பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

March 27, 2008

Naan Romba Busy!!!!

பாப்பா ஷூக்கு பாலிஷ் போட்டாச்சு வேற என்ன செய்யனும்!

தம்பி உச்சா போயிட்டான், நானே அவன் டவுசரை மாத்திட்டேன்….

நைலக்ஸ் புடவைக்கு அஞ்சு நிமிஷம் சுத்த விட்டா போதுமா?

வாட்டர் டேங்கை என்னமா சுத்தம் பண்ணியிருக்கேன் பாரு!

ஹல்லோ அவத்திகீரை கிடைக்கலை அதுக்கு பதிலா வேற எதுனா கீரை வாங்கியாரவா?

குக்கர் இதுவரை அஞ்சு விசில் அடிச்சுடுச்சு ஸ்டவ்வை ஆஃப் பண்ணிடலாமா?

துணி எல்லாம் காய்ஞ்சுடுச்சு எடுத்து வந்துடவா

அதனால என்ன எனக்கும் மானாட மயிலாட பிடிக்காது நாம ஜோடி நம்பர் 1 பார்க்கலாமே ஒன்னும் பிரச்சனை இல்லை!

ஃபேனை துடைச்ச பின்ன பாத்ரூம் கழுவலாமா இல்ல முதல்ல பாத்ரூம் கழுவிடவா?

பாப்பா ஹோம் ஒர்க்கை முடிச்சுட்டேன்!

ஹய்யோ நீ எதுக்கு வெங்காயம் எல்லாம் உரிச்சுகிட்டு, நான் இருக்கேனே பார்த்துக்க மாட்டேனா?

என்னது டெபாசிட்ன்னா உன் பேர்லயும் இன்சூரன்ஸ்ன்னா என் பேரிலுமா ஓக்கே டன்!

வண்டி ரெடி, இன்னிக்கு எந்த கோவிலுக்கு?

என் ஹெல்த் மேல என்ன ஒரு கரிசனம் உனக்கு, காபில சர்க்கரையே இல்லியே!

உனக்கு பிடிச்சு இருந்தாலும் சரி நான் ஒத்துக்க மாட்டேன், இந்த சீரியலை மாத்து, அவ மூக்கை பார்த்தாலே வெண்டைக்காய் மாதிரி இருக்கு, காதை பாரு எத்தினி தோடு…சே இவளெல்லாம் எதுக்கு நடிக்க வர்ரா! உவ்வே!

பேங்க்குக்கு போயிட்டு, எலக்ரிக் பில் கட்டிட்டு, அரிசி மூட்டை எடுத்துகிட்டு வரும் போது கேஸ்க்கு பதிய வச்சுட்டு, மங்கையர்மலர் வாங்கிட்டு சுருக்க அஞ்சு நிமிஷத்துல வரனுமா, வந்துட்டா போச்சு!

என்னது வாசல்ல சங்கர், கார்த்தி வந்திருக்காங்கலா, நான் இல்லைன்னு சொல்லிடு!

எட்டு புள்ளி எட்டு வரிசை எல்லாம் டூ மச் தான் இருந்தாலும் ட்ரை பண்றேன்!

என்னது குசும்பன் கல்யாணத்துக்கு பட்டு புடவையா? ஓக்கே டன்(காசு வசூல் பண்ணிக்கலாம் குசும்பன் கிட்ட இருந்து)

டேனி&டேடி மாதிரி நான் டேன்ஸ் ஆடனுமா, அப்பதான் தம்பி சிரிப்பானா, கஷ்டம் தான் முயற்சி பண்றேன்!

வாசல்ல எவனோ தம் அடிக்கிறான் போல இருக்கு, போய் விரட்டி விடு! எனக்கு அந்த புகை நாத்தம் அலர்ஜின்னு உனக்கு தெரியாதா?

தம்பி மீதி வச்ச செரிலாக்கை வீனாக்காம சாப்பிடனுமா, அய்யோ வாந்தி வருமே வந்தாலும் பரவாயில்லை நீ சொன்னா அப்பீல் ஏது?

தமிழ்மணமா அப்படீன்னா????

31 comments:

 1. படிச்சிட்டி வரேன்

  ReplyDelete
 2. ரெண்டு வருஷத்தில 40 நாள் வேலை பார்த்தா குறைஞ்சு போயிட மாட்டீங்க!!

  டிஸ்கி: தங்கமணி கூடவே இருப்பதால்! ஹிஹி...

  ReplyDelete
 3. மக்களே - இது 1001% கடைஞ்செடுத்த பொய்யி... அண்ணி கிட்ட பேசும்போதே இவரு எந்த மாதிரி பிட்டு போடறாருன்னு தெரிஞ்சுப் போச்சு.

  யாரும் நம்பாதீங்க

  ReplyDelete
 4. தம்பி மீதி வச்ச செரிலாக்கை வீனாக்காம சாப்பிடனுமா, அய்யோ வாந்தி வருமே வந்தாலும் பரவாயில்லை நீ சொன்னா அப்பீல் ஏது?

  உங்க வீட்டிலயும் அப்படித்தானா...

  ReplyDelete
 5. அவத்திகீரைன்னா என்ன?

  ReplyDelete
 6. //இலவசக்கொத்தனார் said...

  ரெண்டு வருஷத்தில 40 நாள் வேலை பார்த்தா குறைஞ்சு போயிட மாட்டீங்க!!

  டிஸ்கி: தங்கமணி கூடவே இருப்பதால்! ஹிஹி...//

  ஏமாந்துட்டியே இலவசம், இவராவது வேலை செய்யறதாவது !! அண்ணியார் தான் பாவம்

  ReplyDelete
 7. ரெண்டு வருஷத்தில 40 நாள் வேலை பார்த்தா குறைஞ்சு போயிட மாட்டீங்க!! ///சரியா சொன்னீங்க கொத்ஸ்.. எனக்கும் கொஞ்சம் chat -ல இருந்து விடுதலை...
  :)

  ReplyDelete
 8. அட அட எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு அபி அப்பா.. ( ஆனா இதெல்லாம் உண்மையான்னு போன் போட்டுகேட்டுட்டு பெருமைப்படுன்னு சொல்லுதே உள்மனசு) :)

  ReplyDelete
 9. //என்னது வாசல்ல சங்கர், கார்த்தி வந்திருக்காங்கலா, நான் இல்லைன்னு சொல்லிடு//


  அபி அப்பா அந்த பாண்டியன் டி.டியும் அப்சரா கா...!தான் உங்களோட தற்போதைய புகலிடம்னு எங்களோட ஒற்றர்படை நீயுஸ் வந்திருக்கு :)))

  ReplyDelete
 10. அண்ணாத்தே! நீங்க ஊர்ல வந்து எறங்குன நாள்லேர்ந்து.ஊரு புல்லா ஒரே தண்ணியாம்ல -

  மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டிக்கிட்டிருக்குன்னு சொன்னாங்க!

  ReplyDelete
 11. //தம்பி உச்சா போயிட்டான்//

  தம்பி இப்ப ரிவர்ஸ்லேர்ந்து ஃப்ரெண்ட் கியருக்கு மாறிட்டானா????????

  ReplyDelete
 12. //”வாட்டர்” ---- டேங்கை என்னமா சுத்தம் பண்ணியிருக்கேன் பாரு!
  //

  கேள்விப்பட்டேன்!
  கேள்விப்பட்டேன்!

  ReplyDelete
 13. //குக்கர் இதுவரை அஞ்சு விசில் அடிச்சுடுச்சு ஸ்டவ்வை ஆஃப் பண்ணிடலாமா?//

  இதென்ன கேள்வி நீங்க ஆஃப் பண்ணல, அப்புறம் ஸ்டவ் ஆஃப் பண்ணிடும் குக்கர :)

  ReplyDelete
 14. //ஃபேனை துடைச்ச பின்ன பாத்ரூம் கழுவலாமா இல்ல முதல்ல பாத்ரூம் கழுவிடவா?//

  என்ன கொடுமை சார் இது??

  ReplyDelete
 15. //சே இவளெல்லாம் எதுக்கு நடிக்க வர்ரா! உவ்வே!
  //
  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 16. மொத்தத்தில பதிவு போட்ட நாளும்,அதுல இருக்கற மேட்டரும் என்னமோ குசும்பன மிரட்ற மாதிரியேஏஏஏஏஏ
  இருக்கு!!?!?

  குசும்பா! நீ கவலைப்படாத இதெல்லாம் உனக்கு சீக்கிரத்திலேயே பழகிடும் :))

  ReplyDelete
 17. தொல் சார் ரூம் போட்டு யோசிப்பரோ ?
  நாங்கள் எல்லாம் தினம் வருஷம் முழுதும் இதனை செய்கிறோம்.

  ReplyDelete
 18. ஹா..ஹா..ஹா.. வாழ்க்கை ரொம்ப சுகமா போகுது போல!!!

  ReplyDelete
 19. இப்படி இருக்கிறதுதான் எனக்கும் புடிக்கும்.

  PS: தங்கமணி மடிக்கணினிய முறைச்சு பார்த்துட்டே இருப்பதால்..

  ReplyDelete
 20. ஹூம் இதுல டீச்சர வேறேப் பார்க்கனுமா? அவுக அப்பாயிண்மெண்ட் கெடைக்க மாட்டேங்குதே?

  'கீப் ஆன் டிரையிங் பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் னு சொல்றாங்களே'

  சரி சரி டெய்லி காலைல டீச்சர் தூங்கி எழும்போதே போன் போட்டுட்டறேன்......

  ReplyDelete
 21. நல்லாவே சரண்டராகுறிங்க அபி அப்பா..:))))))))))))))))))
  அக்காவையும்,அபி பாப்பாவையும்,நடராஜ்யையும் விசாரித்ததாய் சொல்லவும்:)
  என்ன சொல்லறிங்கன்னு புரியாம நடராஜ் நறுக்குன்னு கடிச்சு வைச்சா..
  எனது கிஃப்டாக ஏற்றுக்கொள்ளவும்:P

  ReplyDelete
 22. // என்னது டெபாசிட்ன்னா உன் பேர்லயும் இன்சூரன்ஸ்ன்னா என் பேரிலுமா ஓக்கே டன்! //
  இது ரொம்ப நல்லாயிருக்கு.

  // என்னது குசும்பன் கல்யாணத்துக்கு பட்டு புடவையா? ஓக்கே டன்(காசு வசூல் பண்ணிக்கலாம் குசும்பன் கிட்ட இருந்து) //

  எனக்கும் குசும்பன்ட சொல்லி ஒரு ட்ரெஸ் எடுத்துதர சொல்லுங்க :-)

  ReplyDelete
 23. வருவாய் வருவாய் என காத்திருந்தேன்
  வந்ததும் வந்தாய் சுமையுடன் வந்தாய்
  இப்ப தமிழ்மணம் இருக்கிற நெலமையில
  naan Romba Busy!! யின்னு எஷ்கேப்பு ஆகி தூர நின்னு வேடிக்கா பாக்கரிங்க போல.........

  :)

  ReplyDelete
 24. \\தமிழ்மணமா அப்படீன்னா????\\

  வாழ்க..வாழ்க ;)

  ReplyDelete
 25. கருத்துக்கள் அருமை!!

  ReplyDelete
 26. இம்பூட்டு வேலையும் தங்கமணி இவ்ளோ நாளா தனியா செய்தாங்கன்னு சொல்ல வாறீங்களோ? ;-)

  ReplyDelete
 27. ///ஆயில்யன். said...
  அண்ணாத்தே! நீங்க ஊர்ல வந்து எறங்குன நாள்லேர்ந்து.ஊரு புல்லா ஒரே தண்ணியாம்ல -

  மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டிக்கிட்டிருக்குன்னு சொன்னாங்க!////

  ரிப்பீட்ட்ட்ட்டேய்

  ReplyDelete
 28. அடடா...கலக்கிட்டீங்க!

  சிரிப்ப அடக்க முடியலை!

  :))))))))))))))))))))))))))

  என்ன ஒரு FLOW!

  ReplyDelete
 29. 80களின் நகைச்சுவை மன்னனே அபிஅப்பா தானே

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))