர் நீலம் சஞ்சீவரெட்டி ஜனாதிபதியாக ஆனார். அதற்கு அவருக்கு கலைஞரின் உதவி தேவைப்பட்டது. கலைஞருக்கு கடிதம் எழுதினார். ஆதரவு கொடுக்கப்பட்டது. பின்னர் அவருக்கு பதவி காலம் முடிவடையும் போது அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை வந்த போது இந்திராவின் அழைப்பினை ஏற்று டெல்லி சென்றார் கலைஞர். அப்போது இந்திராவின் மனதில் இருந்த இருவர் ஆர். வெங்கட்ராமன் மற்றும் நரசிம்மராவ். நரசிம்மராவ் வேண்டாம் என கலைஞர் மறுத்த காரணம், ஏற்கனவே பதவில் இருந்து வருபவர் ஆந்திராவை சேர்ந்தவர், மீண்டும் ஆந்திராவை சேர்ந்தவர் வந்தால் வடநாட்டவர்களின் ஒட்டு மொத்த வெறுப்பும் தேவையில்லாமல் தாங்க வேண்டும், அதே போல ஆர்.வெங்கட்ராமன் வருவதிலும் கலைஞருக்கு ஒரு சதவிகிதம் கூட ஆர்வம் இருக்காது. அதற்கான காரணம் 1980 சட்டசபை தேர்தலில் திமுகவின் தோல்விக்கு ஆர்.வெங்கட்ராமைன் பொறுப்பற்ற பேச்சுகள் என்று மனதில் நினைப்பு. ஆனால் அதை காரணமாக இந்திராவிடம் சொல்லாமல் பிரதமராகிய நீங்களும் உயர்சாதி, ஆர்.வெங்கட்ராமனும் உயர்சாதியாக இருப்பதால் மக்களிடம் ஒரு வித இறுக்கம் தென்படும் , எனவே பொற்கொல்லர் வகுப்பை சேர்ந்த கியானிஜெயில்சிங் ஒரு சிறுபான்மை மதத்தையும் சேர்ந்திருப்பதால் அவரையே குடியரசு தலைவர் ஆக்கலாம் என சொல்லி அதற்கு திமுக, அதிமுக என ஆதரவும் கொடுத்து ஜனாதிபதியாக்கினார். பின்னர் ஆர்.வெங்கட்ராமன் ஜனாதிபதி ஆன பின்னே இந்தியாவுக்கு பிடித்த பீடையாக பல கெட்டகாரியங்கள் நடந்தன என்பதும் வரலாறு. கலைஞர் முன்பு ஆர்.வெங்கட்ராமனை ஜனாதிபதியாக ஆக்காமைக்காக தன் நன்றிக்கடனை கூட ஒரு ஹிண்டுவில் வந்த வாசகர் கடிதத்தை வைத்தே திமுக ஆட்சியை கலைத்து தன் மனக்காயத்துக்கு மருந்து போட்டுக்கொண்டார் என்பதும் வரலாறு.

ஆக கலைஞரின் ஆளுமைகள் இந்திய அரசியலில் இருந்ததா இல்லையா என்பதை சும்மா சிரித்து வைப்போமே என சிரித்து வைப்பவர்களை விட சரித்திரம் அறிந்து கொள்ள ஆர்வமாய் இருப்பவர்களுக்காக எழுதி வைத்தோம் என்னும் மனதிருப்தியுடன் எழுதுகிறேன்.

இதோ இந்த பதிவிற்கு காரணமாக இருந்த எஸ் எம் எஸ் செய்தி!

\\கோடிக்கணக்கான ரசிகர்கள்
70 ,00,000 கிலோமீட்டருக்கும் அதிகமான பயணங்கள்
80,000 மணிநேரத்துக்கும் அதிகமான உரைவீச்சுக்கள்
1000 த்துக்கும் மேற்பட்ட உடன்பிறப்பு கடிதங்கள்
1000 த்துக்கும் மேற்பட்ட எழுத்தோவியங்கள்
500 நாட்களுக்கும் அதிகமான சிறைவாசம்
75 திரைப்படங்கள்
72 ஆண்டுகால பொது வாழ்க்கை
70 ஆண்டுகாலமாக பத்திரிகையாளர்
65 ஆண்டுகால கலைத்துறை பங்களிப்பு
60 ஆண்டுகால வரலாற்றில் தொடர்ச்சியான தேர்தல் வெற்றி
50 ஆண்டுகாலமாக சட்டசபை பணிகள்
18 ஆண்டுகாலம் தமிழக முதல்வர்
இந்தியாவின் 8 பிரதமர்கள் 7 குடியரசு தலைவர்களை உருவாக்கியதில் அரசியல் ஆளுமை
3 தமிழின் நாயகன்
என்றும் தமிழினத்தின் தலைவர்
ஒரே கலைஞர்

அப்போது ஆரம்பித்த கலைஞரின் ஆளுமை, குடியரசு தலைவர் தேர்தலில் இன்று வரை தொடர்கின்றதே, அது பற்றியும் இந்த பதிவிலே சொல்ல ஆசை தான். பதிவின் நீளம் கருதி அதை எல்லாம் தனிப்பதிவாக இட இருக்கின்றேன்!


நன்றி: திராவிட இயக்க வரலாறு - பாகம் 2 ஆசிரியர் ஆர். முத்துக்குமார் மற்றும் பழகிய பழைய திமுக பெரியவர்கள்

7 comments:

  1. நல்ல பதிவு.
    நன்றி.

    ReplyDelete
  2. மொக்கை பதிவு

    ReplyDelete
  3. நான் அரசியல் பதிவு படிப்பதில்லை ,...
    நான் வாசித்த முதல் பதிவு ...
    நன்றி

    ReplyDelete
  4. அவருடைய திறமைகளுக்கு தலை வணங்குகிறேன். இவ்வளவு செல்வாக்கு இருந்ததினால் பயன் என்ன? குஜராத் இன்று இந்தியாவிற்கே முன்னோடியாக இருக்கிறது. CII நிகழ்ச்சியில் ஆற்காட்டார் பேசியது? நன் திமுக காரனோ, மற்ற கட்சிகாரனோ இல்லை. ஒரு சாதாரண இந்திய பிரஜை.1967ல் நடந்த தேர்தலின் போது, அண்ணா மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கூறியது நினைவுக்கு வருகிறது... ஆளும் கட்சியினரான காங்கிரஸ் தலைவர்கள், "நாங்கள் அணை கட்டினோம், வாய்க்கால் வெட்டினோம். கிராமங்களுக்கு மின்சார விளக்குகள் போட்டோம்' என, பேசிவருகின்றனர். இது எப்படி இருக்கிறதென்றால், ஒரு கணவன், என் மனைவிக்கு புடவை எடுத்துக்கொடுத்தேன், ரவிக்கை தைத்துத் தந்தேன் என, கூறுவது போல இருக்கிறது. தன் மனைவிக்கு, கணவன் தானே வாக்கித் தரவேண்டும். மற்றவர்கள் தரமுடியுமா? அதுபோல ஆட்சியாளர்கள் மக்களுக்கு அதைச் செய்தேன், இதைச் செய்தேன் எனக் கூறுகின்றனர்.ஆட்சியாளர்கள் தானே, மக்களுக்கு நன்மைகள் செய்து தரவேண்டும் என, அவர் பேசியது இன்றைக்கும் பொருத்தமாகவே இருக்கிறது!அவரிடம் பிடிக்காத பலவற்றில் கெட கேள்விக்கு பதில் சொல்ல தெரியாமல் திசை திருப்புவது. எதற்க்கெடுத்தாலும் அதிமுகவோடு ஒப்பிட்டு பேசுவது, அவரே கேள்வி பதில் பாணியில் அவரே கேள்வி கேட்டு பதில் சொல்வது. ஒரு நல்ல தலைவனுக்கு அது அழகில்லை. அவருடைய வயதிற்கு தலை வணங்குகிறேன். மற்றபடி அவரும் 10 த்தோடு 11.பதிவிற்கு நன்றி..!

    ReplyDelete
  5. 100la onnumee illaye. ippa amma pudichu ulla 100 naaL vachcha antha gap fill ahumaa

    ReplyDelete
  6. arumaiyana pathivu.
    http://makkalai-thedi.blogspot.in/2011/06/blog-post.html

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))