பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

December 12, 2007

பொங்கலுக்கு பின்னே காபி சாப்பிடுவது இப்படித்தான்!!!

பொங்கல் சாப்பிடுவது எப்படின்னா இங்க போய் பாருங்க, பின்ன இத படிக்கலாம்!!

ரெண்டு கவளம் உள்ளே இறக்கியதுமே சொர்கத்திலே இருக்கும் உணர்வு வந்துவிடும். அப்படியே ரிலாக்ஸ்டா தினமணியை புரட்டினால் "பாக். பற்றி லோக்.கில் விவாதம்" "ஆ.பி முதல்வர் ம.பி சென்றார்" "த.நா வில் மி.வா இருளிள் மூழ்கியது"ன்னு பழக்க பட்டவங்களுக்கு மட்டுமே புரியும் படியாக இருக்கும் செய்திகளை படிச்சு கிட்டே குறுக்கும் நெடுக்குமா போய் வந்து கிட்டு இருக்கும் ச்சீனாவை பார்க்காமலே பேப்பரில் கண்ணை ஓட்டிகிட்டே "ச்சீனா ரமாவுக்கு கல்யாணமாமே?"ன்னு கேட்டா அவன் "ஒத்த தெரு ரமாவா, ரெட்ட தெரு ரமாவா?"ன்னு பதிலுக்கு கேப்பான். அதுக்கு நாம் அவனுக்கே குழம்பும் விதத்தில் "ஒத்த தெருவுல ரெட்ட ஜடை போட்டு கிட்டு ஒத்த ரோஜா வச்சுகிட்டு முட்ட கண்ணா இருப்பாளே அவளை கேட்டேன்"ன்னு சொன்னா கடுப்பாகிடுவான். "உனக்கு வேற வேலையே இல்லியா வந்தா வந்த வேலைய பாரு"ன்னு சொல்லிட்டு போவான்.

அப்போ பொங்கல் கிட்டத்தட்ட கடைசி கவளம் வந்திருக்கும். ஆனா அந்த கடைசி கவளத்தை சாப்பிட கூடாது. காரணம் இருக்கு. பின்ன சொல்றேன். "ச்சீனா ஒரு பாத்திரத்துல கொஞ்சம் தண்ணி கொண்டா வெரலை கழுவிக்கிறேன், அப்படியே நம்ம ஹீரோயின கூட்டிகிட்டு வாடா"ன்னு சொல்லிட்டு சுற்றிலும் யாரும் இல்லாமையை உருதி செய்து கொண்டு விரலை சூப்பிட வேண்டியது தான்.

இப்ப தான் நம்ம ஹீரோயின் விஜயம். அதாங்க காளியாகுடி ஸ்பெஷல் ஃபில்டர் காபி!! முதல்ல இந்த தஞ்சாவூர் ஆளுங்களை பார்த்து மத்தவங்க பொறாமை படும் விஷயுமே பில்டர் காபில தான். அவங்க எல்லாம் நெனச்சு கிட்டு இருப்பாங்க தஞ்சாவூர் ஆளுங்க எல்லாம் பில்டர் காபி விஷயம் முத கொண்டு என்னா ஒத்துமைன்னு. ஆனா உள்ளுகுள்ள நடக்குற வெட்டு குத்து எங்களுக்கு தான் தெரியும். தஞ்சாவூர்ல இருந்து மாமா யாராவது வந்துட்டா போதும். பசங்க அவர் காது பட "டேய் தஞ்சாவூர்ல கோமள விலாஸ் காபிதான் நெம்ம பேமஸாம்டா, அந்த கன்றாவிய ஒரு தடவ குடிச்சேன். கழுத மூத்திரம் போல இருந்துச்சுடா பேசாம கோமண விலாஸ்ன்னு பேர் வச்சிருக்கலாம்"ன்னு வாருவானுங்க. அவரும் தஞ்சை குசும்புதானே! பதிலுக்கு "என்ன மாப்ள கழுத மூத்திர டேஸ்ட்டில QA/QC போல இருக்கே"ன்னு பதிலடி கொடுப்பாரு.இதே கும்பகோணம் ஆளுங்க வந்துட்டா “லெஷ்மி விலாஸ் பசும் பால் காபி கிளப்பாம்டா, அதுக்கு ஓனர் பஞ்சாமி அய்யராம்டா, ஹய்யோ ஹய்யோ அது பஞ்சாமி அய்யர் கடை காபி மாதிரியா இருக்கு பஞ்சாபி அய்யர் காபி மாதிரில்ல இருக்கு”ன்னு ரப்சர் பண்ணுவாங்க. அதவிடுங்க, நம்ம காளியாகுடி பில்டர் காபி பத்தி பார்ப்போம்.சாதாரனமா நீங்க பில்ட்டர் எந்த சைஸ்ல பார்த்திருபீங்க...ஒரு சான் அளவிலே தானே.

நம்ம காளியாகுடி பில்டர் எந்த சைஸ்ன்னு சரியா சொல்லனும்ன்னா, கல்யாண வீட்டுல் கல்யாண பொண்ணு கொஞ்சம் குள்ளமா இருந்தா மாப்பிள்ளைகிட்ட போய் பசங்க"என்னடா உனக்கு காளியாகுடி காபி பிடிக்கும் ஒத்துகறோம் அதுக்காக அந்த பில்டரையேவா கட்டிக்கனும்"ன்னு கிண்டலடிப்பாங்க. இப்ப புரிஞ்சுதா பில்டரின் சைஸ். ராத்திரி 9 மணிக்கு 3 கிலோ பீபரி (ஆக்சுவலி அது pure berry)ல கொஞ்சமா சிக்கரி கலந்து பில்டரின் மேல் அடுக்கில் கொட்டி லைட்டா அமுக்கி அதன் மேல் கொதிக்க கொதிக்க தண்ணீர் விட்டு காலையில் பார்த்தா கீழ் அடுக்கில் சூப்பரான டிக்காஷன் ரெடி! சுத்தமான பசும் பால் கொதிக்க வைத்து ஜீனி கம்மியா போட்டு இந்த டிக்காஷனை கலந்து ச்சீனா இதோ கொண்டு வர்ரான்னு நினைக்கிறேன். அவன் வரும் முன்னமே வாசனை வந்துடுச்சு. டபரா செட்ல தான் அதுவும் பித்தளை ஈயம் பூசினது தான். 4 இன்ச் தான் டம்ப்ளர் சைஸ். 4 மொடக்குக்கு தான் வரும் காபி. மேலே கொஞ்சம் நுரை அதை டபராவில் இருக்கும் சொச்ச காபியோடு கலந்து சூடா வாய் கிட்ட கொண்டு போய் வாயால உறுஞ்சும் முன்ன வாசனையை மூக்கால உறுஞ்சி அந்த தம்மாத்தூண்டு டம்ப்ளரை ரெண்டு கையாலும் பிடிச்சுகிட்டு முடிஞ்சா பாம்பாட்டி மாதிரி உக்காந்து கிட்டு ஒரு இழுப்பு இழுத்து பாருங்க "சொர்க்கம் மதுவிலே"ன்னு எழுதின கவிஞர் இப்படி செஞ்சிருந்தா மாத்தி எழுதியிருப்பார்.

இதுல நாம முக்கியமா கவனிக்க வேண்டியது சிலது இருக்கு. பொங்கல் நல்லா இருக்கேன்னு இன்னுமொரு பொங்கல் சாப்பிடக்கூடாது. 9 மணிக்கு மேல நெஞ்சை கரிக்கும். காபி நல்லா இருக்க்கேன்னு இன்னும் ஒன்னு வாங்கி சாப்பிட கூடாது செமத்தையா தூக்கம் வரும்.

இப்போ நாம சாப்பிட்ட பொங்கல்/காபி இது ரெண்டிலும் எது அதிக சுவைன்னு பாலமன் ஆப்பையாவை மனசுக்குள்ள இருத்தி பட்டிமன்றம் நடத்தனும். "நல்லா சொன்னாங்கய்யா ராசா தரப்புல காபி நல்லா இருந்துச்சுன்னு பாரதி சப்புகொட்டி சொன்னாலும் ராஜா புடிச்ச பாயிண்டே தனிதான்யா…ஆஹ இன்னிக்கு விஞ்சி நிற்பது பொங்கல்தான்யா”ன்னு தீர்ப்பு வந்துச்சுன்னா மனசுல டக்குன்னு அந்த கடைசி கவளம் பொங்கலை வாயில போட்டுகிட்டு வேட்டில விரலை தொடச்சிகிட்டு கிளம்பிடனும். தீர்ப்பு காபிக்கு வந்தா “ச்சீனா கொஞ்சம் டிக்காஷனை கொண்டா”’ன்னு கேட்டு வாங்கி வாயில ஊத்திகிட்டு கிளம்பிடனும். அதுக்கு பின்ன 2 மணி நேரத்துக்கு புகையிலை,வெத்தலை,சிகரட் போன்ற லாகிரி வஸ்துகளுக்கு நிச்சயம் விடுமுறை என்பது நிச்சயம்!!!

19 comments:

  1. //ராத்திரி 9 மணிக்கு 3 கிலோ பீபரி (ஆக்சுவலி அது pure berry)ல//

    வந்தோமா நகைச்சுவை பதிவு எழுதினோமா போனோமான்னு இருக்கணும். இதெல்லாம் விக்கி பசங்க செய்ய வேண்டியது.

    அது ப்யூர் பெரியும் இல்லை ஒரு மண்ணும் இல்லை. அது பீபெரிதான். பொதுவாக காப்பி கொட்டைகள் இரு பகுதியாக இருக்கும். அப்படி இல்லாமல் எல்லாம் இணைந்து ஒரு பகுதியாகவே இருக்கும் கொட்டைகளுக்கு பீ பெரி என பெயர். (Pea Berry as it is in the shape of a pea).

    அதனால பீபெரி காப்பியை ப்யூர் பெரி என்று ஆக்சுவலி எல்லாம் போட்டுச் சொல்லி உம்ம மேதாவித்தனத்தை எல்லாருக்கும் தெரியப் படுத்த வேண்டாம். புரியுதா?!

    மேல் விபரங்களுக்கு விக்கி சுட்டி.

    ReplyDelete
  2. இப்டில்லாம் பதிவு போட்டா, அப்பால நாங்க கோனார் மெஸ்ல முட்டைதோசையை பத்தி பதிவெழுத வேண்டியிருக்குமென எச்சரிக்கிறேன்.

    ஹி...ஹி...அசத்தீட்டிகப்பூ

    ReplyDelete
  3. சூப்பரா சொன்னீங்க...

    பில்டர் காபினா பில்டர் காபி தான். அதை அடிச்சுக்க சான்ஸ்சே இல்ல..

    ReplyDelete
  4. அப்புறம் இன்னுமொண்ணு - எல்லாரும் தூக்கம் வர நேரத்தில் கொஞ்சம் சுறுசுறுப்பாக காபி டீ எல்லாம் குடிப்பாங்க. நீர் என்னடான்னா //காபி நல்லா இருக்க்கேன்னு இன்னும் ஒன்னு வாங்கி சாப்பிட கூடாது செமத்தையா தூக்கம் வரும்.// இப்படிச் சொல்லறீரு.

    இது என்ன புதுக்கதை.

    ReplyDelete
  5. அபிஅப்பா ரசனையே சிலருக்கு இருக்காது. ரசனை உள்ள ஆளுக்கு அத அனுபவிச்சு சொல்ல தெரியாது. சொல்லதெரிஞ்ச ஆளுக்கு ரசனை இருக்காது.

    ரெண்டும் வாய்ச்ச ஆளு நீங்க. ஆனா பாவம் அந்த பொங்கல் காஃபீ லாம் நெனச்சுகிட்டு அங்க இருக்கறதுதான் வாழ்க்கையோட ஐரணி
    ம்ஹூம்

    ReplyDelete
  6. படா ஷோக்கா சொல்லிக்கினபா..அந்த ஓட்டலு காபி டேஸ்டு இன்னும் மன்சுல கீது..

    ஒரு தபா இப்படித்தான் எனக்கும் என் தோஸ்துக்கும் பைட்டு வந்துக்கிச்சு..அந்த ஓட்டலு பேரு காளியாக்குடியா காரியாக்குடியான்ன்னு...அப்ப நான் "பேரு எதுவா வேணா இருந்துட்டு போதுடா..அந்த ஓட்டலுக்கு போனா காபிய குடி"ன்னு டயலாக் வுட்டுக்கினேன் :))

    ReplyDelete
  7. விவரணையா எழுதறதுல விஞ்ச ஆளு இல்ல.. பில்டர் மாதிரி பொண்ணா ... ம்.. சரி சரி.. நல்ல ரசிச்சு வாழ்ந்திருக்கீங்க மாயாரத்துல..டீக்கு வைத்தா காபிக்கு காளியாகுடின்னு...:(

    ReplyDelete
  8. தல, இப்பிடி ஃபில்டர் காப்பிய நியாபகப் படுத்திட்டியேப்பா..... இப்ப என்னா செய்வேன்?!!

    //பாவம் அந்த பொங்கல் காஃபீ லாம் நெனச்சுகிட்டு அங்க இருக்கறதுதான் வாழ்க்கையோட ஐரணி// ரிப்பிட்டேய்!

    //இலவசக்கொத்தனார் said...
    அப்புறம் இன்னுமொண்ணு - எல்லாரும் தூக்கம் வர நேரத்தில் கொஞ்சம் சுறுசுறுப்பாக காபி டீ எல்லாம் குடிப்பாங்க. நீர் என்னடான்னா ...//
    இ.கொ., ஒரு ஸ்ட்ராங்கு டீயோ காபியோ குடிச்சுட்டு நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லா தூங்கற (என்னிய மாதிரி) கொடுத்து வச்ச வாழ்க்கை அமையாதவர்களுக்கு என் ஆழ்ந்த வருத்தங்கள்!

    ReplyDelete
  9. //அந்த ஓட்டலுக்கு போனா காபிய குடி"ன்னு டயலாக் வுட்டுக்கினேன் //

    அட இதுவும் ஜூப்பராத்தான் இருக்கு:)))))))

    ReplyDelete
  10. "ச்சீனா ஒரு பாத்திரத்துல கொஞ்சம் தண்ணி கொண்டா வெரலை கழுவிக்கிறேன், அப்படியே நம்ம ஹீரோயின கூட்டிகிட்டு வாடா"ன்னு சொல்லிட்டு சுற்றிலும் யாரும் இல்லாமையை உருதி செய்து கொண்டு விரலை சூப்பிட வேண்டியது தான்."

    காளியாகுடி ஹோட்டல்லே, கை கழுவ ஃபிங்கர் பவுல்ஸ் கேட்ட ஒரே ஆள் நீங்களாத் தான் இருக்கும்.

    ReplyDelete
  11. "கொஞ்சமா சிக்கரி கலந்து"

    ம்ஹூம், நல்ல காபி இல்லை, நிச்சயமா! சிக்கரி கலக்காத பரிசுத்தமான காபிக்கே எங்கள் ஓட்டு!

    ReplyDelete
  12. "4 மொடக்குக்குத் தான் வரும் காபி"

    தொண்டை கூட நனையாதே?

    ReplyDelete
  13. //பொங்கல் நல்லா இருக்கேன்னு இன்னுமொரு பொங்கல் சாப்பிடக்கூடாது. 9 மணிக்கு மேல நெஞ்சை கரிக்கும். காபி நல்லா இருக்க்கேன்னு இன்னும் ஒன்னு வாங்கி சாப்பிட கூடாது செமத்தையா தூக்கம் வரும்.//

    இ.கொ,

    காபி சாப்பிட்டா தூக்கம் வருமான சிலர் வரும்னு சொல்லுறாங்க அவங்க எல்லாம் கும்பகர்ணன் சொந்தமா இருப்பாங்க,

    ஆனால் அபி அப்பா சொல்ல வந்தது இப்படி இருக்கும் வழக்கம் போல உளரிட்டார்னு நினைக்கிறேன்.

    "பொங்கல் நல்லா இருக்கேனு இன்னொன்னு சாப்பிட்டா தூக்கம் , வரும் காபி நல்லா இருக்கேனு இன்னொன்னு சாப்பிட்டா 9 மணிக்கு மேல நெஞ்ச கரிக்கும்" அப்படினு சொல்ல வந்து , இப்படி சொல்லி மாட்டிக்கிட்டார் போல நேத்து அவர் தீர்த்தம் கொஞ்சம் அதிகமா சாப்டார் போல :-))

    மேலும்,
    //ராத்திரி 9 மணிக்கு 3 கிலோ பீபரி (ஆக்சுவலி அது pure berry)ல கொஞ்சமா சிக்கரி கலந்து பில்டரின் மேல் அடுக்கில் கொட்டி லைட்டா அமுக்கி அதன் மேல் கொதிக்க கொதிக்க தண்ணீர் விட்டு காலையில் பார்த்தா கீழ் அடுக்கில் சூப்பரான டிக்காஷன் ரெடி!//

    இப்படி ராத்திரியே டிக்காஷன் போட்டு வச்சா அது புளித்து விடும். ஒரு 2 மணி நேரத்துக்கு முன்னர் வேண்டுமானால் போட்டு வைக்கலாம்.புளிச்ச டிக்காஷன் காப்பி ஒரு மாதிரி இருக்கும்! அதுவும் டிக்காஷன் ஆறி இருந்தா இன்னும் சுவை குறையும். இதனால் தான் இப்போலம் எலக்ட்ரிக் பில்டர் ல காப்பி டிகாஷன் போடுராங்க! வார்மா இருக்கும்.உடனே பிரஷ் டிகாஷன் கிடைக்கும்.

    இதில் மேலும் குறிப்பிட தக்கது காபியின் மணம் போய்விடும் ரொம்ப நேரம் டிகாஷன் போட்டு வைத்திருந்தால்.காபி தூளையும் ரொம்ப நாள் வைத்திருக்க கூடாது மணம் இருக்காது.எனவே தான் சிலர் ஃப்ரெஷ்லி பிரிவ்டு காபி என்று எல்லாம் விளம்பரம் செய்கிறார்கள்.

    இது சிகரெட்டுக்கும் பொருந்தும் ஓபன் செய்த பாக்கெட்டில் இருக்கும் சிகரெட்டில் அந்த "தம்" இருக்காது.

    ReplyDelete
  14. அபி அப்பா எல்லாம் கரெக்ட்டு சாப்பிட்ட பொங்கல் எவ்வளோ ரூபா காபி எவ்வளோ ரூபானு சொல்லவே இல்லையே ஒரு வேலை காசு கொடுக்க மறந்து தூங்கிட்டீரோ

    ReplyDelete
  15. "இப்படி ராத்திரியே டிக்காஷன் போட்டு வச்சா அது புளித்து விடும். ஒரு 2 மணி நேரத்துக்கு முன்னர் வேண்டுமானால் போட்டு வைக்கலாம்.புளிச்ச டிக்காஷன் காப்பி ஒரு மாதிரி இருக்கும்! அதுவும் டிக்காஷன் ஆறி இருந்தா இன்னும் சுவை குறையும். இதனால் தான் இப்போலம் எலக்ட்ரிக் பில்டர் ல காப்பி டிகாஷன் போடுராங்க! வார்மா இருக்கும்.உடனே பிரஷ் டிகாஷன் கிடைக்கும்.

    இதில் மேலும் குறிப்பிட தக்கது காபியின் மணம் போய்விடும் ரொம்ப நேரம் டிகாஷன் போட்டு வைத்திருந்தால்.காபி தூளையும் ரொம்ப நாள் வைத்திருக்க கூடாது மணம் இருக்காது.எனவே தான் சிலர் ஃப்ரெஷ்லி பிரிவ்டு காபி என்று எல்லாம் விளம்பரம் செய்கிறார்கள்."

    முதல் முறையா "வவ்வால்" சொல்வதை ஆமோதிக்கிறேன். ஆகவே தஞ்சாவூர் காபின்னா எப்படி இருக்கும்னு நான் சொல்ல வேண்டியதில்லை! :P

    ReplyDelete
  16. உங்க மேலே வழக்குத் தொடரலாமானு ஒரு எண்ணம்! :P

    ReplyDelete
  17. கீதா சாம்பசிவம்,
    நன்றி!

    // "வவ்வால்" சொல்வதை ஆமோதிக்கிறேன். ஆகவே தஞ்சாவூர் காபின்னா எப்படி இருக்கும்னு நான் சொல்ல வேண்டியதில்லை! :P//

    தஞ்சாவூரோ , கும்பகோணமோ, சிதம்பரமோ தெரியாது நல்ல பில்டர் காபி குடித்த மகராசி நீங்கள் என்பது மட்டும் தெரியுது!

    உண்மைல நீங்க ஒரு காபி அபிமானியாத்தான் இருக்கணும், இல்லைனா இதை சரியா மோப்பம் பிடிக்க முடியாது!

    நான் எங்க வீட்டில் பழைய டிக்காஷனிலோ அல்லது, ஏற்கனவே டிக்காஷன் இறக்கின பிறகு அதில வெண்ணீர் ஊத்தி இறக்கினாலோ, இது என்ன காபியா கழனி தண்ணியானு கொதித்துப்போவேன்.

    காபியே குடித்திராதவர் போல அபி அப்பா, இதை நான் சொன்னால் என் மேல பாய்வார்(உண்மையான பில்டர் காபி அபிமானிகளுக்கு தெரியும் ருசி)
    இந்த "சிரிப்பு போலிஸ் அபி அப்பாவுக்கு" யாராவது பில்டர் காபினா என்னனு விளக்கி சொல்லுங்கப்பா, கொசு தொல்லை தாங்கலை!

    நான் சொல்வது எல்லாமே எப்போதும் உண்மையாவே இருக்கும் ஆனா இந்த பாழாப்போன மக்கள் தான் அதை ஏத்துக்காம இடக்கு பண்ணுறாங்க , நீங்களும் இப்போ தான் முதல் முறையா ஏத்துக்கிறேன்னு சொல்றிங்க! நன்றியோ நன்றி!
    (உண்மைக்கு காலம் இல்லை)

    எது எப்படியோ ஆயிரம் கரங்கள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை அது போல வவ்வாலின் புகழும் மறையாது!

    (பின்குறிப்பு:இந்த பின்னூட்டம் வெளியிடப்படவில்லை எனில் தனிப்பதிவாக வரும்)

    ReplyDelete
  18. ராஜா.. இந்த 2 பதிவையும் என் மச்சானுக்கு (மனைவியின் தம்பி) அனுப்பி வெச்சேன். அவர் காளியாக்குடி குடும்பப் பெண்ணைத்தான் திருமணம் செய்துள்ளார்.. புகுந்த வீட்டுப் பெருமை தாங்க முடியவில்லை..

    உங்கள் பதிவுக்குத் தனி நன்றி சொல்ல்ச்சொன்னார்.

    அன்புடன்
    சீமாச்சு

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))