July 13, 2012
ஸ்டீவ்ஜாப்ஸ்ம் தட்டி மெஸ் மீனும் மற்றும் டைட்டானிக் படமும்!!!
ஒர் நாள் நான் வசிக்கும் நகர் பையன் ஒருத்தன் ஓடி வந்து "அண்ணே அவரு செத்து போய்ட்டாரு" தெரியுமா? என கேட்க எனக்கு தூக்கி வாரிப்போட்டது. யாராய் இருக்கும் என நான் என் குருவி மூளையை கசக்கும் முன்னமே அவனே "ஸ்டீவ்ஜாப்ஸ்" என சொல்ல எனக்கு அப்பவும் அது யாருன்னு தெரியலை.
இந்த இருபது வருஷத்தில் நான் வேலை பார்த்த இத்தாலிய, ஆங்கிலேய மற்றும் அரேபிய கம்பனிகளில் அது போன்ற பெயரில் யாரும் இருந்ததாக எனக்கு ஞாபகம் வரவில்லை. இன்னும் சொல்ல போனா எனக்கு "அ வாந்தி" "கார்லோ வெளிக்கி" என அசிங்கமான பெயர் கொண்ட இத்தாலிய சக ஒர்க்கர் பெயர்கள் மட்டுமே ஞாபகத்தில் இருந்து தொலைத்தன. கிரீஸ் நாட்டுல இருந்து வேலைக்கு வந்த எவன்ம் கூட ஸ்டீவ் ஜாப்ஸ்ன்னு பெயர் வச்சுக்கலை. ஒரு "பெரு" நாட்டு காரன் மட்டும் ஸ்டீவன்சன்னு இருந்தான். ஆனா எங்க நகர் பையன் சொல்வது அதுக்கு கிட்டதட்ட பொருந்தி வரும் பெயர் தான் எனினும் பத்து பொருத்தமும் இல்லையே என மீண்டும் குழம்பி அவனிடமே "அது யாரு ஸ்டீவ் ஜாப்ஸ்" என கேட்க அவன் "ஆப்பிள் தெரியுமா? அவரு தான்ணே" என சொல்ல எனக்கு தெரிஞ்சு ஆப்பிள் விற்கும் 'காமாட்சி பழக்கடை' காரருக்கு ஸ்டீவ் ஜாப்ஸ் என்றெல்லாம் பெயர் வைத்திருக்க வாய்ப்பில்லை. ஏன்னா அவர் பெயர் அவருக்கே தெரியாது. அவர் கடையில் இருக்கும் போது போன் வந்து அவர் எடுத்தா கூட அந்த "கருப்பு மண்டை" போனில் "அல்லோஓஓஓஓஒ நான் புள்ள பேசுறேன்" என்று ஜாதி பெயரை சொன்னாலும் சொல்லுவாரே தவிர அவர் பெயரை சொல்ல மாட்டார். ஆக அவருக்கு ஸ்டீவ்ஜாப்ஸ் பெயரெல்லாம் ரொம்ப அதிகம் என நினைத்துக்கொண்டேன்.
ஒரு வழியாக அவனிடம் வெட்கம் விட்டு "நான் பார்க்கத்தான் லூயிபிலிப் எல்லாம் போட்டு இருப்பேன். எல்லாம் பில்டப்பு. மொத்தத்தில் நான் ஒரு காமடி பீசு. தயவு செஞ்சு யாருன்னு சொல்லு" என கேட்டேன். ஒரு வேளை அந்த ஸ்டீவ்ஜாப்ஸ் எனக்கு வேண்டப்பட்டவரா இருந்தா எப்படி பேஸ்புக்ல பதிவு போடுவது என்பது பற்றியே தான் என் சிந்தனை இருந்தது. "இந்த ஸ்டீவ் ஜாப்ஸ் இருக்கானே ஸ்டீவ் ஜாப்ஸ்... நானும் அவனும் முள்ளும் மலரும் படம் பார்க்க போனப்ப கியூவிலே நிக்கும் போது போலீஸ்காரர் புட்டத்தில் போட்ட போடுல என் புட்டத்துக்கு பதிலே என்னை தள்ளி விட்டு அவன் வாங்கினான். இப்பவும் அவனை பின்பக்கம் தடவிப் பார்த்தா ராமர் அணிலுக்கு கோடு போட்ட மாதிரி அந்த தழும்பு இருக்கும். அப்படிப்பட்ட அவன் இன்னிக்கு போய் சேர்ந்துட்டான்" என பதிவு போட்டா சும்மா லைக்கு அள்ளிகிட்டு போவும் என அல்ப்பமாக நினைத்துக்கொண்டேன்.
பின்ன அவன் சொன்ன பின்னர் தான் ஆப்பிள் என்பது போன், கம்பியூட்டர் பெயர் என்று. என்ன மாதிரி உலகமடா சாமி இது? இஞினியரிங் காலேஜ்க்கு முப்பாத்தம்மன் இஞினியரிங் காலேஜ் என வைக்கிறாய்ங்க. "கேரிஃபோர் புண்ணாக்கு மொத்த வியாபாரம்"ன்னும் வைக்கிறாங்க. "புண்ணியமூர்த்தி பிள்ளை டிபார்ட்மெண்டல் ஸ்டோர்"ன்னும் வைக்கிறாங்க. அது போல "ஆப்பிள்", "பேரிக்காய்", "நேந்திரம் பழம்"ன்னு எல்லாம் கம்பியூட்டர் கம்பனிக்கு பெயர் எல்லாம் வைச்சு தொலைஞ்சா நான் எப்படி கண்டு பிடிக்க முடியும்.
அந்த பையன் கேட்டான். "அண்ணே எப்போதும் லேப்டாப் எல்லாம் வச்சிகிட்டு என்னவோ அடிச்சு கிட்டு இருக்கீங்கலே. அதான் ஆப்பிள் ஓனரை எல்லாம் தெரியுமோன்னு நினைச்சேன்" என சொன்னான். என்ன எழவுடா இது. லேப்டாப் எல்லாம் வச்சிருந்தா பெரிய மனுசனா? நான் ஒரு லோக்கலுடா லோக்கலு. எனக்கு அதிகபட்சமா தொழிலதிபர்னா மீனாட்சி சுந்தரம் மளிகை கடை தான், பெரிய எஜுகேஷன் இண்ஸ்டிட்யூட்னா ஔவையார் ஆரம்ப பள்ளி தான், பெரிய கம்பியூட்டர் நிறுவனம்னா பிரியா கம்பியூட்டர் ஜெராக்ஸ் கடை தான், அதிகபட்சமாக என் சுற்றுலா தளம் மாயவரம் பஸ்டாண்டு தான் என மனதில் நினைத்துக்கொண்டேன்.
அவன் போனதும் வந்து மெதுவாக டைப் அடிக்க தொடங்கினேன். "இந்த ஸ்டீவ்ஜாப்ஸ் இருக்காரே ஸ்டீவ்ஜாப்ஸ் ஒரு முறை தட்டி மெஸ் பத்தி நான் எழுதின பதிவை படிச்சுட்டு மாயவரம் வந்து அங்க மீன் குழம்பை பெனஞ்சு அடிச்சுட்டு " என ஆரம்பித்தேன். அவரு ரேஞ்சுக்கு முள்ளும் மலரும் சரிபட்டு வராது என்பதால் "ஸ்டீவ்ஜாப்ஸ்ம் தட்டி மெஸ் மீனும் மற்றும் டைட்டானிக் படமும் " என தலைப்பிட்டு விறு விறுவென டைப்ப ஆரம்பித்தேன்....
==============
குறிப்பு: "வர வர உங்க பதிவு எல்லாம் பெருசா இருக்கு. படிக்க அலுப்பா இருக்கு. முன்ன மாதிரி சின்னதா எழுதுங்களேன். அரசியல் வேண்டாமே ப்ளீஸ்" என கேட்ட கோடானு கோடி(?) வாசக பெருமக்களுக்காக பழைய அபிஅப்பாவை தூசி தட்டி எழுப்பும் சின்ன முயற்சி மட்டுமே இந்த பதிவு:-))
Subscribe to:
Post Comments (Atom)
:)
ReplyDeleteவெல்கம் பேக்கு தல :)
ReplyDeleteவெல்கம் பேக்கு தல :)
ReplyDelete:)))
ReplyDeleteஇன்னும் சொல்ல போனா எனக்கு "அ வாந்தி" "கார்லோ வெளிக்கி" என அசிங்கமான பெயர் கொண்ட இத்தாலிய சக ஒர்க்கர் பெயர்
:))) இன்னும் சொல்ல போனா எனக்கு "அ வாந்தி" "கார்லோ வெளிக்கி" என அசிங்கமான பெயர் கொண்ட இத்தாலிய சக ஒர்க்கர் பெயர்
ReplyDeleteஹாஹா:-)))))))))
ReplyDeleteசெம அபி அப்பா
ReplyDeleteஎன்னது கருணாநிதி செத்துட்டானா?
ReplyDeleteஅண்ணனின் ‘ஆட்டம்’ மீண்டும் ஆரம்பம்... உங்கள் ‘அபி’மான கணினித் ‘திரை’களில்... கண்டு, படித்து மகிழுங்கள்...
ReplyDelete#என்னண்ணே... விளம்பரம் போதுமா... :)
//கோடானு கோடி(?) வாசக பெருமக்களுக்காக//
ReplyDelete# ‘அந்த “கோடானு கோடி” வாசக பெருமக்களில் அடியேனும் ஒருவன் தான்... இதையும் தான் உங்களிடம் இருந்து எதிர்பார்த்தோம்...
எங்கள் ‘எதிர்பார்ப்புகளை’ இதேபோல் அடிக்கடி நிறைவு செய்யவேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்...
இப்பதான் தெரியுது ஏன் நீ மஞ்ச துண்டுக்கு அடிமையாய் இருக்கேன்னு -கடப்பாரை கந்தன்
ReplyDeleteஅட யாருங்க அரசியல் வேண்டாம் என்று சொன்னது....அரசியல் இல்லைன்னா வாழ்க்கை போரடிச்சுடுமுங்க
ReplyDeleteAbi Appa back to form :)
ReplyDeleteவாங்க தலை
ReplyDeleteஇந்த மாதிரி நீங்க எழுதிகிட்டிருந்தாலே போதும் என்பது எனது ஆசை.
ReplyDeleteஇந்த மாதிரி சுவையாகவும் சுவாரஸ்யமாகவும் எழுதற மனுசன் ஏன் அப்பப்ப அந்நியனா மாறிடுறார்னு புரியலெ!
ReplyDeleteAnne Mayvaram kusumbu :)
ReplyDelete-Senthil from Narasingannathem
Anne Mayavaram Kusumbu ! :)
ReplyDelete//இஞினியரிங் காலேஜ்க்கு முப்பாத்தம்மன் இஞினியரிங் காலேஜ் என வைக்கிறாய்ங்க. "கேரிஃபோர் புண்ணாக்கு மொத்த வியாபாரம்"ன்னும் வைக்கிறாங்க.
I was laughing at this :)
-Senthil, Narasinganathem
How dare that anany thayoli thevadiya mavan to say that. How dare you are publishing that post? Remove that comment immediately. Mind you abiappa, reply him or remove that comment. Dont play with emotions.
ReplyDelete;) antha kamatchi pazakadai pulla 'karupu mandai' ean naana iruka koodathu ??
ReplyDelete;) antha kamatchi pazakadai pulla 'karupu mandai' ean naana iruka koodathu ??
ReplyDelete