பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

May 23, 2007

நானும் சாமியாரா போக போறேன்!!!

திஸ்கி:
சும்மா ஜாலியா எழுதிகிட்டு 4 பேர் சிரிச்சாங்களா போனோமான்னு இருந்தேன். கண்மணி டீச்சர் வந்து கலக்க ஆரம்பிச்சதுல நம்ம கடை யாவாரம் கம்மியா போச்சு. சரி வந்தவரை லாபம்ன்னு இருந்தேன், இப்போ முதலுக்கே மோசம் ஆவது போல நம்ம அவந்திகா பொண்ணு காமடி போஸ்ட் போட்டு கலக்க ஆரம்பிச்சிட்டதால நான் காவி கட்டிக்க முடிவெடுத்துவிட்டேன். அதுக்கு முன்னோடியா இந்த சாமி பதிவு

**************************
மயிலாடுதுறையில் இருந்து 6 கி.மீ தூரத்தில் (செம்பனார்கோவில் போகும் வழி)விளநகர் என்னும் சிறிய கிராமத்தில் இந்த கோயில் உள்ளது. மெயின் ரோட்டில் இருந்து பார்த்தாலே தெரியும். சுற்றிலும் பச்சை வயல் நடுவே இக் கோயில், கோயிலின் வடக்கு பக்கம் கொஞ்ச தூரத்திலேயே சல சலக்கும் காவிரி. அதன் பக்கத்தில் முந்திரி காடு. முன்பெல்லாம் சைக்கிள் கூட அந்த இடத்துக்கு போக முடியாது. நாம் வயல் வரப்பில் நடந்து தான் உள்ளே போகமுடியும். ஆனால் இப்போ சின்னதா ஒரு மண் ரோடு போட்டு கார் கூட உள்ளே வந்துடுது. அதிலே எனக்கு சின்ன வருத்தம் தான்.
.
கோயில் உரிமையாளர் பெயர்....ஸ்ரீ பச்ச காத்தாயி அம்மன் எங்களுக்கு என்ன கஷ்டம் வந்தாலும் அவ வாங்கிகிட்டு எங்களுக்கு சுகம் கொடுப்பாள் எங்க குல தெய்வமான அவள்.இதோ ஜம்முன்னு உக்காந்து இருக்கும் அழகை பாருங்க
.
Photo Sharing and Video Hosting at Photobucket
அவங்களுக்கு பாடிகார்ட்ஸ் உண்டு. வாழ் முனீஸ்வரர், கஞ்சமலை, பஞ்ச முனி இவிங்க தான்.
இதோ இவருதான் வாழ்முனீஸ்வரர்
Photo Sharing and Video Hosting at Photobucket
.
நாங்க சின்ன பிள்ளையா இருக்கும் போது அவர் கிட்டயே போக பயப்படுவோம். ஆனா எங்க பசங்க அவரை சுத்தி சுத்தி கொஞ்சம் கூட பயப்படாம விளையாடுதுங்க. ஆள் எப்படி ஆஜானு பாகுவா இருக்கார் பாருங்க!
.
இவங்க தான் பஞ்சமுனி. வாழ் முனிஸ்வரருக்கு பக்க பலம்ஸ் இவங்க, அவரி விட கொஞ்சம் சின்ன சைஸ் வேஷ்டி போதும் இவங்களுக்கு
.
Photo Sharing and Video Hosting at Photobucket
.
இவர் கஞ்சமலை,
.
Photo Sharing and Video Hosting at Photobucket
.
பச்சகாத்தாயி சக்தி அவதாரம்தானே அதானால தன் பிள்ளைகளுக்கும் தன்வீட்டிலே இடம் அதாங்க கணபதி, முருகன் வித் தங்கமணீஸ்
.
Photo Sharing and Video Hosting at Photobucket
.
இந்த கோயில் பூசாரி இருக்காரே அந்த வாழ்முனீஸ்வரர் மாதிரியே இருப்பார். நோய் நொடி இல்லாம உம் புள்ள குட்டிகளை காப்பாத்துன்னு உச்சஸ்தாயில நீட்டமா ஒரு டயலாக் கொடுக்கும் போது குலை நடுங்கும்.
கோயில் வளாகத்திலே ரொம்ப பெரிய அரசமரமும் வேப்பமரமும் பின்னி பிணைஞ்சு இருக்கும். ஒரு சொம்பு மட்டும் இருந்தா அந்த மரமேடைல உக்காந்து 1000 பஞ்சாயத்து பண்ணலாம். அப்புடி ஒரு சுகமான காத்து வரும் அங்கே.
.
ஆடிமாசம் கடைசி வெள்ளி கிழமை எங்க சொந்த பந்தங்கள் எந்த ஊர்ல இருந்தாலும் அங்க போயிடுவோம். அதை பத்தி எழுதினா அது காமடி பதிவா போய்டும் அதனால விட்டு விடுவோம்.
.
இப்பவம் நான் என் தம்பி இரவில் சில சமயம் தங்கமணி, குழந்தைகளோடு இரவு 8.00 மணிக்கு மேல் போய் அங்கேயே கொண்டு போகும் இட்லி வகையராக்களை தின்னுட்டு இரவு 11.00 மணிக்கு திரும்புவோம். எங்களையும் அந்த சாமிகளையும் தவிர வேற ஆசாமிகளே பொறாமை,சூழ்ச்சிதனங்கள் இல்லாத அந்த உலகமே தனி சுகம்.
.
இன்னும் சில தினங்களில் அங்கே கும்பாபிஷேகம் நடக்க போவுது. என் மனசு அங்கேயே சுத்துது!

34 comments:

  1. மக்களே! போட்டோ கொஞ்சம் கட்டாகி தெரியுது, சீக்கிரம் சரி செய்கிறேன்!

    ReplyDelete
  2. தலைவரே!!

    கண்டன அறிக்கை ரெடி ஆகிவிட்டது!!

    எங்கள் தலைவரை பரதேசம் போக வைத்த பாசிச கண்மணி டீச்சருக்கு கண்டனம்!!

    ReplyDelete
  3. //பொறாமை,சூழ்ச்சிதனங்கள் இல்லாத அந்த உலகமே தனி சுகம்.//

    உலகம் பூரா உங்க உலகம் போலவே ஆகணும்னு
    ஸ்ரீ பச்ச காத்தாயி அம்மன்
    கிட்ட நானும் வேண்டிக்கிறேன்.

    ReplyDelete
  4. சாமி, பக்கத்துல அஸிஸ்டெண்ட் ரெண்டு பேரு இருக்காங்களே, அந்த அம்மிணிங்க பேர் என்ன தலைவா?

    ReplyDelete
  5. * வாங்க வினையூக்கி!

    *குட்டி பிசாசு! படிச்சேன் அந்த கண்டன அறிக்கையை:-))))

    *வாங்க அனானி! நிச்சயம் அது போல உலகம் இருந்தா என்ன சந்தோஷமா இருக்கும்!

    * கொத்ஸ்! அது வள்ளி/தெய்வயானை

    ReplyDelete
  6. பரவாயில்லையே.. ரூட் மாறுனாலும் மாறுனீங்க. பேர் எல்லாம் அதுக்கு ஏத்தா மாதிரி மாத்திட்டீங்க. வெரி குட் வெரிகுட்.

    அப்புறம் போன பின்னூட்டத்தில் பழைய ஞாபகத்தில் தலைவா அப்படின்னு எழுதிட்டேன். அதை குருவேன்னு படிச்சுக்குங்க.

    ReplyDelete
  7. எங்க ஊர்ஸ்லயும் பச்சையம்மன் கோயில் ஒன்னு இருக்கு!!

    அங்கயும்!! 3 முனி இருக்கும்! வாமுனி,செம்முனி,ஜடாமுனி! ரொம்ப பழைய கோயில். எல்லாம் சுண்ணாம்புல செய்து இருக்காங்க!!

    உங்களால எனக்கு அடிக்கடி ஊர்ஸ் ஞாபகம் வந்துடுது!!

    ReplyDelete
  8. கீதாம்மா சொன்னாங்க:

    விளநகரா? உங்களுக்கு? நிறையத் தெரிஞ்சவங்க, அறிஞ்சவங்க, சொந்தம், பந்தம் எல்லாம் இருக்கே?

    ஏன்ன்னு தெரியல கமெண்ட் பப்ளிஷ் ஆக அடம்ப்டுக்கிது

    ReplyDelete
  9. முத்து லெஷ்மி இப்படி சொன்னாங்க"

    good post ,appappa ippadi potta nanga poi pakka vasathiya irukkum.

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள் நீங்கதான் அசி.ஹேச் எம் மாம்.தருமி சொன்னாரே.பாக்கலையா

    கிடேசன் பள்ளி மானவன்

    ReplyDelete
  11. வணக்கம் அபி அப்பா .கல்யாணி கம்ப்யூட்டர் ஜோசியர் எனக்கு மே 24 லிருந்து நல்ல நேரம்னார்.அதான் இதுவோ?
    சரி பாசமா பழகிட்டீங்க ஒரு செட் காவி வாங்கித்தர முடிவு பண்ணிட்டேன்.உண்டியல் சுத்தி வந்துகிட்டிருக்கு.கலெக்ஷன் முடிஞ்சதும் வாங்கிடறேன்.
    பி.கு:கோபி காவிக்கான மொத்த பணமும் தர்ரேன்னான்.[எனக்கு போட்டுக் குடுக்கும் பழக்கமில்லீங்கோ.]
    அப்டியே அய்யனாரும் கூட்டிப் போங்க காடு உருப்பட்டுடும் .

    ReplyDelete
  12. மாம்பழ சீசனில் தான் இந்த திருவிழா நடக்கும் அத பத்தியும் ரெண்டு வரி போட்டுயிருக்கலாம்....

    ReplyDelete
  13. அபி அப்பா,
    நீங்க சாமியார் ஆகாமல், வெளிநாடு ஒன்றுக்குப் போய் கோயில் கட்டினால் நல்லாய் சம்பாதிக்கலாமே? ஏன் சாமியாராய் போகணும் என்னு அடம் பிடிக்கிறீங்க??:P

    ReplyDelete
  14. Haran said...
    அபி அப்பா,
    நீங்க சாமியார் ஆகாமல், வெளிநாடு ஒன்றுக்குப் போய்
    //

    இப்ப இங்க சாமியாதான் இருக்கார்
    சம்சாரிக்குதான் அங்க வர்ரார்

    M

    ReplyDelete
  15. Naanum unga oorunga..Adhaan unga blog paarka vandhaen....
    Semnaarkovil theriyum aana vilanagar theriyadhu...Photo edhuvum paarka mudiyalayae :(

    ReplyDelete
  16. என்ன இது? என்னோட கமென்டை மட்டும் காக்கா அடிக்கடி தூக்கிட்டுப் போகுது? இல்லை அந்த முனியோட வேலையா? இந்த கமென்ட் மட்டும் வரலை, என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது. :)))))))))))))))

    ReplyDelete
  17. "naanum".. appo vera yaar saamiyaara ponathu :((

    ReplyDelete
  18. :))))))))))))

    போட்டோங்களும் அருமை!

    ReplyDelete
  19. //கோயில் வளாகத்திலே ரொம்ப பெரிய அரசமரமும் வேப்பமரமும் பின்னி பிணைஞ்சு இருக்கும். ஒரு சொம்பு மட்டும் இருந்தா அந்த மரமேடைல உக்காந்து 1000 பஞ்சாயத்து பண்ணலாம்//

    அபி அப்பா! என்னதான் நீங்க சீரியஸா எழுதப் போறேன்னு கெளம்பினாலும் காமெடி உங்களை விடப் போக மாட்டேங்குது போல!

    ReplyDelete
  20. /// அபி அப்பா said...
    மயிலாடுதுறையில் இருந்து 6 கி.மீ தூரத்தில் (செம்பனார்கோவில் போகும் வழி)விளநகர் என்னும் சிறிய கிராமத்தில் இந்த கோயில் உள்ளது. ///

    மயிலாடுதுறையிலிருந்து செம்பனார் கோயில் போகும் வழியில் எங்கங்க உங்க ஊர் விளநகர் வருது?

    எனக்குத் தெரிந்து மயிலாடுதுறையிலிருந்து கொத்தத்தெரு, நாஞ்சில் நாடு, தருமபுரம், மூங்கில் தோட்டம், மன்னம்பந்தல், ஆறுபாதி பிறகு செம்பனார்கோயில் வருது. இதற்கு இடையில் எங்கங்க விளநகர் வருகின்றது? ரூட்டை கடைக்கிட்டாச் சொல்லுங்க இல்லைன்னா அழுதுடுவேன். ஆங்....

    ReplyDelete
  21. என்ன அபி அப்பா,சாமியாராப் போனால் வர தம்பிப்பாப்பாவை யாரு பாத்துக்கறது.
    அபிக்குக் கலயாணம்,தம்பி படிப்ப எல்லாம் இருக்கே.
    ஒரு வேளை அதுக்காகத்தான் சாமியாடுரீங்களோ.:-))
    பொங்கல் வைக்கும்போது எங்களுக்கும் சேர்த்து சாமி கும்பிடுங்க.

    ReplyDelete
  22. அப்பாசாமின்னு யாரோ இந்தப் பக்கம் ஒருத்தர் இருக்காராமே .. அவருதான நீங்க ..?

    ReplyDelete
  23. //அப்புறம் போன பின்னூட்டத்தில் பழைய ஞாபகத்தில் தலைவா அப்படின்னு எழுதிட்டேன். அதை குருவேன்னு படிச்சுக்குங்க. //

    என்ன கொத்ஸ்! சிஷ்யனா ஆக இவ்வளவு ஆசை, அப்படீன்னா அதுல ஏதோ லாப சமாச்சாரம் இருக்குன்னு நெனைக்கிறேன்!

    ReplyDelete
  24. // குட்டிபிசாசு said...
    எங்க ஊர்ஸ்லயும் பச்சையம்மன் கோயில் ஒன்னு இருக்கு!!

    அங்கயும்!! 3 முனி இருக்கும்! வாமுனி,செம்முனி,ஜடாமுனி! ரொம்ப பழைய கோயில். எல்லாம் சுண்ணாம்புல செய்து இருக்காங்க!!//

    வாங்க குட்டி பிசாசு! வருகைக்கு நன்றி!

    ReplyDelete
  25. //கீதாம்மா சொன்னாங்க:

    விளநகரா? உங்களுக்கு? நிறையத் தெரிஞ்சவங்க, அறிஞ்சவங்க, சொந்தம், பந்தம் எல்லாம் இருக்கே? //

    எனக்கு மயிலாடுதுறைதான். கோயில்தான் விளநகர்!

    ReplyDelete
  26. //good post ,appappa ippadi potta nanga poi pakka vasathiya irukkum. //

    வாங்க முத்துலெஷ்மி! சரியான டூர்ல இருக்கீங்க போல இருக்கே! இந்த முறை நீங்க வரும் போது இங்கே போகலாம்!

    ReplyDelete
  27. //வாழ்த்துக்கள் நீங்கதான் அசி.ஹேச் எம் மாம்.தருமி சொன்னாரே.பாக்கலையா

    கிடேசன் பள்ளி மானவன்//

    நன்றி கிடேசன் பள்ளி ஸ்டூடண்ட்!

    ReplyDelete
  28. // கண்மணி said...
    வணக்கம் அபி அப்பா .கல்யாணி கம்ப்யூட்டர் ஜோசியர் எனக்கு மே 24 லிருந்து நல்ல நேரம்னார்.அதான் இதுவோ?
    சரி பாசமா பழகிட்டீங்க ஒரு செட் காவி வாங்கித்தர முடிவு பண்ணிட்டேன்.உண்டியல் சுத்தி வந்துகிட்டிருக்கு.கலெக்ஷன் முடிஞ்சதும் வாங்கிடறேன்.
    பி.கு:கோபி காவிக்கான மொத்த பணமும் தர்ரேன்னான்.[எனக்கு போட்டுக் குடுக்கும் பழக்கமில்லீங்கோ.]
    அப்டியே அய்யனாரும் கூட்டிப் போங்க காடு உருப்பட்டுடும் .//

    என்னய காட்டுக்கு அனுப்ப கொல வெறியோட இருக்கீங்க டீச்சர்!நடத்துங்க!:-))

    ReplyDelete
  29. //மின்னுது மின்னல் said...
    மாம்பழ சீசனில் தான் இந்த திருவிழா நடக்கும் அத பத்தியும் ரெண்டு வரி போட்டுயிருக்கலாம்.... //

    வாங்க மின்னல்! ஆமா போட்டிருக்கலாம்!

    ReplyDelete
  30. //Haran said...
    அபி அப்பா,
    நீங்க சாமியார் ஆகாமல், வெளிநாடு ஒன்றுக்குப் போய் கோயில் கட்டினால் நல்லாய் சம்பாதிக்கலாமே? ஏன் சாமியாராய் போகணும் என்னு அடம் பிடிக்கிறீங்க??:P //

    வாங்க ஹரன்!

    அப்படிகூட செய்யலாம், நல்ல ஐடியாதான்:-))

    ReplyDelete
  31. //ராஜி said...
    Naanum unga oorunga..Adhaan unga blog paarka vandhaen....
    Semnaarkovil theriyum aana vilanagar theriyadhu...Photo edhuvum paarka mudiyalayae :(//

    வாங்க ராஜி!ஏவிசி காலேஜ்க்கு அடுத்து இந்த ஊர்தான். மெயின்ரோட்டில இருந்து பார்த்தா தெரியும் இந்த கோவில்.போட்டோ பார்க முடியுதே!

    ReplyDelete
  32. ஆறுபாதிதான் விளநகர், விளநகர்தான் ஆறுபாதி! இது கூடத் தெரியாமல் இருக்கீங்களே!

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))