பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

December 25, 2007

துபாயில் இளையராஜா!!!

அண்ணாச்சி இரு வாரம் முன்ன ஒரு பதிவு போட்டிருந்தாரு இளையராசாவின் துபாய் நிகழ்ச்சி பத்தி. இதுக்கும் மேல விரலை வச்சிகிட்டு சும்மா இருந்தா எனக்கு ஒரு பதிவு நஷ்டமாகிவிடும். இது சம்மந்தமா யாராவது என்னை திட்டனும்ன்னு நெனச்சா குனியமுத்தூர் கோபால்சாமி என்பவரை திட்டவும். அவரை தான் எனக்கு பதிலா திட்டு வாங்க நியமிச்சு இருக்கேன் புதுசா.

நான்கு வருடம் முன்ன நடந்த A R ரஹ்மான் நிகழ்ச்சியோட இதை ஒப்பிட்டு பார்த்தா இது ஊத்திகிச்சுன்னு தான் சொல்வேன். லொடுக்குக்கு கிடைச்ச மாதிரி 1000 திர்காம் டிக்கெட்டை என் சட்டை பையில் எந்த ஒரு ஸ்பான்சரும் திணிக்காத காரணத்தால் போக வேண்டாம் என முடிவெடுத்து படுத்து தூங்கிட்டேன். பின்ன மாலை 5.30க்கு திடீர்ன்னு நன்பர்கள் 10 பேர் சேர்ந்து "போனாத்தான் என்ன?, நம்ம ராசா நிகழ்சியாச்சே"ன்னு சப்போர்ட் பண்ணவே திடுதிப்புன்னு அங்க போய் டிக்கெட் வாங்கிக்கலாம் என கிளம்பியாச்சு. எங்கே டிக்கெட் விற்பனை என தெரியவில்லை. 10 அடி உயர கேட்டுக்கு முன்னே கையிலே டிக்கெட் வச்சிருந்தவங்களை கூட உள்ளே விடாமல் ரப்சர் பண்ணிகிட்டு இருந்தாங்க. உள் பக்கம் இருந்த செக்யூரிட்டிகள் " தயவு செய்து கேட்டின் மேலே ஏறி குதிச்சிடாதீங்க, சீக்கிரம் திறந்து விடுவோம்"ன்னு நல்ல ஐடியா கொடுக்கவே மொத்தம் 5 நிமிடத்தில் 500 பேரும் உள்ளே குதிச்சாச்சு. மும்பை எலக்ட்ரிக் ரயிலில் கூட்டத்தோடு கூட்டமா ரயில் உள்ளே நுழைந்து வெளியே வருவது போல நானும் ஆட்டோமேட்டிக்கா உள்ள வந்தாச்சு. என் காலில் ஒரு செக்கியூரிட்டி தொப்பி தென்பட்டது. சும்மா டிக்கெட் வாங்காம உள்ளே வந்த கூட்டம் 50 திர்காம் வரிசையில் உட்காராமல் 6 அடி வேல் கம்பு தடுப்பு எல்லாம் அஞ்சு ஜார்ஜ் மாதிரி அனாயசமாக தாண்டி மெல்ல நகர்ந்து ஏற்கனவே காசு கொடுத்து டிக்கெட் வாங்கியவர்களை புழு மாதிரி பார்த்து விட்டு 200 திர்காம் இடத்துக்கு முன்னேறி சென்றது.

அப்படியாக நான் போய் உட்கார்ந்த இடம் சரித்திரம் முக்கியம் வாய்ந்த இடம். பல ஜாம்பவான்களை விருமாண்டி மாதிரி ஒத்தை விரலால் அவுட் ஆக்கிய அம்பயர்கள் நிற்கும் இடம். பக்கத்தில் உட்காந்திருந்த ஒரு குடும்பஸ்தனிடம் மெதுவாக பேச்சு கொடுத்தேன்.."பாருங்க சார் அநியாயத்தை, டிக்கெட் வாங்காதவன் எல்லாம் முன்ன போய் கிட்டு இருக்கான், நாம தான் சிரிச்ச மூஞ்சா இருக்கோம்"ன்னு சொன்னதுதுக்கு என்னை மேலும் கீழுமா பார்த்து விட்டு "கலி காலம் சார்"ன்னு சொன்னார். மேடையின் நடுவே ஆண்மை குறைவு டாக்டர் மாதிரி கோட்டு போட்ட ஆசாமி யாருன்னு பார்த்தா அட வசந்தகுமார். இளையராசா சொதப்பினதுக்கு அதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.

குஸுப்புவும் அவங்க தம்பி ஜெயராமனும் நிகழ்சி தொகுப்பாளர்கள். இளைய ராஜா மேடைக்கு வரும் முன்ன ரொம்ப அலப்பரை பண்ணினாங்க. வந்தாரு ராசா, எல்லாரும் எதிபார்த்த மாதிரியே ஜனனி ஜனனி பாடினார். சும்மா சொல்ல கூடாது. ரகளை தான் அவர் குரல். அடுத்து அடுத்து பாடும் நிலா பாலு நல்லா பாடினார். அது போலவே நல்லா பேசினார். அசத்தினார். இத்தன வயசிலும் குரலில் இருந்த அதே பழைய கம்பீரம் குறையவேயில்லை.

ச்சீனி கம் பாட ஆரம்பிச்சார் பாலு சார். ஏகப்பட்ட கைதட்டல் பாலுசாருக்கு. கூட ஒரு பொண்ணு பாடிச்சுப்பா, ஸ்ரேயா கோஷல்ன்னு ஆஹா தலையை ஒரு சொடுக்கு சொடுக்கிகிட்டு, முகத்திலே வந்து விழும் முடியை தள்ளி தள்ளி விட்டுக்கிட்டு, அந்த தலைமுடி ரொம்பத்தான் டிஸ்ட்டர்ப் பண்ணிடுச்சு அந்த பொண்ணை! எண்ணை தடவி சீவி பின்னி பூவச்சிகிட்டு வந்திருந்தா நல்லா இருந்திருக்கும். கேட்டா ஃபேஷனாமாம். அந்த பொண்ணு தலையை சொடுக்கி சொடுக்கி பாட ஆரம்பிக்கும் ஸ்டைல் எனக்கு மட்டுமல்ல இளையராசாவுக்கும் ரொம்ப பிடிச்சு போச்சுன்னு நெனைக்கிறேன். அதனால நான்கு தடவை திரும்ப திரும்ப பாட விட்டார். அப்ப பாலு சார் பிள்ளையாருக்கு வேண்டிகிட்டது போல 108 தடவை கொட்டாவி விட்டார். நானும் கூடவே விட்டேன். ஸ்ரேயா கோஷல் பாடும் போதல்லாம் ஒரு மூலையில் இருந்து மட்டும் காது கிழியும் அளவு விசில் சத்தம். அநேகமாக குசும்பனா இருக்கனுன்னு நெனைக்கிறேன்.

"சொர்க்கமே என்றாலும் நம்மூரு போலாகுமா" பாடல் சிம்ப்ளி சூப்பர் ராஜா சாரே! மத்தபடி ஒரு கட்டத்துல "நான் ஆட போகிறேன்" என குஷுப்பு சொன்ன போது இளையராஜா மட்டுமல்ல மொத்த கூட்டமும் கொஞ்சம் ஆடித்தான் போனோம்.

எனக்கு பக்கத்திலே உட்காந்திருந்த குடும்பத்தில் மதியம் சுரைக்காய் கூட்டுன்னு நெனக்கிறேன். அந்த 5 வயசு பையனுக்கு ஒவ்வொறு பாட்டுக்கும் "இண்டர்வெல்" தேவைப்பட்டது. டாய்லெட் கூட்டி போய் போய் சலிச்சு போன அவங்க அப்பா "அதோ அந்த இடத்திலே போ இனிமே"ன்னு சொல்லி அவர் காண்பித்த இடம் நம்ம ரவி சாஸ்திரி குரளி வித்தை காட்டுபவன் போல குத்து கால் இட்டு குந்திகிட்டு ஒரு கையில் மைக்கையும் அடுத்த கையால மண்ணை தடவி தடவி ஜோசியம் சொல்லுவாரே அந்த இடம். அநேகமாக அடுத்த தடவை மண்ணை தடவி பார்த்து "மண்ணு ஈரப்பதமா, ஆனா கொஞ்சம் உப்பு ஜாஸ்தியா இருப்பதால் பந்து நல்லா சுழலும்"ன்னு எதுவாவது சொல்லுவார்.

கூட்டத்தில் தேமுதிக கொடிகள் பேனர்கள் அதிகமாகவும் திமுக கொடி பேனர் கொஞ்சமாகவும் இருந்தன. திமுக கொடிகளை கலைஞர் டிவி படம் எடுக்க லைட் போட்டா தேமுதிக பசங்க அங்க ஓடி வந்து போஸ் கொடுப்பதும் அந்த கொடியை பார்த்தது கலைஞர் டிவி காரங்க போகஸ் லைட்டை ஆஃப் செய்வதுமான கண்ணா மூச்சி விளையாட்டு நல்லா இருந்தது. இருந்தாலும் தேமுதிகவுக்கு பேராசை இத்தன கூடாது அவங்க தலைவரை போலவே.

என் பக்கத்துல இருந்த குடும்பத்தின் தலைவி தலைவனை பார்த்து "என்னங்க நிகழ்ச்சி அன்னிக்கு வந்திருக்கலாமே ரிகர்சலுக்கு கூட்டி கிட்டு வந்துட்டீங்களே நிகழ்ச்சி நாளைக்கா?ன்னு அப்பாவியா கேட்டாங்க! கிட்டதட்ட நிகழ்ச்சி பத்தின என் கருத்தும் இதுதான்.

சரின்னு கிளம்பி வந்துட்டேன். அடுத்த நாள் கோபியின் விரிவான பதிவு வந்திருந்தது. நான் முதன் முதலாக மயிலாடுதுறையில் இருந்து சென்னைக்கு ரயிலில் போகும் போது ஒரு பேப்பர் பேனா வச்சிகிட்டு நீடூர், வைத்தீஸ்வரன் கோவில், சீர்காழி, சிதம்பரம், திருபாதிரிபுலியூர் என ஸ்டேஷன் பெயரை எழுதி கொண்டே போனது ஞாபகம் வந்தது கோபியின் பதிவை பார்த்த பின்!

32 comments:

  1. //
    சும்மா டிக்கெட் வாங்காம உள்ளே வந்த கூட்டம் 50 திர்காம் வரிசையில் உட்காராமல் 6 அடி வேல் கம்பு தடுப்பு எல்லாம் அஞ்சு ஜார்ஜ் மாதிரி அனாயசமாக தாண்டி மெல்ல நகர்ந்து ஏற்கனவே காசு கொடுத்து டிக்கெட் வாங்கியவர்களை புழு மாதிரி பார்த்து விட்டு 200 திர்காம் இடத்துக்கு முன்னேறி சென்றது.
    //
    :):):)

    ReplyDelete
  2. // இது சம்மந்தமா யாராவது என்னை திட்டனும்ன்னு நெனச்சா குனியமுத்தூர் கோபால்சாமி என்பவரை திட்டவும். அவரை தான் எனக்கு பதிலா திட்டு வாங்க நியமிச்சு இருக்கேன் புதுசா.//

    :)))

    ReplyDelete
  3. // தயவு செய்து கேட்டின் மேலே ஏறி குதிச்சிடாதீங்க, சீக்கிரம் திறந்து விடுவோம்"ன்னு நல்ல ஐடியா கொடுக்கவே மொத்தம் 5 நிமிடத்தில் 500 பேரும் உள்ளே குதிச்சாச்சு. மும்பை எலக்ட்ரிக் ரயிலில் கூட்டத்தோடு கூட்டமா ரயில் உள்ளே நுழைந்து வெளியே வருவது போல நானும் ஆட்டோமேட்டிக்கா உள்ள வந்தாச்சு. என் காலில் ஒரு செக்கியூரிட்டி தொப்பி தென்பட்டது.//

    அபி அப்பா நைட்டு 10 மணிக்கு இப்பிடி சிரிக்க வைச்சுட்டிங்களே.. :))

    ReplyDelete
  4. // அந்த பொண்ணு தலையை சொடுக்கி சொடுக்கி பாட ஆரம்பிக்கும் ஸ்டைல் எனக்கு மட்டுமல்ல இளையராசாவுக்கும் ரொம்ப பிடிச்சு போச்சுன்னு நெனைக்கிறேன். //

    அத கண்டு இளையராசா மட்டுமா? எங்க குசும்பருமில்ல மயங்கிட்டாரு..:)

    ReplyDelete
  5. மிக்க நன்றி பதிவிற்கு...

    ஷோ வெற்றியா இல்லையா?

    மயிலாடுதுறை சிவா...

    ReplyDelete
  6. // நான் முதன் முதலாக மயிலாடுதுறையில் இருந்து சென்னைக்கு ரயிலில் போகும் போது ஒரு பேப்பர் பேனா வச்சிகிட்டு நீடூர், வைத்தீஸ்வரன் கோவில், சீர்காழி, சிதம்பரம், திருபாதிரிபுலியூர் என ஸ்டேஷன் பெயரை எழுதி கொண்டே போனது ஞாபகம் வந்தது கோபியின் பதிவை பார்த்த பின்!///

    உள்குத்து மாதிரி தெரியுதே?..:P

    ரொம்ம ரசிச்சு சிரிச்சேனுங்க.. அதிலும் அந்த கேட்டு மேட்டர், கலக்கிட்டிங்க போங்க...:))

    ReplyDelete
  7. வாங்க மங்களூர் சிவா! சிரிப்புக்கு நன்றி!

    ReplyDelete
  8. ரசிகன்! சிரிப்புக்கு என்னா டைம் சிரிச்சுட்டு போக வேண்டியதுதானே:-))

    ReplyDelete
  9. வாங்க சிவா! அதான் சொன்னனே நிகழ்ச்சி சொதப்பல்! ஆனா இளையராஜா அருமை!!!

    ReplyDelete
  10. அப்பவே சொல்லியிருக்கலாம் :)

    ReplyDelete
  11. நம்ம கோபி மாதிரி இல்லாம, எனக்கு உங்கள மாதிரியும் ஒரு கேரக்டர் உண்டு! ஊருக்கு போய் சேர்ந்து ரொம்ப நாள் கழிச்சி ஆமாம் நம்ம எந்த ஊரெல்லாம் பாத்துட்டு வந்தோம்னு நினைச்சு பாக்குறது...!

    (வயசாகிட்டா, இது மாதிரி ஆகிடும்னு என் பிரெண்ட்ஸ் கிண்டல் பண்ணுவாங்க :)))

    ReplyDelete
  12. //மயிலாடுதுறை சிவா said... //

    அண்ணா நலமா?

    ReplyDelete
  13. அலோ..மேட்டர் கிடைக்கலையின்னா, பழைய பதிவு எல்லாம்..போடுறாங்கல்ல..அதுல ஒன்னை எடுத்து அதுக்கு எதிரா/கண்டிச்சு பதிவு போடுங்க...பிரிச்சு, மேஞ்சு, ஆஞ்சு களைச்ச விசயத்துக்குப் பதிவா.. ;))))))))

    அப்பறம்..காபி எப்படின்னா, பால் நல்லா இருந்திச்சி..ஆனா, மத்ததெல்லாம்..சரியில்லை என்றால் எப்படி...

    ReplyDelete
  14. அடுத்த பதிவு என்ன? உப்பு சத்தியாக்கிரகம் பற்றியா?

    ReplyDelete
  15. என்னது இளையராஜா துபாய்க்கு வந்தாரா?:))))

    ReplyDelete
  16. ///திர்காம் டிக்கெட்டை என் சட்டை பையில் எந்த ஒரு ஸ்பான்சரும் திணிக்காத காரணத்தால் போக வேண்டாம் என முடிவெடுத்து படுத்து தூங்கிட்டேன். //

    வீட்டில் இருக்கும் பொழுது சட்டை போடனும் சும்மா ஓசை செல்லாமாதிரி சும்மா திறந்தமார்போடு இருந்தா எங்க டிக்கெட்டை எங்கு வைப்பது?:)))

    ReplyDelete
  17. //அந்த பொண்ணு தலையை சொடுக்கி சொடுக்கி பாட ஆரம்பிக்கும் ஸ்டைல் எனக்கு மட்டுமல்ல இளையராசாவுக்கும் ரொம்ப பிடிச்சு போச்சுன்னு நெனைக்கிறேன். //

    எங்க ஏரியா உள்ளே வராதீங்க!!! ஜாக்கிரதை!!! ஸ்மைலி எல்லாம் போடவில்லை ஆகையால் இது கொலைவெறி பின்னூட்ட எச்சரிக்கை!!!

    ReplyDelete
  18. \\அண்ணாச்சி இரு வாரம் முன்ன ஒரு பதிவு போட்டிருந்தாரு\\

    அண்ணாச்சி பதிவு எல்லாம் எந்த அளவுக்கு படிக்கிறிங்கன்னு இதுல இருந்தே தெரியுது..;))

    ReplyDelete
  19. \\என ஸ்டேஷன் பெயரை எழுதி கொண்டே போனது ஞாபகம் வந்தது கோபியின் பதிவை பார்த்த பின்!\\

    உங்கள் ஞாபக சக்திக்கு என்னோட வாழ்த்துக்கள்...அப்புறம் என்னோட பதிவுகளை எல்லாம் கூஊட படிக்கிறிங்கன்னு தெரிஞ்சிக்கிட்டேன்....ரொம்ப சந்தோஷம் ;)))

    ReplyDelete
  20. என்ன சார்? மத்த பாடகர்கள கண்டுக்காம விட்டுட்டீங்க...?

    ReplyDelete
  21. ஆயில்யா நம்ம தம்பி கோபிய கலாய்க்கிறதுன்னா நமக்கு சேஃப் சைடு! எதிர் வினை வராது அதான்! அவன் நம்ம தம்பியாச்சே!!!

    ReplyDelete
  22. ஹல்லோ டிபிசிடி வாங்க வணக்கம்! நான் என்னிக்கு புது விஷயத்தை போட்டேன் பதிவா? எல்லாம் பழைய நினைவுகள் தானே!!:-))

    ReplyDelete
  23. பெனாத்தலாரே! அப்படிகூட செய்யலாமே! மேட்டர் பஞ்சம் வந்தா! குட் ஐடியா மனசுல வச்சுக்கரேன்:-))

    ReplyDelete
  24. குசும்பா! உன் வயசுக்கு வாயில் புகை வரலாம் காதில் வரலாமா????

    ReplyDelete
  25. வா கோபி வா! என் மேல் என்ன கோவம்?????????????????????????????????????????????? தங்காச்சிங்க பதிவையும் படிப்பேன், அண்ணாச்சி பதிவும் படிப்பேன்!!!:-))

    ReplyDelete
  26. வாங்க ஷெரீஃப்! முதன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!!!

    ReplyDelete
  27. என்னது இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சுடுச்சா...!

    ReplyDelete
  28. //அபி அப்பா said...
    ஆயில்யா நம்ம தம்பி கோபிய கலாய்க்கிறதுன்னா நமக்கு சேஃப் சைடு! எதிர் வினை வராது அதான்!//

    ஓ... அப்படி ஒரு எண்ணம் இன்னும் உங்க மனசுல ஓடிட்டிருக்கா..?

    ReplyDelete
  29. என் பக்கத்துல இருந்த குடும்பத்தின் தலைவி தலைவனை பார்த்து "என்னங்க நிகழ்ச்சி அன்னிக்கு வந்திருக்கலாமே ரிகர்சலுக்கு கூட்டி கிட்டு வந்துட்டீங்களே நிகழ்ச்சி நாளைக்கா??//

    ஷோ வெற்றியா இல்லையா?

    ReplyDelete
  30. என் பக்கத்துல இருந்த குடும்பத்தின் தலைவி தலைவனை பார்த்து "என்னங்க நிகழ்ச்சி அன்னிக்கு வந்திருக்கலாமே ரிகர்சலுக்கு கூட்டி கிட்டு வந்துட்டீங்களே நிகழ்ச்சி நாளைக்கா??//

    ஷோ வெற்றியா இல்லையா?

    ReplyDelete
  31. //இது சம்மந்தமா யாராவது என்னை திட்டனும்ன்னு நெனச்சா குனியமுத்தூர் கோபால்சாமி என்பவரை திட்டவும். அவரை தான் எனக்கு பதிலா திட்டு வாங்க நியமிச்சு இருக்கேன் புதுசா. //


    //உள் பக்கம் இருந்த செக்யூரிட்டிகள் " தயவு செய்து கேட்டின் மேலே ஏறி குதிச்சிடாதீங்க, சீக்கிரம் திறந்து விடுவோம்"ன்னு நல்ல ஐடியா கொடுக்கவே மொத்தம் 5 நிமிடத்தில் 500 பேரும் உள்ளே குதிச்சாச்சு. //



    //மேடையின் நடுவே ஆண்மை குறைவு டாக்டர் மாதிரி கோட்டு போட்ட ஆசாமி யாருன்னு பார்த்தா அட வசந்தகுமார். இளையராசா சொதப்பினதுக்கு அதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம்//



    //எனக்கு பக்கத்திலே உட்காந்திருந்த குடும்பத்தில் மதியம் சுரைக்காய் கூட்டுன்னு நெனக்கிறேன்///

    நல்லா கலக்குறீங்களே சார்.. நல்ல நகைச்சுவையாக எழுதுகிறிர்கள். இதுக்கு என்ன லேபில் எனத் த்ஹெரியவில்லை.

    ஆசிப்மீரான் இளையராஜாவின் திமிர்த்தனத்தையும் ஒரு குழந்தையை நடனம் ஆடாவிடாமல் செய்தது பற்றியும் எழுதி காரமாக விமர்சித்திருந்தார்..

    ReplyDelete
  32. Excellent post. I really enjoyed reading it./ஸ்ரேயா கோஷல்ன்னு ஆஹா தலையை ஒரு சொடுக்கு சொடுக்கிகிட்டு, முகத்திலே வந்து விழும் முடியை தள்ளி தள்ளி விட்டுக்கிட்டு, அந்த தலைமுடி ரொம்பத்தான் டிஸ்ட்டர்ப் பண்ணிடுச்சு அந்த பொண்ணை! எண்ணை தடவி சீவி பின்னி பூவச்சிகிட்டு வந்திருந்தா நல்லா இருந்திருக்கும். கேட்டா ஃபேஷனாமாம்./

    Especially I loved this.

    Rumya

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))