பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

September 14, 2012

புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களே! கொஞ்சம் இதை படித்து பாருங்கள்!கலைஞர் என்னும் புளியங்கொம்பை பற்றிக்கொள்ளுங்கள் ஈழத்தமிழர்களே என நான் எழுதிய ஒரு கட்டுரைக்கு என்னை வசை பாடி மகிழ்ந்தீர்களே, இதோ 19.9.2012 தேதியிட்டு இன்று வந்த "சோ" வை ஆசிரியராக கொண்ட "துக்ளக்" பத்திரிக்கையில் "இலங்கை பிரச்சனை" என்ற தலைப்பில் வந்த கட்டுரையில் சில பகுதிகளை பாருங்கள்.  "சோ" அவர்கள் "ஜெ" அவர்களின் ஆஸ்தான குருநாதர் ஆவார் என்பதும் உங்களுக்கு தெரியும்.

ஆனாலும் உங்களுக்கு வசைபாட வசதியாக "கலைஞர்"தான் கிடைப்பார். இதற்கு மேலும் நீங்கள் கலைஞரை மட்டுமே வசை பாடினால் இக்கட்டுரையில் உள்ள கருத்துகள் தான் உண்மை என்ற நிலைக்கு தமிழக "பொதுமக்கள்"  வர வேண்டி இருக்கும் என்பதை உணருங்கள். இதற்கு மேல் உங்கள் விருப்பம்.


இதோ அந்த "துக்ளக்" கட்டுரையின் சில ... மிகச்சில குறிப்புகள்.**************************


1. விடுதலைப்புலிகளின் தூண்டுதலினால் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்தனர். இந்திய அமைதிப்படையினர் மீது அபாண்டமான பழிகளை சுமர்த்தி விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக நின்று, வடக்கு மற்றும் கிழக்கு பிரதேச தமிழ் மக்கள் அமைதி முயற்சியை முறியடித்தனர்.

2. இந்திராகாந்தியால் ஆயுத உதவியும் ராணுவ பயிற்சியும் பெற்ற புலிகள் இலங்கை தமிழர்களுக்கு நல்ல தீர்வை தடுத்தது மட்டும் இன்றி இந்திராவின் மகனை கொன்றனர்.

3. இந்திய உதவி இல்லாமல் வளந்தே இருக்க முடியாத ஒரு கூட்டம் இந்தியாவை அயல் நாட்டினராக அறிவித்து சிங்களர்களை சகோதரர்களாக கொண்டாடி இந்திய அமைதிப்படையை வெளியேற சொல்லியது. அந்த கூட்டம் இலங்கையில் இருந்த தமிழ் தலைவர்களை எல்லாம் கொன்றது. அப்பாவி தமிழர்களை எல்லாம் கொன்றது. இறுதியில் தானும் அழிந்தது. அழிந்த அந்த கூட்டத்துக்கு மீண்டும் உயிரூட்ட முயற்சிகள் நடக்கின்றன.

4.பல வருடங்களாக நடந்து வந்த புலி- அரசு மோதல்கள் போது வெளியேறி அயல்நாடுகளில் குடியேறி விட்ட இலங்கை தமிழர்கள் பலர் இலங்கையில் தமிழர் பிரச்சனை தீர்வதை விரும்பவில்லை.

5.நம் நாட்டில் பங்களாதேஷ் விடுதலை பெற்ற பின் அங்கிருந்து இங்கு வந்த அகதிகள் திரும்பி செல்ல வேண்டும் என்று கோருவது போல சில நாடுகளில் குரல்கள் எழலாம். உங்கள் நாட்டில் நீங்கள் பட்ட அவதியின் காரணமாக இங்கு வந்தீர்கள். இப்போது உங்கள் நாட்டில் தான் அமைதி திரும்பி விட்டதே. ஆகையால் நீங்கள் திரும்பி செல்லுங்கள் என்று சில நாடுகளில் சில அமைப்புகள் கூற தொடங்கலாம்.

6.இதை விட முக்கியமாக இப்போது ஈழம் பெற வேண்டிய போர்.. அதற்கான ஆயுதம் செய்ய நிதி தேவை என்று இலங்கையில் தமிழர்கள் மிக மோசமான நிலையில் இருப்பதால் அவர்களுக்கு நிதி தேவை என்று, அல்லது இது மாதிரி வேறு காரணங்கள் கூறி அயல் நாடுகள் சிலவற்றில் இலங்கை தமிழ் முக்கியஸ்தர்கள் பண வேட்டை நடத்துகின்றனர். இது மிரட்டல் மூலமாகவும் நடக்கின்றது. பணத்துக்கு பணம். ஆதிக்கத்துக்கு ஆதிக்கம்.இது தொடர வேண்டும் எனில் இலங்கையில் அமைதி திரும்பி விட்டதாக யாரும் ஒப்புக்கொள்ள கூடாது. ஆகையினால் இலங்கையில் இன்றும் தமிழர்கள் வேட்டையாடப்படுகின்றார்கள் என்று அயல் நாட்டு அமைப்புகள் முன் காட்ட அயல்நாடுகளுக்கு சென்று ஆதிக்கம் புரிந்து வசதியாக வாழகின்ற இலங்கை தமிழர்கள் முயல்கிறார்கள்.

7. இந்த ஈழ பிசினஸ் தொடங்குவதற்காக அவர்கள் வசூல் செய்யும் நிதியில் ஒரு பங்கு இதற்கான பிரச்சாரத்துக்காக செலவிடப்படுகின்றது. அந்த நிதி எங்கெங்கோ செலவிடப்படுகின்றது. யார் யாருக்கோ பிரச்சார சம்பளம் தரப்படுகின்றது என்பது எல்லாம் இலங்கை அரசு ஆராய வேண்டிய விஷயங்கள். இப்படி நடக்கிற பிரச்சாரத்தின் காரணமாக இன்றும் இலங்கையில் தமிழர்கள் துன்புறுத்தப்படுகின்றனர் என்பதை நாம் நம்பி விடக்கூடாது.

8. உலகத்திலேயே சப்மரைன் முதல் விமானம் வரை சேர்த்து வைத்து இருந்த, தன் மக்களையே கேடையமாக வைத்து இருந்த, சிறுவர்களை முன்னிருத்தி பலிகடா ஆக்கிய , தமிழ் தலைவர்களை கொன்று போட்ட ஒரு கொலைகார கூட்டத்தை எதிர்கொள்ள வேண்டியதாகிவிட்டது இலங்கை அரசுக்கு.அதை எதிர்கொண்டு அந்த கும்பலை அரசு ஒடுக்கியது என்பது பாராட்டத்தக்க ஒரு சாதனையாகும். அந்த மாதிரி ஒரு வெறிச்செயலை இலங்கை அரசு எதிர்கொண்ட போது பல சிவிலியன்கள் உயிர் இழக்க நேரிட்டது மிகவும் வருத்தமான ஒரு விஷயம் தான் எனினும் சிவிலியன்களை கேடயமாக புலிகள் பயன் படுத்திய போது, ஆஸ்பத்திரிகளில் புலிகள் பதுங்கி தங்கள் தாக்குதலை நடத்திய போது ராணுவத்தின் எதிர் தாக்குதலில் சிவிலியன்கள் உயிரிழப்பு என்பது சகஜம் தானே! இதற்கு எல்லாம் புலிகள் தானே காரணம்!

9. தமிழர் பகுதிகளில் நூற்றுக்கணக்கான அல்ல.. பல்லாயிரக்கணக்கான அளவு கன்னி வெடிகள் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டு உள்ளன. அவற்றை நீக்கி விட்டு தான் குடியேற்றம் நடத்த வேண்டும். இதனால் ஏற்படும் தாமதத்துக்கு இலங்கை அரசா பொறுப்பு???

10. ஐ நா சபையில் இலங்கைக்கு எதிராக வந்த ஒரு தீர்மானத்தை ஆதரித்து இந்திய அரசு வாக்களித்தது ஒரு மாபெரும் தவறு. அந்த தீர்மானத்தை இந்தியா எதிர்த்து இருந்தால் இரு நாடுகளின் உறவு வலுப்பெற அது உதவி இருக்கும்.


****************

இதன் பின்னரும் நீங்கள் கலைஞரை மட்டுமே வசை பாடுவேன், திமுகவினரை தான் குறி வைத்து தாக்குவேன் என்று கூறினால்... உங்கள் தலையெழுத்து யாராலும் மாற்ற இயலாத நிலை தான் என்பதை உணருங்கள்!9 comments:

 1. சோ சொல்வது சரிதான்

  ReplyDelete
 2. சோ சொன்னது அத்தனையும் உண்மை.

  அதை விடுங்கள். தனது குடும்பத்தினர் நலனுக்காக கடைசி வரை மத்திய அரசுக்கு ஜால்ரா அடித்தார் கலைஞ்ர் ஆட்சியில் இருந்தவரை.

  இப்போது முதலைக் கண்ணீர் வடிக்கிறார். அவரை நம்ப வேண்டும் எனக் கூறும் உங்களைப் போல சில தீவிர கலைஞர் ஆதரவளர்களுக்கு என்ன சொன்னாலும் புரியாதுதான்.

  அன்புடன்,
  டோண்டு ரகவ்ன்

  ReplyDelete
 3. யோவ் க‌ர‌வேட்டி, நீ என்னா கூவுனாலும் ஒரு பிர‌யோஜ‌ன‌ம் இல்லை. எல்லாத்துக்கும் க‌ருணாநிதிதான் கார‌ண‌ம். நேக்கு ரெண்டு நாளா வாயுத்தொல்லை. அதுக்கும் க‌ருணாநிதிதான் கார‌ண‌ம்.

  ReplyDelete
 4. சோ போன்ற தமிழன எதிர்ப்பு வெறியர்களை , ஈழத்தமிழர்கள் என்றுமே கண்டு கொண்டது கிடையாது. தெருவில் மனிதர்களை எல்லாம் பார்த்து குரைத்து கொண்டு நிற்கும் வெறிநாயை பார்த்து எப்படி ஒதுங்கி நிற்போமோ அவ்வாறே சோவை பார்க்கின்றோம்.

  ஆனால் கருணாநிதி அவ்வாறில்லை. எண்பதுகளில் தனது சுயலாபதிற்கு ஏனும் ஈழதமிழர்களை ஆதரிப்பதாக காட்டி கொண்ட்டவர். ஒருகாலத்தில் ஈழமக்களால் விரும்ப்பட்டவர்.அப்படிப்பட்டவர் துரோகம் செய்து முதுகில் குத்தியதைதான் தாங்கமுடியவில்லை

  ReplyDelete
 5. Dondu enna somba? Nalla sombu adikkurar Sovukku. Sombu Dondu Sombu Dondu..

  ReplyDelete
 6. டோன்டூ பறந்து பறந்து விடுதலை புலிகளை தாக்குகிறார்.மகிந்தவிடம் தவறாமல் பணத்தை பெறுகிறார் என்பது மட்டும் உண்மை.ஐ.நாவிலேயே இலங்கை போர்க்குற்றம் நிருபிக்கப்பட்டதை வாசித்தாவது அறிந்து கொள்ளுங்கள்.

  ReplyDelete
 7. மாயவசந்த சேனைகள் கலகமாம் நகரில் கார்த்தப் பெருவழுதிபோல் மிங்காப்பு மிக கங்கண உக்கரத்துடன் காதினிற் பொழுதுகளில் சலம்புவுது இயற்கையோடானது என்பதறிவீர். விங்காரை விளக்கங்கள் சந்திபாசக சார்புள்ளதாக வம்சவிதி சாடாகம் செய்து தம் விருப்பம் கொண்டே சொல்லிச் செல்வர். நம் கடன் வெஞ்சின விகாசங்களை விளக்கிச் சொல்வதேயாகும். தத்துவ விபோகங்களில் வைப்புள்ளதே என்றாலும் முள்ளிவாய்க்கால் நிகழ்வுகள் முப்பெழுதும் மறக்க வொன்ன துயர சாபல்கயாத்திரை.

  ReplyDelete
 8. பிரபஞ்சவெளியில் யவ்வன நடம் புரியும் கோள்கள் வின்மீன்களுக்கென்றே விதி உண்டு அதை ஞப்பொரு பொழுதிலும் அவை அளவுகடத்தி நடந்திடவேண்டுமெண்று நினைப்பதில்லை. விதி வழியே வானப்பிரஸ்தமே தவமாய் செய்வதுபோல, நம் திராவிட இயக்க காளைகள் அதன் விதி வழியே சென்று கழகத்தைக் கட்டுக்காப்பது காண அளவிடவொன்னா மகிழ்ச்சி. தலைவர்களா நம் இயக்கத்தை கட்டிக்காத்து கானப்பெரிய மந்தாரமிகு வருங்காலத்திற்கு அதை கம்பீர மிகுதியாய் இட்டு செல்வது ? இல்லை நம் போன்ற சாத்வீக இயக்க தொண்டர்களே என்பதில் எனக்கு சொல்லனா பெருமிதம் விகுதி கொண்டு தொக்கி நிற்கிறது. வெஞ்சின மிகு இவ்வேளைகளில் டோண்டு போன்றோர்ரை புறந்தள்ளி, காங்கேய வெற்றிகொள்ள நடுபொழுதில் நம்பிக்கை வைப்போம்.

  ReplyDelete
 9. //பிரபஞ்சவெளியில் யவ்வன நடம் புரியும் கோள்கள் வின்மீன்களுக்கென்றே விதி உண்டு அதை ஞப்பொரு பொழுதிலும் அவை அளவுகடத்தி நடந்திடவேண்டுமெண்று நினைப்பதில்லை. விதி வழியே வானப்பிரஸ்தமே தவமாய் செய்வதுபோல, நம் திராவிட இயக்க காளைகள் அதன் விதி வழியே சென்று கழகத்தைக் கட்டுக்காப்பது காண அளவிடவொன்னா மகிழ்ச்சி. தலைவர்களா நம் இயக்கத்தை கட்டிக்காத்து கானப்பெரிய மந்தாரமிகு வருங்காலத்திற்கு அதை கம்பீர மிகுதியாய் இட்டு செல்வது ? இல்லை நம் போன்ற சாத்வீக இயக்க தொண்டர்களே என்பதில் எனக்கு சொல்லனா பெருமிதம் விகுதி கொண்டு தொக்கி நிற்கிறது//

  ஸ்..ஸ்.. லூசாப்பா நீ? (அபி அப்பாவே பரவாயில்லை போலருக்கு)

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))