பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

March 9, 2008

மண்டபத்து சரக்கு!(சும்மா சோம்பல் முறிச்சுக்க இந்த பதிவு)

நம்ம பசங்களுக்கு ஒரு கெட்ட பழக்கம். நமக்கு ஏதாவது நல்ல காமடியோ, நல்ல படமோ உதாரணத்துக்கு ஒரு நமீதா படம்ன்னு வச்சுகோங்களேன் மெயில்ல வந்தா, சரி நாம் பெற்ற இன்பம் நம்ம பசங்களும் பெறட்டும் என்கிற நல்ல எண்ணத்தில் அனுப்பினா உடனே பதில் வரும் மெயிலை திறந்து பார்க்காமலே"அண்ணே இது நான் சின்ன பையனா இருக்கும் போது எனக்கு வந்துடுச்சு, நீங்க வர வர மொழி பாஸ்கர் மாதிரி ஆயிட்டீங்க"ன்னு ஸ்டேண்டர்டு டெம்பிளேட் பதில் வரும். இதனாலத்தான் நான் ஏதும் சொல்வதே இல்லை. பாருங்களேன் இந்த பதிவுக்கு கூட இதே மாதிரி பின்னூட்டம் தான் வரும்:-))

ஒரு பாட்டி தன் அழகான பேத்திகூட ஒரு ஊர்ல இருந்து அடுத்த ஊருக்கு போக ஒரு ரயில்வே ஸ்டேஷனில் நிக்கிறாங்க. அப்போ ஒரு ஸாஃப்ட்வேர் இஞ்சினியர் (நம்ம ராம் மாதிரின்னு வச்சுகோங்க)தன் பிராஜக்ட் மேனேஜர் கூட பாட்டி போகும் அதே ஊருக்கு போக வந்தார். ரயிலுக்காக காத்துகிட்டு இருக்கும் நேரத்திலே நம்ம இஞ்சினியர் அந்த பொண்ணை டாவடிக்க ஆரம்பிச்சுட்டான். அந்த பொண்ணும் கம்பெனி குடுக்க ஆரம்பிச்சுடுச்சு. மேனேஜருக்கும் பாட்டிக்கும் செம கடிப்பாகிடுச்சு. ஆனாலும் ராம் தன் சேவையை தொடர்ந்து செஞ்சுகிட்டு இருக்கார்.

அந்த நேரம் பார்த்து ரயில் வந்துடுச்சு. 4 பேரும் ரயில்ல ஒரே பெட்டியிலே ஏறிகிட்டாங்க. டாவு தொடருது. அப்ப ரயில் ஒரு டணலுள்ளே போகுது. அதனால ரயில் முழுக்க இருட்டாகிடுச்சு. அப்ப சக்குன்னு ஒரு முத்த சத்தமும் அதை தொடர்ந்து பளார்ன்னு ஒரு அரை விழும் சத்தமும் கேக்குது. பின்ன ரயில் டணலை விட்டு வெளியே வந்துடுச்சு.

மேனேஜர் நினைச்சுகிட்டார். "அடப்பாவி நம்ம ராம் கிஸ்ஸடிச்சுட்டான் போல இருக்கு அந்த பொண்ணை. அது நாமதான்னு தப்பா நினைச்சுகிட்டு நம்மை அடிச்சிடுச்சே"

அந்த பாட்டி நினைச்சுகிட்டாங்க "சபாஷ் நம்ம பேத்தின்னா பேத்திதான். அந்த இஞ்சினியருக்கு நல்லா வேணும். பேத்திக்கு முத்தம் குடுத்தான், அதான் அவ சரியா அடிச்சிட்டா"

பேத்தி நினைச்சுகிட்டா "என்னா சூப்பரா கிஸ் பண்ணினார் நம்ம இஞ்சினியர். பாவம் நம்ம பாட்டி கொஞ்சமும் இங்கிதம் இல்லாம அடிச்சிடுச்சே, பாவம் நம்ம ஆளு"

நம்ம ராம் நெனச்சிகிட்டார் "இந்த மேனேஜர் தொல்லை தாங்கலை, நிம்மதியா சேட் பண்ண விடுறதில்ல ஆபீஸ்ல, அதனாலத்தான் அவளுக்கு கிஸ் அடிச்ச அடுத்த நிமிஷம் மேனேஜருக்கு வுட்டேன் ஒரு அடி"

58 comments:

 1. அண்ணே இது நான் சின்ன பையனா இருக்கும் போது எனக்கு வந்துடுச்சு, நீங்க வர வர மொழி பாஸ்கர் மாதிரி ஆயிட்டீங்க.

  ReplyDelete
 2. இந்த பதிவுக்கு நமிதா போட்டோ அனுப்பின முன்னூட்டமெல்லாம் !!!!!!!!

  இதுவும் நான் ஸ்கூல் படிக்கிற காலத்திலயே வந்த இ-மெயில் 'உல்டா' தான்.

  வேற எதாவது புதுசா யோசிங்க இல்லைனா என்னைய மாதிரி படம் போட்டு ஒப்பேத்துங்க!!!

  ReplyDelete
 3. ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  தூங்கும் முன்பு வரும் கொட்டாவி சவுண்ட்...தூங்கி எழுந்த பிறகு சோம்பல் முறிக்கவா, இல்லை உங்க கை, காலை முறிக்கவா என்று முடிவு செஞ்சுக்கிறேன்... குட் நைட்!!!

  ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 4. வாங்க கைப்ஸ், எனக்கு நல்லா தெரியுமே இப்படித்தான் பதில் வரும்ன்னு:-))

  ReplyDelete
 5. சிவா, நமீதா போட்டோவா அது என்ன கதை அப்பன் குதிர்குள்ள இல்லைன்னு:-))

  சிவா, புதுசா யோசிக்கத்தான் இந்த சோம்பல் முறிப்பு:-))

  ReplyDelete
 6. சிவா, நமீதா போட்டோவா அது என்ன கதை அப்பன் குதிர்குள்ள இல்லைன்னு:-))

  சிவா, புதுசா யோசிக்கத்தான் இந்த சோம்பல் முறிப்பு:-))

  ReplyDelete
 7. குசும்பா, இந்த பதிவு நான் சோம்பல் முறிச்சுக்கத்தானப்பா, நீ சோம்பல் முறிச்சுக்க இல்ல:-))

  ReplyDelete
 8. அட.. என்ன அற்புதமான வார்த்டை பிரயோகங்கள். நல்ல கருத்தாழமிக்க கதை. சமீபகாலங்களில் அதாவது கிமு256894751ல் நான் டவுசர் போட ஆரம்பிச்ச கால கட்டத்தில் இருந்து இப்படி ஒரு கதையை படிச்சதே இல்லை. அநியாயத்துக்கு ஃபுல்லடிக்க ச்ச.. புல்லரிக்க வச்சிட்டிங்க போங்க.
  கலக்கல்.. அற்புதம்..சூப்பர்.. ஏப்ரல் 15 இரவு உங்களுக்கு மொத்தமா சுத்தி போடறேன். இருங்க. :)

  தலையிலடித்த படி..

  ReplyDelete
 9. //வேற எதாவது புதுசா யோசிங்க //


  ரீப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்

  ReplyDelete
 10. //ஏப்ரல் 15 இரவு உங்களுக்கு மொத்தமா சுத்தி போடறேன். இருங்க. :)
  //

  அசத்து கண்ணா அசத்து :))))

  ReplyDelete
 11. //குசும்பன் said...
  ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  தூங்கும் முன்பு வரும் கொட்டாவி சவுண்ட்...
  //

  யோவ் குசும்பா!

  வாரத்தோட முதல் நாளு!

  தூங்கப்போறீயா?

  கம்பெனி வெளங்கிடும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

  ReplyDelete
 12. உங்க நூலகம் தான் ரொம்ப பெருசா இருக்கே. அங்கேருந்து யாருக்கும் தெரியாத கதையா 'சுட்டு' போடுங்க.

  ReplyDelete
 13. நல்லா இருந்திச்சி - டிய்ய்யுப் லைட்டு நானு - புரிலே - அப்புறமா புரிஞ்சிக்கிட்டேன்.

  கிஸ் அடிச்சது இஞ்சினீயர் - பாட்டியெ இல்ல - பொண்னே

  அடி வாங்கினது டேமேஜர் - அடிச்சது பொண்ணு இல்ல - இஞ்சினீயர்

  சரியா - அப்பாடி - நானும் தூங்கப் போகட்டா ( மத்யாணம் சாப்பாடு ஆச்சு - அடுத்து தூக்கம் தானே )

  ReplyDelete
 14. இதுக்கு யாரெல்லாம் பதில் போடுவீங்க ?

  ReplyDelete
 15. ஊருக்கு போவதற்கு முன்பு இப்படி எல்லாம் சோம்பல் முறிச்சுக்க வேண்டியது தான். (தீ.வெ.ட்டால் அங்க பூரிக்கட்டை ரெடியாமே?)

  ReplyDelete
 16. அந்த இஞ்சினீரு = ராம் - அப்டின்னா அந்த டாமேஜரு யாரு...பக்கத்தில ஒருத்தரு அது அபி அப்பாதான் அப்டிங்கிறாரு..அப்டியா? பாவம்!!!

  ReplyDelete
 17. //இப்படி ஒரு கதையை படிச்சதே இல்லை. அநியாயத்துக்கு ஃபுல்லடிக்க ச்ச.. புல்லரிக்க வச்சிட்டிங்க போங்க.
  கலக்கல்.. அற்புதம்..சூப்பர்.. ஏப்ரல் 15 இரவு உங்களுக்கு மொத்தமா சுத்தி போடறேன். இருங்க. :)

  தலையிலடித்த படி..//

  பொடியா இருக்குடீ உனக்கு, நீல ஜானி பையனை வச்சி உன்னை மடக்கறேன் ரெண்டா:-))

  ஏப்ரல் 15/16ன்னு ஏதேதோ சொல்றீங்களே என்னங்கப்பூ:-))

  பிளான் பண்ணியபடி
  அபிஅப்பா

  ReplyDelete
 18. //ஆயில்யன் said...
  //வேற எதாவது புதுசா யோசிங்க //


  ரீப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்//

  தம்பி! ஆயில்ஸ், சரக்கு தீர்ந்து போகலைப்பா, இப்போ ஒரு நாளைக்கு 6000 வரியாவது சேட்டிங்கில் போயிடுதா அதான் உண்மைதமிழனாட்டம் எழுத நேரம் இல்லாம போச்சு:-))

  ReplyDelete
 19. //யோவ் குசும்பா!

  வாரத்தோட முதல் நாளு!

  தூங்கப்போறீயா?

  கம்பெனி வெளங்கிடும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்//

  ஆயில்ஸ்! நல்லா நச்சுன்னு சொல்லுப்பா, என் கூட பழகியும் என்னை போல நேர்மையான ஆபீசரா இல்லாம இப்படி தூங்கினா என்னா அர்த்தம்:-))

  ReplyDelete
 20. //நிஜமா நல்லவன் said...
  உங்க நூலகம் தான் ரொம்ப பெருசா இருக்கே. அங்கேருந்து யாருக்கும் தெரியாத கதையா 'சுட்டு' போடுங்க.//

  வாங்க நல்லவரே! நான் எதுக்குப்பா நூலகத்திலே இருந்து எடுக்கனும் காதை திறந்து வச்சிருந்தாலே போதும், மேட்டரா கொட்டும்ல்ல:-))

  ReplyDelete
 21. //cheena (சீனா) said...
  நல்லா இருந்திச்சி - டிய்ய்யுப் லைட்டு நானு - புரிலே - அப்புறமா புரிஞ்சிக்கிட்டேன்.//

  வாங்க சீனாசார்! மங்களூர்காரர் கடையிலே மெய்மறந்து நின்னுகிட்டு இருந்தியலே, நான் அந்த பக்கமா போகும் போது பார்த்தேன்! நான் வேற வேலையா அங்கிட்டு வந்தேனாக்கும்:-))

  ReplyDelete
 22. //தமிழ் பிரியன் said...
  ஊருக்கு போவதற்கு முன்பு இப்படி எல்லாம் சோம்பல் முறிச்சுக்க வேண்டியது தான். (தீ.வெ.ட்டால் அங்க பூரிக்கட்டை ரெடியாமே?)//

  வாங்க தமிழ்பிரியன்! லேட்டஸ்ட் இண்ஸ்ட்ரூமெந்த் எல்லாம் வந்துடுச்சு, ரிமோட், மௌஸ்,லேப்டாப்ன்னு ரங்கமணிகள் அடிவாங்கன்னு எங்கயோ படிச்சேன், அனேகமா தங்கமணியும் படிச்சு இருக்கலாம், எதுக்கும் ரெடியாத்தான் போறேன்:-))

  ReplyDelete
 23. //தருமி said...
  அந்த இஞ்சினீரு = ராம் - அப்டின்னா அந்த டாமேஜரு யாரு...பக்கத்தில ஒருத்தரு அது அபி அப்பாதான் அப்டிங்கிறாரு..அப்டியா? பாவம்!!!//

  வாங்க தருமி சார்! நான் அந்த இடத்திலே டேமேஜராக இருந்திருந்தா கதையில் சில மாற்றங்கள் நடந்திருக்கும், என்னன்னு சொல்லுங்க(உடனே பாட்டிக்கு முத்தம் கிடைச்சு இருக்கும்ன்னு சொல்லப்பிடாது:-))

  ReplyDelete
 24. //
  அபி அப்பா said...

  வாங்க தருமி சார்! நான் அந்த இடத்திலே டேமேஜராக இருந்திருந்தா கதையில் சில மாற்றங்கள் நடந்திருக்கும், என்னன்னு சொல்லுங்க(உடனே பாட்டிக்கு முத்தம் கிடைச்சு இருக்கும்ன்னு சொல்லப்பிடாது:-))
  //

  அப்ப ராம்-க்காஆஆஆஆஆஆஆஅ?????


  க்கா ச்சீய் த்தூஊ

  :)))))))))))))))))

  ReplyDelete
 25. //வாங்க தருமி சார்! நான் அந்த இடத்திலே டேமேஜராக இருந்திருந்தா கதையில் சில மாற்றங்கள் நடந்திருக்கும், என்னன்னு சொல்லுங்க(உடனே பாட்டிக்கு முத்தம் கிடைச்சு இருக்கும்ன்னு சொல்லப்பிடாது:-))//

  பாட்டி ராம்க்கு முத்தம் குடுத்துட்டு உங்க கன்னத்துல பளார்னு விட்டிருப்பாங்க... பின்ன அந்த பாட்டியவே சும்மா குருகுருனு பாத்துட்டு இருந்தா என்ன பண்ணுவாங்களாம்? :P

  ReplyDelete
 26. //மங்களூர் சிவா

  அப்ப ராம்-க்காஆஆஆஆஆஆஆஅ?????


  க்கா ச்சீய் த்தூஊ

  :)))))))))))))))))//

  ச்ச.. அபிஅப்பா.. என்னா பழக்கம் இது? அய்யய்ய.. ஷேம் ஷேம்.. பப்பி ஷேம்.. உங்கள நம்பி எபப்டி மயிலை வர்ரது? :P

  ReplyDelete
 27. //(அப்ப ராம்-க்காஆஆஆஆஆஆஆஅ?????


  க்கா ச்சீய் த்தூஊ

  :)))))))))))))))))////

  ஏனப்பா இந்த கொலவெறி! இதுக்கு நீ 4 அடி அடிச்சு இருக்கலாம்!

  வாயை பொத்தியபடி
  அபிஅப்பா

  ReplyDelete
 28. //பாட்டி ராம்க்கு முத்தம் குடுத்துட்டு உங்க கன்னத்துல பளார்னு விட்டிருப்பாங்க... பின்ன அந்த பாட்டியவே சும்மா குருகுருனு பாத்துட்டு இருந்தா என்ன பண்ணுவாங்களாம்? :P//

  2 நாள் முன்ன ராம் வயசை குசும்பன் கல்யாண கருத்து களத்தில் விவாதிச்சோமே அதை வைத்து பாட்டி ராம்க்கு முத்தம் தருவாங்கான்னு சொல்றியாப்பா நடத்து நடத்து!!

  ReplyDelete
 29. //ச்ச.. அபிஅப்பா.. என்னா பழக்கம் இது? அய்யய்ய.. ஷேம் ஷேம்.. பப்பி ஷேம்.. உங்கள நம்பி எபப்டி மயிலை வர்ரது? :P//

  கண்டிப்பா வரலாம் தப்பேயில்ல, பொடியன் என்றால் என்ன சின்ன குழந்தை தானே!

  10 நாளாக பல்விளக்காமல்
  அபிஅப்பா

  ReplyDelete
 30. ///அபி அப்பா said...

  //ச்ச.. அபிஅப்பா.. என்னா பழக்கம் இது? அய்யய்ய.. ஷேம் ஷேம்.. பப்பி ஷேம்.. உங்கள நம்பி எபப்டி மயிலை வர்ரது? //

  கண்டிப்பா வரலாம் தப்பேயில்ல, பொடியன் என்றால் என்ன சின்ன குழந்தை தானே!

  10 நாளாக பல்விளக்காமல்
  அபிஅப்பா///


  மயிலை போகும் போது ''கிருமி நாசினி'' வாங்கிட்டு போங்க சஞ்சய்.

  ReplyDelete
 31. மங்களூர் சிவா said...
  //
  அபி அப்பா said...

  வாங்க தருமி சார்! நான் அந்த இடத்திலே டேமேஜராக இருந்திருந்தா கதையில் சில மாற்றங்கள் நடந்திருக்கும், என்னன்னு சொல்லுங்க(உடனே பாட்டிக்கு முத்தம் கிடைச்சு இருக்கும்ன்னு சொல்லப்பிடாது:-))
  //

  அப்ப ராம்-க்காஆஆஆஆஆஆஆஅ?????


  க்கா ச்சீய் த்தூஊ

  :)))))))))))))))))////
  தல பின்னீட்டீங்க நச் கமெண்ட்.

  ReplyDelete
 32. அபி அப்பா said...
  திறந்து வச்சிருந்தாலே போதும்மேட்டரா கொட்டும்ல்ல:-))
  இது எதுவும் வேற மேட்டர் இல்லையே????

  ReplyDelete
 33. ///அபி அப்பா said...

  //(அப்ப ராம்-க்காஆஆஆஆஆஆஆஅ?????


  க்கா ச்சீய் த்தூஊ

  )))))))))))))))////

  ஏனப்பா இந்த கொலவெறி! இதுக்கு நீ 4 அடி அடிச்சு இருக்கலாம்!

  வாயை பொத்தியபடி
  அபிஅப்பா////
  சிவா ஆனாலும் உங்களுக்கு இந்த கொலைவெறி கூடாது. பாருங்க அபி அப்பா வாயபொத்திட்டார். அவரு வாய திறந்தே வச்சிருந்தாதானே நீங்க கும்மியடிக்க விஷயம் வெளிய வரும்.

  ReplyDelete
 34. அபி அப்பா said...
  //தமிழ் பிரியன் said...
  ஊருக்கு போவதற்கு முன்பு இப்படி எல்லாம் சோம்பல் முறிச்சுக்க வேண்டியது தான். (தீ.வெ.ட்டால் அங்க பூரிக்கட்டை ரெடியாமே?)//

  வாங்க தமிழ்பிரியன்! லேட்டஸ்ட் இண்ஸ்ட்ரூமெந்த் எல்லாம் வந்துடுச்சு, ரிமோட், மௌஸ்,லேப்டாப்ன்னு ரங்கமணிகள் அடிவாங்கன்னு எங்கயோ படிச்சேன், அனேகமா தங்கமணியும் படிச்சு இருக்கலாம், எதுக்கும் ரெடியாத்தான் போறேன்:-))////


  சிங்காரவேலன் படத்துல கமல் கண்ணைத்தவிர உடம்பு பூரா பேண்டேஜோட ஆஸ்பத்திரியில இருப்பாரே அந்த மாதிரி எதுவும் நடக்காதுல்ல?

  ReplyDelete
 35. 15 th ராயல் பார்க் இன்னா இல்ல செல்வி லயா?

  ReplyDelete
 36. என்னது வரிசையா என்னோட பின்னூட்டம் மட்டும் தான் இருக்கு. எனக்கு ஆப்பு ரெடி பண்ணுறீங்களா? எதா இருந்தாலும் சொல்லிட்டு செய்ங்க. நான் தாங்கமாட்டேன்.

  ReplyDelete
 37. //நிஜமா நல்லவன் said...
  என்னது வரிசையா என்னோட பின்னூட்டம் மட்டும் தான் இருக்கு. எனக்கு ஆப்பு ரெடி பண்ணுறீங்களா? எதா இருந்தாலும் சொல்லிட்டு செய்ங்க. நான் தாங்கமாட்டேன்.//

  சொல்லிட்டேன் நெஜமா நல்லவரே! ரெடியாகுங்க:-))

  ReplyDelete
 38. ஆஹா என்ன நீண்ட மவுனமா இருக்கு. அப்ப ஆப்பு கன்பார்ம் தான் போல. மயுரநாதர் கிட்ட வேண்டிக்க வேண்டியதுதான்.

  ReplyDelete
 39. என்னது உங்களுக்கும் மாயாரநாதர் பழக்கமா! சொல்லவேயில்ல:-))எந்த ஊர் அய்யா தாங்கள்,சொன்னா அதுக்கு தகுந்த மாதிரி ஆப்பு சீவப்படும்:-))

  ReplyDelete
 40. ////அபி அப்பா said...
  //நிஜமா நல்லவன் said...
  என்னது வரிசையா என்னோட பின்னூட்டம் மட்டும் தான் இருக்கு. எனக்கு ஆப்பு ரெடி பண்ணுறீங்களா? எதா இருந்தாலும் சொல்லிட்டு செய்ங்க. நான் தாங்கமாட்டேன்.//

  சொல்லிட்டேன் நெஜமா நல்லவரே! ரெடியாகுங்க:-))////  ஜோலிய முடிச்சுடுவாங்க போலிருக்கே. சரி சரி பம்மல் பாண்டியா மாறிடவேண்டியது தான்.

  ReplyDelete
 41. யாதும் ஊரே யாவரும் கேளீர்.

  ReplyDelete
 42. ///அபி அப்பா said...
  என்னது உங்களுக்கும் மாயாரநாதர் பழக்கமா! சொல்லவேயில்ல:-))///  நீங்க கேட்கவே இல்லையே?

  (இது கூட என்னோட சொந்த டயலாக் தான். உங்க பதிவு மாதிரி இதுவும் எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம்ன்னு யாரும் சொன்னா நம்பிடாதீங்க. )

  ReplyDelete
 43. அப்ப நீங்க மாய 'வரமா'? அதான் கும்மிய 'வரமா' வாங்கி வச்சுருக்கீங்க.

  ReplyDelete
 44. அது என்ன தலைப்பு மண்டபத்து சரக்கு. இன்னும் ஒரு மாசம் தான் இருக்கே? இப்பவே யோசிக்க ஆரம்பிச்சாச்சா? மண்டபம் சரிப்படாது. பொடுச எல்லாம் வச்சுகிட்டு மண்டபத்துல அடிச்சா நல்லாவா இருக்கும்? செல்வீஸ் போங்க.

  ReplyDelete
 45. கும்மி பதிவு போட்டா சொல்லி அனுப்புங்க. வாரேன்.

  ReplyDelete
 46. அபி அப்பா இருக்கீங்களா? ரொம்ப குழப்பமோ?காத தெறந்து வைங்க. நம்மள பத்தி செய்தி வந்தாலும் வரும்.

  ReplyDelete
 47. ஸ்ரீ மஹாபிரத்தியங்கிரா தேவி துணை. அபி அப்பா ஆப்பு எல்லாம் முனை மழுங்கி போகணும்.

  ReplyDelete
 48. அபி அப்பா ஏதாவது பதில் சொல்லுங்க. இல்லைன்னா அப்புறம் தமிழ்மணத்துல நாளைக்கு இப்படி வந்தாலும் வரும்.''அபி அப்பா நீண்ட மவுனம். கும்மிய நிறுத்த முடிவு''ன்னு யாரும் பதிவ போட்டு பட்டய கிளப்பிடபோறாங்க.

  ReplyDelete
 49. ஏம்பா.. இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம்லே..!

  ReplyDelete
 50. சும்மா சோம்பல் முறிக்க பதிவு போட்ட அபி அப்பாவின் சோம்பல் போன இடம் தெரியவில்லை. ஆனா தலைவலி அதிகமா இருக்கிறதா ஜி டாக்ல செய்தி வருது. நெசமா?????

  ReplyDelete
 51. என்னது எல்லா கமெண்டும் பப்ளிஷ் ஆகுது. பதில காணோம். பட்டமங்கலத்தெருல தெருல ஒத்தை ஆளு மட்டும் நடந்து போனா நல்லாவா இருக்கும். யாராவது வாங்கப்பு. ஆப்பு,காப்பு இல்லாம வாங்க.

  ReplyDelete
 52. அபி அப்பா நீங்க யாரு? சாதாரணமான ஆளா என்ன? யாரோ ஒரு பொடியன் ஏதேதோ கேட்டுகிட்டு இருக்கான். கும்மி சங்க தல நீங்க. அவனை விட்டு வைக்கலாமா? எல்லாரையும் கூட்டிகிட்டு வந்து போட்டு தாக்குங்க.

  இப்படிக்கு
  அபி அப்பாவை தேடுவோர் சங்கம்.

  ReplyDelete
 53. ஒரு நல்ல ஞாயிற்று கிழமையும் அதுவுமா அபி அப்பாவை நிம்மதியாக இருக்கவிடாமல் டார்ச்சர் செய்யும் நிஜமா(?!!!)நல்லவனை இத்தோடு நிறுத்திக்'கொல்'லுமாறு எச்சரிக்கிறோம். மீறினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.

  இப்படிக்கு
  அபி அப்பாவுக்காக உயிர் விடவும் தயாரா இருக்கும்
  பகிரங்கமா எச்சரிப்போர் சங்கம்.(இதுக்கு தல பொடியன்)

  ReplyDelete
 54. //கைப்புள்ள said...

  அண்ணே இது நான் சின்ன பையனா இருக்கும் போது எனக்கு வந்துடுச்சு, நீங்க வர வர மொழி பாஸ்கர் மாதிரி ஆயிட்டீங்க.
  March 9, 2008 10:52 AM
  மங்களூர் சிவா said...

  இந்த பதிவுக்கு நமிதா போட்டோ அனுப்பின முன்னூட்டமெல்லாம் !!!!!!!!

  இதுவும் நான் ஸ்கூல் படிக்கிற காலத்திலயே வந்த இ-மெயில் 'உல்டா' தான்.

  வேற எதாவது புதுசா யோசிங்க இல்லைனா என்னைய மாதிரி படம் போட்டு ஒப்பேத்துங்க!!!
  March 9, 2008 10:55 AM
  குசும்பன் said...

  ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  தூங்கும் முன்பு வரும் கொட்டாவி சவுண்ட்...தூங்கி எழுந்த பிறகு சோம்பல் முறிக்கவா, இல்லை உங்க கை, காலை முறிக்கவா என்று முடிவு செஞ்சுக்கிறேன்... குட் நைட்!!!

  ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ//

  குருவே என்ன இது? சுத்தி வளைச்சு தாக்கறாய்ங்களே?..:)))))

  ReplyDelete
 55. //உதாரணத்துக்கு ஒரு நமீதா படம்ன்னு வச்சுகோங்களேன் மெயில்ல வந்தா, சரி நாம் பெற்ற இன்பம் நம்ம பசங்களும் பெறட்டும் என்கிற நல்ல எண்ணத்தில் அனுப்பினா உடனே பதில் வரும் மெயிலை திறந்து பார்க்காமலே"அண்ணே இது நான் சின்ன பையனா இருக்கும் போது எனக்கு வந்துடுச்சு, நீங்க வர வர மொழி பாஸ்கர் மாதிரி ஆயிட்டீங்க"ன்னு ஸ்டேண்டர்டு டெம்பிளேட் பதில் வரும். இதனாலத்தான் நான் ஏதும் சொல்வதே இல்லை. பாருங்களேன் இந்த பதிவுக்கு கூட இதே மாதிரி பின்னூட்டம் தான் வரும்:-))//

  இங்க தான் நீங்க நிக்கறிங்க(???) . ஆனா ஒரு டவுட்டு... கமெண்ட்ஸ் வந்தப்பறம் சேத்துக்கிட்ட பிற்ச்சேர்க்கையா இது? எனக்கு உண்மை தெரிஞ்சாகனும் :))))

  ReplyDelete
 56. //இப்போ ஒரு நாளைக்கு 6000 வரியாவது சேட்டிங்கில் போயிடுதா அதான் உண்மைதமிழனாட்டம் எழுத நேரம் இல்லாம போச்சு:-))//

  இது நெசம் தான்:)

  ReplyDelete
 57. //இதனாலத்தான் நான் ஏதும் சொல்வதே இல்லை. பாருங்களேன் இந்த பதிவுக்கு கூட இதே மாதிரி பின்னூட்டம் தான் வரும்:-))//

  ரிப்பீஈஈஈஈஈட்ட்ட்டேஏஏஏஏஏஏஏ

  அது சரி, ரஞ்சனியும், செங்கமலமும் என்ன ஆனாங்களாம்? ராம் அது பத்தி நான் கேட்டப்போ பதிலே சொல்லலையா, தூக்கமே வரலை, தெரிஞ்சுக்காம, இப்போ இது வேறேயா? :P

  ஹிஹிஹி, லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா மெசேஜ் கொடுத்துட்டேனே? :)))))

  ReplyDelete
 58. Hi
  as you expected, I have read this story way back in the last century.
  Good try though.
  I have given a comment in dubukku's latest post and i have used your name in it without your permission, it was just meant to be a joke and not to hurt anyone, nothing more than that, just wanted to let you know so that you dont take it otherwise, by the way, my name is Sriram, I live in Boston, USA, i'm good friend of your friend Vasan Subramanian (seemachu.blogspot.com), writing to you here as i dont have your email ID.
  regards
  Sriram

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))