பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

March 14, 2007

பத்மாசுப்ரமணியம் அவர்களே!சவாலை சந்திக்க தயாரா?(பாகம்1)

எனக்கு அந்த விபரீத ஆசை வந்திருக்ககூடாது, வந்துடுச்சு. கிடுகிடுன்னு அடுத்த கட்ட வேலைய ஆரம்பிச்சிட்டேன். என்ன அந்த ஆசைன்னா கொஞ்ச நேரம் முன்ன டி.வி பாத்தப்ப நல்ல பரத நாட்டிய நிகழ்ச்சி அதாங்க பத்மா சுப்ரமணியம் பரத நிகழ்ச்சி. அடடா நம்ம கையில வெண்ணைய வச்சிகிட்டு நெய்க்கு பத்மா சுப்ரமணியத்த கேப்பானேன்னு பாப்பாவுக்கு பரதம் கத்துகுடுத்து அவங்கள விட பாப்பாவ பெரிய டான்ஸரா ஆக்கிடனும்னு முடிவு செஞ்சாச்சு.

பாப்பா இன்னும் கொஞ்சம் வளர்ந்த பிறகு இந்த கூத்தெல்லாம் வச்சுக்கலாமேன்னு தங்கமணி சொன்னத காதில போட்டுக்காம பக்கத்து தெரு கமலா டீச்சர்கிட்ட(பரத நாட்டிய டீச்சர்) ஒப்பந்தம் போட்டாச்சு.

"டீச்சர் 1 வாரம் ஆனாலும் பரவாயில்ல பாப்பாவ ஒரு பத்மா சுப்ரமணியமா ஆக்கிடுங்க"ன்னு சொன்னதுக்கு (தங்கமணி: ''அதுக்கு உங்க பேர கண்மணி சொன்ன மாதிரி ச்சுப்ரமணின்னும் பாப்பா பேர பத்மான்னும் மாத்தனும்'') அவங்க "1 வாரத்துல குருவணக்கம் வரைக்கும்தான் வரும்"ன்னாங்க. சரி போகட்டும்ன்னு "டீச்சர் அந்த டிரஸ் எல்லாம் எங்க தைக்கனும்னு கேட்டதுக்கு "உங்க ஆர்வம் ரொம்ப ஜாஸ்தி. அந்த டிரஸ் இன்னும் 3 வருஷம் கழிச்சு பாத்துகலாம், இப்போ கத்துக்க சுடிதார் மட்டும் போதும்"ன்னுட்டாங்க.ரொம்ப கராரா இருக்காங்களே பாப்பாவ என்ன பாடுபடுத்த போராங்களோன்னு லைட்டா ஒரு பயம் எனக்கு.

நல்ல நாள் பாத்து குரு தட்சினை எல்லாம் ரெடியாக்கி பாப்பாவை ரெடியாக்கி, அவ சுத்தி சுத்தி ஆட வசதியா ஒரு ரூமை காலியாக்கி ஜெக ஜோரா ஆரம்பிச்சாச்சு. அந்த நேரத்துல பாப்பா ஒரு கண்டிஷன் போடுறா. அவ ஆடுவதை யாரும் பாக்க கூடாதாம். ரூமை சாத்திட்டுதான் கத்துக்குமாம். டீச்சர்"குழந்தைதான, அதான் கொஞ்சம் வெக்கப்படுது. பரவாயில்ல நா பென்ட நிமித்துனா சரியாயிடும்"ன்னு சொன்னாங்க.

ஆச்சு 1 வாரம். பாப்பா அசத்த ஆரம்பிச்சுட்டா! டைகரை நிக்க வச்சு குருவணக்கம் செஞ்சா. நல்ல அழகா வலது கை, இடது கை எல்லாம் சரியா நீட்டி மடக்கி முதுகை வலைத்து நிமித்தி இரண்டு கையும் குவித்து சூப்பரா குருவணக்கம் வைச்சா. பாவம் டைகர்தான் புரியாம திருதிருன்னு முழிக்குது.

சரிதான், இன்னும் கொஞ்ச நாள்ல டைகர் குருவணக்கம் கத்துகிட்டு சமத்தா வீட்டுக்கு வர்ரவங்களை குரைக்காம குருவணக்கம் வைக்கபோகுது. இந்த அதிசயம் ஆனந்த விகடன்ல கவர் ஸ்டோரியா வரப்போகுது(அப்போ நல்ல டி ஷர்ட் போட்டுகிட்டு போஸ் குடுக்கனும்)அப்டீன்னு நெனச்சுகிட்டேன்.

எனக்கு, தங்கமணிக்கு, தாத்தா, பாட்டி, சித்தப்பா, சித்தின்னு தனித்தனியா குருவணக்கம். நாங்க என்னவோ ஒன்ஸ்மோர் கேட்ட மாதிரி திரும்ப திரும்ப வேற. பாவம் பாப்பாவுக்கு கால்வலிக்கபோவுதுன்னு தூங்க வச்சாச்சு.

காலைல பாப்பாவ பெட்டில் கானுமேன்னு ஹாலில் வந்து பாத்தா ஒரு சேரில் போன் இருக்கு, பாப்பா அதுக்கு முன்னாடி குருவணக்கம் வச்சுகிட்டு இருக்கா. இது யாருக்கு பாப்பான்னு கேட்டேன்."பெரிய அத்தை போன்ல இருக்காங்கப்பா"ங்குது.

பிறகு அந்த 1 மாதமும் ஸ்கூல் ஆட்டோகாரர், டிராஃபிக் போலீஸ், அவ ஃபிரன்ஸ், பாகனுக்கு தனியே, பொன்ஸக்காவுக்கு தனியே, கோயில் குருக்களுக்கு தனியே, சாமிக்குதனியேன்னு ஒரே குருவணக்கம்தான்.டைகரும் குருவணக்கம்ங்குற பேர்ல குட்டிகரணம் போட்டுட்டு இதுதான் கு.வ ங்குது. நா சரியா பாப்பா அளவு செஞ்சனான்னு ஒரு பார்வைவேற விடுது என்னய பாத்து.

மீனு வாங்கலையோ மீனுன்னு கூவிக்கிட்டு வந்த அந்த மீன்காரம்மா, வந்தா மீனை வித்துட்டு போகாம "பாப்பா எங்க டான்ஸ் ஆடு"ன்னு சொல்ல, பாப்பாவும் சந்தோஷமா ஒரு செஞ்சுரி அடிச்சா. அந்தம்மா போகும் போது "கருவாடு வாங்கலையோ கருவாடு"ன்னு கூவிகிட்டு போனாங்க!!

எனக்கு அப்போதான் அந்த டவுட் வந்துச்சு. பாப்பாதான் 1 வாரத்திலே கு.வ கத்துகிட்டாளே, பிறகு ஏன் 1 மாசமா அதையே செய்றா, டீச்சர் வேற எதுவும் இன்னுமா சொல்லிதரலை?? ----------தொடரும்


திஸ்கி: பதிவு பெருசா இருந்தா மக்கள்ஸ் ஸ்கிப்பாகி போகாம இருக்கவும், கொஞ்சம் ஆணி அதிகமாக புடுங்க வேண்டியிருப்பதாலும்......

61 comments:

  1. தொல்ஸ்,
    உன் லொள்ளு தாங்க முடுயலைய்யா.நல்லா இருந்துச்சு
    லியோ சுரேஷ்

    ReplyDelete
  2. //மீனு வாங்கலையோ மீனுன்னு கூவிக்கிட்டு வந்த அந்த மீன்காரம்மா, வந்தா மீனை வித்துட்டு போகாம "பாப்பா எங்க டான்ஸ் ஆடு"ன்னு சொல்ல, பாப்பாவும் சந்தோஷமா ஒரு செஞ்சுரி அடிச்சா. அந்தம்மா போகும் போது "கருவாடு வாங்கலையோ கருவாடு"ன்னு கூவிகிட்டு போனாங்க!!//

    ஒரு கு.வ.வுலயே மீனெல்லாம் காஞ்சி கருவாடாயிடுச்சு போலருக்கு :))) அசத்துங்க..

    சென்ஷி

    ReplyDelete
  3. இன்னும் கொஞ்ச நாள்ல டைகர் குருவணக்கம் கத்துகிட்டு சமத்தா வீட்டுக்கு வர்ரவங்களை குரைக்காம குருவணக்கம் வைக்கபோகுது. இந்த அதிசயம் ஆனந்த விகடன்ல கவர் ஸ்டோரியா வரப்போகுது(அப்போ நல்ல டி ஷர்ட் போட்டுகிட்டு போஸ் குடுக்கனும்)அப்டீன்னு நெனச்சுகிட்டேன்//
    :-))))))))
    -Ramachandranusha

    ReplyDelete
  4. //இன்னும் கொஞ்ச நாள்ல டைகர் குருவணக்கம் கத்துகிட்டு சமத்தா வீட்டுக்கு வர்ரவங்களை குரைக்காம குருவணக்கம் வைக்கபோகுது. இந்த அதிசயம் ஆனந்த விகடன்ல கவர் ஸ்டோரியா வரப்போகுது(அப்போ நல்ல டி ஷர்ட் போட்டுகிட்டு போஸ் குடுக்கனும்)அப்டீன்னு நெனச்சுகிட்டேன்//
    :-))))))))
    -Ramachandranusha //

    அப்புறம் இந்த விஷயத்த விவேக் கூட காமெடி பண்ண ஆரம்பிச்சுடுவாரு :))

    சென்ஷி

    ReplyDelete
  5. இப்போதைக்கு குருவணக்கத்திலே மட்டும் போட்டி வையுங்க. நாங்களும் எவ்வளவு நாளுதான் காத்திருக்கறது?

    ReplyDelete
  6. //காலைல பாப்பாவ பெட்டில் கானுமேன்னு ஹாலில் வந்து பாத்தா ஒரு சேரில் போன் இருக்கு, பாப்பா அதுக்கு முன்னாடி குருவணக்கம் வச்சுகிட்டு இருக்கா. இது யாருக்கு பாப்பான்னு கேட்டேன்."பெரிய அத்தை போன்ல இருக்காங்கப்பா"ங்குது//

    I really enjoyed this part.

    Thanks

    ReplyDelete
  7. வழக்கம்போல அசத்தல்!!

    ReplyDelete
  8. ஆமாம்.. ஏன் பண்றாங்க? வேற எதுவுமே சொல்லித்தரவே இல்லையோ?

    இதைப் படிச்சதும் எனக்கு ஒரு விசயம் நினைவுக்கு வருது. நாலாவது அஞ்சாவது படிக்கும் போது எங்க வீட்ல, "பாப்பா(நாந்தாங்க ;)) பாட்டு கத்துக்கிடட்டம்"னு அனுப்பினாங்க.. சுமார் ஆறு மாசத்துக்கு "ஸ் ப ஸ"வே பாடிகிட்டிருந்தேன்.. நடுநடுவில 'சரிகம பதநிஸ' மட்டும் சொல்லிக் கொடுத்திட்டு மறுபடி ஸாபாஸாவை சரியா பாடச் சொல்லி பெண்டு நிமித்திட்டிருப்பாங்க எங்க டீச்சர்.. இப்படியே அடுத்த டீச்சர்கிட்ட போடுறதுன்னு எங்க வீட்ல முடிவு செய்யுறவரை பார்க்கிறவங்களுக்கெல்லாம் சாபாசா தான் :)))

    ReplyDelete
  9. //இன்னும் கொஞ்ச நாள்ல டைகர் குருவணக்கம் கத்துகிட்டு சமத்தா வீட்டுக்கு வர்ரவங்களை குரைக்காம குருவணக்கம் வைக்கபோகுது. இந்த அதிசயம் ஆனந்த விகடன்ல கவர் ஸ்டோரியா வரப்போகுது(அப்போ நல்ல டி ஷர்ட் போட்டுகிட்டு போஸ் குடுக்கனும்)அப்டீன்னு நெனச்சுகிட்டேன்//

    இந்த மாதிரி எல்லாம் விளம்பரம் பண்ணாதேய்யா. அப்புறம் எங்க வீட்டு எலி குருவணக்கம் போடற வரை வீட்டில் சாப்பாடு கிடைக்காது!!! :))

    ReplyDelete
  10. முதல்ல பொன்ஸக்காவுக்கு பதில்:

    பொன்ஸக்கா! இது பாகம் 1 தான். அடுத்த பாகம் இருக்கு. அதில மேலும் விபரங்கள் இருக்கும். நீங்க இதுவரை ஸ..ப..ஸ தானா. இல்ல மேல கத்துகிட்டீங்களா?

    அக்கா! தமிழ்மணத்திலே இந்த பதிவின் பக்கத்தில் அபிஅப்பான்னு தெறியலையே ஏன்?

    உங்க பதிவில இருந்து "மகளிர் சக்தி"யை அள்ளிகிட்டேன். நன்றி!!

    ReplyDelete
  11. //Leo Suresh said...
    தொல்ஸ்,
    உன் லொள்ளு தாங்க முடுயலைய்யா.நல்லா இருந்துச்சு
    லியோ சுரேஷ் //

    வாங்க லியோ! லொல்லுதான் வாழ்க்கையா போச்சு என்னத்த செய்ய?

    ReplyDelete
  12. //ஒரு கு.வ.வுலயே மீனெல்லாம் காஞ்சி கருவாடாயிடுச்சு போலருக்கு :))) அசத்துங்க//

    வாங்க சென்ஷி! அவதான் மீன்காரம்மா கிட்ட சென்சுரி அடிச்சால்ல...100 கு.வ ல மீன் காய்ந்து கருவாடா போச்சு!:-))

    ReplyDelete
  13. //:-))))))))
    -Ramachandranusha //

    என்ன உஷா மேடம் சிரிச்சா போதுமா.

    வாழ்த்துக்கள், உங்க மகளிர் தின பதிவுல 90 மார்க்குக்கு மேல போய் முதல் ரேங்க் வாங்கினதுக்கு:-)

    ReplyDelete
  14. அய்யோ.. அய்யோ... நீங்க அபிய இந்த ஓட்டு ஓட்டுறீங்க.. பாருங்க.. நீங்க வயசான காலத்துல உங்கள முதியோர் இல்லத்துல சேக்கப் போறா.. ;)))

    ReplyDelete
  15. அபி அப்பா வழக்கம் போல தூள்...அடுத்த பதிவுக்கு வெயிட்டிங்....

    ReplyDelete
  16. அபி அப்பா புகைப்படம் எல்லாம் கலக்கல இருக்கு ;))))

    ReplyDelete
  17. அபி அப்பா, அந்த நாள் ஞாபகத்தில் ஆழ்ந்துவிட்டேன். இதோ நான் பாட்டு, டான்ஸ், வீணை
    கற்றுக் கொண்ட கதை. "இதோ" போட தெரியாது. லிங்க் கொடுத்து இருக்கேன், சிரமம் பாராமல் காப்பி, பேஸ்ட் செஞ்சி படித்துப்பாருங்கள்.

    http://nunippul.blogspot.com/2006/09/blog-post_17.html

    ReplyDelete
  18. aaha... asathal anna...

    ore flashbacka varuthe... naanum kathukka aarambichappa ippadithaan ellarukkum guru vanakkam pottuttu suthittu irundhen. appuram eppa paathalum radio pottu vittu aadarathu. nan enna settai panninaalum enga appa supera irukkunu rasichu papar. ippa appavai paakanum pola irukku...

    ReplyDelete
  19. ஆஹா... அசத்தல் அண்ணா...

    நானும் இப்படிதான் கத்துக்க ஆரம்பிச்சப்ப எல்லாருக்கும் குரு வணக்கம் போட்டுக்கிட்டு திரிஞ்சுட்டு இருந்தேன். வீட்டுல எப்ப பார்த்தாலும் டேப்ப போட்டு விட்டு ஆடிக்கிட்டே இருப்பேன். நான் என்ன சேட்டை பண்ணினாலும் எங்க அப்பா சூப்பர்னு சொல்லி ரசிச்சு பார்ப்பார். உங்களை பாக்கும்போது எங்க அப்பா ஞாபகமா வருது... பேசாம அபி பாப்பா மாதிரியே குட்டி பாப்பாவாவே இருந்திருக்கலாம்... ப்ச்ச்ச்ச்...

    ReplyDelete
  20. அய்யோ.. அய்யோ... நீங்க அபிய இந்த ஓட்டு ஓட்டுறீங்க.. பாருங்க.. நீங்க வயசான காலத்துல உங்கள முதியோர் இல்லத்துல சேக்கப் போறா.. ;)))
    இது சூப்பர். லுக் அவுட் அபி அப்பா.!!
    உங்க வீட்டுல எல்லோருமெ குருவண்க்கம் போட்டு இருப்பீங்க்களோனு நினைச்சேன். டைகரோட நின்னிடுச்சா:-)

    ReplyDelete
  21. இதெல்லாம் பாப்பாவுக்கு தெரிஞ்சுது அப்புறம் இருக்குடி உனக்கு ஆப்பு.

    ReplyDelete
  22. //ஆனந்த விகடன்ல கவர் ஸ்டோரியா வரப்போகுது
    //

    நாங்கதான் நீங்க ஆனந்த விகடன்ல எழுதினது எல்லாம் படிச்சிருக்கோமே... அதே மாதிரி ஒரு கவர்ல நீங்க 'ஸ்டோரி'ன்னு எழுதி ஆனந்த விகடன்ல வச்சு ஸ்கான் பண்ணி அனுப்பிருங்க... நாங்களும் படிச்சிட்டு ஒரு 40 பின்னூட்டம் போட்டுர்றோம். ஹிஹிஹி...

    ReplyDelete
  23. ஸ்போர்ட்ஸ் முடிஞ்சு இப்போ பாப்பா பரத நாட்டியத்தில் கலக்க வந்தாச்சா??

    ReplyDelete
  24. //இந்த அதிசயம் ஆனந்த விகடன்ல கவர் ஸ்டோரியா வரப்போகுது(அப்போ நல்ல டி ஷர்ட் போட்டுகிட்டு போஸ் குடுக்கனும்)அப்டீன்னு நெனச்சுகிட்டேன்.//

    ஆனந்த விகடன் என்ன.. உலக வரலாற்றிலேயே போட்டு அசத்திடலாம்.. ;-)

    ReplyDelete
  25. //எனக்கு அப்போதான் அந்த டவுட் வந்துச்சு. பாப்பாதான் 1 வாரத்திலே கு.வ கத்துகிட்டாளே, பிறகு ஏன் 1 மாசமா அதையே செய்றா, டீச்சர் வேற எதுவும் இன்னுமா சொல்லிதரலை??//

    அந்த ஒரு வாரத்துக்கு பிறகு, அபி பாப்பா டீச்சருக்கு ஒரு மாதமா குரு வணக்கம் சொல்லிக் கொடுத்திருப்பா போல.. ;-)

    ReplyDelete
  26. சூப்பர் சவால் அபி அப்பா, நாங்கூட சின்ன வயசில எம்.எஸ்.சுப்புலட்சுமி எம்.எல் வசந்தகுமாரிக்கு சவால் விட்டது ஞாபகம் வந்திருச்சு.
    இன்னும் விடறதுல்ல. சித்ரா,ச்ரிநிதி ரங்கராஜன் எல்லாருக்கும் சவால் விடறேங்க.

    ReplyDelete
  27. அபிஅப்பா என்ன நம்ம பேரை இப்டி லிங்க் குடுத்து மாட்டிவுடுறீங்க.[சரி சரி எல்லாப்பதிவுலயும் எப்டியாச்சும் சேத்துவுடுங்க]
    அபிபாப்பா சீக்கிரமே ப.நா கத்துக்கிட்டு கு.சுப்புவோடவும் கு.டைகரோடவும் அரங்கேற்றம் பண்ண ஆசிகள்

    ReplyDelete
  28. ஹைய்யோ ஹைய்யோ
    :-)))))))))))))))))))))))))))))))))

    ReplyDelete
  29. //பேசாமெ உங்க பேரை சுப்ரமணியன்னும் பாப்பா பேரை பத்மான்னும் மாத்திவச்சுக்கணும்//
    சூப்பர் லொள்ளு! ஆனாலும் ரசிக்கும்படியான லொள்ளு!!!!

    ReplyDelete
  30. எல்லாத்துலயும் பொண்ண பெஸ்டாக்கணும்ன்னு நீங்களும்
    பிரம்ம பிரயத்தனம் பண்றீங்க..
    நடத்துங்க நடத்துங்க..
    அபிக்கு இப்ப கத்துக்கவும் படிக்கவும்
    நேரம் பத்தாம இருக்கறத விட
    அப்புறம் பெரிசானதும் தெரிஞ்சதெல்லாம்
    செய்யறதுக்கும் நேரம் இருக்காது
    போலயே.ஐஏஎஸ் டான்ஸ் நடிப்பு
    அப்புறம்.....

    ReplyDelete
  31. அட அநியாய ஆபிஸரே... பத்மா சுப்ரமணியத்தை வம்பு இழுக்கிறரே... அதுவும் அபி வைத்து தான் வம்புக்கு இழுப்பதா....

    நீ டான்ஸ் கற்று மைக்கெல் ஜாக்சனுக்கு சவால் விட வேண்டியது தானே!!!!

    ReplyDelete
  32. //அடடா நம்ம கையில வெண்ணைய வச்சிகிட்டு நெய்க்கு பத்மா சுப்ரமணியத்த கேப்பானேன்னு பாப்பாவுக்கு பரதம் கத்துகுடுத்து அவங்கள விட பாப்பாவ பெரிய டான்ஸரா ஆக்கிடனும்னு முடிவு செஞ்சாச்சு.//

    அபி அப்பா, உம்முடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை அபியின் மேல் திணிப்பதை எதிர்த்து ஒரு வழக்கு தொடரலாம் என்று இருக்கேன். என்ன சொல்லுறீங்க....

    ReplyDelete
  33. //தங்கமணி: ''அதுக்கு உங்க பேர கண்மணி சொன்ன மாதிரி ச்சுப்ரமணின்னும் பாப்பா பேர பத்மான்னும் மாத்தனும்'//

    இது ரொம்ப ஈஸியான வழியா இருக்கே... இதைவிட்டுப்போட்டு பாப்பாவைப் போட்டு கஷ்டப்படுத்தியயருக்கீங்களே.....

    //நீ டான்ஸ் கற்று மைக்கெல் ஜாக்சனுக்கு சவால் விட வேண்டியது தானே!!!!//

    ஆஹா ஏன் இந்த ரத்தவெறி...

    ReplyDelete
  34. //இப்போதைக்கு குருவணக்கத்திலே மட்டும் போட்டி வையுங்க. நாங்களும் எவ்வளவு நாளுதான் காத்திருக்கறது?//

    வாங்க ராஜநாகம்! முதல் வருகை, மிக்க சந்தோஷம். அடிக்கடி வாங்க

    ReplyDelete
  35. // really enjoyed this part.

    Thanks//

    thanks anani iyya

    ReplyDelete
  36. //வழக்கம்போல அசத்தல்!!//
    வாங்க லொடுக்கு ஐயா. நன்றி:-))

    ReplyDelete
  37. //இந்த மாதிரி எல்லாம் விளம்பரம் பண்ணாதேய்யா. அப்புறம் எங்க வீட்டு எலி குருவணக்கம் போடற வரை வீட்டில் சாப்பாடு கிடைக்காது!!! :))//

    எலி வளக்குறீங்களா? நாங்க டைகர்தான்.(குறிப்பு: சூடான் புலியில்லை- இதுல எந்த உள்குத்தும் இல்லை)

    ReplyDelete
  38. //அய்யோ.. அய்யோ... நீங்க அபிய இந்த ஓட்டு ஓட்டுறீங்க.. பாருங்க.. நீங்க வயசான காலத்துல உங்கள முதியோர் இல்லத்துல சேக்கப் போறா.. ;))) //

    அங்க போனாகூட நம்ம லொல்லு குறையாது. அங்க உள்ளவங்களை சந்தோஷபடுத்தலாமே:-)))

    ReplyDelete
  39. //அபி அப்பா வழக்கம் போல தூள்...அடுத்த பதிவுக்கு வெயிட்டிங்....//

    இதோ போட்டாச்சு! போய் பாருங்க!

    ReplyDelete
  40. அபி அப்பா,

    இன்று முதல் நீ 'நகைச்சுவை நாயகன்' என எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுவாய் :)

    ReplyDelete
  41. //அபி அப்பா புகைப்படம் எல்லாம் கலக்கல இருக்கு ;)))) //

    கோபிதம்பி! இந்த போட்டோவ காட்டிதான் இப்போ பசங்களுக்கு மம்மு ஊட்டுறாய்ங்களாம்:-)))

    ReplyDelete
  42. //கற்றுக் கொண்ட கதை. "இதோ" போட தெரியாது. லிங்க் கொடுத்து இருக்கேன், சிரமம் பாராமல் காப்பி, பேஸ்ட் செஞ்சி படித்துப்பாருங்கள்.//

    நமக்கும் "இதோ" போட தெறியலை. யாராவது சொல்லித்தாங்கப்பா:-)0

    ReplyDelete
  43. //... பேசாம அபி பாப்பா மாதிரியே குட்டி பாப்பாவாவே இருந்திருக்கலாம்... ப்ச்ச்ச்ச்... //

    இம்சையம்மா!! நானும் அப்படி ஏங்கியிருக்கேன். என்ன செய்வது..ப்ச்ச்

    ஆமா நீங்க பாப்பா மாதிரி கு.வ மட்டும்தானா? இல்ல அதுக்கு மேலயுமா?

    ReplyDelete
  44. //உங்க வீட்டுல எல்லோருமெ குருவண்க்கம் போட்டு இருப்பீங்க்களோனு நினைச்சேன். டைகரோட நின்னிடுச்சா:-) //

    வாங்க வல்லியம்மா! டைகர்ரோட முடிஞ்சுது. உங்க வருகைக்கு மிக்க நன்றி!!

    ReplyDelete
  45. //இதெல்லாம் பாப்பாவுக்கு தெரிஞ்சுது அப்புறம் இருக்குடி உனக்கு ஆப்பு.//

    தம்பி! நீயே போட்டு குடுத்தாலும் குடுப்ப. நம்ப முடியாதுப்பா உன்னை:-))

    ReplyDelete
  46. //நாங்கதான் நீங்க ஆனந்த விகடன்ல எழுதினது எல்லாம் படிச்சிருக்கோமே... அதே மாதிரி ஒரு கவர்ல நீங்க 'ஸ்டோரி'ன்னு எழுதி ஆனந்த விகடன்ல வச்சு ஸ்கான் பண்ணி அனுப்பிருங்க... நாங்களும் படிச்சிட்டு ஒரு 40 பின்னூட்டம் போட்டுர்றோம். ஹிஹிஹி... //

    இதுகூட நல்ல ஐடியாதான் ஸ்ரீதர்! செஞ்சுட்டா போச்ச்சு:-))

    ReplyDelete
  47. //அந்த ஒரு வாரத்துக்கு பிறகு, அபி பாப்பா டீச்சருக்கு ஒரு மாதமா குரு வணக்கம் சொல்லிக் கொடுத்திருப்பா போல.. ;-) //

    மைஃபிரன்ட்!
    பாருங்க அடுத்த பாகத்தை, என்ன நடக்கபோகுதுன்னு:-))

    ReplyDelete
  48. //ஆனந்த விகடன் என்ன.. உலக வரலாற்றிலேயே போட்டு அசத்திடலாம்.. ;-) //

    thanks myfriend!:-))

    ReplyDelete
  49. //சூப்பர் சவால் அபி அப்பா, நாங்கூட சின்ன வயசில எம்.எஸ்.சுப்புலட்சுமி எம்.எல் வசந்தகுமாரிக்கு சவால் விட்டது ஞாபகம் வந்திருச்சு.//

    வாங்க சின்ன அம்மனி! நீங்களும் அப்டிதானா?:-))

    ReplyDelete
  50. //அபிபாப்பா சீக்கிரமே ப.நா கத்துக்கிட்டு கு.சுப்புவோடவும் கு.டைகரோடவும் அரங்கேற்றம் பண்ண ஆசிகள் //

    உக்கூம்! அடுத்த பாகத்தை படிங்க கண்மணி!!:-))

    ReplyDelete
  51. //ஹைய்யோ ஹைய்யோ
    :-)))))))))))))))))))))))))))))))))//

    என்ன துளசி டீச்சர்! இவ்ளோவ் சிரிப்பா:-))

    ReplyDelete
  52. //சூப்பர் லொள்ளு! ஆனாலும் ரசிக்கும்படியான லொள்ளு!!!!//

    நன்றி நானானி அவர்களே!

    ReplyDelete
  53. //எல்லாத்துலயும் பொண்ண பெஸ்டாக்கணும்ன்னு நீங்களும்
    பிரம்ம பிரயத்தனம் பண்றீங்க..
    நடத்துங்க நடத்துங்க..//

    வாங்க முத்துலெஷ்மி! எங்க அம்மா கூட சொல்லுவாங்க என்னிடம்.."டேய் பாப்பா உன் கைக்கு கிடைச்ச பொம்மையா?"ன்னு கேப்பாங்க!!

    ReplyDelete
  54. //நீ டான்ஸ் கற்று மைக்கெல் ஜாக்சனுக்கு சவால் விட வேண்டியது தானே!!!! //

    புலியாரே! இதுகூட நல்ல ஐடியாதான். சீக்கிரம் செங்சுடுவோம்!:-))

    ReplyDelete
  55. //அபி அப்பா,

    இன்று முதல் நீ 'நகைச்சுவை நாயகன்' என எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுவாய் :)//

    நன்றி மணிகண்டன்! உங்க கிரிக்கட் உலக கோப்பை ஸ்பெஷல் சூப்பர்!

    ReplyDelete
  56. //இது ரொம்ப ஈஸியான வழியா இருக்கே... இதைவிட்டுப்போட்டு பாப்பாவைப் போட்டு கஷ்டப்படுத்தியயருக்கீங்களே....//

    வாங்க பிரசன்னா! அடுத்த பாகத்தை பாருங்க :))).

    ReplyDelete
  57. abi appa!!
    super post..
    ROTFL
    unga ponna vechu indha vaaru varareengale.. unga thangamaniku kovam illaya???
    seri enna namma kadai pakkam ala kanum?

    ReplyDelete
  58. tiger guru vanakam kathukarthu irukatum.. engayavathu teacher adukum serthu guru dakshinai keka poranga

    ReplyDelete
  59. //அந்த டிரஸ் எல்லாம் எங்க தைக்கனும்னு கேட்டதுக்கு "உங்க ஆர்வம் ரொம்ப ஜாஸ்தி. அந்த டிரஸ் இன்னும் 3 வருஷம் கழிச்சு பாத்துகலாம், இப்போ கத்துக்க சுடிதார் மட்டும் போதும்"ன்னுட்டாங்க.//

    அவசரக்குடுக்கை அபி அப்பா னு பேர் வைக்கலாம் :-)

    பாப்பா கு.வ. கத்துக்கிட்டதோட இலவசமா டைகரும் கத்துக்கிச்சே.. அதைச் சொல்லுங்க :)

    ReplyDelete
  60. //மீனு வாங்கலையோ மீனுன்னு கூவிக்கிட்டு வந்த அந்த மீன்காரம்மா, வந்தா மீனை வித்துட்டு போகாம "பாப்பா எங்க டான்ஸ் ஆடு"ன்னு சொல்ல, பாப்பாவும் சந்தோஷமா ஒரு செஞ்சுரி அடிச்சா. அந்தம்மா போகும் போது "கருவாடு வாங்கலையோ கருவாடு"ன்னு கூவிகிட்டு போனாங்க!!
    //

    :))

    சூப்பர் காமெடியா எழுதறீங்களே அபி அப்பா!

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))