பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

August 20, 2008

குடி குடியை கெடுக்கும்!!!!! பாகம் # 1

குடி குடியை கெடுக்கும்!!!!!

நாங்க நண்பர்கள் எட்டு பேருமே கிட்டதட்ட போக்கிரி டாக்டர் விஜய் மாதிரி தான். ஒரு முடிவு எடுத்துட்டா பின்ன எங்க பேச்சை நாங்களே கேக்க மாட்டோம். 1985 டிசம்பர் 31 இரவு அப்படித்தான் அந்த முடிவை எடுத்தோம். காலேஜ் எல்லாம் வந்தாச்சு, இன்னும் குடிக்க கத்துகலைன்னா நாளைய சமுதாயம் நம்மை பார்த்து சிரிக்குமேன்னு தான் நாங்க அந்த முடிவை எடுத்தோம். வருஷம் பிறக்கும் போது சரியா ச்சீயர்ஸ்ன்னு சொல்லி ஆரம்பிக்கனும்ன்னு முடிவெடுத்தாச்சு. சரி எங்கே வாங்கலாம், என்ன வாங்கலாம் என்பன பற்றி மிகுந்த குழப்பம் ஆகிடுச்சு. ஏன்னா அதன் பெயர் எல்லாம் தெரியாது. ஒருத்தன் பீர்ன்னு சொல்றான், ஒருத்தன் விஸ்கி, ஒருத்தன் பிராந்தி என எல்லாம் சொல்ல நான் மட்டும் கொஞ்சம் வித்யாசமா இருக்கட்டுமே என ஷாம்பெய்ன் என சொன்னேன். அப்ப தான் ராதா "வேண்டாம்டா நாம முதன் முதலா அடிக்க போறோம். ரொம்ப கேரி ஆகிடுச்சுன்னா வம்பு. நீங்க சொன்னதிலே பீர்க்கு மட்டும் தான் இரண்டு எழுத்து இருக்கு மத்ததுக்கு எல்லாம் எழுத்து அதிகமா இருக்கு அதனால இதுக்கு தான் போதை கம்மியா இருக்கும் போல இருக்கு அதனால பீரே வாங்கிடலாம்டா"ன்னு சொன்னான். அவனுக்கு தான் இது போலெல்லாம் சிந்திக்க வரும்.

சரி அடுத்து யார் யார் போய் வாங்குவதுன்னு சாட் பூட் த்ரீன்னு போட்டு பார்த்தா கடைசியா மிஞ்சினது நானும் ராதாவும் தான். (பின்னே என்னங்க ஜெலீனியா மாதிரி ரிங்கா ரிங்கா ரோஸ் ரோஸ் பார்ட்டியெல்லாம் குடிக்க முடிவெடுத்தா இப்படித்தான் சாட் பூட் த்ரீ எல்லாம் போட்டு முடிவெடுக்கும்). எங்கே போய் வாங்குவது என்பதை நானும் அவனும் முடிவெடுத்துக்கலாம்ன்னு சொல்லிட்டானுங்க. அடுத்து கிளாஸ் யார் கொண்டு வருவது என பல வகையிலும் சிந்திச்சு பார்த்தா ஒன்னும் வெளங்க மாட்டங்குது. இப்பமாதிரி அப்ப எல்லாம் யூஸ் அண்ட் த்ரோ விஷயம் டம்ளர்ருக்கெல்லாம் கிடையாது ஒரு விஷயத்தை தவிர. சரி அவங்க அவங்க டம்ளரை அவனவன் வீட்டிலிருந்து தள்ளிகிட்டு வரனும்ன்னு முடிவாகிடுச்சு. அடுத்து இடம்.ராதா உடனே "டேய் நம்ம பெரிய கோவில் தேர்முட்டி மேல போயிடுவோம்டா"ன்னு சொல்ல எல்லோரும் கோரசாக நிராகரித்தோம். எதுக்கு ஊரே பார்க்க நம்ம மானம் போகனுமா என்ன? பின்னே ஒருமனதாக ராஜந்தோட்ட கிரவுண்டின் நடுப்பகுதி தான் சரியான இடம். ராத்திரி 12 மணிக்கு பேயை தவிர யாரும் இருக்க மாட்டாங்க நம்ம கிட்டதான் இரும்பு சைக்கிள் இருக்குதே பேய் பங்குக்கு வராதுன்னு முடிவு செஞ்சுட்டோம். அதிலே கலக்க தண்ணி யாரு கொண்டு வருவதுன்னு அடுத்த குழப்பம். அப்பதான் சங்கர் சொன்னான், "விடுங்கடா நான் சர்ச்ல ராத்திரி கஞ்சி காச்சி ஊத்துறாங்க புது வருஷத்துக்குனு சொல்லி நான் பெரிய தூக்கு சட்டி எடுத்துட்டு வர்ரேன்"ன்னு சொன்னான். விட்டா மாரியாத்தாவுக்கு கேக் வெட்டுவான் போலருக்கு.

நானும் ராதாவும் எங்கே வாங்குவது அதை எப்படி எடுத்துகிட்டு வருவது என்பது சம்மந்தமா மண்டைய குழப்பிகிட்டு கடைசியா முடிவு பண்ணிட்டோம். கிரிக்கெட் பேட், ஸ்டெம்ப்ஸ் வைக்கும் கிட்டை தூக்கிகிட்டு கிளம்பிட்டோம் என்னவோ டே அண்ட் நைட் மேட்ச் ஆட போவது போல! வாங்கும் இடம் நியூ போட்டோ ஸ்டுடியோ மாடியிலே மஞ்சு ஒயின்ஸ். ஏன்னா அந்த கடையில தான் நல்லா இருக்கும்ன்னு ராதா சொன்னான். அதுக்கு அவன் சொன்ன காரணம் அலாதியானது. அது எதுக்கு இப்ப. அந்த ரோட்டிலே ஜே ஜேன்னு கூட்டம் அந்த ராத்திரி பத்து மணிக்கும். ரெண்டு பேரும் ஆளுக்கு ஒரு மங்கிகுல்லா மாட்டிகிட்டு அதேகண்கள் கொலைகாரன் மாதிரி கிரிக்கெட் கிட்டையும் தூக்கிகிட்டு மேலே போனோம். கடைகாரன் கிட்டே போகும் போதே எனக்கு தொடை எல்லாம் நடுங்குது. ராதா பயமே இல்லாத மாதிரி நடிக்கிறான். அவன் கைய ஆதரவா பிடிச்சா அது டைப்பிகிட்டு இருக்கு."இன்னிக்கு ரொம்ம குளிருதுல்லடான்னு சம்மந்தமே இல்லாம உளர்ரான் தண்ணி போடும் முன்னமே. கடை காரர் கேட்டார் என்ன வேண்டும்ன்னு. நான் அதுக்கு "ஒரு எட்டு பேர் சாப்பிடுற மாதிரி குடுங்க"ன்னு சொன்னேன். அதுக்கு அவர் "எலேய் இது என்ன அரிசி கடையா எட்டு பேர் பத்துபேர்ன்னுகிட்டு, வாங்கிட்டு போய் எட்டு பேருத்தான் குடிங்க ஒருத்தனே முழுங்குங்க எனக்கு என்ன? இப்ப என்ன சரக்கு வேணும்ன்னு சொல்லுங்க"ன்னு சொன்னார்.

ராதா என்னை பார்த்து சும்மா இருடான்னு சொல்லிட்டு "பீர் ஒரு குவாட்டர் குடுங்க"ன்னு கேட்டான். பீரை குவாட்டரை கேட்டதுமே கடைக்காரன் "எலேய் மூஞ்சிய காட்டுங்கடா, எந்த ஸ்கூல் நீங்க எந்த தெருவு குல்லாவை கழட்டு'ன்னு கொஞ்சம் அதிகாரமா சொன்னதும் எனக்கு வயித்த கலக்க ஆரம்பிச்சுடுச்சு. பிரசவ வைராக்கியம் மாதிரி அப்பவும் நினைச்சுகிட்டேன்"இனி இந்த ராதா நாதாறி சகவாசமே வச்சுக்க கூடாது"ன்னு. வாங்க வந்த ஒரு நல்ல(?) கஷ்ட்டமர் "தம்பிங்களா பீரு ஃபுல் பாட்டில் தான் குடுப்பாங்க"ன்னு சொன்னாரு. என்ன பீர் வேணும்ன்னு சொல்லுங்கன்னு கேட்ட போது அதான் பீர்ன்னு சொன்னோமேன்னு சொன்னோம். நாங்க பீர் என்பது தான் பிராண்ட்ன்னு நெனச்சுகிட்டு இருந்தோம். பின்ன தான் தெரிஞ்சுது பீர் என்பது ஒரு வகை. அதிலே பல பிராண்டு இப்பது. அதிலே கல்யாணி என்கிற பெயர் ராதாவுக்கு ரொம்ப பிடிச்சு இருந்துச்சு. ஏன்னு கேட்டா அதுக்கு வித்யாசமா ஒரு கதை விடுவான், அதனால நான் கேட்கலை. 21 ரூபாய்க்கு 25 ரூபாயா குடுத்துட்டு மீதி கூட வாங்காம கிட் உள்ளே போட்டுகிட்டு கீழே தாவி இறங்கி சைக்கிளை எடுக்கும் போது தெரிஞ்ச ஒருத்தர் "தம்பி என்ன இங்க நிக்கிறீங்க"ன்னு கேட்டதுக்கு ராதா அவசரமாக "போட்டோ எடுக்க வந்தோம்"ன்னு பூட்டியிருந்த போட்டோ கடையை பார்த்து சொன்னான்.

அடுத்த 5 வது நிமிஷம் பெரிய கிரவுண்டு நடுவே எங்க மீதி 6 பேரோடு ஐக்கியமாகிட்டோம். அதுக்குள்ள மீதி ஆறு பேரும் நாங்க சொதப்புவோமா மாட்டோமான்னு பந்தயம் எல்லாம் கட்டிகிட்டு இருந்திருக்கானுங்க. சினிமா பொட்டி வர்ர மாதிரி ரொம்ப எதிர்பார்ப்போட இருந்திருக்காங்க. நாங்க போன உடனே என்னவோ அபினவ்பிந்ரா ரேஞ்சுக்கு வரவேற்ப்பு. "டேய் பீர் வந்துடுச்சுடா கூடவே அவனுங்களும் வர்ராங்கடா"ன்னு ஒரே சத்தம்.

திஸ்கி: பதிவு ரொம்ப நீளமா ஆகிட்டா என்னை உண்மை தமிழன்னு சொல்லிடுவீங்க தானே அதேன் இப்படி!!!!

14 comments:

 1. //அப்ப தான் ராதா "வேண்டாம்டா நாம முதன் முதலா அடிக்க போறோம். ரொம்ப கேரி ஆகிடுச்சுன்னா வம்பு.///


  எதுவுமே தெரியாதாம் ஆனா இது மட்டும் தெரியுமாமாம்!

  ReplyDelete
 2. அண்ணே செக்ண்ட் பார்ட்ல கண்டிப்பா எல்லா அண்ணன்கள் பேரும் வந்தா சூப்பரா இருக்கும்!

  ReplyDelete
 3. வாப்பா! ஆயில்! உன் அண்ணாத்த எல்லாரும் ராதா மாதிரி இல்லயே! கேட்டேன்! சூசகமா சொல்றேன் "அப்சரா"ன்னு அடை மொழி வச்சிருகிறவனும், வாத்தியும் தன் பேரை சொல்ல கூடாதுன்னு சொல்லிட்டானுங்க!!! எப்படீஈஈஈஈஈஈஈஈ இந்த குளூ போதுமா????

  (இதுக்கு பேரையே சொல்லியிருக்கலாம்)

  ReplyDelete
 4. இப்போ மட்டும் சொல்ல மாட்டோமா? பதிவு உண்மைத்தமிழன் பதிவு மாதிரி இருக்குது!!

  ReplyDelete
 5. "குடி குடியை கெடுக்கும்????

  வெடிகுண்டு
  முருகேசன்

  ReplyDelete
 6. திஸ்கி: பதிவு ரொம்ப நீளமா ஆகிட்டா என்னை உண்மை தமிழன்னு சொல்லிடுவீங்க தானே அதேன் இப்படி!!!!
  //


  மின்னுவதெல்லாம் பொன் அல்ல :)


  வெடிகுண்டு
  முருகேசன் 1

  ReplyDelete
 7. மொத அனுபவம் 'கல்யாணி'கூடவா??

  நல்லா இருக்கு!

  :))

  ReplyDelete
 8. //டேய் பீர் வந்துடுச்சுடா கூடவே அவனுங்களும் வர்ராங்கடா//

  யாரு ஒசியில் குடிப்பவர்க்ளா

  ReplyDelete
 9. ஜெனிலியாவை ஜெலினியானு சொல்லிருக்கீங்க...

  அதுக்காக நான் இந்த பதிவிலிருந்து வெளி நடப்பு செய்கிறேன் :)

  ReplyDelete
 10. நல்லா சிரிச்சேன் அபி அப்பா.. ஆனாலும் உங்க ஃப்ரண்ட் ராதைவை ரொம்ப வாருறீங்க :)

  ReplyDelete
 11. உலகமே படிக்குது .. அபி படிக்கமாட்டாளா.. என்ன வல்லி நீங்க ?ஏன் நடராஜ் கூட படிப்பான் பெரிசானதும்.. :)

  டிவில கீழே போடறமாதிரி தலைப்புல போட்டுருக்கீங்களா ஓகே

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))