பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

June 20, 2012

அத்திப்பூக்கள், சரவணன் - மீனாட்சி , தங்கம், புதியதலைமுறை இன்ன பிற...


போலி சாமியார்களை விட சீக்கிரமா  கவனிக்கப்பட வேண்டிய லிஸ்டிலே "சீரியல் சாமியார்கள்" தான் இருக்காங்க. எல்லா சீரியல்லயும் ஒரு சாமியார் இருக்காங்க. பெரும்பாலும் கதாநாயகி போகும் கோவில்ல தான் இருப்பாங்கன்னு நீங்க நினைச்சா... ஐ ஆம் சாரி.... கதை நகரும் களங்கள் எல்லா இடத்திலும் ஏதேனும் கோவில் இருக்குமே, அங்கல்லாம் ஆஜர் கொடுக்குறாங்க. கேட்டா (நான் கேட்கலைங்க... கதாநாயகி கேட்டா 'நான் இங்க 'தீர்த்த யாத்திரை'க்கு வந்திருக்கேன் என ஒரே பதிலை சொல்றாங்க.காவி உடை, குவாட்டர் கண்கள் (அதாவது சின்ன கண்)அதிலே "வெறி"த்த பார்வை... பின்ன இருக்காதா? அழகான கதாநாயகி கிட்டே தான் அவங்க டூட்டி... ஒட்டிய தாடி, தவிர கதாநாயகி "என் கஷ்டம் எல்லாம் எப்ப தான் தீரும்" என கேட்கும் டீபால்ட் கேள்விக்கு ... அஃப்கோர்ஸ் பார்வையாளர்களாகிய நாமும் தான்... பதில் சொல்லாம மோட்டுவளையை பார்ப்பாரே ... அப்போ அச்சு அசலா இலங்கை பிரச்சனை எப்போ தீரும்னு மன்மோகன்சிங்கை நிருபர்கள்  கேள்வி கேட்டா அவரு பார்ப்பாரே ஒரு பார்வை அது போல "எனக்கே தெரியலையேம்மா" என சோனியா காந்தி போட்டோவை பார்ப்பாரே அதே பார்வை...

இதல்லாம் எங்க இருந்து ஆரம்பிச்சுது இதல்லாம் என யோசித்து பார்க்கிறேன்... கிட்ட தட்ட "அண்ணாமலை" சீரியல்ல ஒரு கோமண சாமியார் வழியா தான் இந்த தொத்து வந்திருக்கனும் என நினைத்துக்கொண்டேன். வாழ்க சித்தி. வாழ்க எம் ஆர் ராதா!

************************

தம்பி வீடு கட்டும் போது மார்பிள் போட வந்தவரிடம் விலை சம்மந்தமா பேரம் நடந்த போது அவரிடம் "என்ன சார் நீங்க? அதான் மார்பிள் போடுறவங்க எல்லாம் ஹேர் கட் பண்ணிக்க போனா கூட ஒரு இரண்டு கோடி ரூபாய் பாக்கெட்ல போட்டு கிட்டு போறாங்க. டீ குடிக்க போனா ஒரு கோடி ரூபாய் எடுத்துட்டு போய்விட்டு மீதி சில்லரையை டிப்ஸ் ஆக கொடுத்டுட்டு வர்ராங்க, நீங்க என்னடான்னா சதுர அடிக்கு ஒரு ரூபாய் குறைக்க மாட்டேன்னு அடம் பிடிக்கிறீங்க"என கேட்டு வச்சேன். அவர் பதறிப்போய் "அய்யோ எங்க இந்த கூத்து எல்லாம் நடக்குது?" என கேட்க  நான் சொன்னேன்... "மதியம் ரெண்டு மணிக்கு அத்திப்பூக்கள் பாருங்க சார். சன் டிவில வருது.அதிலே தான் இதல்லாம்" என சொல்ல அந்த மார்பிள் ஓனர் கொஞ்சம் பதட்டம் தணிந்து "ஆமா சார் ஆமா. நானும் இதை எல்லாம் கேள்விப்பட்டு அதை ஒரு நாள் பார்த்தேன். இங்க 25,000 ரூபாய் செக் ரிட்டர்ன் ஆகிடாம இருக்க காலை 12 மணிக்குள்ள நான் படும் பாடு எனக்கு தான் தெரியும்" என சொன்னார். அத்திப்பூக்கள் சீரியலை என்ன செய்யலாம்? வாடகைத்தாய், வளர்ப்பு அம்மா, அம்னீஷியா, டொம்னீஷியா, சீரியல் சாமியார், மந்திரக்கிழவி, கம்பனி போர்டு மீட்டிங், பங்கு வர்த்தகம் என சகல விஷயங்களும் அத்திப்பூக்கள்ல கொலை செய்யப்படும். முடிஞ்சா பாருங்க. சவாலாகவே சொல்றேன்.. முடிஞ்சா பாருங்க... நீங்களே சாமிய வேண்டிப்பீங்க... சீக்கிரம் அது முடிஞ்சு தொலையனும் என!

*****************************

"தங்கம்"... இரவு சன் டிவில ஒளிபரப்பு ஆகுது. நான் பள்ளி படிக்கும் காலத்தில் வைகாசி பொறந்தாச்சு என்னும் பிரசாந்த் அறிமுகம் ஆன படத்திலே வந்து அறிமுகம் ஆன காவிரி என்னும் பெண்... இல்லை .. இல்லை...ஆண்ட்டி தான் இதிலே காமடி ரோல் பண்றாங்க. அவங்க மட்டுமா காமடி பண்றாங்க. அதிலே ஸ்ரீலஸ்ரீ விஜயரகுநாத பாஸ்கர சேதுபதி ரங்கராஜாய தியாகராஜாய தெருப்புழுதி மண்ணாங்கட்டியாக என்னவோ ஒரு தொண்டைமான் என்னும் செல்ல பெயராலும் "அய்யா" என்னும் முழுப்பெயராலும் அழைக்கப்படும் கலைக்குடும்ப தலைமகன் விஜயகுமார் அவர்கள் முழு நேர காமடியன். அவர் மச்சானாக குலசேகரன் என்னும் கேரக்டரில் வரும் நபர் நவதுவாரங்களிலும் மிளகாய் வச்ச மாதிரி பேசும் ஆள் தான் வில்லன். இன்னும் சொல்லப்போனா காமடி வில்லன். இந்த வில்லன் ஆக்ரோஷமா வசனம் பேசினா குழந்தைகள் கெக்கேபிக்கே கெக்கேபிக்கேன்னு சிரிக்கும். இந்த அய்யா இருக்காரே அய்யா அவரு அப்பப்ப அந்த வில்லனை அழிக்க கொந்தளிச்சு எழுவார். பின்ன அவர் மகள் வனிதா விஜயகுமார் அடிச்ச அடில கைல கட்டு போட்டு கிட்டு நடித்து வருவது நியாபகம் வந்து தொலைக்கும் போலிருக்கு. அப்படியே காத்து புடுங்கி விட்ட மாதிரி சாய்ந்து உட்காந்து விடுவார். முன்பெல்லாம் ஒரு படிப்பும் வரலைன்னா பெற்றோர்கள் "இவனுக்கு படிப்பே வரலை. அய்யோ பாவம் ஒரு டீச்சர் டிரைனிங்காவது படிக்க வைப்போம்" என படிக்க வைப்பாங்க. ஆனா இங்க அய்யா குடும்பத்திலே கதையிலே ஒரு புதுமை இருக்கட்டுமே என ஐ ஏ எஸ் படிக்க வைத்து எல்லாரும் அங்க இப்ப ஐ ஏ எஸ் ஆகிட்டாங்க. ஒரு கட்டத்துல நான் முதலில் சொன்ன அந்த காமடி கேரக்டர் காவிரியும் ஐ ஏ எஸ் படிக்கிறாங்க. ( அதுக்கு முன்ன அவங்க படிச்ச படிப்பு எட்டாம் கிளாஸ் பெயில் என்பது உபரி தகவல்) . சீரியல் முடியும் சமயத்தில் அனேகமாக அய்யா வீட்டுல பால் கறக்கும் மினிம்மா முதல் பீஸ் போட வரும் பையன்,தெவசம் பண்ண வரும் அய்யர்  வரை ஐ ஏ எஸ் ஆகிவிடும் அபாயம் உள்ளது. இது சம்மந்தமாக ஒரிஜினல் அக்மார்க் ஐ ஏ எஸ் அதிகாரிகள் சங்கத்திலே எதுனா ரிட் போட்டு அந்த தங்கம் சீரியலை ஓவர் காமடி உடம்புக்கு ஆகாது என சொல்லி தடை வாங்க வேண்டும் என சமூகத்தின் சார்பாக விண்ணப்பிக்கிறேன்.

*******************************

கனாக்காணும் காலங்கள் - இது விஜய் டிவியில் இரவு,பகல், நள்ளிரவு, விடிகாலை, காலை என சகல நேரமும் மறு ஒளிபரப்பாகும். எப்போ முதல் ஒளிபரப்பு என்பது அவங்களுக்கே தெரியாது. இதிலே என்ன புதுமைன்னா ஒரு 5 ஆண் பசங்க, 4 பெண் பசங்க, ஒரு சோடாபுட்டி புரபசர், ஒரு பிரின்சிபால், ஒரு கரஸ்பாண்டண்ட். இதான் மொத்த கேரக்டரும். இந்த 12 பேருக்காக ஒரு பிரம்மாண்ட காலேஜ். இது சத்தியமா புதுமை தான். ஒரு பால்வாடியை எடுத்துகிட்டா கூட 50 பசங்க திமு திமுன்னு இருக்கும் காலத்தில் 12 பேருக்காக ஒரு காலேஜ் நடக்குது. அந்த பசங்க சினிமா போவாங்க, லவ் பண்ணுவாங்க, அவுட்டிங் போவாங்க, விளையாடுவாங்க, ஸ்ட்ரைக் பண்ணுவாங்க, புரபசரை கிண்டல் பண்ணுவாங்க.. ஆக மொத்தம் படிப்பை தவிர எல்லாம் செய்வாங்க.

இதிலே சமீபத்திலே ஒரு கூத்து என்னான்னா ஒரு தாதா ஜே சி பி எல்லாம் எடுத்து கிட்டு காலேஜை இடிக்க வர்ராரு. இந்த 12 பசங்களும் கொந்தளிக்கிறாங்க. "அய்யோ நாம படிக்கும்(?) காலேஜை இடிச்சுட்டா கல்விக்கடவுள் சரஸ்வதிக்கே அவமானம்" என்கிற ரேஞ்சில் டென்ஷன் ஆகிடுறாங்க. உடனே காலேஜ்ல படிக்கும் ஒரு பையனின் சித்தி தான் மினிஸ்டர். அவங்களை கூப்பிட அவங்களும் டவாலி, சிவப்பு விளக்கு வச்ச காரில் வந்து தாதா கிட்டே கெஞ்சிகிட்டு இருக்காங்க. உடனே ஒரு டீல்க்கு வர்ராங்க. அந்த தாதாவோட பையன் இருக்கும் கிரிக்கெட் டீம் கூட இந்த காலேஜ் கிரிக்கெட் டீம் விளையாடி ஜெயிச்சா அந்த பலகோடி பில்டிங் இனாம் என டீல். (ஸ்ஸ்ஸ்ஸ் மயக்கம் வருதுடா சாமி) அந்த காலேஜ்ல படிக்கும் மொத்த பசங்களே 5 பேர் தானே என நான் கவலைப்பட்டேன். 11 பேருக்கு எங்க போவாங்க? ஆனா டைரக்டர் கொஞ்சமும் கவலைப்படலை. மேட்ச் ஆரம்பிக்க இன்னும் சில வருஷங்கள் ஆகும் என நினைக்கிறேன். (இஞினியரிங் கோர்ஸ் மொத்தமே நான்கு வருஷம் தானே.. டைரக்டர் கோட்டை விட்டுட்டாரா என  குனியமுத்தூர் வரதன் வாசகர் கடிதம்  எழுதினா கடுப்பாகிடுவேன் மைலார்ட்.... எனக்கு இதுக்கு மேல எழுத அழுகை அழுகையா வருது.

*********************

பொதுவாவே தமிழ் சினிமா பார்த்து பார்த்து எதுனா கல்யாணத்துக்கு போனாவே தாலி கட்டும் நேரத்தில் "நிறுத்துங்க கல்யாணத்தை"ன்னு சொல்லனும் போலவே தோணும்.(எனக்கு இனிமே திருமண பத்திரிக்கை வைப்பவர்கள் கொஞ்சம் யோசிச்சு வைக்கவும்) விஜய் டிவில சரவணன் - மீனாட்சி என்னும் தொடர் வருது. அந்த கல்யாணம் நடக்குமா நடக்காதான்னு தான் இன்னிக்கு டாக் ஆஃப் தமிழ்நாடு. அத்தனை இடைஞ்சல் அந்த கல்யாணத்துல. பிரணாப் ஜனாதிபதி ஆனா என்ன? சங்மா ஆனா என்ன? கலாம் ஆனா என்ன? சரவணன் மீனாட்சி கல்யாணம் நல்ல படியா நடந்து தொலையனும் - இதான் இப்போதைய தமிழக வேண்டுதல்.... என்னவோ போங்கப்பா


*****************************
சரி சீரியல் எல்லாம் தான் இந்த லட்சனத்தில் இருக்குதுன்னு நடுநிலையா ஒரு செய்தி பார்ப்போம் என நினைச்சா அது எல்லாத்துக்கும் மேல காமடியா இருக்கு.


தமிழகத்தில் ஏழு வயது குழந்தை டெங்கு காய்சலுக்கு பலி - இக்குழந்தை கடந்த திமுக ஆட்சியின் போது பிறந்தது. அப்படி அது பிறந்திருக்காவிடில் இன்று அது இறக்கும் நிலை வந்திருக்காது என பொதுமக்கள் பேசிக்கொள்கின்றனர்.இப்படியாக ஒரு குழந்தை மரணத்துக்கு திமுக காரணம் ஆகிவிட்டது. - இப்படிக்கு புதிய தாலைமுறை செய்திகளுக்காக நடுநிலையாக பீர் முகமது.


சென்னையில் தாம்பரத்தில் ஒரு வீட்டில் பூட்டை உடைத்து 75 சவரன் கொள்ளை. தப்பி ஓடிய கொள்ளைக்காரன் நேராக கோபாலபுரம் நோக்கி ஓட்டம். கோபாலபுரத்தில் பிரபல அரசியல் தலைவர் இருப்பது நாம் எல்லாம் அறிந்ததே - இப்படிக்கு புதியதலைமுறை செய்திகளுக்காக நடுநிலையாக பீர்முகமது.



**********************************
பை தி பை.. அபிஅப்பா நல்லா காமடியா எழுதிட்டாருன்னு சொன்னா, அது மகா பாவம். நான் ஜஸ்ட் மேற்கண்ட சீரியல் கதைகள் மட்டுமே எழுதினேன். அது காமடியா ஆகியிருந்தா  முழு கிரியேட்டிவிட்டியும் அதன் இயக்குனர்களை மட்டுமே சார்ந்தது என உறுதி அளிக்கிறேன்!

19 comments:

  1. செம்ம அதுவும் தங்கம் டாப்

    ReplyDelete
  2. ஹா.. ஹா.. சீரியல்களில் காட்டப்படுவதை நல்லா சாடியிருக்கீங்க!!
    சீரியல்களில் மட்டும் எப்படித் தான் நடுத்தர குடும்பங்கள் கூட வசதியான வீடுகளில் தங்கி கோடிகளில் புரளுகிறார்களோ!!

    உண்மையில் இந்த இயக்குனர்களுக்கு நடுத்தர குடும்பம் எப்படி இருக்கும் என்று தெரியுமா?

    ReplyDelete
  3. பை தி பை.. அபிஅப்பா நல்லா காமடியா எழுதிட்டாருன்னு சொன்னா, //

    நோ நோ :)))) நான் ஒத்துக்க மாட்டேன்
    நீங்க செல்லமே /முந்தானை முடிச்சி /தென்றல் இதெல்லாம்
    விட்டுட்டீங்க .அந்த சாமியார் சூதாடி சித்தன் /அந்த சீரியலில் ஆரம்பித்ததுதான்
    டெண்டர் /லேடி பிஸ்னஸ் மாக்னெட் /ரெண்டு மனைவி / ETC
    உண்மையிலேயே தாங்க முடிலீங்க

    ReplyDelete
  4. நல்லா இருக்கு அண்ணா..

    ReplyDelete
  5. Abiappa,

    After a long time, enjoyed the post.
    Keep it up.

    Nalina

    ReplyDelete
    Replies
    1. ராதிகா சித்திJune 28, 2012 at 9:30 AM

      நன்றி அபிஅப்பா

      Delete
    2. உங்கள பஞ்சாயத்துல வெச்சிப் பார்த்துக்கறேன்

      Delete
    3. குலசேகரன்June 28, 2012 at 9:34 AM

      உங்களப் பஞ்சாயத்துல நிருத்துப்புட்டானுவளாமே படுபாவிப் பசங்க?

      Delete
    4. அஞ்சலி மார்பில்ஸ் எம்டிJune 28, 2012 at 9:35 AM

      என்ன அபிஅப்பா உடம்பு எப்படி இருக்கு?

      Delete
    5. கற்பகம்June 28, 2012 at 9:36 AM

      காசு வாங்காம கொழந்த பெத்து தந்தது ஒரு குத்தமா சார்?

      Delete
    6. சித்தர் சாமிJune 28, 2012 at 9:36 AM

      ஹே ஹெ ஹெஹ் ஹெ ஹெஹ் ஹெ

      எல்லாம் டைரக்டர் செயல்

      ஹெ ஹெ ஹ்ஹெஹ் ஹெ

      Delete
    7. பீர் முகமதுJune 28, 2012 at 9:40 AM

      பழைய தலைமுறையைச் சேர்ந்த அபி அப்பா ஒரு தீவிர திமுக என்று தெரிய வந்துள்ளது

      புதிய டலைமுரைக்காக
      கேமராமேன் பன்னீர் செல்வத்துடன்

      Delete
  6. விடாம இத்தனை சீரியல்ஸ் பார்க்கிறீங்களா? என்னா பொழப்புப் போங்க!

    ReplyDelete
  7. பொறுமைசாலி. புத்திசாலியும் கூட.

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))